Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

சபைகளுக்கு ஆலோசனை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    அதிக கடுமையான சிட்சையினால் உண்டாகும் ஆபத்து

    இத்தகைய ஒழுக்கப் பயிற்சியின்போது அனேக குடும்பங்களிலுள்ள பிள்ளைகள் பயிற்சியில் தேர்ந்தது போன்று காணப்படுகிறார்கள். ஆயினும் சில குறிப்பிட்ட விதிகளின் பிரயோகத்தால் அமைக்கப்பெற்றிருக்கிற ஒழுங்கு முறை சிதையும் பொழுது அவர்கள் தாங்களாக எண்ணவோ தீர்மானிக்கவோ, கிரியை நடப்பிக்கவோ கூடாதிருக்கிறார்கள்.CCh 510.1

    இளவயதினரே தாங்களாக யோசித்து தங்கள் சக்திக்கேற்றவாறும் மனம் இசைகிறதற்கு கூடியவாறும் கிரியை நடப்பித்தால் அது அவர்களுடைய சிந்தனை வளர்ச்சி, சுய மரியாதை, உணர்வு, எதையும் செய்வதர்குத் தங்கள் திறமையை சார்ந்திருந்தால் ஆகிய தேர்ச்சியை அவர்களிடத் தில் உண்டு பண்ணும். அன்றி அதிக கடுமையான பயிற்சி மனதிலும் சன்மார்க்க வல்லமையிலும் பெலஹீனராக இருக்கும் ஒரு வகுப்பினரை சிருஷ்டிக்கும். தாங்களாகவே இவர்கள் செயலாற்றும் பொழுது, மிருகங்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிக்கொத்த பயிற்சியையே தாங்கள் அடைந்திருப்பதாகவும், கல்விப் பயிற்சி பெறவில்லை என்றும் இவர்களால் வெளிப்படும். இத்தகையோரின் சித்தம் வழி நடத்தப்படுவதற்குப் பதிலாக, பெற்றோர், ஆசிரியர் இவர்களின் கடுமையான சிட்சைக்கு கீழ்ப்படுத்தப்பட்டது.CCh 510.2

    தங்களிடம் ஒப்புவிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளின் மனதையும் சித்தத்தையும் முழு ஆட்சிக்கு உட்படுத்தியிருப்பதாகப் பெருமையடித்திக்கொள்ளும் பெற்றோரும் ஆசிரியரும் இவ்வாறு பலவந்தத்தினாலும் பயத்தினாலும் ஆட்சி செய்யப்பட்ட அந்தப் பிள்ளைகளின் பிற்கால வாழ்வு எவ்வாறு இருக்கிறதென்று கண்டு பிடிப்பார்களானால், அவர்கள் பெருமையடித்துக்கொள்வது நின்று விடும். இப் பிள்ளைகள் வாழ்வின் கடும் உத்தரவாதங்களில் பங்கு கொள்வதற்கு சிறியதோர் ஆயத்தமும் அடையப் பெறாதிருந்தார்கள். தங்களுடைய மாணவரின் சித்தங்களை முழு ஆட்சி செய்வதாகக் கூறித் தங்களை திருப்திப் படுத்திக்கொள்ளும் ஆசிரிய வகுப்பினர் அதிக சித்தி பெற்ற ஆசிரியர்கள் ஆக மாட்டார். தற்போதைக்கு அதிக சித்தி பெற்றவராக எண்ணப்படுவர்.CCh 511.1

    அவர்கள் எப்பொழுதும் தங்களை மாணவர் குழாத்தை விட்டு அகலச் செய்து, தங்கள் அதிகாரத்தைக் குளிர்ந்து, பரிவற்ற முறையில் உபயோகித்து, தங்களுடைய பிள்ளைகள் மாணவரின் இருதயத்தை தங்களிடமாக ஈர்த்துக்கொள்ள இயலாதே போகின்றனர். பிள்ளைகளைத் தங்களிடமாக சேர்த்துக்கொண்டு,... அவர்கள் மீது தங்களுக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்தி, அப் பிள்ளைகள் செய்யும் யாவிலும், அவர்கள் விளையாட்டிலும் கூட பிள்ளைகளோடு பிள்ளையாகி கலந்துகொண்டு விட்டால், அவர்களை மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்வதுடனே, அவர்கள் நம்பிக்கையும் அன்பையும் பெற்று, நம்பிக்கைக்கு பாத்திரமுமாவார்கள். பிள்ளைகளும் அதி விரைவில் அத்தகைய பெற்றோர், ஆசிரியர்களின் அதிகாரத்துக்கு மதிப்பும், அவர்களிடம் அன்பும் காட்டுவார்கள்.CCh 511.2

    என்ற போதிலும் தங்கள் பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோருடன் கலந்துகொள்ளாமல் சுயமாகவே சிந்திக்க அவர்களை விட்டு வைத்தல் ஆகாது. அனுபவ முடையவர்களின் நிதானிப்பிற்கு மதிப்பளிக்கவும், பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் வழி நடத்தப்படவும் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும். அவர்களுடைய மனது பெற்றோர் ஆசிரியர்களின் மனதுடனே ஐக்கியமாகி, ஆலோசனையைக் கேட்டு நடப்பதின் முக்கியத்துவத்தை உணரத்தக்கதாக அவர்க்ள் போதனையும் பயிற்சியும் பெற வேண்டும். தங்களுக்கு வழி காட்டுகின்ற பெற்றோர்கள் ஆசிரியர்களை விட்டேகுகையில் அவர்களுடைய குணம் காற்றினால் அசையுற்ற நாணல் போன்றிராது. 3T 132-135.CCh 512.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents