Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

சபைகளுக்கு ஆலோசனை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    உழைப்பின் கண்ணியம்

    இளைஞர் உழைப்பு மெய்யான கண்ணியமுள்ளது என்று அறியுமாறு நாம் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். கடவுள் இடைவிடாது வேலை செய்கிறவர் என்று அவர்களுக்கு காண்பியுங்கள். இயற்கை சராசரங்கள் தங்கள் தங்கள் வேலையை நிறைவேற்றுகின்றன. சிருஷ்டிகள் யாவும் கிரியை நடப்பிக்கின்றன. நம்முடைய வேலையை நாம் நிறைவேற்றுவதற்கு கிரியை நடப்பிக்க வேண்டும். Ed 214.CCh 552.1

    சரீர உழைப்புடனே கூடிய மனதின் உழைப்பும் நடைமுறை வாழ்வு நடத்துவதற்கு பயிற்சியாக அமைகின்றது. மனிதர் நடப்பிக்குமாறு தெய்வம் விரும்புகின்ற பல வேறு அலுவல்களையும் நிறைவேற்றுவதற்கு மனதையும் உடலையும் இது தகுதியாக்கி, பயிற்சி அளிக்கிறது என்ற எண்ணம் இனிமையானது. FE 229.CCh 552.2

    எவ்வளவு சிறியதும் தாழ்மையுமான பணியே ஆயினும், நம்மில் ஒருவரும் அதை நிறைவேற்ற வெட்கமையக் கூடாது. உழைப்பு மேன்மையடையச் செய்கின்றது. தங்கள் மூளைத்திறனைக் கொண்டும் அன்றி கைகளினாலே வேலை செய்கிறவர்களும் உழைக்கிறவர்களே. ஆலயத்துக்குப் போவதைப் போலவே, பாத்திரங்களைக் கழுவுகிறதிலும், துணிகளை வெளுப்பதிலும், யாவரும் தத்தம் கடமைகளை முறையே நிறைவேற்றி, தங்கள் மார்க்கத்தையும் கனம் பண்ணுகிறார்கள். மிகுந்த சாதாரணமான உழைப்பிலே கரங்கள் ஈடுபட்டிருக்கையி, மனமானது சுத்தமும் தூய்மையுமான எண்ணங்களால் அவ்வாறே உயர்வும் மேன்மையும் அடைவது கூடும். 4T 490.CCh 553.1

    சரீர உழைப்பு கண்ணியக்குறைவுடையது என்று பெரும்பாலும் எண்ணுவதற்குக் காரணம் யாதெனில், யோசனையின்றி அரைகுறையாக அனேகர் அதை நிறைவேற்றுவதே. மனம் பொருந்தி அதைச் செய்யாமல், கட்டாயத்தினிமித்தம் அதைச் செய்கிறார்கள். வேலை செய்கிறவர் தன் இருதயத்தை அதிலே வைப்பதில்லை. உழைப்பிற்குரிய சுயமரியாதையை அவர் பாதிகாப்பதிமில்லை. பிறர் மதிப்பு அதற்கு கிடைக்கும் விதமாக அதை நிறைவேற்றுவதுமில்லை, கைகளினால் வேலை செய்வதற்கு அளிக்கப்படும் பயிற்சி இந்த தவற்றை நீக்கும். எதையும் திருத்தமாகவும், சரியாகவும் செய்யும் பழக்கத்தை இது உண்டுபண்ணும். மாணவர் சாதுரியத்தையும் ஒழுங்கையும் கற்றுக்கொள்ளுகின்றனர். அவர்கள் நேரத்தை ஆதாயப்படுத்தி, முயற்சிகள் ஒவ்வொன்றும் பலனளிக்கத் தக்கதாக உழைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மிகவும் நல்ல முறைகள் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுவதுமல்லாது, எப்பொழுதும் அதில் பழகுமாறு ஆர்வமூட்டப்பட வேண்டும். மனித மூளைத் திறனும் கைகளும் தங்கள் வேலையை எத்தனை நிறைவாக்கக்கூடுமோ அத்தனை அறிவுடனே அதைச் செய்வதை தங்கள் நோக்கமாக்க வேண்டும். Ed 222.CCh 553.2

    குழந்தைகள் சோம்பலாக வளரும்படி விட்டுவிடுவது பாவமாகும். அவர்களுக்குச் சோர்வை உண்டாக்கினாலுங்கூட, அவர்கள் தங்கள் தசைகளையும் உறுப்புகளையும் பயிற்சி செய்து வரவேண்டும். அவர்கள் அதிகப்படியான வேலை செய்யாதிருக்கும் பொழுது, சோர்வினால் உங்களைப் பார்க்கிலும் அதிகமானத் தீங்கு இவ்வாறு அவர்களுக்கு உண்டாகக் கூடும். சோர்வடைவதற்கும் களைப்படைவதற்கும் வித்தியாசமிருக்கிறது. வயது வந்தவர்களைப் பார்க்கிலும் பிள்ளைகள் செய்யும் உழைப்பு மாறுதலடைவதும் இடை வேளைகளும் அவர்களுக்கு அவசியமானது. அவர்கள் மிக இளமையிலேயே வேலை செய்வதற்கு கற்க ஆரம்பித்து தாங்கள் பிரயோஜனமுள்ளவர்களாயிருக்கிறதை நினைத்து மகிழ்ச்சியடையலாம். ஆரோக்கியமுடைய உழைப்பைச் செய்த பிறகு அவர்கள் நித்திரை இன்பமாயிருக்கும். மறுநாளின் உழைப்பிற்கு முன்பாக அவர்கள் இளைப்பாற்றப்படுவார்கள். AH 289.CCh 554.1