Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாபெரும் ஆன்மீகப் போராட்டம்!

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    27—நவீன எழுப்புதல்கள்!

    (மூலநூல் : The Great Controversy, பக்கம்: 461—478)

    ங்கெல்லாம் தேவனுடைய வார்த்தை விசுவாசத்துடன் பிரசங் கிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் தெய்வீக ஆதி (Origin)க்கு அத்தாட்சி தரும் பலன்கள் அதனைப் பின்தொடர்ந்துள்ளன. தேவஆவியானவர் அவரது ஊழியக்காரரின் தூதுடன் சேர்ந்துசெல்லவே, அந்த வார்த்தை வல்லமையுடன் இருந்தது. பாவிகள் தங்களது மனச்சாட்சிகள் எழுப்பப்பட்டதை உணர்ந்தனர். உலகத்திலே வந்து, எந்த ஆத்துமாவையும் பிரகாசிப்பிக்கிற அந்த ஒளி ஆத்துமாக்களின் இருதய அறைகளை ஒளிப்படுத்தியது. இருளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த காரியங்கள் வெளியரங்கமாயின. அவர்களது மனங்கள் இருதயங்கள் ஆகியவைகளை ஆழ்ந்த மன உணர்த்துதல்கள் பற்றிக்கொண்டன. பாவம் நீதி வரவிருக்கும் நியாயத் தீர்ப்பு ஆகியவைபற்றிய நம்பிக்கையை அடைந்தனர். யேகோவாவின் நீதியைப்பற்றிய புலனுணர்வை அடைந்து, இருதயங்களை ஆராய்பவருக்குமுன் தங்களுடைய குற்றங்களுடனும் அசுத்தத்தன்மையுடனும் தோன்றவேண்டியிருப்பதை உணர்ந்தனர். “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” (ரோமர் 7:24) என்று வேதனையுடன் அழுதனர். மனிதர்களின் பாவத்திற்காக முடிவற்ற விதத்தில் செலுத்தப்பட்ட தியாகபலியுடன் கல்வாரிச் சிலுவை வெளிப்படுத்தப்பட்டது. அவர்களுடைய மீறுதல்களுக்கான பாவநிவாரண மாக, மனிதனைத் தேவனுடன் ஒப்பபுரவாக்கக்கூடிய கிறிஸ்துவின் புண்ணியங்கள் மட்டுமே இருக்கிறதை அவர்கள் கண்டனர். உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியை அவர்கள் விசுவாசத்துடனும் தாழ்மையுடனும் ஏற்றுக்கொண்டனர். கடந்தகாலப் பாவங்களுக்கான பாவமன்னிப்பை அவர்கள் இயேசுவின் இரத்தத்தின் மூலமாகப் பெற்றிருந்தனர். (1)GCTam 537.1

    இந்த ஆத்துமாக்கள் மனந்திரும்புதலுக்குத் தேவையான கனியைக் கொண்டுவந்தன. அவர்கள் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றுப் புதிய வாழ்க்கையை நடத்துவதற்கென்று எழுந்தனர். கிறிஸ்து இயேசுவிற்குள் புதியவர்களாக இருந்தார்கள். கடந்தகால பழைய இச்சையின்படியான வேஷத்தை அணிந்துகொண்டவர்களாக அவர்கள் இருக்கவில்லை. தேவகுமாரனின்மீதுள்ள விசுவாசத்தினால் அவரது சுபாவத்தைப் பிரதிபலித்துக்காட்டவும், அவர் தூய்மையானவராக இருப்பதுபோல், அவர்களும் தூய்மையானவர்களாக இருக்கவும், அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்களாக இருந்தனர். ஒரு சமயத்தில் அவர்கள் எவைகளை வெறுத்திருந்தார்களோ அவைகளை அவர்கள் இப்பொழுது நேசித்தனர். ஒரு நேரத்தில் அவர்கள் எவைகளை நேசித்திருந்தார்களோ அவைகளை அவர்கள் இப்போது வெறுத்தனர். அகந்தையுடன் தன்னைத்தான் பெரியவன் என்று எண்ணியிருந்தவர்கள், தாழ்மையுடன் எளிமையும் உள்ளவர்க ளானார்கள். வீணரும் கர்வமுள்ளவர்களுமாக இருந்தவர்கள், அக்கரை உள்ளவர்களும், துடுக்குத்தனம் இல்லாதவர்களுமானார்கள். தேவ நிந்தனையாளர்களாக இருந்தவர்கள் பக்தியுள்ளவர்களானார்கள். மதுபானப்பிரியர் அதை விட்டுவிட்டனர். அசுத்தமானவர்கள் தூய்மை உள்ளவர்களானார்கள். வீணான உலக அலங்காரங்கள் அனைத்தும் ஒதுக்கிவைக்கப்பட்டன. “மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது”-1பேதுரு 3:3—4. (2)GCTam 538.1

    இருதயத்தை ஆழமாக ஆராய்வதுடன் தாழ்மையையும் எழுப்புதலையும் அது கொண்டுவந்தது. கிறிஸ்துவின் இரத்தத்தைக் கிரையமாகப் பெற்றுக்கொள்ளும்படி பாவிக்குக் கொடுக்கப்பட்ட அக்கரைமிக்க பக்திவிநயமான வேண்டுகோளினால், அவை எடுத்துக்காட்டப்பட்டன. ஆத்துமாக்களின் இரட்சிப்பிற்காக ஆண்களும் பெண்களும், தேவனிடம் ஜெபித்துப் போராடினர். சுயமறுப்பு தியாகம் ஆகியவைகளை விட்டுப் பின்வாங்காமல், கிறிஸ்துவிற்காக நிந்தையையும் சோதனையையும் அனுபவிக்கத் தகுதி உடையவர்களாக எண்ணப்பட்டதற்காக மகிழ்ந்த ஆத்துமாக்களில், அப்படிப்பட்ட எழுப்புதல்களின் கனிகள் காணப்பட்டன. கிறிஸ்துவின் பெயரை அறிக்கை செயதுகொண்டிருந்தவர்களின் வாழ்க்கையில் உண்டான மாற்றத்தை மனிதர்கள் கண்டனர். அவர்களது செல்வாக்கினால் அந்தச் சமுதாயம் நன்மை அடைந்தது. அவர்கள் கிறிஸ்துவுடன் சேர்ந்து, நித்திய ஜீவனுக்கான அறுவடைக்கென்று ஆவிக்கானவைகளுக்காக விதைத்தனர். (3)GCTam 538.2

    “இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் துக்கப்பட்டதற்காக அல்ல, மனந்திரும்புகிறதற்கேதுவாகத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடிக்கு, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே. தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது. பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்கமடைந்ததுண்டே; அது உங்களிடத்தில் எவ்வளவு ஜாக்கிரதையையும், குற்றந்தீர எவ்வளவு நியாயஞ்சொல்லுதலையும், எவ்வளவு வெறுப்பையும், எவ்வளவு பயத்தையும், எவ்வளவு ஆவலையும், எவ்வளவு பக்திவைராக்கியத்தையும், எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கிற்று. இந்தக் காரியத்திலே நீங்கள் எல்லாவிதத்திலும் உங்களைச் சுத்தவான்களென்று விளங்கப்பண்ணினீர்கள்”-2 கொரி. 7:9—11. (4)GCTam 539.1

    இதுதான் தேவஆவியின் செயலின் பலனாக உள்ளது! சீர்திருத்தம் செயல்படாதவரை உண்மையான மனந்திரும்புதலுக்கேதுவான சான்று இருக்காது. அவன்தான் ஆணையிட்டதைத் திரும்ப நடப்பித்து அவன் கொள்ளையடித்ததைத் திரும்பக்கொடுத்து, அவனுடைய பாவங்களை அறிக்கைசெய்து, தேவனையும் உடன் மனிதர்களையும் நேசிக்கும்போது, அந்தப் பாவியானவன் தான் தேவனுடன் சமாதானத்தைக் கண்டுவிட்டதாக நிச்சயித்துக்கொள்ளலாம். கடந்துபோன வருடங்களில் சமய எழுப்புதலின் காலங்களைப் பின்தொடர்ந்த விளைவுகள், அப்படிப்பட்டவைகளாக இருந்தன. அவர்களது கனிகளினால் நிதானிக்கப்பட்டபோது, அவர்கள் மனிதர்களின் இரட்சிப்பு, மனித இனத்தை உயர்த்துதல் என்னும் செயல்களுக்காக தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என அறியப்பட்டிருந்தனர். (5)GCTam 539.2

    ஆனால் ஆரம்ப நாட்களில் தேவனுடைய ஊழியக்காரர்களுடன் தொடர்ந்து சென்ற தெய்வீகக் கிருபையின் வெளிக்காட்டுதலுக்கும், தற்காலத்திலுள்ள அநேக எழுப்புதல்களுக்குமிடையில், தெரியக்கூடிய அளவிற்கு வேற்றுமை காணப்பட்டது. பரந்த அளவிலான ஆர்வம் எழுப்பப் பட்டுள்ளது என்பது மெய்தான். அநேகர் மனமாறயியிருக்கின்றனர். ஏராளமானவர்கள் ஆலயங்களுக்குச் செல்லுகின்றனர். அப்படியிருந்தாலும் அவைகளின் விளைவுகள் அதற்கு இசைவான உண்மையான ஆவிக்குரிய வாழ்க்கையை அதிகரித்திருக்கிறது என்னும் நம்பிக்கையை அளிக்கவில்லை. சற்று நேரத்திற்குப் பிரகாசித்து எரியும் ஒளி, முன்னிருந்த இருளைவிட, அதிகமான இருளுக்குள் அணைந்துவிடுகிறது. (6)GCTam 539.3

    கற்பனைகளைத் தூண்டும் வேண்டுகோள்கள், உணர்ச்சிகளைத் தூண்டிவிடுதல், புதிதும் திடுக்கிச்செய்யக்கூடியவைகளுமானவைகளை அனுபவிக்கும் ஆசையைத் தூண்டுதல் ஆகியவைகளால், மக்களால் விரும்பப்படும் எழுப்புதல்கள் நடத்தப்படுகின்றன. இவ்விதமாக மாறினவர்கள் வேதாகம சத்தியங்களைக் கவனிப்பதில் விருப்பமற்றவர்களாக உள்ளனர். இவர்கள் தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள் ஆகியவர்களின் சாட்சிகளில் விருப்பமற்றவர்களாக உள்ளனர். ஒரு தெய்வீக ஆராதனையில் ஏதாவதொரு வகையில் உணர்ச்சிகளின் கொந்தளிப்பு இல்லாதபோது, அது அவர்களுக்குக் கவர்ச்சி இல்லாததாக உள்ளது. உணர்ச்சியைத் தட்டி எழுப்பாத விவேகமிக்க விளக்கத்துடன் முன்வைக்கப்படும் ஒரு தூதானது, பிரதிபலிப்பை எழுப்புவதில்லை. தேவனுடைய வார்த்தையிலிருந்து உண்டாகும், அவர்களது நித்தியஜீவன் சம்பந்தப்பட்ட தெளிவான எச்சரிப்புகள் செவிசாய்க்கப்படாதவைகளாக உள்ளன.(7)GCTam 540.1

    உண்மையான மதம்மாறின ஒவ்வொரு ஆத்துமாவிற்கும், தேவனுடனுள்ள உறவும் நித்தியகாரியங்களும் வாழ்க்கையின் பெரும் காரியமாக இருக்கும். தேவனுக்குத் தங்களை அர்ப்பணிக்கும் ஆவி, மக்களால் விரும்பப்படும் சபைகளில் இன்று எங்கே காணப்படுகிறது? மதம்மாறினவர்கள் அவர்களுடைய அகந்தையையும் உலக நேசத்தையும்விட்டு விலகவில்லை. அவர்கள் அவர்களது மதமாற்றத்திற்குமுன், சுயத்தை மறுக்கவும் சிலுவை யைச் சுமக்கவும் தாழ்மையும் எளிமையுமான இயேசுவைப் பின்பற்றவும் விருப்பமற்றவர்களாக இருந்ததைப்போலவே இப்போதும் உள்ளனர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் சந்தேகப்படுபவர்களுக்கும் மதம் என்பது ஒரு விளையாட்டாகிவிட்டது. ஏனெனில் அதன் பெயரைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஏராளமானவர்கள், அதன் கொள்கைகளை அறியாதவர் களாக உள்ளனர். அநேக சபைகளில் இருந்து தெய்வபக்தியின் வல்லமை கிட்டத்தட்ட நீங்கியுள்ளது. வனபோஜனங்கள், சபை நாடகங்கள், சபை விழாக்கள், சிறந்த வீடுகள் தன்னை வெளிக்காட்டுதல் ஆகியவை தேவன் என்னும் நினைப்பை விரட்டி, நிலங்கள், பொருள்கள், உலகப்பிரகாரமான தொழில்கள் மனதைப் பற்றிக்கொள்ளவே, நித்தியமான காரியங்களின்மீதுள்ள ஆர்வம் அபூர்வமாக மனதின் கவனத்திற்கு வருகின்றன. (8)GCTam 540.2

    விசுவாசமும் பக்தியும், கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் போதும், இந்த சபைகளில் கிறிஸ்துவின் மெய்யான அடியார்கள் உள்ளனர். இந்த பூமியை தேவனின் இறுதி நியாயத்தீர்ப்பு சந்திக்க உள்ளது. அதற்குமுன் கர்த்தருடைய ஜனங்களுக்கிடையில், அப்போஸ்தலர்களின் காலத்திற்குப்பின் இதுவரை காணப்பட்டிராத விதத்திலுள்ள பண்டைய கால பக்தியை உடையதுபோன்ற எழுப்புதல் உண்டாகும். தேவனுடைய ஆவியும் வல்லமையும் அவரது ஜனங்களின்மீது ஊற்றப்படும். அப்படிப்பட்ட நேரத்தில், தேவனுடைய அன்பு, அவருடைய வார்த்தை ஆகியவைகளுக்குப் பதிலாக இந்த உலகத்தின்மீதுள்ள ஆசையால் நிரப்பப்பட்டிருக்கும் சபைகளைவிட அநேகர் தங்களைத் தாங்களாகவே வேறுபடுத்திக்கொள்ளுவார்கள். கர்த்தரின் இரண்டாம் வருகைக்கு என்று ஒரு ஜனங்கள் ஆயத்தப்படுத்தப்பட உள்ளனர். இதற்கென்று தேவனால் ஏற்படுத்தப்பட்ட மாபெரும் சத்தியங்கள் அறிவிக்கப்படும். அந்த நேரத்தில் போதகரும், ஜனங்களுமாகிய இரு சாராருமான அநேகர் அவைகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளுவார்கள். இந்த உழியத்திற்கு இடையூறு செய்ய ஆத்துமாக்களின் எதிரி விரும்புகிறான். அப்படிப்பட்ட ஒரு இயக்கத்திற்கான நேரம் வருமுன்பாக, ஒரு போலியான இயக்கத்தை அறிமுகம்செய்து, அதைத் தடைசெய்ய அவன் முயலுவான். வஞ்சகமிக்க அவனது வல்லமைக்குள் கொண்டுவரக்கூடிய சபைகளில் தேவனுடைய விசேஷமான ஆசீர்வாதம் பொழியப்பட்டுள்ளது என்று தோன்றும்படிச்செய்வான். பெரும் சமய ஆர்வம் என்று எண்ணும்படியானவைகள் வெளிக்காட்டப்படும். அந்த ஊழியம் வேறொரு ஆவியினுடையதாக இருக்கும்போது, தேவன் அவர்களுக்காக ஆச்சரியமான விதத்தில் செயலாற்றுகிறார் என்று திரள்கூட்டமானவர்கள் வெற்றிச்சிரிப்புச் சிரிப்பார்கள். கிறிஸ்தவ உலகத்தின்மீதுள்ள செல்வாக்கை மதம் என்னும் வெளிவேஷத்தினால் விரிவடையச்செய்ய சாத்தான் வகைதேடுவான். (9)GCTam 540.3

    கடந்த அரை நூற்றாண்டுகளில் நடந்துள்ள அநேக எழுப்புதல்களில், அதே செல்வாக்குகள்தான் செயலில் ஈடுபட்டிருக்கின்றன. அதைவிட அதிகமான அல்லது குறைவான அளவில் எதிர்காலத்திலுள்ள விசாலமான இயக்கங்களில் அது வெளிக்காட்டப்படும். தவறான வழியில் நடத்துவதற்குச் சரியாகப் பொருந்தக்கூடிய விதத்தில், சத்தியத்துடன் தவறும் கலக்கப்பட ஒரு உணர்ச்சிகளின் கொந்தளிப்பு உள்ளது. அப்படி இருந்தாலும் ஒருவரும் வஞ்சிக்கப்படவேண்டிய அவசியம் இல்லை. இந்த இயக்கங்களின் தன்மையை தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் தீர்மானிப்பது கடினமாயிருக்காது. வேதாகம சாட்சிகளை எங்கெல்லாம் மனிதர்கள் அலட்சியப்படுத்தி, சுயமறுப்பையும், உலகப்பிரகாரமான தன்மையை மறுப்பதையும் அவசிய மானதாக்குகின்ற ஆத்துமாவைச் சோதிக்கும் உண்மைகளை விட்டு விலகிச்செல்லுகிறார்களோ, அங்கெல்லாம் தேவனுடைய ஆசீர்வாதம் அருளப்படவில்லை என்று நாம் நிச்சயமுள்ளவர்களாக இருக்கலாம். அவர்களது கனிகளினால் அவர்களை அறிவீர்கள் என்று கிறிஸ்துதாமே கொடுத்திருக்கும் நியதி, இந்த இயக்கங்கள் தேவனுடைய ஆவியின் செயலினால் ஆனவை அல்ல என்பதற்குச் சான்றாக உள்ளது. (10)GCTam 541.1

    தேவன் அவரது வார்த்தையிலுள்ள சத்தியங்களில் தம்மைப் பற்றிய ஒரு வெளிப்படுத்துதலை மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார். அவைகளை ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும் அவை சாத்தானின் வஞ்சகங்களிலிருந்து தடுக்கும் ஒரு கேடயமாக உள்ளது. இந்தச் சத்தியங்களை அலட்சியம்செய்வதுதான் இப்பொழுது சமய உலகில் விசாலமாகப் பரவிக்கொண்டிருக்கும் தீமைகளுக்கான கதவைத் திறந்துகொண்டிருக்கிறது. தேவனுடைய கற்பனையின் இயல்பு அதன் முக்கியத்துவம் ஆகியவைபற்றிய பார்வை பெருமளவிற்கு இழக்கப்பட்டுள்ளது. தெய்வீகப்பிரமாணத்தின் சுபாவம், நித்தியத்துவம், அது கோரும் கடமைகள் ஆகியவைபற்றிய தவறான எண்ணம், மதமாற்றம் பரிசுத்தமாக்கப்படுதல் ஆகிவைகளில் தவறை நடப்பித்து, அதனால் சபையின் பக்தியின் தரம் தாழ்வடையும் விளைவை உண்டுபண்ணியிருக்கிறது. நமது காலத்திலுள்ள எழுப்புதல்களில், தேவனுடைய ஆவியும் வல்லமையும் காணப்படாமல் இருப்பதற்கான இரகசியம் இங்கு காணப்படவேண்டியதாக உள்ளது. (11)GCTam 542.1

    பலவேறுபட்ட சபைகளிலும் பக்திக்குப் பெயர் சிறந்தவர்கள் உள்ளனர். அவர்களால் இந்த உண்மை ஏற்கப்பட்டு, புலம்பப்பட்டுள்ளது. இப்போதுள்ள மத சம்பந்தமான அபாயங்களை பேராசிரியர் எட்வர்ட்ஸ் பார்க் என்பவர் திறமையுடன் முன்வைத்து இப்படிக் கூறுகிறார். “தெய்வீகப் பிரமாணத்தைப் பிரசங்கபீடம் வற்புறுத்தாமலிருப்பது ஆபத்துக்கு ஒரு ஆதாரமாக உள்ளது. கடந்துபோன நாட்களில் பிரசங்கபீடம் மனச்சாட்சியின் சத்தத்தின் எதிரொலியாக இருந்தது. நமது மிகச் சிறந்த பிரசங்கிமார்கள் தங்களது ஆண்டவரின் முன்மாதிரியைப் பின்பற்றி, பிரமாணத்திற்கும் அதன் கற்பனைகளுக்கும் பயமுறுத்தல்களுக்கும், முக்கியத்துவத்தைக் கொடுத்ததினால், அவர்களது பிரசங்கங்களுக்கும் ஒரு ஆச்சரியமான மகத்துவத்தைக் கொடுத்திருந்தனர். கற்பனை தெய்வீகப் பரிபூரணங்களின் மறுபடிவமாக உள்ளது. எந்த ஒரு மனிதன் கற்பனையை நேசிக்கவில்லையோ, அவன் சுவிசேஷத்தையும் நேசிக்காதவனாக இருக்கிறான். ஏனெனில் கற்பனையும், அதைப்போலவே சுவிசேஷமும், தேவனுடைய உண்மையான சுபாவத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறது என்னும் இரு பெரும் வழக்குச்சொற்களை அவர்கள் திரும்பத்திரும்பக் கூறி இருந்தனர். இந்த அபாயம் அதன் அளவிற்கும் மதிப்புக்குறைவிற்கும் தக்கதாக பாவத்தில் உள்ள தீமையைக் குறைவாகக் கணக்கிடும் மற்றொன்றுக்கு வழி நடத்துகிறது. (12)GCTam 542.2

    ஏற்கனவே பெயரிடப்பட்டுள்ள அபாயங்களுடன் இணைக்கப்பட்ட அபாயமாக தேவனுடைய நியாயத்தைக் குறைவாக மதிப்பிடுதல் உள்ளது. தெய்வீக நியாயத்தைத் தெய்வீக அனுதாபத்திலிருந்து வடிகட்டிப் பிரித்து, அனுதாபத்தை ஒரு கொள்கையாக உயர்த்துவதைவிட, அதை நுண்ணுணர்வாக மூழ்கடிப்பது நவீன காலப் பிரசங்கபீடத்தின் தன்மையாக இருக்கிறது. புதிய தேவயியல் சம அளவுக் கண்ணாடி(சளைழ)ெ, தேவன் எவைகளை இணைத்திருக்கிறாரோ, அவைகளைக் கீழே போட்டுவிடுகிறது. தெய்வீகக் கற்பனை நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ எப்படி இருக்கிறது? அது நன்மையானதாகவே இருக்கிறது. அப்படியானால் நியாயம் நல்லது. அது கற்பனையை நடப்பிக்கும் ஒரு இயல்பாக இருக்கிறது. மனிதக் கீழ்ப்படியாமை பரந்தும் கீழ்த்தரமானதாகவும் இருக்கும். அளவை அனுசரித்து, தெய்வீக நியாயத்தையும் கற்பனையையும் தரக்குறைவாகக் கணக்கிடுதல் செய்யும் பழக்கத்தில் இருந்து, பாவநிவாரணத்தை ஏற்படுத்தியிருக்கும் கிருபையைத் தரக்குறைவாக மதிப்படும் பழக்கத்திற்குள், மனிதர்கள் எளிதில் சருக்கி விழுகின்றனர். இவ்வாறாக சுவிசேஷம் அதன் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் மனித மனங்களில் இழந்து, விரைவில் அவர்கள் வேதாகமத்தையே நடைமுறையில் ஒருபக்கமாக ஒதுக்கிவைத்துவிட ஆயத்தமாகின்றர். (13)GCTam 542.3

    கிறிஸ்து தமது மரணத்தினால் நியாயப்பிரமாணத்தை அழித்துவிட்டார் எனவே மனிதர்கள் அதற்குக் கீழ்ப்படியும் கட்டாயத்திலிருந்து விடுவிக்கப் பட்டிருக்கின்றனர் என்று அநேக மத போதகர்கள் உறுதிபடுத்துகின்றனர். சிலர் அதை பாரமான நுகமாகவே காண்பிக்கின்றனர். கட்டளைகளுக்கு அடிமைப் பட்டிருக்கிறபோது அதற்கு எதிராக அனுபவிக்கும்படி சுவிசேஷ த்தின்கீழ் விடுதலையை கொடுக்கிறார்கள். (14)GCTam 543.1

    ஆனால் தேவனுடைய பரிசுத்தமான கற்பனையைப்பற்றித் தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் அப்படிக் கருதவில்லை. “நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், விசாலத்திலே நடப்பேன்”- சங். 119:45. கிறிஸ்துவின் மரணத்திற்குப்பின் எழுதின அப்போஸ்தலனாகிய யாக்கோபு, நியாயப்பிரமாணத்தை “ராஜரீகப்பிரமாணம்” என்றும் “சுயாதீனப் பிரமாணம்” என்றும் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்கு அரை நூற்றாண்டிற்குப் பின்னர் வெளிப்படுத்தின விசேஷத்தை எழுதின யோவான்: “ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்” (வெளி. 22:14) என்றார். (15)GCTam 543.2

    கிறிஸ்து அவரது மரணத்தின் மூலமாக அவரது பிதாவின் கற்பனையை நீக்கிவிட்டார் என்பதான உரிமைபாராட்டுதலானது அஸ்திவார மில்லாததாக உள்ளது. கற்பனையை மாற்றுவதோ அல்லது ஒருபுறமாக நீக்கிவைப்பதோ சாத்தியமானதாக இருந்திருந்தால், அப்போது பாவத்தின் தண்டனையிலிருந்து மனிதனைக் காப்பாற்றுவதற்காகக் கிறிஸ்து மரித்திருக்க வேண்டிய அவசியமும் இருந்திருக்காது. கற்பனையை நீக்குவதற்குப் பதிலாகக் கிறிஸ்து மரித்தது, கற்பனை மாற்றப்படமுடியாதது என்பதற்குச் சான்றாக உள்ளது. “நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களை யானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளா தேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்தி லுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்தேயு 5:17,18) என்று அவர் கூறினார். “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது” (சங். 40:8) என்று அவர் தம்மைப்பற்றி அறிவிக்கிறார். (16)GCTam 543.3

    தேவனுடைய கற்பனை அதன் இயல்பிலிருந்தே மாற்றமுடியாததாக உள்ளது. அதுவே அதன் வடிவமைப்பாளரின் சித்தம், சுபாவம் ஆகியவைகளின் ஒரு வெளிப்படுத்தலாக உள்ளது. தேவனிடம் அன்புகூருதல், மனிதரிடம் அன்புகூருதல் என்பது அதன் இரு பெரும் கொள்கைகளாக உள்ளன. “அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது”-ரோமர் 13:10. தேவனுடைய சுபாவம் நீதியும் சத்தியமுமாக உள்ளது. அவரது பிரமாணமும் அதே இயல்பை உடையதாக உள்ளது. “உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம். உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்;” (சங். 119:142,172) என்று சங்கீதக்காரன் கூறுகிறான். “நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது” (ரோமர் 7:12) என்று பவுல்அப்போஸ்தலன் கூறுகிறார். (17)GCTam 544.1

    கற்பனைகளின் கொள்கைக்கு இசைவாக மனிதர்களைக் கொண்டுவந்து, அவர்களை தேவனுடன் ஒப்புரவாக்குதல் என்பது மதமாற்றம் பரிசுத்தமாக்கப்படுதல் ஆகியவைகளின் செயலாகும். ஆதியில் கற்பனையுடனும் இயற்கையுடனும் பூரணமான இசைவு உள்ளவனாக இருந்தான். நீதியின் கொள்கைகள் அவனது இருதயத்தின்மீது எழுதப் பட்டிருந்தன. ஆனால் பாவம் அவனைப் படைத்தவரிடத்திலிருந்து வேறு படுத்தியது. அதற்குமேல் அவன் தெய்வீக ரூபத்தைப் பிரதிபலிக்கவில்லை. அவனுடைய இருதயம் தேவனுடைய பிரமாணத்தின் கொள்கையுடன் போர் செய்துகொண்டிருந்தன. “மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை: அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக்கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக் கூடாமலும் இருக்கிறது”-ரோமர் 8:7. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். கிறிஸ்துவின் புண்ணியங்களின்மூலமாக, அவன் தன்னைச் சிருஷ்டித்தவருடன் சீர்பொருந்த இயலும். தெய்வீகக்கிருபையினால், அவனது இருதயம் புதுப்பிக்கப் படவேண்டும். இந்த மாறுதலே புதிய பிறப்பாகும் அது இல்லாமல், அவன் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று இயேசு கூறுகிறார்.(18)GCTam 544.2

    தேவனுடன் ஒப்புரவாகுதலில் உள்ள முதல்படி பாவத்தைப்பற்றிய உணர்வாகும். “நியாயப்பிரமாணத்தை மீறுவதே பாவம்”-1யோவான் 3:4. “பாவத்தை அறிகிற அறிவு நியாயப் பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை”-ரோமர் 3:20. பாவி தன் குற்றத்தைப் பார்ப்பதற்காக தேவனுடைய பெரும் நீதியின் தரத்துடன் (பத்துக்கற்பனைகள்) தன் சுபாவத்தை ஒப்பிட்டுச் சோதித்துப் பார்க்கவேண்டும். நீதியான ஒரு சுபாவத்தின் பூரணத்தைக் காட்டும் ஒரு கண்ணாடியாக அது இருக்கிறது. தன்னிலுள்ள அதிகமான குறைபாடுகளை அறிந்துகொள்ள அது அவனைத் தகுதிப்படுத்துகிறது. (19)GCTam 545.1

    மனிதனில் உள்ள பாவங்களை கற்பனை வெளிக்காட்டுகிறது. ஆனால் அது அதற்கான பரிகாரத்தை ஏற்பாடு செய்வதில்லை. கீழ்ப்படிபவர்களுக்கு அது ஜீவனை வாக்குத்தத்தம் செய்யும். அதே சமயத்தில் மீறுபவர்களின் பங்கு மரணம் என்று அது அறிவிக்கிறது. பாவத்தினாலுண்டாகும் பழியிலிருந்தும், தீட்டிலிருந்தும் கிறிஸ்துவின் சுவிசேஷம்மட்டுமே அவனை விடுதலைசெய்யும், அவன் தேவனுடைய கற்பனைகளை மீறியிருப்பதற்காக கிறிஸ்துவின்மீதும், அவரது பாவநிவாரண பலியின்மீதும் உள்ள விசுவாசத்துடன் தேவனிடத்திற்கு மனம்திரும்ப வேண்டும். இப்படியாக, அவன் கடந்தகாலப் பாவங்களுக்கு பாவமன்னிப்பைப் பெற்றுக்கொண்டு தேவனுடைய பிள்ளையாகிவிட்டதினால், அப்பா பிதாவே என்று கதறுகிறான்.(20)GCTam 545.2

    அவன் இப்பொழுது தேவனுடைய கற்பனையை மீறும் சுதந்திரத்தை உடையவனாக இருக்கிறானா? “அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப் பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே'‘- ரோமர்3:31. “பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?” (ரோமர் 6:2) என்று பவுல் கூறுகிறார். “அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல”-1 யோவான் 5:3. புதிய பிறப்பில் இருதயம் தேவனுடைய கற்பனைக்கு இசைவுள்ளதாக கொண்டுவரப்படுகிறது. இந்த பலத்த மாறுதல் பாவிக்குள் உண்டாயிருக்கும்போது, அவன்மரணத்திலிருந்து ஜீவனுக்கும், பாவத்திலிருந்து பரிசுத்தத்திற்கும், மீறுதல், கலகம் ஆகியவைகளில் இருந்து கீழ்ப்படிதல் உண்மையான விசுவாசம் ஆகியவைகளுக்கும் கடந்துவந்திருக்கிறான். தேவனிடமிருந்து விலகிச்சென்றிருந்த பழைய வாழ்க்கையானது முடிவுற்று, விசவாசம், அன்பு ஆகியவை உள்ள ஒப்பரவாகுதலின் புதிய வாழ்க்கை ஆரம்பமாகிறது. அப்பொழுது ஆத்துமாவின் மொழியானது: “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்” (சங். 119:97) என்பதாக இருக்கிறது. (21)GCTam 545.3

    “கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது;”- சங். 19:7. கற்பனை இல்லாதபோது, தேவனுடைய தூய்மை, பரிசுத்தம் ஆகியவைபற்றி அல்லது தங்களுடைய குற்றம், அசுத்தமான தன்மை ஆகியவைபற்றி, சரியான எண்ணத்தை உடையவர்களாக மனிதர்கள் இருக்கமாட்டார்கள். பாவத்தைப்பற்றிய உண்மையான குற்றஉணர்வு அவர்களுக்கு இல்லாததால், மனந்திரும்ப வேண்டிய அவசியம் தேவை இல்லாதது என்ற உணர்வுள்ளவர்களாக இருக்கின்றனர். தேவனுடைய கற்பனையை மீறுபவர்கள் என்ற தங்களுடைய நிலையைக் காணாமல், பாவநிவாரணமளிக்கும் கிறிஸ்துவின் இரத்தத்தின் அவசியத்தை உணராமல் உள்ளனர். இருதயத்தில் சரியான மாற்றம் இல்லாமல், அல்லது வாழ்க்கையில் சீர்திருத்தம் இல்லாமல், இரட்சிப்பைப்பற்றிய நம்பிக்கை (வீணாக) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறாக, மேலெழுந்தவாரியான மனமாற்றங்கள் பெருகுகின்றன. கிறிஸ்துவுடன் ஒருபோதும் பிணைக்கப்பட்டவர்களாக இராத, திரள் கூட்டமானவர்கள் சபையில் சேர்ந்துள்ளனர். (22)GCTam 546.1

    தெய்வீகப்பிரமாணத்தை அலட்சியப்படுத்துதல், அல்லது நிராகரித்தல் ஆகிய குதித்தெழுதலில் இருந்து உண்டான பரிசுத்தமடைதலைப்பற்றிய தவறான தத்துவ விளக்கங்கள், அந்த நாளின் சமய இயக்கங்களில் ஒரு முன்னணியான இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தத் தத்துவ விளக்கங்களானது கோட்பாட்டில் தவறானதாகவும், நடைமுறை விளைவுகளில் ஆபத்தானதாகவும் உள்ளன. இவை பொதுவாக அனுகூலத்தைக் கண்டுகொண்டுள்ளன என்பது இந்தக் காரியம் குறித்து வேதவாக்கியங்கள் பேதிப்பவை என்ன என்பதைப்பற்றித் தெளிவான புரிந்துகொள்ளுதலை உடையதாக இருப்பதும் இருமடங்கு முக்கியமானதாக உள்ளது. (23)GCTam 546.2

    மெய்யான பரிசுத்தமடைதல் என்பது ஒரு வேதாகமக் கோட்பாடாகும். “நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமா யிருக்கிறது” (1 தெச. 4:3) என்று அப்போஸ்தலனாகிய பவுல் தெசலோனிக்கேய சபைக்கு எழுதின அவருடைய நிருபத்தில் அறிவிக்கிறார். சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக” (1 தெச. 5:23) என்று அவர் ஜெபிக்கிறார். பரிசுத்தமடைதல் என்றால் என்ன? அதை எவ்விதமாக அடைந்துகொள்ளவேண்டும் என்பதை வேதாகமம் மிகத் தெளிவாகப் போதிக்கிறது. “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்” (யோவான் 17:17) என்று இரட்சகர் அவரது சீடர்களுக்காக ஜெபித்தார். விசுவாசிகள் பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக வேண்டும். “அப்படியிருந்தும், சகோதரரே, புறஜாதியாராகிய பலி பரிசுத்தஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு” (ரோமர் 15:15) என்று பவுல் போதித்தார். பரிசுத்த ஆவியானவரின் செயல் என்ன? “சத்தியஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்;” (யோவான் 16:13) என்று இயேசு அவருடைய சீடர்களிடம் கூறினார். உம்முடைய கற்பனை சத்தியமானது என்று சங்கீதக்காரன் கூறுகிறான். தேவனடைய கற்பனையில் அடங்கியுள்ள நீதியின் பெரும் கொள்கைகள் தேவனுடைய வார்த்தையினாலும், அவரது ஆவியினாலும் மனிதர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன. தேவனுடைய கற்பனை பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் தெய்வீகப் பரிபூரணத்தின் மறுபடிவமாகவும் இருப்பதினால், கற்பனைக்குக் கீட்ப்படிவதினால் உண்டாகும் ஒரு சுபாவம் பரிசத்தமானதாக இருக்கும் என்பது தெரியவருகிறது. அப்படிப்பட்ட ஒரு சுபாவத்திற்குக் கிறிஸ்து ஒரு பூரணமான உதாரணமாக இருக்கிறார். “நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு” “பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறேன்” (யோவான் 15:10 8:29) என்று அவர் கூறுகிறார். தேவனுடைய கிருபையினால், அவருடைய பரிசுத்த கற்பனையின் கொள்கைகளுக்கு இசைவான சுபாவத்தை அமைத்துக்கொள்ளுவதற்கு கிறிஸ்துவின் அடியார்கள் அவரைப் போன்றவர்களாக வேண்டும். இதுதான் வேதாகமம் கூறுகின்ற பரிசுத்தமடைதல் என்பதாகும்.(24)GCTam 546.3

    உள்ளத்துள் வாசம்செய்யும் தேவ ஆவியின் வல்லமையினால் மட்டுமே, கிறிஸ்துவின்மீதுள்ள விசவாசத்தின்மூலமாக இந்தப் பணி நிறைவேற்றப்படக்கூடியதாக உள்ளது. “அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்” (பிலிப். 2:12,13) என்று பவுல் விசுவாசிகளை எச்சரிக்கிறார். பாவத்தின் தூண்டுதல்களை கிறிஸ்தவன் உணருவான். ஆனால் அதற்கு எதிரான ஒரு போராட்டத்தை அவன் நடத்திக்கொண்டே இருப்பான். இங்குதான் கிறிஸ்துவின் உதவி தேவயைாக உள்ளது. “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (1 கொரி. 15:57) என்று தெய்வீக பலத்துடன் பிணைக்கப்பட்ட மனித பலவீனமும் விசவாசமும் வியந்து கூறுகின்றன. (25)GCTam 547.1

    பரிசுத்தமடைதல் என்னும் பணி தொடர்ந்து செல்லக்கூடியது என்று வேதவாக்கியங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. மதமாற்றத்தினால் பாவி பாவநிவாரண இரத்தத்தின் மூலமாக, தேவனுடன் சமாதானத்தைக் காணும்போது, கிறிஸ்தவ வாழ்க்கை ஆரம்பமாகிறது. இப்பொழுது “கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும்” (எபே. 4:11) அவன் முன்னோக்கிச் செல்ல வேண்டியவனாக இருக்கிறான். “ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலிப். 3:13,14) என்று பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார். வேதாகமம் கூறும் பரிசுத்தமடைதலை அடைந்துகொள்ளும் படிக்கட்டுகளை இவ்விதமாகப் பேதுரு நம்முன்பாக வைக்கிறார். “இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமை யையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது. இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான். ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை”-2 பேதுரு 1:5-10. (26)GCTam 547.2

    வேதாகமம் கூறும் பரிசுத்தமடைதலை அனுபவிக்கிறவர்கள் தாழ்மையின் ஆவியை வெளிக்காட்டுவார்கள். பரிசுத்தத்தின் பயங்கரமான மகத்துவத்தையும், நித்தியமானவரின் தூய்மையையும் உயர்ந்த பரிபூரணத் தையும், அதற்கு எதிரிடையான தங்களுடைய தகுதியின்மையையும் மோசேயைப்போல அவர்கள் கண்டிருக்கிறார்கள். (27)GCTam 548.1

    வேதாகமம் கூறும் பரிசுத்தமடைதலுக்கு தீர்க்கதரிசியான தானியேல் ஒரு உதாரணமாக இருந்தார். அவரது எஜமானருக்கான மேலான சேவையில் நிறைந்ததாக அவரது நீண்ட கால வாழ்க்கை இருந்தது. பரலோகத்தால் அவர் மிகவும் பிரியமாக நேசிக்கப்பட்டவராக இருந்தார் (தானியேல் 19:11). அப்படியிருந்தும் தூய்மையும் பரிசுத்தமும் உள்ளவனாக இருக்கிறேன் என்று உரிமைபாராட்டுவதற்குப் பதிலாக இஸ்ரவேலர்களுக்காக அவர் தேவனிடத்தில் வேண்டுதல் செய்தபோது, (பரலோகத்தால்) சிறப்பிக்கப்பட்ட இந்த தீர்க்கதரிசி, உண்மையாகவே பாவமுள்ள இஸ்ரவேலர்களுடன் தம்மையும் அடையாளப்படுத்திக் கொண்டு “நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம்.... நாங்கள் பாவஞ்செய்து, துன்மார்க்கராய் நடந்தோம். இப்படி நான் சொல்லி, ஜெபம்பண்ணி, என் பாவத்தையும் என் ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டு, ... என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போயிற்று; திடனற்றுப்போனேன்” (தானியேல் 9:18,15,20 10:8) என்று அறிவிக்கிறார். (28)GCTam 548.2

    பெருங்காற்றிலிருந்து கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டபோது, யோபு: “ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்” (யோபு 42:6) என்றான். கர்த்தருடைய மகிமையை ஏசாயா கண்டபோது: “சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், ... என்று கூப்பிட்டுச் சொன்னார்கள். அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன்” (ஏசாயா 6:3,5) என்று சத்தமிட்டான். மூன்றாம் வானம் வரைக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டு மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டிருந்தவருமான பவுல் “பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான்” (எபே. 3:8) என்று தன்னைப்பற்றிக் கூறினார். இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்து, அவரால் மிகவும் நேசிக்கப்பட்டவராயிருந்த யோவான், அவரது மகிமையைக் கண்டபோது, ” யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்” (வெளி 22:8) என்கிறார். (29)GCTam 549.1

    கல்வாரிச் சிலுவையின் நிழலில் நடப்பவர்களின் பங்கில் பாவத்திலிருந்து விடுதலை அடைந்துவிட்டோம் என்னும் சுயத்தை உயர்த்துதலும் பெருமையான உரிமையும் இருக்கமுடியாது. தேவகுமார னுடைய இருதயத்தை உடைக்கும் வேதனைக்கு, அவர்களுடைய பாவங்கள் காரணமாக இருந்தது என்று அவர்கள் உணருகின்றனர். இந்த எண்ணம் தங்களைச் சுயமாகத் தாழ்த்துவதற்கு அவர்களை நடத்துகிறது. இயேசுவிற்கு அருகில் வாழுபவர்கள் மானிடத்தின் குற்றங்குறைகள் பாவத்தன்மை ஆகியவைகளை மிகத் தெளிவாக அறிந்துகொள்ளுவதால், சிலுவையிலறையப்பட்டு உயிர்த்தெழுந்த இரட்சகரின் புண்ணியம் மட்டுமே அவர்களது ஒரே நம்பிக்கையாக உள்ளது. (30)GCTam 549.2

    இப்பொழுது மத உலகில் முக்கியத்துவத்தை ஆதாயப்படுத்தி வரும் பரிசுத்தமடைதல் என்பது, வேதாகமம் காட்டும் மதத்திற்குப் புறம்பானது என்று குறித்துக்காட்டும் தன்னை உயர்த்தும் ஆவியையும் தேவனுடைய கற்பனைக்கு மதிப்பைத் தராத தன்மையையும், தன்னுடன் எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது. பரிசுத்தமடைதல் என்பது உடனடியாக நடைபெறும் ஒருபணி என்று அதற்காகப் பரிந்துபேசுபவர்கள் போதிக்கின்றனர். அதனால் விசுவாசத்தின் மூலமாக மட்டும் பரிசுத்தமடைதலில் அவர்கள் பூரணமடைகின்றனர் என்றும் போதிக்கின்றனர். விசுவாசித்தால் மட்டும் போதும், ஆசீர்வாதம் உன்னுடையதாக இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர். அதற்குமேல் எந்த முயற்சியும் அதைப் பெற்றுக்கொள்ளுபவன் பகுதியாக அவசியமுள்ளதுபோல் தெரியவில்லை. அதேசமயம், அவர்கள் தேவனுடைய கற்பனையின் அதிகாரத்தை மறுத்து, பிரமாணங்களைக் கைக்கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தும் கடமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிக்கொள்ளுகின்றனர். ஆனால் தேவனுடைய கொள்கைகளால் அவரது இயல்பு, சித்தம் ஆகியவைகளின் வெளிக்காட்டுதலாகவே அவரது பிரமாணங்கள் உள்ளன. அவருக்கு மிகவும் பிரியமானவைகள் எவை என்று அவைகள் காட்டுகின்றன. அதற்கு இசைவாக வராமல், மனிதர்களால் பரிசுத்தமாக இருக்க இயலுமா? (31)GCTam 549.3

    சுயமறுப்பு இல்லாத, உலகத்தின் பொய்களிலிருந்து விலகாத, ஒரு வசதியான, முயற்சிகள் எதையும் அவசியப்படுத்தாத, ஒரு மதத்தின்மீதுள்ள விருப்பம்தான் விசுவாசம் என்ற ஒன்றை மட்டுமே மனிதர்களால் மதிக்கப்படுகின்ற கோட்பாடு உண்டாக்கி இருக்கிறது? ஆனால் தேவனுடைய வார்த்தை என்ன கூறுகிறது? “என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?... வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறிய வேண்டுமோ? நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்? விசுவாம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே... மனுஷன் விசுவாசத்தினாலே மாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே” (யாக். 2:14-24) என்று அப்போஸ்தலனாகிய யாக்கோபு கூறுகிறார்.(32)GCTam 550.1

    கிரியை இல்லாத விசுவாசம் என்னும் கோட்பாடு, கண்ணியில் அகப்படுத்துவதாக உள்ளது. தேவனுடைய வார்த்தை இதற்கு எதிரான சாட்சியாக உள்ளது. இரக்கம் அனுமதிக்கப்படுவதற்கான நிபந்தனையை நிறைவேற்றாமல், பரலோகத்தின் அனுகூலத்தின்மீது உரிமைபாராட்டுவது விசுவாசமாகாது. அது இறுமாப்பு ஆகும். ஏனெனில், உண்மையான விசுவாசம் அதன் அஸ்திவாரத்தையும் ஏற்பாடுகளையும் தேவனுடைய வாக்குத்தத்தங்களிலும் வேதவாக்கிய ஏற்பாடுகளிலும் சார்ந்து உள்ளது. (33)GCTam 550.2

    தேவனுடைய கற்பனைகளில் ஒன்றின் அவசியத்தை வேண்டுமென்றே மீறிக்கொண்டு, அவர்கள் பரிசுத்தமானவர்களாக இருக்கலாம் என்று ஒருவரும் தங்களை வஞ்சித்துக்கொள்ளவேண்டாம். அறியப்பட்ட ஒரு பாவத்தின் செயல், சாட்சிகூறும் ஆவியின் சத்தத்தை மௌனப்படுத்தி, அந்த ஆத்துமாவை தேவனிடத்திலிருந்து பிரித்துவிடுகிறது. “நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.” “பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை”-1 யோவான் 3:4,6. பரிசுத்தமடைந்திருப்பதாக உரிமைபாராட்டுகின்ற வகுப்பினரின் உண்மையான சுபாவத்தை வெளிக்காட்டத் தயங்கவில்லை. மேலும் “அவரை அறிந்திருக்கிறே னென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்”-1 யோவான் 2:4,5. பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள தேவனுடைய பரிசுத்தத்தின் ஒரே அளவுள்ள (சம அளவுள்ள) தரத்திற்கு ஒரு மனிதனைக் கொண்டுவராமல், அவனுக்கு நம்மால் பரிசுத்தத்தை அணிவிக்கமுடியாது. சன்மார்க்கப் பிரமாணத்தின் பாரத்தை மனிதர்கள் உணராமல், தேவப்பிரமாணத்தை சிறிதாக்கிக் குறைவாக எடைபோடுவார்களானால், அந்தக் கற்பனைகளில் மிகவும் சிறிதான ஒன்றையாகிலும் அவர்கள்மீறி, அவ்விதமாக மனிதர்களுக்குப் போதிப்பார்களானால், அவர்கள் பரலோகத்தின் பார்வையில் மேன்மை யானவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்கள் பாராட்டும் உரிமை அஸ்திவாரமற்றதாக உள்ளது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். (34)GCTam 551.1

    பாவம் இல்லாததாக இருப்பதாகப் பாராட்டும் உரிமையானது அது தனக்குள்ளேயே இந்த உரிமையைப் பாராட்டுபவன் பரிசுத்தமான தன்மையிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறான் என்பதற்குச் சான்றாக உள்ளது. ஏனெனில் தேவனுடைய முடிவில்லாத தூய்மை, பரிசுத்தம் ஆகியவைபற்றிய உண்மையான அறிவு அவனுக்கு இல்லாமலிருப்பதே அதற்குக் காரணமாக உள்ளது. அவருடைய சுபாவத்திற்கு இசைவான வர்களாக ஆகவேண்டியவர்கள் எப்படிப்பட்டவர்களாகவேண்டும் என்பதும் அவனுக்குத் தெரியாது. ஏனெனில், அவனுக்கு இயேவின் தூய்மை, மேலான அழகிய தன்மை, ஆகியவை பற்றிய உண்மையான அறிவு இல்லை. மனிதன் தன்னைத்தான் பரிசுத்தமுள்ளவன் என்று கருதுவதற்குக் காரணம் பாவத்தின் கொடூரம் தீயதன்மை ஆகியவைபற்றிய அறிவும் அவனுக்கில்லை. அவனுக்கும் கிறிஸ்துவிற்கும் இடையிலுள்ள தூரம் எந்த அளவிற்கு அதிகமாகிறதோ, அந்த அளவிற்கு தெய்வீக சுபாவத்தைப்பற்றிய அவனுடைய அறிவும் குறைவானதாக இருந்து, அவன் தனது சொந்தக் கண்களுக்குமட்டுமே அதிக நீதியுள்ளவனாகத் தோன்றுகிறான். (35)GCTam 551.2

    வேத வாக்கியங்கள் முன்வைக்கும் பரிசுத்தமடைதல் என்பதானது, ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகிய முழு மனிதனையும் தழுவுவதாக உள்ளது. எனவேதான் “உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக” (1 தெச. 5:23) என்று தெசலோனிக்கேயர்களுக்காகப் பவுல் ஜெபித்தார். “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை” (ரோமர் 12:1) என்று அவர் மறுபடியும் விசுவாசிகளுக்கு எழுதுகிறார். பண்டைய இஸ்ரவேலரின் காலத்தில், தேவனுக்குப் பலிசெலுத்தும்படியாக கொண்டுவரப்பட்டிருந்த ஒவ்வொரு பலியும், மிகக் கவனமாக சோதிக்கப்பட்டது. அர்ப்பணிக்கப்பட்ட மிருகத்தில் ஏதாவது குறைபாடு காணப்பட்டால், அது மறுக்கப்பட்டது. ஏனெனில் பலியிடப்படும் மிருகம் பழுதற்றதாக இருக்கவேண்டும் என்று தேவன் கட்டளையிட்டிருந்தார். அப்படியே கிறிஸ்தவர்களும் தங்களுடைய சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக் கொடுக்கவேண்டும். இதைச் செய்வதற்கு அவர்கள் தங்களுடைய வல்லமைகள் அனைத்தையும் தங்களால் முடிந்த அளவிற்கு மிகச்சிறந்த நிலையில் பாதுகாத்து வைத்திருக்கவேண்டும். சரீர, மன நலன்களைப் பலவீனப்படுத்தும் ஒவ்வொரு பழக்கமும், சிருஷ்டிகரின் சேவைக்கு மனிதனைத் தகுதியற்றவானாக்குகிறது. நம்மால் செலுத்தமுடிந்த மிகச் சிறந்ததற்குக் குறைவான எதினாலாவது தேவன் பிரியப்படுவாரா? உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் அன்புகூருவாயாக என்று கிறிஸ்து கூறினார். தங்களுடைய முழு இருதயத்துடனும் தேவனை நேசிக்க விரும்புகிறவர்களே, தங்கள் வாழ்க்கையின் மிகச்சிறந்த சேவையை அவருக்குச் செலுத்துவார்கள். அவர்கள் தங்களிடமுள்ள ஒவ்வொரு வல்லமையையும் அவருடைய சித்தத்தை மேன்மைப்படுத்துவதற்காக, கற்பனைக்கு இசைவாகக் கொண்டுவருவதற்கு வகைதேடிக்கொண்டிருப்பார்கள். உணவுப்பழக்கம், அல்லது ஆசை ஆகியவைகளினால் தங்களுடைய பரலோகத் தந்தைக்குப் படைக்கும் காணிக்கையைத் தீட்டுப்படுத்தமாட்டார்கள். (36)GCTam 552.1

    ஆத்துமாவிற்கு எதிராகப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டுவிலகுங்கள் (1பேதுரு 2:11) என்று பேதுரு கூறுகிறார். ஒவ்வொரு பாவப் பழக்கமும் அறிவை மரத்துப்போகச் செய்து, மனதின் ஆவிக்குரிய உணரும் சக்திகளைச் சாகடிக்கிறது. அதனால் தேவனுடைய வார்த்தை அல்லது தேவனுடைய ஆவியால் இருதயத்தில் பலவீனமான உணர்த்துதலை மட்டுமே உண்டாக்கவதற்கு முடிகிறது. “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், 23. சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.” “இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்”-கலா. 5:22,23; 2 கொரி. 7:1. மேலும் அவர் இச்சையடக்கத்தையும் இதில் உட்படுத்துகிறார். (37)GCTam 553.1

    ஆவியினால் ஏவப்பட்டு இந்த அறிவிப்புகளுக்கு அப்பாற்பட்டு தங்களது வல்லமைகளை லாபம் சம்பாதிக்கவும், நாகரிகத்தைவணங்கவும் பலவீனப்படுத்திக்கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் எத்தனை பேர்? அமித உணவுப் பழக்கம், மது அருந்துதல், தடைசெய்யப்பட்டுள்ள இன்பங்களை அனுபவித்தல் ஆகிய பழக்கங்களினால் தேவசாயலில் உள்ள தங்களது மேன்மையைத் தரம் தாழ்த்திக்கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்? சபை இவைகளைக் கடிந்துகொள்ளுவதற்குப் பதிலாக, உணவின்மீதுள்ள விருப்பத்தை அதிகரிக்கும் பணியில் அறைகூவியும், லாபத்தின்மீதுள்ள விருப்பம் அல்லது தனது கருவூலத்தை வளப்படுத்திக் கொள்ளும் ஆசையின்மீதுள்ள நாட்டம் இவைகளினால், கிறிஸ்துவின்மீதுள்ள அன்பை வழங்குவதற்கு அதிக பலவீனமுள்ளதாக இருக்கும் தீமைகளைச் செய்ய தைரியமூட்டுகிறது. இன்று இயேசு ஆலயங்களுக்குள் பிரவேசிப்பாரானால், மதத்தின் பெயரால் அங்கு நடைபெறும் விருந்துகளையும் பரிசுத்தமற்ற வியாபாரங்களையும் கண்டு, அவ்விதமாகப் பரிசுத்தகுலைச்சலாக்குபவர்களை, முன்னர் காசுக்காரர்களை ஆலயத்திலிருந்து விரட்டினதுபோல் விரட்டமாட்டாரா? (38)GCTam 553.2

    “பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும்,” என்று அப்போஸ்தலனாகிய யாக்கோபு கூறுகிறார். புகையிலையினால் தீட்டுப்படுத்தப்பட்டு, அதன் துர்வாடையினால் உதடுகளும் மனிதனும் கறைப்பட்டுப் போகும்படிச் செய்து, ஆகாய மண்டலத்திலுள்ள காற்றை மாசுபசுபடுத்தி, தங்களைச் சுறிறிலுமுள்ள அனைவரையும் அந்த நஞ்சை சுவாசிக்கும்படி வற்புறுத்திக்கொண்டு, இயேசுவின் விலைமதிப்புள்ள பெயரைக் கூறிக்கொண்டிருப்பவர்களை இயேசு சந்திக்க நேர்ந்தால், சுவிசேஷத்தின் தூய்மைக்கு எதிரான அப்படிப்பட்ட பழக்கத்துடன் தொடர்புகொள்ள அந்த அப்போஸ்தலனுக்கு நேர்ந்திருந்தால், அதை உலகப்பிரகாரமான உணர்வுகளினால் உண்டாகும் தீமையானவை என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருக்கமாட்டாரா? புகையிலைக்கு அடிமையாக இருந்துகொண்டு, முற்றிலுமாக பரிசுத்தம் அடைதலின்மீது உரிமைபாராட்டுபவர்கள், பரலோகத்தின்மீது தங்களுடைய நம்பிக்கையைப்பற்றிப் பேசுகின்றனர். ஆனால் “தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை;” (வெளி 21:27) என்று தேவனுடைய வார்த்தை மிகத் தெளிவாகக் கூறுகிறது. (39)GCTam 553.3

    “உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்”-1 கொரி. 6:19,20. எந்த ஒருவனுடைய சரீரம் தேவ ஆவியானவருடைய ஆலயமாக இருக்கிறதோ, அவன் கேடு உண்டாக்கும் பழக்கங்களினால் அடிமைப்படுத்தப்படமாட்டான். அவனுடைய வல்லமைகள் அவனைத் தமது இரத்தத்தினால் கிரயத்திற்கு வாங்கின கிறிஸ்துவின் உடைமையாக உள்ளது. அவனது சொத்துக்கள் கர்த்தரின் சொத்தாக உள்ளன. அவனிடம் மூலதனமாக ஒப்படைக்கப்பட்டிருக்கும் அதை, விரயம் செய்ததற்கு அவன் எப்படிக் குற்றமற்றவனாக இருப்பான்? தேவனுடைய வார்த்தைகள் கிடைக்காமல் ஆத்துமாக்கள் அழிந்து கொண்டிருக்கும்போது, தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளுபவர்கள் வருடந்தோறும் பெரும் தொகையை பயனற்றதும் நாசகரமானதுமான பழக்கங்களில் செலவிடுகின்றனர். ஏழைகளின் மீட்பிற்கென்றும் அல்லது சுவிசேஷத்தை தாங்குவதற்கென்றும் செலவிடுவதைவிடவும் அதிகமாக, தங்களை அழிக்கும் இச்சைகளாகிய பலிபீடத்தின்மீது அவர்கள் எரிக்கும்போது, தசமபாகங்களிலும் காணிக்கைகளிலும் தேவன் கொள்ளையிடப்படுகிறார். தங்களைக் கிறிஸ்துவின் அடியார்கள் என்று கூறிக்கொண்டிருக்கும் அனைவரும் பரிசுத்தமடைந்தவர்களாக இருந்திருந்தால், தங்களுடைய செல்வங்கள் அனைத்தையும் தேவையற்றவைகளிலும், தீமைபயக்கும் காரியங்களிலும் செலவிடும் பழக்கத்திற்குப் பதிலாக, அவைகள் கர்த்தரின் கருவூலத்திற்குள் திருப்பிவிடப்பட்டிருந்திருக்கும். இப்படியாகக் கிறிஸ்தவர்கள் இச்சையடக்கம், சுயமறுப்பு, தற்தியாகம் ஆகியவைகளுக்கு ஒரு உதாரணத்தை அமைத்திருந்திருப்பார்கள். அப்போது அவர்களால் உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கமுடியும். (40)GCTam 554.1

    இஷ்டப்படி நடந்துகொள்ள உலகம் விடப்பட்டுள்ளது. கண்களின் இச்சை, மாமிசத்தின் இச்சை, ஜீவனத்தின்பெருமை ஆகியவை திரள் கூட்டமான மக்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் கிறிஸ்துவின் அடியார்கள் ஒரு பரிசுத்தமான அழைப்பை உடையவர்களாக உள்ளனர்-2 கொரி. 6:17. பாவகரமான தொழில்களையும், உலகப்பிரகாரமான இந்த ஆசைகளையும் முற்றிலுமாக மறுக்கும் செயலை, செயல்படுத்தாதது, உண்மையான பரிசத்தமாக்கப்படுதலாக இருக்கமுடியாது என்று அறிவிப்பதினால், நாம் தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் | நீதிகரிக்கப்படுகின்றோம்.(41)GCTam 555.1

    “நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள்” என்னும் நிபந்தனைக்கு இணங்குபவர்களுக்கு “அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்தி களுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்” (2 கொரி. 6:18) என்று வாக்குத்தத்தம் உள்ளது. தேவனுடைய காரியங்களில் ஏராளமாக மிகுந்த அனுபவமுடையவனாக இருக்கவேண்டியது ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் உள்ள சலுகையும் கடமையுமாக உள்ளது. “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்று கிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்” “நீதிமான் களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்’-யோவான் 8:12; நீதி 4:18. விசவாசம், கீழ்ப்படிதல் ஆகியவைகளின் ஒவ்வொரு அடியும் ஆத்துமாவை (எவருக்குள் இருள் இல்லாமல் இருக்கிறதோ அவருக்குள்) உலகத்திற்கு ஒளியாய் இருப்பவருடனுள்ள நெருங்கிய உறவிற்குள் கொண்டுவருகிறது. தேவனுடைய ஊழியக்காரர்களின்மீது நீதியின் சூரியனின் ஒளிமிக்க கதிர்கள் வீசுகின்றன. பரலோகத்தில் ஒரு மாபெரும் ஒளி உள்ளது. அதன் மகிமையினால் விண்மீன்கள் ஒளிப்படுத்தப்படுகின்றன என்பதை அவை நமக்குக் கூறுவதுபோல் அவர்கள் அவரது கதிர்களைப் பிரதிபலிக்கவேண்டும். அப்படியே பிரபஞ்ச சிங்காசனத்தின்மீது ஒரு தேவன் இருக்கிறார். அவரது சுபாவம் துதிக்கப்படுவதற்கும் பின்பற்றிப்படுவதற்கும் தகுதிமிக்கதாக உள்ளது என்பதனைக் கிறிஸ்தவர்கள் வெளிக்காட்டவேண்டும். அவரது சாட்சிகளிடம் அவரது ஆவியின் கிருபைகள், தூய்மை, சுபாவத்தில் பரிசுத்தம் ஆகியவை வெளிக்காட்டப்படும். (42)GCTam 555.2

    தேவனுடைய பிள்ளைகளின் மீது அபரிமிதமாகப் பொழியப்பட்டுள்ள ஆசீர்வதங்களை கொலோசெயர்களுக்கு பவுல் எழுதின நிருபத்தில் அவர்கள்முன்வைக்கிறார். “நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், சந்தோஷத்தோடேகூடிய எல்லாப் பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்’-கொலோ. 1:9—12. (43)GCTam 556.1

    கிறிஸ்தவர்களுக்கு அருளப்பட்டுள்ள சலுகையின் உயர்வை எபேசு சபை சகோதரர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்ற அவரது விருப்பத்தை அவர் மறுபடியும் எழுதுகிறார். உன்னதமானவருடைய குமாரர்களாகவும், குமாரத்திகளாகவும் அவர்கள் அடைந்துகொள்ளும் ஆச்சரியமான வல்லமையையும் அறிவையும்பற்றி மிக நன்றாக விளக்கக்கூடிய மொழியில் அவர்கள் முன் திறக்கிறார். (44)GCTam 556.2

    “நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்,... நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர் களாகி, சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகலபரிபூரணத்தாலும் நிறையப்படவும்” (எபே. 3:16-19) வேண்டும் என்று ஜெபிக்கும்போது, அப்போஸ்தலனின் ஜெபம் அதன் சலுகையின் உச்சக்கட்டத்தை எட்டுகிறது. அவரது அவசியங்களை எதிர்பார்ப்புகளை நாம் நிறைவேற்றும்போது, நமது பரலோகத் தந்தையின் வாக்குத்தத்தங்களின்மீதுள்ள விசுவாசத்தின் மூலமாக நாம் அடைந்துகொள்ள வேண்டிய உயரங்கள் இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கிறிஸ்துவின் புண்ணியங்களின்மூலமாக, முடிவில்லாத வல்லமையின் சிங்காசனத் திற்குரிய பாதையை நாம் அடைந்திருக்கிறோம். “தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” ரோமர் 8:32. “என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்.” -யோவான் 14:14. “இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.” -யோவான் 16:24. (45)GCTam 556.3

    கிறிஸ்தவ வாழ்க்கை தாழ்மையினால் எடுத்துக்காட்டப்பட வேண்டிய தாக இருக்கும்போது, அது வருத்தத்தினாலும் தன்னைத்தான் இழிவுபடுத்திக் கொள்ளுதலினாலும் அடையாளப்படுத்தப்படக்கூடாது. தேவன் அங்கீகரித்து ஆசீர்வதிக்கும் விதத்தில் வாழ்வது ஒவ்வொருவருக்கும் உள்ள சலுகை யாகும். பழியிலும் இருளிலும் நாம் எப்போதும் இருக்கவேண்டும் என்பது பிதாவின் சித்தமல்ல. தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு, சுயத்தைப் பற்றிய நினைவினால், இருதயமானது நிறைந்ததாக இருக்கும்படி உண்மை யான தாழ்மையின் சான்று இல்லை. நாம் இயேசுவிடம் சென்று சுத்தப்படுத்தப் பட்டவர்களாக பிரமாணத்திற்கு முன்னால் குற்ற உணர்வினால் உண்டாகும் வருத்தம் இல்லாதவர்களாக நிற்கலாம். “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவிற்குட்பட்டவர்களாயிருந்து மாம்சத்தின்படி நடவாமல், ஆவியின் படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை”-ரோமர் 8:1. (46)GCTam 557.1

    விழுந்துபோன ஆதாமின் குமாரர்கள் இயேசுவின் மூலமாக தேவனுடைய குமாரர்களாகின்றனர். “பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ் செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப் படாமல்:”-எபி. 2:11. கிறிஸ்தவனின் வாழ்க்கையானது விசுவாசம், வெற்றி, தேவனிலுள்ள மகிழ்ச்சி ஆகியவைகளை உடைய ஒன்றாக இருக்கவேண்டும். “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்”-1 யோவான் 5:4. “கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்”- நெகே. 8:10. கர்த்தருக்குள் “எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது”-1 தெச. 5:16—18. (47)GCTam 557.2

    வேதாகம மதமாற்றம், பரிசுத்தமாக்கப்படுதல் ஆகியவைகளின் கனிகளானது அப்படிப்பட்டவைகளாக உள்ளன. தேவனுடைய கற்பனையால் முன்வைக்கப்பட்டுள்ள பெரும் நீதியின் கொள்கைகள்கிறிஸ்தவ உலகத்தினால் வித்தியாசம் இல்லாத வகையில் கருதப்பட்டுவருவதினால், இந்தக் கனிகள் மிக அபூர்வமாக சாட்சியளிக்கின்றன. இந்தக் காரணமாகத்தான், கடந்த காலங்களில் நிகழ்ந்த எழுப்புதல்களில் காணப்பட்டிருந்த தேவ ஆவி ஆற்றிய செயல், இப்பொழுது அந்த அளவிற்கு ஆழமற்றதாகவும். மிகக் குறைவானதாகவும் இருக்கிறது. (48)GCTam 557.3

    நாம் எவைகளை நோக்கிக்கொண்டிருக்கிறோமோ, அவைகளைப் போன்றே மாற்றமடைகின்றோம். தேவன் தமது பூரணத்துவத்தையும் அவரது சுபாவத்தின் பரிசுத்தத்தையும் மனிதர்களுக்குத் தமது பரிசுத்த கற்பனையினால் திறந்துகாட்டியிருந்தார். அதை மனிதர்கள் அலட்சியம் செய்தபோது, மனிதர்களின் மனங்கள் மனிதர்களின் போதனைகளினாலும் தத்துவ விளக்கங்களினாலும் கவரப்பட்டபோது, ஜீவனுள்ள பக்தி சபையில் கீழிறங்கத் தொடங்கியதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? “என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்கள்”-எரே. 2:13. (49)GCTam 557.4

    “துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்”-சங். 1:1-3. தேவனுடைய கற்பனை அதன் சரியான- ஆதிநிலைக்கு எடுத்து நிறுத்தப்படும்போதுமட்டுமே, அவருடைய ஜனங்கள் என்று கூறிக்கொள்ளுபவர்களிடம் பழைய கால விசுவாசமும் தெய்வபக்தியும் மிக்க எழுப்புதலும் உண்டாகமுடியும். வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ, நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்”-எரே. 6:16. (50)GCTam 558.1