Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

சபைகளுக்கு ஆலோசனை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    குழந்தையை சிட்சிப்பதில் தன்னடக்கம்

    குழந்தையைப் பழக்குவிக்கையில் சில வேளைகளில் குழந்தகளின் விவேக மற்றதும் பண்படாததுமான பிடிவாதக் குணத்தையும் தாய் காண்கிறாள். அப்படிப்பட்ட தாய்க்கு ஞானம் தேவை. ஞானமற்ற விதமாய் நடத்துவதினாலும், கொடூரமான கண்டிப்பாலும் குழந்தைக்கு கேடு செய்யப்படலாம்.CCh 408.2

    இப்படிப்பட்ட நிலை வராதபடி கூடுமான வரை விலக்க வேண்டும்; ஏனெனில் தாய்க்கும், குழந்தைக்கும் இது பெரும் போராட்டமாகும். ஏதாவது குழப்பமான சூழ்நிலை எழுந்தால் பெற்றோரின் ஞானமுள்ள சித்தத்திற்கு குழந்தகள் தங்களை ஒப்புவிக்க வழி நடத்தப்பட வேண்டும்.CCh 408.3

    அவமதிக்கும் ஆவி குழந்தையில் உண்டாகாதிருக்கும் படி தாய் தன்னடக்கமாக நடந்துகொள்ள வேண்டும். உரத்த சத்தமாய்க் கட்டளைகள் கொடுக்கலாகாது. தன் சத்தத்தைத் தாழ்த்தி, புனிதமாகப் பேசுவதால் பெரும் மதிப்படைவாள். இயேசுவண்டை குழந்தை நடத்தப்பட வேண்டிய முறையில் அதை அவள் நடத்த வேண்டும். கடவுள் தனக்கு ஒத்தாசையும் தன் நண்பரும், வல்லமையுமாயிருக்கிறாரென அவள் உணர வேண்டும்.CCh 409.1

    அவள் ஞானமுள்ள கிறிஸ்தவளாயிருந்தால் குழந்தையைக் கீழ்ப்படியும்படி கட்டாயப்படுத்த மாட்டாள். சத்துரு மேற்கொள்ளாதபடி ஜெபிக்கிறாள். அப்படி ஜெபிக்கும் போது ஆவிக்குரிய ஜீவியம் புதிதாகுவதையும் அவள் உணருகிறாள். தன்னில் கிரியை செய்யும் அதே வல்லமை குழந்தையிலும் கிரியை செய்வதைக் காண்கிறாள். அவன் மிக அமைதியும் அடக்கமும் அடைகிறான். காரியம் வெற்றி அடைகிறது. தாயின் பொறுமை, பட்சமும் கட்டுப்பாடான விவேகமுள்ள வார்த்தைகள் நல்ல வேலை செய்திருக்கின்றன. மழைக்குப் பின் சூரியவொளி போலும், புயலுக்குப் பின் அமைதி போலும் சாந்தி உண்டாகிறது. இதைக் கவனித்துக் கொண்டிருந்த தூதர்கள் மகிழ்ச்சியினால் கீதம் பாடுகின்றனர்.CCh 409.2

    இதே வித நிலைகள் புருஷனுக்கும், மனைவிக்கும் இடை இடையே எழும்புவதுண்டு. தேவ ஆவி ஆண்டு நடத்தினாலன்றி குழந்தைகளைப் போல் பிடிவாதமான உத்வேக ஆவி அச் சமயங்களில் தலை காட்ட ஏதுவாகும். கல் கல்லோடு மோதுவது போல சித்தம் சித்தத்தோடு மோதி போர் எழுப்பும். 7T. 47, 48.CCh 409.3