Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாபெரும் ஆன்மீகப் போராட்டம்!

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    35—மனசாட்சியின் சுதந்திரம் அச்சுறுத்தப்படுகிறது!

    (மூலநூல் : The Great Controversy, பக்கம்: 563—581)

    முந்தைய ஆண்டுகளைவிட தற்காலத்தில் ரோமன் கத்தோலிக்க மார்க்கம் புரொட்டஸ்டாண்டுகளால் மிக அதிகமான ஆதரவுடன் கருதப் படுகிறது. கத்தோலிக்கமார்க்கம் ஆட்சிசெய்யாதிருந்த நாடுகளில் அவர்கள் தங்களது செல்வாக்குகளை ஆதாயப்படுத்திக் கொள்ளுவதற்காக ஒப்புரவாகும் நடவடிக்கையில் போப்பு மார்க்கத்திடமிருந்து சீர்திருத்த சபைகளை வேறுபடுத்தியிருந்த கோட்பாடுகளில் ஒரு அலட்சியம் அதிகரித்துக்கொண்டு வருகிறது. மிக முக்கியமான விஷயங்களில் நாம் நினைத்துக் கொண்டிருந்ததுபோல, அதிகமாக வேறுபட்டிருக்கவில்லை. கொஞ்சம் விட்டுக்கொடுத்தால் ரோம் நகருடனுள்ள உறவை சற்று நன்றாக புரிந்துகொள்ளமுடியும் என்கிற அபிப்பிராயம், முன்னேற்றமடைந்து வருகிறது. மிக அருமையான விலைகொடுத்து வாங்கப்பட்டிருந்த மனச்சாட்சியின் சுயாதீனத்திற்கு புரொட்டஸ்டாண்டுகள் மதிப்புக் கொடுத்திருந்த காலம் அது. போப்புமார்க்கத்தை வெறுக்கும்படி அவர்கள் அவர்களுடைய பிள்ளை களுக்குக் கற்றுக்கொடுத்து, ரோமுடன் இசைந்துபோவது, தேவனுக்குத் துரோகம் செய்வது என்று கருதியிருந்தனர். ஆனால் இப்பொழுது வெளிக்காட்டப்படும் உணர்வுகள் எவ்வளவு மாறுபட்டிருக்கிறது! (1)GCTam 661.1

    போப்புமார்க்க ஆதரவாளர்கள் சபை அசுத்தமடைந்துள்ளது என்று அறிவிக்கின்றனர். புரொட்டஸ்டாண்டுகள் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்களாக உள்ளனர். அறியாமையும் இருளுமிருந்த நூற்றாண்டுகளில் நிகழ்ந்த அருவருப்புக்களையும் கீழானவைகளையும் வைத்து, இன்றுள்ள சபையை நியாயம் தீர்ப்பது அநீதி என்று அநேகர் வலியுறுத்துகின்றனர். அக்காலத்தில் நிகழ்ந்த காட்டுமிராண்டித்தனத்தின் பலனான பயங்கரமான கொடுமைகளை அவர்கள் மன்னித்து நவீன கால நாகரிகத்தின் செல்வாக்குகள் அதன் உணர்வுகளை மாற்றிவிட்டது என்று மன்றாடுகின்றனர்.(2)GCTam 661.2

    இந்த இறுமாப்புள்ள வல்லமை, எட்டு நூறு வருடங்களாக அது தவறாமை உடையது என்னும் அதன் உரிமைபாராட்டுதலை முன்வைத்து வந்துள்ளதை இந்த மனிதர்கள் மறந்துவிட்டார்களா? அதைக் கைவிடுவதற்குப் பதிலாக, இந்த உரிமை இதற்குமுன் ஒருபோதும் இல்லாததைவிட பத்தொன்பதாம் நூற்றாண்டில் மிகவும் தீர்மானமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. ரோமசபை “தான் ஒருபோதும் தவறு செய்யவில்லை. இனிமேலும் தவறு செய்யப்போவதில்லை. வேதவாக்கியங்களின்படி ஒருபோதும் தவறு செய்யாது” என்று உறுதியாக அறிவித்துக்கொண்டிருக்கும்போது, கடந்த காலங்களில் அதன் நடத்தையை ஆளுகை செய்திருந்த கொள்கைகள் அனைத்தையும் அதனால் எப்படி மறுக்க முடியும். (John L. von Mosheim,Institutes of Ecclesiastical History,book 3,century II,part 2,chapter 2,section 9,note 17). (3)GCTam 662.1

    தவறாமை உடையது என்னும் தனது உரிமைபாராட்டுதலை போப்பு சபை ஒருபோதும் விட்டு விலகாது. அதன் பிடிவாதமான கோட்பாடுகளை நிராகரித்தவர்களுக்கு அது செய்துள்ள உபத்திரவம் சரியே என்று அது பற்றிக்கொண்டிருக்கிறது. மீண்டும் வாய்ப்புக் கிடைக்குமானால், அது முன்னர் செய்த செயல்களை திரும்பச் செய்யாமலிருக்குமா? மதச்சார்பற்ற அரசுகளால் புகுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, ரோம சபை அதன் முந்தைய வல்லமையில் மீண்டும் வைக்கப்படட்டும். அப்பொழுது அதன் கொடுங்கோன்மையும் உபத்திரவமும் மீண்டும் விரைவாக எழுப்புதல் அடையும்.(4)GCTam 662.2

    மனச்சாட்சியின் சுதந்திரத்தைப்பற்றிய போப்புமார்க்கத் தலைமையின் மனோபாவத்தைப்பற்றியும், அதின் கொள்கையின் வெற்றியினால் குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாட்டைப் பயமுறுத்தும் ஆபத்துக்களைப்பற்றியும், மிகவும் புகழ்வாய்ந்த ஒரு ஆசிரியர் இவ்வாறு கூறுகிறார். (5)GCTam 662.3

    “அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள ரோம மார்க்கத்தின்மீது சுமத்தப்படும் பயம், குறுகிய மனப்பான்மை அல்லது சிறுபிள்ளைத்தனம் என்று கூறும் ஏராளமானோர் உள்ளனர். அப்படிப்பட்டவர்கள் நமது சுதந்திரமான அமைப்புகளுக்கு விரோதமாக உள்ள எந்த சுபாவத்தையும் அல்லது அதன் வளர்ச்சியில் வரவிருக்கும் தீமை எதையும் ரோமமார்க்கத்தில் காணவில்லை. எனவே நமது அரசின் அடிப்படைக் கொள்கைகள் சிலவற்றுடன் ரோம சபையின் கொள்கைகளில் சிலவற்றை ஒப்பிட்டுப்பார்ப்போமாக. (6)GCTam 662.4

    அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசியல் அமைப்பு மனச்சாட்சியின் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. அதைவிட அருமையானதும் அடிப்படையானதும் வேறெதுவும் இல்லை. 1854-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி, ஒன்பதாவது போப் பயஸ் என்பவர் அவரது சபை நிர்வாகிகளுக்கான சுற்றறிக்கைக் கடிதத்தில்: “மனச்சாட்சியின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காகச் செயலாற்றப்பட்ட கீழ்த்தரமான தவறுகள்மிக்க கோட்பாடுகள் அல்லது போதனைகள், பெரும் கொள்ளைநோய் போன்ற தவறாகும் எல்லா கொள்ளைநோய்களையும்விட மிகவும் அதிகமாகப் பயப்படவேண்டிய பெரிய கொள்ளைநோயாக ஒரு நாட்டில் உள்ளது” என்று குறிப்பிட்டார். அதே போப், 1864-ம் வருடம் டிசம்பர் 8-ம் தேதி எழுதிய அவரது சபை நிர்வாகிகளுக்கான சுற்றறிக்கைக் கடிதத்தில்: “மனச்சாட்சியிலும் தேவனைத் தொழுகின்ற விதத்திலும் இருக்கவேண்டிய சுதந்திரத்தை வலியுறுத்துபவர்களையும், சபை பலாத்காரத்தைச் செயல்படுத்தாது என்றிருப்பவர்களையும் சபித்தார்.” (7)GCTam 663.1

    “அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள ரோமசபையின் சமாதானப் பிரியமான குரல் அதன் மனமாற்றத்தை அர்த்தப்படுத்தவில்லை. அது உதவியற்றதாக இருக்கும் இடத்தில் சகித்துக்கொண்டிருக்கிறது. ‘கத்தோலிக்க உலகத்திற்கு ஆபத்தில்லாதவரை எதிர்ப்பு செயல்படுத்தப்படலாம், மதச் சுதந்திரமும் சாதாரணமாகச் சகித்துக்கொள்ளப்படுகிறது’ என்று ஓகோனார் என்னும் ரோம பேராயர் கூறுகிறார். ‘மதப்புரட்டும் நம்பிக்கையின்மையும் குற்றங்களாகும். இத்தாலி, ஸ்பெயின் போன்ற கிறிஸ்தவநாடுகளில், உதாரணமாக எங்கு மக்களனைவரும் ரோமன் கத்தோலிக்கர்களாக இருக்கிறார்களோ, எங்கு கத்தோலிக்கமதம் அந்த நாட்டின் முக்கியமான சட்டமாக இருக்கிறதோ, அங்கு, மற்ற குற்றங்களைப் போலவே இதற்கும் அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்’ என்று செயின்ட் லூயிசின் தலைமைப் பேராயர் ஒரு தடவை கூறினார்....(8)GCTam 663.2

    “ரோம சபையிலுள்ள ஒவ்வொரு கர்தினாலும், பேராயரும் போப்புவுடன் உள்ள ராஜபக்திக்கு ஒரு வாக்குறுதி கொடுக்கிறார்கள். அதில்: ‘நமது கர்த்தராயிருக்கிற போப்புவிற்கும் (Lord Pope) அல்லது அவருக்குப்பின் வரக்கூடியவருக்கும் எதிராகவுள்ள மதப்புரட்டுகளையும் பிரிந்துசெல்லும் தன்மைகளையும், கலகக்காரர்களையும் என்னால் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு நான் உபத்திரவப்படுத்தி எதிர்ப்பேன்’ என்றிருக்கிறது.”—Josiah Strong,Our Country, ch. 5,pars. 2—4. (9)GCTam 663.3

    ரோமன் கத்தோலிக்க சமுகத்தில் மெய்யான கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மையாகும். ஆயிரக்கணக்கானவர்கள் அவர்களுக்குக் கிடைத்துள்ள மேலான ஒளிக்குத் தக்கதாக தேவனுக்கு ஊழியம் செய்கின்றனர். தேவனுடைய வார்த்தையினிடத்திற்கு நடத்தும் பாதை, அவர்களுக்கு அனுமதிக்கப்படாததினால், அவர்கள் சத்தியத்தை அறியாதவர்களாக உள்ளனர். உயிரோட்டமான இருதயப்பூர்வமான ஆராதனைக்கும், வீணான சடங்குகளுக்கும் இடையில் உள்ள வேற்றுமை களை அவர்கள் ஒருபோதும் கண்டதில்லை. மாயமும் அதிருப்தியுமிக்க ஒரு விசுவாசத்தில் கற்பிக்கப்பட்டிருக்கும் இந்த ஆத்துமாக்களை, மிகுந்த மென்மையான இரக்கத்ததுடன் தேவன் பார்க்கிறார். இவர்களைச் சூழ்ந்துள்ள கடினமான இருளை ஒளிக்கதிர்கள் ஊடுருவிச் செல்ல தேவன் வகைசெய்வார். சத்தியத்தை இயேசுவில் உள்ளபடி அவர்களுக்கு வெளிப்படுத்துவார். அநேகர் அவருடைய மக்களுடன் சேர்ந்து நிற்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். (10)GCTam 663.4

    ஆனால் ரோமமார்க்கம் ஒரு அமைப்பாக, இதற்குமுன் அதன் வரலாற்றில் இருந்ததைவிட, இப்போது கிறிஸ்துவின் சுவிசேஷத்துடன் அதிக இசைவுள்ளதாக இல்லை. புரொட்டஸ்டாண்டு சபைகள் பெரும் இருளில் உள்ளன. அப்படி இல்லாவிட்டால், அவைகள் காலங்களின் அடையாளங்களை அறிந்திருக்கும். ரோமமார்க்கம் அதன் திட்டங்களிலும் செயல்முறைகளிலும் வெகுதூரம் எட்டக்கூடியதாக இருக்கிறது. உலகத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமையை மீண்டும் பெறவும், உபத்திரவத்தை மறுபடியும் நடைமுறைப்படுத்தவும், புரொட்டஸ்டாண்டு மார்க்கம் செய்துள்ள அனைத்தையும் இல்லாமல்போகச்செய்யவும், பயங்கரமும் தீர்மானமுமுள்ள ஒரு போராட்டத்திற்கு ஆயத்தம்செய்ய, அது தனது ஒவ்வொரு கருவியையும் செயல்படுத்தி, அதன் செல்வாக்கை விரிவுபடுத்தி, அதன் வல்லமையை அதிகப்படுத்திக்கொண்டிருக்கிறது. ரோமமார்க்கம் எல்லா பக்கங்களிலும் அனுகூலம் அடைந்துவருகிறது. புரொட்டஸ்டாண்டு நாடுகளில் அதன் சிறிதும் பெரிதுமான ஆலயங்களின் எண்ணிக்கை, மிகவும் அதிகமாகி வருவதைக் காணுங்கள். அமெரிக்காவில் புரொட்டஸ்டாண்டுகளால் ஆதரிக்கப்படும் அதின் கல்லூரிகளுக்கும் மடாலயங்களுக்கும் கிடைத்துவரும் மதிப்பைப் பாருங்கள். இங்கிலாந்தில் சமயச்சடங்குமுறை வளர்ந்துவருவதையும், ரோமார்க்கத்திற்கு அடிக்கடி மக்கள் சபைமாறிச் செல்லுவதையும் கவனியுங்கள். சுவிசேஷத்தின் தூய்மையான கொள்கைக்கு மதிப்புக் கொடுப்பவர்களின் கவலையை, இப்படிப்பட்ட செயல்கள் துயிலெழச்செய்ய வேண்டும்.(11)GCTam 664.1

    பாப்பிஸ்டுகளே கண்டு வியக்குமளவிற்கும், காரணம் புரிந்து கொள்ளமுடியாத அளவிற்கும், புரொட்டஸ்டாண்டுகள் ரோமமார்க்கத்தின் காரியங்களில் குறுக்கிட்டு அதன் மாதிரியைப் பின்பற்றி, அதனுடன் சமரசங்களையும் விட்டுக்கொடுத்தல்களையும் செய்துள்ளனர். ரோம மார்க்கத்தின் உண்மையான சுபாவத்திற்கும், அதன் மேலாதிக்கத்திலிருந்து உண்டாகக்கூடிய பயப்படக்கூடிய அபாயங்களுக்கும், மனிதர்கள் தங்கள் கண்களை மூடிக்கொண்டுள்ளனர். சமுகம், மதச்சுதந்திரம் ஆகியவைகளுக்கு எதிரான இந்தப் பயங்கரமான எதிரியின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக, மக்கள் எழுப்பப்படவேண்டியது அவசியமாகும். (12)GCTam 664.2

    கத்தோலிக்க மதம் கவர்ச்சியற்றது என்றும், அதன் ஆராதனை முறைகள் மந்தமான—அர்த்தமற்ற சடங்காச்சாரங்கள் என்றும், அநேக புரொட்டஸ்டாண்டுகள் அனுமானித்துக்கொண்டிருக்கின்றனர். இங்கு அவர்கள் தவறுகின்றனர். ரோமமார்க்கம் வஞ்சகத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தபோதிலும், அது அவலட்சணமான தோற்றத்தை உடையதல்ல. ரோமசபையின் சமயச்சடங்குகள், ஆழமாக உள்ளத்தைத் தொடக்கூடிய சடங்குகளாகும். அதன் ஆடம்பரமும் பகட்டுமிக்க வெளித்தோற்றமும் பக்திவிநயமான சடங்குகளும் மக்களின் உணர்வுகளை வசீகரித்து, காரணங்களை அறியும் மனச்சாட்சியின் சத்தத்தை மௌனப்படுத்திவிடுகிறது. கண்கள் கவர்ந்திழுக்கப்படுகின்றன. பிரம்மாண்டமான ஆலயங்கள், கம்பீரமான ஊர்வலங்கள், தங்கமயமான பலிபீடங்கள், அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட புண்ணிய ஸ்தலங்கள், சிறப்பான சித்திரங்கள், கண்கவரும் சிற்ப வேலைப்பாடுகள் ஆகியவைகள் அழகின்மீதுள்ள வாஞ்சையைக் கவருகின்றன. செவிகளும் அடிமைப்படுத்தப்படுகின்றன. அதன் இசை மிஞ்சினது. இசைக் கருவிகளின் மிக ஆழமான ஒலி அநேகரது இனியபாடல்களுடன் கலந்து அதன் குவிந்த கூரை மண்டபத்தின் உட்புறங்களிலும், தூண்களின்மீதுள்ள மேடைகளிலும், உயர எழும்பி நிறையும்போது, மனதை வியப்பிலும் பக்தியிலும் நிரப்பத் தவறாது. (13)GCTam 665.1

    இந்தப் பிரகாசமான வெளி அலங்காரமும், ஆடம்பரமான சடங்குகளும் பாவத்தால் நோயுற்றிருக்கும் ஆத்துமாவைக் கேலி மட்டுமே செய்கிறதுமல்லாமல், அதன் உட்புறம் கறைமிக்கதாக உள்ளது என்பதற்கு ஒரு சான்றாகவும் உள்ளது. கிறிஸ்துவின் மார்க்கம், அதற்கு இவ்விதமான கவர்ச்சி அவசியம் என்று சிபாரிசு செய்வதில்லை. சிலுவையிலிருந்து வீசும் ஒளியினால், மெய்யான கிறிஸ்தவம் தூய்மையும், வசீகரமும் உள்ளதாகக் காட்சி அளிக்கிறது. ஆகையால் அதன் உண்மையான மதிப்பைப் புறம்பான அலங்காரங்கள் எதினாலும் அதிகரிக்கமுடியாது. பரிசுத்தத்தினால் உண்டாகும் அழகு, எளிமையும் சாந்தமுமுள்ள ஆவி ஆகியவைதான் தேவனிடம் மதிப்பு உள்ளவையாக உள்ளன. (14)GCTam 665.2

    திறமையான அழகு, தூய்மைக்கும் உயர்ந்த சிந்தனைக்கும் ஒரு அடையாளமாயிருக்கும் என்பது அவசியமல்ல. கலையைப்பற்றிய உயர்ந்த கருத்து, சுவைபற்றிய நுணுக்கம் ஆகியவை அடிக்கடி உலகப் பிரகாரமான புலன்களைச் சார்ந்திருப்பவர்களின் மனங்களில் உள்ளன. ஆத்துமாவின் தேவைகளை மறந்துவிடவும், அழியாமை உள்ள எதிர்கால வாழ்க்கையைப்பற்றிய பார்வையை இழந்துவிடவும், அவர்களது முடிவில்லாத துணைவரிடமிருந்து அவர்களை வேறுபக்கம் திருப்பவும், இந்த உலகத்திற்கென்று வாழவும், மனிதர்களை நடத்திட இப்படிப்பட்ட செயல்கள் அடிக்கடி சாத்தானால் செய்யப்படுகின்றன.(15)GCTam 666.1

    புதுப்பிக்கப்படாத இருதயத்திற்கு புறத்தோற்றங்களாலான ஒரு மதம் கவர்ச்சிமிக்கதாக உள்ளது. கத்தோலிக்க ஆராதனை முறையிலுள்ள தந்திரமிக்க மதிமயக்கும் வல்லமையினால், அநேகர் வஞ்சிக்கப்படுவதினால், ரோமசபையைப் பரலோகத்தின் வாசல் என எண்ணி பார்க்கவருகின்றனர். சத்தியம் என்னும் அஸ்திவாரத்தின்மீது தங்கள் பாதங்களை ஊன்றியிருப்பவர்களும், தேவனுடைய ஆவியினால் எவர்களுடைய இருதயங்கள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றனவோ அவர்களும், அதன் செல்வாக்கிற்கு எதிரான சாட்சிகளாக உள்ளனர். கிறிஸ்துவைப்பற்றிய பரீட்சார்த்தமான அறிவில்லாத ஆயிரக்கணக்கானவர்கள் வல்லமையில்லாத தெய்வபக்தியின் தோற்றத்தை ஏற்றுக்கொள்ளும்படி நடத்தப்படுவார்கள். அப்படிப்பட்ட ஒரு மதத்தைத்தான் திரளானவர்கள் விரும்புகின்றனர். (16)GCTam 666.2

    மன்னிக்கும் அதிகாரம் தனக்கு உண்டு என்னும் அதன் உரிமைபாராட்டுதல் ரோமன் கத்தோலிக்கர்களை பாவம் செய்வதற்குச் சுதந்திரம் உள்ளவர்களாக உணரச்செய்திருக்கிறது. மன்னிப்பு பெற செய்யவேண்டிய பாவ அறிக்கையும் தீமைசெய்வதற்கு உரிமம் வழங்கியிருக்கிறது. விழுந்துபோயிருக்கும் மனிதன்முன், முழங்காலில் நின்று தனது இரகசியமான எண்ணங்களையும் மனோபாவங்களையும் அறிக்கை செய்வதற்காக இருதயத்தைத் திறப்பவன் தனது மனிதத் தன்மையைத் தரம் தாழ்த்தி, ஆத்துமாவின் மேன்மைமிக்க தூண்டுதல்கள் ஒவ்வொன்றையும் தரக்குறைவு செய்கிறான். தனது வாழ்க்கையில் உள்ள பாவங்களை, தவறுசெய்யக்கூடிய சாவுக்கேதுவான மதுபானத்திலும் காமவிகாரங்களிலும் அடிக்கடி ஈடுபடும் ஒரு குருவானவரிடம் விவரிப்பதினால், அவனது சுபாவத்தின் தரம் கீழாக்கப்படுவதுடன், அதன் விளைவாக அவன் தீட்டுள்ளவனுமாகிறான். தேவனைப்பற்றிய அவனது எண்ணங்களும் விழுந்துபோன இனத்தின் சாயலாக கீழாக்கப்படுகிறது. ஏனென்றால் அந்த குருவானவர் தேவனின் பிரதிநிதியாக நிற்கிறார். மனிதனிடமே மனிதன் பாவ அறிக்கை செய்வது உலகத்தைத் தீட்டுப்படுத்தி, அதன் இறுதி அழிவிற்கு அதனைத் தகுதிப்படுத்தும் தீமையின் இரகசியமான ஊற்றாக இருக்கிறது. அப்படியிருந்தும், சுயவிருப்பத்தின்படி நடக்கப் பிரியப்படும் ஒருவனுக்கு, தேவனிடம் ஆத்துமாவை திறப்பதைவிட சாவுக்குரிய ஒரு உடன் மனிதனிடம் பாவ அறிக்கை செய்வது, மகிழ்ச்சி தருவதாக உள்ளது. பாவத்தைவிட்டு விலகுவதைவிட, பாவப்பரிகாரச் செயல்களைச் செய்வது மானிட இயல்பிற்கு அதிகமான சுவையுள்ளதாக உள்ளது. மாமிசத்தின் இச்சைகளைச் சிலுவையில் அறைவதைவிடுத்து, இரட்டு உடுத்தி, உடலைத் துன்புறுத்தி, பாவப்பரிகாரச் செயல்களைச்செய்வது எளிதாக இருக்கிறது. கிறிஸ்துவின் நுகத்திற்குமுன் அதைச் சுமப்பதற்காகக் குனிவதைவிட மாம்சத்திற்குரிய இருதயம் சுமக்க விரும்பும் நுகம் அதிகப் பாரமானதாக உள்ளது. (17)GCTam 666.3

    ரோம சபைக்கும் யூத சபைக்கும் இடையில், கிறிஸ்துவின் முதலாம் வருகையின்போது நன்கு தெரியக்கூடிய ஒருமித்த தன்மை இருக்கிறது. யூதமக்கள் இரகசியமாக தேவனுடைய கற்பனையின் கொள்கைகள் ஒவ்வொன்றையும் காலின்கீழிட்டு மிதித்திருந்தபோது, கீழ்ப்படிவதை வேதனை மிக்கதாகவும் பாரமானதாகவும் ஆக்கியிருந்த நிர்பந்தமாகப் பணம் வசூலிப்பதாலும் பரிகாரம் செய்வதாலும் அதன் பிரமாணங்களை வெளியில் தெரியும்படி கைக்கொள்ளுவதில் கடுமையானவர்களாக இருந்தனர். யூதர்கள் கற்பனையின்மீது பக்தி உள்ளவர்களாக கூறிக்கொண்டிருந்ததைப்போல, ரோம கத்தோலிக்கர்கள் சிலுவையிடம் பக்திசெலுத்துவதாகக் கூறிக்கொள்ளு கின்றனர். சிலுவை எவரைச் சுட்டிக்காட்டுகிறதோ, அவரைத் தங்களுடைய வாழ்க்கையில் மறுதலித்துக் கொண்டிருக்கும்போதே கிறிஸ்துவின் பாடுகளின் அடையாளத்தை அவர்கள் உயர்த்துகின்றனர். (18)GCTam 667.1

    போப்புமார்க்கவாதிகள் சிலுவையை அவர்களது ஆலயக் கட்டிடங் களின்மீதும் அவர்களது பீடங்களின்மீதும் அவர்களது உடைகளின்மீதும் வைக்கின்றனர். எல்லா இடங்களிலும் அந்த முத்திரை காணப்படுகிறது. வெளியரங்கமாக அது எங்கும் மேன்மைப்படுத்தப்படுகிறது. ஆனால் புத்தியில்லாத சடங்காச்சாரமாகிய திருப்பலிப் பூசையின்கீழும் தவறான விளக்கங்களிலும் கடுமையான தண்டங்களின்கீழும், கிறிஸ்துவின் போதனை கள் புதைக்கப்பட்டுள்ளன. “சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக்கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்” (மத்தேயு 23:4) என்ற மதவிரோதமிக்க யூதர்களைப்பற்றிய இரட்சகரின் வார்த்தைகள் அதைவிட அதிக வலிமையுடன் ரோமன் கத்தோலிக்க தலைவர்களுக்குப் பொருத்தமாக உள்ளன. சபையின் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் சுகபோகத்திலும் புலன்களை மகிழ்விக்கும் செயல்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, மனச்சாட்சி உள்ள ஆத்துமாக்கள் எதிர்ப்புக்குள்ளான ஒரு தேவனுடைய கோபத்தைப்பற்றிய தொடர்ச்சியான திகிலில் வைக்கப்பட்டுள்ளனர். (19)GCTam 667.2

    சிலைகளையும் புனிதப்பொருட்களையும் வணங்குதல், பரிசுத்தவான் களிடம் வேண்டுதல்செய்தல், போப்புவை உயர்த்துதல் ஆகியவை மக்களின் மனங்களை தேவனிடமிருந்தும் அவரது குமாரனிடமிருந்தும் வேறுபக்கமாகக் கவர்ந்திடும் சாத்தானின் கருவிகளாக உள்ளன. அவர்கள் பாழாக்கும்படி, எந்த ஒருவரின் மூலமாகமட்டுமே அவர்கள் இரட்சிப்பைக்காணமுடியுமோ அவரைவிட்டு அவர்களது கவனத்தைத் திருப்ப முயலுகிறான். “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28) என்று கூறியவரிடமிருந்து வேறு ஏதாவது பொருளின்மீது கவனம் வைக்கும்படி அவன் அவர்களைத் திசை திருப்பினான். (20)GCTam 668.1

    தேவனுடைய சுபாவம், பாவத்தின் தன்மை, மாபெரும் ஆன்மீக யுத்தத்தில் சிதையின் மீதிருக்கும் உண்மையான பிரச்சனைகள் ஆகியவை களைத் தவறாக எடுத்துக்காட்டுவது சாத்தானின் இடைவிடாத முயற்சியாக உள்ளது. தெய்வீகப் பிரமாணத்திலுள்ள கடமைகளை அவனது தந்திரங்கள் குறைத்துக்காட்டி, மனிதனுக்குப் பாவம் செய்ய உரிமம் வழங்குகிறது. அதே சமயத்தில், தேவனைப்பற்றிய தவறான கருத்துக்களை இருதயத்தில் வைத்துப் போற்றும்படிச் செய்து, அதனால் அவரை அன்புடன் பார்ப்பதைவிட, பயத்துடனும் வெறுப்புடனும் பார்க்கச் செய்கிறான். அவனது சுபாவத்திலிருக்கிற வேறுபடுத்தமுடியாத கொடூரம் சிருஷ்டிகரின்மீது சுமத்தப்படுகிறது. அது மதச்சடங்குகளில் சேர்க்கப்பட்டு, வழிபாட்டுமுறைகளால் மனங்கள் குருடாக்கப்படவே, சாத்தான் அவர்களைத் தேவனுக்கெதிரான போரில், தனது ஏவலர்களாகச் சேர்த்துக்கொள்ளுகிறான். தேவனின் குணநலன்களைத் திரித்ததால், தெய்வத்தின் அருளைப் பெறுவதற்கு நரபலி அவசியம் என்று நம்பும்படி அஞ்ஞான மக்கள் நடத்தப்பட்டனர். அதனால் பலதரப்பட்ட விக்கிரக ஆராதனை முறைகளில் பயங்கரமான கொடூரங்கள் செயல்படுத்தப்பட்டன. ரோமசபை அஞ்ஞான சடங்குகளையும் கிறிஸ்தவத்தையும் இணைத்து, தேவனுடைய குணத்தை திரித்துக்கூறி, அதைவிட குறையாத கொடுமை களையும் கலகங்களையும் செயல்படுத்தியது. ரோம சபையின் மேலாதிக்கத்தின் காலத்தில், அதன் கோட்பாடுகளுக்கு இணங்கும்படி வற்புறுத்துவதற்கென்று சித்திரவதைசெய்யும் கருவிகள் இருந்தன. அதன் உரிமைகளுக்கு இணங்காதவர்களுக்காக அக்கினி கம்பங்கள் இருந்தன. நியாயத்தீர்ப்பு நாளில் வெளிப்படுத்தப்படும்வரை ஒருபோதும் அறியமுடியாத அளவில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்ட பயங்கரங்கள் நிகழ்ந்தன. சபையின் மேலானவர்கள் அவர்களது எஜமானனான சாத்தானின்கீழ், முடிந்த அளவிற்குப் பெரும் சித்திரவதைகளைச் செய்யவும், அதன் கீழானவர்கள் சாகாமல் வைக்கப்படுவதற்கு உபாயங்களைக் காண ஆராய்ச்சிகள் செய்யவும் முனைந்தனர். அநேக காரியங்களில் இந்தக் கொடுமைகள் மனிதர்களின் தாங்கும் சக்தியின் எல்லைவரை, இயற்கை அந்தப் பேராட்டத்தை விட்டுவிடும்வரை, மரணமே இனிமையான விடுதலை என்று அவர்கள் வாஞ்சிக்கும்வரை, திரும்பத் திரும்பச் செய்யப்பட்டன. (21)GCTam 668.2

    ரோமசபையின் எதிரிகளின் முடிவு அப்படிப்பட்டதாக இருந்தது. கசையடிகள், பஞ்சம் போன்ற பசியுடன் இருத்தல், இருதயத்தை நோயுறச்செய்யும் சகலவிதமான உடலை வருத்தும் முறைகள் போன்றவை அதனைச் சார்ந்தவர்களால் ஏற்படுத்தப்பட்டிருந்தன. பாவத்திற்காக வருந்தியிருந்தவர்கள், பரலோகத்தின் ஆதரவை அடைந்துகொள்ளுவதற்காக, இயற்கையின் பிரமாணங்களை மீறினதினால் தேவப் பிரமாணத்தை மீறினர். அலைந்து திரியும் பூமிக்குரிய வாழ்க்கையில், மனிதருக்கு ஆசீர்வாதமாகவும் மகிழ்ச்சி தருவதாகவும் இருக்கும்படி தேவன் ஏற்படுத்தியிருந்த உறவுகளைப் பிய்த்தெறியும்படி அவர்கள் போதிக்கப்பட்டிருந்தனர். தங்களது ஆசைகளை நசுக்கி அடக்கும் வீணான முயற்சிகளில் தங்கள் வாழ்க்கையைக்கழித்து பலியான இலட்சக்கணக்கானவர்களின் புதைகுழிகளை உடையவையாக அதன் ஆலய வளாகங்கள் இருந்தன. (22)GCTam 669.1

    நூற்றுக்கணக்கான வருடங்களாக தேவனை அறியாமலிருந்தவர் களுக்கு நடுவில் மட்டுமன்றி, கிறிஸ்தவமார்க்கத்தின் இருதயத்திலும் கிறிஸ்தவ மார்க்கம் முழுவதிலும், சாத்தான் தீர்மானத்துடன் நடத்தி இருந்த கொடூரத்தின் வெளிக்காட்டுதலை நாம் புரிந்துகொள்ள விரும்பினால், ரோம மார்க்கத்தின் வரலாற்றை மட்டுமே பார்த்தால் போதும். தேவனுக்கு கௌரவக்குறைவையும் மனிதனுக்கு துர்பாக்கியமான நிலையையும் கொண்டுவரும் அவனது நோக்கத்தை, இந்தப் பிரம்மாண்டமான வஞ்சக மிக்க கத்தோலிக்க அமைப்பின் மூலமாக தீமையின் பிரபு நிறைவேற்றிக் கொள்ளுகிறான். தன்னை மறைத்துக்கொள்ளுவதில் அவன் எவ்விதமாக வெற்றி பெறுகிறான் என்பதையும், சபைத் தலைவர்களின் மூலமாக அவன் தன் வேலையை நிறைவேற்றுவதையும் நாம் காணும்போது, வேதாகமத்தின்மீது ஏன் இந்த அளவிற்கு வெறுப்புள்ளவனாக இருக்கிறான் என்பதை நாம் நன்கு புரிந்துகொள்ளலாம். அந்தப் புத்தகம் வாசிக்கப்பட்டால், ஆண்டவரின் அன்பும் கிருபையும் வெளிப்படுத்தப்பட்டுவிடும். மனிதர்கள்மீது இந்தப்பாரமான சுமைகளை ஒன்றையும் அவர் வைப்பதில்லை என்பது காணப்பட்டுவிடும். அவர் கேட்பதெல்லாம் நொறுங்குண்ட இருதயமும் தாழ்மையும் கீழ்ப்படிதலுள்ள ஆவியும்தான். (23)GCTam 669.2

    பரலோகத்திற்குப் பொருத்தமானவர்களாவதற்காக ஆண்களும் பெண்களும் மடாலயங்களுக்குள் தங்களை அடைத்துக் கொள்ளவேண்டும் என்று இயேசு பெருமான் அவருடைய வாழ்க்கையில் உதாரணம் கொடுத்ததில்லை. அன்பும் அனுதாபமும் நசுக்கப்படவேண்டும் என்று அவர் ஒருபோதும் போதிக்கவில்லை. இரட்சகரின் இருதயம் அன்பினால் நிறைந்தொழுகிக்கொண்டிருந்தது. சன்மார்க்கத்திற்குரிய பூரணத்தைநோக்கி மனிதன் எந்த அளவிற்கு நெருங்குகிறானோ, அந்த அளவிற்கு அவனது புலன்கள் தெளிவுள்ளவையாகவும் பாவத்தைப்பற்றிய உணர்வு கூர்மையாகவுமாகி, துயரப்படுகிறவர்களின்மீதுள்ள அனுதாபம் மிகுந்த ஆழமாகிறது. போப்பு தன்னைக் கிறிஸ்துவின் பதிலாளி என்று உரிமை பாராட்டிக்கொள்ளுகிறார். ஆனால் இரட்சகரின் சுபாவத்துடன் அவரது சுபாவம் எவ்விதமாக ஒப்பிடக்கூடியதாக இருக்கிறது? கிறிஸ்துவைப் பரலோகத்தின் தேவன் என்று வணங்காததற்காக மனிதர்களைச் சிறைச்சாலைக்கும் சித்திரவதை செய்யும் கருவிக்கும் அவர் அனுப்பியதாக எப்போதாவது அறியப்பட்டுள்ளதா? அவரை ஏற்றுக்கொளாளதவர்களை மரணதண்டனைக்கு அவர் உட்படுத்தும் சத்தம் எப்போதாவது கேட்டதுண்டா? ஒரு கிராமத்தில் சமாரிய மக்களால் அவர் ஏற்றுக்கொள்ளப்படாமல் அலட்சியம் செய்யப்பட்டபோது, அப்போஸ்தலனாகிய யோவான் கோபத்தால் நிறைந்து, “ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்.” இயேசு அவர்களை பரிதாபத்துடன் பார்த்து, அந்த குணத்தை அதட்டி, “மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார்” (லூக்கா 9:54—56) என்றார். தன்னைக் கிறிஸ்துவின் பதிலாளி என்று கூறிக்கொள்ளுபவரின் ஆவியிலிருந்து கிறிஸ்து வெளிக்காட்டியிருந்த ஆவி எப்படி வித்தியாசமானதாக இருக்கிறது? (24)GCTam 670.1

    ரோமன் கத்தோலிக்க சபை, அது இழைத்த பயங்கரமான கொடூரங்களின் ஆவணங்களை மன்னிப்புகோரி மறைத்துக்கொண்டு ஒரு அழகான தோற்றத்தை முன்னணியில் வைக்கிறது. அது கிறிஸ்துவைப்போன்ற உடைகளை அணிந்துகொண்டுள்ளது. ஆனால் மாற்றமடையவில்லை. கடந்த காலத்தில் போப்புமார்க்கத்தினிடம் இருந்த கொள்கைகள் இன்றும் இருக்கின்றன. இருண்ட காலங்களில் உருவாக்கப்பட்டிருந்த கோட்பாடுகள் இன்றும் தொடர்ந்து செயலாற்றுகின்றன. ஒருவரும் தங்களைத் தாங்களாகவே வஞ்சித்துக்கொள்ளவேண்டாம். சீர்திருத்த காலத்தில், அக்கிரமங்களை வெளியில் எடுத்துக்காட்டியதால் தங்களுடைய உயிர்களை ஆபத்துக்குட்படுத்தியிருந்த தேவனுடைய மனிதர்கள் எழுந்த அந்தக் காலத்தில் உலகை ஆண்டிருந்த அதே போப்புமார்க்கத்தைத்தான் மதிக்கும்படி இன்று புரொட்டஸ்டாண்டுகள் விரைவாகத் தயாராகிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள்மீதும் இளவரசர்கள்மீதும் அது கொண்டிருந்த அகந்தையும் கர்வமுமிக்க மேலாதிக்கமான அதே எண்ணங்களையும் தேவனின் சிறப்புரிமையைத் தனது என்று உரிமை பாராட்டுவதையும் தன்னிடம் கொண்டிருக்கிறது. மனித சுயாதீனத்தை நசுக்கி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களைக் கொலைசெய்திருந்தபோது அதனிடமிருந்ததைவிட அதன் ஆவி இப்பொழுது கொடூரத்திலும் எதேச்சாதிகாரத்திலும் குறைவானதாக இல்லை. (25)GCTam 670.2

    கடைசி காலத்தின் மருளவிழுகையாக இருக்கும் என்று தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறதுபோலவே போப்புமார்க்கம் இருக்கும் (2 தெச. 2:3,4). தன்னுடைய நோக்கத்தைச் சிறப்பாக நிறைவேற்ற எந்த சுபாவத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமோ அதை எடுத்துக்கொள்ளுவது, அதன் கொள்கையின் ஒரு பகுதியாகும். ஆனால் பச்சோந்தியின் மாறுபட்ட தோற்றங்களுக்கிடையில் மாறுபடாத பாம்பின் விஷத்தை அது மறைத்துவைத்திருக்கிறது. மதப்புரட்டுகளினால் உண்டாயிருக்கும் விசுவாசத்தையும் வாக்குத்தத்தத்தையும் கைக்கொள்ளவேண்டிய அவசியம் நமக்கில்லை என்று அது அறிவிக்கிறது. ஆயிரம் வருடங்களாகப் பரிசுத்தவான்களின் இரத்தத்தினால் ஆவணங்களில் எழுதப்பட்டுள்ள இந்த வல்லமை, இப்பொழுது கிறிஸ்துவினுடைய சபையின் ஒரு பகுதி என்று ஏற்றுக்கொள்ளப்படுமா? (26)GCTam 671.1

    ரோமன் கத்தோலிக்க மார்க்கம் புரொட்டஸ்டாண்டு மார்க்கத்திலிருந்து முற்காலத்தில் இருந்ததைவிட இப்பொழுது குறைவாகவே வேறுபட்டிருக் கிறது என்னும் கருத்தைப் புரொட்டஸ்டாண்டு நாடுகள் காரணமில்லாமல் முன்வைக்கவில்லை. ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் அந்த மாற்றம் ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தில் அல்ல. இப்போதுள்ள புரொட்டஸ்டாண்டு மார்க்கத்தை ஒத்ததுபோல் ரோம சபை உண்மையாகவே தோன்றுகிறது. ஏனெனில் புரொட்டஸ்டாண்டு மார்க்கம் சீர்திருத்தவாதிகளின் காலத்திலிருந்து அந்த அளவிற்குச் சீரழிந்துள்ளது. (27)GCTam 671.2

    புரொட்டஸ்டாண்டு சபைகள் உலகத்தின் ஆதரவைத் தேடிக்கொண்டிருக்கும்போது, பொய்யான சேவை அவர்களது கண்களைக் குருடாக்கிவிட்டது. தீமைகளனைத்தையும் நன்மைகளாகப் பார்ப்பதின் விளைவாக முடிவில் நல்லவைகளையெல்லாம் தீயவைகளாகப் பார்ப்பார்கள். பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்தை காப்பதற்குப் பதிலாக, ரோமசபைக்கு எதிராகக் கொண்டிருந்த அன்பற்ற கருத்திற்காக மனம்வருந்தி அவர்களது மதவெறிக்காக மன்னிப்புக் கேட்பதுபோல இப்பொழுது இருக்கின்றனர்.(28)GCTam 671.3

    ரோம மார்க்கத்தின்மீது எவ்விதமான ஆதரவும் காட்டாமல், நோக்குகிறவர்களில் ஒரு பெரும் வகுப்பினர், அதன் வல்லமையையும் அதன் செல்வாக்கினால் உண்டாகும் ஆபத்தையும் பற்றி பயமற்றவர்களாக உள்ளனர். மத்திய காலத்தில் நிலவியிருந்த அறிவின்மையும் சன்மார்க்க இருளும் ரோமமார்க்கத்தின் பிடிவாதமான கொள்கைகளும், மூடநம்பிக்கை களும், ஒடுக்குதல்களும் பரவுவதற்குச் சாதகமாக இருந்தன. ஆனால் நவீன காலத்திலுள்ள பெரும்நுண்ணறிவும், எங்கும் பரவியிருக்கும் பொதுஅறிவும், மத சம்பந்தமான காரியங்களில் அதிகரித்துவரும் சுதந்திர மனப்பான்மையும் சகிப்புத்தன்மையின்மையையும் கொடுங்கோன்மையையும் புத்துயிர் பெறவிடாமல் தடுக்கின்றன என்று அநேகர் கூறுகின்றனர். அறிவொளியை அடைந்துள்ள இக்காலத்தில் இப்படிப்பட்ட காரியங்கள் நடக்கும் என்கிற எண்ணமே சிரிக்கும்படியாக உள்ளது. நுண்ணறிவு, சன்மார்க்கம், மதம் ஆகியவைகளைப்பற்றிய அதிகமான ஒளி இந்தத் தலைமுறைகளின்மீது வீசுகிறது என்பது உண்மைதான். தேவனுடைய பரிசுத்த வார்த்தைகள் அடங்கிய திறந்த பக்கங்களில், பரலோகத்திலிருந்துள்ள ஒளி உலகத்தின் மீது வீசியிருக்கிறது. ஆனால் எந்த அளவிற்கு ஒளி அதிகமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அந்த அளவிற்கு புரட்டுகிறவர்களிடம் அல்லது நிராகரிப்பவர்களிடம் இருள் அதிகமாகும். (29)GCTam 672.1

    ஜெபத்துடன் கூடிய வேதாகம் ஆராய்ச்சி மட்டுமே புரொட்டஸ் டாண்டுகளுக்குப் போப்புமார்க்கத்தின் உண்மையான சுபாவத்தைக்காட்டி, அதை வெறுக்கவும்—அதைவிட்டு விலகவும் கரணமாக அமையும். அநேகர் தங்களது சொந்த அகந்தையினால் மிகுந்த ஞானமுள்ளவர்களாக இருந்து, சத்தியத்திற்குள் நடத்திச்செல்லப்படுவதற்கு தாழ்மையுடன் தேவனைத் தேடவேண்டிய அவசியம் இல்லை என்ற உணர்வோடு உள்ளனர். தங்களது அறிவின் விசாலத்தில் அவர்கள் பெருமைப்பட்டுக்கொண்டிருந்தாலும், வேதவாக்கியங்கள், தேவனுடைய வல்லமை ஆகிய இரண்டைப்பற்றியும் அறிவில்லாதவர்களாக உள்ளனர். அவர்களது மனச்சாட்சியை அமைதிப்படுத்த ஏதாவது ஒரு பொருள் வேண்டுமென்று ஆவிக்குரியதாக இல்லாததையும் கீழ்த்தரமானதையும் தேடிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் விரும்புவது தேவனை நினைக்கும் மார்க்கம் என்னும் பெயரில் உள்ள தேவனை மறக்கும் பாதையின் மார்க்கம்தான்! இப்படிப்பட்டவர்களின் தேவைகள் அனைத்தையும் சந்திப்பதற்குப் போப்புமார்க்கம் நன்கு பொருந்துவதாக உள்ளது. ஏறத்தாழ உலகம் முழுவதையும் தழுவிக்கொண்டிருக்கும் மனித இனத்தின் வகுப்பினருக்காக, தங்களது சொந்தப் புண்ணியங்களினால் இரட்சிக்கப்படுபவர்கள் என்றும், தங்களது பாவத்தில் இரட்சிக்கப்படுபவர்கள் என்றும் இரு வகுப்பினருக்காக அது ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த வல்லமையின் இரகசியம் இங்குதான் உள்ளது. (30)GCTam 672.2

    போப்புமார்க்கத்தின் வெற்றிக்கு பெரும் அறிவின் அடர்த்தியான இருண்டநாள் மிகச்சாதகமானது என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அப்படியிருந்தபோதிலும் பெரும்அறிவின் ஒளிமிக்க நாளும் அதற்குச் சமமாக அதன் வெற்றிக்குச் சாதகமாக உள்ளது என்பதற்கான நடைமுறை விளக்கம் தரப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மனிதர்கள் தேவனுடைய வார்த்தை இல்லாதவர்களாக இருந்தபோதிலும் அவர்களது கண்கள் குருடானவையாக மூடியிருந்தன. ஆயிரக்கணக்கானவர்கள் அவர்களுடைய கால்களுக்கு வஞ்சக வலைகள் விரிக்கப்பட்டிருப்பதைக் காணாமல், கண்ணியில் விழுந்தனர். விஞ்ஞானம் தவறாக அழைக்கும் மனித யூகங்களின் கண்கூசும் ஒளியினால் கண்கூசிப்போன அநேகர் உள்ளனர். அவர்கள் அந்த வல்லமையை அறியாமல், குருடர்களைப் போலக் கண்களை மூடிக்கொண்டு, அதற்குள் நேராகச் செல்லுகின்றனர். மனிதனுடைய நுண்ணறிவில் வல்லமைகள் அவனுடைய சிருஷ்டிகரிடம் இருந்து அவனுக்குக் கிடைத்துள்ள ஈவாக வைக்கப்பட்டு, சத்தியம், நீதி ஆகியவைகளின் சேவைக்காகப் பயன்படுத்தப்படவேண்டுமென்று தேவன் அவைகளை வடிவமைத்தார். ஆனால் பெருமையும் பேராசையும் இருதயத்தில் பேணப்படும்போதும், தேவனுடைய வார்த்தைக்கு மேலாக மனிதர்கள் தங்களுடைய சொந்த தத்துவ விளக்கங்களை உயர்த்தும்போதும், அது நுண்ணறிவு, அறியாமை ஆகியவைகளைவிட அதிகமான பெரும் ஆபத்தை உண்டுபண்ணும். இருண்ட காலங்களில் போப்புமார்க்கம் அறிவை முடக்கிவைத்து, அது மிகவும் பெரிதாவதற்கான பாதையைத் திறந்தது. அதைப்போலவே, போப்புமார்க்கத்தை அதின் கவர்ச்சிகரமான வெளித்தோற்றங்களுடன் ஏற்றுக்கொள்ளுவதற்கான பாதையை ஆயத்தம் செய்வதில், வேதாகமத்தின்மீதுள்ள விசுவாசத்தை கீழிறக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தவறான விஞ்ஞானம் வெற்றிகரமானது என்பதை மெய்ப்பிக்கும். (31)GCTam 673.1

    ரோமசபைக்கும் அதன் பயனைப்பெறும் அமைப்புகளுக்கும் நாட்டின் (அரசாங்கத்தின்) ஆதரவு தேவை என்று கோரும் இயக்கங்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டில் முன்னேறி வருகின்றன. இந்தக் காரியங்களில் புரொட்டஸ்டாண்டுகள் போப்புமார்க்கவாதியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர். அப்படிஅல்ல. பழைய உலகத்தில் ரோமசபை இழந்துவிட்ட மேலாதிக்கத்தை புரொட்டஸ்டாண்டு அமெரிக்காவில் மீண்டும் அடைந்துகொள்ளும் கதவை புரொட்டஸ்டாண்டுகள் ரோம சபைக்குத் திறந்துகொண்டிருக்கின்றனர். ஞாயிறு ஆசரிப்பை வற்புறுத்தும் யோசனைதான் இந்த இயக்கத்தின் தலையாய பொருளாக உள்ளது என்பது உண்மையாகும். (அஞ்ஞான) ரோமமார்க்கத்தில் பிறந்த இந்தக் கோட்பாட்டை (ஞாயிறு ஆசரிப்பை) ரோமன் கத்தோலிக்க சபை தனது அதிகாரத்தின் அடையாளம் என்று உரிமைபாராட்டுகிறது. தேவப்பிரமாணங்களுக்கும்மேலாக, மனிதப் பாரம்பரியங்களைத் துதிக்கின்ற உலக சம்பிரதாயங்களுக்கு இசைவான ஆவியாக போப்புமார்க்கத்தின் ஆவி இருக்கிறது. இது புரொட்டஸ்டாண்டு சபைகளில் பரவி, அவைகளுக்கு முன்னமே போப்புமார்க்கம் செய்திருந்த ஞாயிற்றுக் கிழமையை உயர்த்துதல் என்னும் அதே செயலைச் செய்யும்படி அவைகளை (புரொட்டஸ்டாண்டுகளை) நடத்தியிருக்கிறது.(32)GCTam 673.2

    விரைவில் வரவிருக்கும் போட்டியில் அமர்த்தப்படவுள்ள ஏதுகரங் களைப்பற்றி வாசகர் புரிந்துகொள்ளவேண்டுமானால், கடந்த காலத்தில் இதே நோக்கத்திற்காக ரோம சபைகள் பயன்படுத்திய கருவிகளின் ஆவணங்களைத் தேடிப்பார்க்க வேண்டும். போப்புமார்க்கவாதிகளும் புரொட்டஸ்டாண்டுகளும் இணைந்த அவர்களது பிடிவாதமான கோட்பாடுகளை நிராகரிப்பவர்களுடன் அவர்கள் எவ்விதமாக நடந்துகொள்ளுவார்கள் என்பதை வாசகர் அறிய விரும்பினால், ஓய்வுநாளுக்கும் அதைப் பாதுகாப்புச் செய்திருந்தவர்களுக்கும் நேராக ரோமன் கத்தோலிக்க மார்க்கம் வெளிக்காட்டியிருந்த ஆவியை அவர்கள் பார்க்கட்டும்.(33)GCTam 674.1

    கிறிஸ்தவ உலகத்தின் மேன்மைமிக்க அந்தஸ்தை, அஞ்ஞானப் பண்டிகை (ஞாயிறு ஆசரிப்பு) அடைந்துகொண்டதற்கு அரச கட்டளைகள் பொதுக்குழுக்கள் மதச்சார்பற்ற வல்லமையால் தாங்கப்பட்ட சபைச் சட்டங்கள் ஆகியவை படிக்கட்டுகளாக இருந்தன. ஞாயிறு ஆசரிப்பை வற்புறுத்தும் முதலாவது பொது நடவடிக்கை, காண்ஸ்டன்டைன் அரசனால் செயல்படுத்தப்பட்ட சட்டமாகும். வணக்கத்திற்குரிய சூரியனின் நாளில் (ஞாயிற்றுக் கிழமையில்) நகர்வாழ் மக்கள் அனைவரும் ஓய்ந்திருக்கவேண்டும் என்று இந்தக்கட்டளை கட்டாயப்படுத்துகிறது. ஆனால் நாட்டுப்புற மக்கள் தங்களுடைய விவசாயப் பணிகளைத் தொடர அது அனுமதித்தது. உண்மையில் இது ஒரு அஞ்ஞானிகளின் சட்டமாக இருந்தபோதிலும் அந்தப் பேரரசன் பெயரளவில் கிறிஸ்தவ மார்க்கத்தைத் தழுவியபோது, அது வலியுறுத்தப்பட்டது. (34)GCTam 674.2

    தெய்வீக அதிகாரத்திற்குப் பதிலாக, இந்த அரச கட்டளை போதுமானதல்ல என்று மெய்ப்பிக்கப்படும்போது, இளவரசர்களின் ஆதரவைத் தேடி இருந்தவரும், காண்ஸ்டன்டைன் அரசனின் சிறப்பான நண்பனும் முகஸ்துதிக்காரனுமாயிருந்த யூசுபியஸ் என்னும் போராயர், கிறிஸ்து ஓய்வுநாளை ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றிவிட்டார் என்னும் கூற்றை முன் நகர்த்தினான். இந்தப் புதிய கோட்பாட்டிற்கு ஆதாரமான சாட்சியாக ஒரு வேத வசனங்கூட அவரால் சமர்ப்பிக்கப்படவில்லை. அதன் தவறான தன்மையை யூசுபியசே தன்னையறியாமல் அறிக்கை செய்ததுடன், அந்த மாற்றத்திற்கான உண்மையான ஆசிரியர் யார் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். ஓய்வுநாளில் செய்யப்படவேண்டிய பணிகளாக எவைகள் இருந்தனவோ அவைகளனைத்தையும், அவை எவையாக இருந்தாலும் அவைகளை நாங்கள் கர்த்தருடைய நாளுக்கு (ஞாயிற்றுக்கிழமைக்கு) மாற்றிவிட்டோம்.-Robert Cox,Sabbath Laws and Sabbath Duties,page 538. ஆனால் ஞாயிறு ஆசரிப்பு வாதம் அடிப்படையில்லாததாக இருந்து, கர்த்தருடைய ஓய்வுநாளைக் காலின்கீழ் மிதிப்பதற்கு மனிதர்களைத் தைரியப்படுத்துவதற்கே பயன்பட்டது. உலகத்தால் கௌரவிக்கப்படவேண்டும் என்று விரும்பிய அனைவரும் மக்களின் மதிப்புள்ள அந்தப் பண்டிகை நாளை ஏற்றுக் கொண்டார்கள்.(35)GCTam 674.3

    போப்புமார்க்கம் உறுதியாக ஸ்தாபிக்கப்பட்டபின், ஞாயிற்றுக்கிழமையை உயர்த்தும் பணி தொடர்ந்தது. சில காலத்திற்கு மக்கள் ஆலயத்திற்குச் செல்லாமல் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இன்னும் ஏழாம்நாள் ஓய்வுநாளாகவே கருதப்பட்டிருந்தது. ஆனால் ஒரு மாறுதல் சீராக நிகழ்ந்தது. பரிசுத்தமான உத்தியோகங்களில் இருந்தவர்கள், ஞாயிற்றுக் கிழமைகளில் சமுக வழக்குகளில் தீர்ப்பு வழங்குவது தடைசெய்யப்பட்டது. அதன்பின், விரைவில் அனைத்து மனிதர்களும் அவர்கள் எந்த அந்தஸ்தில் இருந்தாலும், பொதுவான வேலைகளைச் செய்வதிலிருந்து தடைசெய்யப்பட்டனர். மீறினால், சுதந்திரமானவர்களுக்கு அபராதம் என்றும் வேலைக்காரர்களுக்கு அடியும் என்று கட்டளையிட்டனர். பின்னர் செல்வந்தர்கள் அவர்களது சொத்துக்களில் பாதியை இழக்கவேண்டும் என்றும், முடிவாக அதற்குமேலும் பிடிவாதமாக இருந்தால், அடிமைகளாக்கப்படவேண்டும் என்றும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கீழ் வகுப்பைச் சார்ந்தவர்கள் நிரந்தரமாகப் வெளியேற்றப்பட்டனர். (36)GCTam 675.1

    அற்புதங்களுங்கூட உபயோகப்படுத்தப்பட்டிருந்தன. மற்ற ஆச்சரியங் களுக்கிடையில் ஞாயிற்றுக் கிழமைகளில் நிலத்தை உழுவதற்காகச் சென்ற பண்ணையாள் ஒருவன், தன் கலப்பையை இரும்பினால் சுத்தம் செய்தபோது, அந்த இரும்பு அவனது கரத்தை துளைத்து நின்றது. மிக அதிகமான வேதனையுடனும் வெட்கத்துடனும் அவன் அதை இரண்டு வருடங்களாகச் சுமந்துகொண்டு திரிந்தான் என்ற செய்தியும் பரப்பப்பட்டது.-Francis West,Historical and Practical Discourse on the Lord’s Day,page 174. (37)GCTam 675.2

    அதன்பின், ஞாயிற்றுக்கிழமையை மீறுபவர்களால் அவர்களுக்கும் அயலகத்தாருக்கும் பேராபத்து உண்டாகாமல் இருப்பதற்காக அவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று பங்கு குருவானவர் விரும்புகிறார் என்று எச்சரிக்கை செய்யும்படி குருமார்களுக்குப் போப்பு கட்டளையிட்டார். மக்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை செய்துகொண்டிருந்ததால்தான் மின்னலினால் தாக்கப்பட்டனர். எனவே, அது ஓய்வுநாளாகத்தான் இருக்கக்கூடும் என்ற குருமார்களின் ஆலோசனைக்குழு ஒன்று எழுப்பிய பெரிய வாதம் எங்கும் பரவியபோது, அதைப் புரொட்டஸ்டாண்டுகளுங்கூடப் பயன்படுத்தினர். அந்த நாளை அலட்சியப்படுத்துவதால் தேவனுடைய அதிருப்தி எவ்வளவு அதிகமானதாக இருக்கிறது என்பது வெளிப்படையாக இருக்கிறது என்று குருமார்கள் கூறினார்கள். அதற்குப்பின், அந்த நாளுக்கு (ஞாயிறு ஆசரிப்பிற்கு) கொடுக்கப்பட்டிருக்கவேண்டிய மேன்மைக்காகவும், கிறிஸ்தவ மார்க்கத்தின் உயர்விற்காகவும், வரவிருக்கும் காலத்தில் அதிகமான பக்தியுடன் ஆசரிக்கப்படும் படியாகவும் குருமார்களும் ஊழியக்காரர்களும் அரசர்களும் இளவரசர்களும் விசுவாசமுள்ள மக்கள் அனைவரும் அதிகமான முயற்சியை எடுக்கவேண்டுமென்றும் ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.- Thomas Morer,Discourse in Six Dialogues on the Name,Notion,and Observation of the Lord’s Day,page 271. (38)GCTam 676.1

    ஆலோசனைக் குழுக்களின் சட்டங்கள் ஆதாரமற்றவைகளாக நிரூபிக்கப்பட்டதினால், மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தும் ஒரு கட்டளையை பிறப்பிக்கும்படிக்கும், ஞாயிற்றுக் கிழமையில் வேலையிலிருந்து ஒதுங்க கட்டாயப்படுத்தும்படிக்கும் அரசியல் அதிகாரிகள் கோரப்பட்டனர். ரோமில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இதற்குமுன் பிறப்பிக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் அதிக பலவந்தத்துடனும் பக்திவிநயத்துடனும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. அவை மத சட்டத்திலும் இணைக்கப்பட்டு சமுதாய அதிகாரிகளால் கிறிஸ்தவம் முழுவதிலும் நிர்பந்திக்கப்பட்டது. (See Heylyn,History of the Sabbath,pt. 2, ch. 5,sec. 7.) (39)GCTam 676.2

    ஆனால் ஞாயிற்றுக்கிழமை ஆசரிப்பிற்கு வேதவாக்கிய ஆதாரம் இல்லாமல் இருந்ததினால் உண்டான திகைப்பு கொஞ்சமல்ல. சூரியனுடைய நாளை மேன்மைப்படுத்துவதற்காக ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள் என்ற யேகோவாவின் திட்டமான அறிவிப்பை ஒரு பக்கமான ஒதுக்கிவைக்கும் தங்களுடைய ஆசிரியர்களின் உரிமையைக்குறித்து மக்கள் கேள்விகள் கேட்டனர். வேதாகமச் சான்று இல்லாமலிருந்ததை நிரப்பிட, பிற அவசரச் செயல்கள் தேவையாக இருந்தன. பன்னிரண்டாம் நூற்றாண்டின் முடிவில், இங்கிலாந்து சபையைச் சந்தித்த ஞாயிற்றுக்கிழமைக்காக வைராக்கியமாகப் பரிந்துபேசியிருந்த ஒருவர், சத்தியத்திற்கு விசுவாசமான சாட்சிகளாக இருந்தவர்களால் தடுக்கப்பட்டார். அவருடைய முயற்சிகள் பலன் தராததால் அவரது போதனையை வலுப்படுத்தும் உபாயங்களைத் கண்டுபிடிப்பதற்காக அவர் சிறிது காலத்திற்கு அந்த நாட்டைவிட்டுச் சென்றார். அவர் திரும்பி வந்தபோது, அந்தத் தேவை நிரப்பப்பட்டது. எனவே அவரது பிந்தைய ஊழியத்தில் அவர் பெரும் வெற்றி அடைந்தார். ஞாயிற்றுக் கிழமையை ஆசரிப்பதற்கு வேண்டிய கட்டளையும், அதற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கு வரவிருக்கும் திகிலூட்டும் பயங்கரமான பயமுறுத்தல்களும் அடங்கிய தேவனாலேயே எழுதிக் கொடுக்கப்பட்டது என்று தோன்றும் விதமாக இருந்த ஒரு சுருளை அவர் தன்னுடன் கொண்டுவந்தார். அது ஆதரித்திருந்த அமைப்பைப் போன்றே கீழ்த்தரமும் போலியுமாக இருந்த அந்த விலையேறப்பெற்ற ஆதாரம் பரலோகத்திலிருந்து விழுந்து, எருசலேமில் கொல்கதாவிலுள்ள பரிசுத்த சிமியோனின் பீடத்தின்மீது காணப்பட்டது என்றும் செல்லிக் கொள்ளப்பட்டது. ஆனால் உண்மையில் அது புறப்பட்டிருந்த இடம் ரோம் நகரிலுள்ள போப்புவின் அரண்மனைதான். ஏமாற்றுகளும் பொய்க் கையெழுத்துக்களும் எல்லாக் காலங்களிலும் சபையின் வல்லமையையும் செழுமையையும் பெருக்கிக்கொள்ள சட்டரீதியானது என்று போப்புமார்க்கத் தலைவர் உயர்வாக்கினார். (40)GCTam 676.3

    அந்தச் சுருள், ஒன்பதாம் மணி நேரத்திலிருந்து, அதாவது சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணியிலிருந்து திங்கள் கிழமை காலை சூரிய உதயம்வரை வேலைசெய்வதற்குத் தடை விதித்திருக்கிறது. அதன் அதிகாரம் அநேகமான அற்புதங்களினால் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குமேல் வேலை செய்தவர்கள் கை கால் விளங்காத வாத நோயினால் தாக்கப்பட்டனர் என்றும் கூறப்பட்டது. ஒரு அரவை ஆலை உரிமையாளர் தானியத்தை அரைக்க முயன்றபோது மாவு வருவதற்குப் பதிலாக இரத்தம் பெருமழைபோல் வருவதையும், அதுவுமல்லாமல் அதை இயக்கியிருந்த பலத்த தண்ணீர் ஒட்டத்திற்கிடையிலும், அந்த அரவை ஆலையின் சக்கரம் நின்றுவிட்டதையும் அவர் கண்டார். ஒரு ஸ்திரீ பிசைந்த மாவை அடுப்பில் வைத்தபின், தீ நன்கு சூடாக எரிந்திருந்தபோதிலும் அந்தப் பிசைந்த மாவு வேகாமல் பச்சையாகவே இருப்பதைக் கண்டார். வேறொரு ஸ்திரீ அதைப் போலவே ரொட்டி சுடுவதற்காக மாவைப் பிசைந்து ஆயத்தம் செய்தபின் (சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணியாகி விட்டதினால்) ஒன்பதாம் மணி ஆகிவிட்டதால், அந்தப் பிசைந்த மாவு தெய்வீக வல்லமையால் ரொட்டித் துண்டுகளாக மாறியிருப்பதைக் கண்டாள். சனிக்கிழமை ஒன்பதாம் மணி நேரத்திற்குப்பின், ஒரு மனிதன் ரொட்டி சுட்டு, அதை மறுநாள் காலையில் சாப்பிட்டபோது அதிலிருந்து இரத்தம் புறப்பட்டு வந்தது என்பது போன்ற இப்படிப்பட்ட கீழ்த்தரமான மூடநம்பிக்கைமிக்க கட்டுக்கதைகளினால் ஞாயிற்றுக் கிழமைக்காகப் பரிந்துபேசினவர்கள், அதன் பரிசுத்தத்தை உறுதிப்படுத்த முயன்றனர்! (See Roger de Hoveden,Annals,vol. 2, pp. 528—530.). (41)GCTam 677.1

    இங்கிலாந்தைப் போலவே ஸ்காட்லாந்திலும் பண்டைய ஓய்வுநாளின் ஒரு பகுதியை ஞாயிற்றுக் கிழமையுடன் பிணைத்ததின் மூலமாக, ஞாயிற்றுக் கிழமை ஒரு மதிப்பை அடைந்தது. ஆனால் பரிசுத்தமாக ஆசரிக்கப்படவேண்டும் என்றிருந்த நேரம் மாறுபட்டது. சனிக்கிழமை நண்பகல் பன்னிரண்டு மணியில் இருந்து பரிசுத்த நேரமாகக் கணக்கிடப்பட்டு, அந்த நேரத்திலிருந்த திங்கள் கிழமை காலைவரை எந்த மனிதனும் உலகப்பிரகாரமான தொழிலில் ஈடுபடக்கூடாது என்று ஸ்காட்லாந்து அரசனிடமிருந்து வந்த கட்டளை அறிவித்தது. Morer,pages 290,291. (42)GCTam 678.1

    மேலும் அத்துடன் அல்லாமல், ஞாயிற்றுக்கிழமையின் பரிசுத்தத்தை நிலைநிறுத்த, சகலவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு, போப்புமார்க்கவாதிகள் அவர்களாகவே ஓய்வுநாளின் தெய்வீக அதிகாரத்தை அதற்குப் பதிலாக ஏற்படுத்தப்பட்டுள்ள மனித ஏற்பாட்டின் தோற்றத்தையும் பகிரங்கமாக அறிக்கை செய்தனர். கிறிஸ்தவர்களாகிய நாங்கள் ஓய்வுநாளைக் கர்த்தருடைய நாளுக்கு மாற்றியிருந்தபோதிலும், ஏழாம்நாள்தான் தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு யூதர்களால் மட்டுமே பெற்றுக்கொள்ளப்பட்டு ஆசரிக்கப்பட்டிருந்தது என்பது மட்டுமன்றி, தேவனைத் தொழுகிறோம் என்று கூறிக்கொண்டிருக்கும் மற்ற அனைவராலும் ஆசரிக்கப்பட்டிருந்தது என்பதை அனைத்துக் கிறிஸ்தவர்களும் நினைவில் வைத்துக்கொள்ளுவார்களாக என்று பதினாறாம் நூற்றாண்டிலிருந்த போப்புவின் ஒரு ஆலோசனைக்குழு தெளிவாக அறிவித்தது.-Ibid., pages 281,282. தெய்வீகப் பிரமாணத்தை பொய்யாகத் திருத்தியிருந்தவர்கள் செய்த வேலையின் தன்மையைப்பற்றி, அறியாமை உள்ளவர்களாக அவர்கள் இருக்கவில்லை. அவர்கள் தெரிந்து, வேண்டுமென்றே ஆலோசனை செய்து, தங்களை தேவனுக்கும் மேலாக வைத்துக்கொண்டனர். (43)GCTam 678.2

    ரோமன் கத்தோலிக்க சபையுடன் இணங்காதவர்களுக்கு எதிராக இருந்த அதன் கொள்கையை, நீண்டகாலமாக வால்டேனியர்களுடன் நடத்தியிருந்த இரத்தம் சிந்திய உபத்திரவம் நன்றாகத் தெரியும்படியாக படம்பிடித்துக் காட்டியது. அந்த வால்டேனியர்களில் சிலர், ஓய்வுநாளை ஆசரிப்பவர்களாக இருந்தனர். மற்றவர்கள் நான்காம் பிரமாணத்தின்மீது கொண்டிருந்த கற்பு நெறிக்காக, அதே விதமாகப் பாடுகளை அனுபவித்தனர். எத்தியோப்பியா, அபிசீனியா ஆகிய சபைகளின் வரலாறு சிறப்பான முக்கியத்துவமுடையவையாக உள்ளன. இருண்ட காலங்களின் துயருக்கிடையில், மத்திய ஆசியாவிலிருந்ததினால் தங்களுடைய விசுவாசத்தைச் செயல்படுத்துவதில் அநேக நூற்றாண்டுகளாக அவர்கள் சுதந்திரத்தை அனுபவித்தனர். இறுதியில் அவர்கள் இருப்பதை ரோமன் கத்தோலிக்க சபை அறியவே, அபிசீனியப் பேரரசன், போப்பு கிறிஸ்துவின் பதிலாளி என அறிக்கைசெய்யக் கவர்ந்திழுக்கப்பட்டான். ஏனைய சலுகைகள் பின்தொடர்ந்தன. கடுமையான தண்டனையின் கீழ், ஓய்வுநாளை ஆசரிப்பதைத் தடைசெய்யும் ஒரு அரச கட்டளை பிறப்பிக்கப்பட்டது. (See MichaelGeddes, Church History of Ethiopia, pages311,312.) விரைவில் போப்பு மார்க்கத்தின் கொடுங்கோன்மை வேதனை தரும் நுகமாக ஆனபடியால், அபிசீனியர்கள் அதைத் தங்களது கழுத்திலிருந்து உடைத்துப்போடத் தீர்மானித்தனர். பயங்கரமான ஒரு போராட்டத்திற்குப்பின், ரோமன் கத்தோலிக்கர்கள் அவர்களது ஆளுகையிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். பின்னர் பண்டைய விசுவாசம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அந்த சபையினர் தங்களின் சுதந்திரத்தில் மகிழ்ந்தனர். ரோமன் கத்தோலிக்க சபையிலிருந்து அறிந்துகொண்ட அதன் வஞ்சகம், கொடுங்கோன்மை ஆகியவைகளை அவர்கள் ஒருபோதும் மறக்கவில்லை. அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட ராஜ்யத்திற்குள், ஏனைய கிறிஸ்தவ உலகத்தால் அறியப்படாதவர்களாக இருந்ததில் திருப்தி உள்ளவர்களாக இருந்தனர். (44)GCTam 678.3

    போப்புமார்க்கத்தின் முழுமையான மருள விழுகைக்குமுன் அவை ஓய்வுநாளை ஆசரித்தன. தேவனுடைய கற்பனைக்குக் கீழ்ப்படிந்து அவர்கள் ஏழாம்நாளை ஆசரித்திருந்தபோது, சபையின் சம்பிரதாயத்திற்கு ஒத்தவிதத்தில் ஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்வதைத் தவிர்த்திருக்கின்றனர். ரோம சபை அதன் ஏற்பாட்டின் வல்லமையை அடைந்துகொண்டபின், தனது சொந்த நாளை உயர்த்துவதற்காக தேவனுடைய ஓய்வுநாளைக் காலின் கீழிட்டு மிதித்தது. ஆனால் ஆப்பிரிக்க சபைகள் ஏறத்தாழ ஆயிரம் வருடங்கள் இந்த மருள விழுகையில் பங்குபெறாதவையாக இருந்தன. அவைகள் ரோமன் கத்தோலிக்கர்களின் கீழ் கொண்டுவரப்பட்டபோது, மெய்யான ஓய்வுநாளை ஓரமாக வைத்துவிட்டு, தவறான ஓய்வுநாளை ஆசரிக்கும்படி அவர்கள் வற்புறுத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் தங்களுடைய சுதந்திரத்தை மறுபடியும் அடைந்த உடனேயே நான்காவது கற்பனைக்குக் கீழ்ப்படிவதற்கு மறுபடியும் திரும்பி வந்தனர். (45)GCTam 679.1

    பொய்யான ஓய்வுநாளுக்கும் அதன் தற்காப்பாளர்களுக்கும் நேராக, ரோம சபைக்கு உள்ள பகையையும் அது உண்டுபண்ணின அமைப்பை உயர்த்துவதற்காக அது கையாளும் வகைகளையும் கடந்தகால ஆவணங்கள் தெளிவாக வெளிக்காட்டுகின்றன. ஞாயிற்றுக் கிழமையை உயர்த்துவதற்காகப் போப்புமார்க்கத்தினரும் புரொட்டஸ்டாண்டுகளும் ஒற்றுமைப்படும்போது, பழைய செயல்களின் கோரக்காட்சிகள் திரும்பவும் செய்யப்படும் என்பதை தேவனுடைய வார்த்தை போதிக்கிறது. (46)GCTam 680.1

    ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளுடையதாக இருந்த அந்த மிருகமே, பூமியும் அதன் குடிகளும் போப்புமார்க்கத்தை வணங்கும்படிச் செய்யும் வல்லமை படைத்த சிறுத்தையைப் போலிருந்தது என்று வெளி. 13-ம் அதிகாரத்தில் தீர்க்கதரிசனமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த இரண்டு கொம்புகளை உடைய மிருகம், பூமியின் குடிகளிடம் மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ண வேண்டுமென்று சொல்லவேண்டியதாகவும் இருக்கிறது. மேலும் அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலது கைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும் (வெளி. 13:16) சொல்லவேண்டியிருக்கிறது. ஆட்டுக்குட்டியைப்போன்ற கொம்புகளைக் கொண்ட மிருகம், அமெரிக்க ஐக்கிய நாட்டை எடுத்துக்காட்டும் வல்லமை என்பது காட்டப்பட்டிருக்கிறது. ரோமசபை அதன் சிறப்பான மேலாதிக்கத்தின் அங்கீகரிப்பு என்று உரிமைபாராட்டும் ஞாயிற்றுக்கிழமை ஆசரிப்புச் சட்டத்தை அமெரிக்க ஐக்கிய நாடு வற்புறுத்தும்போது, இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறும். ஆனால் போப்புமார்க்கத்திற்கு இந்த வணக்கத்தைச் செலுத்துவதில் அமெரிக்க ஐக்கிய நாடு மட்டும் தனியாக இருக்காது. ஒரு காலத்தில் ரோமசபையின் ஆளுகையை அங்கீகரித்திருந்த நாடுகளில், அதன் செல்வாக்கு இன்னும் அழிக்கப்படாததாகவே உள்ளது. அதன் வல்லமை மீண்டும் திரும்பிவரும் என்று தீர்க்கதரிசனம் முன்னறிவிக்கிறது. “அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத் தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி”- வெளி 13:3. போப்பு மார்க்கத்திற்கு கி.பி.1798-ல் உண்டான வீழ்ச்சியை, சாவுக்கோதுவான காயம் என்கிறது இவ்வசனம். ஆனாலும் அதன்பின், சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது என்று தீர்க்கதரிசி கூறுகிறார். கிறிஸ்துவின் இரண்டாம் வருகைவரை பாவமனிதன் தொடருவான் என்று பவுல் தெளிவாகக் கூறுகிறார்-2 தெச. 2:8. காலத்தின் முடிவுவரை அவன் தனது வஞ்சகச் செயலை தொடருவான். “ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்” (வெளி. 13:8) என்று வெளிப்படுத்தல்காரர் போப்புமார்க்கத்தைக் குறிப்பிட்டுக் கூறுகிறார். ரோமசபையின் அதிகாரத்தை முற்றிலுமாகச் சார்ந்திருக்கும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாட்டிற்கு கொடுக்கப்படும் மேன்மையினால், போப்புமார்க்கம் பழைய புதிய உலகம் ஆகிய இரண்டின் வணக்கத்தையும் பெற்றுக்கொள்ளும். (47)GCTam 680.2

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலத்திலிருந்த அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள தீர்க்கதரிசன மாணவர்கள் இந்த சாட்சியை உலகத்திற்குக் கொடுத்திருக்கிறார்கள். இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சியில் இந்த முன்னறிவிப்பின் நிறைவேறுதலை நோக்கிய ஒரு முன்னேற்றம் வேகமாக நிகழ்வது காணப்படுகிறது. போப்புமார்க்கத்தினரிடம் ஞாயிறு ஆசரிப்பிற்கான தெய்வீக அதிகாரத்தின் சான்றுகள் எதுவும் இல்லை. அவர்கள் தேவனுடைய பிரமாணங்களின் இடத்தை நிரப்ப, அற்புதங்களைக் கற்பனை செய்து அமைத்துக்கொண்டார்கள். அதைப்போலவே, புரொட்டஸ்டாண்டு ஆசிரியர்களிடமும் ஞாயிறு ஆசரிப்பிற்கான வேதவாக்கிய ஆதாரம் எதுவும் இல்லாதபோது, தெய்வீக அதிகாரம் இருப்பதாக உரிமைபாராட்டிக்கொண்டிருக்கின்றனர். ஞாயிற்றுக் கிழமை ஓய்வுநாளை மனிதர்கள் மீறினால், அவர்களை தேவனுடைய நியாயத்தீர்ப்பு சந்திக்கும் என்று வற்புறுத்தி திரும்பத்திரும்பக் கூறும் செயல் ஏற்கனவே வற்புறுத்தப்பட்டுக்கொண்டிருகிறது. ஞாயிறு ஆசரிப்பை வற்புறுத்தும் அந்த இயக்கம் மிகவும் விரைவாக முன்னேறிக்கொண்டுமிருக்கிறது. (48)GCTam 681.1

    ரோமசபை அதன் ஞானத்தின் நுட்பமான தந்திரத்திலும் ஆச்சரியப் படக்கூடியதாக இருக்கிறது. என்ன நடக்கவிருக்கிறது என்பதை அவளால் படிக்கமுடியும். புரொட்டஸ்டாண்டு சபைகள் தவறான ஓய்வுநாளை ஏற்றுக்கொள்ளுவதினால் தனக்கு வணக்கம் செலுத்துகின்றன என்பதையும், கடந்துபோன காலத்தில் அதை (ஞாயிறு ஆசரிப்பை) நிர்ப்பந்திப்பதற்காக தான் பயன்படுத்திய அதே உபாயத்தைக் கையாளுவதற்குப் புரொட்டஸ்டாண்டு மார்க்கமும் ஆயத்தம் செய்துகொண்டிருப்பதையும் கண்டு ரோம சபை தனது வேளைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. சத்தியத்தின் ஒளியை நிராகரிப்பவர்கள், தான் தவறாமை உடையது என்ற பாணியை அமைத்துக்கொண்ட வல்லமையின் உதவியை, அதனிடமிருந்து தோன்றிய அமைப்பை உயர்த்துவன்மூலம் நாடுவார்கள். இதில் புரொட்டஸ்டாண்டு களுக்கு உதவ ரோமசபை எவ்விதமாக உடனே வரும் என்பதை, போப்புமார்க்கத் தலைவர்களைவிட யார் நன்கு அறிந்துள்ளனர்? (49)GCTam 681.2

    போப்புவின் கட்டுப்பாட்டின் வல்லமையின்கீழ், அவரது விருப்பங் களுக்கென்று சேவை செய்வதற்காக உலகளாவிய விரிந்து பரந்த கிளைகளுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு விசாலமான அமைப்பை ரோமசபை வைத்துள்ளது. உலகின் ஒவ்வொரு நாட்டிலுமுள்ள, அதன் பல லட்சக்கணக்கான தொடர்பாளர்கள் தாங்களனைவரும் போப்புவுடன் உள்ள உறவைத் தாங்களாகவே பற்றிக்கொள்ளவேண்டும் என்று திட்டமாகக் கற்பிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களது தேசியம் அல்லது அரசு எதுவாக இருந்தாலும்சரி, மற்றெல்லாவற்றையும்விடத் தங்களுடைய சபையின் அதிகாரத்தைத்தான் மேலானதாகக் கருதக்கூடியவர்களாக இருந்தாக வேண்டும். தங்களுடைய நாட்டின்மீதுள்ள பக்திவிசுவாசத்திற்காக அவர்கள் சத்தியப் பிரமாணம் செய்திருந்தாலும், ரோமசபைக்கு விரோமாக இருக்கிற ஒவ்வொரு உறுதிமொழிக்கும் பின்னால் அவைகளை பலனற்றதாக்குகின்ற ரோம சபைக்குக் கீழ்ப்படிதல் என்னும் உறுதிமொழியும் உள்ளது. (50)GCTam 681.3

    ஞாயிற்றுக்கிழமையை உயர்த்துதல் என்னும் பணியில் உள்ள ரோமசபையின் உதவியை ஏற்றுக்கெள்ள முன்மொழியும் வேலையை புரொட்டஸ்டாண்டுகள் செய்யும்போது, தாங்கள் செய்வது என்ன என்பதை அவர்கள் அறியாதவர்களாக உள்ளனர். தங்களது நோக்கத்தை நிறைவேற்று வதில் அவர்கள் முனைந்தவர்களாக இருக்கும்போது, ரோமசபை தனது வல்லமையை மீண்டும் ஸ்தாபிக்கவும் இழந்துபோன அதன் மேலாதிக்கத்தை திரும்பவும் அடைந்துகொள்ளுவதையுமே இலக்காகக் கொண்டுள்ளது. ()GCTam 682.1

    தனக்கு ஒரு நிற்குமிடத்தை ஆதாயப்படுத்திக்கொண்டபின்னர் இளவரசர்கள், மக்கள் ஆகியோரின் அழிவிலுங்கூட, தனது இலக்கை நோக்கி முன்னேறிக்கொள்ளுவதற்காக, பிற நாடுகளின் காரியங்களில் மறைமுகமாக உட்புகும் அதன் சாமர்த்தியம், விடாப்பிடியான முயற்சிகளைப்பற்றி வரலாறு சாட்சிபகருகிறது. கி.பி.1204-ல் இன்னசன்ட் என்னும் போப், அரகான் நாட்டின் அரசனாயிருந்த இரண்டாம் பீட்டர் என்பவனிடமிருந்த, கீழ்க்கண்ட அசாதாரணமான வாக்குறுதியைப் பலவந்தமாகவே வாங்கிக்கொண்டார். அந்த வாக்குறுதியில் “அரகான் நாட்டின் அரசனாயிருக்கும் பீட்டராகிய நான், எனது கர்த்தராயிருக்கும் போப் இன்னசன்ட் அவர்களுக்கும் அவரது கத்தோலிக்க வாரிசுகளுக்கும் ரோமன் கத்தோலிக்க சபைக்கும் எப்பொழுதும் விசுவாசமுள்ளவனாக இருப்பதுடன், அவருக்குள்ள கீழ்ப்படிதலில் விசுவாசத்தைப் பாதுகாத்து நிற்கவும், துன்மார்க்கமான மதவிரோதத்தை உபத்திரவப்படுத்தவும் செய்வேன் என்ற எனது வாக்குறுதியை அறிக்கை செய்கிறேன்” என்று இருக்கிறது.--John Dowling,The History of Romanism,b. 5, ch. 6,sec. 55. ஆம். “பேரரசர்களை நீக்குவதும், அநீதியான ஆளுகைக்குக் கீழ்ப்பட்டிருப்பவர்களை விடுதலைசெய்வதும் அவரால் முடியக்கூடிய சட்டத்திற்குட்பட்டதாகவும் உள்ளது” என்ற ரோமநகரின் பேராயருக்குள்ள வல்லமையைப்பற்றிய உரிமைபாராட்டுதலுக்கு இது இசைவுள்ளதாக இருக்கிறது.--Mosheim,b. 3,cent. 11,pt. 2, ch. 2,sec. 9,note 17. (51)GCTam 682.2

    ரோமன் கத்தோலிக்க சபை ஒருபோதும் மாறுவதில்லை என்ற அதன் பெருமைமிக்க பேச்சு நமது ஞாபகத்தில் இருக்கட்டும். ஏழாம் கிரகோரி, மூன்றாம் இன்னசன்ட் ஆகியோரின் கொள்கைகள்தான் இப்போதும் ரோமசபையின் கொள்கைகளாக உள்ளன. அதற்குப் பழைய வல்லமை இருந்தால், கடந்துபோன நூற்றாண்டுகளில் அவைகள் செயலாற்றியிருந்ததைப் போலவே, அதே பலத்துடன் இப்பொழுதும் செயலாற்றும். நாட்டின் வல்லமையை சபை நடப்பிக்கலாம் அல்லது கட்டுப்படுத்தலாம் என்னும் கொள்கை அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஏற்படுத்தப்படட்டும். சமயச்சார்பற்ற சட்டங்களினால் சமயச்சார்புற்ற ஆசரிப்புகளை வற்புறுத்தலாம் என்னும் நிலைமை உண்டாகட்டும். சுருக்கமாகக் கூறப்போனால், சபையின் அதிகாரமும் அரசும் சேர்ந்து, மனச்சாட்சியின்மீது ஆதிக்கம் செலுத்தலாம் என்னும் நிலை உண்டாகட்டும். அப்போது அந்த நாட்டில் ரோமசபையின் வெற்றி நிச்சயமானதாகிவிடும். (52)GCTam 683.1

    வரவிருக்கும் ஆபத்தைப்பற்றி தேவனுடைய வார்த்தை எச்சரிப்பு கொடுத்துக்கொண்டிருக்கிறது. அது செவிசாய்க்கப்படாமல் இருக்குமானால், ரோமசபையின் வஞ்சக வலையிலிருந்து விடுதலை பெறுவதற்கு மிகவும் பிந்திவிட்ட சமயத்தில்தான் ரோமசபையின் உண்மையான நோக்கம் என்ன என்பதை புரொட்டஸ்டாண்டு உலகம் உணர்ந்துகொள்ளும். அதுவல்லமையை நோக்கி மௌனமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. சட்டமன்றங்களிலும் சபைகளிலும் மனிதர்களின் இருதயங்களிலும் அதன் கோட்பாடுகள் செல்வாக்கைச் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. அதன் இரகசியமான இடைவேளைகளில், முந்தைய உபத்திரவங்களை மீண்டும் செய்வதற்காக, அது தன் திரண்ட உயரமான உருவத்தை அமைத்துக்கொண்டுவருகிறது. அதன் நேரம் வரும்போது, தாக்குதலை நடத்துவதற்காக, திருட்டளவாகவும் சந்தேகப்படாத விதத்திலும் அது தன் படைகளை பலப்படுத்திவருகிறது. அது விரும்புவதெல்லாம், அதற்குச் சாதகமான இடம்தான். அது அதற்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ரோமசபையின் உள்ளார்ந்த நோக்கம் என்ன என்பதை நாமனைவரும் விரைவில் காணுவோம். விரைவில் உணருவோம். தேவனுடைய வார்த்தையின்மீது எவர்கள் நம்பிக்கை வைத்து அதற்குக் கீழ்ப்படிவார்களோ, அவர்கள் அதனால் நிந்தனையையும் உபத்திரவத்தையும் அனுபவிப்பார்கள். (53)GCTam 683.2