Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாபெரும் ஆன்மீகப் போராட்டம்!

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    23—ஆசரிப்புக்கூடாரம் என்றால் என்ன?

    (மூலநூல் : The Great Controversy, பக்கம்: 409—422)

    “இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும்; பின்பு பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும்”-தானி. 8:14 என்னும் வேதவாக்கியம் மற்றனைத்தையும்விட அட்வெந்துக்களின் விசுவாசத்திற்கு அஸ்திவாரமாகவும் மையத் தூணாகவும் உள்ளது. கர்த்தரின் அதிசீக்கிர வருகையைப்பற்றிய நம்பிக்கையை உடையவர்களாயிருந்த அனைத்து விசுவாசிகளுக்கும் இவை பழக்கப்பட்ட வார்த்தைகளாக இருந்தன. இந்தத் தீர்க்கதரிசனம் ஆயிரக்கணக்கானவர்களின் உதடுகளில் இருந்து அவர்களது விசுவாசத்தின் கோட்பாட்டுச் சொற்களாகத் திரும்பத் திரும்பக் கூறப்பட்டன. அவர்களது ஒளிமிக்க எதிர்பார்ப்புக்களும், மிகவும் அதிகமாகப் போற்றப்பட்டிருந்த நம்பிக்கைகளும் அதில் முன்னுரைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சிகளைத்தான் சார்ந்திருந்தன என அனைவரும் உணர்ந்தனர். இந்தத் தீர்க்கதரிசன நாட்கள் 1844-ம் வருடம் இலையுதிர்காலத்தில் முடிவடையும் என்று காட்டப்பட்டிருந்தது. மற்ற கிறிஸ்தவ உலகத்தினருடன், வருகைக்காரர்களும் பொதுவாகச் சேர்ந்து, பூமியோ அல்லது அதன் ஏதோ ஒரு பகுதியோ பரிசுத்தஸ்தலமாக இருந்தது என்று நம்பியிருந்தனர். கடைசி நாட்களில் அக்கினியால் பூமி தூய்மைப்படுத்தப்படுவதுதான் பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படுதல் என்ற அவர்கள் புரிந்துகொண்டிருந்தனர். எனவே 1844— ல் கிறிஸ்து திரும்பிவரும்போது அது நிகழும் என்பது அவர்களின் முடிவாக இருந்தது. (1)GCTam 475.1

    ஆனால் குறிக்கப்பட்டிருந்த நேரம் கடந்துசென்றது. கர்த்தர் வர வில்லை. தேவனுடைய வார்த்தைகள் தவறக்கூடியவை அல்ல என்பதை அந்த விசுவாசிகள் அறிந்திருந்தனர். எனவே தீர்க்கதரிசனத்தைப்பற்றிய அவர்களது விளக்கம் தவறானதாக இருக்கக்கூடும் என எண்ணவேண்டியதாயிற்று. ஆனால் அந்தத் தவறு எங்கே இருந்தது? 2300 நாட்கள் 1844-ல் முடிவடைந்தன என்பதை மறுப்பதினால் அந்தச் சிக்கலின் முடிச்சை அவிழ்க்க அநேகர் அவசரப்பட்டனர். அவர்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில் கிறிஸ்து வரவில்லை என்பதைத்தவிர, இதற்கு வேறு காரணம் கொடுக்கமுடியவில்லை. தீர்க்கதரிசன நாட்கள் 1844-ல் முடிவடைந்திருந்தால், உலகத்தை அக்கினியால் தூய்மைப்படுத்துவதன் மூலமாக, பரிசுத்த ஸ்தலத்தை சுத்திகரிக்க கிறிஸ்து வந்திருந்திருக்கவேண்டும். அவர் வராததால், அந்த நாட்கள் முடிவடைந்திருக்காது என்று அநேகர் வாதம்செய்தனர். (2)GCTam 475.2

    இந்த முடிவை ஏற்பதானது, முன்னர் எடுக்கப்பட்ட தீர்க்கதரிசன காலங்களின் கணிப்பை மறுப்பதாக இருந்தது. எருசலேமைத் திரும்ப எடுத்துக்கட்டும் கட்டளை அர்தசஷ்டாவினால் பிறப்பிக்கப்பட்டது. இந்தப்பணி கி.மு.457-ம் வருடம் இலையுதிர்காலத்தில் ஆரம்பமாயிற்று. அதுமுதல் 2300 நாட்கள் ஆரம்பமானதாகக் காணப்பட்டது. இந்த தீர்க்கதரிசனத்தின் ஆரம்ப இடமாக இதைக் கணக்கில் எடுத்துக்கொண்டபோது, தானி. 9:25-27-ல் முன்னுரைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சிகளின் கால விளக்கங்கள் அனைத்துடனும் அது பூரணமான இசைவுள்ளதாக இருந்தது. மேலும் 2300 நாட்களின் பகுதியான அறுபத்தொன்பது வாரங்கள்முதல் (69*7= 483 நாட்கள்), அபிஷேகம்பண்ணப்பட்ட மேசியாவரை எட்டவேண்டியதாக இருந்தது. கிறிஸ்துவின் ஞானஸ்நானமும், ஆவியினால் அபிஷேகம் செய்யப்படுதலும், குறிப்பிட்டிருந்தபடி மிகச்சரியாக கி.பி.27-ல் நிறைவேறியது. எழுபதாவது வாரத்தின் நடுவில் மேசியா சங்கரிக்கப்பட்டாகவேண்டும். கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்ற மூன்றரை வருடங்களுக்குப்பின், கி.பி. 31-ல் வசந்தகாலத்தில், கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். எழுபது வாரங்கள் அல்லது 70*7 = 490 வருடங்கள் மிகக்குறிப்பாக யூதர்களுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தது. இந்தக்காலத்தின் முடிவில், அந்த ஜாதி கிறிஸ்துவின் சீடர்களை உபத்திரவப்படுத்தியதால், கிறிஸ்துவை நிராகரிக்கும் செயலின்மீது முத்திரையைப் பதித்தது. எனவே கி.பி.34-ல் அப்போஸ்தலர்கள் புறஜாதிகளிடத்திற்குத் திரும்பினார்கள். இவ்வாறாக 2300 நாட்களின் (வருடங்களின்) முதல் பகுதியான 490 வருடங்கள் முடிவடைந்தன. அதனால் 1810 வருடங்கள் இன்னும் மீதமாக இருந்ததாகவேண்டும் (2300 490 1810). கி.பி.34-ல் இருந்து 1810 வருடங்கள் 1844வரை நீள்கிறது. பின்பு பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும் என்று தேவதூதன் கூறினான். குறிக்கப்பட்டிருந்த நேரத்தில் தீர்க்கதரிசனத்தின் முன்னிருந்த குறிப்புகள் அனைத்தும், கேள்விக்கிடமற்றவகையில் நிறைவேறியிருந்தன. பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும் நிகழ்ச்சி 1844-ல் நடைபெறும் என்பதற்கான விடையைத்தவிர, இந்தக் கணக்கிடுதலின் அனைத்தும் தெளிவும் இசைவும் உள்ளதாக இருந்தன. அந்த நாட்கள் அந்தக் காலத்தில் முடிவடைந்தன என்பதை மறுப்பது, அந்தக் கேள்வி முழுவதையும் குழப்பத்திற்குள்ளாக்கிவிடும். தவறாத விதத்தில் நிறைவேறின தீர்க்கதரிசனங்களினால் ஸ்திரப்படுத்தப்பட்ட நிலைகளை அது மறுப்பதாகவும் இருக்கும். (3)GCTam 476.1

    ஆனால் மாபெரும் அட்வெந்து இயக்கத்தில் தேவன் தமது பிள்ளைகளை நடத்தினார். அவரது வல்லமையும் மகிமையும் அந்தப் பணியில் இருந்தது. அது தவறானது மதவாதத்தின் எழுச்சியினால் உண்டானது என்று நிந்திக்கும்படி, அதை இருளிலும் ஏமாற்றத்திலும் முடிவடைய அவர் அனுமதிக்கப்பட்டார். சந்தேகத்திலும் நிச்சயம் இன்மையிலும் இருக்கும்படி தேவன் அவரது வார்த்தையை விட்டு விடமாட்டார். முன்னர் கணக்கிடப்பட்டிருந்த தீர்க்கதரிசனக் காலக்கணிப்புகளை அநேகர் கைவிட்டுவிட்டு, அதன் அடிப்படையிலிருந்த அந்த இணக்கத்தின் சரியான தன்மையை மறுத்தனர். மற்றவர்கள் வேத வாக்கியங்களினாலும், தேவ ஆவியின் சாட்சியினாலும் தாங்கப்பட்டிருந்த விசுவாசம், அனுபவம் ஆகியவைகளின் குறிப்புகளை மறுக்க மனமற்றவர்களாக இருந்தனர். தீர்க்கதரிசனங்களைப்பற்றிய ஆராய்ச்சிகளின்போது, அவர்கள் பின்பற்றிய விளக்கங்கள் சரியான கொள்கையை உடையதாயிருந்தன என அவர்கள் நம்பினர். ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்த உண்மைகளை உறுதியாகப் பற்றிக்கொண்டிருக்கவேண்டியது அவர்களது கடமை என்றும், அவர்களது வேதாகம ஆராய்ச்சியின்போது அதே கொள்கையை அவர்கள் தொடரவேண்டுமென்றும் அவர்கள் நம்பினார்கள். வாஞ்சைமிக்க ஜெபத்துடன் தங்கள் நிலையை அவர்கள் திரும்பிப்பார்த்து, தவறு எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிய வேதவாக்கியங்களை ஆராய்ந்தனர். அவர்களது தீர்க்கதரிசனக் காலக்கணக்குகளில் தவறைக் காணமுடியாதவர்களாக அவர்கள் இருந்தபோது, பரிசுத்த ஸ்தலம் என்னும் பொருள்பற்றி மிக அதிகமாக சோதித்தறியும்படி அவர்கள் நடத்தப்பட்டனர். (4)GCTam 477.1

    அவர்களது சோதனையில், பூமிதான் பரிசுத்தஸ்தலம் என்னும் பிரபலமான நோக்கினைத் தாங்கும் சான்று எதுவும் வேதவாக்கியத்தில் இருக்கவில்லை என்பதை அவர்கள் கற்றுக்கொண்டனர். ஆனால் அவர்கள் வேதாகமத்தில் பரிசுத்தஸ்தலம் என்னும் பொருள் பற்றிய முழுவிளக்கத்தில், அதன் தன்மை, இருப்பிடம், ஆராதனை முறைகள் ஆகியவைகளைக் கண்டனர். பரிசுத்த எழுத்தாளர்களின் சாட்சி சகலவிதமான கேள்விகளுக்கும் அப்பாற்பட்டவையாக இந்தப் பொருளை மிகத் தெளிவாகவும் போதுமானதாகவும் வைத்தன. அப்போஸ்தலனாகிய பவுல் எபிரெயருக்கு எழுதின நிருபத்தில் இப்படிக் கூறுகிறார். “அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்கேற்ற முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலமும் உடையதாயிருந்தது. எப்படியெனில், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டடிருந்தது; அதின் முந்தின பாகத்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவசமுகத்தப்பங்களும் இருந்தன; அது பரிசுத்த ஸ்தலமென்னப்படும். இரண்டாந் திரைக்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரம் இருந்தது. அதிலே பொன்னாற்செய்த தூபகலசமும், முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனுடைய தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன. அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன; இவைகளைக்குறித்து விவரமாய்ப்பேச இப்பொழுது சமயமில்லை”-எபி. 9:1—5. (5)GCTam 477.2

    பவுல் இங்கு குறிப்பிடும் பரிசுத்தஸ்தலமும் தேவனுடைய கட்டளையின்படி மோசேயினால் அமைக்கப்பட்டதாகும். “அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக”-யாத். 25:8. இந்தக் கட்டளை மேசே மலையின் மீதிருந்தபோது தேவனால் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. இஸ்ரவேலர்கள் வனாந்திர வழியாகப் பயணம் செய்ததால், ஆசரிப்பபுக் கூடாரமானது ஓரிடத்திலிருந்து வேறொரிடத்திற்குப் பெயர்த்துக்கொண்டு செல்லப்பபடும் விதத்தில் கட்டப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், அது மிகச்சிறப்பான தோற்றம் உடையதாக இருந்தது. அதன் சுவர்கள் பொன் தகடுகள் போர்த்தப்பட்ட நேரான பலகைகளினால் ஆனதாக இருந்தது! அவை வெள்ளிக் குழிகளுக்குள் நிறுத்தப்பட்டிருந்தன. அதன் கூரை பலவரிசைத் திரைச்சீலைகளால் அல்லது மூடுதிரைகளால் அமைக்கப்பட்டிருந்தன. வெளிப்பகுதி தோலினாலும், மீந்த உட்பகுதி, பட்டு நூலினாலும் அழகிய கேருபீன்களின் உருவங்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்தன. வெளிப் பிராகாரத்தில் தகனபலிசெலுத்தும் பலிபீடத்துடன் அந்த ஆசரிப்புக் கூடாரம் ஒரு அழகிய திரைச்சீலையினால் பிரிக்கப்பட்ட, பரிசுத்த ஸ்தலம், மகாபரிசுத்த ஸ்தலம் என்னும் இரு பகுதிகளாக இருந்தன. அதைப்போன்றே அதன் முதலாம் பகுதியின் வாசலையும் ஒரு திரைச்சீலை மூடியிருந்தது. (6)GCTam 478.1

    பரிசுத்தஸ்தலத்தின் தென்புறத்தில் பகலிலும் இரவிலும் பரிசுத்த ஸ்தலத்திற்கு வெளிச்சம் கொடுக்கும்படி ஏழு கிளைகளையுடைய ஒரு குத்துவிளக்கும், வடபுறத்தில் தேவசமுகத்து அப்பங்களை வைக்கும் மேசையும் பரிசுத்த ஸ்தலத்தையும் மகா பரிசுத்தஸ்தலத்தையும் பிரித்திருந்த திரைச்சீலைக்கு முன்பாக இஸ்ரவேலரின் ஜெபங்களுடன் தேவனுக்கு முன்பாக உயர எழும்பியிருந்த தூப மேகத்தை எழுப்பி இருந்த பொன்னாலான தூபபீடமும் இருந்தன. (7)GCTam 478.2

    மகா பரிசுத்தஸ்தலத்தில் மிகஉயர்ந்த மரப்பலகையால் செய்யப்பட்டு, பொன்தகட்டினால் மூடப்பட்டிருந்த உடன்படிக்கைப்பெட்டி இருந்தது. இந்தப் பெட்டிக்குள் தேவனால் எழுதப்பட்ட பத்துக்கற்பனைகள் அடங்கிய இரு கற்பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. உடன்படிக்கைப் பெட்டிக்கு மேலாகவும் அந்தப் பரிசுத்தமான பெட்டியை மூடும்படியாகவும், பொன் தகட்டினால் மிகச்சிறப்பான வகையில் பொதியப்பட்டிருந்த கிருபாசனம் இருந்தது. அதன் இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக சுத்தப்பொன்னினாலான இரு கேருபீன்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்தப் பகுதியில் கேருபீன்களுக்கிடையில் மகிமையின் மேகத்தில் தேவப் பிரசன்னம் வெளிக்காட்டப்பட்டிருந்தது. (8)GCTam 479.1

    எபிரெயர்கள் கானான் தேசத்தில் நிலையாகத் தங்கியபின் ஆசரிப்புக்கூடாரத்திற்குப் பதிலாக சாலொமோனின் தேவாலயம் அமைக்கப்பட்டது. அது ஆசரிப்புக்கூடாரத்தைவிடப் பெரிய அளவில் இருந்தபோதிலும், அதைப்போன்ற அமைப்புகளை உடையதாகவே இருந்தது. அதைப்போன்றே அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தானியேலின் நாட்களில் அது பாழாக்கப்பட்டு, கி.பி.70-ல் ரோமர்களால் அது அழிக்கப்படும்வரை, அந்த நிலையிலேயே இருந்தது. (9)GCTam 479.2

    வேதாகமம் தகவல் தரும் இந்த ஒரு பரிசுத்தஸ்தலம் மட்டும் தான் பூமியில் எப்போதும் இருந்திருந்தது. இது முதலாம் உடன்படிக்கையின் பரிசுத்தஸ்தலம் என்று பவுலினால் அறிவிக்கப்பட்டது. ஆனால் புதிய உடன்படிக்கையில் பரிசுத்தஸ்தலம் இல்லையா? (10)GCTam 479.3

    சத்தியத்தைத் தேடினவர்கள் எபிரெயரின் புத்தகத்தை மறுபடியும் புரட்டிப் பார்த்தபோது, பவுலின் வார்த்தைகளில் ஏற்கனவே அடக்கமாயிருந்த இரண்டாவது பரிசுத்தஸ்தலத்தை அல்லது புதிய உடன்படிக்கையின் பரிசுத்தஸ்தலம் இருப்பதை இவ்வாறு கண்டனர். “அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்கேற்ற முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலமும் உடையதாயிருந்தது”-GCTam 479.4

    எபி. 9:1. அன்றியும் என்று பவுல் பயன்படுத்திய வார்த்தையானது, இதற்குமுன் இருந்த பரிசுத்தஸ்தலத்தைப்பற்றி அவன் குறிப்பிட்டிருந்தான் என்பதைக் காட்டுகிறது. எனவே, அவர்கள் அதற்கு முந்திய அதிகாரத்தின் ஆரம்பத்திற்கு திரும்பி, இப்படி வாசித்தனர். “மேற்சொல்லியவைகளின் முக்கியமான பொருளென்னவெனில். பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாய், பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷரால் அல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ் செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு”-எபி. 8:1,2. (11)GCTam 479.5

    புதிய உடன்படிக்கையின் பரிசுத்தஸ்தலம் இங்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. முதலாம் உடன்படிக்கையின் பரிசுத்தஸ்தலம் மனிதனால் ஏற்படுத்தப்பட்டு, மோசேயினால் கட்டப்பட்டிருந்தது. ஆனால் இரண்டாவது பரிசுத்தஸ்தலம் மனிதனால் கட்டப்படாமல், கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அந்தப் பரிசுத்தஸ்தலத்தில் பூமிக்குரிய ஆசாரியர்கள் அவர்களது ஆசாரிய ஊழியங்களைச் செய்தனர். இந்தப் பரிசுத்தஸ்தலத்தில் நமது பிரதான ஆசாரியராயிருக்கும் கிறிஸ்து, தேவனுடைய வலதுபக்கத்தில் ஊழியம் செய்கிறார். ஒரு பரிசுத்தஸ்தலம் பூமியில் இருந்தது. மற்றது பரலோகத்தில் இருக்கிறது. (12)GCTam 480.1

    மேலும், மேசேயினால் கட்டப்பட்ட பரிசுத்தஸ்தலம் ஒரு மாதிரியைப் பின்பற்றியதாக இருந்தது. “நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதினுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக.” “மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின் படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு” (யாத்திராகமம் 25:9,40) என்று கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருந்தார். “அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டு வருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம்” “பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டியதாயிருந்தது; பரலோகத்திலுள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாமே.” “இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும்ஒத்திருக்கிறது;” “மெய்யான பரிசுத்தஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்தஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காகத் தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்” எபி. 9:9,23; 8:5; 9:24. (13)GCTam 480.2

    இயேசு நமக்காக ஊழியம் செய்யும் பரலோகத்திலுள்ள பரிசுத்தஸ்தலம் பெரும் மாதிரியாக இருக்கிறது. மோசே அமைத்த பரிசுத்தஸ்தலம் இதன் நகலாக இருக்கிறது. பூமிக்குரிய பரிசுத்தஸ்தலத்தைக் கட்டினவர்களின்மீது தேவன் தமது ஆவியை வைத்தார். அதன் கட்டுமானத்தில் காணப்படும் கலைத்திறன் தெய்வீக ஞானத்தின் வெளிக்காட்டலாக உள்ளது. அதன் சுவர்கள் கெட்டியான பொன்னின் தோற்றமுடையதாக இருந்து, விளக்குத் தண்டின் ஏழு விளக்குகளின் ஒளியை எப்பக்கமும் பிரதிபலிப்பிக்கக் கூடியவையாக இருந்தன. சமூகத்தப்பங்களின் மேஜையும் தூபபீடமும் சுடப்பட்ட பொன்னைப்போல ஒளிப்பிழம்பாயிருந்தன. மேற்கூரையாக அமைந்திருந்த அழகும் ஆடம்பரமுமிக்க திரைச்சீலைகளின்மீது இளநீல நூலாலும் கேருபீன்களின் வடிவங்கள் விசித்திரமான விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த அந்தக் காட்சி, அழகை அதிகப்படுத்தியிருந்த இரண்டாவது திரைச்சீலைக்கு அப்பால் தேவனின் மகிமையைக் காணக்கூடிய விதத்தில் வெளிக்காட்டியிருந்த பரிசுத்த ஷெகீனா இருந்தது. அதற்கு முன்பாகப் பிரதான ஆசாரியன் தவிர, வேறொருவரும் உட்பிரவேசித்தால் உயிர்வாழ முடியாத நிலை இருந்தது. பூமிக்குரிய ஆசாரிப்புக்கூடாரத்தின் ஈடு இணையற்ற அழகு, நமது முன்னோடியாக விளங்கும் கிறிஸ்து தேவ சிங்காசனத்தின் முன் நின்று நமக்காக ஊழியம் செய்யும் பரலோக தேவாலயத்தின் மகிமைகளை மனிதக் காட்சிக்குப் பிரதிபலித்துக் காட்டினது. ஆயிரமாயிரம்பேர் சேவித்து, கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நிற்கும், அரசர்களுக்கெல்லாம் அரசரான அவர் வாழுமிடமாகிய தேவாலயம், நித்திய சிங்காசனத்திலிருந்து புறப்படும் மகிமையினால் நிறைந்ததாக இருந்தது. அதன் பாதுகாவலர்களாயிருக்கும் ஒளிமிக்க சேராபீன்கள் அவர்களது முகங்களை மறைத்துத் துதித்துக் கொண்டிருந்தனர். புமிக்குரிய கூடாரம், மனிதக் கரங்களால் அதுபோன்று ஒருபோதும் கட்டப்பட்டிராத மிகச்சிறந்த அமைப்பை உடையதாக இருந்த பரலோக தேவாலயத்தின் விசாலம், மகிமை ஆகியவைகளின் மங்கலான பிரதிபலிப்பாக இருந்தது. அப்படியிருந்தும் பரலோக பரிசுத்த ஸ்தலத்தைப்பற்றிய முக்கியமான சத்தியங்களும் மனித மீட்பிற்கு என்று செய்யப்பட்டிருந்த பெருங்காரியங்களும் பூமிக்குரிய பரிசுத்தஸ்தலத்திலும், அதில் செய்யப்பட்டிருந்த ஆராதனை முறைகளிலும் பொதிந்திருந்தன. (14)GCTam 480.3

    பரலோக ஆசரிப்புக்கூடாரத்திலிருந்த பரிசுத்தமான இடங்கள் பூலோக ஆசரிப்புக்கூடாரத்திலிருந்த இரு பகுதிகளில் எடுத்துக்காட்டப்பட்டிருந்தன. அப்போஸ்தலனாகிய யோவானுக்கு பரலோக தேவாலயத்தின் ஒரு காட்சி காணும்படியாக அனுமதிக்கப்பட்டபோது, “ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன”- வெளி. 4:5. அவன் கண்ட தரிசனத்தின் மாதிரியாக அது இருந்தது. “வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது”-வெளி. 8:3. இங்கு அந்த தீர்க்கதரிசி பரலோகத்திலுள்ள ஆசரிப்புக்கூடாரத்தின் முதலாம் பகுதியைக் காணும்படி அனுமதிக்கப்பட்டான். அங்கு ஏழு அக்கினி தீபங்களையும் தூபபீடத்தையும் அவன் கண்டான். பூமிக்குரிய ஆசரிப்புக்கூடாரத்திலிருந்த பொன் குத்துவிளக்கும் தூபபீடமும் அவைகளை எடுத்துக்காட்டியிருந்தன. “அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது;”- வெளி 11:19. அவன் திரைச்சீலைக்கு உள்ளாக மகா பரிசுத்தஸ்தலத்தைக் கண்டான். மோசேயினால் நிர்மாணிக்கப்பட்ட தேவனுடைய கற்பனைகளை உள்ளடக்கியிருந்த பரிசுத்தமான பெட்டகம் இதனால் எடுத்துக்காட்டப்பட்டிருந்தது. (15)GCTam 481.1

    இவ்வாறாக, இப்பொருள்பற்றி ஆராய்ந்தவர்கள், பரலோகத்தில் ஒரு பரிசுத்த ஸ்தலம் இருப்பதன் சான்றை வாக்குவாதம் செய்வதற்கு இடமின்றிக் கண்டனர். மோசே அவனுக்குக் காட்டப்பட்டதின் மாதிரியின்படியே பூமிக்குரிய ஆசரிப்புக்கூடாரத்தை உண்டு பண்ணினான். அதன் உண்மையான வடிவு, பரலோகத்திலுள்ள மெய்யான பரிசுத்தஸ்தலம் என்று பவுல் அறிவிக்கிறான். அதை பரலோகத்தில் கண்டதாக யோவான் சாட்சி பகருகிறான். (16)GCTam 482.1

    தேவன் வாழுமிடமாகிய பரலோக தேவாலயத்தில், நீதியினாலும் நியாயத்தினாலும் அவரது சிங்காசனம் அமைக்கப்பட்டுள்ளது. மனித இனம் முழுவதையும் சோதிக்கின்ற பெரும் ஆட்சியின் உரிமையாக மகா பரிசுத்தஸ்தலத்தில் அவரது கற்பனை உள்ளது. கற்பனைகளுள்ள கற்பலகைகளை புனிதமாக உள்ளடக்கியுள்ள உடன்படிக்கைப்பெட்டி, கிருபாசனத்தால் மூடப்பட்டுள்ளது. இதன்முன் கிறிஸ்து அவரது இரத்தத்துடன் பாவியின் சார்பில் பரிந்து பேசுகிறார். இவ்வாறாக, மனித மீட்பின் திட்டத்தில் நீதியும் இரக்கமும் ஐக்கியமானது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஐக்கியம் எல்லையற்ற ஞானம் ஒன்றினால் மட்டுமே திட்டமிடவும், எல்லயற்ற வல்லைைம ஒன்றினால் மட்டுமே நிறைவேற்றக்கூடியதாகவும் உள்ளது. பரலோகம் முழுவதையும் வியப்பினாலும் போற்றுதலினாலும் நிறைப்பதாக இந்த ஐக்கியம் இருக்கிறது. பூமிக்குரிய ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள கேருபீன்கள் கிருபாசனத்தை பக்தியுடன் நோக்குவது, பரலோக சேனைகள் இரட்சிப்பின் பணியை தியானிக்கும் வாஞ்சையை எடுத்துக்காட்டுகின்றது. தேவ தூதர்களும் உற்றுப்பார்க்க வாஞ்சையாக உள்ள இரக்கத்தின் இரகசியமாக இது உள்ளது. மனந்திரும்புகின்ற பாவியை நீதிமானாக்கும்போது, அதாவது விழுந்துபோன இனத்துடனுள்ள உறவை அவர் புதுப்பிக்கும்போது, எண்ணிலடங்கா திரள்கூட்டமானவர்களைப் பாழ்க்கடிப்பின் குழியிலிருந்து உயர்த்துவதற்காக குனியும்போது, கறையற்ற அவரது வஸ்திரத்தினால் அவர்களைப் போர்த்தும்போது, ஒருபோதும் விழுந்து போகாத தேவ தூதர்களுடன் அவர்களை ஐக்கியப்படுத்தும்போது, தேவனுடைய சமூகத்தில் என்றென்றும் வாழச்செய்யும்போது, தேவனை நீதியுள்ளவராகக் காண இயலும். (17)GCTam 482.2

    “அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார்; இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும்” (சக. 6:13) என்று மனிதனுக்காகக் கிறிஸ்துவின் பரிந்துபேசும் ஊழியம்பற்றி, அந்த அழகிய தீர்க்கதரிசனத்தில் காட்டப்பட்டுள்ளது. (18)GCTam 483.1

    அவர் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார். கிறிஸ்து தமது தியாபகபலி, மத்தியஸ்தம் ஆகிய இரண்டிலும் தேவனுடைய சபையின் அஸ்திவாரமாகவும், அதைக் கட்டுபவராகவும் இருக்கிறார். “அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்; அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது; அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்” (எபே. 2:20-22) என்று அப்போஸ்தலனாகிய பவுல் அவரைச் சுட்டிக்காட்டுகிறார். (19)GCTam 483.2

    அவர் மகிமையுடையவராக இருப்பார். விழுந்துபோன இனத்தை மீட்டதின் மகிமை கிறிஸ்துவிற்குரியது. “நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களறநம்மைக் கழுவி, அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்” (வெளி. 1:6) என்பது யுகங்கள் நெடுகிலும் மீட்கப்பட்டவர்களின் பாடலாக இருக்கும்.(20)GCTam 483.3

    அவர் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார். தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார். அவரது மகிமையின் சிங்காசனத்தின்மீது இப்பொழுது அல்ல, அவரது மகிமையின் ராஜ்யம் இன்னும் தோன்றவில்லை. அவரது மத்தியஸ்த ஊழியம் முடிவடையும்போது, கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது. இப்பொழுது கிறிஸ்து அவரது பிதாவாகிய தேவனுடைய சிங்காசனத்தில் அவருடன் ஆசாரியராக ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்த அவர், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவராயிருக்கிற அவர், சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். ஒருவன் பாவஞ்செய்வானானால், நமக்காகப் பிதாவினிடத்தில் பேசும் ஒருவர் இருக்கிறார். குத்தப்பட்டதும் நொறுக்கப்பட்டதுமான கறைதிரையற்ற அவரது சரீரம் பரிந்துபேசக்கூடியதாக இருக்கிறது. காயப்பட்ட கரங்கள், குத்தப்பட்ட விலா, சிதைக்கப்பட்ட பாதங்கள், ஆகியவை இப்படிப்பட்ட எல்லையில்லா விலையால் வாங்கப்பட்ட மனிதனுக்காகப் பரிந்து பேசுகின்றன. (21)GCTam 483.4

    அந்த இரண்டிற்கும் நடுவில், சமாதானத்தின் ஆலோசனை விளங்கும். இழக்கப்பட்டுப்போன இனத்திற்கு இரட்சிப்பின் ஊற்றாக உள்ள பிதாவின் அன்பு, குமாரனின் அன்பைவிடக் குறைந்ததல்ல. உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுக்கொள்ளுவேன். பிதா தாமே உங்களை நேசிக்கிறார். தேவன், இயேசு கிறிஸ்துவைக்ெெகாண்டு, உலகத்தை ஒப்புரவாக்கியிருந்தார். உயரே உள்ள பரிசுத்தஸ்தலத்தில் உள்ள ஊழியத்தில் அவர்களிருவருக்கும் இடையில் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும். “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” ஏசாயா 53:4; எபி. 4:15; 2:18; யோவான் 2:1; 16:26,27; 2 கொரி. 5:19; யோவான் 3:16 (22)GCTam 484.1

    பரிசுத்தஸ்தலம் என்றால் என்ன? என்னும் கேள்விக்கு வேதாகமத்தில் தெளிவான பதில் உள்ளது. வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பரிசுத்தஸ்தலம் என்னும் செல்லானது, முதலாவதாக மோசேயினால் கட்டப்பட்ட ஆசரிப்புக்கூடாரத்தைக் குறிக்கிறது. இது பரலோகத்தில் இருந்ததின் மாதிரியாக இருந்தது. இரண்டாவதாகப் பரலோகத்திலுள்ள மெய்யான ஆசரிப்புக்கூடாரத்தை பூமியிலிருந்த பரிசுத்தஸ்தலம் சுட்டிக்காட்டியது. கிறிஸ்துவின் மரணத்தின் சாயலாக இருந்த ஆராதனை முறைகள் முடிவடைந்தன. பரலோகத்திலுள்ள மெய்யான ஆசரிப்புக்கூடாரம் புதிய உடன்படிக்கையின் ஆசரிப்புக்கூடாரமாக உள்ளது. இந்த அமைப்பில், தானியேல்8:14-ல் உள்ள தீர்க்கதரிசனம் நிறைவேறினது. அது குறிப்பிடும் பரிசுத்தஸ்தலம், புதிய உடன்படிக்கையின் பரிசுத்தஸ்தலமாகத்தான் இருக்கவேண்டும். 1844-ல் 2300 நாட்களின் முடிவில், அநேக நூற்றாண்டுகளாக, பூமியில் பரிசுத்தஸ்தலம் இருக்கவில்லை. இவ்வாறாக, “இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும்; பின்பு பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும்” (தானி. 8:14) என்பது கேள்விக்கிடமற்ற விதத்தில் பரலோகத்திலுள்ள பரிசுத்தஸ்தலத்தைச் சுட்டிக்காட்டுகிறது. (23)GCTam 484.2

    ஆனாலும், பரிசுத்தஸ்தலம் சுத்தகரிக்கப்படும் என்றால் என்ன? என்னும் மிகமுக்கியமான கேள்விக்கு, விடையைக் காணவேண்டியதாக இருக்கிறது. அதாவது பூமிக்குரிய பரிசுத்தஸ்தலத்தில் அது தொடர்பான ஆராதனை முறைகள் நிகழ்ந்தன என்று பழைய ஏற்பாட்டு வேதவாக்கியங்கள் கூறுகின்றன. சுத்திகரிக்கப்படவேண்டியது ஏதாவது பரலோகத்தில் இருக்கமுடியுமா? எபி. 9-ம் அதிகாரத்தில், பூமிக்குரிய பரிசுத்தஸ்தலம், பரலோக பரிசுத்தஸ்தலம் ஆகிய இரண்டும் சுத்திகரிக்கப்படுதல் மிகத் தெளிவாகப் போதிக்கப்பட்டுள்ளது. நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாயிருந்தது. பரலோகத்தில் உள்ளவைகளோ, இவைகளிலும் விசேஷித்த பலிகளினாலே விலைமதிப்புவாய்ந்த கிறிஸ்துவின் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்படவேண்டியதாமே-எபி. 9:22,23. சாயலும் உண்மையுமாயிருந்த இரு ஆராதனை முறைகளிலும், சுத்திகரிப்பு இரத்தத்தினால் நிறைவேறியது. முதலாவதில், மிருகங்களின் இரத்தத்தினாலும், பின்னானதில் கிறிஸ்துவின் இரத்தத்தினாலும் சுத்திகரிக்கப் பட்டன. “இரத்தஞ்சிந்துதலில்லாமல் பாவமன்னிப்பு உண்டாகாது” என்னும் காரணத்தினால்தான் இந்த சுத்திகரிக்கப்படுதல் ஏன் செயல்படுத்தப்பட வேண்டும் என்று பவுல்கூறுகிறார். மன்னிப்பு அல்லது பாவத்தை தூரமாக விலக்குதல் என்பதுதான் நிறைவேற்றப்பட வேண்டிய ஊழியமாகும். ஆனால் பரலோகத்திலோ அல்லது பூமியிலோ பரிசுத்த ஸ்தலத்துடன் சம்பந்தப்பட்டதாகப் பாவம் எப்படி இருக்கமுடியும்? இதனை அடையாளமாக இருந்த ஆராதனை முறைகளில் இருந்து கற்றுக்கொள்ளலாம். ஏனெனில், பூமியில் ஊழியம்செய்த ஆசாரியர்களின் ஆராதனை பரலோகத்தில் உள்ளவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது (6TLI. 8:5) என்பதைக் கவனிக்கவும். (24)GCTam 484.3

    பூலோக ஆசரிப்புக்கூடார ஊழியமானது, இருபகுதிகளை உடையதாக இருந்தது. ஆசாரியர்கள் பரிசுத்தஸ்தலத்தில் நாள்தோறும் ஊழியம்செய்தனர். ஆனால் பிரதான ஆசாரியன் பாவநிவாரணம் செய்தல் என்னும் சிறப்பான ஒரு ஆராதனையை, பரிசுத்தஸ்தலத்தைச் சுத்திகரிக்கும் ஒரு ஊழியத்தை, வருடத்திற்கு ஒரு தடவை மகா பரிசுத்தஸ்தலத்தில் செய்தான். பாவத்திற்காக மனம் வருந்தின பாவி, நாள்தோறும் தனது காணிக்கையை (பலியை) ஆசரிப்புக்கூடார வாசலுக்குக் கொண்டுவந்தான். அங்கு பலியிடப்படும் மிருகத்தின் தலையின்மீது அவன் தன் கையை வைத்து, பாவத்தை அறிக்கை செய்து, இவ்வாறாக, உருவகமாக, தன் பாவங்களை அவன் தன்னிடம் இருந்து குற்றமில்லாத அந்த மிருகத்தின்மீது சுமத்துவான், அதன்பின் அந்த மிருகம் அடிக்கப்படும். இரத்தஞ்சிந்துதலில்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்று அப்போஸ்தலன் கூறுகிறான். மாமிசத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது.-லேவி. 17:11. மீறப்பட்ட தேவனுடைய பிரமாணம் மீறினவனின் உயிரைக் கேட்டது. இழக்கப்பட்டுப்போன பாவியின் உயிரைச் சுட்டிக்காட்டி, அவனது குற்றத்தை சுமந்த பலிமிருகத்தின் இரத்தம், ஆசாரியனால் எடுத்துச்செல்லப்பட்டது. பரிசுத்த ஸ்தலத்திலிருந்த திரைச்சீலைக்குப் பின்னால், உள்ளே பாவியினால் மீறப்பட்ட கற்பனைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டி இருந்தது. இந்தச் சடங்கினால், அந்த இரத்தத்தின் மூலமாக அந்தப் பாவம் பாவனையாக பரிசுத்தஸ்தலத்திற்கு மாற்றப்படுகிறது. சில காரியங்களில், அந்த இரத்தம் பரிசுத்தஸ்தலத்திற்குள் எடுத்துச்செல்லப்படாமலிருந்தது. ஆனால் அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் சபையின் அக்கிரமத்தைச் சுமந்து தீர்ப்பதற்கு... அதை உங்களுக்குக் கொடுத்தாரே! (லேவி. 10:17) என்று மோசே ஆரோனின் குமாரருக்குக் கட்டளையிட்டிருந்தபடி, அந்த மாமிசம் சாப்பிடப்படவேண்டியதாக இருந்தது. இந்த இரண்டு சடங்குகளும் குற்றம் புரிந்தவனிடமிருந்து பாவமானது பரிசுத்தஸ்தலத்திற்கு மாற்றப்பட்டதை அடையாளப்படுத்தியது. (25)GCTam 485.1

    இப்படிப்பட்ட ஊழியம் வருடம் முழுவதிலும் நாள்தோறும் நடைபெற்றது. இவ்விதமாக இஸ்ரவேலர்களின் பாவங்கள் பரிசுத்தஸ்தலத்திற்கு மாற்றப்படுவதினால், அவைகளை நீக்குவதற்கு ஒரு விசேஷமான ஊழியம் தேவையாக இருந்தது. பரிசுத்தஸ்தலத்தின் ஒவ்வொரு பகுதிக்காகவும் ஒரு பாவ நிவாரணம்செய்யும்படி தேவன் கட்டளையிட்டார். “இஸ்ரவேல் புத்திரருடைய தீட்டுகளினிமித்தமும், அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக் கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன்.” தன் விரலினால் அந்த இரத்தத்தில் எடுத்து, ஏழுதரம் அதின்மேல் தெளித்து, அதை இஸ்ரவேல் புத்திரரின் தீட்டுக்கள் நீங்கச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தக்கடவன்” - லேவி. 16:16,19. (26)GCTam 486.1

    வருடத்தில் ஒரு தடவை பாவநிவாரணநாள் என்னும் பெரிய நாளில், பிரதான ஆசாரியன் பரிசுத்தஸ்தலத்தை சுத்திகரிப்பதற்காக மகா பரிசுத்தஸ்தலத்திற்குள் பிரவேசிப்பான். ஆண்டு முழுவதிலும் நடைபெற்ற ஊழியத்தை இந்த ஊழியம் நிறைவுபடுத்தியது. பாவநிவாரண நாளில் இரண்டு வெள்ளாடுகள் ஆசரிப்புக்கூடாரத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அவைகளின் பேரில் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காட்டுக்காக ஒரு சீட்டுமாக சீட்டுப்போடப்பட்டன. எந்த வெள்ளாட்டின்மீது கர்த்தருக்கான சீட்டு விழுந்ததோ, அந்த ஆடு மக்களுக்காகப் பாவநிவாரண பலியாக அடிக்கப்பட்டது. ஆசாரியன் அதன் இரத்தத்தை திரைச்சீலைக்குள் கொண்டுவந்து, அதைக் கிருபாசனத்தின்மேலும், கிருபாசனத்திற்கு முன்பாகவும் தெளிக்கவேண்டும். அந்த இரத்தம் திரைச்சீலைக்கு முன்னால் இருந்த தூபபீடத்தின்மீதும் தெளிக்கப்படவேண்டும். (27)GCTam 486.2

    “அவன் இப்படிப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து தீர்ந்தபின்பு, உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக்கடாவைச் சேரப்பண்ணி, அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள்வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிடக்கடவன். அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்துக்குப் போவதாக”-லேவி. 16:8,21,22. போக்காடாக விடப்பட்ட அந்த வெள்ளாட்டுக்கடா இஸ்ரவேலரின் பாளயத்திற்குள் இனி ஒருபோதும் வராது. அதை வனாந்திரத்திற்குள் நடத்திச்சென்ற மனிதன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து ஸ்நானம்செய்து பின்பு பாளயத்திற்குத் திரும்புவான்.(28)GCTam 486.3

    இந்தச் சடங்காச்சாரங்கள் அனைத்தும் தேவனுடைய பரிசுத்தத்தையும் அவர் பாவத்தை வெறுப்பதையும் இஸ்ரவேலர்களுக்கு உணர்த்தும்படி நியமிக்கப்பட்டது. மேலும் அவர்களால் தங்களைக் கறைப்படுத்தாமல் பாவத்துடன் தொடர்புகொள்ளமுடியாது என்பதையும் உணர்த்தியது. இந்தப் பாவநிவாரண ஊழியம் நடைபெறும்போது, ஒவ்வொரு ஆத்துமாவும் தன்னைத் தாழ்த்தியாக வேண்டும். சகலவிதமான அலுவல்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு, இஸ்ரவேல் சபை முழுவதும் அந்த நாளை தேவனுக்கு முன்பாக பக்திவிநயமான தாழ்மையிலும், ஜெபத்துடனும் விசுவாசத்துடனும் இருதயத்தை ஆழமாகச் சோதிப்பதிலும் செலவிடவேண்டும். (29)GCTam 487.1

    சாயலாக இருந்த அந்த ஆராதனை முறையினால், முக்கியமான சத்தியங்கள் போதிக்கப்பட்டன. பாவிக்குப் பதிலாக ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் அந்த பலிப்பொருளின் இரத்தத்தினால் பாவம் நீக்கப்படவில்லை. இவ்விதமாக அது பரிசுத்தஸ்தலத்திற்கு மாற்றப்படும் ஒரு உபாத்தியாக ஏற்படுத்தப்பட்டிருந்தது. இரத்தத்தைச் செலுத்துவதின்மூலமாகப் பாவி கற்பனையின் அதிகாரத்தை ஒப்புக்கொண்டு, மீறுதலினால் உண்டான அவனுடைய குற்றத்தை அறிக்கை செய்து, வரவிருக்கும் மீட்பரின் மீதுள்ள விசுவாசத்தின்மூலமாக தனக்குப் பாவமன்னிப்பு வேண்டும் என்ற அவனது விருப்பத்தை வெளிக்காட்டினான். ஆனால் அவன் இன்னும் பாவத்தின் பழியிலிருந்து பூரணமான விடுதலை பெறாதவனாகவே இருந்தான். பாவநிவாரணநாளில் பிரதான ஆசாரியன் சபைக்கான ஒரு பலியை எடுத்துக்கொண்டு, மகா பரிசுத்தஸ்தலத்திற்குள், பலியின் இரத்தத்துடன் சென்று, கற்பனைக்கு மேலாக உள்ள கிருபாசனத்தின்மீது அதன் உரிமைகளைத் திருப்திப்படுத்துவதற்காகத் தெளிப்பான். அதன்பின், மத்தியஸ்தன் என்னும் அவனது தன்மையில், பாவங்களைத் தன்மீது எடுத்துக்கொண்டு, பரிசுத்தஸ்தலத்தில் இருந்து செல்லுவான். போக்காட்டின் தலையின்மீது தன் கையை வைத்து, அந்தப் பாவங்கள் அனைத்தையும் அதன்மீது அறிக்கை செய்து, இவ்வாறான பாவனையினால், அவன் அந்தப் பாவங்களைத் தன்மீதிருந்து அந்த வெள்ளாட்டுக்கடாவின் (சாத்தான்) மீது மாற்றுவான். பின்பு, அந்த வெள்ளாட்டுக்கடா அவைகளைச் சுமந்து, தூரமாகச் செல்லும். அவை மக்களிடமிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டன என்று கருதப்பட்டது. (30)GCTam 487.2

    அப்படிச் செய்யப்பட்டிருந்த ஆராதனை முறைகள் பரலோகத்தில் உள்ளவைகளுக்குச் சாயலானவைகளாக இருந்தன. (எபி. 9:23). எவைகள் பூலோக பரிசுத்தஸ்தல ஊழியத்தில் சாயலாக இருந்தனவோ அவைகள் பரலோக பரிசுத்தஸ்தல ஊழியத்தில் நிஜமானவையாகச் செய்யப்படுகின்றன. நமது இரட்சகர் பரலோகத்திற்கு எழுந்தருளிச்சென்றபின், நமது பிரதான ஆசாரியராக இருக்கும் ஊழியத்தைத் தொடங்கினார். “அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காகத் தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்” (எபி. 9:24) என்று பவுல்கூறுகிறார்.(31)GCTam 488.1

    திரைச்சீலைக்கு முன்பாக உள்ள பரிசுத்தஸ்தலத்தின் முதல் பகுதியில் வருடம் முழுவதிலுமாக ஆசாரியன் செய்த ஊழியமானது வெளிப்பிராகாரத்திலிருந்து பரிசுத்தஸ்தலத்தை வேறுபடுத்தும் வாசலாக அமைந்திருந்து, கிறிஸ்து அவரது பரமேறுதலைத் தொடர்ந்து ஊழியத்தில் பிரவேசித்ததை எடுத்துக்காட்டுகிறது. பாவநிவாரண பலியாக தேவனுக்குமுன் இரத்தத்தைப் படைப்பதும், இஸ்ரவேலர்களின் ஜெபங்களுடன் சேர்ந்து எழுந்த தூபம் காட்டுதல் ஆகியவை, ஆசாரியன் தன் அன்றாட ஊழியத்தில் செய்யும் பணியாக இருந்தது. அப்படியே கிறிஸ்துவும் பாவிகளின் சார்பாகத் தமது இரத்தத்துடன் பிதாவின் சமுகத்தில் பரிந்துபேசுவதுடன், குற்ற உணர்வினை உடைய விசுவாசிகளின் ஜெபங்களுடன் தமது விலைமதிப்புமிக்க நீதியான சுதந்த வாசனையை அவரது சமுகத்தில் படைக்கிறார். பரலோக பரிசுத்தஸ்தலத்தின் முதலாம் பகுதியில் நடைபெற்ற ஊழியம் இதுவே. (32)GCTam 488.2

    கிறிஸ்து அவரது சீடர்களின் பார்வையிலிருந்து உயரே எழுந்தருளினபோது, கிறிஸ்துவின் சீடர்களின் விசுவாசமும்அங்கு அவரைப் பின்தொடர்ந்தது. “அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது. நமக்கு முன்னோடினவராகிய இயேசு நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.” “வெள்ளாட்டுக்கடா, இளங் காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்” (எபி. 6:19,20 9:12) என்று பவுல் கூறியபடி அவர்களது நம்பிக்கை இதை மையமாகக் கொண்டிருந்தது. (33)GCTam 488.3

    பரிசுத்தஸ்தலத்தின் முதலாம்பகுதியில், பதினெட்டு நூற்றாண்டுகளாக இந்த ஊழியம் தொடர்ந்து நடைபெற்றது. பாவத்திற்காக வருந்தும் பாவியின் சார்பில் பரிந்துபேசின கிறிஸ்துவின் இரத்தம் அவர்களது பாவத்திற்கு மன்னிப்பையும் பிதாவின் அங்கிகரிப்பையும் பெற்றிருந்தபோதிலும், அவர்களது பாவங்கள் இன்னும் ஆவணங்களாகிய புத்தகங்களிலேயே இருந்தன. சாயலாக இருந்த ஆராதனை முறையில் வருடத்தின் முடிவில் ஒரு பாவநிவாரணப் பணி இருந்ததுபோல, மனிதர்களின் மீட்பிற்கான கிறிஸ்துவின் ஊழியம் முடிவடைவதற்குமுன், பரிசுத்தஸ்தலத்திலிருந்து பாவத்தை நீக்குகின்ற ஒரு பாவநிவாரணப் பணி உள்ளது. இந்த ஆராதனை 2300 நாட்கள் முடிவடைந்தபோது ஆரம்பமாயிற்று. தானியேல் தீர்க்கதரிசியால் முன்னுரைக்கப்பட்டதுபோல், இந்த நேரத்தில் நமது பிரதான ஆசாரியர் அவரது பக்திவிநயமான ஊழியத்தின் கடைசிப்பகுதியைச் செய்வதற்கு -பரிசுத்தஸ்தலத்தை சுத்திகரிப்பதற்கு, மகா பரிசுத்தஸ்தலத்திற்குள் பிரவேசித்தார்.(34)GCTam 489.1

    பண்டைய காலத்தில் ஜனங்களின் பாவங்கள் விசுவாசத்தினால் பாவநிவாரண பலியின்மீது வைக்கப்பட்டு, அதன் இரத்தத்தின் மூலமாக பரிசுத்தஸ்தலத்திற்குள் மாற்றப்பட்ட சாயலைப்போல, புதிய உடன்படிக்கையின்படி பாவங்களுக்காக வருந்துபவர்களின் பாவங்கள், விசுவாசத்தினால் கிறிஸ்துவின்மீது வைக்கப்பட்டு, உண்மையில் பரிசுத்தஸ்தலத்திற்குள் மாற்றப்படுகிறது. பாவத்தினால் கறைப்பட்டிருந்த பரிசுத்தஸ்தலத்திலிருந்து அவைகளை நீக்குவதினால், சாயலாயிருந்த பூமிக்குரிய பரிசுத்தஸ்தலத்தின் சுத்திகரிக்கப்படுதல் நிறைவேறினதுபோல, உண்மையாகவே பரலோக பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படுதல், அங்கு பதிவுசெய்யப்பட்ட பாவங்களை நீக்குவதினால் அல்லது துடைத்து அழிப்பதினால் நிறைவேற்றப்பட்டாக வேண்டும். ஆனால் இது நிறைவேற்றப் படுவதற்குமுன், பாவத்தின் மீதுள்ள மனஸ்தாபத்தினாலும் நன்மைகளுக்குத் தகுதி உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதைத் தீர்மானிக்க அங்குள்ள புத்தகங்களில் உள்ள ஆதாரங்கள் சோதிக்கப்பட்டாக வேண்டும். எனவே, பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படுதல் என்பது ஒரு விசாரணையை உள்ளடக்கியதாக ஒரு நியாயத்தீர்ப்பை உடையதாக உள்ளது. கிறிஸ்து அவரது ஜனங்களை மீட்டுக்கொள்ள வருவதற்கு முன்பாக, இந்த வேலை செய்யப்பட்டாகவேண்டும். ஏனெனில் அவர் வரும்போது அவனவனுடைய கிரியைகளுக்குத் தக்கதாக அவர் அளிக்கும் பலன் அவரோடே கூட வருகிறது. (35)GCTam 489.2

    இவ்வாறாக, தீர்க்கதரிசன வார்த்தையின் ஒளியை பின் பற்றியவர்கள், 2300 நாட்களின் முடிவில் -1844 -ல், கிறிஸ்து பூமிக்கு வருவதற்குப் பதிலாக அவரது வருகையின் ஆயத்தத்திற்கென்று பாவநிவாரண ஊழியத்தின் கடைசிப்பகுதியை நிறைவேற்ற பரலோக ஆசரிப்புக்கூடாரத்தின் மகா பரிசுத்தஸ்தலத்திற்குள் பிரவேசித்தார் என்பதைக் கண்டனர். (36)GCTam 490.1

    பாவநிவாரணபலியானது கிறிஸ்துவை ஒரு பலியாகச் சுட்டிக்காட்டியதுபோல, கிறிஸ்து மத்தியஸ்தராக இருப்பதைப் பிரதான ஆசாரியன் எடுத்துக்காட்டியதுபோல, போக்காடு சாத்தானைச் சாயலாக எடுத்துக்காட்டியதுபோல, உண்மையாக பவத்திற்காக வருந்துபவர் களின் பாவங்கள் முடிவில், அதின் ஆக்கியோனான சாத்தான்மீது சுமத்தப்படும். பாவநிவாரணபலியின் புண்ணியத்தினால் பிரதான ஆசாரியன் பரிசுத்தஸ்தலத்திலிருந்த பாவங்களை நீக்கியபோது, அவன் அவைகளைப் போக்காட்டின்மீது சுமத்தினான். கிறிஸ்து அவரது ஊழியத்தின் முடிவில் அவரது சொந்த இரத்தத்தின் புண்ணியத்தினால் பரலோக பரிசுத்தஸ்தலத்திலிருந்து பாவங்களை நீக்கும்போது, இறுதி நியாயத்தீர்ப்பு நடத்தப்படும்போது, அதற்கான முடிவான தண்டனையைச் சுமக்கவேண்டியவனான சாத்தானின்மீது அவைகளை வைப்பார். போக்காடானது ஒருவரும் குடியிராத பாழான இடத்திற்கு, இஸ்ரவேல் சபைக்கு மறுபடியும் வரமுடியாத விதத்தில், வெகுதொலைவில் விடப்பட்டது. அதைப்போலவே சாத்தானும் என்றென்றைக்குமாக, தேவ சமுகத்தில் இருந்தும், அவரது ஜனங்களிடத்திலிருந்தும் அகற்றப்படுவான். பாவமும் பாவிகளும் இறுதியாக அழிக்கப்படும்போது, அவன் இல்லாதவனாக அழித்தொழிக்கப்பட்டு நித்தியமாக நீக்கப்படுவான். (37)GCTam 490.2