Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

சபைகளுக்கு ஆலோசனை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம்-14

    தேவனுடைய வீடு

    தாழ்மையும், விசுவாசமுமுடைய ஆத்துமாவுக்கு, பூமியிலுள்ள தேவனுமுடைய வீடு பரலோகத்தின் வாசல். அசுத்தமான தொன்றும் பிரவேசிக்காத பரலோக ஆலயத்தின் உன்னத வணக்கத்திற்கு, துதியின் கீதம், ஜெபம், கிறிஸ்துவின் பிரதிநிதிகள் செய்யும் பிரசங்கங்கள் ஒரு ஜனத்தை ஆயத்தப் படுத்த தேவனால் நியமிக்கப்பட்ட ஏதுக்களாகும்.CCh 214.1

    குடியிருக்கும் வீடு குடும்பத்திற்கு தேவ வாசஸ்தலம்; அறை வீடு அல்லது சோலை தனி ஜெபத்திற்குகந்த ஓர் உன்னத ஸ்தலம்; ஆனால், ஆலயமோ சபையின் பரிசுத்தஸ்தலம். நேரம், இடம், ஆராதனை முறைமைக்கு ஒழுங்குத் திட்டம் இருக்க வேண்டும். தேவ வணக்கத்திற்கு அடுத்த பரிசுத்தமான எதுவும், அஜாக்கிரதையாக அல்லது கவலையீனமாக செய்யப்படலாகாது. தேவனுடைய துதிகளைச் சிறந்த முறையில் வெளிப்படுத்தும்படி, பரிசுத்தமுள்ளவைகளுக்கும், சாதாரணமானவைகளுக்குமுள்ள வேறுபாட்டை விளங்கும் சகவாசம் காணப்படவேண்டும். பரந்த கருத்துக்களும், உன்னத எண்ணங்களும், வாஞ்சைகளும், உள்ளவர்களே தேவனுக்கடுத்த யோசனைகள் யாவையும் பலப்படுத்தும் தன்மை உடையவர் ஆவர். தேவனுடைய ஆலயம் சிறிதோ, பெரிதோ, அது இருக்கும் இடம் பட்டணமோ, காட்டுப் பிரதேசமோ அல்லது ஏகாந்த வெளியோ, அல்லது அற்பமான குடிசையோ எதுவாயினும் ஓர் ஆலயம் உடையோர் பாக்கியவான்கள். தங்களுடைய ஆண்டவருக்கென்று அவர்கள் பெறக்கூடிய சிறந்த இடம் அதுவேயானால், அவர் அதை தமது பிரசன்னத்தினால் பரிசுத்தப்படுத்துவார். அது சேனைகளின் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னப்படும்.CCh 214.2