Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாபெரும் ஆன்மீகப் போராட்டம்!

 - Contents
 • Results
 • Related
 • Featured
No results found for: "".
 • Weighted Relevancy
 • Content Sequence
 • Relevancy
 • Earliest First
 • Latest First

  12—பிரெஞ்சு சீர்திருத்தம்!

  (மூலநூல் : The Great Controversy, பக்கம்: 211—236)

  ஸ் பைர்ஸ் நகரில் தோன்றிய மறுப்பு, ஆக்ஸ்பர்க் நகரில் கூறப்பட்ட அறிக்கை ஆகியவைகள் ஜெர்மனியில் உண்டான சீர்திருத்தத் தின் வெற்றியை அடையாளப்படுத்திக் காட்டின. போராட்டங்களும், இருளும் வருடக்கணக்கில் அதைப் பின்தொடர்ந்தன. அதன் ஆதரவாளர்களுக் கிடையில் உண்டான பிரிவினைகளினாலும், அதன் எதிரிகளினால் உண்டான தீவிரமான தாக்குதலினாலும், புரொட்டஸ்டாண்டு மார்க்கம் முற்றிலுமாக அழிக்கப்படுவதற்கு விடப்பட்டிருப்பதுபோல் காணப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் தங்களது சாட்சியை அவர்களது இரத்தத்தினால் முத்திரையிட்டார்கள். உள்நாட்டுக் கலகம் உண்டானது. புரொட்டஸ்டாண்டு இயக்கத்திற்கு, அதைச் சார்ந்த தலைவர்களில் ஒருவரால் துரோகம் இழைக்கப்பட்டது. சீர்திருத்தத்தின் இளவரசர்களில் மிக மேலானவர்கள் பேரரசனின் கைகளில் வீழ்ந்து, அவர்களின் கைதிகளாகி, நகரங்களிலிருந்து மற்ற நகரங்களுக்கு இழுத்துச்செல்லப்பட்டனர். ஆனால் அந்தப் பேரரசன் வெற்றி அடையப்போகிறவர்போல் வெளிப்படையாகத் தோன்றிய நேரத்தில் தோல்வியால் தாக்கப்பட்டார். தனது இரை கடைசியில் தனது பிடியிலிருந்து நழுவிச் சென்றதைக் கண்டு, அழித்துவிடவேண்டும் என்று ஆசையாயிருந்த கோட்பாடுகளுக்காக கடைசியில் அவரே சகிப்புத்தன்மையை அனுமதிக்கும் படி, வேறுவழி இல்லாமல் வற்புறுத்தப்பட்டதைக் கண்டார். மதவிரோதத்தை நசுக்கும் பணியில் அவர் தனது நாடு, கருவூலம், வாழ்க்கை ஆகிய அனைத்தையும் தீக்கிரையாக விட்டுவிட்டார். இப்பொழுது, அவரது சேனை போரினால் வீணானதையும், கருவூலங்கள் ஒழுகிச் சென்றதையும், அவரது கட்டுப்பாட்டிலிருந்த பலநாடுகள் கலகத்தினால் பயமுறுத்தியதையும், தான் அழிக்கவேண்டுமென்று விணாக முயன்ற விசுவாசம் அகிலமெங்கும் பரவுவதையும் கண்டார். ஐந்தாம் சார்லஸ்! சர்வவல்லமை உள்ளவரின் சக்திக்கு எதிராகப் போரிட்டுக்கொண்டிருந்தான். வெளிச்சம் உண்டாகக்கடவது என்று தேவன் கூறினார். ஆனால் அந்த பேரரசன் இருள் நீங்காமல் தொடர்ந்து இருக்கவேண்டுமென்று முயன்றுகொண்டிருந்தான்! அவனது நோக்கங்கள் தோற்கடிக்கப்பட்டுப்போகவே, தன் காலத்திற்கு முன்னதாகவே முதுமையடைந்து, சிங்காசனத்தைத் துறந்து, ஒரு அறையில் தன்னை மறைத்துக்கொண்டான். (1)GCTam 235.1

  ஜெர்மனியைப் போலவே, சுவிட்சர்லாந்திலும் சீர்திருத்தத்திற்கு இருண்ட நாட்கள் வந்தன. அநேக இடங்கள் சீர்திருத்த விசுவாசத்தை ஏற்றுக்கொண்டபோது, பலர் குருட்டுத்தனமான பிடிவாதத்தினால், ரோமன் கத்தோலிக்கக் கொள்கையைப் பற்றிக்கொள்ளத் தொடங்கியிருந்தனர். சத்தியத்தை ஏற்றுக்கொள்ள விரும்பினவர்களுக்கு அவர்கள் செய்த உபத்திரவங்களினால், முடிவில் உள்நாட்டுக் கலகத்தை உருவாக்கினார்கள். ஸ்விங்ளியும் சீர்திருத்த இயக்கத்தில் அவருடன் ஒன்றுபட்டவர்களும் காப்பல் என்னும் இரத்தகளத்தில் வீழ்ந்தனர். இந்தப் பயங்கரமான அழிவுகளின் திகிலினால் மேற்கொள்ளப்பட்ட ஓகோலம்பேடியஸ், அதற்குப்பின் விரைவில் இறந்தார். ரோமன் மார்க்கம் வெற்றியடைந்தது. அநேக இடங்களில் அது இழந்திருந்த அனைத்தையும் மீட்டுக்கொண்டதுபோல் காணப்பட்டது. ஆனால் எவரது ஆலோசனைகள் நித்தியகாலமானவைகளோ அவர், அவரது நோக்கத்தையோ அல்லது அவரது மக்களையோ கைவிட்டுவிடவில்லை. அவரது கரம் அவர்களுக்கு விடுதலையைக் கொண்டுவரும். மற்ற இடங்களில் சீர்திருத்தத்தை முன்கொண்டு செல்ல ஊழியக்காரர்களை அவர் எழுப்பினார். (2)GCTam 236.1

  பிரான்ஸ் நாட்டில் சீர்திருத்தவாதி என்ற பெயரால் லுத்தர் அழைக்கப்படுவதற்கு முன்னரே, அந்த நாள் உதயமாகத் துவங்கியிருந்தது. மிகுந்த கல்விமானும் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரும்,உண்மை யும் வைராக்கியமான, போப்பு மார்க்கவாதியாய் இருந்த, வயது முதிர்ந்த லெஃப்வர் என்பவர் ஒளியைப் பிடித்துக்கொள்ளுபவர்களில் முதன்மையானவ ராக இருந்தார். பழங்கால இலக்கியங்களைப்பற்றியஆராய்ச்சிகளிலிருந்து அவரது கவனம் வேதாகமத்திற்குத் திருப்பப்படவே, அந்த ஆராய்ச்சியைத் தனது மாணவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார் (3)GCTam 236.2

  லெஃப்வர் பரிசுத்தவான்களைப் போற்றுவதில் வைராக்கியமுள்ளவராக இருந்து, பரிசுத்தவான்கள் இரத்த சாட்சிகள் ஆகியோரைப்பற்றிய ஒரு அரிய வரலாற்றை சபையின் சரித்திரத்திலிருந்து தயாரிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தார். அது பெரும் உழைப்பை உள்ளடக்கிய ஒரு பணியாக இருந்தது. அந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றமடைந்திருந்தார். வேதாகமத்திலிருந்து அதற்கான உதவிகள் கிடைக்கலாம் என எண்ணி, அந்த நோக்கத்துடன் அதை வாசிக்க ஆரம்பித்தார். அங்கு உண்மையாகவே பரிசுத்தவான்கள் அவரது பார்வைக்குக் கொண்டுவரப்பட்டனர். ஆனால் ரோமன் கத்தோலிக்க நாட்காட்டி (காலண்டர்)களில் காணப்பட்ட உருவில் அவர்கள் தோன்றவில்லை. அவரது உள்ளத்தில் ஒரு பரலோக ஒளி வெள்ளம் பாய்ந்தது. மிகுந்த வியப்புடனும் வெறுப்புடனும் அவர் தானாக ஏற்படுத்திக்கொண்டிருந்த பணியைவிட்டுத் திரும்பியவராக, தேவனுடைய வார்த்தையைத் தியானிப்பதில் ஈடுபடத் துவங்கினார். அங்கு கண்டுபிடித்த விலைமதிப்புமிக்க சத்தியங்களை விரைவில் அவரே போதிக்கவும் துவங்கினார். (4)GCTam 236.3

  கி.பி.1512-ல் லுத்தராவது ஸ்விங்ளியாவது சீர்திருத்தத்தின் பணியை துவங்குமுன்பாகவே, “கிருபையினாலே நித்தியஜீவனுக்கென்று நம்மைத் தீர்க்கிற விசுவாசத்தினாலாகும் அந்த நீதியை, தேவன்தான் நமக்குக் கொடுக்கிறார்” என்று எழுதினார்.-Wylie, b. 13, ch. 1. இரட்சிப்பின் இரகசியத்தைக்குறித்து, “ஓ! அது சொல்லிடமுடியாத மாபெரும் பண்டமாற்றம்! பாவமற்ற ஒருவர் பலியாக்கப்படுகிறார்; அதனால் குற்றமுள்ளவன் விடுதலையாகிறான்! ஆசீர்வாதங்கள் சாபத்தை ஏற்றுக் கொள்ளுகின்றன; சபிக்கப்பட்டவன் ஆசீர்வாதத்திற்குள் கொண்டுவரப்படுகிறான். ஜீவன் மரிக்கிறது; மரித்தவன் பிழைக்கிறான். மகிமை இருளில் மறைக்கப்படுகிறது. குழப்பத்தைத் தவிர வேறொன்றையும் அறியாதவன், மகிமையின் ஆடையால் உடுத்துவிக்கப்படுகிறான்” என்று லெஃப்வர் எழுதினார். —D’Aubigne, b. 12, ch. 2. (5)GCTam 237.1

  இரட்சிப்பின் மகிமை தேவனுக்கே சொந்தமானது என்று போதித்த அதே நேரத்தில், கீழ்ப்படிதல் என்ற கடமை மனிதனைச் சார்ந்தது என்று அவர் அறிவித்தார். “நீங்கள் கிறிஸ்தவ சபையின் ஒரு அங்கத்தினராக இருந்தால், அவரது சரீரத்தின் ஒரு உறுப்பாக இருக்கிறீர்கள். நீங்கள் அவருடைய சரீரமாக இருந்தால், தெய்வீகத்தன்மை உடையவராக இருக்கிறீர்கள். ஓ! இந்த மாபெரும் சிலாக்கியத்தைப்பற்றி மனிதர்களால் அறியக்கூடுமானால், எவ்வளவு தூய்மையோடும், கற்போடும், பரிசுத்தத்தோடும் அவர்கள் வாழ்வார்கள். அவருடைய மகிமையுடன் ஒப்பிடும்போது, எந்த அளவிற்கு ஆழ்ந்து யோசிக்கவேண்டியதாக உள்ளது. மாமிசக் கண்களால் காண முடியாத அந்த மகிமையை, உலகமகிமைகள் அனைத்துக்கும் மேலானதாக அல்லவா கருதுவார்கள்” என்றார்.--Ibid., b. 12, ch. 2. (6)GCTam 237.2

  லெஃப்வர் அவர்களின் வார்த்தைகளை வாஞ்சையுடன் கவனித்த மாணவர்களில் சிலர், அந்த ஆசிரியரின் குரல் மௌனப்படுத்தப்பட்ட வெகுகாலத்திற்குப்பின், சத்தியத்தை அறிவிக்கத் தொடரவேண்டியவர்களாக இருந்தனர். வில்லியம் ஃபாரல் என்பவர் அப்படிப்பட்ட ஒருவராக இருந்தார். பக்திமிக்க பெற்றோர்களின் மகனாக இருந்து, சபையின் போதனைகளில் கேள்விக்கிடமில்லாத வகையில் விசுவாசம் வைக்கும்படி கற்பிக்கப்பட்டு, அப்போஸ்தலனாகிய பவுலுடன் சேர்ந்து “நம்முடைய மார்க்கத்திலுள்ள சமயபேதங்களில் மிகவும் கண்டிப்பான சமயத்துக்கு இசைந்தபடி பரிசேயனாய் நடந்தேனென்று சாட்சி சொல்ல அவர்களுக்கு மனதிருந்தால் சொல்லலாம்” (அப்போஸ்தலர் 26:5) என்று கூறக்கூடியவராக இருந்தார். சபையை எதிர்க்கும் அனைவரும் அழிக்கப்படவேண்டும் என்ற எரியும் பக்திவைராக்கியம் உடையவராக அவர் இருந்தார். போப்புவிற்கு எதிராக யாராவது ஒருவர் பேசுவதைக்கேட்க நேரிட்டால், நான் மூர்க்கமான ஓநாயைப்போல பல்லைக் கடிப்பவனாக இருந்திருந்தேன் என்று தனது கடந்தகால வாழ்க்கையைப்பற்றிப் பின்னர் குறிப்பிட்டு பாரல் கூறினார்.-Wylie, b. 13, ch. 1. லெஃப்வருடன் சேர்ந்து பாரிஸ் நகர ஆலயங்களைச் சுற்றிவருவதிலும், பல இடங்களில் பிரார்த்தனைசெய்வதிலும், புனித ஸ்தலங்களைப் பரிசுப்பொருட்களினால் நிறைத்துத் துதிப்பதிலும் அவர் களைப்பற்றவராக இருந்திருந்தார். ஆனால் இந்தச் சடங்காச்சாரங்கள் எதுவும் அவரது ஆத்துமாவிற்குச் சமாதானத்தைக் கொண்டுவரவில்லை. பாவப்பிராகாரமான அவரது செயல்கள் அனைத்தும் அவரை இறுக்க கட்டியிருந்த பாவத்தைப் பற்றிய உணர்வை அவரைவிட்டு விலக்குவதில் தோல்வி அடைந்தன. பரலோகத்திலிருந்து உண்டான ஒரு சத்தத்தைப்போன்று “இரட்சிப்பு கிருபையினால். குற்றமற்ற ஒருவர் குற்றவாளியாக்கப்பட்டு, குற்றவாளி விடுதலைசெய்யப்படுகிறான். கிறிஸ்து வின் சிலுவை ஒன்றுமட்டும்தான் பரலோகத்தின் வாசலைத் திறந்து, நரகத்தின் வாசலை மூடுகிறது” என்னும் சீர்திருத்தவாதியின் வார்த்தைகளை அவர் கவனித்தார்.-Ibid., b. 13, ch. 2. (7)GCTam 238.1

  பாரல் மகிழ்ச்சியுடன் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, பவுலைப்போன்றே, பாரம்பரியங்களின் அடிமைத்தளையிலிருந்து தேவகுமாரனால் உண்டாகும் சுதந்திரத்திற்குத் திரும்பினார். “கொலை வெறிமிக்க ஓநாயின் இதயத்தி லிருந்து” திரும்பிவந்தார். “எளிமையான அபாயமில்லாத ஒரு அமைதியான ஆட்டுக்குட்டியைப்போல முற்றிலும் போப்புவிடமிருந்து பின்வாங்கி, கிறிஸ்துவிற்கு ஒப்புவிக்கப்பட்ட இதயத்துடன்” திரும்பிவந்ததாக அவர் கூறினார்.--D'Aubigne, b. 12, ch. 3. (8)GCTam 238.2

  லெஃப்வர் தனது மாணவர்களுக்கிடையில் ஒளியைப் பரப்புவதைத் தொடர்ந்தபோது, பாரெல் போப்புவின் காரியத்தில் எப்படி இருந்தாரோ அதேபோன்ற வைராக்கியத்துடன் சத்தியத்தைப் பொதுமக்களின் முன் அறிவித்திட முன்சென்றார். ரோமசபையில் சிறப்புமிக்க ஒருவராயிருந்த மீக்ஸ் நகரப் பேராயர், விரைவில் அவர்களுடன் இணைந்தார். கல்வித் திறமை காரணமாக மிக மேலான நிலையில் வைக்கப்பட்டிருந்த மற்ற ஆசிரியர்களும், சுவிசேஷத்தை அறிவிக்கும் பணியில் சேர்ந்துகொள்ளவே, கைவினைஞர்கள், விவசாயிகள், அரசனின் அரண்மனையில் பணிபுரிந்தவர்கள் ஆகிய அனைவரையும் வெற்றிகரமாக அது ஆதாயப்படுத்திக்கொண்டது. அப்பொழுது ஆட்சியிலிருந்த முதலாம் பிரான்சிஸ் அரசனின் சகோதரி சீர்திருத்த விசுவாசத்தை ஏற்றுக்கொண்டார். அரசன்தானும், அவரது அரசியின் அன்னையும் ஒரு சமயம் அனுகூலமாக அதை ஆதரிப்பதுபோல் காணப்பட்டனர். பிரான்ஸ் நாடு சுவிசேஷத்திற்கு வெற்றியாக்கப்படும் என்ற மேலான நம்பிக்கையுடன் சீர்திருத்தவாதிகள் முன்நோக்கினர். (9)GCTam 238.3

  ஆனால் அவர்களது நம்பிக்கை நடைமுறைக்கு வரக்கூடாததாக இருந்தது. சோதனையும் உபத்திரவமும் கிறிஸ்துவின் சீடர்களுக்காகக் காத்திருந்தன. எப்படியிருந்தாலும் அது இரக்கத்தினால் அவர்களது கண் களுக்குத் திரையிட்டு மறைக்கப்பட்டது. புயலைச் சந்திக்கின்ற பலத்தை அடைந்து கொள்ளுவதற்காக ஒரு சமாதான காலம் குறுக்கிட, சீர்திருத்தம் துரிதமாக முன்னேறியது. மீக்ஸ் நகரப் பேராயர் தனது மண்டலத்திலிருந்து குருமார்களுக்கும் மக்களுக்கும் போதிப்பதற்காக வைராக்கியத்துடன் பாடு பட்டார். அறியாமையும் ஒழுக்கமுமற்ற குருமார்கள் நீக்கப்பட்டு, அந்த இடங்கள் கற்றறிந்த பக்தி உள்ளவர்களால் நிரப்பப்பட்டன. தனது மக்கள் தேவனுடைய வார்த்தையைத் தாங்களாகவே அறிந்துகொள்ளும் மார்க்கம் உண்டாக்கப்பட வேண்டும் என்கிற பெரிய வாஞ்சையினை உடையவராக அந்தப் பேராயர் இருந்தார். விரைவில் அது செய்துமுடிக்கப்பட்டது. விட்டன்பர்க் அச்சகத்திலிருந்து லுத்தரின் ஜெர்மன் மொழி வேதாகமம் வெளிவந்துகொண்டிருந்த அதே நேரத்தில், புதிய ஏற்பாட்டை மொழி பெயர்க்கும் பணியை லெஃப்வர் பொறுப்பேற்க, மீக்ஸ் நகரில் பிரெஞ்சு மொழியில் புதிய ஏற்பாடு வெளியிடப்பட்டது. தனது நிர்வாகத்திற்குள்ளிருக்கும் மக்களனைவருக்கும் வேதாகமம் கிடைக்கவேண்டுமென்ற நோக்கத்துடன் ஓய்வையும் செலவையும் பொருட்படுத்தாது அந்தப் பேராயர் செயல்படவே, விரைவில் மீக்ஸ் நகர மக்கள் அனைவரும் வேதவாக்கியங்களைத் தங்கள் உடைமையாக்கிக்கொண்டனர். (10)GCTam 239.1

  தாகத்தினால் அழிந்துகொண்டிருக்கும் பயணிகள், உயிருள்ள ஒரு நீரூற்றைக்கண்டு மகிழ்வதுபோல், பரலோகத்தின் தூதை இந்த ஆத்துமாக்கள் பெற்றுக்கொண்டன. வயல்வெளிகளில் வேலை செய்தவர்கள், பணிமனைகளிலிருந்த கைவினைஞர்கள் ஆகியோர் விலைமதிப்புமிக்க வேதாமக சத்தியத்தைப் பற்றி, அவர்களது அன்றாட வேலைகளுக்குமிடையில் உரையாடி மகிழ்ந்திருந்தனர். மாலை வேளைகளில் மதுக்கடைகளில் கூடுவதற்குப்பதிலாக, அடுத்தவர்களுடைய வீடுகளில் தேவனுடைய வார்த்தையை வாசிப்பதிலும் ஜெபிப்பதிலும் ஈடுபட ஒன்றுசேர்ந்திருந்தனர். அந்த மக்கள் சமூகங்களில் பெரும்மாற்றம் விரைவில் வெளிக்காட்டப்பட்டது. மிகவும் தாழ்மையான வகுப்பைச் சார்ந்திருந்தவர்களாயிருந்தும், கல்வி அறிவு இல்லாத கடினவேலைசெய்திருந்த விவசாயிகளாக இருந்தபோதிலும், சீர்திருத்தமானது மேலுயர்த்திடும் தெய்வீக கிருபையின் வல்லமை இவர்களது வாழ்க்கையில் காணப்பட்டது. சுவிசேஷத்தை உண்மையுடன் பெற்றுக்கொள்ளுபவர்களுக்குள், அது எவைகளை நிறைவேற்றும் என்பதற்கு சாட்சியாக, அவர்கள் தாழ்மையும் அன்பும் பரிசுத்தமும் உள்ளவர்களாக இருந்தனர்.(11)GCTam 239.2

  மீக்ஸ் நகரில் ஏற்றப்பட்ட ஒளி, வெகுதூரம் பரவியது. மாற்றம் அடைந்தவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டு இருந்தது. சந்நியாசிகளின் குறுகிய மனப்பான்மை அலட்சியப்படுத்தின அரசன், ரோம தலைவரின் கோபத்தை தற்காலிகமாகத் தடுத்திருந்தான். முடிவில் போப்பு மார்க்கத்தலைவர் அரசனை மேற்கொண்டார். இப்பொழுது அக்கினிஸ்தம்பம் நிறுத்தப்பட்டுவிட்டது. நெருப்பு அல்லது மறுதலித்து கூறுதல் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்படி மீக்ஸ் பேராயர் வற்புறுத்தப்பட்டபோது, அவர் எளிதான பாதையை ஏற்றுக்கொண்டார். அந்தத் தலைவர் விழுந்துபோனாலுங்கூட, அவரது மந்தை நிலைகுலையாமல் நின்றது. நெருப்பு ஜுவாலைக்கு நடுவில் அநேகர் சத்தியத்திற்குச் சாட்சி பகர்ந்தனர். சமாதான காலத்தில் இவர்களது சாட்சியை ஒருபோதும் கேட்டிராத ஆயிரக்கணக்கானவர்களிடம், இந்தத் தாழ்மையான கிறிஸ்தவர்கள் அக்கினி ஸ்தம்பத்தில் தாங்கள் காட்டிய தைரியத்தினாலும் நேர்மையினாலும் பேசினார்கள்.(12)GCTam 240.1

  பாடுகளுக்கும் பரிகாசங்களுக்கும் மத்தியில் கிறிஸ்விற்குச் சாட்சியா யிருக்கத் துணிந்தவர்களுக்கிடையில், தாழ்மையும் ஏழ்மையுமிக்கவர்கள் மட்டுமே இருக்கவில்லை. செல்வம், அந்தஸ்து, உயிரையும்விட சத்தியத்தை மேலாக மதித்த ஆத்துமாக்கள், பிரபுக்களின் மாளிகைகளிலும் கோட்டைகளிலும் அரண்மனைகளிலும் அரசர்கள் மத்தியிலும் இருந்தனர். பேராயர்களின் உடைகளையும் நெற்றிப்பட்டங்களையும்விட வீரர்களின் உடையில் உயர்ந்ததும் உறுதிமிக்கதுமான ஆவி மறைத்துவைக்கப் பட்டிருந்தது. லூயிஸ் டி பெர்க்கின் என்பவர் மேலான குடும்பத்தில் பிறந்தவராக இருந்தார். தைரியமிக்க அரசவை வீரராயிருந்த அவர், கல்வியில் ஈடுபாடு உடையவராகவும், மென்மையான பண்புடையவராகவும், குற்றமற்ற சன்மார்க்கமுள்ளவராகவும் இருந்தார். போப்புமார்க்க நியமங்களைப் பெரிய அளவில் பின்பற்றும் ஒருவராகவும், திருப்பலிப் பூசைகளைக் காண்பவராகவும், சொற்பொழிவுகளைக் கேட்பவராகவும் அவர் இருந்தார். லுத்தரின் மார்க்கத்தை விசேஷமாக வெறுத்தல் என்கிற கிரீடத்தை அவரது மற்ற சிறப்புகளைவிட மேலாக அணிந்தவராக இருந்திருந்தார். ஆனால் மற்ற அநேகரைப்போலவே அவரும் தெய்வீக நடத்துதலினால் வேதாகமத்திற்கு நடத்தப்பட்டு, அதில் போப்புமார்க்கத்தின் போதனைகள் காணப்படாமல், லுத்தரின் கோட்பாடுகள் இருப்பதை ஆச்சரியத்துடன் கண்டார்.—Wylie, b. 13, ch. 9. அதற்குப்பின் அவர் தானாகவே அவரது தியானம் முழுவதையும் சுவிசேஷத்தின் காரியத்தில் செலுத்தினார்.(13)GCTam 240.2

  அவரது அறிவின் மேன்மை, பேச்சுத்திறன், பிறரால் மேற்கொள்ளமுடியாத தைரியம், வீரம் நிறைந்த வைராக்கியம், அரசவையில் உள்ள அவரது செல்வாக்கு ஆகியவைகளினால் பிரான்ஸ் நாட்டின் கற்றறிந்த மேன்மக்கள் யாவரிலும் மேலானவராக விளங்கியதுடன், அரசனின் அனுகூலத்தைப்பெற்ற ஒருவராகவும் இருந்ததால், அவரது நாட்டைச் சீர்திருத்துவதற்காக ஏற்படுத்தப் பட்டிருக்கும் ஒருவராக அவர் பலராலும் கருதப்பட்டார். “முதலாம் பிரான்சிஸ் இரண்டாவது தேர்தல் அதிகாரியாக இருந்திருந்தால், பெர்க்கின் இரண்டாவது லுத்தராக இருந்திருப்பார்” என்று பிசா கூறினார். “அவர் லுத்தரைவிட மிகமோசமானவர்” என்று போப்புமார்க்கவாதிகள் குற்றம்கூறினர்.-Ibid., b. 13, ch. 9. பிரான்ஸ் நாட்டு ரோமன் கத்தோலிக்கர்களை உண்மையாகவே பயமுறுத்துகிறவராக அவர் இருந்தார். அவரை ஒரு மதவிரோதி என்று கூறி, அவர்கள் சிறையிலடைத்தனர். ஆனால் அவர் அரசனால் விடுதலை செய்யப்பட்டார். இந்தப் போராட்டம் அநேக வருடங்கள் தொடர்ந்தது. ரோம மார்க்கத்திற்கும் சீர்திருத்தத்திற்கும் இடையில் தடுமாறிக்கொண்டிருந்த பிரான்சிஸ் அரசன், மறுபக்கமாக சந்நியாசிகளின் பயங்கரமான வைராக்கியத்தை சகித்துக் கட்டுப்பட்டார். போப்புமார்க்க அதிகாரிகளால், மூன்று தடவைகள் பெர்க்கின் சிறையாக்கப்பட்டார். ஆனால் அவரது அறிவின்மேன்மை, சிறப்புமிக்க பண்பு ஆகியவைகளைப் போற்றிய அரசன், மதத் தலைவர்களின் தீய நோக்கங்களுக்கு அவரைப் பலியாக்க மறுத்துவிட்டார். (14)GCTam 241.1

  பிரான்சில், திரும்பத் திரும்ப அவரைப் பயமுறுத்தும் ஆபத்துக்களைப்பற்றி எச்சரிக்கப்பட்டு, தாங்களாகவே நாட்டைவிட்டு வெளியேறியதால் பாதுகாப்பைப் கண்டுகொண்டவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும்படி பெர்க்கின் அவசரப்படுத்தப்பட்டார். “ஒரு அயல்நாட்டிற்குத் தூதுவராக அனுப்பப்படும்படியாகக் கேட்டு, ஜெர்மனிக்குச் சென்று அங்கு பயணம்செய்யுங்கள். உங்களுக்கு பேடாவைத் தெரியும். எத்திசையிலும் நஞ்சுவீசும் ஆயிரம் தலைகளுள்ள இராட்சதராக அவர் இருக்கிறர் என்பதும் உங்களுக்குத் தெரியும். உங்களது எதிரிகள் லேகியோன்கள் என்று பெயரிடப்பட்டிருக்கிறார்கள். உங்களது நோக்கம் கிறிஸ்துவின் நோக்கத்தைவிட நல்லதாக இருந்தாலுங்கூட, உங்களைத் துன்பமிக்க விதத்தில் அழிக்கும்வரை அவர்கள் போகவிடமாட்டார்கள். அரசன் தரும் பாதுகாப்பின் மீது அதிகமான நம்பிக்கை வைக்கவேண்டாம். எல்லா நிலைகளிலும் என்னை இறையியல் ஆசிரியர்களின் மூலமாக சமரசப்படுத்த முயலாதீர்கள்” என்று சிறந்த கல்வி அறிவிருந்தும், ஜீவனையும் கௌரவத்தையும் சத்தியத்திற்குக் கீழாகவே மதிப்பிடுகின்ற சன்மார்க்க மேன்மையில் தோல்வியடைந்த கோழையும் சந்தர்ப்பவாதியுமான எரோஸ்மஸ் எழுதினார்.—Ibid., b. 13, ch. 9. (15)GCTam 241.2

  ஆனால் அபாயங்கள் அதிகமானபோது, பெர்க்கினின் வைராக்கியம் அதிகமாகப் பலமடைந்தது. எரேஸ்மஸ்-ன் அரசியல் மற்றும் தனக்குத்தானே சேவை செய்யும் ஆலோசனைகளை சுவீகரிப்பதிலிருந்து விலகி, இன்னமும் அதிக தைரியமிக்க நடவடிக்கைகளில் ஈடுபட அவர் தீர்மானித்தார். சத்தியத்தைத் காப்பதோடு நில்லாமல், தவறுகளையும் தாக்குவார் அவர். ரோமன் கத்தோலிக்கர்கள் அவர்மீது சாட்ட விரும்பிய மதப்புரட்டு என்னும் குற்றச்சாட்டை, அவர்கள் மீதே சாட்டி, அவர் ஆணியடிப்பார். அவருக்கெதிராக மிகவும் துணிவுடனும் கசப்புடனும் செயலாற்றி யிருந்த அவரது எதிரிகள், பாரிஸ் பல்கலைக்கழகத்தின் இறையியல் துறையில் மிகவும் கற்றறிந்தவர்களாகவும் முனைவர்களாகவும், சந்நியாசிகளாகவும் இருந்தனர். இந்த அமைப்பு, அந்த நகரம், அந்த நாடு ஆகிய இரு இடங்களிலுமிருந்த சபையின் அதிகாரவர்க்கத்தின் மிக உயர்ந்தவைகளில் ஒன்றாக இருந்தது. இந்த முனைவர்கள் எழுதிய எழுத்துக்களிலிருந்து பன்னிரண்டு காரியங்களை பெர்க்கின் எடுத்துவைத்து, இவை வேதாகமத்திற்கு எதிரானவை. எனவே அவை மதப்புரட்டானவை என்று பகிரங்கமாக அறிவித்து, இந்த எதிர்வாதத்தில் நீதி வழங்கவேண்டும் என்று அரசரைக் கேட்டுக்கொண்டார். (16)GCTam 242.1

  ஒருவரை ஒருவர் எதிர்நோக்கும் இந்த வீரர்களின் வல்லமையையும் தீவிரத்தையும் ஒப்பிட்டு நோக்க விரும்பிய அரசன், அகந்தைமிக்க இந்த சந்நியாசிகளின் பெருமையை தாழ்த்தும் ஒரு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ந்து, ரோமன் கத்தோலிக்கர்கள் தங்கள் நோக்கத்தை வேதாகமத்தின் மூலமாகத் தற்காக்கவரும்படி அழைத்தார். இந்த ஆயுதம் அவர்களுக்குப் பயன்படாது என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். சிறைப்படுத்துதல், சித்திரவதை செய்தல், அக்கினி ஸ்தம்பத்தில் கட்டிவைத்து எரித்தல் ஆகியவை நல்ல பலனைத்தரும் என்பதை அவர்கள் நன்கு புரிந்திருந்தனர். ஆனால் சூழ்நிலை தங்களுக்கு எதிராக மாறியதை அறிந்த அதன் தலைமையானது, பெர்க்கினை மூழ்கடிக்கும் நம்பிக்கையில் அவர்கள் தோண்டிய குழியில் அவர்களே விழவேண்டியிருப்பதை கண்டனர். தப்பிப்பதற்கு ஏதாவதொரு வழியைக் காண திகிலுடன் தங்களை நோக்கினர். (17)GCTam 242.2

  இந்தச் சரியான நேரத்தில், தெரு முனைகளில் ஒன்றில் நின்றிருந்த ஒரு கன்னிமரியாளின் சிலை சேதப்படுத்தப்பட்டதாகக் காணப்பட்டது. நகரில் பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் உண்டானது. துக்கம்கொண்டாடுதலுடனும் கோபத்துடனும் அந்த இடத்தில் மக்கள் திரளாகக் கூடினார்கள். அரசனும் ஆழமாக அசைக்கப்பட்டார். தங்களுக்குச் சாதகமான ஒரு நல்ல கணக்கைக் காட்டிலும், அனுகூலமான ஒரு வாய்ப்பு இங்கு கிடைத்துவிட்டது. அதைச் சாதகமாகப் பயன்படுத்த அவர்கள் விரைந்தனர். “பெர்க்கினின் கோட்பாட்டின் பலன்கள் இவைதான். மதமும், சட்டமும், அரசனின் சிங்காசனமும் லுத்தரைப் பின்பற்றுபவர்களின் சதியால் கவிழ்க்கப்படவுள்ளது” என்று கூக்குரலிட்டனர்.--Ibid., b. 13, ch. 9. (18)GCTam 243.1

  பெர்க்கின் மறுபடியும் கைதுசெய்யப்பட்டார். அரசன் பாரிஸ் நகரிலிருந்து சென்றுவிட்டான். சந்நியாசிகளோ அவர்களது நோக்கத்தின்படிச் செய்யச் சுதந்திரமடைந்தனர். அந்தச் சீர்திருத்தவாதி விசாரிக்கப்பட்டு, மரணதண்டனைக்குத் தீர்ப்புச் செய்யப்பட்டார். அவரைத் தப்புவிக்க பிரான்சிஸ் அரசன் குறுக்கிட்டுவிடக்கூடாது என்பதற்காக அந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட அதே நாளில், மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. கொலை செய்யப்படவேண்டிய இடத்திற்கு மத்தியான வேளையில் பெர்க்கின் நடத்திச்செல்லப்பட்டார். அந்த நிகழ்ச்சியைக் காண்பதற்குப் பெருங்கூட்டம் கூடியிருந்தது. ஆச்சரியத்தினாலும் தவறான தகவல்களினாலும் நிறைந்த அவர்கள், பலியாக்கப்பட இருந்தவர் பிரான்ஸ் நாட்டின் மிக மேலான தைரியமிக்க குடும்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். அந்தக் கூட்டத்தில் வியப்பு, கோபம், பரிகாசம், கசப்பான வெறுப்பினால் இருளடைந்த முகங்கள் நிறைந்திருந்தன. ஆனால் ஒரே ஒரு முகத்தின் மீது மட்டும் எந்தவிதமான அமளிமிக்க நிழலும் தங்கவில்லை. அந்த இரத்தசாட்சியின் எண்ணங்கள் அந்தக் காட்சியிலிருந்து வெகு தூரம் சென்றிருந்தது. கர்த்தரின் பிரசன்னத்தைப்பற்றிய உணர்வை மட்டும் உடையவராக இருந்தார் அவர். (19)GCTam 243.2

  அவர் பயணம்செய்திருந்த மிக மோசமான இராணுவ வண்டி, அவரை உபத்திரவப்படுத்த இருப்பவர்களின் கோபமிக்க முகங்கள், சாகப் போகும் பயங்கரமான மரணம் ஆகியவற்றை அவர் கவனிக்கவேயில்லை. உயிரோடிருந்தவரும் மரித்தவரும் சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறவரும், மரணம் பாதாளம் ஆகியவைகளின் திறவுகோலை உடையவருமானவர் அவரது அருகில் இருந்தார். பரலோக சமாதானத்தினாலும் ஒளியினாலும், பெர்க்கினின் முகம் பிரகாசமாயிருந்தது. வெல்வெட், இரட்டைசாட்டின், டமாஸ்க் என்னும் மேலான துணிகளினால் ஆன உடையை அணிந்திருந்தார்.- D'Aubigne, History of the Reformation in Europe in the Time of Calvin, b. 2, ch. 19. அரசர்களுக்கு அரசராக இருப்பவருக்கும் பிரபஞ்சத்திற்கும் முன்பாக தனது விசுவாசத்தை சாட்சி பகரப்போகும் அவரது மகிழ்ச்சியை துக்கத்தின் அடையாளம் பொய்ப்பிக்கக்கூடாது. (20)GCTam 243.3

  ஜனநெருக்கமான தெருக்களின் வழியாக அந்த ஊர்வலம் சென்ற போது, மறைக்கமுடியாத அவரது சமாதானத்தையும், மகிழ்ச்சியான வெற்றி யையும், அவரது தோற்றத்தையும் மக்கள் ஆச்சரியத்துடன் கவனித்தனர். “ஒரு ஆலயத்தில் அமர்ந்து, பரிசுத்தமான விஷயங்களை தியானிப்பவரைப் போல இருக்கிறார்” என்று அவர்கள் கூறினார்கள். (21)GCTam 244.1

  அக்கினி ஸ்தம்பத்தில் கட்டப்பட்டு எரிக்கப்படுவதற்குமுன், மக்களுக்குச் சில வார்த்தைகளைக் கூறிட பெர்க்கின் முயன்றார். ஆனால் விளைவுகளை எண்ணிப் பயந்த சந்நியாசிகள் கூச்சலிடத் தொடங்கி, வீரர்கள் தங்கள் ஆயுதங்களை ஒன்றுடன் ஒன்று மோதச்செய்து கலகலப்பை உண்டுபண்ணவே, அந்த இரத்தசாட்சி யின் குரல் அந்த சத்தத்திற்குள் அமிழ்ந்தது. இவ்வாறாக கி.பி. 1529-ல் பாரிஸ் நகரின் பண்புமிக்க உயர்ந்த கல்விமானும், சபை மேலதிகாரியுமாயிருந்த பெர்க்கின் மரண மேடையின்மீதிருந்து சாகும்போது, கி.பி.1793-ல் தங்கள் கால்களை மடக்க இருக்கும் மக்களுக்குமுன் ஒரு உதாரணமான அடித்தளமாக தன்னை ஏற்படுத்தினார்.-Ibid., b. 13, ch. 6. (22)GCTam 244.2

  பெர்க்கின் அக்கினி ஸ்தம்பத்தில் கட்டப்பட்டார். பின்னர் அவரது உடல் எரிக்கப்பட்டது. அவரது மரணச்செய்தி பிரான்ஸ் முழுவதிலும் இருந்த சீர்திருத்தத்தின் நண்பர்களைத் துயரப்படுத்தியது. ஆனால் அவரது முன்னுதாரணம் சாகடிக்கப்படவில்லை. “இனி வரவிருக்கும் வாழ்க்கையின்மீது எங்கள் கண்களைப்பதித்து, மரணத்தை மகிழ்ச்சியுடன் சந்திக்க நாங்களுங்கூட ஆயத்தமாக இருக்கிறோம்” என்று சத்தியத்திற்குச் சாட்சிகளாக இருந்தவர்கள் கூறினார்கள். --Ibid., b. 2, ch. 16. (23)GCTam 244.3

  மீக்ஸ் நகரில் உபத்திரவம் நடந்தபோது, சீர்திருத்த விசுவாசத்தைப் பிரசங்கித்திருந்த போதகர்கள் அவர்களது பிரசங்கம் செய்யும் உரிமங்களை இழந்தவர்களாக, மற்ற இடங்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர். சிறிது காலத்திற்குப்பின், லெஃப்வர் ஜெர்மனிக்குச் சென்றார். பாரெல் சிறுவனாக இருந்தபோது வாழ்ந்த, தனது பிறப்பிடமான கிழக்குப் பிரான்சிற்கு சுவிசேஷ த்தின் ஒளியைப் பரப்பத் திரும்பினார். மீக்ஸ் நகரில் என்ன நிகழ்ந்தது என்கிற செய்தியை அறிந்தும், அவர் பயமற்ற வைராக்கியத்துடன் பிரசங்கித்த சத்தியத்தை அநேகர் கேட்டனர். அவரைப் பேசாமலிருக்கும்படிச் செய்ய, அதிகாரிகள் விரைந்தெழவே, அவர் நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அவரால் அதற்குமேல் பொது இடங்களில் ஊழியம் செய்யமுடியாமல்போனாலும், சமவெளிகளுக்கும், கிராமங்களுக்கும் கடந்துசென்று, தனியார்களின் வீடுகளிலும் தனிப்பட்ட மலைச்சரிவுகளிலும் தான் சிறுவனாயிருந்தபோது சுற்றி அலைந்த காடுகளிலும் பெரும் குகைகளிலும் தங்குமிடங்கண்டு, அங்கெல்லாம் தொடர்ந்து பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். பெரும் சோதனைகளுக்காக தேவன் அவரை ஆயத்தம் செய்துகொண் டிருந்தார். “சிலுவைகள், உபத்திரவம், சாத்தான் காத்திருப்பதைப் பற்றிய செய்திகள் எனக்குக் கிடைக்காமலில்லை. எனது சொந்த பலத்தினால் நான் தாங்கிக்கொள்ளக் கூடியவைகளைவிட, அவை மிக அதிகமாக இருந்தன. ஆனால் தேவன் எனது பிதாவாக இருக்கிறார். அவர் ஊழியம் செய்கிறார். எனக்குத் தேவையானது கிடைப்பதற்கு அவர் எப்போதும் ஊழியம் செய்வார்” என்று அவர் கூறினார்.-Ibid., b. 12, ch. 9. (24)GCTam 244.4

  அப்போஸ்தலர்களின் நாட்களில் இருந்தது போலவே “சம்பவித்தவை கள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்று” -பிலிப். 1:12. “சிதறிப்போன வர்கள் எங்கும் சுற்றித்திரிந்து, சுவிசேஷ வசனத்தைப் பிரசங்கித்தார்கள்” (அப். 8:4) என்றபடி, பாரிஸிலிருந்தும் மீக்ஸிலிருந்தும் விரட்டப்பட்டு, பிரான்ஸ் நாட்டின் அநேக மாநிலங்களின் மூலை முடுக்குகளுக்கு ஒளி அதன் வழியைக் கண்டடைந்தது. (25)GCTam 245.1

  தேவன் அவரது நோக்கத்தை விரிவுபடுத்த, தொடர்ந்து ஊழியக் காரர்களை ஆயத்தம்பண்ணிக்கொண்டிருந்தார். பாரிஸ்நகரிலிருந்த பள்ளிகளில் ஒன்றில் சிந்தனையும் அமைதியுமிக்க ஒரு மாணவன் இருந்தான். அவன் தனது வல்லமைமிக்க ஆழமான சிந்திக்கும் மனதிற்கு ஏற்கனவே சான்றுபகருகிறவனாக இருந்தபோது, அவனது குற்றமற்ற வாழ்க்கை, அவனது நுண்ணறிவின் வல்லமைக்கும், சமய சம்பந்தமான தியானத்திற்கும், எவ்வகையிலும் குறைவற்றதாகக் கணப்பட்டது. அதாவது அறிவின் மேன்மையும் அதைச் செயல்படுத்திய விதமும் விரைவில் அவனை அந்த கல்லூரிக்குப் பெருமை சேர்ப்பவர் என்ற நிலைக்கு உயர்த்தியது. சபையைக் காப்பதில் மிகுந்த தகுதியும் கௌரவமுமிக்கவர்களில் ஒருவனாக ஜான் கால்வின் திகழ்வார் என்பது நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்பட்டது. எனவே தெய்வீக ஒளியின் ஒரு கதிர் அவர் அடைத்துவைக்கப்பட்டிருந்த துறவறம், மூடநம்பிக்கை என்னும் சுவர்களுக்குள் ஊடுருவிப் பாய்ந்தது. மதவிரோதிகள் நெருப்பிலிடப்படுவதற்கு தகுதியானவர்களே என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லாதிருந்து, பயத்துடன் புதிய கோட்பாடுகளைக் கேட்டார். அப்படி இருந்தும் அறியாத விதத்தில் அவர் மதவிரோதத்தை நேருக்கு நேர் சந்திக்கும்படி கொண்டுவரப்பட்டு, புரொட்டஸ்டாண்டுப் போதனைகளை அழிப்பதற்காக ரோம இறையியலின் வல்லமையைச் சோதிக்க வற்புறுத்தப்பட்டார். (26)GCTam 245.2

  கால்வினின் ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் சீர்திருத்த இயக்கத்தில் சேர்ந்தவராக பாரிஸ்நகரில் இருந்தார். உறவினர்களான அந்த இரு மனிதர்களும் அடிக்கடி சந்தித்து கிறிஸ்தவ உலகத்தைத் தொந்தரவுபடுத்திக்கொண்டிருந்த காரியங்களைப்பற்றி ஒருமித்து விவாதித்திருந்தனர். “உலகில் இரண்டு சமயங்களே உள்ளன. இதில் ஒரு சமயத்தவர் சடங்குகளினாலும் நற்செயல்களினாலும் தன்னைதான் இரட்சித்துக்கொள்ளுகிற மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கோட்பாடுகளைக் கொண்டவர்கள். மற்றவர்கள், இரட்சிப்பிற்காக முற்றிலும் இலவசமாகக் கொடுக்கப்படும் தேவனது கிருபையை நோக்கும்படி வேதாகமத்தால் போதிக்கப்பட்டவர்கள்” என்று ஒலிவ்டன் என்கிற அந்த புரொட்டஸ்டாண்டுவாதி கூறினார். நான் உங்களுடைய கோட்பாடுகளில் எதையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். எனது நாட்கள் முழுவதிலும் நான் தவறில் வாழ்ந்திருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று கால்வின் திகைப்புடனும் அச்சத்துடனும் கேட்டார். (27)GCTam 246.1

  ஆனால் தான் விரும்பினபடி வெளியேற்றிவிடமுடியாத சிந்தனைகள் அவரது உள்ளத்தில் எழுப்பப்பட்டன. அவர் தன் அறையில் தனியாக இருந்து, தனது சகோதரனின் வார்த்தைகளைப் பற்றிச் சிந்திக்கத்தொடங்கினார். பாவ உணர்வு அவரைப்பற்றிக் கொண்டது. பரிசுத்தமும் நீதியுமுள்ள ஒரு நீதிபதியின் பிரசன்னத்தில் பரிந்துபேசும் ஒருவர் இல்லாமல் தான் நிற்பதை அவர் கண்டார். பரிசுத்தவான்களின் மத்தியஸ்தம், நற்செயல்கள், ஆலயங்களின் சடங்குகள் ஆகிய அனைத்தும் பாவத்திற்கு நிவாரணம் தர வல்லமை அற்றவையாக இருந்தன. அவரால், அவர்முன் நித்தியமான நம்பிக்கையின்மையை மட்டுமே காணமுடிந்தது. அவரது கவலையிலிருந்து அவரை விடுவிக்க அவரது சபையின் கல்விமான்கள் வீணாக முயன்றனர். பாவ அறிக்கை, பாவப்பரிகாரச் செயல்கள் யாவும் வீணாகக் கையாளப்பட்டிருந்தன. அவைகளால் ஆத்துமாவைத் தேவனுடன் ஒப்புரவாக்க இயலவில்லை. (28)GCTam 246.2

  பயனற்ற இந்தச் சர்ச்சைகளில் கால்வின் இன்னும் ஈடுபட்டிருந்தபோது, ஒரு பொதுச்சதுக்கத்திற்குச் செல்லும் வாய்ப்பு சந்தர்ப்பவசமாக அவருக்குக் கிடைக்கவே, அங்கு சென்றபோது ஒரு மதவிரோதி எரிக்கப்படுவதைச் சாட்சியாகக் கண்டார். அந்த இரத்தசாட்சியின் முகத்தில் தங்கியிருந்த சமாதானத்தைக் கண்டு அவர் வியந்தார். மரணத்தை உண்டுபண்ணும் பயங்கரமான அந்த சித்திரவதைக்கு நடுவில், சபையின் அதிபயங்கரமான குற்றச் சாட்டுகளின்கீழ், அந்த இரத்தசாட்சியின் தைரியத்திற்கும் விசுவாசத் திற்கும், சபைக்கு கண்டிப்புடன் கீழ்ப்படிந்து வாழ்ந்திருக்கும் தன்னுடைய நம்பிக்கையின்மைக்கும் இருளுக்கும் இருக்கிற வேற்றுமையை மிக வேதனையோடு ஒப்பிட்டுப்பார்த்தார். மதவிரோதிகள் என்று குறிப்பிடப்பட்டுத் தண்டிக்கப்பட்டவர்களின் விசுவாசம் வேதாகமத்தைச் சார்ந்திருந்தது என்பதை அவர் அறிந்து கொண்டார். அதை வாசித்து முடியுமானால் அவர்களது மகிழ்ச்சியின் இரகசியத்தைக் கண்டுபிடிக்க அவர் தீர்மானித்தார். (29)GCTam 247.1

  வேதாகமத்தில் அவர் கிறிஸ்துவைக் கண்டார். ஓ பிதாவே! அவரது தியாகபலி உமது கோபத்தைச் சமாதானப்படுத்தியுள்ளது. அவரது இரத்தம், எனது அசுத்தத்தை கழுவி நீக்கி உள்ளது. எனது சாபத்தை, அவரது சிலுவை சுமந்துள்ளது. அவரது மரணம், எனக்கு நிவாரணமாகியுள்ளது. எங்களுக்காக நாங்கள் அநேக பயனற்ற தவறான கருவிகளைச் செய்துகொண்டோம் ஆனால் நீர் உமது வார்த்தையை எனக்குமுன் ஒரு சுடர்போல வைத்தீர். இயேசுவின் புண்ணியங்களைத்தவிர, மற்ற அனைத்தையும் அருவருக்கும்படி, எனது இதயத்தை நீர் தொட்டிருக்கிறீர்” என்று அவர் கதறினார். -Martyn, vol. 3, ch. 13. (30)GCTam 247.2

  ரோமன் கத்தோலிக்கப் பாதிரியாராக ஆவதற்காக கால்வின் கற்பிக்கப்பட்டிருந்தார். அவர் பன்னிரெண்டு வயதுள்ளவராக இருந்தபோது, ஒரு சிறிய ஆலயத்தின் பிரசங்கியாக நியமிக்கப்பட்டு, சபை நியமத்தின்படி பேராயரால் அவரது தலை சிரைக்கப்பட்டது. அவர் அபிஷேகம் பெறவில்லை அல்லது ஒரு குருவானவரின் கடமைகளை நிறைவேற்றவில்லை. ஆனால் குருக்களின் கூட்டத்தில் ஒரு அங்கத்தினராகி, அந்தப் பணிக்கான பட்டம்பெற்று, அதற்கான சம்பளப்படியையும் பெற்றார். (31)GCTam 247.3

  இப்பொழுது தன்னால் ஒருபோதும் ஒரு குருவாகமுடியாது என்பதை உணர்ந்து, கொஞ்சகாலம் சமூகச் சட்டங்களைப்பற்றி ஆராயத்திரும்பி, முடிவில் தன்னுடைய வாழ்க்கையை சுவிசேஷத்திற்காக அர்ப்பணிக்கத் தீர்மானித்தார். ஆனால் அவர் சமுதாயத்தில் ஆசிரியராவதற்குத் தயங்கினார். அவர் இயல்பாகவே பயந்த சுபாவம் உள்ளவராக இருந்து, இந்தப் பாரமிக்க பொறுப்பின் சுமையை உணர்ந்து, மேலும் கற்பதில் தம்மை ஈடுபடுத்த விரும்பினார். ஆனால் அவரது நண்பர்களின் ஆர்வமிக்க வேண்டுதல்கள் கடைசியாக அவரை இணங்கவைப்பதில் வெற்றியடைந்தது. “மிகத் தாழ்மையான ஆரம்பத்தை உடைய ஒருவன், மாபெரும் சிறப்புமிக்க நிலைமைக்கு உயர்த்தப்படுவது என்பது ஆச்சரியமானதாக உள்ளது” என்று கூறினார்.—Wylie, b. 13, ch. 1. (32)GCTam 247.4

  அவர் தனது பணியில் அமைதியுடன் இறங்கினார். அவரது வார்த்தைகள் பூமியைப் புத்துணர்வடையச்செய்யவரும் பனியைப்போல் இருந்தன. அவர் பாரிஸைவிட்டுச்சென்று, இப்போது மாநில நகரம் ஒன்றில், சுவிசேஷத்தை நேசித்த அதன் சீடர்களுக்குத் தனது பாதுகாப்பை அளித்திருந்த மார்கரெட் இளவரசியின் பாதுகாப்பிற்கு உட்பட்டார். கால்வின் ஒரு சாதுவான—போலித்தனமில்லாத தன்மையுடைய இளைஞராகவே இருந்தார். வீடுகளில் இருந்தவர்களிடம் அவரது ஊழியம் ஆரம்பமாயிற்று. வீடுகளிலுள்ள அங்கத்தினர்களால் சூழப்பட்ட அவர், வேதாகமத்தை வாசித்து, இரட்சிப்பைப்பற்றிய சத்தியங்களைத் திறந்தார். அந்தத்தூதைக் கேட்டவர்கள், மற்றவர்களுக்கு அந்த நற்செய்தியைச் சுமந்து செல்லவே, விரைவில் அந்த ஆசிரியரின் பெயர் நகரத்தையும் கடந்து, அதற்கு வெளியிலிருந்த பேரூர்களுக்கும் கிராமங்களுக்கும் சென்றது. மேலும் அவர் கோட்டைகளுக்கும் குடிசைகளுக்கும் சென்று, சத்தியத்திற்கு பயமற்ற சாட்சிகளாக நிற்கவேண்டியிருந்த சபைகளுக்கு அஸ்திவாரமிடுகின்ற பணியில் முன்னேறினார். (33)GCTam 248.1

  சில மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் அவர் பாரிஸிற்கு வந்தார். கற்றோர்கள், மேதைகள் ஆகிய கூட்டத்தினரின் நடுவில், வழக்கத்திற்கு விரோதமான குழப்பம் அப்போது இருந்தது. புராதன மொழிகளைப்பற்றிய ஆராய்ச்சி, மனங்களை வேதாகமத்திற்கு நடத்தவே, அதன் சத்தியத்தினால் தொடப்படாத இதயங்களை கொண்டிருந்த அநேகர், அதைப்பற்றி ஆர்வத்துடன் தங்களுக்குள் கலந்துரையாடிக்கொண்டிருந்தனர். ரோமின் வீரர்களுடன் சண்டையிடுவதிலுங்கூட அவர்கள் ஈடுபட்டிருந்தனர். இறையியல் எதிர்வாதங்களை முறியடிப்பதில் கால்வின் வல்லவராக இருந்திருந்தபோதிலும், ஓசையிடும் இந்தப் பள்ளி மனிதர்கள் செய்திருந்த பணியைவிட மிகவும் உயர்வான ஒரு பணியைச் செய்யவேண்டியவராக இருந்தார் அவர். மனிதர்களின் மனங்கள் கலங்கியிருந்த அந்த நேரத்தில், அவர்களுக்காக சத்தியத்தைத் திறக்கவேண்டிய வேளையாக அது இருந்தது. இறையியல் விவாதங்களின் சத்தத்தினால், பல்கலைக்கழக அறைகள் நிறைந்திருந்தபோது, கால்வின் வீடுவீடாகச் சென்று, மக்களுக்கு வேதாகமத்தைத் திறந்து, கிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்ட அவரைப்பற்றியேப் பேசிக்கொண்டிருந்தார். (34)GCTam 248.2

  தேவனது தெய்வீக ஏற்பாட்டினால், சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ள வேறொரு அழைப்பு பாரிஸிற்குக் கொடுக்கப்பட வேண்டியதாக இருந்தது. லெஃப்வர், பாரெல் ஆகியோரால் கொடுக்கப்பட்ட அழைப்பு நிராகரிக்கப்பட்டிருந்தது என்றாலும் அந்தப் பெரும் தலைநகரிலிருந்த சகல வகுப்பினராலும் மீண்டும் அந்தத் தூது கேட்கப்படவேண்டியதாக இருந்தது. அரசியல் நோக்கங்களால் ஆட்கொள்ளப்பட்டிருந்த அரசன், சீர்திருத்தத்திற்கு எதிராக, ரோம மார்க்கத்தை முற்றிலும் சாராதவனாகவே இருந்தான். பிரான்ஸில் புரொட்டஸ்டாண்டு மார்க்கம் வெற்றியடையும் என்று மார்கரெட் இளவரசி நம்பியிருந்தாள். சீர்திருத்த தூதானது பாரிஸ் நகரில் பிரசங்கிக்கப்படவேண்டும் என்றும் அவள் தீர்மானித்தாள். அரசன் இல்லாதவேளையில், அந்த நகரத்திலிருந்த ஆலயங்களில் பிரசங்கம் செய்யும்படி ஒரு புரொட்டஸ்டாண்டு ஊழியருக்கு அவள் கட்டளை இட்டாள். போப்புமார்க்கத்தின் மேலானவர்களால் இது தடுக்கப்படவே, அந்த இளவரசி அரண்மனையைத் திறந்துவிட்டார். ஒரு அறை கிறிஸ்தவர்கள் கூடுமிடமாக ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பிரசங்கம் செய்யப்படும் என்றாள். சகல நிலையிலுள்ள மக்களும் வரலாமென்றும் அறிவித்தாள். அந்த ஆராதனைக்கு மக்கள் கூட்டம் திரண்டது. தொழுகைக்கான கூடுமிடம் மட்டுமின்றி அதற்கு முன்னிருந்த கூடங்களும் மக்கள் கூட்டத்தால் நிறைந்தன. மேன்மக்கள், நாட்டின் சிறப்பினைப் பெற்றவர்கள், வழக்கறிஞர்கள், வணிகர்கள், கலைஞர்கள் எனப் பற்பல பிரிவினருமாக ஆயிரக்கணக்கானவர்கள் தினந்தோறும் அங்கு கூடினர். இந்தக் கூட்டத்தைத் தடுப்பதற்குப்பதிலாக, அரசன் அதற்காகப் பாரிஸிலுள்ள இரு ஆலயங்கள் திறந்து வைக்கப்படவேண்டும் என்று கட்டளையிட்டான். இதற்குமுன் ஒருபோதும் அந்த நகரம் இதுபோல் தேவனுடைய வார்த்தையினால் அசைக்கப்பட வில்லை. பரலோகத்திலிருந்து ஜீவ ஆவி மக்களின்மீது ஊற்றப்பட்டது போலக் காணப்பட்டது. புலனடக்கம், தூய்மை, ஒழுக்கம், பணிசெய்தல் என்பவைகள், மதுபானவெறி, விபசாரம், சண்டைகள், சோம்பேறித்தனம் ஆகியவைகள் இருந்த இடங்களைப் பற்றிக்கொண்டன! (35)GCTam 249.1

  ஆனால் சபைத்தலைவர்கள் செயலாற்றாமல் இருக்கவில்லை. இந்தப் பிரசங்கங்களைத் தடைசெய்ய அரசன் குறுக்கிடாமல் இருக்கவே, அவர்கள் சாதாரண மக்களிடம் திரும்பினர். பயத்தையும், தவறான எண்ணத்தையும், மதவெறியையும் எழுப்பிவிடுவதற்கான செயல்கள் எதுவும் அவர்களால் செய்யாமல் விட்டுவைக்கப்படவில்லை. பழைய எருசலேமைப் போலவே பாரிஸ் நகரம் அதன் தவறான ஆசிரியர்களுக்குக் குருட்டுத்தனமாகக் கீழ்ப்படிந்து, தன்னைச் சந்திக்கும் காலத்தையோ அல்லது அதன் சமாதானத்திற்கான காரியங்களையோ அறியாமல் இருந்தது. தலைநகரில் இரண்டு வருடங்கள் தேவனுடைய வார்த்தைகள் பிரசங்கிக்கப்பட்டன. அநேகர் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டனர். பெரும்பான்மையான மக்கள் அதை எதிர்த்தனர். பிரான்சிஸ் அவர்கள் தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளுவதற்காக மட்டும் சகிப்புத்தன்மை என்கிற வெளிவேஷத்தைக் காட்டியிருந்தார். அதனால் போப்புமார்க்கத்தினர் மீண்டும் தங்கள் உயர்வை அடைவதில் வெற்றியடைந்தனர். மறுபடியும் ஆலயங்கள் மூடப்பட்டு, எரியூட்டும் அக்கினி ஸ்தம்பங்கள் நாட்டப்பட்டன. (36)GCTam 249.2

  கால்வின் இன்னும் பாரிஸில் இருந்து, ஆராய்ச்சியினாலும் தியானத்தினாலும் ஜெபத்தினாலும் தனது எதிர்கால உழியத்திற்காகவும் சத்திய ஒளியைப் பரப்புவதில் தொடரவும் தன்னை ஆயத்தம் செய்துகொண்டிருந்தார். அப்படியிருந்தாலும் இறுதியில் அவர்மீது சந்தேகம் உண்டாயிற்று. அவரை நெருப்பிலிட அதிகாரிகள் தீர்மானித்தனர். தனது தனி அறையில் பாதுகாப்பாக இருப்பதாகவும், அபாயம் எதுவும் இல்லை என்றும் அவர் எண்ணிக் கொண்டிருந்த சமயத்தில், அவரைக் கைதுசெய்யும் நோக்கத்துடன் அதிகாரிகள் வந்துகொண்டிருக்கின்றனர் என்று அவரது நண்பர்கள் அறிவித்து, அவரை அவசரப்படுத்தினார்கள். அதே வினாடியில் வீட்டின் வெளிவாசல் கதவைத் தட்டும் பெரும் சத்தம் கேட்டது. தாமதிப்பதற்கு விநாடி நேரங்கூட இருக்கவில்லை. அவரது நண்பர்களில்சிலர் வந்திருந்த அதிகாரிகளைக் கதவருகில் தடுத்து நிறுத்தினார்கள். அதேசமயம் வேறு சில நண்பர்கள் அவர் சன்னல் வழியாகக் கீழிறங்கிச்செல்ல உதவவே, அவர் மிக விரைவாக நகருக்கு வெளியே சென்றார். சீர்திருத்தத்தின் நண்பனாயிருந்த ஒரு கூலிக்காரனுடைய குடிசையில் அவர் அடைக்கலம் கண்டு, அந்த வரவேற்பாளனின் ஆடையை அணிந்து, தன்னை மறைத்துக் கொண்டு, ஒரு மண்வெட்டியை தன் தோளில் வைத்துக்கொண்டு பயணம்செய்து, மார்கரெட் இளவரசியின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு இடத்தில் மறுபடியம் தஞ்சம் புகுந்தார். (See—D'Aubigne, b. 2, ch. 30). (37)GCTam 250.1

  சில மாதங்கள் வல்லமைமிக்க தனது நண்பர்களின் பாதுகாப்பில் தங்கி, முன்போலவே ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பிரான்ஸை சுவிசேஷப் பணியால் நிரப்பவேண்டும் என்பதில் அவரது இதயம் பதிந்திருந்தது. ஆகவே அவரால் அங்கு அதிக காலம் தங்கியிருக்க முடியவில்லை. இந்தப் புயல் ஓரளவிற்கு அமைதி அடைந்தவுடன், ஒரு பல்கலைக்கழகத்தையும் அதில் புதிய கருத்துக்களுக்கு ஆதரவு உள்ளதையும் கண்டு, பாய்டியர்ஸ் என்னும் அந்த இடத்தில் தனது பணியின் புதிய களத்தை அமைத்தார். எல்லா வகுப்பைச் சேர்ந்த மக்களும் சுவிசேஷத்தை மகிழ்ச்சியுடன் கேட்டனர். பொது இடத்தில் பிரசங்கம் செய்யப்படவில்லை. தலைமை நீதிபதியின் வீட்டிலும், தனது தங்குமிடத்திலும், சில சமயங்களில் பொதுவான தோட்டங்களிலும் கால்வின் நித்திய ஜீவனைப்பற்றிய வார்த்தைகளை அவைகளைக் கவனிக்க விரும்பினவர்களுக்குக் கூறினார். சிறிது காலத்திற்குப் பின்னர் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோது, நகருக்கு வெளியே கூடுவது பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணப்பட்டது. நகருக்கு வெளியில் மலைச்சரிவில் கவிழ்ந்த பாறைகளினாலும் அடர்ந்த மரங்களினாலும் மறைக்கப்பட்டிருந்த ஒரு குகை, ஒதுக்குப்புறத்தை மேலும் அதிகமாக முழுமையாக்கி யிருந்தது. அந்த இடம் கூடுமிடமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது. சிறுசிறு கூட்டங்களாக மக்கள் பல பாதைகளின் வழியாக அந்த இடத்தை அடைந்தனர். அந்த ஒதுக்குப்புறமான இடத்தில் வேதாகமம் வாசிக்கப்பட்டு விளக்கப்பட்டது. இங்கு பிரான்ஸ் நாட்டின் புரொட்டஸ்டண்டுகளினால், முதல்தடவையாக கர்த்தருடைய இராப்போஜன ஆராதனை நடத்தப்பட்டது. இந்தச் சிறு ஆலயத்திலிருந்து அநேக சுவிசேஷகர்கள் வெளியே அனுப்பப்பட்டனர். (38)GCTam 250.2

  மறுபடியும் ஒரு தடவை கால்வின் பாரிஸ் நகருக்குத் திரும்பினார். பிரான்ஸ் ஒரு நாடாக சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையை அவரால் விட்டுவிட முடியவில்லை. ஆனால் கிட்டத்தட்ட ஊழியத்தின் ஒவ்வொரு கதவும் மூடப்பட்டிருப்பதைக் கண்டார். சவிசேஷத்தைப் போதிப்பது நேராக அக்கினி ஸ்தம்பத்திற்குச் செல்லும் பாதையாக இருக்கவே, இறுதியில் அவர் ஜெர்மனிக்குச் செல்லத் தீர்மானித்தார். அவர் பிரான்ஸை விட்டுச் சென்றாரோ இல்லையோ, புரொட்டஸ்டாண்டுகளின்மீது ஒரு புயல் வீசியது. அந்த நேரத்தில், அவர் அங்கிருந்திருந்தால், அப்போதைய அழிவில் நிச்சயமாகவே அவரும் அழிக்கப்பட்டிருந்திருப்பார். (39)GCTam 251.1

  பிரெஞ்சு சீர்திருத்தவாதிகள் சீர்திருத்தவாதிகள் தங்களது நாடு ஜெர்மனிக்கும் சுவிட்சர்லாந்திற்கும் சமமாகச் செல்லவேண்டுமென்று விரும்பி, அந்த நாடு முழுவதையும் எழுப்பிட ரோமமார்க்கத்தின் மூட நம்பிக்கையின் மீது தைரியமான ஒரு பலத்த அடி கொடுக்கவேண்டும் என்று தீர்மானித்தனர். அதற்குத் தகுந்தபடி திருப்பலிபூசையை எதிர்க்கும் சுவரொட்டிகள் ஒரே இரவில் பிரான்ஸ் நாடு முழுவதிலும் சுவர்களில் ஒட்டப்பட்டன. இந்த வைராக்கியமிக்க தவறான நிதானமும் கணிப்பும் சீர்திருத்தத்திற்கான முன்னேற்றத்தைக் கொண்டுவருவதற்குப் பதிலாக, தன்மீதும், தனது பிரச்சாரகர்களின்மீது மட்டுமல்லாது பிரான்ஸ் நாடு முழுவதிலும் இருந்த சீர்திருத்த விசுவாசத்தின் நண்பர்கள் அனைவரின்மீதும் பாழ்க்கடிப்பைக் கொண்டுவந்தது. மதவிரோதிகள், சிங்காசனத்தின் ஸ்திரத்தன்மைக்கும், நாட்டின் சமாதானத்திற்கும் ஆபத்தை உண்டுபண்ணக்கூடிய குழப்பம் செய்பவர்கள். எனவே அவர்கள் முற்றிலுமாக அழிக்கப்படவேண்டும் என்ற பாசாங்குமிக்க கோரிக்கையை வைக்க வேண்டும் என்று ரோம சபை நெடுநாட்களாக விரும்பியிருந்ததை அந்தச் சம்பவம் நிறைவேற்றியது. (40)GCTam 251.2

  பாகுபாடு அறியமுடியாத நண்பனாலோ அல்லது கொடிய எதிரியினாலோ, ஏதோ ஒரு இரகசியக் கரத்தினால் சுவரொட்டிகளில் ஒன்று அரசனின் தனி அறையில் ஒட்டப்பட்டது. அரசன் திகைப்பினால் உறைந்துபோனான். இந்தக் காகிதத்தில் யுகங்கள் நெடுகிலுமாக பக்தியுடன் போற்றப்பட்டிருந்த மூடநம்பிக்கைகள் நிதானமற்ற கரத்தால் தாக்கி எழுதப்பட்டிருந்தது. இராஜ சமூகத்தில் இதுவரை இல்லாத தைரியமிக்க துடுக்குத்தனத்துடன், சொல்லக்கூடாத அந்த வார்த்தைகள் அரசனின் கோபத்தை எழுப்பியது. தனது திகைப்பினால் நடுங்கி, சில விநாடிகள் பேச்சற்றவனாக அரசன் நின்றான். அதன்பின் அவனது கோபம் வெளிவந்தது. “எல்லோரும் சிறைபிடிக்கப்படட்டும். லுத்தரின் போதனைகளை ஏற்றுக்கொண்டவர்கள் அனைவரும் உடனடியாக ஒட்டுமொத்தமாக நிர்மூலமாக்கப்படட்டும்” என்றான்.--Ibid., b. 4, ch. 10. ஆம். பகடை உருட்டப்பட்டாகிவிட்டது. ரோமமார்க்கத்தை முற்றிலும் சார்ந்து நிற்க அரசன்தானே தீர்மானித்துவிட்டான். (41)GCTam 252.1

  பாரிஸ் நகரிலிருந்த ஒவ்வொரு லுத்தரனையும் கைதுசெய்யும் நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டது. விசுவாசிகளை அவர்கள் இரகசியமாகக் கூடுமிடத்திற்கு அழைக்கும் பழக்கத்தை உடையவனாக இருந்த, சீர்திருத்த விசுவாசத்தைப்பற்றிக் கொண்டிருந்த, ஏழையான ஒரு கைவினைஞன் கைதுசெய்யப்பட்டான். உடனடியாக அக்கினிக்கம்பத்தில் கட்டப்பட்டுக் கொலை செய்யப்படுவாய் என்ற பயமுறுத்தலுடன் கத்தோலிக்க சபையின் பிரதிநிதியால், அந்த நகரத்திலிருந்த ஒவ்வொரு புரொட்டஸ்டாண்டினரின் வீட்டையும் அடையாளம் காட்டும்படியாக அவன் நடத்தப்பட்டான். கீழ்த்தரமான இந்தச் செயலைச்செய்ய திகிலினால் அவன் பின்வாங்கினாலும், கடைசியில் அக்கினி ஜுவாலையைப் பற்றிய பயம் அவனை மேற்கொண்டதால், அவன் தன் சகோதரனைக் காட்டிக்கொடுக்கச் சம்மதித்து நம்பிக்கைத் துரோகியானான். திரளானவர்கள் முன்செல்ல, ஒரு கூட்டம் குருமார்கள், தூபகலசங்களைப் பிடிப்பவர்கள், சந்நியாசிகள், இராணுவ வீரர்கள், மொரீன் என்ற அந்த அரசாங்க துப்பறிபவன் ஆகியோரால் சூழப்பட்டு, அந்தத் துரோகியுடன் சேர்ந்து, தெருத்தெருவாகவும் மௌனமாகவும் நகர விதிகளின் வழியாகக் கடந்துசென்றது. பரிசுத்த நற்கருணையின் மேன்மைக்காகவும், திருப்பலிப்பூசையின்மீது மறுப்பாளர் காட்டிய அவமானத்திற்குப் பரிகாரமாகவும் இந்த ஊர்வலம் ஆடம்பரமாக நடத்தப்பட்டது. ஆனால் இந்த நாடகத்திற்கடியில், சாவுக்கேதுவாகிய நோக்கம் மறைத்துவைக்கப்பட்டிருந்தது. ஒரு லுத்தரனின் வீட்டிற்கு எதிராக வந்து சேர்ந்ததும், காட்டிக்கொடுப்பவன் ஒரு சைகை செய்தான்.GCTam 252.2

  பாரிஸ் நகரிலிருந்த ஒவ்வொரு லுத்தரனையும் கைதுசெய்யும் நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டது. விசுவாசிகளை அவர்கள் இரகசியமாகக் கூடுமிடத்திற்கு அழைக்கும் பழக்கத்தை உடையவனாக இருந்த, சீர்திருத்த விசுவாசத்தைப்பற்றிக் கொண்டிருந்த, ஏழையான ஒரு கைவினைஞன் கைதுசெய்யப்பட்டான். உடனடியாக அக்கினிக்கம்பத்தில் கட்டப்பட்டுக் கொலை செய்யப்படுவாய் என்ற பயமுறுத்தலுடன் கத்தோலிக்க சபையின் பிரதிநிதியால், அந்த நகரத்திலிருந்த ஒவ்வொரு புரொட்டஸ்டாண்டினரின் வீட்டையும் அடையாளம் காட்டும்படியாக அவன் நடத்தப்பட்டான். கீழ்த்தரமான இந்தச் செயலைச்செய்ய திகிலினால் அவன் பின்வாங்கினாலும், கடைசியில் அக்கினி ஜுவாலையைப் பற்றிய பயம் அவனை மேற்கொண்டதால், அவன் தன் சகோதரனைக் காட்டிக்கொடுக்கச் சம்மதித்து நம்பிக்கைத் துரோகியானான். திரளானவர்கள் முன்செல்ல, ஒரு கூட்டம் குருமார்கள், தூபகலசங்களைப் பிடிப்பவர்கள், சந்நியாசிகள், இராணுவ வீரர்கள், மொரீன் என்ற அந்த அரசாங்க துப்பறிபவன் ஆகியோரால் சூழப்பட்டு, அந்தத் துரோகியுடன் சேர்ந்து, தெருத்தெருவாகவும் மௌனமாகவும் நகர விதிகளின் வழியாகக் கடந்துசென்றது. பரிசுத்த நற்கருணையின் மேன்மைக்காகவும், திருப்பலிப்பூசையின்மீது மறுப்பாளர் காட்டிய அவமானத்திற்குப் பரிகாரமாகவும் இந்த ஊர்வலம் ஆடம்பரமாக நடத்தப்பட்டது. ஆனால் இந்த நாடகத்திற்கடியில், சாவுக்கேதுவாகிய நோக்கம் மறைத்துவைக்கப்பட்டிருந்தது. ஒரு லுத்தரனின் வீட்டிற்கு எதிராக வந்து சேர்ந்ததும், காட்டிக்கொடுப்பவன் ஒரு சைகை செய்தான். ஆனால் ஒரு வார்த்தையும் உச்சரிக்கப்படவில்லை. அந்த ஊர்வலம் நின்று, அந்த வீட்டிற்குள் நுழைந்து, அந்தக் குடும்பம் வெளியே இழுத்துக்கொண்டுவரப்பட்டு, அனைவரும் சங்கிலியால் கட்டப்பட்டபின், அந்தப் பயங்கரமான கூட்டத்தினர் புதிதாகத் துன்பப்படுத்தப்பட இருப்பவர்களைத் தேடி முன்சென்றனர். “பெரிய வீடுகளானாலும் சிறிய வீடுகளானாலும் ஒன்றும் விட்டுவைக்கப்படவில்லை. பாரிஸ் நகரக் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களுங்கூட விட்டுவைக்கப்படவில்லை. துப்பறிபவன் அந்த நகரம் முழுவதையும் அதிரச்செய்தான்.-Ibid., b. 4, ch. 10. (42)GCTam 253.1

  பயங்கரவாதத்தின் ஆட்சி ஆரம்பமாகியிருந்தது. துன்பப் படுத்தப்படும்படி இரையானவர்கள் கொடுமைமிக்க சித்திரவதைகளினால் மரணத்திற்குள்ளானார்கள். அவர்களது வேதனையின் நேரத்தை அதிகரிக்கச்செய்யவேண்டும் என்பதற்காக, நெருப்பின் உக்கிரம் குறைக்கப்பட்டது. ஆனால் வெற்றிவீரர்களாக அவர்கள் இறந்தனர். அவர்களுடைய நடத்தை அசையாததாகவும், அவர்களுடைய சமாதானம் மறைக்கப்பட முடியாததாகவும் இருந்தது. அவர்களை உபத்திரவப்படுத்துபவர்கள் அவர்களது தளராத உறுதியை அசைக்கும் வல்லமையற்றவர்களாக, தாங்களே தோற்றுப்போவதை உணர்ந்தனர். மதவிரோதத்தின் காரணமாகச் செயல்படுத்தப்படும் இந்தத் தண்டனையின் பயங்கரம் எங்கும் பரவவேண்டும் என்பது நோக்கமாக இருந்து, பாரிஸ் நகரின் பல இடங்களிலும் கழுமரங்கள் அமைக்கப்பட்டு, எரித்தல் என்பது நாளுக்குப் பின் நாளாகத் தொடர்ந்தது. எப்படியானாலும் முடிவில் இதனால் உண்டான அனுகூலம் சவிசேஷத்தையே சார்ந்தது. புதிய கருத்து எப்படிப்பட்ட மனிதர்களை உருவாக்கக்கூடும் என்பதைக் காண, பாரிஸ் நகரம் முழுவதும் தகுதி அடைந்தது. இரத்தசாட்சிகளின் குவியலைவிட மேலான வேறே பிரசங்கப்பீடம் இருக்கவில்லை! மரணதண்டனை நிறைவேற்றப்படும் இடத்திற்கு அவர்கள் நடத்தப்பட்டபோது. அநேக மனிதர்களின் முகங்களைப் பிரகாசிக்கச் செய்த அமைதியான சந்தோஷம், பயங்கரமான அக்கினி ஜுவாலைக்குள் நின்றபோது அவர்கள் காட்டிய தீரம், துன்பங்களை மன்னிக்கும் அவர்களது சாந்தகுணம் ஆகியவை காரணமாக, கோபத்தை இரக்கமாகவும், வெறுப்பை அன்பாகவும் மாற்றிக்கொண்ட, சுவிசேஷ த்திற்கு தடுக்கமுடியாதவிதத்தில் சாதகமாகப் பரிந்து பேசினவர்கள் சிலர் மட்டுமல்ல.--D'Aubigne, b. 13, ch. 20. (43)GCTam 253.2

  மக்களின் கோபத்தை அதன் உச்ச நிலையில் வைக்கத் தீர்மானித்திருந்த குருமார்கள், புரொட்டஸ்டாண்டுகளின்மீது மிகப் பயங்கரமான குற்றச்சாட்டுக்களைச் சாட்டினார்கள். கத்தோலிக்கர்களைக் கூட்டமாகக் கொலைசெய்யவும், அரசாங்கத்தைக் கவிழ்க்கவும், அரசனைக் கொலைசெய்யவும் அவர்கள் திட்டமிட்டிருக் கின்றனர் என்ற குற்றச்சாட்டு அவர்கள்மீது சுமத்தப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதரிக்கும் சாட்சியின் ஒரு நிழலைக்கூடக் காண்பிக்க முடியவில்லை. அப்படி இருந்தும் மிகவேறுபட்ட சூழ்நிலைகளில், எதிரெதிரான காரணங்களில், எப்படியாயினும் தீமையைப்பற்றிய இந்தத் தீர்க்கதரிசனங்கள் நிறைவேற வேண்டியதிருந்தன. குற்றமற்ற புரொட்டஸ்டாண்டுகளின்மீது கத்தோலிக்கர்களால் இழைக்கப்பட்ட கொடுமைகள், தேவ கோபத்தை அவர்கள் பக்கம் திரட்டி, அவர்களது அரசனுக்கும், அவனது அரசாங்கத்திற்கும், அதன் கீழிருந்தவர்களுக்கும் தவிர்க்க முடியாதபடி நிகழ உள்ளதென்று அவர்கள் முன்னறிவித்த வீழ்ச்சியை, பின்வந்த நூற்றாண்டுகளில் உண்டுபண்ணியது. புரொட்டஸ்டாண்டிசம் அமைக்கப்பட்டதினால் இந்த அழிவுகள் உண்டாகாமல், அதை அழித்த காரணத்தினால், முந்நூறு ஆண்டுகளுக்குப்பின் இந்த ஆபத்துக்கள் பிரான்ஸின்மீது உண்டாக வேண்டியதிருந்தது. (44)GCTam 254.1

  சந்தேகம், அவநம்பிக்கை, பயங்கரவாதம் ஆகியவை சமுதாயத்தின் சகல வகுப்பினரிடமும் காணப்பட்டது. கல்வியிலும் செல்வாக்கிலும் பண்பிலும் உயர்ந்து இருந்தவர்களின் மனங்களின்மீது லுத்தரன் போதனைகள் எப்படிப்பட்ட ஆழமான பிடிப்பை வைத்திருந்தது என்பது, பொதுவான அபாயக்குரல் உண்டானபோது காணப்பட்டது. நம்பிக்கையும் கௌரவமுமிக்க பதவிகள் திடீரெனக் காலியாகியிருந்தன. கலைஞர்கள், அச்சுத்தொழிலாளர்கள், மேதைகள், பல்கலைக்கழகங்களிலிருந்த பேராசிரியர்கள், அரசவை உறுப்பினர்கள்கூட மறைந்துவிட்டிருந்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் பாரீஸை விட்டு, தங்களது சொந்த நாட்டைவிட்டுத் தாங்களாகவே ஓடிப்போனார்கள். இப்படிச் சென்ற ஏராளமானவர்கள், இதன்வழியாக தாங்கள் புரொட்டஸ்டண்டு விசுவாசத்தை ஆதரிக்கும் செய்தியைக் கொடுத்தனர். சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தங்களுக்கிடையில் மதவிரோதிகள் சகிப்புத்தன்மையுடன் இருந்திருக் கின்றனர் என்கிறதை போப்புமார்க்கவாதிகள் வியப்புடன் நோக்கினர். அவர்களின் கோபம் அவர்களுக்குக் கீழிருந்த தாழ்மையானவர்களின் மீது சென்றது. சிறைகள் நிரம்பிவழிந்தன. சுவிசேஷத்தை அறிவித்தவர்களை எரித்ததினால் உண்டான புகை ஆகாய மண்டலத்தை இருளடையச் செய்வதுபோல் காணப்பட்டது. (45)GCTam 255.1

  பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கல்வியை மேன்மைப்படுத்தும் இயக்கத்திற்குத் தலைமை தாங்கினதற்காக, முதலாம் பிரான்சிஸ் தனக்குள் மகிழ்ச்சி அடைந்தான். சகல நாடுகளிலுமிருந்த கல்விமான்களைத் தன்னுடைய அவையில் சேர்ப்பதில் அவன் மகிழ்ச்சியுடையவனாக இருந்தான். சீர்திருத்த இயக்கத்தை அவன் சகித்துக்கொண்டதற்கு, கல்வியின் மீதிருந்த அவனது பற்றும், அறியாமையின் மேலிருந்த அவமதிப்பும், சந்நியாசிகளிடமிருந்த மூட நம்பிக்கையும் ஓரளவிற்கு காரணமாயிருந்தன. ஆனாலும் மதவிரோதத்தை முற்றிலும் அழித்துவிடவேண்டுமென்ற வைராக்கியத்தினால் உந்தப்பட்டு கல்வியை ஆதரித்த அவன், பிரான்ஸ் நாடு முழுவதிலும் அச்சுப்பணியைத் தடைசெய்ய கட்டளை பிறப்பித்தான்! சமய சகிப்புத்தன்மைக்கும் உபத்திரவத்திற்கும் எதிராக நுண்ணறிவுமிக்க பண்பு பாதுகாப்பாக இருக்காது என்பதற்கு, எழுதப்பட்டிருக்கிற அநேக உதாரணங்களில் இதுவுமொன்று. (46) புரொட்டஸ்டாண்டு மார்க்கத்தை முற்றிலும் அழிப்பதற்காக, பிரான்ஸ் நாடு ஒரு பொதுச்சடங்கினால் தன்னை ஒப்படைக்க வேண்டியதிருந்தது. திருப்பலிபூசையைப்பழித்த, பரலோகத்திற்கு எதிரான பாவப்பரிகாரத்திற்காக, இரத்தத்தால் பாவநிவர்த்தி செய்யப்படவேண்டும் என்று குருமார்கள் கோரி, அந்த பயங்கரமான வேலையைச் செய்வதற்கான அனுமதியை மக்களின் சார்பாக அரசன் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் என்றனர். (47)GCTam 255.2

  இந்த பயங்கரமான சடங்கை நிறைவேற்றும் நாளாக 1535—ம் வருடம் ஜனவரி மாதம் 21-ம் நாள் குறிக்கப்பட்டது. அந்த நாட்டின் மூடநம்பிக்கையினால் உண்டான பயமும், மதவெறியின் மீதான வெறுப்பும் தூண்டி எழுப்பப்பட்டது. பாரிஸ் நகரத் தெருக்கள் அதைச் சூழ்ந்திருந்த நாடுகளிலிருந்த திரள் கூட்டமான மக்களால் நெருக்கமடைந்தது. அந்த நாள், அதைச் சுட்டிக்காட்டும் ஒரு ஊர்வலத்துடன் உதிக்க வேண்டியதிருந்தது. அணிவகுத்துச்சென்ற பாதையிலிருந்த வீடுகளனைத்திலும் துக்கம் கொண்டாடுதலின் துணி விரித்து வைக்கப்பட்டிருந்தது. இடைவெளிகளில் பீடங்கள் நிறுத்திவைக்கப்பட்டு, ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் பரிசுத்த நற்கருணையின் மேன்மைக்காக தீச்சுடர் எரியவைக்கப்பட்டது. பொழுது விடியுமுன், அரசனின் அரண் மனையில் அந்த ஊர்வலம் துவக்கப்பட்டது. ஒவ்வொரு சபைக் கோட்டத்திற்கும் சம்பந்தப்பட்ட சிலுவைக் கொடிக்குப்பின், எரியும் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு நகர மக்கள் இருவர் இருவராக வந்தனர். குருமார்களின் நான்கு பிரிவைச் சேர்ந்தவர்கள் அந்தந்தப் பிரிவுக்கான குறிப்பிட்ட சீருடையை அணிந்தவர்களாக வந்தனர். அதன்பின் புகழ்வாய்ந்த புண்ணியப்பொருட்களின் திரள்கள் வந்தன. இவைகளுக்குப்பின் தங்களின் சிவப்பும் இரத்தாம்பர நிறமுமுள்ள அலங்காரமிக்க உடைகளையும் டாம்பீக பொன் ஆபரணங்களையும் அணிந்தவர்களாக, போற்றும்விதத்தில் உயர்ந்த பிரபுக்களின் நிலையில் இருந்த சபைத்தலைவர்கள் வந்தனர். (48)GCTam 256.1

  பெரும் தலைவர்கள் நான்கு இளவரசர்களால் சுமக்கப்பட்ட, விலை உயர்ந்த குடையின்கீழ் வந்தனர். அவர்களுக்குப்பின் அரச உடைகளும் கிரீடமும் இல்லாதவனாக, துக்கமாகக் கீழ்நோக்கிய முகத்துடன் அரசன் நடந்துவந்தான்.--Ibid., b. 13, ch. 21. அவன் தனது கரத்தில் ஒரு எரியும் மெழுகுவர்த்தியைப் பிடித்திருந்தான். இவ்வாறாகப் பிரான்ஸ் நாட்டின் மன்னன் மக்களின் முன், பாவம்செய்த குற்றவாளியைப் போல நடந்துவந்தான். அவனது ஆத்துமாவை மாசுபடுத்திய தீயசெயல்களுக்காக அல்ல, அவன் கைகளைக் கறை படுத்திய குற்றமற்றவர்களின் இரத்தத்திற்காகவும் அல்ல, திருப்பலி பூசையைப் பழிக்கத்துணிந்த தனது மக்களின் சாவுக்கேதுவான பாவத்திற்காக ஒவ்வொரு பீடத்தின்முன்னும், தன்னைத் தாழ்த்தினான். அவனுக்குப்பின் இருவர்இருவராக, அரசியும் நாட்டின் பெரும் தலைவர்களும் எரியும் தீவட்டிகளுடன் நடந்துவந்தனர். (49)GCTam 256.2

  அந்த நாளின் ஆராதனையின் ஒரு பகுதியாக, பேராயரின் அரண்மனையிலிருந்த பெரிய அரங்கத்திலிருந்து, நாட்டின் மேலான அதிகாரிகளை நோக்கி அரசன் தானே உரையாற்றினான். மிகத் துக்கமான முதத்துடன் அவன் அவர்கள் முன்தோன்றி, நாட்டின்மேல் வந்திருக்கும் “குற்றம், தேவ தூஷணம், துக்கமான கேவலமாக நாள்” என்று நெகிழவைக்கும் வார்த்தைகளில் புலம்பினான். பிரான்ஸ் நாட்டிற்கு அழிவை உண்டுபண்ணும் அச்சுறுத்தலான மதவெறி என்ற கொள்ளைநோயை நீக்குவதற்கு அந்த நாட்டின் விசுவாசமிக்க ஒவ்வொரு குடிமகனும் வரவேண்டும் என்று அழைத்தான். “மதிப்பிற்குரிய பெரியோர்களே! நான் உங்களது அரசனாக உண்மையாக இருப்பதுபோல, எனது அவயவங்களில் ஒன்று இந்த வெறுக்கத்தக்க அழுகலால் பாதிக்கப்பட்டிருந்தால், வெட்டி நீக்கும்படி அதை நான் உங்களிடம் கொடுத்துவிடுவேன்.... அதற்கும்மேலாக எனது குழந்தைகளில் ஒன்று இந்த நோயினால் தீட்டுப்பட்டிருந்தால், அவனை நான் விட்டுவைக்கமாட்டேன்.... நான் நானே அவனை தேவனுக்கென்று தியாகபலியாகக் கொடுத்து விடுவேன்” என்று கண்ணீர் அவனது பேச்சை அடைக்கக் கூறினான். அந்தக் கூட்டத்திலிருந்த அனைவரும் “நாங்கள் கத்தோலிக்க மார்க்கத்துக்காக வாழ்ந்து அதற்காக சாவோம்” என்று ஒருமித்து அழுகையுடன் கூறினார்கள்.-Ibid., b. 4, ch. 12. (50)GCTam 256.3

  சத்தியத்தின் ஒளியை நிராகரித்த அந்த நாட்டைச் சூழ்ந்த இருள் மிகப் பயங்கரமானதாக இருந்தது. “இரட்சிப்பைக் கொண்டுவரும் கிருபை” தோன்றியிருந்தது. ஆனால் அதன் வல்லமையையும் பரிசுத்தத்தையும் கண்டபிறகும், ஆயிரக்கணக்கானவர்கள் அதன் தெய்வீக அழகினால் இழுத்துக்கொள்ளப்பட்டிருந்தபிறகும், அதன் ஒளியினால் நகரங்களும் கிராமங்களும் ஒளியடைந்தபிறகும், பிரான்ஸ் நாடு, அதைவிட்டுத்திரும்பி, ஒளியைக்காட்டிலும் இருளைத் தெரிந்துகொண்டது. பரலோகப்பரிசு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டபோது, அதை அவர்களிடமிருந்து எறிந்துவிட்டனர். அவர்கள் தாங்களாகவே விரும்பிய வஞ்சகத்திற்குப் பலியாகும்வரை தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் கூறினார்கள். இப்பொழுது மக்களை உபத்திரவப்படுத்துவதன் மூலமாக உண்மையாகவே தேவனுடைய ஊழியத்தைச் செய்வதாக நம்பினாலும், அவர்களது அந்த நேர்மையான நம்பிக்கை அவர்களைக் குற்றமற்றவர்களாக ஆக்கிவிடவில்லை. வஞ்சகத்திலிருந்தும், குற்றமற்றவர்களின் இரத்தத்தைச் சிந்துவதால் ஆத்துமாக்களுக்கு உண்டாகும் கறையிலிருந்தும் அவர்களை இரட்சித்திருக்கக்கூடிய ஒளியை அவர்கள் வேண்டுமென்றே புறக்கணித்தார்கள். (51)GCTam 257.1

  எந்த பேராலயத்தில் மதவிரோதிகளை அழிக்கவேண்டும் என்ற பக்திவிநயமான உறுதிமொழியை ஜீவனுள்ள தேவனை மறந்த அந்நாடு எடுத்ததோ, அதே இடத்தில் ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளுக்குப்பின், அறிவு தேவதையை சிங்காசனத்தில் அமர்த்த வேண்டியிருந்தது. மறுபடியும் அந்த ஊர்வலம் அமைக்கப்பட்டு, செய்துமுடிப்போம் என்று பிரான்ஸின் பிரதிநிதிகள் ஆணையிட்ட பணியைச்செய்யப் புறப்பட்டது. வீடு நோக்கிச்செல்லும் அவர்கள் பாதையில், மதவிரோதிகளின் தண்டனையை நிறைவேற்ற, இடை வெளிகளில் அக்கினி ஸ்தம்பங்கள் நிறுத்தப்பட்டது. அரசன் அந்தப் பயங்கரமான காட்சிக்கு சாட்சியாக இருக்கும்படி, அவன் சமீபிக்கும்போது, குவியலுக்கு தீக்கொளுத்தும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.—Wylie, b. 13, ch. 21. கிறிஸ்துவின் இந்த சாட்சிகள் அனுபவித்த சித்திரவதைகள் விவரிப்பதிற்கு மிகவும் பயங்கரமானவை. ஆனால் பலியானவர்களின் பகுதியில் அசைவு உண்டாயிருக்கவில்லை. மறுதலித்துக்கூறும்படி ஒருவர் அழைக்கப்பட்டபோது அவர்: “தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் முன்பு எவைகளைப் பிரசங்கித்தார்களோ, பரிசுத்தவான்களின் கூட்டத்தினர் எவைகளை நம்பினார்களோ, அவைகளைத்தான் நான் நம்புகிறேன். நரகத்தின் வல்லமைகள் அனைத்தையும் எதிர்க்கக்கூடிய தேவனில் எனது விசுவாசமும், நம்பிக்கையும் தளரவில்லை” என்று பதில் கூறினார். -D'Aubigne, b. 4, ch. 12. (52)GCTam 257.2

  அந்த ஊர்வலம் மறுபடியும் மறுபடியும் சித்திரவதை செய்யும் இடங்களில் நின்றது. அந்த ஊர்வலத்தைத் தொடங்கிய இடமான அரசனின் அரண்மனையை அவர்கள் வந்தடைந்ததும் கூட்டம் பிரிந்தது. அந்த நாளில் செய்யப்பட்டவைகளைப்பற்றிய மிகுந்த திருப்தியுடனும், இப்போது ஆரம்பிக்கப்பட்ட இந்தப்பணி மதவிரோதிகளின் முழுமையான அழிவு உண்டாகும்வரையிலும் தொடருமென்று அரசனும் குருமார்களும் ஒருவரை ஒருவர் வாழ்த்தியபடி பிரிந்துசென்றனர். பிரான்ஸ் நாடு நிராகரித்த சமாதானத்தின் சுவிசேஷம் நிச்சயமாக வேருடன் பிடுங்கப்படவிருந்தது. (53)GCTam 258.1

  அதன் விளைவு மிகப் பயங்கரமானவைகளாக இருக்கும். ஜனவரி மாதம் 21-ம் தேதி, 1793-ம் ஆண்டு, சீர்திருத்தவாதிகளை அழிக்கத் தீர்மானித்த அதே தினத்திற்கு மிகச் சரியாக 258 வருடங்களுக்குப்பின், வேறொரு ஊர்வலம் பாரிஸ் நகரின் தெருக்களில் வேறொரு நோக்கத்துடன் சென்றது. “மறுபடியும் அரசன் தான் முதல்நபராக இருந்தான். மறுபடியும் கலகங்களும் கூக்குரல்களும் உண்டாயின. மறுபடியும் அதிகமான எண்ணிக்கையில் துன்பப்படுத்தப்பட்டவர்களின் கூக்குரல்கள் கேட்கப்பட்டன. மறுபடியும் கறுப்புக் கழுமரங்கள் இருந்தன. மறுபடியும் அந்த நாளின் காட்சிகள் மிக பயங்கரமான மரண தண்டனைகளின் நிறைவேறுதலுடன் முடிவடைந்தது. பதினாறாம் லூயி, தன் சிறை அதிகாரிகளுடனும், அவனது மரண தண்டனையை நிறைவேற்ற வந்தவர்களுடனும் கையோடு கைகோர்த்துச் சண்டையிட்டும், அவனது தலை கோடாரியால் துண்டிக்கப்படும்வரை, தலை வெட்டப்படும் இடத்திற்கு, எதிரிகளால் இழுத்துக்கொண்டு வரப்பட்டான். துண்டிக்கப்பட்ட அவனது தலை மேடையில் இருந்து விழுந்தது.” இரத்தம் சிந்தும் பயங்கரவாதம் ஆளுகைசெய்த அந்நாட்களில், கிலட்டின் என்னும் கொலைக்கருவியால், அரசன் மட்டுமல்லாது இரண்டாயிரத்து எண்ணூறு மனித உயிர்களின் தலைகளும் அவ்விடத்துக்கருகில் துண்டிக்கப்பட்டு விழுந்தன. (54)GCTam 258.2

  சீர்திருத்தம், தேவப்பிரமாணங்களின் நியமங்களை வெளியிட்டு, திறந்த வேதாகமத்தை உலகத்துக்குக் கொடுத்து, மக்களின் மனசாட்சியின் மீதான அதன் உரிமையை வலியுறுத்தியது. பரலோகத்தின் சட்டதிட்டங்களையும், கொள்கைகளையும் எல்லையற்ற அன்பு மனிதர்களுக்கு விவரித்துக்காட்டியிருந்தது. “ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; ஜனங்களின் கண்களுக்குமுன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாய் இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய ஜாதியே ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்பார்கள்” உபா. 4:6) என்று தேவன் கூறியிருந்தார். பிரான்ஸ் நாடு, பரலோகத்தின் ஈவை நிராகரித்தபோது, அராஜகம் அழிவு என்பவைகளின் விதைகளை விதைத்தது. அதனால் செயலுக்கேற்ற வினை என்ற தவிர்க்கமுடியாத கோட்பாட்டின் வெளிப்பாடாக புரட்சியும் பயங்கரவாத ஆட்சியும் உண்டாயின. (55)GCTam 259.1

  சுவரில் ஒட்டப்பட்ட அறிவிப்புகளின் விளைவினால் உண்டான உபத்திரவத்திற்கு வெகு நாட்களுக்கு முன்னர், தைரியமும் உறுதியும் மிக்க பாரல் என்பவர், அவரது பிறப்பிடத்தைவிட்டு ஓடிப்போகும்படி வற்புறுத்தப்பட்டார். அவர் சுவிட்சர்லாந்து சென்று, ஸ்விங்ளியின் பணிக்குத் துணைசெய்து, சீர்திருத்தத்திற்குச் சாதகமான நிலை அமையும்படி உதவினார். அவரது வாழ்க்கையின் பிற்பகுதி இங்குதான் செலவிடப்படவேண்டியதாக இருந்தது. அப்படியிருந்தும், பிரான்சிலுள்ள சீர்திருத்தப்பணியின்மீது பெருமளவிற்கு அவரது செல்வாக்கு இருந்தது. அவர் நாடுகடத்தப்பட்ட ஆரம்ப வருடங்களில், தனது பிறப்பிடத்தில் சுவிசேஷத்தைப் பரப்பும் பணியில், அவரது முயற்சிகள் திரும்பியிருந்தன. எல்லையருகிலிருந்த தனது கிராமப்புற மக்களுக்கிடையில், பிரசங்கம் செய்ய அதிகமான காலத்தைச் செலவிட்டு, போராட்டங்களைப்பற்றி விழிப்புடன் கவனித்து, தைரியமூட்டும் வார்த்தைகளினாலும் ஆலோசனைகளினாலும் உதவிசெய்தார். நாட்டை விட்டு வெளியேறிச்சென்ற மற்றவர்களின் உதவியுடன், ஜெர்மன் நாட்டுச் சீர்திருத்தவாதிகளின் எழுத்துக்கள் பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டு, பிரெஞ்சு வேதாகமத்துடன் பெருமளவில் அச்சிடப்பட்டது. இந்த நூல்கள் புத்தக ஊழியர்களால் பெருமளவில் பிரான்ஸில் விற்கப்பட்டன. புத்தக ஊழியர்களுக்கு அவை குறைந்த விலையில் கொடுக்கப்பட்டதால் கிடைத்த லாபம் அப்பணியைத் தொடர்ந்துசெய்ய அவர்களைத் தாங்கியது. (56)GCTam 259.2

  ஒரு தாழ்மையான ஆசிரியரின் உருவில் ஃபாரல் சுவிட்சர்லாந்தில் தமது பணியில் ஈடுபட்டார். ஒதுக்குப்புறமாயிருந்த ஒரு கிறிஸ்தவ சபைக்கோட்டத்திற்கு அவர் சென்று, சிறுவர்களுக்குப் போதிப்பதில் கவனம் செலுத்தினார். கல்வியின் மற்ற பாடங்களைப் போதித்ததோடு, மிகுந்த கவனத்துடன் வேதாகமச் சத்தியங்களை சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்கள் மூலமாக சத்தியம் அவர்களது பெற்றோர்களைச் சென்றடையும் என்று சிலரும் நம்பினர். ஆனால் அந்தப் பணியை நிறுத்த குருமார்கள் முன்வரவே, மூடநம்பிக்கை மிக்க கிராமப்புற மக்கள் அதற்கு எதிராக எழுப்பப்பட்டனர். “அதன் போதனைகள் சமாதானத்தைக் கொண்டுவராமல், சண்டையைக் கொண்டுவருவதால், அது கிறிஸ்துவின் சுவிசேஷமாக இருக்கமுடியாது” என்று குருமார்கள் வற்புறுத்தினார்கள்.—Wylie, b. 14, ch. 3. முதலாவது சீடர்கள் விரட்டப்பட்டபோது, ஒரு பட்டணத்தைவிட்டு அடுத்த பட்டணத்திற்கு ஓடிப்போனதைப்போல, அவரும் ஓடினார். கிராமத்திலிருந்து கிராமத்திற்கும், நகரத்திலிருந்து நகரத்திற்கும், பசி, குளிர், களைப்பு வாழ்க்கையில் எங்குமுள்ள அபாயங்கள் ஆகியவைகளை சகித்தவராக, அவர் கால்நடையாகச் சென்றார். சந்தைவெளிகளிலும் ஆலயங்களிலும், சில சமயங்களில் பேராலயங்களின் பிரசங்கப் பீடங்களிலிருந்தும் அவர் பிரசங்கம் செய்தார். கேட்பவர்கள் இல்லாமல் ஆலயங்கள் இருப்பதை சில சமயங்களில் கண்டார். சில சமயங்களில் அவரது பிரசங்கங்கள் சத்தங்களினாலும் கேலிகளினாலும் இடையூறுசெய்யப்பட்டன. மீண்டும் அவர் பிரசங்கப் பீடத்திலிருந்து முரட்டுத்தனமாக வெளியே இழுக்கப்பட்டார். ஒருமுறைக்குமேல் அவர் ஒழுங்கீனமாக மக்களால் கிட்டத்தட்ட சாகும்படி அடிக்கப்பட்டார். அப்படியிருந்தும் அவர் முன்சென்றார். அடிக்கடி புறக்கணிக்கப்பட்டபோதிலும் களைப்படையாத பிடிவாதத்துடன் தனது கருத்துக்களை வெளிப்படுத்தத் திரும்பினார். போப்புமார்க்கத்தின் பலத்த கோட்டைகளாக இருந்த பேரூர்களும் நகரங்களும், ஒன்றன்பின் ஒன்றாக சுவிசேஷத்திற்கு தங்கள் வாசல்களைத் திறக்கக் கண்டார். ஆரம்பத்தில் அவர் பணியாற்றியிருந்த சிறிய சபைக்கோட்டம் விரைவில் சீர்திருத்த விசுவாசத்தை ஏற்றுக்கொண்டது. மோரட், நாச்சாட்டால் என்னும் நகரங்கள் ரோம சபை சடங்குகளைமறுத்து, அவர்களது ஆலயங்களிலிருந்த ஆராதனைக்கென்று வைக்கப்பட்டிருந்த விக்கிரகங்களை நீக்கிவிட்டன. (57)GCTam 260.1

  ஜெனீவா நகரில் புரொட்டஸ்டாண்டு இயக்கத்தின் கொடியை நடவேண்டும் என பாரல் நீண்ட நாட்களாக விரும்பியிருந்தார். அந்த நகரின்மீது அது வெற்றியடைந்தால், அது பிரான்ஸ் சுவிட்சர்லாந்து இத்தாலி ஆகிய நாடுகளின் சீர்திருத்த இயக்கத்திற்கு மையமாக மாறிவிடும் என எண்ணினார். இந்த நோக்கத்தை முன்வைத்து, இவைகளைச் சூழ்ந்திருந்த ஏராளமான பேரூர்களையும், கிராமங்களையும் ஆதாயப்படுத்தும்வரைத் தன் பணியைத் தொடர்ந்தார். அதன்பின் ஒரே ஒரு தோழனுடன் அவர் ஜெனீவாவிற்குள் நுழைந்தார். ஆனால் இரண்டு பிரசங்கங்கள் செய்யமட்டுமே அனுமதிக்கப்பட்டார். அரசாங்க அதிகாரிகளின் மூலமாக, அவர்மீது பழிசுமத்த பயனற்ற விதத்தில் முயன்ற குருமார்கள், சபைக்குழுவின்முன் அவரை வரும்படி அழைத்தனர். தங்கள் ஆடைகளுக்குள் ஆயுதங்களை மறைத்துவைத்துக்கொண்டு, அவரைக் கொலைசெய்கின்ற நோக்கத்துடன் அவர்கள் வந்திருந்தனர். அந்த ஆலோசனைக்கூட்டத்திலிருந்து அவர் தப்பிச்சென்றால், அவரது மரணத்தை நிச்சயிக்க, அந்த அரங்கத்திற்கு வெளியே தடிகளுடனும் பட்டயங்களுடனும் கோபமிக்க ஒரு கூட்டம் காத்திருந்தது. இருந்தபோதிலும், நீதிபதிகளும் ஆயுதப்படையும் அங்கிருந்ததால் அவர் காப்பாற்றப்பட்டார். மறுநாள் அதிகாலையில், அவரது தோழனால் ஏரிக்கு அக்கரையில் இருந்த ஒரு பாதுகாப்பான இடத்திற்கு நடத்தப்பட்டார். இவ்விதமாக, ஜெனீவாவிற்குச் சுவிசேஷம் அறிவிக்கும் அவரது முதல்முயற்சி முடிவடைந்தது. (58)GCTam 261.1

  தோற்றத்தில் மிகத்தாழ்மையாக இருந்ததால், சீர்திருத்தவாதிகளான நண்பர்களாலுங்கூட தாழ்வாக நடத்தப்பட்டிருந்த ஒரு இளைஞன், அடுத்த சோதனைக்கான எளிமையான கருவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். பாரலே நிராகரிக்கப்பட்ட இடத்தில் இப்படிப்பட்ட ஒருவனால் என்ன செய்யமுடியும்? மிகவும் பலமும் தைரியமும்மிக்கவர்களே ஓடிப்போகும்படியாக வற்புறுத்திய புயலை, தைரியக்குறைவும் அனுபவமும் இல்லாத ஒருவன் எப்படிச் சமாளித்து நிற்கமுடியும்? “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்”-சகரியா 4:6. “பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.” “தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷ ருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது”-1 கொரி. 1: 27,25.(59)GCTam 261.2

  புரோமென்ட் ஆசிரியராக அவரது பணியைத் தொடங்கினார். அவர் பள்ளியில் சிறுவர்களுக்குப் போதித்த சத்தியங்களை அவர்கள் அவர்களுடைய வீடுகளில் திரும்பக்கூறினார்கள். விரைவில் வேதாகம விளக்கங்களைக் கேட்பதற்காக பெற்றோர்கள் கூடினார்கள். வகுப்பறை கவனித்துக் கேட்பவர்களால் நிரம்பியது. புதிய ஏற்பாடுகளும் கைப்பிரதிகளும் இலவசமாக வழங்கப்பட்டன. புதிய கோட்பாடுகளை பகிரங்கமாகக் கேட்கத் துணிவு இல்லாத அநேகரிடம் அவைகள் போய்ச் சேர்ந்தன. சிறிது காலத்திற்குப் பிறகு, அந்த ஊழியக்காரனுங்கூட ஓடிப்போகும்படி கட்டாயப்படுத்தப்பட்டான். ஆனால் அவர் போதித்த சத்தியம் மக்களின் மனங்களைப் பற்றிக்கொண்டது. சீர்திருத்தம் நடப்பட்டாயிற்று. அது தொடர்ந்து பலமடைந்து பரவியது. பிரசங்கிமார்கள் திரும்பிவந்தனர். அவர்களது உழைப்பினால் இறுதியில் புரொட்டஸ்டாண்டுத் தொழுகை முறையானது ஜெனீவாவில் நிலைநிறுத்தப்பட்டது. (60)GCTam 261.3

  கால்வின் பல இடங்களிலும் அலைந்துதிரிந்து, வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்களையும் துன்பங்களையும் அனுபவித்து, அந்த நகரத்தின் வாசலுக்குள் நுழைந்தபோது, அந்த நகரம் ஏற்கனவே சீர்திருத் தத்தை அறிவித்திருந்தது. தனது பிறந்த இடத்தை சந்தித்துவிட்டு பேசில் நகருக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, அதன் நேர்வழி ஐந்தாம் சார்லஸின் படையினால் சூழ்ந்திருப்பதைக் கண்டு, ஜெனீவாவின் வழியாகச் சுற்றிச்செல்லும்படி வற்புறுத்தப்பட்டார். (61)GCTam 262.1

  இந்தச் சந்திப்பில் தேவனின் கரத்தை ஃபாரல் கண்டு கொண்டார். சீர்திருத்த விசுவாசத்தை ஜெனீவா ஏற்றுக்கொண்டிருந்தபோதிலும், அங்கே செய்துமுடிக்கப்படவேண்டிய பெரும் பணியானது இன்னுமிருந்தது. சமூகங்களாக மனமாற்றமடையாமல் தனிப்பட்டவர்களாகவே மனிதர்கள் தேவனுக்கென்று மனமாற்றமடைகின்றனர். புதுப்பிறவி என்பது ஆலேசனைக் குழுக்களின் கட்டளைகளினால் உண்டாகாமல், பரிசுத்தஆவியான வரின் வல்லமையால், இதயத்திலும் மனசாட்சியிலும் நிகழ்த்தப்பட வேண்டும். ஜெனீவா மக்கள் ரோம சபையின் அதிகாரத்தை வீசியெறிந்துவிட்டபோதிலும், அதன் ஆளுகையின்கீழ் பரவியிருந்த தீய பழக்கங்களை விட்டுவிலக, அந்த அளவிற்கு ஆயத்தமாக இருக்கவில்லை. சுவிசேஷத்தின் தூய்மையான கொள்கைகளை இங்கு ஸ்தாபிப்பதும், தேவனால் அழைக்கப்பட்ட நிலைக்கு ஏற்றவிதத்தில் தகுதியடையும்படி இந்த மக்களை ஆயத்தப்படுத்துவதும் எளிதான வேலையல்ல. (62)GCTam 262.2

  இந்தப்பணியில் தன்னுடன் சேர்ந்து பணியாற்ற கால்வின் சரியான நபராக இருப்பார் என்று பாரல் நம்பினார். அங்கே தங்கியிருந்து ஊழியம் செய்யும்படி அந்த இளம் சுவிசேஷகரை தேவனின் பெயரால் பக்திவிநயத்துடன் வலியுறுத்தினார். கால்வின் பயத்தினால் பின்வாங்கினார். பயந்தவராகவும் சமாதானத்தை விரும்புபவருமாக இருந்ததால், தைரியம் சுதந்திரம் ஆகியவைகளுடன் பலாத்காரத்தின் ஆவியையுங்கூடப் பெற்றிருந்த ஜெனீவா மக்களுடன் தொடர்புகொள்ளுவதில் இருந்து பின்வாங்கினார். அவரது பலவீனமான உடல்நலம், வாசிக்கும் பழக்கமும் ஓய்வைத்தேட அவரை நடத்தியது. சீர்திருத்தத்தின் நோக்கங்களுக்குத் தனது எழுதுகோலினால் சிறப்பான முறையில் சேவை செய்யலாம் என்று நம்பி, வாசிப்பதற்கு ஏற்றவாறு ஒரு அமைதியான இடத்தைத் தேடி, அங்கிருந்துகொண்டு அச்சகங்களின் மூலமாகப் போதித்து சபைகளைக் கட்ட விரும்பினார். ஆனால் ஃபாரல் அவர்களின் அறிவுரையும் பக்தி விநயமான எச்சரிப்பும் அவருக்குப் பரலோகத்திலிருந்து வந்த ஒரு அழைப்பைப்போல் இருக்கவே, அதை மறுக்கத் துணியவில்லை. “பரலோகத்தில் இருந்து தேவனின் கரம் நீட்டப்பட்டு, அவரைப் பிடித்து, பொறுமையில்லாமல் விட்டுச்செல்ல விரும்பிய அந்த இடத்திலிருந்து விலக இயலாதபடி அவரை வைத்ததாக காணப்பட்டது” என்று அவர் கூறினார்.—D’Aubigne, b. 9, ch. 17. (63)GCTam 262.3

  அந்த நேரத்தில், புரொட்டஸ்டாண்டு இயக்கத்தைப் பெரும் ஆபத்துக்கள் சூழ்ந்துகொண்டன. போப்புவின் எதிர்ப்பு ஜெனீவா விற்கு எதிராக இடிமுழக்கமிட்டது, வலிமையான நாடுகள் அதை அழிக்கப்போவதாக பயமுறுத்தின. அரசர்களையும் பேரரசர்கனையும் தனக்குக் கீழ்ப்படியும்படி வற்புறுத்தின வல்லமைமிக்க சமயத் தலைவரை இந்தச்சிறிய நகரம் எப்படித் தடுக்கமுடியும்? உலகத்தின் மாபெரும் வெற்றிசிறந்தோரின் படையின் எதிராக இது எவ்வாறு நிற்கும்? (64)GCTam 263.1

  கிறிஸ்தவ உலகம் முழுவதிலும் புரொட்டஸ்டாண்டு மார்க்கம் வல்லமைமிக்க எதிரிகளால் பயமுறுத்தப்பட்டிருந்தது. சீர்திருத்தத்தின் முதல் வெற்றிகள் கடந்துசெல்ல, அதை அழித்துவிடலாம் என்று நம்பி, ரோம் புதிய சக்திகளை வரவழைத்தது. இந்தக் காலத்தில்தான் கொடுமைமிக்க, நேர்மையற்ற, ரோம மார்க்கத்தின் வீரர்களிலெல்லாம் வல்லமைமிக்க ஜெஸுய்ட்ஸ் என்ற சபை ஏற்படுத்தப்பட்டது. சகலவிதமான உலக உறவுகளிலிருந்தும், விருப்பங்களிலிருந்தும் நீக்கப்பட்டு, இயல்பான பற்றுகளுக்குச் செத்துப்போன, அறிவும் மனசாட்சியும் முழுமையாக மௌனப்படுத்தப்பட்ட அவர்கள், தங்களுடைய அமைப்பைத்தவிர வேறு எந்த சட்டத்தையும் பிணைப்பையும் அறியாதவர்களாக, அதன் வல்லமையை மாத்திரம் விரிவுபடுத்துபவர்களாக இருந்தனர். கிறிஸ்துவின் சுவிசேஷம் அதைப் பற்றிக்கொண்டிருப்பவர்களை ஆபத்தைச் சந்திக்கவும், பாடுகளைச் சகிக்கவும், குளிர், பசி, உழைப்பு, வறுமை, கழுமரத்தின் முன் சத்தியத்தின் கொடியை உயர்த்திப்பிடிக்கவும், நிலவறை, அக்கினிக் கம்பங்கள் ஆகியவைகளினால் கலங்காமலிருக்கவும் தகுதிப்படுத்தி இருக்கிறது. இப்படிப்பட்ட ஆபத்துக்களை பொறுத்துக்கொள்ள உதவும் ஒரு மதவெறியினாலும், சத்தியத்தின் வல்லமையை எதிர்க்க வஞ்சகத்தின் ஆயுதங்களாலும், இந்த சக்திகளுடன் போராட ஜெஸுய்ட்ஸ் மார்க்கம் அதன் பின்னடியார்களை ஏவியது. அவர்களால் செய்யமுடியாத பெரிய குற்றமே இல்லை, நடைமுறைப்படுத்தமுடியாத கீழான வஞ்சனையே இல்லை, ஏற்றுக்கொள்ளமுடியாத மாறாட்டங்களே இல்லை. தொடர் வறுமைக்கும் தாழ்மைக்கும் நேர்ந்துகொண்டவர்களாக, செல்வத்தையும் வல்லமையையும் சேகரிப்பதும், புரொட்டஸ்டாண்டு மார்க்கத்தைக் கவிழ்ப்பதும், போப்பு மார்க்கத்தின் மேன்மையைத் திரும்ப அமைப்பதுமே அவர்களது திட்டமிடப்பட்ட நோக்கமாக இருந்தது. (65)GCTam 263.2

  தங்களுடைய பிரிவின் அங்கத்தினர்களாக தோன்றியபோது, பக்தியைக் காட்டும் உடையை அணிந்திருந்து, சிறைகளையும் மருத்துவ மனைகளையும் சந்தித்து, நோயாளிகளுக்கும் ஏழைகளுக்கும் ஊழியம்செய்து, உலகத்தை வெறுத்துவிட்டதாகச் சொல்லி, நன்மைசெய்பவராகச் சுற்றித் திரிந்த இயேசுவின் பரிசுத்தமான பெயரை அணிந்திருந்தனர். இந்தக் குற்றமற்ற வெளித்தோற்றத்திற்கடியில், மிகப் பயங்கரமான குற்றங்களும் சாவுக்கேதுவான நோக்கங்களும் மறைத்துவைக்கப்பட்டிருந்தன. காரணத்தை முடிவு நீதியாக்கும் என்பது அவர்களது பிரிவின் அடிப்படை யான கொள்கையாக இருந்தது. இவ்வித மாயத்தினால், பொய், களவு, பொய்சத்தியம், கொலை ஆகியவைகள் சபையின் நன்மைக்கு உதவியபோது, மன்னிக்கப்பட்டதோடு புகழவும்பட்டன. பலவிதமான ஆள் மாறாட்டங்களில், அரசாங்க அலுவலகங்களில் நுழையும்படி பாதை அமைத்து, அரசருக்கு ஆலோசகர்களாக இருக்குமளவு உயர்ந்து, நாட்டின் கொள்கைகளை வடிவமைத்தார்கள். தங்களது எஜமானர்களை உளவு பார்க்க, அவர்களின் வேலைக்காரர்கள் ஆனார்கள். இளவரசர்கள், மேன்மக்கள் ஆகியோரின் பிள்ளைகளுக்காக கல்லூரிகளையும், சாதாரண மக்களுக்காகப் பள்ளிகளையும் நிறுவினார்கள். அதனால் புரொட்டஸ்டாண்டு பெற்றோரின் பிள்ளைகள் போப்புமார்க்கத்தின் மதச்சடங்குகளைக் கடை பிடிக்கும்படி இழுக்கப்பட்டனர். கத்தோலிக்கமார்க்கத் தொழுகையின் அனைத்து வெளித்தோற்றங்களும் ஆடம்பரங்களும் சடங்குகளின் காட்சிகளும் மனங்களைக் குழப்பும்படியும், கண்களைக் கூசச்செய்து சிந்தையை அடிமைப்படுத்தும்படியும் செய்யப்பட்டன. இவ்வாறாக, எந்த சுதந்திரத்திற்காக முற்பிதாக்கள் பாடுபட்டு இரத்தம் சிந்தியிருந்தார்களோ, அதற்குப் பிள்ளைகள் துரோகம் செய்தனர். விரைவில் அவர்கள் ஐரோப்பா எங்கும் பரவினர். எங்கெல்லாம் அவர்கள் சென்றார்களோ அங்கெல்லாம் போப்பு மார்க்கத்தின் எழுப்புதலும் பின்தொடர்ந்தது. (66)GCTam 264.1

  அவர்களுக்கு அதிக வல்லமை கொடுப்பதற்காக விசாரணை செய்யும் கட்டளை மீண்டும் பிறப்பிக்கப்பட்டது. பொதுவான வெறுப்போடு அது கருதப்பட்டிருந்தபோதிலும், கத்தோலிக்க நாடுகளிலும் மறுபடியும் போப்புமார்க்க அதிகாரிகளால் அது ஏற்படுத்தப்பட்டு, பகலின் வெளிச்சத்தால் தாங்கிக்கொள்ள முடியாத பயங்கரமான அட்டூழியங்களை அதன் இரகசிய அறைகளில் அது செய்தது. அநேக நாடுகளில் அவைகளின் மேன்மைகளாயிருந்த ஆயிரக்கணக்கானவர்கள், மிகத் தூய்மையும் மேன்மையும் உடையவர்கள், மிகுந்த நுண்ணறிவும் உயர்வான கல்வி அறிவும் கொண்டவர்கள், பக்தியும் அர்ப்பணிப்புமிக்கப் போதகர்கள், தொழிலதிபர்கள், தேசப் பிதாக்களாயிருந்த நகரவாசிகள் கொலைசெய்யப்பட்டனர். அல்லது வேறு நாடுகளுக்கு ஓடிவிடும்படி வற்புறுத்தப்பட்டனர்! (67)GCTam 264.2

  சீர்திருத்தத்தின் ஒளியை அணைக்கவும், மனிதர்களிடமிருந்து வேதாகமத்தை நீக்கவும், இருண்ட காலத்தின் அறியாமையையும் மூடநம்பிக்கைகளையும் மீண்டும் புகுத்தவும், ரோம நிர்வாகத்தால் பயன்படுத்தப்பட்ட கருவிகள் இப்படிப்பட்டவையாக இருந்தன. ஆனால் தேவனுடைய ஆசீர்வாதத்தின்கீழும், லுத்தருக்குப் பின்வரும்படி அவர் எழுப்பின மேன்மைமிக்க மனிதர்களின் உழைப்பினாலும், புரொட்டஸ்டாண்டு இயக்கம் கவிழ்க்கப்படவில்லை. இளவரசர்களுடைய தயவுக்கும் படைக்கும் அதன் பலம் கடமைப்பட்டிருக்கவில்லை. மிகச் சிறிய நாடுகள், மிகவும் தாழ்மையும் வல்லமையுமற்ற நாடுகள் அதன் பலத்த அரண்களாயின. அதை அழிக்கும்படியாகத் திட்டம் தீட்டிய பலத்த எதிரிகளுக்கு நடுவில், சிறிய ஜெனீவாவும், அக்காலத்திலிருந்த பெரும் செல்வமிக்க நாடான ஸ்பெயினின் கொடுங்கோன்மையினை எதிர்த்துப்போரிட்ட, வடக்குக் கடலின் மணல்கரையிலிருந்த ஹாலந்தும், கடுங்குளிரான மலட்டு சுவீடனும் சீர்திருத்தத்திற்கான வெற்றியைக் கொண்டுவரக் காரணமாக இருந்தன! (68)GCTam 265.1

  வேதாகமம் கூறும் சன்மார்க்க நெறிகளைக் கடைப்பிடிக்கும் முதல் சபையை அமைக்கவும், அதன்பின் ஐரோப்பா முழுவதிலும் சீர்திருத்தம் முன்னேறவும், கால்வின் ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் ஜெனீவா நகரில் ஊழியம்செய்தார். பொதுமக்களின் ஒரு தலைவராக அவர் செயலாற்றிய விதத்தில், குறைகள் இல்லாமலில்லை. அவரது கோட்பாடுகளும் தவறில்லாமலில்லை. ஆனால் அவரது காலத்தில் மிக விசேஷமாயிருந்த சத்தியத்தை வெளிப்படுத்துவதற்கும், விரைவாகத் திரும்பிவந்துகொண்டிருந்த கத்தோலிக்க அலைக்கு எதிராக புரொட்டஸ்டாண்டு கொள்கைகளை தொடர்ந்து செயல்படுத்தவும், சீர்திருத்த சபைகளில், ரோம சபைப் போதனையின்கீழ் வளர்க்கப்பட்ட அகந்தையும் ஊழல்களும் இருந்த இடத்தில் எளிமையையும் வாழ்க்கையின் தூய்மையையும் வளர்ப்பதற்கும்GCTam 265.2

  அவர் கருவியாக இருந்தார். (69)GCTam 266.1

  சீர்திருத்தக் கோட்பாடுகளைப் பரப்பிட ஜெனீவாவிலிருந்து பிரசுரங்களுடன் ஆசிரியர்கள் வெளியில் சென்றனர். இதுவரை சகல நாடுகளிலும் உபத்திரவப்பட்டவர்கள், போதனைகளையும் ஆலோசனைகளையும் தைரியமூட்டுதலையும் எதிர்நோக்கி இருந்தனர். மேற்கு ஐரோப்பாவிலிருந்த வேட்டையாடப்பட்ட சீர்திருத்தவாதிகள் அனைவருக்கும், கால்வின் இருந்த நகரம் ஒரு அடைக்கலப்பட்டணமாக அமைந்தது. நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த அந்த பயங்கரமான புயலிலிருந்து ஓடினவர்கள், பரதேசிகள் ஜெனீவாவின் வாசல்களுக்கு வந்தனர். பட்டினியடைந்தவர்களாக, காயமடைந்தவர்களாக, வீட்டையும் உறவினர்களையும் இழந்திருந்த அவர்கள் அன்புடன் வரவேற்கப்பட்டு, அரவணைப்புடன் கவனிக்கப்பட்டனர். அங்கு ஒரு அடைக்கலத்தைக் கண்டு, தங்களைச் சுவீகரித்த நகரை அவர்கள் தங்கள் திறமைகளினாலும் கல்வியினாலும் பக்தியினாலும் ஆசீர்வதித்தனர். இங்கு அடைக்கலம் கண்ட அநேகர், ரோம நிர்வாகத்தின் கொடுங்கோலாண்மையைத் தடுப்பதற்காக தங்கள் நாடுகளுக்குத் திரும்பிச்சென்றனர். ஜான் நாக்ஸ் என்னும் ஸ்காட் தேசத்து தைரியமிக்க சீர்திருத்தவாதி, அநேக ஆங்கிலேயத் தூய்மையாளர்கள், ஹாலந்து நாட்டின் புரொட்டஸ்டாண்டுகள், பிரான்சின் ஹுகோநாட்கள் ஆகியோர், அவர்களது நாட்டின் இருளை அகற்றி அதை ஒளிபெறச்செய்ய, ஜெனீவாவிலிருந்து சத்திய ஜோதியைச் சுமந்துசென்றனர். (70)GCTam 266.2