Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

சபைகளுக்கு ஆலோசனை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மனிதரை வேதாகமத்தண்டைக்கு நடத்த எழுதப்பட்ட சாட்சியாகமங்கள்

    எழுதப்பட்ட சாட்சியாகமங்கள் தேவாவியின் ஏவுதலாய், ஏற்கனவே வெளியாகி இருக்கும் சத்தியங்களை மனதில் பதிக்கவேயன்றி புதிய வெளிச்சத்தை அளிப்பதற்காகக் கொடுக்கப்பட்டவையல்ல. தேவனுக்கும் உடன் மனிதருக்கும் செய்து நிறைவேற்ற வேண்டிய கடமைகள் இன்னின்னவென்று வேதாகமத்தில் திட்டமும் தெளிவுமாக காண்பிக்கப் பெற்றிருந்தும், உங்களில் சிலரே அதற்குக் கீழ்ப்படிந்துள்ளனர். புதிய சத்தியம் சாட்சியாகமங்கள் மூலமாக வெளியாகவில்லை. ஆலோசனைகள் மூலமாக முன்கையளிக்கப்பெற்ற பெரும் சத்தியங்களைத் தெளிவாக்கி இருப்பதுடன் ஒருவரும் போக்குச் சொல்லாதபடிக்கு அவர்களை விழிப்புறச் செய்து அவற்றை அவர்கள் மனதில் பதிக்க தேவன் தெரிந்துகொண்டிருக்கிறார். சாட்சியாகமங்கள் வேத வாக்கியங்களுக்குரிய மதிப்பைக் குறைவுபடச் செய்யாமல், மனதை உயர்த்தி வேத வாக்கியங்களுக்கு நேராக அதை இழுத்து, சத்தியத்தின் அழகிய எளிமையையும் உண்மையையும் யாவரும் அறியச் செய்கின்றது. 5T.665.CCh 275.1

    வேதாகமத்தின் இடத்தைப் பெறுவதற்காகத் தீர்க்கதரிசன ஆவி அருளப்படவில்லை. ஒருபோதும் அத்தகைய நோக்கத்திற்காக அது அருளப்படுவதுமில்லை. ஏனெனில், எல்லா போதனைளும், அனுபவங்களும் தேவனுடைய வார்த்தையின் திட்டப்படி பரிசோதிக்கப்பட வேண்டும் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. ஏசாயா தீர்க்கதரிசி கூறுகின்றார். வேதத்தையும், சாட்சியாகமத்தையும் கவனிக்க வேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால் அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை. (ஏசா 8:20)CCh 275.2

    சகோதரன்----சபைக்குரிய சாட்சியாகமங்கள் மூலமாகத் தெய்வம் அளித்திருக்கிற ஒளியானது வேதாகம வெளிச்சத்துடன் அதிகப்படியாக சேர்க்கப்ப்ட வேண்டியது என்று காட்ட விரும்பி மனதைக் குழப்பமடையச் செய்கின்றார். ஆனால், அப்படி அவர் கூறும்பொழுது, தவறான வெளிச்சத்தில் அதைக் காட்டுகின்றார். தேவன் தமது மக்களின் மனதைத் தமது வசனத்திற்கு நேராகத் திருப்பி, சாட்சியாக மக்கள் மூலம் அவர்களுக்குத் தெளிவான சிந்தனையை அளிப்பது அவர் பார்வையில் சரியெனக் காணப்பட்டது. மிகுந்த இருளடைந்த மனதைப் பிரகாசிப்பிக்க தேவவானம் வல்லமையுடையதாயிருக்கிறது. அதை அறிந்துகொள்ள விரும்புவோர். அதனை அறிந்து கொள்ளக் கூடும். இவையெல்லாம் ஒருபுறமிருக்க வேதாகமத்தை ஆராய்வதாகக் கூறும் அனேகர் அதன் திட்டமான போதனைகளுக்கு நேர்மாறாக வாழ்ந்து வருகின்ரனர். அச்சமயத்தில் மனிதர் சாக்கு போக்கு கூற இடமிராதபடி, தெய்வம் தெளிவும், குறிப்பானதுமான சாட்சியாகமங்களை அளித்து, அவர்கள் பினற்றுவதற்குத்தவறிய திருவசனத்திடம் அவர்களைத் திருப்புகின்றார். சரியான பழக்க வழக்கங்களுடன் மனிதர் வாழுவதற்கு அவசியமான இலட்சியங்கள் வேதாகமத்தில் மிகுதியாக உள்ளன. பொதுப்படையாகவும், தனிப்பட்டவர்களுக்கும் அளிக்கப்பட்ட சாட்சியாகமங்கள் அவர்களுடைய கவனத்தை குறிப்பாக இந்த இலட்சியங்களுக்கு நேராகத் திருப்பும் வகையில் உதவுகின்றன.CCh 276.1

    நான், விலைமதிக்கப்படாத வேதாகமத்தை எடுத்து, தெய்வஜனங்களுக்கு அளிக்கப்பட்ட சபையின் சாட்சியாகமங்களின் நடுவே அதை வைத்தேன். பெரும்பான்மையோரின் காரியங்கள் இவ்விடத்தில் சந்திக்கின்றன். அவர்கள் விட்டு நீங்க வேண்டிய பாவங்கள் சுட்டிக்காட்டப் படுகின்றன். அவர்கள் விரும்பும் ஆலோசனைகள் இங்கே காணப்படுகின்றன. அவர்களைப் போன்ற நிலையிலிருக்கிற வேறு பலருக்கும் இவை பொருந்தும். பிரமாணத்தின்மே பிரமாண மும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக உங்களுக்கு தேவன் இவற்றையளிக்கச் சித்தமானார்.CCh 276.2

    சபைகளுக்குரிய சாட்சியாகமங்களில் என்ன அடங்கி இருக்கிறதென்று உங்களில் அனேகர் அறியாதிருக்கின்றீர்கள். நீங்கள் வேதாகமத்தை நன்றாய் அறிந்து கொள்ளவில்லை. வேதாகமம் கூறுகின்ற கிறிஸ்தவ பூரணத்துவத்தை அடைய வேண்டுமென்ற ஆவலுடனே நீங்கள் கடவுளுடைய திருவசனத்தை நன்றாகக் கற்றிருந்தால், உங்களுக்கு இந்த சாட்சியாகமங்கள் அவசியமே இல்லை. நீங்கள் தேவாவியின் ஏவுதலை உடைய கடவுளுடைய புஸ்தகத்தை அறிந்து, உணர்ந்து கொள்ளாததினாலே, நேரடியான, அறிவதற்கெளிதான இந்த சாட்சியாகமங்கள் மூலமாக நீங்கள் கீழ்ப்படிவதற்குத் தவறிய அவ்வேத வசனங்களுக்கு நேராக உங்களுடைய கவனத்தைத் திருப்பி, தெளிவும் உயர்வுமுடைய அவ்வசனங்களின்படியே உங்கள் வாழ்க்கையை நீங்கள் மாற்றியமைக்க ஏவும்படிக்கு உங்களுடனே அவர் தொடர்பு கொள்ள வகைதேடினார். 5T. 663---665.CCh 277.1