Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

சபைகளுக்கு ஆலோசனை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நியாயமற்ற உரிமைகளை வற்புறுத்தல்

    இந்த வேளையில் காரியத்தை முடிவிற்கு கொண்டு வரவேண்டும். இழிவான இச்சைகளே யன்றி மற்றொன்றும் தன் கணவனை அடக்கி ஆளவில்லை என்று மனைவி கண்டு, தன் பகுத்தறிவும் நிதானமும், கடவுள் பரிசுத்தமாகவும் மேன்மையாகவும் தமக்கு ஜீவபலியாகப் பாதுகாத்து வைத்திருக்கும் தனக்குக் கட்டளையிருக்கின்ற தன் சரீரத்தைத் தான் கெடுக்கிறதாகத் தனக்கு உறுதியாய் உணர்த்துகின்ற பொழுது, அவன் வேண்டுகோளுக்குத் தான் எதிர் பேசாமல் இணங்க வேண்டுமென்று அவள் எண்ண வேண்டுமோ?CCh 397.2

    தன் உடல் நலத்தையும் உயிர் வாழ்க்கையையும் கெடுத்துத் தன் கணவனுடைய மிருக வுணர்ச்சியைத் திருப்தி செய்யும்படி மனைவியை வழி நடத்துகின்ற அன்பு, தூய்மையும் பரிசுத்தமும் உடையது அல்ல. அவள் மெய்யன்பும் ஞானமும் உடையவளாய் இருந்தால், அவன் மனத்தைக் காம விகாரத்தில் திருப்தியடைய விடாமல், ஆர்வத்தை வளர்க்கும் ஆவிக்குரிய காரியங்களில் ஈடுபடும்படி ஆவிக்குரிய உன்னத விஷயங்களில் திருப்பிவிட வகை தேடுவான். அதினால் அவள் அவனுடைய மன வருத்தத்தைத் தேடிக் கொண்டாலும், வரம்பு கடந்த சிற்றின்பத்திற்கு இடம் கொடுப்பதினால் அவன் தன் சரீரத்தைக் கெடுத்துப் போடாதபடி, அது தாழ்மையும் அன்புமுள்ள முறையினால், தன் உடம்பு முற்றிலும் கடவுளுக்கே உத்தமமும் உயர்வுமான உரிமைக்குட்பட்டது என்றும் தான் கடவுளுடைய மகா நாளில் அதற்காகக் கணக்குக் கொடுக்க வேண்டியதாயிருப்பதால், அந்த உரிமையை அலட்சியமாக எண்னக்கூடாது என்றும், அவனுக்கு நினைப்பூட்ட வேண்டும்.CCh 398.1

    மனைவி தன் அன்பு நலங்களை உயர்வுடையதாக்கி, தூய்மையினாலும் மகிமையினாலும் தன் பெண்மைப் பண்பிற்குரிய உயர் நிலையைக் காப்பாற்றிக் கொள்வானாயின் அவள் தன் நீதியுள்ள செல்வாக்கினால் தன் கணவனைப் பரிசுத்தப் படுத்துகிறதற்காக மிகுதியான காரியங்களைச் செய்து, இவ்வாறு தன் உன்னத வாழ்க்கைக் குறிக்கோளை நிறைவேற்றுதல் கூடும். அங்ஙனம் செய்வதினால் அவள் தன்னையும் தன் கணவனையும் இரட்சிக்கக் கூடியவளாகி இவ் வகையில் இரட்டிப்பு வேலை செய்தான். நிர்வகிப்பதற்கு இவ்வளவு மென்மையும், இவ்வளவு கடினமான இக் காரியத்தில், மிக்க ஞானமும் பொறுமையும், அவ்வாறே நல்லொழுக்கத் துணிவும், மனவுறுதியும் தேவை. வல்லமையும் கிருபையும் ஜெபத்தில் கண்டடையலாம். களங்கமற்ற அன்பு உள்ளத்தை ஆளும் கொள்கையாக இருத்தல் வேண்டும். கடவுள் CCh 398.2

    மீதுள்ள அன்பும் கணவன் மீதுள்ள அன்புமே, செயல் புரிதற்குத் தகுதியுள்ள நிலைக்களன் ஆக வேண்டும். CCh 399.1

    மனைவி தன் மனச்சாட்சியையும், தன் உயர் நிலையையும், தன் தனிப்பண்புத் தன்மையையுங்கூட தியாகம் பண்ணி, தன் கெளரவத்தையும், மனச் சாட்சியையும், தோற்றப் பொலிவையும் தியாகம் பண்ணி அவனுக்கு ஒப்புவித்து விடுவாளாயின, தன் கணவனை உயர்த்துகிறதற்காகத் தான் சொந்தமாக வைத்திருக்க வேண்டிய சிறந்த வல்லமையுள்ள செல்வாக்கை, உறுதியாக கையாளும் வாய்ப்பை இழந்து போகின்றாள். அவனுடைய கடினமுள்ள தன்மையை அவள் மிருதுவாக்கக் கூடும், அவள் தன் சுத்திகரிக்கும் செல்வாக்கை இச்சையினால் உலகத்தில் உண்டான கேட்டிற்குத் தப்பித் திவ்விய சுபாவத்தில் தாங்கள் பங்காளிகள் ஆகும்படி, அவனைச் சுத்திகரிக்கவும், தூய்மையாக்கவும், அவன் தன் ஆசாபாசங்களை அடக்கி, ஆவிக்குரிய சிந்தையுடவன் ஆகிறதற்காக அவன் ஊக்கமாக முயற்சி செய்யுமாறு அவனை வழி நடத்தவும் கூடிய முறையில் உறுதியாய்க் கையாளலாம். செல்வாக்கின் வல்லமை, கிருபையினால் புதுப்பிக்கப்படாத இருதயம் இயற்கையாய் நாடுகின்ற இழிவான சிற்றின்ப போகங்களுக்கு மேலாய் மனத்தை உன்னதமும் மாட்சிமையுமுள்ள பொருட்களின் மீது செல்லும்படி வழி நடத்தும் பெருமையுடையது. மிருக இச்சையே கணவனுடைய அன்பிற்கும், அவன் செயலாற்றலுக்கும் அடிப்படைக் கொள்கையாய் இருக்கும் பொழுது, மனைவி தன் கணவனுக்குத் தான் பிரீதியாய் நடக்கும்படி அவனது நிலைக்கு இறங்கிப் போக வேண்ட்மென்ற உணர்ச்சி கொள்ளாயின், அவள் பரிசுத்தப்படுத்துகின்ற தன் செல்வாக்கைத் தன் கணவனிடம் கையாளாமல் தவறிப் போகின்றபடியால், கடவுளுக்கு வெறுப்பு உண்டாக்குகின்றாள். அவனுடைய மிருக இச்சைக்கு எதிராக யாதொன்றும் சொல்லாமல் அவனுக்கு அடங்கி நடக்க வேண்டுமென்று உணர்வாளாயின், அவள் அவனுக்குரிய தன் கடமையையும், கடவுளுக்குரிய தன் கடமையையும் அறியாதவள்.CCh 399.2