Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

சபைகளுக்கு ஆலோசனை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தெய்வத்திற்குக் கீழ்ப்பட்ட ஆசிரியர்கள்

    தற்பிரதிஷ்டைசெய்த ஆசிரியருடனே கர்த்தரும் கிரியை நடப்பிக்கின்றார். ஆசிரியர் அதை உணர்ந்திருப்பது அவருக்கே நலமளிக்கும். தெய்வம் அளிக்கும் நல்லொழுக்கப் பயிற்சிக்குப்பட்ட ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு அளிக்குமாறு பரிசுத்த ஆவியின் மூலமாக கிருபையையும் சத்தியத்தையும் வெளிச்சத்தையும் பெறுகின்றனர். உலகம் கண்டுள்ள மிகப் பெரும் ஆசிரியரின் கீழ் அவர்கள் அடங்குகின்றனர். அவர்களிடத்திலே பட்சமில்லாத ஆவியும், வெடுவெடுப்பான குரலும், எரிச்சலும் காணப்படுவது எவ்வளவு தகுதியற்றது! இந்த குறைபாடுகளை அவர்கள் பிள்ளைகளிடத்திலே நிரந்தரமாக்கி விடுவார்கள்.CCh 542.1

    தம்முடைய சொந்த ஆவியினாலே தெய்வம் ஆத்துமாவுக்கு அறிவைத் தெரியப் படுத்துவார். நீங்கள் படிக்கும் பொழுது, உம்முடைய வேதத்திலுள்ள அதிசயங்களைப் பார்க்கும்படிக்கு என்னுடைய கண்களைத் திறந்தருளும் என்று ஜெபியுங்கள். சங். 119.18. ஆசிரியர் ஜெபத்திலே தெய்வத்தின் மீது சார்ந்திருக்கும் போது, கிறிஸ்துவின் ஆவியானவர் அவர் பேரில் இறங்குவார். பரிசுத்த ஆவியினாலே அவரைக் கொண்டு மாணவனுடைய மனதிலே கிரியை நடப் பிப்பார். பரிசுத்த ஆவியானவர் மனதையும் குணத்தையும் மறுரூபமாக்கும் வல்லமை உடையதாயிருக்கிறது. தெய்வ அன்பின் கதிர்கள் குழந்தைகளின் இருதயங்களிலே எழுப்புதலை உண்டுபண்ணும். நாம் மாத்திரம் இக் குழந்தைகளுக்காக வேலை செய்வோமாகில், நூற்றுக் கணக்கானவரும், ஆயிரக் கணக்கானவருமாகிய பிள்ளைகள் கிறிஸ்துவினண்டையிலே கொண்டுவரலாம். CT 171, 172.CCh 542.2

    மனிதர் மெய்யாக ஞானமடைவதற்கு முன்பாக தெய்வத்தின் மீது தாங்கள் சார்ந்திருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து, அவருடைய ஆவியினாலே நிரப்பப்பட வேண்டும். ஆவிக்குரிய சக்தியை ஊற்றாக இருப்பது போலவே, மூளைத்திறனுக்கும் தெய்வமே ஊற்றாக இருக்கிறார். விஞ்ஞானத்திலே அதிசயிக்கத்தக்க வளர்ச்சி பெற்றவர்களென்று உலகம் கருதும் பெரியோர் இயேசுவுக்கு அன்பாக இருந்த யோவானுடனும் அப்போஸ்தலனாகிய பவுலுடனும் ஒப்பனையாக மாட்டார்கள். மூளைத்திறனும் ஆவிக்குரிய சக்தியும் ஒன்றுபடும் பொழுது மிகவும் உயர்ந்த தரமான மனித தன்மை அடையப் பெறுகின்றது. இப்படிச் செய்து, மனதைப் பக்குவப் படுத்துகிறவர்களைத் தம்முடனே உடன் ஊழியராக தெய்வம் அங்கீகரிப்பார். CT 66.CCh 543.1

    தெய்வத்தைக் கனமடையச் செய்யும் முன்மாதிரியை உலகின் முன்பாக வைப்பதே இக்காலத்தில் இருக்கும் நமது கல்வி ஸ்தாபனங்களின் முக்கியமான அலுவல். மனித ஏதுக்களின் மூலமாக நடைபெறும் இவ்வேலையை பரிசுத்த தூதர் கள் மேற்பார்த்து நடத்துவர். பள்ளியில் ஒவ்வொரு மிரிவும் தெய்வீக உன்னதத்தின் அடையாளாத்தைப் பெற வேண்டும். CT 57.CCh 543.2