Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

சபைகளுக்கு ஆலோசனை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஆகார மாறுதல் பற்றிய போதனை

    மாமிச உணவை உபயோகிப்பதில் தசையின் பெலன் சார்ந்திருக்கிறதென்று எண்ணுவது தவறு. அதன் உபயோக மின்றி, சரீரத்துக்குத் தேவையான சிறந்த ஆகாரம் அளிக்கப்பட்டு, மிகுந்த திட சுகம் அனுபவிக்கப்படக்கூடும். சுத்த இரத்தத்தையுண்டாக்க அவசியமான எல்லா போஷணை சத்துக்களும் பழங்களும், கொட்டைகள், காய் கறிகள் தானி யங்கள் ஆகியவற்றில் அடங்கி இருக்கின்றன. மாமிசத்தின் உபயோகம் சுகத்துக்கும் பலத்துக்கும் அத்தியாவசியமாயிருந்திருக்குமாகில், ஆதியில் மனுஷனுக்குக் கொடுக்கப்பட்ட ஆகாரத்தோடு மாமிச உணவும் சேர்க்கப்பட்டிருந்திருக்கும்.CCh 595.2

    மாமிச உணவை விட்டுவிடும்போது, உற்சாகக்குறைவும் பலவீனமும் அடிக்கடி உணரப்படுகிறது. அனேகர் இதை ஓர் அத்தாட்சியாக வைத்து, மாமிச உணவு அவசியம் என்கிறார்கல்; இதற்குக் காரணம் என்னவென்றால், இப்படிப்பட்ட ஆகாரம் இரத்தத்தைக் கொதிக்கச் செய்து, நரம்புகளைக் கிளறிவிடுகிறது, அப்படிப்பட்டதை அவர்கள் தவறவிடுவதே காரணமாகும். குடிகாரன் குடியை விட்டுவிட எப்படிக் கஷ்டபடுகிறானோ, அப்படியே சிலர் மாமிச உணவை விட கஷ்டப்படுவார்கள். ஆகாரத்தை மாற்றியமைப் பார்களானால் அவர்களுடைய ஆரோக்கியம் அதிகரிக்கும்.CCh 596.1

    மாமிச உணவு விடப்படும்போது, அதை ஈடுபடுத்த பசியைத் தூண்டக் கூடியதும் போஷணையுமுள்ள பலதரப்பட்ட தானியங்கல், கொட்டைகல், காய்கறிகள், பழங்கள் கொடுக்கப்பட வேண்டும். கடினமாக உழைப்பவர்களுக்கும், பலவீனப்பட்டவர்களுக்கும் இது முக்கியமாக அவசியம். MH 316.CCh 596.2

    விசேஷமாக மாமிசம் எங்கே முக்கியமான உணவாக ஆக்கப்படவில்லையோ, அங்கே ஆகாரத்தை நன்முறையில் தயாரிப்பது அவசியமானது. மாமிசத்துக்குப் பிரதியாக வேறு ஆகாரம் ஆயத்தம் செய்யப்படவேண்டும். இந்த ஈடுப்பொருட்கள் சிறந்த முறையில் ஆயத்தம் செய்யப்பட வேண்டும். CG 384.CCh 596.3

    மாமிச உணவை விட்டு, சத்துக் குறைந்த ஆகாரத்துக்கு மாற்றிக் கொண்டே சில குடும்பங்களுடன் நான் பழகியிருகிறேன். அவர்களுடைய வயிறு அரோசிக்கத்தக்கதாக. அவர்கள் ஆகாரம் மிகவும் மோசமாக ஆயத்தம் செய்யப் பட்டிருந்தது. அப்படிப்பட்டவர்கள் சுகாதார சீர்திருத்தம் தங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றும், சரீரம் பலத்தில் குறைந்துகொண்டு வருவதாகவும் என்னிடம் சொன்னார்கள். நேர்த்தியாயும், போஜனப் பிரியத்தை உண்டாக்கத்தக்க எளிய முறையிலும் ஆகாரம் சமைக்கப்பட வேண்டும்.2T 63.CCh 596.4

    மீதியான சபையின் பிரயோஜனத்துக்காக காப்பி, தேயிலை, மாமிச உணவு, மற்றும் கெடுதல் உண்டாக்கும் ஆகாரங்கள் விலக்கப்பட வேண்டுமென்று ஆண்டவர் அவர்களுக்கு ஆலோசனை சொல்லுகிறார். நல்லவையும் சத்துள்ளவையுமாகிய ஆகாரத்தை நாம் உண்டு வாழும்படி வேறு ஏராளமான பொருட்கள் இருக்கின்றன.CCh 597.1

    கர்த்தருடைய வருகைக்காக காத்திருக்கிறவர்கள் மத்தியில், மாமிச உணவு கடைசியாக ஒழிந்துபோம்; மாமிசம் அவர்கள் ஆகாரத்தில் ஒரு பாகமாயிருப்பது அற்றுப்போம். இதை நாம் எப்பொழுதும் நம் முன் நிறுத்தி, அதை இலக்காகக் கொண்டு உறுதியாய் உழைக்கப் பிரயாசப்பட வேண்டும். CD 380, 381.CCh 597.2

    வழக்கமாக மாமிசம் உபயோகிப்பதால், சரீர, மன, ஆவிக்குரிய தத்துவங்கள் குறைந்துபோகின்றன. மாமிசம் உண்ணுதல் சரீரத்தை சீர்குலைந்து, புத்தியை மந்தப்படுத்தி, ஆவிக்குரிய உணர்ச்சிகளை மழுங்கிப் போகும்படி செய்கின்றது. சகோதர சகோதரிகளே, நாங்கள் உங்களுக்குச் சொல்லுவதாவது, மாமிசத்தை விட்டுவிலகுவதே உங்களுக்குப் பாதுகாப்பாகும்.CCh 597.3