Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாபெரும் ஆன்மீகப் போராட்டம்!

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    8—விசாரணை சபையின் முன்பு லுத்தர்!

    (மூலநூல் : The Great Controversy, பக்கம்: 145—170)

    ந்தாம் சார்லஸ் என்ற புதிய பேரரசன் ஜெர்மனியின் அரியணை ஏறினான். அவனுடைய வல்லமையை சீர்திருத்தத்திற்கு எதிராகச் செயல்படுத்தும் நோக்கத்துடன், ரோமன் கத்தோலிக்க சபையின் பிரதிநிதிகள் தங்களது வாழ்த்துக்களை அவனுக்கு தெரிவிக்க விரைந்தனர். மற்றொருபக்கத்தில், தன்னைப் பேரரசனாகத் தேர்வு செய்ததற்காக ஐந்தாம் சார்லஸ் பெருமளவிற்குக் கடமைப்பட்டிருந்த சாக்சோனியனான தேர்தல் அதிகாரி, லுத்தரைப்பற்றி விசாரணை செய்யாமல் அவருக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று மன்றாடி இருந்தார். இப்படியாக, அந்தப் பேரரசன் குழப்பமும் சங்கடமுமிக்க நிலைமைக்கு ஆளானான். லுத்தருக்கு மரணதண்டனை வழங்கும் அரசகட்டளையைத் தவிர, வேறெதிலும் போப்புமார்க்க நிர்வாகிகள் திருப்தியடையமாட்டார்கள். “பேரரசனோ அல்லது வேறு எவருமோ லுத்தரின் எழுத்துக்கள் மறுக்கப்பட்டு உள்ளன என்று எனக்குத் தெளிவுபடுத்தவில்லை” என்று அந்தத் தேர்தல் அதிகாரி உறுதியாக அறிவித்து, எனவே, “கற்றறிந்த, பக்தியுள்ள, பட்சபாதமற்ற நீதிபதிகளின் குழுவின் முன்பாக டாக்டர் லுத்தர் தனக்காகப் பேசும்படி பாதுபாப்பு நடத்துதல் கடிதத்துடன் அழைக்கப்படவேண்டும்” என்று வேண்டிக்கொண்டார். -D'Aubigne, b. 6, ch. 11. (1)GCTam 155.1

    சார்லஸ் பேரரசனானதும் வோம்ஸ் நகரில் கூடின ஜெர்மன் மாநிலங்களின் சட்டமன்றத்தின்மீது, அனைத்துக்கட்சியின் கவனமும் திரும்பியது. இந்த தேசியக் குழுவினால் ஆலோசிக்கப்படவேண்டிய அரசியல் கேள்விகளும் மற்ற காரியங்களும் இருந்தன. ஏனெனில், இந்தக் கவனமிக்க மன்றத்தில் ஜெர்மன் நாட்டின் இளவரசர்கள் முதல் தடவையாக இளைஞனான அவர்களது பேரரசனை சந்திக்க வேண்டியிருந்தது. சபை மற்றும் நாட்டின் சிறப்புமிக்கவர்கள் தந்தையர் நாட்டின் சகல பகுதிகளிலிருந்தும் இங்கு வந்திருந்தனர். சமயச்சார்பற்ற பிரபுக்கள், உயர் குடும்பங்களில் பிறந்தவர்கள், தங்களின் பாரம்பரிய உரிமைகளைப் பற்றிய வைராக்கியம்கொண்டவர்கள், இளவரசத்தன்மைமிக்க சபைப் பிரசங்கிகள், மெய்க் காப்பாளர்களுடன் அரசவையிலிருக்கும் வீரர்கள், அயல்நாடுகளிலும் தூர தேசங்களிலிருந்தும் வந்திருந்த தூதுவர்கள் ஆகிய அனைவரும் வோம்ஸ் நகரில் கூடியிருந்தனர். அப்படியிருந்தும் அப்பெரும் கூட்டத்தினருக்கிடையில், லுத்தரின் காரியம்தான் பெரும் உணர்ச்சிப் பெருக்கிற்குக் காரணமாயிருந்தது. (2)GCTam 155.2

    லுத்தருக்குப் பாதுகாப்புத் தருவதாக வாக்குறுதி தந்து, கேள்விக்குரிய பிரச்சினைகளைப்பற்றித் தகுதிவாய்ந்த மனிதர்களுடன் சுதந்திரமாக விவாதம் நடத்தும் வாக்குத்தத்தம் செய்து, அவரைப் பிரதிநிதிகளின் கூட்டத்திற்கு அழைத்துவரும்படி, தேர்தல்அதிகாரிக்கு சார்லஸ் உத்தரவிட்டார். பேரரசனின் முன்பாகத் தோன்ற லுத்தர் ஆவலுள்ளவராக இருந்தார். அவரது உடல்நலம் அந்த நேரத்தில் மிகவும் சீர்கெட்டிருந்தது. அப்படியிருந்தும் “என்னால் நல்ல உடல் நலத்துடன் வோம்ஸ் நகருக்குச் செல்லமுடியாமல்போனால், நான் இருக்கும் இந்த நோயுற்ற நிலையில் சுமந்துசெல்லப்படுவேன். ஏனெனில் பேரரசன் என்னை அழைத்திருப்பதால், தேவன்தாமே அழைத்திருக்கிறாரா என்று நான் சந்தேகிக்க இயலாது. பெரும்பாலும் அவர்கள் செய்வதைப்போல எனக்கு எதிராகப் பலாத்காரத்தைப் பிரயோகித்தால், என்னை அங்கே வரும்படி அவர்கள் அழைத்திருப்பது நிச்சயமாக என்னிடத்திலிருந்து கற்றுக்கொள்வதற்காக அல்ல இந்தக்காரியத்தை நான் கர்த்தரின் கரத்தில் வைக்கிறேன். எரியும் நெருப்புச் சூளையிலிருந்து அந்த மூன்று வாலிபர்களைக் காத்த அவர், இன்றும் உயிருடனிருந்து ஆட்சிசெய்து வருகிறார். அவர் என்னைக் காப்பாற்றாவிட்டால், எனது உயிர் பெரிய காரியமல்ல. தேவபக்தியற்றவர்கள் பரிகசிக்கிறதற்கேதுவாக சுவிசேஷத்தை வெளிப்படுத்தாமலிருப்பதில் கவனமாயிருப்போம். அவர்கள் வெற்றியடைய அனுமதிப்பதற்குப் பதிலாக, அதற்காக நாம் இரத்தம் சிந்துவோம். எனது ஜீவனோ அல்லது மரணமோ, என் சகோதரர்களின் இரட்சிப்பிற்கு எது அதிகம் உதவும் என்பதை யாரால் சொல்லமுடியும்? ஓடிப்போவதையும் திரும்பப் பெறுவதையும் தவிர, அனைத்தையும் என்னிடத்திலிருந்து நீங்கள் எதிர்பார்க்கலாம். ஓடுவது என்னால் முடியாது. நான் சொன்னதை திரும்ப பெறுவது அதைவிடவும் கடினம்” என்று தேர்தல் அதிகாரிக்கு லுத்தர் எழுதினார்.-Ibid., b. 7, ch. 1. (3)GCTam 156.1

    பிரதிநிதிகள் மன்றத்திற்குமுன் லுத்தர் தோன்ற இருக்கிறார் என்னும்செய்தி பரவியபோது. அது ஒரு பொதுவான உணர்ச்சிக் கொந்தளிப்பை உண்டுபண்ணியது. இந்தக் காரியம் ஒப்படைக்கப் பட்டிருந்த போப்புவின் பிரதிநிதியான அலேயாண்டர் எச்சரிக்கையும், மூர்க்கமும் அடைந்தார். இதன் முடிவு போப்புவின் நோக்கத்தைப் பாழ்க்கடிப்பதாக இருக்கும் என்பதை அவர் கண்டார். ஏற்கனவே குற்றமுள்ளது என்று போப்பு தீர்ப்பளித்திருந்த ஒரு காரியம்பற்றி விசாரணை நடத்துவது, போப்புவின் மேலாண்மையை அவமதிப்பதாக இருக்கும். இதற்கும்மேலாக, லுத்தரின் பேச்சுவன்மையும், வல்லமையுமிக்க வாதங்களும் இளவரசர்களில் அநேகரை போப்புவின் காரியத்திலிருந்து திரும்பச் செய்யும் என்பதைப்பற்றி அவர் பயந்திருந்தார். எனவே, மிகுந்த அவசரத்துடன் லுத்தருக்கெதிரான குறைகளை எடுத்துச்சொல்லி, லுத்தர் வோம்சில் தோன்றக்கூடாது என்றார். இந்தச் சமயத்தில், லுத்தரை சமூகத்திலிருந்து தள்ளிவைக்கும் கட்டளை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்தது. அலேயாண்டர் சொன்னதும் இக்கட்டளையும் சேர்ந்து பேரரசனை அப்பிரதிநிதியின் வேண்டுகோளுக்கு இணங்கத் தூண்டியது. எனவே, லுத்தரால் பின்வாங்கமுடியாவிட்டால், அவர் விட்டன்பர்கிலேயே இருக்கவேண்டும் என்று பேரரசன் தேர்தல் அதிகாரிக்குக் கடிதம் எழுதினார். (4)GCTam 157.1

    இந்த வெற்றியினால் திருப்தியடையாத அலேயாண்டர், ஒரு தனது கட்டளையின் கீழிருந்த எல்லா வல்லமையோடும் லுத்தரின் அழிவை உறுதிப்படுத்த வேலைசெய்தர். ஒரு மேன்மையான காரியத்தை நடத்தும் உறுதியுடன், சீர்திருத்தவாதியின் மேல் துரோகம், கிளர்ச்சி, தெய்வ பயமின்மை, தேவதூஷணம் ஆகிய குற்றங்களைச் சாட்டி, இளவரசர்கள், குருமார்கள், சட்டமன்றத்தின் பிற அங்கத்தினர்களின் கவனத்தில் திணித்தான். அந்தப் பிரதிநிதி வெளிக்காட்டின கோபாவேசமும் உணர்ச்சிகளும் அவன் எந்த ஆவியினால் செயலாற்றுகிறான் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியது. அவர் வெறுப்புடனும் பழிவாங்கும் எண்ணத்துடனும் நடந்துகொள்ளுகிறார் “வைராக்கியமும் பக்தியும்விட, வெறுப்பும் பழிவாங்கும் எண்ணமுமே அவரது நோக்கமாயிருந்தன” என்று ஒரு கத்தோலிக்க எழுத்தாளர் கூறினார்.--Ibid., b. 7, ch. 1. பிரதிநிதிகளின் சபையின் பெரும்பான்மையோர் லுத்தரின் காரியத்தை இதற்குமுன் இருந்ததைவிட, இப்பொழுது அதிகமாக ஆதரித்தனர். (5)GCTam 157.2

    போப்புவின் கட்டளையை நிறைவேற்றும்படி இரட்டிப்பான வைராக்கியத்துடன் அலேயாண்டர் பேரரசனை வற்புறுத்தினார். ஆனால் ஜெர்மன் நாட்டின் சட்டத்தின்படி இளவரசர்களின் சம்மதம் இல்லாமல் இதை நிறைவேற்றமுடியாது. எனினும் இந்தக் காரியத்தை பிரதிநிதிகள் சபைக்குமுன் வைக்கும்படி அவரை அழைத்தான். போப்புவின் பிரதிநிதிக்கு அது ஒரு பெருமைமிக்க நாளாக இருந்தது. அந்தச் சட்டமன்றம் பெரியதாக இருந்தது. அதில் இருந்த காரியம் அதைவிடப் பெரியதாக இருந்தது. சகல சபைகளுக்கும் தாயும் எஜமானியுமாயிருந்த ரோமன் கத்தோலிக்க சபைக்காக அலேயாண்டர் பரிந்துபேசவேண்டியதிருந்தது. கூடியிருந்த கிறிஸ்தவஉலகத்தின் துரைத்தனங்களுக்குமுன், தனது சபையினுடைய பேதுருவின் வாரிசுத்தன்மையை நியாயப்படுத்தவேண்யதிருந்தது. அவர் மிகுந்த பேச்சுத் திறன் உடையவராக இருந்ததால், அப்பெரும் சந்தர்ப்பத் திற்குத் தக்கவாறு உயர எழுந்தார். மிகப் பெரும் மதிப்புமிக்க விசாரணை மன்றத்தில், ரோமன் கத்தோலிக்க சபை குற்றமுடையது என்று பழிதீர்க்கப்படுமுன், அதனுடைய மாபெரும் பேச்சு வன்மை மிக்கவர்கள் அதற்காகப் பரிந்துபேசும்படி தெய்வீக ஏற்பாடு உத்தர விட்டிருந்தது.- Wylie, b. 6, ch. 4. கொடுக்கப்பட்டிருந்த சில தவறான செய்திகளினால் சீர்திருத்தவாதியின் ஆதரவாளர்கள் அலேயாண்டரின் பேச்சினால் உண்டாகவுள்ள விளைவினை எதிர்நோக்கி இருந்தனர். சாக்சோனியரின் தேர்தல் அதிகாரி அங்கு இருக்கவில்லை. ஆனால் அவரது உத்தரவின்படி இந்த சந்நியாசியின் பேச்சைக் குறிப்பெடுக்கும்படி, அவரது ஆலோசகர்களில் சிலர் அந்தக் கூட்டத்தில் தோன்றியிருந்தனர். (6)GCTam 157.3

    சத்தியத்தைக் கவிழ்க்கும்படி அலேயாண்டர் தனது கல்வியின் முழுத்திறமையுடனும் பேச்சுத்திறமையுடனும் தயாரானார். லுத்தர், சபை, நாடு, உயிருள்ளவர்கள், இறந்தவர்கள், போதகர்கள், சாதாரண விசுவாசிகள், ஆலோசனைக் குழுக்கள், தனிப்பட்ட கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் எதிரியாக இருக்கிறார் என்று அவர்மீது ஒன்றன்பின் ஒன்றாகக் குற்றச்சாட்டுக்களை வீசினார். இலட்சம் பேர்களைச் சுட்டெரிக்கப் போதுமான தவறுகள், லுத்தர் ஒருவரின்மீதே உள்ளது என்றும் அவர் அறிவித்தார். (7)GCTam 158.1

    “லுத்தரைப் பின்பற்றின அனைவரும் எப்படிப்பட்டவர்கள்? அவரால் திசை திருப்பிவிடப்பட்டு, தவறாக நடத்தப்பட்டுள்ள பொதுமனிதர்களுடன் சேர்ந்த, சீர்திருத்தப்படமுடியாத நிலையிலுள்ள, ஒழுங்கில்லாத கீழ்மக்கள், திமிர்பிடித்த இலக்கணவாதிகள், ஊழல்மிக்க குருமார்கள், சிற்றின்பப் பிரியரான சந்நியாசிகள், அறியாமைமிக்க வழக்கறிஞர்கள், தரம்தாழ்ந்த மேன்மக்கள் போன்றவர்களே! எண்ணிக்கையிலும், நுண்ணறிவிலும் வல்லமையிலும் கத்தோலிக்க மார்க்கம் எவ்வளவு மேலானதாக உள்ளது! மிக வெளிச்சம் உள்ளதாகக் காணப்படும் இந்த மன்றத்தில் ஏகமனதாக உண்டாகும் தீர்மானம், தங்களது ஆபத்துக்களை உணராமல் இருப்பவர்களின் கண்களைத் திறந்துகாட்டி, சலனமடைந்துகொண்டிருப்பவர்களைத் தீர்மான மெடுக்கச்செய்து, பலவீனமான இதயமுள்ளவர்களைப் பலப்படுத்தும்” என்றார்.--D'Aubigne, b. 7, ch. 3. (8)GCTam 158.2

    இப்படிப்பட்ட ஆயுதங்களினால், சத்தியத்திற்காகப் பரிந்து பேசுபவர்கள் ஒவ்வொரு காலத்திலும் தாக்கப்பட்டுள்ளனர். தேவனுடைய தெளிவும் நேரடியானதுமான வார்த்தைகளுக்கு விரோதமான காரியங்களுக்கு எதிராக தங்கள் வாதங்களை முன்வைக்கத் துணிபவர்களின்மீது இதே மாதிரியான குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரப்படுகின்றன. “புதிய கோட்பாடுகளைப் போதிக்கும் இந்தச் சொற்பொழிவாளர்கள் யார்?” என்று மக்களில் பிரபலமான சமயத்தை விரும்புகிறவர்கள் வியப்படைகிறார்கள். “அவர்கள் கல்வியில்லாதவர்களும், குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்களும், கீழ்வகுப்பினராகவும் உள்ளனர். அப்படியிருந்தும் தங்களிடம் சத்தியம் உள்ளதாகவும் தாங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களெனவும் உரிமைபாராட்டுகின்றனர். அவர்களே அறியாமை உள்ளவர்களும் வஞ்சிக்கப்பட்டவர்களுமாம். எங்களது சபையில் உள்ளவர்கள் செல்வாக்கிலும் எண்ணிக்கை யிலும் எவ்வளவு உயர்ந்தவர்கள்! எவ்வளவு கற்றவர்களும் பெரியவர்களும் எங்களுக்கிடையில் உள்ளனர்! எங்கள் பக்கத்தில் எவ்வளவு அதிகமான வல்லமை உள்ளது!”- இவைகளே உலகின் மீதுள்ள அவர்களது செல்வாக்கைச் சொல்லக்கூடியவைகளாக உள்ளன. சீர்திருத்தவாதியின் நாட்களில் இருந்ததுபோலவே அவைகள் இன்றும் முழுமையானவைகளல்ல.(9)GCTam 159.1

    அநேகர்நினைப்பதுபோல் சீர்திருத்தம் லுத்தருடன் முடிவடையவில்லை. இந்த உலக வரலாற்றின் முடிவுவரை அது தொடரப்படவேண்டும். தேவன் தன்மீது பிரகாசிக்க அனுமதித்த ஒளியை, மற்றவர்களின்மீது பிரகாசிப்பிக்கச் செய்கின்ற பெரும்பணி லுத்தருக்கிருந்தது. அப்படியிருந்தபோதிலும், உலகத்திற்குக் கொடுக்கப்படவேண்டிய முழு வெளிச்சத்தையும் அவர் பெறவில்லை. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம்வரை, வேத வாக்கியங்களின்மீது ஒளி தொடர்ந்து பிரகாசித்துக் கொண்டிருப்பதுடன், மேலும் புதிய சத்தியங்கள் தொடர்ச்சியாக மலர்ந்துகொண்டும் இருக்கின்றன. (10)GCTam 159.2

    பிரதிநிதியின் பேச்சு மன்றத்தினர்மீது ஆழ்ந்த உணர்வினைப் பதித்தது. போப்புவின் அந்த வீரரை அவ்விடத்தைவிட்டு மறையச் செய்ய, தெளிவும் திருப்திப்படுத்தக்கூடியதுமான தேவனுடைய வார்த்தையைச் சொல்லும் லுத்தர் அங்கிருக்கவில்லை. சீர்திருத்தவாதியின் சார்பில் பேசுவதற்காக வேறு எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அவர் போதித்த கோட்பாடுகள் குறை உடையவைகள் என்று பழிக்கப்பட்டதுமல்லாமல், முடியுமானால் மதப்புரட்டராகிய அவரையே வேருடன் பிடுங்கிவிடவேண்டுமென்ற ஒரு பொதுவான நோக்கம் அங்கு காணப்பட்டது. தனது காரியத்தைச் சொல்ல ரோமன் கத்தோலிக்க சபைக்குப் போதுமான அனுகூலமிக்க வாய்ப்புகள் கிடைத்திருந்தன. தன்னுடைய நேர்மையைச் சொல்லுவதற்காக அவனிடமிருந்த அனைத்தையும் அவன் கூறினான். ஆனால் வெற்றியின் அந்த வெளித்தோற்றம் தோல்வியின் அடையாளமாக இருந்தது. வெளிப்படையான போரில் ஈடுபடுவதன் வழியாக சத்தியத்திற்கும் தவறுக்குமிடையில் உள்ள வேற்றுமை இனிமேல் மிகத்தெளிவாகக் காணப்படும். ரோமன் கத்தோலிக்க சபை அதுவரை பாதுகாப்பாக நின்றிருந்ததுபோல, அந்த நாளிலிருந்தது ஒருபோதும் நிற்க முடியாமலாகிவிட்டது. (11)GCTam 159.3

    நீதிமன்றத்திலிருந்த அங்கத்தினர்களில் அநேகர், ரோமன் கத்தோலிக்க சபையின் பழிவாங்குதலுக்கு லுத்தரை விட்டுவிடத் தயங்காமலிருந்த அதே சமயத்தில், சபையில் நிலவிவரும் ஒழுக்கக் கேடுகளைக் கண்டு கண்ணீர்விட்டு, மதத்தலைவரின் பேராசை, ஊழல் ஆகியவைகளின் விளைவாக ஜெர்மன் மக்களின்மீது நிகழ்ந்துள்ள அத்துமீறல்களைத் தடுத்தமர்த்த விரும்பினர். மிகவும் அனுகூலமான வெளிச்சத்தில் போப்புவின் ஆளுகையை அந்தப் பிரதிநிதி எடுத்துக்காட்டினார். இப்பொழுது போப்புமார்க்கத்தின் கொடுங்கோன்மையைச் சரியான முறையில் எடுத்துரைக்க பிரதிநிதிகளின் சபையிலிருந்த அங்கத்தினர்களில் ஒருவரைக் கர்த்தர் ஏவினார். போப்புமார்க்கத்தின் வஞ்சனைகள், அக்கிரமங்கள், அவைகளினால் உண்டான பயங்கரமான விளைவுகள் ஆகியவைகளை மிகச்சரியான விதத்தில் ஜார்ஜ் சாக்சோனி என்ற பிரபு, இளவரசர்கள் நிறைந்திருந்த அந்தச் சபையில், மேன்மைமிக்க உறுதியுடன் எழுந்துநின்று கோடிட்டுக் குறிப்பிட்டுக் காட்டினார். அவர் தன் பேச்சை முடிக்கும்போது: (12)GCTam 160.1

    “பரிகாரம் தேடப்படும்படி ரோமன் கத்தோலிக்க சபைக்கு எதிராகக் கூக்குரலிடப்படும் அத்துமீறல்களில் இவை ஒருசிலதுதான். சகலவிதமான வெட்கத்தையும் ஒருபக்கமாக வைத்துவிட்டு, அது விடாப்பிடியாகத் தொடர்ந்த அதன் ஒரே நோக்கம்: பணம்! எப்போதும் பணம் மட்டும்தான்! என்று பின்தொடர்ந்தார். அதற்காக, சத்தியத்தைப் போதிப்பதை தங்களது கடமையாகக் கொள்ளவேண்டிய அந்த மனிதர்கள், தவறானவைகளைத் தவிர, வேறொன்றையும் கூறுவதில்லை. அதற்காக அவர்கள் சகித்துக்கொள்ளப்படுவது மட்டுமன்றி போற்றவும்படுகின்றனர். ஏனெனில் எந்த அளவிற்கு அவர்களது பொய்கள் பெரியவைகளாக இருந்தனவோ, அந்த அளவிற்கு அவர்களது ஆதாயமும் அதிகமாக இருக்கிறது. எப்பக்கமும் ஊழல்கள் வழிந்தோடும் நீருற்றுக்களின் துர்நாற்றமிக்க ஆதாரமாக அது உள்ளது. ஊதாரித்தனமும், பேராசையும் கைகோர்த்துச் செல்லுகின்றன. ஐயோ பாவம்! குருமார்களின் ஊழல் அநேக ஏழ்மையான ஆத்துமாக்களை நித்தியமாக அழிவிற்குள் அமிழ்த்தும் காரணமாக உள்ளது. ஒரு முழுமையான சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என்றார்.- Ibid., b. 7, ch. 4. (13)GCTam 160.2

    இந்த அளவிற்கு தகுதியும் வலிமையும்மிக்க போப்பரசாட்சியின் அத்துமீறல்களுக்கெதிராக பகிரங்கமான குற்றச்சாட்டை, லுத்தர் இருந்திருந்தால்கூட, அவரால் முன்வைத் திருந்திருக்க முடியாது. இப்படிப் பேசியவர் லுத்தருக்கெதிரான தீர்மானமான எதிரியாக இருந்ததால், அவரது வார்த்தைகளுக்கு அதிகமான செல்வாக்கு உண்டானது. (14)GCTam 161.1

    அந்த மன்றத்திலிருந்தவர்களின் கண்கள் திறக்கப்பட்டிருந்தால், தவறுகளான இருளை நீக்கி, சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மனங்களையும் இதயங்களையும் திறக்க, தேவ தூதர்கள் அவர்களுக்கு மத்தியில் இருந்து ஒளிக்கதிர்களை வீசிக்கொண்டிருந்ததைக் கண்டிருப்பார்கள். சீர்திருத்தத்தின் எதிரிகளாயிருந்தவர்களையுங்கூட, சத்தியமான தேவனுடைய வல்லமையும் ஞானமும் கட்டுப்படுத்தியது. இவ்வாறாக, நிறைவேற்றப்படவேண்டிய பெரும் பணிக்கும் அது பாதையை ஆயத்தப்படுத்தியது. மார்டின் லுத்தர் அந்த மன்றத்தில் இருக்கவில்லை. ஆனால் லுத்தரைவிடப் பெரியவரான ஒருவரின் சத்தம் அந்த மன்றத்தினரால் கேட்கப்பட்டது. (15)GCTam 161.2

    ஜெர்மன் மக்களின்மீது அவ்வளவு பாரமாகச் சுமத்தப்பட்ட ஒடுக்குதலை கணக்கிட ஆயத்தமாகும்படி, அந்தப் பிரதிநிதிகளின் சபையில் உடனடியாக ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த அத்துமீறல்களைச் சீர் திருத்தும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி, பேரரசனுக் கான மன்றாட்டுடன் நூற்றியோறு தவறுகளைக் குறித்த பட்டியல் சமர்ப்பிக்கப் பட்டது. கிறிஸ்தவ ஆத்துமாக்களின் இழப்பு எப்படிப்பட்டது! எப்படிப்பட்ட அநீதி! எப்படிப்பட்ட கட்டாயமான வசூல்! நாள்தோறும் நடத்தப்படும் அவமானமிக்க புரளிகளின் கனிகள் எப்படிப்பட்டவை! இதற்கு கிறிஸ்தவ உ உலகத்தின் ஆவிக்குரிய தலைமை எப்படி முகம் காட்டுகிறது என்று அந்த விண்ணப்பதாரர்கள் கூறினார்கள். நமது நாட்டின் அழிவையும் கௌரவக் குறைவையும் தவிர்த்தாக வேண்டும். எனவே, ஒரு பொதுச்சீர்திருத்தத்தின் பணி முழுமையானதாக மிகவும் விரைவாக நடத்தப்பட வேண்டுமென்று நாங்கள் வேண்டுகிறோம் என்றனர்.-Ibid., b.7, ch. 4. (16)GCTam 161.3

    அந்தப் பிரதிநிதிகள் குழு, சீர்திருத்தவாதி உடனடியாக அதன் முன்பாகத் தோன்றிடவேண்டும் என்றும் வற்பறுத்தியது. அலேயாண்டரின் கெஞ்சுதல்கள், மறுப்புகள், பயமுறுத்தல்கள் இருந்துங்கூட, பேரரசன் இறுதியாக அவர்களது வேண்டுகோளுக்குச் சம்மதித்து, லுத்தரைப் பிரதிநிதிகளின் குழுவின்முன் வரும்படி கட்டளை இட்டார். அவருக்குக் கொடுக்கப்பட்ட அழைப்புடன், பாதுகாப்பாக அவரது இடத்திற்கு திரும்பிச் செல்லும் பாதுகாப்பு நடத்துதல் கடிதத்தையும் தந்தார். இது லுத்தரை விட்டன்பர்க் நகருக்கு அழைத்துக்கொண்டுவரும் பணியினை மேற்கொள்ள ஏற்படுத்தப்பட்ட ஒரு தூதுவனின் மூலமாக அனுப்பப்பட்டது. (17)GCTam 162.1

    லுத்தரின் நண்பர்கள் பயத்தால் கவலை அடைந்தனர். அவருக்கு எதிராக இருந்த தவறான எண்ணங்களையும் பகைமை யையும் அறிந்திருந்த அவர்கள், அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த பாதுகாப்பு நடத்துதல் கடிதம் மதிக்கப்படாமல் போகுமென்று பயந்து, அவருடைய உயிரை அவர் ஆபத்துக்குள்ளாக்கவேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டனர். என்னை வோம்ஸ் நகரில் காணும் விருப்பம், போப்பு மார்க்கவாதிகளுக்கு அவ்வளவாக இல்லை. ஆனால் நான் குற்றம்சாட்டப்படுவதையும் சாவதையும் அவர்கள் விரும்புகின்றனர். அது ஒரு காரியமல்ல. எனக்காக ஜெபம் செய்யாமல், தேவனுடைய வார்த்தைக்காக ஜெபம் செய்யுங்கள். சாத்தானின் இந்த ஊழியக்காரர்களை மேற்கொள்ள கிறிஸ்து அவரது ஆவியை எனக்குத் தருவார். நான் உயிருடன் இருக்கும்போது, அவர்களைப் பழிக்கிறேன். எனது மரணத்தின் மூலமாக நான் அவர்கள்மீது வெற்றி கொள்ளுகிறேன். நான் கூறியவைகளை மறுதலித்துக்கூற என்னை வற்புறுத்தும்படி, அவர்கள் வோம்ஸ் நகரில் விரைந்து செயல்படுகின்றனர். எனது மறுதலிப்புச்சொல் “போப்பு அந்திக்கிறிஸ்துவின் பதிலாளியாக இருக்கிறார் என்று முன்பு நான் கூறினேன். இப்போது அவர் கர்த்தரின் எதிராளியாகவும், சாத்தானின் அப்போஸ்தலனாகவும் இருக்கிறார் என்றும் கூறுகிறேன்” என்று இருக்கும் என அவர் பதில் கூறினார்.-Ibid., b. 7, ch. 6. (18)GCTam 162.2

    லுத்தர் தனது ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளத் தனியாக அனுமதிக்கப்படவில்லை. அரசனின் தூதனோடல்லாமல் அவரது உறுதி மிக்க மூன்று நண்பர்களும் அவருடன் செல்லத் தீர்மானித்தனர். அவருடன் சேர்ந்துகொள்ள மெலாங்தன் மிகுந்த வாஞ்சையுடன் விரும்பினார். அவரது இதயம் லுத்தரின் இதயத்துடன் பின்னி இருந்தது. தேவைப்பட்டால் சிறைக்கும் மரணத்திற்கும் அவரைப் பின்தொடரவும் அவர் ஆர்வமிக்கவராக இருந்தார். ஆனால் அவரது கெஞ்சுதல்கள் மறுக்கப்பட்டன. லுத்தர் கொல்லப்பட்டால், சீர்திருத்தத்தின் நம்பிக்கை இந்த இளைஞரை நடுநாயகமாகக் கொண்டதாக இருக்கவேண்டும். “நான் திரும்பாவிட்டால், எனது எதிரிகள் என்னைக் கொன்றுவிட்டால், சத்தியத்தைத் தொடர்ந்து போதித்து, சத்தியத்தில் உறுதியாக நிலைத்து நில்லுங்கள்; எனக்குப் பதிலாகப் பணி ஆற்றுங்கள்; உங்களது உயிர் விட்டுவைக்கப்படுமானால், எனது மரணம் சாதாரணமாயிருக்கும்” (Ibid., b. 7, ch. 7) என்று சீர்திருத்தவாதி மெலாங்கதனை விட்டுப் பிரியும்போது கூறினார். லுத்தர் புறப்பட்டுச் செல்லுவதைக் காணக் கூடிவந்திருந்தவர்கள், மிகவும் நெகிழ்ந்தனர். அவரது நற்செய்திப் போதனையால் இதயங்களில் தொடப்பட்ட திரளானவர்கள் கண்ணீருடன் அவருக்கு விடைகொடுத்தனர். இவ்வாறாக, அந்த சீர்திருத்தவாதியும் அவரது தோழர்களும் விட்டன்பர்கிலிருந்து புறப்பட்டனர். (19)GCTam 162.3

    அப்பயணத்தில், அவருக்குத் தீங்கு நேரிடும் என்று மக்கள் வருத்தம் அடைந்திருப்பதை அவர்கள் கண்டனர். சில பேரூர்களில் அவர்களுக்கு மரியாதை காட்டப்படவில்லை. இரவு நேரத்தில் அவர்கள் தரித்திருந்தபோது, நண்பரான ஒரு குருவானவர், இத்தாலிய சீர்திருத்த வாதியான ஒரு இரத்தசாட்சியின் சித்திரத்தை அவருக்கு உயர்த்திக்காட்டித் தனது அச்சத்தை உணர்த்திக் காட்டினார். வோம்ஸ் நகரில் லுத்தரின் எழுத்துக்கள் குற்றப்படுத்தப்பட்டன என்பதை அவர்கள் மறுநாள் கேள்விப் பட்டனர். தடைசெய்யப்பட்டிருந்த அவரது எழுத்துக்களை நீதிபதியின் முன்பாகக் கொண்டுசெல்லும்படியான பேரரசனின் கட்டளையை அரசாங்க ஊழியக்காரர்கள் மக்களுக்கு உரத்த சத்தமாக அறிவித்தனர். பிரதிநிதிகள் குழுவிற்குமுன் லுத்தருக்குள்ள பாதுகாப்பைப்பற்றி பயந்த அவரது வருகையை அறிவிப்பவன், அவரது தீர்மானம் ஏற்கனவே ஆட்டம் கண்டிருக்கக்கூடும் என்றெண்ணி, அவர் மேலும் முன்செல்ல விரும்புகிறாரா என்று கேட்டான். ஒவ்வொரு பேரூரிலும் எனக்குச் சமயச் சடங்கு மறுப்பு உண்டானபோதிலும், நான் முன்செல்லுவேன் என்று அவர் பதில் கூறினார். Ibid., b. 7, ch. 7. (20)GCTam 163.1

    எர்ஃபர்ட் நகரில் லுத்தர் கௌரவத்துடன் வரவேற்கப்பட்டார். பிச்சைக்காரனின் திருவோட்டுடன் அவர் அடிக்கடி நடந்து சென்றிருந்த தெருக்களில், இப்பொழுது அவரைப் போற்றுகிற மக்கள்கூட்டம் சூழ்ந்து கொண்டது. அவர் அங்குள்ள மடத்தின் தனி அறையை அடைந்து, இன்று ஜெர்மனியின்மீது வீசும் ஒளி, தனது ஆத்துமாவின் மீது வீசும்படி, நடத்திய போராட்டங்களைப்பற்றி நினைத்தார். பிரசங்கிக்கும்படி அவர் வற்புறுத்தப்பட்டார். அதற்கு அவர் தடுக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரது வருகையை அறிவிக்கும்படி நியமிக்கப்பட்டவர் அவருக்கு அனுமதி அளித்தார். ஒரு சமயத்தில் அந்த மடத்தில் கடினமாக வேலை செய்யும் கூலிக்காரனாயிருந்த அந்த யாத்ரீகன், இப்பொழுது பிரசங்கபீடத்தின்மீது ஏறினார்.(21)GCTam 163.2

    திரண்டிருந்த ஒரு கூட்டத்திற்கு, “சமாதானம் உங்களுக்கு உண்டாவதாக” என்னும் கிறிஸ்துவின் வார்த்தையிலிருந்து எடுத்து அவர் பேசினார். “தத்துவ சாஸ்திரிகளும் மருத்துவர்களும் எழுத்தாளர்களும் மனிதர்கள் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும் மார்க்கத்தைப் போதிக்க முயன்று, ஒருபோதும் வெற்றியடையவில்லை. இப்பொழுது நான் அதை உங்களுக்குச் சொல்லுகிறேன். மரணத்தை அழிக்கவும் பாவத்திற்குப் பிராயச்சித்தம்செய்யவும் மரணவாசலை அடைக்கவும், கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்னும் ஒரு மனிதரைத் தேவன் மரித்தோரிலிருந்து எழுப்பி இருக்கிறார். இது இரட்சிப்பின் பணி. கிறிஸ்து வெற்றி அடைந்திருக்கிறார். மகிழ்ச்சிமிக்க செய்தி இதுதான். நாம் நமது சொந்தக் கிரியைகளினால் இரட்சிக்கப்படாமல், அவரது கிரியைகளினால் இரட்சிக்கப்படுகிறோம் ‘உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக! எனது கரங்களைப் பாருங்கள்’ என்று நமது கர்த்தராக இருக்கிற இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார். அதாவது, ஓ! மனிதனே! நான் நான்மட்டும்தான் உனது பாவங்களை நீக்கி உன்னை மீட்டிருக்கிறேன். அதனால் இப்பொழுது உனக்குச் சமாதானம் உண்டு என்று கர்த்தர் கூறுகிறார்” என்றார். (22)GCTam 164.1

    பரிசுத்தமான வாழ்க்கையில், உண்மையான விசுவாசம் வெளிக் காட்டப்படும் என்று அவர் தொடர்ந்தார். “தேவன் நம்மை இரட்சித்திருப்ப தினால், அவர் நமது செயல்களைக்கண்டு மகிழும்படி, நாம் அவைகளை சீர்படுத்துவோமாக! நீ செல்வந்தனாயிருக்கிறாயா? வறுமையிலுள்ள மற்ற மனிதனின் தேவைகளுக்காக உனது செல்வம் செலவிடப்படட்டும். நீ ஏழையாய் இருக்கிறாயா? உனது சேவையினால் செல்வந்தனுக்கு ஊழியம் செய்வாயாக. உனது உழைப்புகள் உனக்காக மட்டுமேயானால், நீ தேவனுக்குச் செய்யும்சேவை பெயரளவில் மட்டுமே இருக்கும்” என்றார்.- Ibid., b. 7, ch. 7.(23)GCTam 164.2

    மக்கள் ஆச்சரியத்தால் வாயடைத்தவர்களாகக் கவனித்தனர். பசியாயிருந்த ஆத்துமாக்களுக்கு ஜீவ அப்பம் பிட்டுக் கொடுக்கப்பட்டது. போப்புகள், பேப்புவின் பிரதிநிதிகள், பேரரசர்கள், இளவரசர்கள் ஆகியோருக்குமுன், அவர்களுக்கும் மேலாக கிறிஸ்து உயர்த்தப்பட்டார். அபாயகரமான தனது நிலைமையைப் பற்றி லுத்தர் குறிப்பிடவே இல்லை. எண்ணங்களுக்கும், அனுதாபங்களுக்கும் இலக்காக தன்னைக்காட்ட அவர் வகைதேடவில்லை. கிறிஸ்துவைப் பற்றிய தியானத்தினால், சுயத்தைப்பற்றிய பார்வையை இழந்தார். பாவியின் மீட்பராக இயேசுவைமட்டும் முன்வைக்க வகைதேடி, கல்வாரியின் மனிதருக்குப்பின் அவர் மறைந்துகொண்டார். (24)GCTam 164.3

    அந்த சீர்திருத்தவாதி தனது பயணத்தை மேற்கொண்டபோது, எங்கும் மிகுந்த ஆர்வத்துடன் போற்றப்பட்டார். ஒரு வாஞ்சைமிக்க திரள்கூட்டமானது அவரைச் சூழ்ந்துகொண்டு, ரோமன் கத்தோலிக்க வாதிகளின் நோக்கம்பற்றி நட்புமிக்க கரங்களால் அவரை எச்சரித்தது. நீங்கள் உயிருடன் எரிக்கப்படுவீர்கள், ஜான் ஹஸ்ஸைப்போலவே உங்களது உடலும் சாம்பலாக்கப்படும் என்று அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர்: “அக்கினி ஜுவாலை வானம்வரை உயரும்படி, வோம்சிலிருந்து விட்டன்பர்க் நகரம்வரை அவர்கள் தீ கொளுத்தினாலும் நான் கர்த்தரின் பெயரால் அதற்கு ஊடாகக் கடந்துசென்று, அவர்கள்முன் நிற்பேன். அந்தப் பிகமோத்தின் தாடைக்கு ஊடாக நான் நுழைந்துசென்று, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிக்கைசெய்து, அதன் பற்களை உடைப்பேன்” என்று பதில் கூறினார்.--Ibid., b. 7, ch. 7. (25)GCTam 165.1

    அவர் வோம்ஸ் நகரை நெருங்கிவிட்டார் என்கிற செய்தி பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பை உண்டாக்கியது. நண்பர்கள், அவரது பாதுகாப்பை நினைத்துப் பயந்தனர். அவரது எதிரிகள் தங்களின் நோக்கத்தின் வெற்றியைப்பற்றிப் பயந்தனர். நகருக்குள் அவர் நுழைவதைத் தடுக்கும்படி மிகக் கடுமையான முயற்சிகள் செய்யப்பட்டன. போப்புமார்க்கவாதிகளின் தூண்டுதல் காரணமாக, நண்பராயிருந்த ஒரு வீரரின் கோட்டையில் தங்கும்படி அவர் வற்புறுத்தப்பட்டார். அவரது சகலவிதமாக கஷ்டங்களும் சுமுகமான முறையில் தீர்க்கப்படும் என்று அவரிடம் அறிவிக்கப்பட்டது. அவரைப் பயமுறுத்தியிருந்த அபாயங்களை விவரித்து, அவரது பயத்தை அதிகரிக்கச்செய்ய அவரது நண்பர்கள் முயன்றனர். “வோம்ஸ் நகரின் கூரைகளின்மீதுள்ள ஓடுகளின் எண்ணிக்கையின் அளவில் பேய்கள் அங்கு இருந்தாலும், நான் அதற்குள் நுழைவேன்” என்று அசைக்கப்படாதவராக லுத்தர் அறிவித்தார்.—Ibid., b. 7, ch. 7. (26)GCTam 165.2

    அவர் வோம்ஸ் நகருக்கு வந்து சேர்ந்ததும், அவரை வரவேற்க ஒரு பெருங்கூட்டம் நகரவாசலில் கூடியது. பேரரசனை வரவேற்கக்கூட அப்படிப்பட்ட பெருங்கூட்டம் கூடியதில்லை. அந்த உணர்ச்சிப்பெருக்கு மிகுந்த எழுச்சி உள்ளதாக இருந்தது. அந்தக் கூட்டத்தின் நடுவில் இருந்து ஒரு கரகரத்த குரல் தெளிவாக ஒப்பாரிவைத்தது. அந்த அவலக் குரலானது, முடிவுக்காகக் காத்திருக்கும் லுத்தருக்கான ஒரு எச்சரிப்பாக இருந்தது. அவர் தமது வாகனத்திலிருந்து கீழே இறங்கியபோது, “தேவன் எனக்குப் பாதுகாப்பாயிருப்பார்” என்று கூறினார். (27)GCTam 165.3

    லுத்தர் வோம்ஸ் நகருக்கு மெய்யாகவே வரத்துணிவார் என்று போப்புமார்க்கத்தினர் நம்பவில்லை. அவரது வருகை அவர்களைத் திகிலால் நிரப்பியது. எவ்விதமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆலோசிப்பதற்காகப் பேரரசர் அவசரமாகத் தனது ஆலோசகர்களைக் கூட்டினார். “இந்தக்காரியம்பற்றி நாங்கள் நீண்டநேரம் ஆலோசித்தோம். பேரரசர் இந்த மனிதனை உடனே அழித்துவிடுவாராக. சிக்மண்ட அரசன் ஜான் ஹஸ்ஸை சிறைக்குக் கொண்டுவரவில்லையா? மத விரோதிக்குக் கொடுக்கப்படும் பாதுகாப்பு நடத்துதலை விட்டுவிடவோ அல்லது கடைப்பிடிக்கவோ நாங்கள் கடமைப்பட்டவர்களல்ல” என்று போப்புமார்க்கப் பேராயர்களில் உறுதியான ஒருவர் கூறினார். “அப்படியல்ல, நமது வாக்கை நாம் காத்துக்கொள்ள வேண்டும்” என்று பேரரசர் கூறினார்.-Ibid., b. 7, ch. 8. எனவே சீர்திருத்தவாதி சொல்லுவதையும் கேட்டாகவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. (28)GCTam 166.1

    குறிப்பிடத்தக்க சிறப்புக்குரிய மனிதனைக் காண நகரம் முழுவதும் ஆவல் நிரம்பியதாக இருந்தது. அவர் தங்கியிருந்த இடத்தில் பார்வையாளர்கள் நிறைந்திருந்தனர். சமீபத்தில் உண்டான சுகவீனத்தில் இருந்து லுத்தர் இப்போதுதான் அபூர்வமாகத் தேறியிருந்தார். இருவார காலத்தை எடுத்துக்கொண்ட பயணத்தினால், அவர் களைப்புமிக்கவராக இருந்தார். மறுநாள் அவர் சந்திக்கவேண்டிய முக்கியமான நிகழ்ச்சிகளுக்காக அவர் ஆயத்தம் செய்தாகவேண்டும். மேன்மைமிக்க மனிதர்கள், வீரர்கள், குருமார்கள், நகர மக்கள் ஆகியோரிடம் அவரைக் காணவேண்டு மென்ற ஆர்வம் மிகப் பெரியதாக இருந்து, அவர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டதினால், அவரால் சிலமணிநேரம்மட்டும்தான் ஓய்வெடுக்க முடிந்தது. எனது சுவிசேஷத்தினால் விடுதலை பெற்றவர்கள் என்று லுத்தரால் சொல்லப்பட்ட மேன்மக்கள் அநேகருள், சபையின் அத்துமீறல்களுக்கு எதிரான ஒரு சீர்திருத்தம் தேவை என்று பேரரசனிடம் தைரியமாகக் கூறியவர்களும் இருந்தனர். அசையாத அந்தச் சந்நியாசியைக் காண விரோதிகளும் நண்பர்களும் வந்தனர். அவர்களனைவரையும் அவர் சலனமற்ற அமைதியுடன் வரவேற்று, அவர்களது கேள்விகளுக்கு கண்ணியமாகவும் ஞானமாகவும் பதில்கூறினார். அவரது நடத்தை, உறுதியும் தைரியமும் நிறைந்ததாக இருந்தது. உழைப்பினாலும் சுகவீனத்தினாலும் வெளிரி மெலிந்துபோயிருந்த அவரது முகம், அன்பும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வினை வெளிக்காட்டியது. பக்திவிநயமும் அக்கரையுமுள்ள அவரது வார்த்தைகள் அவரது எதிரிகளாலுங்கூட நிற்கமுடியாத அளவிற்கு வல்லமைமிக்கதாக இருந்தது. நண்பர்கள் எதிரிகள் ஆகிய இரு சாராரும் ஆச்சரியம் நிறைந்தவர்களானார்கள். ஒரு தெய்வீக செல்வாக்கு அவரை ஆட்கொண்டுள்ளது என்று சிலர் நிச்சயமாக நம்பியிருந்தனர். ஆனால் மற்றவர்கள், அவர் பிசாசு பிடித்தவர் என்று கிறிஸ்துவைப்பற்றிப் பரிசேயர்கள் சொன்னதுபோல அறிவித்தனர். (29)GCTam 166.2

    மறுநாள் லுத்தர் நியாயவிசாரணைக் குழுவின் முன்பாகத் தோன்றும்படி அழைக்கப்பட்டார். மக்கள் கூடியிருந்த அரங்கத்திற்கு அவரை அழைத்துவர, ஒரு அரசாங்க அதிகாரி நியமிக்கப்பட்டு இருந்தார். அப்படியிருந்தும் சிரமத்துடன்தான் அவரால் அந்த இடத்தை அடையமுடிந்தது. போப்புவின் அதிகாரத்தைத் தடுக்கத் துணிந்த அந்த சந்நியாசியைக் காண, ஒவ்வொரு பாதையிலும் பார்வையாளர்கள் ஆவலுடன் கூடியிருந்தனர். (30)GCTam 167.1

    அவர் தனது நீதிபதிகளின்முன் தோன்றப்போகும் சமயத்தில், அநேக போர்களை நடத்தியிருந்த ஒரு வயதுசென்ற தளபதி அவரைப் பார்த்து: “ஏழை சந்நியாசியே, ஏழை சந்நியாசியே, நானோ மற்ற அநேக தளபதிகளோ இரத்தஞ்சிந்தி நடத்தியிருந்த போர்களில் ஒருபோதும் அறிந்திராத ஒரு போரை நடத்த, நீங்கள் செல்ல வேண்டியவராக இருக்கிறீர்கள். உங்களது காரியம் நியாயமானதாக இருக்குமானால், நீங்கள் அதைப்பற்றிய நிச்சயமுடையவராக இருந்தீர்களானால், தேவனின் பெயரால் முன்னேறிச் செல்லுங்கள். அவர் உங்களைக் கைவிடமாட்டார்” என்றார்.--Ibid., b. 7, ch. 8. (31)GCTam 167.2

    இறுதியாக, அவர் அந்தக் குழுவின் முன் நின்றார். பேரரசன் அரியணையில் அமர்ந்திருந்தார். தனது விசுவாசத்திற்கான பதிலைச் சொல்லவேண்டியவராக மார்டின் லுத்தர் நின்றதைப்போல, எந்த ஒரு மனிதனும் இப்படிப்பட்ட ஒரு மன்றத்தின்முன் ஒருபோதும் தோன்றி இருக்கவில்லை. லுத்தரின் இந்தத் தோற்றமே போப்புமார்க்கத்தை மேற்கொள்ளும் வெற்றியின் அடையாளமாக இருந்தது. போப்பு அவரைக் குற்றவாளியாகத் தீர்மானித்திருந்தார். ஆனால் இப்பொழுது அவர் நீதிவிசாரணை மன்றத்தின்முன் நின்றிருந்தார். இந்தச் செயலினாலேயே அந்த நீதிமன்றமானது, போப்புவிற்கும் மேலானதாக ஆக்கப்பட்டிருந்தது. சமயச் சடங்குத் தடையினால், போப்பு அவரைக் கீழ்ப்படுத்தி, மனித சமுகத்திலிருந்து அவரை விலக்கியிருந்தார். அப்படியிருந்தும் உலகத்தின் பெருமதிப்புமிக்க மன்றம் அவரை ஏற்றது. மிகமேலான வார்த்தைகளினால் அவர் அழைக்கப்பட்டார். நிரந்தரமாக மௌனமாயிருக்கும்படியான தண்டனையைப் போப்பு அவர்மீது செலுத்தியிருந்தார். அப்படிப்பட்ட லுத்தர் இப்போது கிறிஸ்தவ ஆளுகை முழுவதிலுமிருந்து, வெகுதூரத்திலிருந்து வந்துசேர்ந்து, பேச்சைக் கவனமாகக் கேட்கின்ற ஆயிரக்கணக்கானவர்களின் முன்பாகப் பேச இருந்தார். லுத்தர் என்னும் கருவியின்மூலமாக ஒரு ஆழ்ந்த புரட்சி நடைமுறைக்கு வந்தது. ரோமன் கத்தோலிக்க சபையானது ஏற்கனவே அதன் சிங்காசனத்திலிருந்து கீழிறங்கிக்கொண்டிருந்தது. ஒரு சந்நியாசியின் சத்தம் அந்த வீழ்ச்சியான நிலைமைக்குக் காரணமான இருந்தது!-Ibid., b. 7, ch. 8. (32)GCTam 167.3

    வல்லமையும் பதவிகளும் நிரம்பிய அந்த மன்றத்தின் பிரசன்னத்தில், மிகத் தாழ்வான நிலையில் பிறந்திருந்த அந்த சீர்திருத்தவாதி வியப்பும் திகைப்பும் அடைந்தவர்போல் காணப்பட்டார். அவரது உணர்ச்சிப் பெருக்கைக் கவனித்த இளவரசர்களில் அநேகர் அவரை நெருங்கி: “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல் சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்குப் பயப்படாதேயுங்கள்” என்று மெதுவாக அவரது காதில் கூறினார்கள். “என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும் ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டு போகப்படுவீர்கள்! நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்” என்று வேறொருவர் அவரிடம் கூறினார். இவ்வாறாக, சோதனையின் வேளையில் உலகத்தின் பெரிய மனிதர்கள் வழியாக லுத்தரைப் பலப்படுத்த கிறிஸ்துவின் வார்த்தைகள் கொண்டுவரப்பட்டன. (33)GCTam 168.1

    லுத்தர், பேரரசனின் சிங்காசனத்திற்கு நேர்எதிராக நடத்தப்பட்டார். மக்கள் கூடியிருந்த மன்றத்தில், ஒரு ஆழ்ந்த மௌனம் உண்டாயிற்று. அதன்பின் ஒரு அரசாங்க அதிகாரி எழுந்து, சேகரிக்கப்பட்ட லுத்தரின் எழுத்துக்களைச் சுட்டிக்காட்டி, இரண்டு கேள்விகளுக்கு லுத்தர் பதில் கூறவேண்டும் என்று கோரினார். இவைகளை எழுதினது அவர்தான் என்று அறிக்கை செய்கிறாரா? அவைகளில் முன்வைக்கப்பட்டுள்ளவைகளை, அவர் மறுத்துக்கூற உத்தேசிக்கிறாரா? அந்தப் புத்தகங்களின் பெயர்கள் வாசிக்கப் பட்டதும், முதலாவது கேள்விக்குப் பதிலாக, அந்தப் புத்தகங்கள் தன்னுடையவைகள் தான் என்று அவர் அறிக்கைசெய்தார். “இரண்டாவது கேள்வியைப் பொறுத்தமட்டில், அது விசுவாசம் சம்பந்தப்பட்டதும், ஆத்துமாக்களின் இரட்சிப்பு சம்பந்தப்பட்டதும், பரலோகத்திலும் பூமியிலும் மிகவும் விலையுயர்ந்த கருவூலத்தின் வார்த்தை சம்பந்தப்பட்டதாக இருப்பதால், விவேகத்துடனும் அவமரியாதை இல்லாமலும் பதிலளிக்காவிடில், அது எனக்குக் கண்மூடித்தனமானதும் ஆபத்தானதுமாக இருக்கும். சூழ்நிலைகள் கோருவதைவிடக் குறைவாகவோ, அல்லது சத்தியம் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவோ அறிவிக்கலாம். இந்த இரண்டு காரியங்களில் எதைச்செய்தாலும், “மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்” (மத். 10:33) என்ற கிறிஸ்துவின் வார்த்தை களுக்குக் கீழ்ப்படுவேன் என்பதால், மாட்சிமை தங்கிய பேரரசரை, எனது எல்லாவிதமான தாழ்மையுடனும், தேவனுடைய வார்த்தை களுக்கு விரோதமாகாமல் பேசும்படி, எனக்குக் காலத்தை அனுமதிக்கவேண்டுமென்று கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.-Ibid., b. 7, ch. 8. (34)GCTam 168.2

    இந்த வேண்டுகோளைச் செய்ததன் மூலமாக லுத்தர் ஞானமாக நடந்துகொண்டார். அவர் ஆசையினாலோ, உணர்ச்சியினாலோ செயல்படவில்லை என்கிற அவரது நடத்தை அந்த மன்றத்தைச் சம்மதிக்கச் செய்தது. தைரியத்தையும் சமரசத்திற்கு இணங்காமையையும் உடைய ஒருவரிடமிருந்து எதிர்பார்க்கப்படாத இப்படிப்பட்ட அமைதியும் சுயக்கட்டுப்பாடும் அவரது வல்லமையை அதிகரிக்கச்செய்து, முன்யோசனை, முடிவு, ஞானம், கண்ணியம் ஆகியவையோடு சேர்ந்து, அவரது எதிரிகளை ரோமன் கத்தோலிக்க சபையின் பிரதிநிதிகளை ஆச்சரியப்படுத்தி, மனம் தளரச் செய்தது. அது அவர்களது வெறுப்பையும் அகந்தையுமிக்க சுபாவத்தையும் கண்டித்தது. (35)GCTam 169.1

    அவர் தன் முடிவை அறிவிக்க மறுநாள் தோன்றவேண்டியது இருந்தது. சத்தியத்திற்கு எதிராக அணி திரண்டு நிற்கும் வல்லமை களைப்பற்றி தியானித்தபோது, அவரது இதயம் சற்று நேரத்திற்கு அவருக்குள் தொய்ந்து, அவரது விசுவாசம் தடுமாறியது. பயமும் நடுக்கமும் அவர்மீது வந்தது. பயங்கரம் அவரை மேற்கொண்டது. அவருக்குமுன் அபாயங்கள் பெருகுவதுபோலவும், அவரது எதிரிகள் வெற்றி அடையப்போவதுபோலவும் தோன்றின. மேகங்கள் அவரைச் சூழ்ந்து, அவரை தேவனிடமிருந்து பிரிப்பதுபோல் காணப்பட்டது. சேனைகளின் கர்த்தர் தன்னுடன் இருப்பார் என்னும் நிச்சயத்தை அவர் மிகவும் வாஞ்சித்தார். தனது ஆத்தும வேதனையினால் அவர் முகங்குப்புறக் கீழுேவிழுந்து, தேவனைத் தவிர வேறுயாரும் அறியமுடியாதவிதத்தில், உடைந்த இதயத்தை ஊற்றி, இதயம் கிழியும்படியாக கதறினார். (36)GCTam 169.2

    ” ஓ தேவனே! நித்திய காலமாக சர்வவல்லமை உள்ள தேவனே! இந்த உலகம் எவ்வளவு பயங்கரமானதாக இருக்கிறது! என்னை விழுங்க அது தனதுவாயை எப்படித் திறந்திருக்கிறது! ஆனால் உம்மேல் என் விசுவாசம் எவ்வளவு சிறியதாயிருக்கிறது! இந்த உலகத்திலிருக்கிற ஏதாவது வல்லமையை நான் சார்ந்திருக்கவேண்டியதிருந்தால் எல்லாம் முடிந்துவிட்டது... சாவுமணி அடிக்கப்பட்டுவிட்டது... தண்டனை முன்சென்று விட்டது... ஓ எனது தேவனே! இந்த உலகத்தின் எல்லா ஞானத்திற்கும் எதிராக எனக்கு உதவிசெய்யும்... உமது வல்லமையினால் இதைச் செய்துதாரும்... இந்தப் பணி என்னுடையதல்ல அது உம்முடையது. எனக்கு இங்கு ஒரு வேலையும் இல்லை... உலகத்தின் பெரிய மனிதர்களுடன் வாதிட என்னிடம் ஒன்றும் இல்லை... இந்தக் காரியம் உம்முடையதாயிருப்பதால்... அது நீதி உள்ளதாகவும் நித்தியமானதாகவும் இருப்பதால்.... நான் கெஞ்சிக்கேட்கிறேன். ஆ! உண்மையும் மாறாதவருமான தேவனே! நான் மனிதன்மீது சார்ந்திருக்கவில்லை. மனிதனிடமிருந்து வரும் எதுவும் தள்ளாடக்கூடியது. அவனிடமிருந்து புறப்படும் அனைத்தும் விழுந்துபோகவேண்டும்.... நீர் என்னை இந்தப் பணிக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்.... எனவே, தேவனே உமது சொந்த சித்தத்தை நடப்பியும். எனது பாதுகாப்பும், எனது கேடகமும், எனது பலத்த துருகமுமாயிருக்கும் உமது நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் என்னைக் கைவிட்டுவிடாமலிரும்” என்று ஜெபித்தார்.- Ibid., b. 7, ch. 8. (37)GCTam 169.3

    அவர் தமது சொந்த பலத்தின்மீது நம்பிக்கை வைக்காமல் இருக்கவும், துணிகரமாக ஆபத்துக்குள் விரைந்துவிடாமலும் இருக்கும்படி, தனக்குள்ள அபாயத்தை உணர, சர்வஞானம் உள்ள தெய்வீகப் பாதுகாப்பு அவரை அனுமதித்தது. அப்படியிருந்தும் உடனடியாக நிகழவிருக்கும் சரீரப்பிராகாரமான ஆபத்தைப்பற்றிய பயமோ, அல்லது சித்திரவதை மரணத்தைப்பற்றிய பயமோ அவரை மேற்கொள்ளவில்லை. நெருக்கடியான நிலைக்கு அவர் வந்து விட்டார். ஆனால் அதைச் சந்திப்பதற்கான தனது இயலாமையை அவர் உணர்ந்தார். அவரது பலவீனத்தினால், சத்தியத்தின் நோக்கத்திற்கு இழப்பு உண்டாகலாம். தமது சொந்தப் பாதுகாப்பிற்காக அல்ல, சுவிசேஷத்தின் வெற்றிக்காக அவர் தேவனுடன் போராடினார். அன்று இரவில் ஆற்றின் அருகில், போராடினபோது இஸ்ரவேலுக்கிருந்த மனவேதனையைப் போன்று அது இருந்தது. இஸ்ரவேலைப்போலவே அவரும் தேவனை மேற்கொண்டார். அவரது படுமோசமான உதவியற்ற நிலையில், வல்லமைமிகுந்த விடுதலைசெய்பவரான கிறிஸ்துவை அவரது விசுவாசம் உறுதியாகப் பிடித்துக்கொண்டது. அந்தக் குழுவின் முன் அவர் தனியாகத் தோன்றப்போவதில்லை என்ற வாக்குறுதியினால் அவர் பலப்படுத்தப்பட்டார். அவரது ஆத்துமாவிற்குள் சமாதானம் திரும்பிவரவே, அந்த நாட்டின் அதிபதிகளுக்குமுன், தேவனுடைய வார்த்தையை உயர்த்தும்படி அவர் அனுமதிக்கப்பட்டதற்காக மகிழ்ந்தார். (38)GCTam 170.1

    தனது மனம் தேவன்மீது தங்கியிருக்க, லுத்தர் தனக்கு முன்பாக வுள்ள போராட்டத்திற்காக ஆயத்தஞ்செய்தார். அவரது பதில்களைப்பற்றிய திட்டம்பற்றி சிந்தித்தார். அவரது சொந்த எழுத்துக்களின் பகுதிகளைச் சோதித்தார். தனது நிலைக்குப் பொருத்தமான சான்றுகளை வேதாகமத் திலிருந்து எடுத்தார். அதன்பின் தனது இடதுகரத்தைத் தனக்குமுன் திறந்திருந்த வேதாகமத்தின்மீது வைத்து, வலது கரத்தை வானத்திற்கு நேராக உயர்த்தி, தனது சாட்சியை இரத்தத்தினால் முத்திரையிடும்படி அழைக்கப்பட்டாலும், தொடர்ச்சியாக சுவிசேஷத்தைப் பற்றிக்கொண்டிருக்கவும் தனது விசுவாசத்தை சுதந்திரமாக அறிக்கைசெய்யவும் உறுதிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.--Ibid., b. 7, ch. 8. (39)GCTam 170.2

    பிரதிநிதிகளின் குழுவின் முன் மறுபடியும் தோன்றியபோது, அவரது முகத்தில் பயமோ அல்லது திகைப்பின் சாயலோ காணப்படவில்லை. பூமியிலுள்ள மிகப்பெரிய ஒருவரின்முன், அமைதியும், சமாதானமும், மேலான தைரியமும் மேன்மையுமுள்ள தேவனின் சாட்சியாக அவர் நின்றார். இப்பொழுது அரசாங்க அதிகாரி, லுத்தர் தனது கோட்பாடுகளைப் பின்வாங்கிக்கொள்ள விரும்புகிறாாரா? என்று கேட்டார். மிகவும் பணிவும் தாழ்மையுமிக்க குரலில், கோபமும் உணர்ச்சிப்பெருக்குமின்றி, லுத்தர் தனது பதிலைக் கூறினார். அவரது முகம் தன்னம்பிக்கையற்றதாகவும், மரியாதை தருவதாகவும் இருந்தது. அப்படியிருந்தும் அந்த மன்றத்தினரை வியப் படையச்செய்த நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். (40)GCTam 171.1

    “பேரமைதிமிக்க பேரரசரே! அலங்காரமிக்க இளவரசர்களே! பெரும் கருணை உள்ள பிரபுக்களே! உங்களது கட்டளையின்படி, இன்று நான் மிகுந்த தாழ்மையுடன் உங்கள் முன்பாக நிற்கிறேன். நான் எடுத்துக்கொண்டுள்ள ஒரு காரியம் மிக நீதியானதென்றும், சரியான தென்றும், நல்லவிதமாக நான் நம்பி இருப்பதினால், மேன்மைமிக்க பேரரசையும், மிக மேலானவர்களையும், தேவனுடைய இரக்கத்தினால் எனது மன்றாட்டைக் கனிவுடன் கேட்கும்படிக் கெஞ்சிமன்றாடுகிறேன். எனது பதிலில் நான் நீதிமன்றத்தில் பயன்படுத்த வேண்டிய சரியான சொற்களைப் பயன்படுத்தாவிட்டால், என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். ஏனெனில் அப்படிப்பட்டவைகளில் நான் பழக்கமற்றவனாக இருக்கிறேன். ஏனென்றால் நான் ஒரு ஏழைச் சந்நியாசி. அரச அரண்மனையில் வளராமல், மாடாலயத் தனிஅறையில் வளர்ந்தவன்” என்றார்.-Ibid., b. 7, ch. 8. (41)GCTam 171.2

    பின்பு கேள்விகளைப் பற்றி: அவரால் வெளியிடப்பட்டவைகள் அனைத்தும் ஒரே தன்மையை உடையவைகள் அல்ல என்றார். சிலவற்றில் அவர் நல்ல விசுவாசம், நற்செயல்கள் ஆகியவை பற்றிக் கூறியிருந்தார். அவரது விரோதிகளாலுங்கூட அவைகள் இடையூரற்றவையென்றும், நன்மை பயக்கக்கூடியவை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தன. இதிலிருந்து பின்வாங்குவது என்பது அனைத்துக் கட்சியினராலும் சரியென்று அறிக்கைசெய்யப்பட்டுள்ள சத்தியங்களைப் பழிப்பதாக இருக்கும். இரண்டாாம் பகுதியில் எழுதப்பட்டவை, பேப்புமார்க்கத்தின் ஊழல்களையும் புரட்டுக்களையும் அடக்கியதாகவும், அவைகளை வெளிக்காட்டுபவைகளாகவும் இருந்தன. இந்தப் பிரசுரங்களில் பின்வாங்குவது, போப்பு மார்க்கத்தின் கொடுங்கோன்மையை பலப்படுத்தி, பக்தியற்ற அநேக தீய செயல்களுக்கான கதவை அகலமாகத் திறந்து விடுவதாக அமையும். அவரது நூல்களின் மூன்றாம்பகுதியில், நிலவியுள்ள தீமைகளைப் பாதுகாத்துவந்திருந்த தனிப்பட்டவர்களைத் தாக்கி இருந்தார். இவைகளைப் பற்றியவரை அவர் சாதாரணமாக இருந்ததைவிட, சற்று முரட்டுத்தனமாகவே இருந்தார் என்பதை தாராளமாக அறிக்கை செய்தார். தான் தவறற்றவன் என்று உரிமை பாராட்டாமல் இருந்தபோதிலும், இந்த நூல்களைப் பின்வாங்கிக் கொள்ள தன்னால் இயலாது என்றார். ஏனெனில், அப்படிப்பட்ட ஒரு செயல் சத்தியத்தின் எதிரிகளை மிகுந்த தைரியம் அடையச்செய்து, தேவனுடைய ஜனங்களை அவர்கள் மேலும் அதிகமான கொடுமையுடன் நசுக்கும் வாய்ப்பினை உண்டுபண்ணிவிடும் என்றார்.(42)GCTam 171.3

    “நான் தேவனாக இல்லாமல் சாதாரண மனிதனாக இருப்பதால், ‘நான் தகாதவிதமாகப் பேசினதுண்டானால், அதை எனக்கும் தெரிவி’ என்று கிறிஸ்து கூறியதுபோல, நானும் என்னைக் காத்துக்கொள்ளக் கூறுவேன். நான் எழுதி உள்ளதில் தவறு உள்ளது என்பதை தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களில் இருந்தும், அப்போஸ்தலர்களின் எழுத்துக்களில் இருந்தும் எனக்கு எடுத்துக்கூறும்படி மேன்மைதங்கிய பேரரசரையும் இந்தச் சபையில் உள்ளவர்களையும், அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும்சரி, அனைவரையும் நான் தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு, மிகுந்த பணிவுடன் கெஞ்சிக் கேட்டுக்கொள்ளுகிறேன். நான் உணர்த்தப்பட்டவுடன், எனது தவறுகளனைத்தையும் ஒப்புக்கொண்டு, எனது நூல்கள் அனைத்தையும் நெருப்பிலிடுவதற்கு முதல் மனிதனாக இருப்பேன்” என்றார். (43)GCTam 172.1

    “நான் இப்பொழுது சொன்னவைகளை, எப்படிப்பட்ட ஆபத்துக் குள்ளாக இருக்கிறேன் என்பதை அறிந்து, அவைகளை நிறுத்து, ஆலோசித்துக் கூறியிருக்கிறேன். ஆனால் அவைகளினால் நான் பயந்து திகைப்படையவில்லை. பண்டைய காலத்தைப்போலவே, இந்த நாளிலும் சுவிசேஷமானது கருத்து வேறுபாடுகளுக்கும் துன்பங்களுக்கும் காரணமாக இருப்பதைக்கண்டு நான் அதிக மகிழ்ச்சி அடைகிறேன். தேவனுடைய வார்த்தையின் சுபாவமும் விதியும் இதுதான். ‘நான் சமாதானத்தையல்ல பட்டயத்தையே அனுப்ப வந்திருக்கிறேன்’ என்று கிறிஸ்து கூறினார். தேவன் தமது ஆலோசனைகளில் ஆச்சரியமானவராகவும் பயங்கரமானவராகவும் இருக்கிறார். நமக்கு இடையிலுள்ள வேற்றுமைகளை நீக்கும் முயற்சியில், நாம் தேவனுடைய வார்த்தைகளுக்கு எதிராகப் போரிடுபவர்களாகக் காணப்படாமல், விடுபடமுடியாத ஆபத்தான பெருவெள்ளத்தையும், இப்போ துள்ள அழிவையும், நித்தியமான அழிவையும் நமது தலைகளின்மீது கொண்டுவராமலிருப்பதற்கு கவனமுள்ளவர்களாக இருப்போமாக. தேவனுடைய வார்த்தைகளில் இருந்து உதாரணங்களை என்னால் காட்ட இயலும். தங்களது செயல்களில் மிகுந்த முன்னெச்சரிக்கை உள்ளவர் களாகத் தோன்றி, தங்களதிகாரத்தை நிலைவரப்படுத்த முயன்ற செயலில், தங்களது அழிவிற்கே செயலாற்றிய பார்வோன், பாபிலோனிய அரசர்கள், இஸ்ரவேலின் அரசர்கள் ஆகியோரைப்பற்றி என்னால் பேசமுடியும். தேவன் ‘பர்வதங்களைச் சடிதியாய்ப் பேர்க்கிறார். அவைகள் அதை அறிவதில்லை” (யோபு 9:5) என்றார்.-Ibid., b. 7, ch. 8. (44)GCTam 172.2

    லுத்தர் ஜெர்மன் மொழியில் பேசியிருந்தார். இப்பொழுது அவைகளை லத்தீன் மொழியில் திரும்பக் கூறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். திரட்டிய முதலாம் முயற்சியினால் அவர் களைப்படைந்திருந்தபோதிலும், மறுபடியும் அவர் முதலில்பேசினது போலவே மிகுந்த தெளிவுடனும், சக்தியுடனும் இரண்டாவதாக லத்தீன் மொழியில் பேசினார். இக்காரியத்தில் தெய்வீகப் பாதுகாப்பு அவரை நடத்தினது. அநேக இளவரசர்களின் மனங்கள் தவறு களினாலும் மூடநம்பிக்கைகளினாலும் குருடாக இருந்ததினால், லுத்தரின் விளக்கங்களின் வலிமையை அவர் முதலில் பேசியபோது அவர்கள் காண வில்லை. ஆனால் இரண்டாவது தடவையாக பேசியபோது, அவர் கூறிய காரியங்களின் கருத்தை அவர்களால் தெளிவாக உணரமுடிந்தது. (45)GCTam 173.1

    ஒளியைப் பெற்றுக்கொள்ளப் பிடிவாதமாகத் தங்கள் கண்களை மூடிக்கொண்டவர்களும், சத்தியத்தினால் உணர்த்தப்படக் கூடாது என்று தீர்மானித்தவர்களும், லுத்தரின் பேச்சின் வல்லமையினால் கோபா வேசமடைந்தனர். அவரது பேச்சை அவர் முடித்தபோது, மன்றத்தின் ஒரு பேச்சாளர் கோபத்துடன் எழுந்து, நீங்கள் கேள்விக்கு பதில் சொல்லவில்லை. நீங்கள் பின்வாங்குகிறீர்களா? அல்லது பின்வாங்கமாட்டீர்களா? என்பதை உணர்த்தும் தெளிவான பதில் தேவை என்றார். (46)GCTam 173.2

    “மிகுந்த அமைதியை உடைய பேரரசரும் இளவரசர்களும் சாதாரணமான தெளிவான நேரடியான பதிலை எதிர்பார்ப்பதால், நான் ஒருபதில்கூற விரும்புகிறேன். அது இதுதான்: போப்பு மார்க்கத்தினர் அடிக்கடி தவறுக்குள் வீழ்ந்துள்ளனர் என்பது நடுப்பகலைப்போலத் தெளிவாக இருப்பதினால், இது அவர்களுக் குள்ளேயே இசைவற்ற வெளிச்சமாக உள்ளதால், என்னால் போப்புவிற்கோ அல்லது அவரது குருவிற்கோ பணியமுடியாது. அப்படி இருக்கும்போது, வேதவாக்கியச் சான்றுகளின் மூலமாகவோ, அல்லது பொருத்தமான காரணங்களினாலோ நான் உணர்த்தப்படாவிட்டால், குறிப்பிட்டுள்ள அதே வேத வாக்கியங்களில் எனக்குத் திருப்தி உண்டாகாவிட்டால், இவ்விதமாக என்னுடைய சீர்தூக்கும் செயல், தேவனுடைய வார்த்தைகளுக்கு உட்பட்டிருக்காவிட்டால், என்னால் எதையும் பின்வாங்கமுடியாது. நான் பின்வாங்கவுமாட்டேன். ஏனெனில் தனது மனசாட்சிக்கு விரோதமாகப் பேசுவது ஒரு கிறிஸ்தவனுக்குச் சரியாக இருக்காது. இதை எனது நிலையாகக் கொண்டு நிற்கிறேன். வேறுவிதமாக என்னால் செயல்படமுடியாது. தேவன் எனக்குச் சகாயம் செய்வாராக. ஆமென்” என்றார்.--Ibid., b. 7, ch. 8 (47)GCTam 173.3

    இந்த நீதிமான் தேவனுடைய வார்த்தை என்னும் அஸ்திவாரத்தின்மீது இவ்வாறாக நின்றார். பரலோகத்தின் ஒளி அவரது முகத்தை ஒளிபெறச் செய்தது. தவறுக்கு எதிராகவும், உலகை மேற்கொள்ளும் விசுவாசத்தின் மேலாதிக்கத்திற்கும் அதன் வல்லமைக்கும் நேராகவும் சாட்சி பகர்ந்தபோது, அவரது பண்பின் மேலானதன்மையும் தூய்மையான குணமும், இதயத்தின் சமாதானமும் மகிழ்ச்சியும் எல்லோருக்கும் வெளிகாட்டப்பட்டது. (48)GCTam 174.1

    அந்த மன்றம் முழுவதும் வியப்பில் மூழ்கி, சற்றுநேரம் பேச்சற்றதாக இருந்தது. அவர் முதலாவது பேசினபோது, தாழ்ந்த குரலில், கிட்டத்தட்ட கீழ்ப்படிகின்ற மரியாதையுள்ள குரலில் பேசினார். ரோமன் கத்தோலிக்கர்கள் இதை அவரது தைரியத்தின் வீழ்ச்சிக்கான ஆரம்பத்தின் அறிகுறி என்று கூறிக்கொண்டனர். தாமதமாகப் பேசுவதற்கான அவரது வேண்டுகோள் அவரது மறுதலிப்புக்கூற்றின் முன்னுரை என்று கருதினர். அந்தச் சந்நியாசியின் மெலிந்த உருவத்தையும் அவரது எளிய உடையையும் அவர் பேசிய எளிமையான விதத்தையும் மன்னர் சார்லஸ் கவனித்து, சற்று அலட்சியமாக, இந்த மனிதனால் என்னை ஒருபோதும் ஒரு மதவிரோதியாக்க முடியாது என்றார். இப்பொழுது அவர் காட்டிய தைரியமும் உறுதியும், காரணங்களை எடுத்துக்கூறும் அவரது வல்லமையும் தெளிவும், எல்லா தரப்பினரையும் ஆச்சரியத்தால் நிரப்பியது. இந்த சந்நியாசி அஞ்சாநெஞ்சத்துடனும் அசையாத தைரியத்துடனும் பேசுகிறார் என்று அரசனே வியப்பில் ஏவப்பட்டுக் கூறினார். தங்களது நாட்டின் இந்த பிரதிநிதியை அநேக ஜெர்மானிய இளவரசர்கள் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் நோக்கினர். (49)GCTam 174.2

    ரோமன் கத்தோலிக்க கட்சியின் மனப்பான்மை மிகக்கேவல மான நிலையை அடைந்தது. அவர்களது காரியம் அனுகூலமற்ற வெளிச்சத்தில் காணப்பட்டது. அவர்கள் தங்களது வல்லமையை நிலைநிறத்த வேத வாக்கியங்களுக்குச் செல்லாமல், ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தின் தோல்வியடையாத வாதமாகிய பயமுறுத்துதலின் மூலமாக அதைச் சாதிக்க முயன்றனர். “நீங்கள் பின்வாங்காவிட்டால், பேரரசரும் பேரரசாட்சியிலுள்ள நாடுகளும், பிடிவாதமிக்க மதவிரோதியான ஒருவருடன் எவ்விதமாக நடந்து கொள்ளவேண்டும் என்று ஆலோசிக்கப் புறப்படுவார்கள்” என்று அந்தக் குழுவின் பேச்சாளர் தெரிவித்தார். (50)GCTam 174.3

    லுத்தரின் மேன்மைமிக்க தற்காப்புப் பேச்சை மிகுந்த மகிழ்ச்சியுடன் கவனித்திருந்த அவரது நண்பர்கள், இந்த வார்த்தைகளைக் கேட்டு, நடுங்கினார்கள். ஆனால் “தேவன் எனக்கு உதவிபுரிபவராக இருப்பாராக் என்னால் எதையும் பின்வாங்க முடியாது” என்று டாக்டர் லுத்தர் கூறினார்.- Ibid., b. 7, ch. 8. (51)GCTam 175.1

    இளவரசர்கள் ஒருமித்து ஆலோசனை நடத்திய சமயத்தில், அவரை அந்த மன்றத்திலிருந்து வெளியே செல்லும்படி கட்டளை கொடுக்கப்பட்டது. ஒரு பெரிய நெருக்கடி வந்துவிட்டதென்று உணரப்பட்டது. லுத்தரின் கீழ்ப்படிய மறுத்திடும் செயல் கத்தோலிக்க சபையின் வரலாற்றைக் காலங்கள் நெடுகிலும் பாதிக்கும். பின்வாங்குவதற்காக மீண்டும் ஒரு வாய்ப்பு அவருக்குக் கொடுக்கப்படவேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. கடைசித் தடவையாக அவர் மன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டார். தனது கோட்பாடுகளை அவர் மறுத்துக்கூறுவாரா என்ற கேள்வி மறுபடியும் கேட்கப்பட்டது. நான் ஏற்கனவே கொடுத்துவிட்டதைவிடுத்து என்னிடம் கொடுப்பதற்கு வேறு பதில் இல்லை என்று அவர் கூறினார். ரோமன் கத்தோலிக்க சபையின் வாக்குறுதிகளினாலோ அல்லது பயமுறுத்தல்களினாலோ அவரை இணங்கவைக்க முடியாது என்பது தெளிவாகியிருந்தது. (52)GCTam 175.2

    அரசர்களையும் பிரபுக்களையும் நடுங்கவைத்த அவர்களது மேலான வல்லமை இப்படிப்பட்ட ஒரு தாழ்மையான சந்நியாசியால் நிந்திக்கப்பட்டதை எண்ணி, ரோமன் கத்தோலிக்கத் தலைவர்கள் மிகுந்த எரிச்சலடைந்தனர். அவரது உயிரைச் சித்திரவதைசெய்து எடுப்பதை அவர் உணரும்படிச் செய்யவேண்டுமென அவர்கள் விரும்பினார்கள். ஆனால் லுத்தர் தனக்கு உண்டாயிருக்கும் ஆபத்தைப் புரிந்துகொண்டவராக, எல்லோரோடும் கிறிஸ்தவ பண்புடனும் அமைதியுடனும் பேசினார். அவரது வார்த்தைகளில் அகந்தை, ஆசை, திரித்துக்கூறுதல் ஆகிய எதுவும் இல்லை. அவர் தன்னைப்பற்றியும் தன்னைச் சுற்றியுள்ள பெரிய மனிதர்களைப்பற்றியும் மறந்து, போப்புகள், குருமார்கள், பேரரசர்கள், அரசர்கள் ஆகிய அனைவரையும்விட, எல்லையற்ற மேன்மைமிக்க ஒருவரின் பிரசன்னத்தின்முன் இருப்பதை மட்டும் உணர்ந்தார். லுத்தரின் நண்பர்களும் விரோதிகளும் திகைக்கவும் ஆச்சரியப்படவும்கூடிய விதத்தில், லுத்தரின் சாட்சியின் மூலமாக வல்லமையுடனும் மகத்துவமுடனும் கிறிஸ்து பேசினார். பேரரசின் தலைவர்களின் இதயங்களை உணர்த்திக்கொண்டிருந்த தேவஆவியின் பிரசன்னம் காணப்பட்டது. லுத்தரின் காரியத்திலுள்ள நீதியை பல இளவரசர்கள் அறிக்கை செய்தனர். சத்தியத்தைப்பற்றி அநேகர் உணர்த்தப்பட்டனர். அந்த உணர்த்துதலைப் பெற்றுக் கொண்டவர்களில் சிலருக்குள் அது நீடித்து நிற்கவில்லை. தங்களுடைய உணர்த்துதலை வெளிக்காட்டாத வேறொரு வகுப்பினரும் இருந்தனர். அவர்கள் தங்களுக்கென்று வேத வாக்கியங்களை ஆராய்ந்துபார்த்து, பிற்காலத்தில் சீர்திருத்தத்தின் அச்சமற்ற ஆதரவாளர்களானார்கள். (53)GCTam 175.3

    தேர்தல் அதிகாரியான பிரெட்ரிக், விசாரணைக் குழுவின்முன் லுத்தர் தோன்றுவதை ஆவலுடன் எதிபார்த்திருந்து, ஆழ்ந்த உணர்வுகளுடன் அவரது உரையைக் கவனித்தார். அந்த டாக்டரின் தைரியம், உறுதி, தன்னடக்கம், தனது நிலையைக்காப்பதில் அவர் உறுதியுடன் நின்றது ஆகியவைகளை அவர் மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் கண்டார். போட்டியிட்ட கட்சிகளை அவர் ஒப்பிட்டுப் பார்த்து, போப்புமார்கள், அரசர்கள், குருமார்களின் ஞானம், சத்தியத்தின் வல்லமையினால் இல்லாமலாக்கப்பட்டதை கண்டார். எல்லா நாடுகளிலும் எல்லாக் காலங்களிலும் உணரக்கூடிய தோல்வியை போப்புமார்க்கம் அடைந்தது! (54)GCTam 176.1

    லுத்தரின் விளக்கவுரையின் விளைவை உணர்ந்த போப்புவின் பிரதிநிதி, அதுவரை இராதவண்ணம் மிகவும் பயந்து, அந்த சீர்திருத்தவாதியைக் கவிழ்க்கத் தனது ஆதீனத்திலுள்ள எல்லா வழிகளையும் பயன்படுத்தத் தீர்மானித்தார். வாக்குவன்மைக்கும், இராஜதந்திரத் திறமைக்கும் மிகச் சிறந்தவரெனக் குறிப்பிடப்பட்டிருந்த அந்த பிரதிநிதி, முக்கியத்துவமில்லாத ஒரு சந்நியாசியின் காரியத்திற்காக, மிகுந்த வல்லமையுள்ள போப்பு மார்க்கத்தின் நட்பையும் ஆதரவையும் தியாகஞ்செய்வதால் உண்டாகக்கூடிய தவறையும் அபாயத்தையும் இளைஞரான பேரரசருக்கு கூறினார். (55)GCTam 176.2

    அவரது வார்த்தைகள் பலன் தராமல் போகவில்லை. லுத்தர் பதில்கொடுத்த மறுநாள், தனது முன்னோர்கள் நடைமுறைப்படுத்திப் பாதுகாத்துவந்த கத்தோலிக்க சமயக்கொள்கையைப் பின்பற்றத் தானும் தீர்மானித்திருப்பதை அறிவிக்கின்ற செய்தியை, அந்த மன்றத்தின் முன்வைக்க பேரரசன் ஏற்பாடுசெய்தான். “லுத்தர் தனது தவறுகளை மறுத்துக்கூற மறுத்துவிட்டதினால், அவருக்கும் அவர் போதித்த வேதப்புரட்டுக்கும் எதிராக மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் தனது பைத்தியகாரத்தனத்தினால் விலகிச் சென்ற தனி ஒரு சந்நியாசி, கிறிஸ்தவ உலகத்திற்கெதிராக தம்மை அசையாது நிற்கச்செய்திருக்கிறார். இந்த அவபக்தியின் முன்னேற்றத் தைத் தடுப்பதற்காக, நான், எனது இராஜ்ஜியம், எனது வல்லமை, எனது நண்பர்கள், எனது கருவூலம், எனது உடல், எனது இரத்தம், எனது எண்ணங்கள், எனது உயிர் அனைத்தையும் தியாகம் செய்வேன் எனது மக்களுக்கு மிகக் குறைந்த அளவுகூட தொல்லை தராதபடிக்கு நான் மார்டின் லுத்தரைத் தடைசெய்யப்போகிறேன். அதற்குப்பின், நான் அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் பகிரங்கமான விரோதிகள் என அறிவித்து, சமுதாயத்தைவிட்டு நீக்குதல், சமயச் சடங்குகளை மறுத்தல் போன்ற அவர்களது அழிவிற்குக் காரணமாகும் அனைத்துக் காரியங்களையும் செய்வேன். நாட்டின் மாநில அங்கத்தினர்கள் இதற்குத் தகுந்த விதமாக, விசுவாசமிக்க கிறிஸ்தவர்களாக நடந்துகொள்ளும்படி நான் அவர்களை அழைக்கிறேன்” என்றார்.-Ibid., b. 7, ch. 9. எனினும் லுத்தருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடத்துதல் மதிக்கப்படவேண்டும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமுன் அவர் பாதுகாப்பாகத் தன் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படவேண்டும் (56)GCTam 176.3

    அந்த விசாரணை மன்றத்தின் அங்கத்தினர்களுக்குள் ஒன்றையொன்று எதிர்க்கின்ற இரு கருத்துக்கள் இப்பொழுது உண்டாயின. சீர்திருத்தவாதிக்குக் கொடுக்கப்பட்ட பாதுகாப்பு நடத்துதல் கடிதம் பறக்கணிக்கப்படவேண்டும் என்று பேப்புவின் பிரதிநிதிகள் கூறினர். ஒரு நூற்றாண்டிற்குமுன் ரைன் நதியானது, ஜான் ஹஸ்ஸின் சாம்பலைப் பெற்றுக்கொண்டதுபோல, லுத்தரின் சாம்பலையும் பெறவேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.- Ibid., b. 7, ch. 9. ஆனால் ஜெர்மன் இளவரசர்கள், போப்புமார்க்கத்தினராக இருந்தபோதிலும் இப்படிப்பட்ட பொது விசுவாசத்திற்கெதிரான மீறுதலை எதிர்த்து, அது நாட்டின் நற்பெயருக்கே கறையாக மாறும் என்றனர். ஹஸ்ஸின் மரணத்திற்குப்பின், உண்டான அழிவுகளை அவர்கள் சுட்டிக்காட்டி, ஜெர்மனியின்மீதும் தங்களது இளம் பேரரசரின் தலையிலும், அப்படிப்பட்ட பயங்கரமான தீங்குகள் மறுபடியும் நிகழும்படி அனுமதிக்க அவர்கள் துணியவில்லை. (57)GCTam 177.1

    இந்த அடிப்படைத் தீர்மானத்திற்குப் பதிலாக, சார்லஸ்தாமே “விசுவாசம் பூமியின் மீதெங்குமிருந்து நீக்கப்பட்டாலுங்கூட, அது இளவரசர்களிடம் அடைக்கலம் காணவேண்டும்” என்றார்.-Ibid., b. 7, ch. 9. அதற்கும் மேலாக, ஹஸ்ஸின் காரியத்தில் சிக்மண்ட் பேரரசன் நடந்துகொண்டது போல, சீர்திருத்தவாதியின் காரியத்திலும் நடந்துகொள்ளவேண்டும் என்று போப்புமார்க்கவாதிகளான லுத்தரின் மிகக் கசப்புமிக்க எதிரிகள் கூறினர். அதாவது, கத்தோலிக்க சபையின் இரக்கத்திற்கு லுத்தரை விட்டுவிடுங்கள் என்றனர் ஆனால் பொது மன்றத்தில் ஹஸ் தனது சங்கிலியைச் சுட்டிக்காட்டி, அந்த அரசனின் மோசமான விசுவாசத் துரோகத்தை நினைவுபடுத்தின காட்சியை ஐந்தாம் சார்லஸ் நினைவூட்டி, நான் சிக்மண்டைப்போல் என் முகத்தை அவமானத்தால் தொங்கவிட விரும்பவில்லை என்றார்.-Lenfant, vol. 1, p. 422. (58)GCTam 177.2

    அப்படியிருந்தும், லுத்தர் முன்வைத்த சத்தியங்களை சார்லஸ் துணிகரமாக நிராகரித்தார். நான் எனது முன்னோர்களின் அடிச்சுவடுகளில் நடக்க உறுதியாகத் தீர்மானித்திருக்கிறேன் என்று அந்த அரசன் எழுதினான். சத்தியம், நீதி, ஆகியவைகளின் பாதையில் நடப்பதற்காக, சம்பிரதாயத்தின் பாதையைவிட்டு விலகமுடியாது என்று அவன் முடிவுசெய்திருந்தான். போப்புமார்க்கத்தை தன் பிதாக்கள் தாங்கி இருந்ததினால், அதன் எல்லாக் கொடுமை களுடனும் ஊழல்களுடனும், தானும் தாங்கப்போவதாகக் கூறினான். இவ்வாறாக, தன் பிதாக்களுக்குக் கிடைத்திருந்ததைக் காட்டிலும் அதிகமான எந்த வெளிச்சத்தையும் ஏற்க மறுத்து, அவர்கள் செய்யாத கடமையைத் தானும் செய்ய மறுத்தான். (59)GCTam 178.1

    இந்த நாட்களிலுங்கூடத் தங்களது பிதாக்களின் சம்பிரதாயங் களையும் பாரம்பரியங்களையும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கும் ஏராளமானவர்கள் உள்ளனர். கர்த்தர் அவர்களுக்கு அதிக வெளிச்சத்தைக் கொடுக்கும்போது, அந்த வெளிச்சம் அவர்களது பிதாக்களுக்குக் கிடைக்கவில்லை என்பதற்காக அதைப் பெற்றுக்கொள்ள மறுக்கின்றனர். நமது பிதாக்கள் இருந்த இடத்தில் நாம் வைக்கப்படவில்லை. அதனால், நமது கடமைகளும் பொறுப்புகளும் அவர்களுடையதைப்போல் இருப்பதில்லை. நாம் நமக்காக தேவனுடைய வார்த்தையிலுள்ள சத்தியத்தை ஆராய்வதற்குப் பதிலாக, நமது கடமையைத் தீர்மானிக்க நமது பிதாக்களை உதாரணமாகக் காணும்போது, தேவனால் அங்கீகரிக்கப்படமாட்டோம். நமது பொறுப்புகள் நமது முன்னோர்களுடையதைவிட பெரியவை. நமக்குக் கிடைக்கும்படியாக நமது பெற்றோர்களுக்குப் பிறப்புரிமையாகக் கொடுக்கப்பட்டு, அவர்களிடமிருந்து நமக்கு வந்திருக்கிற வெளிச்சத்திற்கு நாம் கணக்குக்கொடுக்கவேண்டியவர்களாக இருப்பதோடு, இப்பொழுது தேவனுடைய வார்த்தையிலிருந்து நம்மீது வீசும் அதிகமான வெளிச்சத்திற்கும் கணக்குக்கொடுக்கவேண்டியவர்களாக இருக்கிறோம். (60)GCTam 178.2

    “நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது இப்பொழுதோ தங்கள் பாவத்தைக் குறித்துப் போக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை” (யோவான் 15:22) என்று நம்பிக்கையில்லாத யூதர்களிடம் இயேசு கூறினார். அதே தெய்வீக வல்லமை லுத்தரின் மூலமாக ஜெர்மனியின் பேரரசனிடமும் இளவரசர்களிடமும் பேசியது. தேவனுடைய வார்த்தையிலிருந்து வெளிச்சம் வீசியபோது, அந்த மன்றத்திலிருந்தவர்களிடம் கடைசித் தடவையாக தேவனுடைய ஆவி பரிந்துபேசியது. நூற்றாண்டுகளுக்கு முன், அகந்தையும் மக்களால் உண்டாகும் மேன்மையும் உலக இரட்சகருக்கெதிராக பிலாத்துவைத் தனது இதயத்தை மூடச்செய்ததுபோல, “இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பேன்” (அப் .24: 25) என்று பயத்தால் நடுங்கிய பேலிக்ஸ், சத்தியத்தின் தூதனாக நின்றவனை அனுப்பிவிட்டதைப்போல, “நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய்” (அப்போஸ்தலர் 26:28) என்று அகந்தை மிக்க அகிரிப்பா அறிக்கைசெய்து, பரலோகம் அனுப்பின தூதைவிட்டுத் திரும்பினதுபோல, உலகப்பிரகாரமான பெருமையும் கொள்கைகளும் கொடுத்த நிபந்தனைகளுக்கு விட்டுக்கொடுத்து, ஐந்தாம் சார்லஸ் சத்தியத்தின் ஒளியை நிராகரிக்க முடிவுசெய்தார். (61)GCTam 178.3

    லுத்தருக்கெதிராக வடிவமைக்கப்பட்ட திட்டங்களைப்பற்றிய வதந்திகள் அந்த நகரம் முழுவதிலும் பெரும் உணர்ச்சிப்பெருக்கை உண்டுபண்ணினது. சீர்திருத்தவாதிக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தனர். ரோமன் கத்தோலிக்க சபையின் ஊழல்களை வெளிக்காட்டுபவர்களுக்கெதிராக நடத்தப்படும் நம்பிக்கை துரோகமிக்க கொடுமைகளை அறிந்த இவர்கள், அவரை பலியிடப்படும்படி விட்டுவிடக்கூடாது என்று தீர்மானித்தனர். நூற்றுக்கணக்கான மேன்மக்கள் அவரைப் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அரசின் இந்தச் செய்தி, ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தின் கட்டுப்படுத்தும் வல்லமைக்குக் கீழ்ப்படியும் பலவீனமுள்ளதாக நிரூபிக்கப்பட்டுவிட்டதென்று பகிரங்கமாக எதிர்த்தவர்கள் சிலர் மட்டுமல்ல. வீட்டு வாசல்களிலும் பொது இடங்களிலும் லுத்தரைப் பழித்தும் ஆதரித்தும் அறிக்கைகள் ஒட்டப்பட்டன. “ராஜா சிறுபிள்ளையாய் இருக்கும் தேசமே, உனக்கு ஐயோ!” (பிரசங்கி 10:16) என்ற ஞானியின் பொருள் பொதிந்த வார்த்தை அவைகளில் ஒன்றில் எழுதப்பட்டிருந்தது. ஜெர்மன் நாடெங்கிலும் லுத்தருக்குச் சாதகமாக உண்டான பெரும்பான்மை மக்களின் உற்சாகம் லுத்தருக்கு ஏதாவது அநீதி இழைக்கப்பட்டால், அது பேரரசின் சமாதானத்தை ஆபத்துக்குள்ளாக்கிவிடுவதுடன் சிங்காசனத்தின் ஸ்திரத் தன்மையையுங்கூடக் குலைத்துவிடும் என்று பேரரசனையும் விசாரணைக்குழுவையும் உணர்த்தியது. (62)GCTam 179.1

    சீர்திருத்தவாதியைப் பற்றி நன்கு அறிந்த தனது உள்உணர்வுகளை கவனமாக மறைத்துவைத்திருந்த சாக்சோனியரான பிரெட்ரிக், அதே சமயத்தில் லுத்தரை மிகுந்த விழிப்புடன் களைப்பில்லாமல் காவல் செய்திருந்து, அவரது போக்குவரத்தையும், அவரது எதிரிகளின் போக்கு வரத்தையும் கண்காணித்திருந்தார். ஆனால் லுத்தரின்மீதிருந்த தங்களின் அனுதாபத்தை மறைக்காமலிருந்த ஏராளமானவர்கள் இருந்தனர். சுயாதீனர்களும் சபை நிர்வாகிகளுமாக இருந்த இளவரசர்கள், பிரபுக்கள், பெரும் வியாபாரிகள் மற்றும் சில குறிப்பிட்டவர்களால் லுத்தர் சந்திக்கப்பட்டார். வந்த எல்லோருக்கும் இடம்கொடுக்க லுத்தரின் அறை மிகச் சிறியதாக இருந்தது என்று ஸ்பாலத்தீன் என்பவர் எழுதினார்.-Martyn, vol. 1, p. 404. அவர் மனிதனைவிட மேலானவர் என எண்ணி, மக்கள் அவரைப் பார்த்தனர். அவரது கோட்பாடுகளின் மீது விசுவாசமற்றவர்களுங்கூட, தனது மனசாட்சியை மீறுவதைவிட வீர மரணத்தை அடைவதுமேல் என எண்ணின அவரது உயர்ந்த நேர்மையைக்கண்டு போற்றினர். (63)GCTam 179.2

    ரோமன் கத்தோலிக்க சபையுடன் சமரசம் செய்துகொள்ளும் சம்மதத்தை லுத்தரிடமிருந்து பெற்றிட ஆர்வமிக்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. அவர் சபைக்கும் ஆலோசனைக் குழுக்களுக்கும் எதிரான தீர்ப்பைப் பிடிவாதமாகப் பற்றிக்கொண்டிருந்ததால், விரைவில் பேரரசிலிருந்து நீக்கம்செய்யப்படுவார் அப்படி நிகழ்ந்தபின், அவருக்குப் பாதுகாப்பு இருக்காது என்று மேன்மக்களும், இளவரசர்களும் அவருக்கு எடுத்துரைத்தார்கள். எதிர்ப்பு இல்லாமல் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கமுடியாது அப்படியிருக்கும்போது ஆபத்து உண்டாகும் என்ற பயம் என்னைக் கர்த்தரிடமிருந்தும் சத்தியமாகிய தெய்வீக வார்த்தையிடமிருந்தும் பிரிக்கவேண்டியது என்ன? இல்லை. அதற்குப் பதிலாக நான் எனது உடலையும் இரத்தத்தையும் உயிரையுங்கூட கொடுத்துவிடுவேன் என்று லுத்தர் பதில் கூறினார்.- D’Aubigne, b. 7, ch. 10. (64)GCTam 180.1

    பேரரசனின் நியாயத்தீர்ப்புக்குப் பணியும்படியும், அப்படிச் செய்தால், அதன்பின் அவருக்கு எந்தவிதமான பயமும் உண்டாகாது என்றும்கூறி, அவர் அழைக்கப்பட்டார். அதற்குப் பதிலாக, முழு இதயத்துடன் பேரரசரும் இளவரசர்களும் மிகவும் எளியவர்களுமான கிறிஸ்தவர்களும் எனது எழுத்துக்களைச் சோதித்துத் தீர்ப்புச் செய்யட்டும். அப்போது நான் சம்மதிக்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை—அவர்கள் தேவனுடைய வார்த்தைகளை அவர்களது வழிகாட்டியாக எடுத்துக்கொள்ளவேண்டும். மனிதர்கள் அதற்கு கீழ்ப்படிவதைத்தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை. எனது மனசாட்சி அந்த வார்த்தையையே சார்ந்திருக்கிறது. அதன் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்ட ஒருவனாக நான் இருக்கிறேன் என்றார்.— Ibid., b. 7, ch. 10. (65)GCTam 180.2

    நான் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடத்துதலை விட்டு விலகிக்கொள்ளவும், என்னையும் எனது உயிரையும் பேரரசரின் முடிவிற்கு விட்டுவிடவும் சம்மதிக்கிறேன்.-Ibid., b. 7, ch. 10. ஆனால் தேவனுடைய வார்த்தையை விட்டுவிட ஒருபோதும் சம்மதிக்கமாட்டேன் என்றார். மறுபடியும் அவர் ஒரு பொதுக்குழுவின் முடிவுக்குப் பணிய விருப்பமுள்ளவராக இருப்பதாகவும், ஆனால் அந்தக்குழு தேவனுடைய வார்த்தையின்படிதான் முடிவுசெய்ய வேண்டும் என்ற நிபந்தனையையும் கூறினார். தேவனுடைய வார்த்தையையும் விசுவாசத்தையும் சம்பந்தப்பட்டவரையில், போப்புவை ஆதரிக்கிற இலட்சக்கணக்கான குழுக்கள் அவருக்கு இருந்தபோதிலும், ஒவ்வொரு கிறிஸ்தவனும் போப்புவைப்போலவே தனக்குத்தானே நல்ல நீதிபதியாக இருக்கமுடியும் என்று அவர் மேலும் கூறினார்.-Martyn, vol. 1, p. 404. இறுதியில் அவரது எதிரிகளும் நண்பர்களும் ஒப்புரவாவதற்காக மேற்கொண்டுசெய்யப்படும் முயற்சிகளினால் எவ்விதமான பயனும் உண்டாகப்போவது இல்லை என்று உணர்த்தப்பட்டனர். (66)GCTam 180.3

    ஒரு நிலையிலாவது சீர்திருத்தவாதி விட்டுக்கொடுத்திருந்தால், சாத்தானும் அவனது அணியினரும் வெற்றியடைந்திருப்பார்கள். ஆனால் அசையாத உறுதிமிக்க அவரது விசுவாசம்தான் சபைக்கு விடுதலையைக் கொண்டுவரும் கருவியாகவும், ஒரு புது யுகத்தின் ஆரம்பமாகவும் இருந்தது! மதம் சம்பந்தப்பட்ட காரியங்களில் தனக்கென்று சிந்தித்துச் செயலாற்றத் துணிந்த இந்த ஒருமனிதனின் செல்வாக்கானது சபையையும், உலகத்தையும் அவரது காலத்தில் மட்டுமின்றி, எதிர்காலத் தலைமுறைகளிலும் தொடர்ந்தது. அவரது உறுதியும் நேர்மையும் காலத்தின் முடிவுவரை இதுபோன்ற அனுபவத்திற்குள் கடந்துசெல்ல உள்ள அனைவரையும் பலப்படுத்தும். தேவனுடைய வல்லமையும் இராஜரீக மேன்மையும், மனிதர்களின் ஆலோசனைகளுக்கும் சாத்தானின் பலமிக்க வல்லமைக்கும் மேலாக உயர்ந்து நின்றது. (67)GCTam 181.1

    பேரரசனின் அதிகாரத்தினால், லுத்தர் தனது வீட்டிற்குச் செல்லும் கட்டளையைப் பெற்றார். பழிவாங்கப்படுதல் தன்னைப் பின்தொடருமென அறிந்தார். பாதைநெடுகிலும் அவரை அச்சுறுத்தும் மேகங்கள் படர்ந் திருந்தன. ஆனால் அவர் வோம்ஸ் நகரைவிட்டுப் புறப்பட்டபோது, அவரது இதயம் மகிழ்ச்சியினாலும் துதியினாலும் நிறைந்திருந்தது. போப்புவை விடிவெள்ளியாக வைத்திருந்தேன் என்று சாத்தான் தானே கூறியிருந்தான். ஆனால் கிறிஸ்து அதில் ஒரு விரிசலான பெரும் பிளவை உண்டுபண்ணி, சாத்தானைவிட அவரே வல்லமை உள்ளவர் என்பதை அறிக்கைசெய்யும்படி அவன் வற்புறுத்தப்பட்டான்.—D'Aubigne, b. 7, ch. 11. (68)GCTam 181.2

    தனது உறுதியை, கலகம்செய்யும் தன்மை என்று பேரரசர் தவறாக எண்ணிவிடக்கூடாது என்ற லுத்தரின் வாஞ்சையை அவர் பேரரசனுக்கு எழுதினார். வாழ்விலும் சாவிலும், மனிதனைப் பிழைக்கவைக்கும் தேவனுடைய வார்த்தை ஒன்றைத்தவிர வேறு எதற்கும் எந்தவிதமான மறுப்பும் இன்றி பேரரசராகிய உமது கட்டளைக்கு, அது நல்லதானாலும், கெட்டதானாலும் முழு இதயத்துடன் கீழ்ப்படிய நான் தயாராக இருக்கிறேன். என் எண்ணங்களை அறிகின்ற தேவன் இதற்கு எனது சாட்சியாக இருக்கிறார் என்று கூறினார். இந்த வாழ்க்கையிலுள்ள சகல காரியங்களிலும் எனது நேர்மை அசையாததாக இருக்கும், ஏனெனில் இவைகளில் உள்ள நஷ்டமும் லாபமும் இரட்சிப்பைப் பொறுத்தவரை ஒன்றுமில்லாததாக உள்ளது. ஆனால் நித்திய ஜீவனைப்பற்றிய காரியங்களில் மனிதனுக்கு மனிதன் அடிமையாக இருக்கவேண்டும் என்பது தேவனது சித்தத்திற்கெதிரானது. ஆவிக்குரிய காரியங்களில் கீழ்ப்படிதல் என்பது உண்மையான தொழுகையாக உள்ளது. அது சிருஷ்டிகருக்கு மட்டுமே செலுத்தப்படவேண்டும் என்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.--Ibid., b. 7, ch. 11. (69)GCTam 181.3

    வோம்ஸ் நகரிலிருந்து திரும்பிய பயணத்தில் லுத்தருக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பானது அவர் புறப்பட்டுச்சென்றபோது கொடுக்கப்பட்டதைவிட அதிகமாக இருந்தது. மிகமேலான சபைப் பிரசங்கிகள் சமூக நீக்கம் செய்யப்பட்ட அந்த சந்நியாசியை வரவேற்றனர். பேரரசனால் மறுக்கப்பட்ட அந்த மனிதனை, நாட்டின் அதிபதிகள் சிறப்பித்தனர். அவர் பேசும்படி வற்புறுத்தப்படவே, அரசாங்கத் தடை உத்தரவு இருந்தபோதிலும், மறுபடியும் பிரசங்கப்பீடத்தின்மீது ஏறினார். தேவனுடைய வார்த்தை சங்கிலியால் கட்டப்பட நான் ஒருபோதும் வாக்குறுதி செய்யவில்லை. இனிமேலும் அப்படிச் செய்யமாட்டேன் என்று அவர் கூறினார்.-Martyn, vol. 1, p. 420. (70)GCTam 182.1

    அவர் வோம்ஸ் நகரைவிட்டுச்சென்ற சில நாட்களுக்குள், போப்புமார்க்கவாதிகள் லுத்தருக்கு எதிராக ஒரு சட்டத்தைப் பிறப்பிக்கும்படி, பேரரசனை மேற்கொண்டனர். அதில், “சந்நியாசியின் வடிவின் கீழ் சாத்தான் இருக்கிறான்” என்று கண்டனம் செய்யப்பட்டார்.—D'Aubigne, b. 7, ch. 11. அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த பாதுகாப்பு நடத்துதல் முடிவுக்கு வந்ததும், அவரது ஊழியத்தைத் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டுமென்ற கட்டளை உண்டானது. ஒருவரும் அவருக்கு இடம் கொடுக்கவோ, உணவோ தண்ணீரோ கொடுக்கவோ, வார்த்தையினாலோ செயலினாலோ, பொதுவாகவோ தனிப்பட்ட விதமாகவோ, உதவவோ தாங்கவோ கூடாது என்று எல்லோரும் விலக்கப்பட்டனர். அவர் எங்கே இருந்தாலும் அவரைப் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கவேண்டும். முடிவாக இந்தக் கட்டளைக்கு விரோதமாகச் செயல்படத்துணியும் அனைவரும் இதிலுள்ள தண்டனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று எழுதப்பட்டது. சாக்சோனியத் தேர்தல் அதிகாரியும் லுத்தரின் நெருங்கிய நண்பர்களுமான இளவரசர்களும் அவர் வோம்ஸ்நகரை விட்டுப் புறப்பட்டுச் சென்றதும் தாங்களும் புறப்பட்டுச் செல்லவே, விசாரணைக்குழு தன் விருப்பப்படி செய்துகொள்ளும் அனுமதியைப் பேரரசனிடமிருந்து கட்டளையாகப் பெற்றது. இப்பொழுது ரோமன் கத்தோலிக்கர்கள் வெற்றியடைந்தவர்களாக இருந்தனர். சீர்திருத்தத்தின் தலைவிதியின்மீது முத்திரை வைக்கப்பட்டுவிட்டதாக ரோமன் கத்தோலிக்கர்கள் எண்ணினர். (71)GCTam 182.2

    ஆபத்து நிறைந்த இந்த நேரத்தில், தேவன் அவரது ஊழியக்காரன் தப்பிச்செல்வதற்காக ஒரு வழியை ஏற்பாடு செய்திருந்தார். வியப்புமிக்க ஒரு கண் லுத்தரின் நடையைப் பின்பற்றி, ஒரு உண்மையும் மேன்மையுமிக்க இதயம் அவரைக் காக்கத் தீர்மானித்திருந்தது. லுத்தரின் மரணத்தைவிடக் குறைவான ஒன்றினாலும் ரோமன் கத்தோலிக்க நிர்வாகம் திருப்தியடையாது என்பது தெளிவாக இருந்தது. அவரை மறைத்துவைப்பதின் மூலமாக மட்டுமே, சிங்கத்தின் வாயிலிருந்து அவரைப் பாதுகாக்கமுடியும். சீர்திருத்தவாதியின் பாதுகாப்பிற்கான ஒரு திட்டத்தை ஏற்பாடுசெய்ய சாக்சோனிய பிரெட்ரிக்கிற்கு தேவன் ஞானத்தைக் கொடுத்தார். உண்மையான நண்பர்களின் ஒத்துழைப்புடன் தேர்தல் அதிகாரியின் நோக்கம் செயல்படுத்தப்பட்டு, லுத்தர் அவரது நண்பர்களிடமிருந்தும், எதிரிகளிடமிருந்தும் மிகத்திறமையாக ஒளித்துவைக்கப்பட்டார். அவரது வீட்டை நோக்கிய பயணத்தில் அவர் முற்றுகையிடப்பட்டு, அவரது துணைவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு, தனிமையான மலைக்கோட்டையாயிருந்த வார்ட்பர்க் என்னும் கோட்டைக்குக் காடுகளின் வழியாக வேகமாகக் கடத்திச்செல்லப்பட்டார். அவரைச் சிறைப்பிடித்ததும் மறைத்ததும் மிகுந்த இரகசியமாக இருந்ததால், அவர் எங்கு கொண்டுசெல்லப்பட்டார் என்பது சில காலத்திற்கு பிரெட்ரிக்கினாலும் அறியமுடியாததாக இருந்தது. இந்த அறியாமை திட்டமிடப்பட்டதாக இருக்கவில்லை. லுத்தரின் இருப்பிடம் தேர்தல் அதிகாரிக்குத் தெரியாமல் இருக்கும்வரை அவரால் எதையும் வெளிப்படுத்த இயலவில்லை. சீர்திருத்தவாதி பாதுகாப்பாக இருக்கிறார் என்பதைப்பற்றி தன்னில்தானே திருப்தியடைந்து, இந்த அறிவுடன் அவர் சமாதானம் அடைந்தார். (72)GCTam 183.1

    இளவேனில்காலம், வசந்தகாலம், இலையுதிர்காலம் ஆகியவை கடந்துசென்று குளிர்காலம்வந்தது. லுத்தர் இன்னும் சிறைக்கைதியாகவே இருந்தார். சுவிசேஷத்தின் ஒளி அணையப்போவதுபோல் தோன்றுவதைக் கண்டு, அலேயாண்டரும் அவரது கட்சிக்காரர்களும் வெற்றிச் சிரிப்புச் சிரித்தனர். இதற்குப் பதிலாக சீர்திருத்தவாதி சத்தியத்தின் சேமிப்புக்கிடங்கிலிருந்து தனது விளக்கை எண்ணெயால் நிரப்பிக்கொண்டிருந்தார். அதன் வெளிச்சம் அதிகமான ஒளியுடன் பிரகாசிக்க வேண்டியதாக இருந்தது. (73)GCTam 183.2

    போராட்டங்களின் வெப்பம், கலக்கம், ஆகியவைகளிலிருந்து விடுபட்ட லுத்தர், சிலகாலம் வார்ட்பர்க் கோட்டையிலுள்ள நட்பின் பாதுகாப்பில் மகிழ்ச்சியுடன் இருந்தார். அமைதியாகவும் ஓய்வாகவும் ஓய்வாகவும் இருப்பதில் அவரால் அதிக நாட்கள் திருப்தியைக் காண இயலவில்லை. உழைப்பிலும் போராட்டங்களிலும் பழகிப்போன வாழ்க்கையை உடையவராக இருந்த அவரால், செயலாற்றாமல் இருப்பதைச் சகிக்க இயலவில்லை. அந்தத் தனிமையான நாட்களில் சபையின் நிலைமை அவர்முன் தோன்றவே. அவர் நம்பிக்கையிழந்து, ஐயோ, அவரது கோபத்தின் இந்தப் பின்நாட்களில் கர்த்தருக்குமுன் ஒரு சுவரைப்போல் நின்று இஸ்ரவேலைக்காக்க ஒருவரும் இல்லையே என்று அவர் கதறி அழுதார்.- Ibid., b. 7, ch. 11. மறுபடியும் அவரது எண்ணங்கள் அவரைப்பற்றித் திரும்பவே, இந்தப் போராட்டத்திலிருந்து விடுபட்டு கோழையாக இருப்பதாக அவர்மீது குற்றம்சாட்டப்படுமே என்று எண்ணி பயந்தார். அவரது மந்தமான தன்மைக்காகவும் சுயநலமிக்க பழக்கங்களுக்காகவும் அவர் தன்னைத் தான் நிந்தித்தார். அதேசமயம் ஒரு மனிதனால் செய்துமுடிக்கமுடியாது என்று தோன்றியதைவிட அதிகமாகத் தினமும் அவர் நிறைவேற்றியிருந்தார். அவரது எழுதுகோல் ஒருபோதும் ஓய்ந்திருக்கவில்லை. மூடப்பட்டதென்று அவரது எதிரிகள் தங்களுக்குள் பெருமையடித்துக் கொண்டிருந்த வேளையில், அவர் மேலும் ஆக்கப்பூர்வமாகச் செயலாற்றிக்கொண்டிருக்கிறார் என்கிற ஆதாரப்பூர்வமான சான்றுகளைக் கண்டு, அவர்கள் வியப்பும் குழப்பமும் அடைந்தனர். அவரது எழுதுகோலிலிருந்து புறப்பட்ட கட்டுக்கட்டான கைப்பிரதிகள் ஜெர்மனி முழுவதிலும் சுற்றிவந்தன. புதிய ஏற்பாட்டை, அவரது சொந்த மொழியான ஜெர்மன் மொழியில், மொழிபெயர்த்ததின் மூலமாக, அவர் தனது நாட்டு மக்களுக்கு ஒரு மிகமுக்கியமான சேவையைச் செய்தார். அவரது காலத்திலிருந்த பாவங்களையும் தவறுகளையும் கண்டிக்க அவர் ஏறத்தாழ ஒருவருடகாலம் அவரது பத்மு பாசறையிலிருந்து சுவிசேஷத்தை அறிவிப்பதைத் தொடர்ந்தார். (74)GCTam 184.1

    லுத்தரின் எதிரிகளின் கோபத்திலிருந்து அவரைக்காப்பதற்காகவும், இந்த மிக முக்கியமான வேலையைச்செய்ய அமைதியான ஒரு காலம் அவருக்குக் கொடுக்கப்படவேண்டும் என்பதற்காகவும், தேவன் அவரது ஊழியக்காரரை அவரது பொது வாழ்க்கையிலிருந்து பின்னிழுக்கவில்லை. இவைகளைவிட விலைமதிப்புமிக்க பலன்கள் பெற்றுக்கொள்ளப்படவேண்டியதிருந்தன. தனிமையும் மறைவுமான மலைப்புற ஒதுக்கிடத்தில் உலகப்பிரகாரமான ஆதரவுகளிலிருந்து லுத்தர் நீக்கப்பட்டு, மனிதப்போற்றுதல்களிலிருந்து மூடப்பட்டார். வெற்றியினால் அடிக்கடி உண்டாகக்கூடிய அகந்தையில் இருந்தும் தன்னைப்பற்றிய நம்பிக்கையிலிருந்தும் இப்படியாக அவர் காக்கப்பட்டார். திடீரென்று உயர்த்தப்பட்ட தலைசுற்றும் உயரத்தில் பாதுகாப்பாக நடக்கும்படி, பாடுகளினாலும், சிறுமையினாலும் அவர் ஆயத்தம் செய்யப்பட்டார். (75)GCTam 184.2

    சத்தியம் கொண்டுவரும் விடுதலையில் மனிதர்கள் மகிழும் போது, தவறு, மூடநம்பிக்கையாகிய சங்கிலிகளைத் துண்டிக்கும்படி தேவன் ஏற்படுத்தினவர்களை உயர்த்திப்பேச மனிதர்கள் தூண்டப் படுகின்றனர். மனிதர்களின் எண்ணங்களும் வாஞ்சையும், தேவனிடத்தில் இருந்து திருப்பப்பட்டு, மனித ஏதுகரங்களின்மீது வைக்கப்படும்படி சாத்தான் வகைதேடுகிறான். அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்தும் தெய்வீக ஏற்பாடுகளின் தரத்தை அறியாமல் விட்டுவிட்டு, அவைகளைச் செயல்படுத்தும் சாதாரணக் கருவிகளை சிறப்பிக்கும்படி அவன் அவர்களை நடத்துகிறான். இவ்விதமாக அடிக்கடி போற்றப்படும், பக்திகாட்டப்படும் சமயத் தலைவர்கள், தாங்கள் தேவனைச் சார்ந்திருக்கும் பார்வையை இழந்து, தங்கள்மீது நம்பிக்கைவைக்கும்படி நடத்தப்படுகின்றனர். இதன் விளைவாக, வழிகாட்டுதலுக்காக தேவனுடைய வார்த்தையைப் பார்ப்பதற்குப் பதிலாகத் தங்களை பார்க்கும் மனிதர்களின் மனங்களையும் மனசாட்சிகளையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அவர்கள் வகைதேடுகின்றனர். சீர்திருத்தத்தின் பணியானது அதன் ஆதரவாளர்கள் செயல்படுத்தும் இப்படிப்பட்ட ஆவியின் காரணமாக வளர்ச்சி குன்றிவிடுகிறது. இந்த ஆபத்திலிருந்து சீர்திருத்தத்தின் காரியங்களை தேவன் காப்பார். இந்தப் பணியானது மனிதனின் அடையாளத்தைப்பெறாமல், தேவனின் அடையாளத்தைப் பெறவேண்டும் என்று அவர் விரும்பினார். மனிதர்களின் கண்கள், லுத்தர் சத்தியத்தை விளக்குபவர் என்று அவரைப் பார்த்தன. கண்கள் யாவும் சத்தியத்தை விவரிக்கிற நபராக லுத்தரைப் பார்த்தன. ஆனால் அவைகள் சத்தியத்தின் நித்தியகால ஆசிரியராயிருப்பவரையே பார்க்கும்படியாக, லுத்தர் அவர்களின் பார்வைக்குத் தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டார். (76)GCTam 185.1