Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

சபைகளுக்கு ஆலோசனை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    சத்தியம் பண்ணுதல்

    தேவனுடைய பிள்ளைகள் சத்தியம் பண்ணுதலைக் குறித்து தவறு செய்துவிட்டார்கள் என நான் கண்டேன். இதை சாத்தான் பயன்படுத்தி அவர்களை ஒடுக்கி, அவர்களிடமுள்ள கர்த்தருடைய பணத்தைப் பறிக்கிறான். “சத்தியம் பண்ண வேண்டாம் என்ற கர்த்தருடைய வார்த்தைகள் நீதி மன்றத்தில் சத்தியம் பண்ணுவதைக் குறிக்காது என நான் கண்டேன்.” “உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது, தீமையினால் உணடாயிருக்கும்.” மத். 5 : 34, 37. இது சாதாரண சம்பாஷணையைக் குறிக்கிறது. சிலர் தங்கள் பாஷை நடையில் காரியத்தை மிகைப்படுத்திக் கூறுகின்றனர். சிலர் தங்கள் ஜீவன் பேரில் ஆணையிடுகின்றனர். சிலர் தங்கள் சிரசின் பேரிலும், ஜீவன் பேரிலும் சத்தியம் பண்ணுகின்றனர். சிலர் தாங்கள் சொன்னதை ஊர்ஜிதம் செய்ய வானத்தையும், பூமியையும் சாட்சியாக வைக்கின்றனர். சொல்வது உண்மைக்கு மாறாக இருந்தால் தேவன் தங்களை அடிப்பாராக என்றும், தாங்கள் நாசமாய்ப் போக என்றும் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட சத்தியம் பண்ணுதலைக் குறித்து இயேசு தமது சீடர்களுக்கு எச்சரித்தார்.CCh 666.1

    தேசச் சட்டம் இயற்றுவதில் கர்த்தர் செய்கிற சில காரியங்கள் உண்டு என்று கண்டேன். இயேசு ஆசரிப்புக் கூடாரத்தில் இருக்கிற பொழுது, தேவனுடைய தடைசெய்யும் ஆவியை ஆசாரியர்களும், ஜனங்களும் உணர்ந்தனர். உலகத்தின் திரள் கூட்டத்தை சாத்தான் கட்டுப்படுத்துகிறான். இச் சட்டங்கள் இல்லாவிடில் நாம் அதிகமான துன்பம் அனுபவிக்க வேண்டியதாக இருக்கும். அத்தியாவசியம் ஏற்படும் பொழுது, தேவ மக்கள் சட்டப்படி சாட்சி பகர வேண்டிய திருப்பதால், சத்தியம் செய்வது தேவனுடைய வார்த்தையை மீறுவதாகாது எனக் காண்பிக்கப்பட்டேன். தாங் கள் சொல்லுவது சத்தியம், சத்தியமே தவிர வேறல்ல என பக்திவினயமாகத் தேவனை சாட்சி வைத்து சத்தியம் பண்ணலாம்.CCh 666.2

    இந்தப் பூமியில் பொருத்தமாக சத்தியம் பண்ணி, சாட்சி கூறுவதற்கு ஒருவனுண்டானால் அது கிறிஸ்தவன் தான். அவன் தேவனின் திருமுகத்தின் ஒளியிலே ஜீவிக்கிறான். அவன் அவருடைய பலத்தில் பலமடைகிறான். முக்கியமான காரியம் சட்டப்படி தீர்மானிக்கப்பட, தேவனை நோக்கி விண்ணப்பித்து மன்றாட கிறிஸ்தவனே பொருத்தமானவன். தேவன் தமது பேரில் ஆணையிடுகிறார் என்பதை நான் கவனிக்கும்படி தூதனால் கட்டளையிடப்பட்டேன். 1T 201-203.CCh 667.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents