Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

சபைகளுக்கு ஆலோசனை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தனிப்பட்டவர்களின் தீர்ப்பை மேன்மையாகக்கொள்வதின் ஆபத்து

    தங்கள் தனிப்பட்ட நியாயத்திற்கு மேன்மையான இடங்கொடுக்கக் கருதுகிறவர்கள் மாபெரும் ஆபத்துக்குள்ளிருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களை, ஒளியின் ஏதுகளும், பூமியில் தம்முடைய வேலையை வியாபித்துக் கட்ட தேவன் உபயோகித்தவர்களுமானவரிலிருந்து பிரிப்பது சாத்தானின் கற்றறிந்த முயற்சியேயாகும். சத்தியம் தழைத் தோங்க பொறுப்பேற்று தலைமை வகிக்க தேவன் அபிஷேகம் பண்ணினவர்களை அசட்டை செய்து அவமதிப்பது, தம்முடைய ஜனத்தின் பெலத்துக்கும், தைரியத்துக்கும், உதவிக்கும் ஏற்படுத்தியுள்ள தேவ சாதனங்களைப் புறக்கணிப்பதாகும். தேவனுடைய வேலையில் ஈடுபட்டிருக்கிற எந்த ஊழியனும் இவைகளைத் தள்ளி, வேறு விதமாயன்றி, தேவனிடத்திலிருந்து நேராய்த் தனக்கு வெளிச்சம் வர வேண்டுமென்று நினைக்கிறவன், சத்துருவினால் கவிழ்க்கப்பட்டு, வஞ்சிக்கப்படும் நிலைமைக்குள் தன்னை புகுத்திக்கொள்ளுகிறான்.CCh 207.2

    கர்த்தர் தமது ஞானத்தால், விசுவாசிகள் பேண வேண்டிய நெருங்கிய சம்பந்தத்தின் மூலம், சபை சபையோடும், கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களோடும் இணைக்கப்பட வேண்டுமென்று திட்டமிட்டிருக்கிறார். இவ்விதமாக தெய்வீகத்தோடு ஒத்துழைக்க மனுஷீக உபகரணங்கள் சாதகமாயிருக்கும். அப்பொழுது தேவ கிருபையின் நற் செய்தியை உலகத்துக்குக் கொடுக்க, எல்லா விசுவாசிகளும் ஒழுங்கு படுத்தப்பட்டு நன்றாய் நிர்வகிக்கும் முயற்சியில் ஒன்று பட்டு, ஒவ்வொரு ஏதுகரமும் பரிசுத்த ஆவிக்குக் கீழ்ப்பட்டிருக்கும். A.A. 164.CCh 208.1

    எல்லா மானிட அவயவங்களும் ஒன்று சேர்ந்து முழூச்சரீரமாகி, ஒவ்வொரு அவயவமும் சரீரம் முழுவதையும் ஆளூம் புத்திக்குக் கீழ்ப்படிந்து தன் கடமையைச் செய்கிறதெப்படியோ, அப்படியே கிறிஸ்துவின் சபையின் அங்கத்தினர் ஒரே பூரண சரீரமாக ஐக்கியப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்ட முழுச் சரீராமகிய சபையின் ஆலோசனைக்கு அடங்கி இருக்க வேண்டும். 1T.T. 443.CCh 208.2