Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாபெரும் ஆன்மீகப் போராட்டம்!

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    36—வரவிருக்கும் போராட்டம்!

    (மூலநூல் : The Great Controversy, பக்கம்: 582—592)

    ரலோகத்தில் ஆரம்பமான மாபெரும் ஆன்மீக யுத்தத்தின் தொடக்கத்திலிருந்தே, தெய்வப்பிரமாணங்களைத் தூக்கி எறியவேண்டும் என்பது சாத்தானின் நோக்கமாக இருக்கிறது. அதை நிறைவேற்றுவதற்காக, அவன் சிருஷ்டிகருக்கெதிரான கலகத்தில் ஈடுபட்டான். அவன் பரலோகத்திலிருந்து வெளியில் தள்ளப்பட்டபோதிலும், பூமியின்மேல் அவனது யுத்தத்தைத் தொடர்ந்து நடத்திவருகிறான். மனிதர்களை வஞ்சித்து அதனால் அவர்களை தேவனுடைய கற்பனையை மீறும்படி நடத்துவதே, அவன் சீராகத் தொடர்ந்திருக்கும் செயலின் நோக்கமாகும். பிரமாணத்தை மொத்தமாக ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்தாலும் அல்லது கற்பனைகளில் ஒன்றைமட்டும் நிராகரித்தாலும் முடிவில் அதன் பலன் ஒன்றாகவே இருக்கும். “எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்”-யாக். 2:10. ஒன்றில் தவறுகிறவன் பிரமாணம் முழுவதிலும் உள்ள அவனது குற்றத்தை வெளிக்காட்டுகிறான். அவனது செல்வாக்கும் உதாரணமும் மீறுதலின் பகுதியில் உள்ளது. அவன் எல்லாவற்றிலும் குற்றவாளி ஆகிறான். (1)GCTam 685.1

    தெய்வீகச்சட்டங்களின்மீது குற்றஞ்சுமத்துவதை தேடுவதற்காக வேதாகமக் கோட்பாடுகளில் சாத்தான் மாற்றங்களைச் செய்தபோதும், வேதவாக்கியங்களை நம்புகிறோம் என்று கூறிக்கொள்ளும் ஆயிரக்கணக்கான வர்களின் விசுவாசத்தில் தவறுகள் பதிக்கப்பட்டுள்ளன. நீண்டகாலமாகத் தொடர்ந்து வருகின்ற தேவப்பிரமாணத்திற்கு எதிரான மாபெரும் போராட்டம்தான், சத்தியத்திற்கும் தவறுக்கும் இடையிலுள்ள பெரும் இறுதிப் போராட்டமாகும். மனிதர்களுடைய சட்டத்திற்கும் யேகோவாவின் பிரமாணங்களுக்கும், வேதாகம மதத்திற்கும் கட்டுக்கதை பாரம்பரியம் ஆகியவற்றின் மதத்திற்கும் இடையிலுள்ள போராட்டத்தில் இப்பொழுது நாம் நுழைந்துகொண்டிருக்கிறோம்.(2)GCTam 685.2

    இந்தப் போட்டியில் சத்தியம் நீதி ஆகியவைகளுக்கு எதிராக ஒன்றுபட இருக்கின்ற பிரதிநிதிகள் இப்பொழுது தீவிரமான பணியில் ஈடுபட்டுள்ளனர். பாடுகள், இரத்தம் சிந்துதல் ஆகிய அப்படிப்பட்ட கிரயத்தால் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தை மலிவானதாகக் கருதப்படுகிறது. அனைவருக்கும் கிடைக்கக்கூடிய விதத்தில் வேதாகமம் உள்ளது. ஆனால் அதை உண்மையாகவே வாழ்க்கைக்கு வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் வெகு சிலர் தான் உள்ளனர். உலகத்தில் மட்டுமன்றி சபையிலுங்கூட அச்சம் தரும் அளவில், கடவுள் இல்லை என்னும் தன்மை நிலவிவருகிறது. கிறிஸ்தவ விசுவாசத்தின் முக்கியமான தூண்களாக இருக்கக்கூடிய கோட்பாடுகளை மறுக்க அநேகர் முன்வந்துள்ளனர். ஆவியின் ஏவுதலை உடையவர்களாக இருந்த எழுத்தாளர்களால், முன்வைக்கப்பட்டுள்ள சிருஷ்டிப்பு, மனிதனின் விழுகை, பாவ நிவாரணம், தேவப்பிரமாணத்தின் நித்தியத்துவம் ஆகியவை நடைமுறையில் முற்றிலுமாகவோ அல்லது பகுதியாகவோ கிறிஸ்தவ உலகிலுள்ள பெரும்பான்மையினரால் நிராகரிக்கப்பட்டுள்ளன. தங்களுடைய ஞானம், சுதந்திரம் ஆகியவைகளின்மீது தாங்களாகவே பெருமைகொள்ளும் ஆயிரக்கணக்கானவர்கள் வேதாகமத்தின்மீது உறுதியான விசுவாசம் வைப்பது பலவீனத்தின் சான்று என்று கருதுகின்றனர். வேதவாக்கியங்களின்மீது காரணமில்லாமல் குற்றம் கூறுவதும், அதின் முக்கியமான சத்தியங்களை விபரீதமாக ஆவிக்குரியதாக்கி விளக்குவதுமே, மேலான திறமை, கல்வி ஆகியவைகளின் ஆதாரம் என்றும் எண்ணுகின்றனர். தேவனுடைய கற்பனைகள் மாற்றப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. எழுத்தின்படி கீழ்ப்படிவதற்கு அவைகள் அவசியமானவை, தொடர்ந்து மதிப்புள்ளவைதான் என்று கருதுபவர்கள் கேலிச் சிரிப்பிற்கும் கண்டனத்திற்கும் உரியவர்கள் என எண்ணப்படுகின்றனர் என்று அநேக ஊழியக்காரர்களும் அவர்களது மக்களுக்குப் போதிக்கின்றனர். அநேக பேராசிரியர்களும் ஆசிரியர்களும் அவர்களது மாணவர்களுக்கு அவ்வாறே கற்பிக்கின்றனர். (3)GCTam 686.1

    சத்தியத்தை நிராகரிப்பதன்மூலமாக மனிதர்கள் அதன் ஆசிரியரை நிராகரிக்கின்றனர். தேவனுடைய கற்பனையைக் காலின்கீழிட்டு மிதிப்ப தினால், கற்பனையைக் கொடுத்த அதிகாரத்தை மறுக்கின்றனர். மரத்தினாலோ கல்லினாலோ ஒரு சிலையை உருவாக்குவதைப்போலவே, தவறான கோட்பாடுகளினாலும் தத்துவ விளக்கங்களினாலும் ஒரு சிலையை உண்டுபண்ணுவது எளிதாக உள்ளது. தேவனுடைய குணநலன் களைத் தவறாக எடுத்துக் காட்டுவதினால், தேவனை தவறான சுபாவம் உள்ள ஒருவராகக் காணும்படிச் சாத்தான் மனிதர்களை நடத்துகிறான். ஜீவனுள்ள தேவன், அவரது வார்த்தையில் கிறிஸ்துவின் படைப்பின் செயலில் வெளிப்படுத்தப்பட்டு அநேகருக்குத் தத்துவ சிலைகளாக சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டிருக்கிறார். ஆயிரக்கணக்கானவர்கள் இயற்கையின் தேவனை மறுக்கும்போது, இயற்கையைத் தெய்வமாகக் கருதுகின்றனர். எலியாவின் நாட்களில், பண்டைய இஸ்ரவேலருக்கு மத்தியில், விக்கிரக ஆராதனை இருந்ததுபோல், இன்று கிறிஸ்தவ உலகத்தில் விக்கிரக ஆராதனை வித்தியாசமான வடிவில் உள்ளது. தொழில் ரீதியாக மனிதர்களிலுள்ள ஞானம் என்னும் தெய்வம், தத்துவ சாஸ்திரிகளில் உள்ள தெய்வம், எழுத்தாளர்களில் உள்ள தெய்வம், மென்மையும் நாகரிகமுமிக்க குழாம்களாகிய தெய்வம், அநேக கல்லூரிகளாகிய தெய்வங்கள் போனீஷ ியாவின் சூரியக்கடவுளான பாகாலைவிடச் சற்று சிறந்ததாக உள்ளது!? (4)GCTam 686.2

    தேவப்பிரமாணம் இனிமேல் மனிதனைக் கட்டுப்படுத்தாது என்னும் தவறை கிறிஸ்தவ உலகம் ஏற்றுக்கொண்டதைவிட, வேறு எதுவும் பரலோகத்தின் அதிகாரத்தை தைரியமாகத் தாக்குவது இல்லை. பகுத்தறிவிற்கு நேர் எதிரான வேறு எதுவும் இல்லை. கெடுதல் மிக்க பலனை ஏற்படுத்துகின்ற வேறு எதுவும் இல்லை. மிக விரைவாக ஆதிக்கமடைந்துவரும் நவீன கோட்பாடுகள் எதுவும் இல்லை. ஒவ்வொரு நாட்டிலும் சட்டம் உள்ளது. அது அதற்கு மதிப்புக் கொடுப்பதையும் கீழ்ப்படிதலையும் வரவேற்கிறது. சட்டங்கள் இல்லாமல் எந்த அரசாங்கமும் இருக்கமுடியாது. அப்படியிருக்க, பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த சிருஷ்டிகர் அவைகளில் உள்ளவர்களை ஆளுவதற்கென்று சட்டம் இல்லாதவராக இருப்பார் என்பதை எப்படிக் கருத்தில் கொள்ளமுடியும்? முக்கியமான அமைச்சர்கள், தங்களுடைய நாட்டைக் கட்டுப்படுத்தி, மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்கள் கடமைக்குட்பட்டவை அல்ல என்றும், அவை மக்களின் சுயாதீனத்தைக் கட்டுப்படுத்துகின்றன என்றும், அனைவரும் உடனே கீழ்ப்படியவேண்டிய அவசியம் இல்லை என்றும் பொது இடங்களில் போதிப்பதாக வைத்துக்கொண்டால், அப்படிப்பட்ட மனிதர்கள் எவ்வளவு நாட்களுக்கு மேடையில் சகித்துக்கொள்ளப்படுவார்கள்? ஆனால், சகல அரசாங்கங்களுக்கும் அஸ்திவாரமாக இருக்கும் தெய்வீகப் பிரமாணங்களைக் காலின்கீழ் மிதிப்பதைவிட, மாநிலங்கள், நாடுகள் ஆகியவைகளின் சட்டங்களை மதிக்காமலிருப்பது மிகவும் கடுமையான குற்றமாக உள்ளது. (5)GCTam 687.1

    பிரபஞ்சத்தின் பிரமாணங்களை இல்லாமல்போகச்செய்து, குற்றவாளி யைக் குற்றப்படுத்தவும், கீழ்ப்படிதல் உள்ளவர்களை நியாயப்படுத்துவதற்கும் ஒரு தரம் இல்லாததாக உலகத்தை விட்டுவிடுவதைவிட, நாடுகள் தங்களுடைய சட்டங்களை நீக்கிவிட்டு, மக்களை அவர்களது விருப்பப்படி நடந்துகொள்ள அனுமதிப்பது அதிக இசைவுள்ளதாக இருக்கும். தேவனுடைய பிரமாணத்தில் பிளவு உண்டாகும்போது, அதன் பலன் எவ்விதமாக இருக்கும் என்பதை நாம்அறிவோமா? அந்தப் பரிசோதனை, சோதித்துப் பார்க்கப்பட்டாகிவிட்டது. கடவுள் இல்லை என்னும் கோட்பாடு பிரான்ஸில் ஆட்சிசெய்த காலத்தில், செயல்படுத்தப்பட்ட காட்சிகள் பயங்கரமானவையாக இருந்தன. தேவன் நடைமுறைப்படுத்தியிருந்த கட்டுப்பாட்டைத் தூரமாக வீசிவிடுவது, கொடுங்கோன்மையின் மிகக் கொடூரமான ஆளுகையை ஏற்றுக்கொள்ளுவதாக இருக்கும் என்பதற்கான நடைமுறை விளக்கம் அங்கு கொடுக்கப்பட்டது. நீதியின் தரம் ஓரமாக நீக்கிவைக்கப்படும்போது, தீமையின் பிரபு அவனது வல்லமையை பூமியில் ஏற்படுத்துவதற்கு வழி திறக்கப்படுகிறது. (6)GCTam 688.1

    தெய்வீகப் பிரமாணம் எங்கெல்லாம் நிராகரிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் பாவம் பாவத்தின் தோற்றம் இல்லாததாகி, அல்லது நீதி விரும்பக்கூடியதாக இல்லாமலாகிவிடுகிறது. தேவனுடைய அரசாங்கத்திற்குக் கீழ்ப்படிய மறுப்பவர்கள் தங்களைத்தாங்களே ஆளுவதற்கு முற்றிலுமாகத் தகுதியற்றவர்காளகின்றனர். தீய பலன்களைக் கொண்டுவரும் அவர்களது போதனைகளின் மூலமாக, கீழ்ப்படியாமையின் ஆவி இயல்பாகவே கட்டுப்பாட்டில் பொறுமையில்லாத சிறுவர்கள், இளைஞர்களின் இருதயங்களில் நடப்படும்போது ஒரு சட்டம் இல்லாத காமவிகாரமிக்க சமுதாயம் அதன் பலனாக உண்டாகிறது. தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்களிடம் உள்ள எளிதில் நம்பும் தன்மையைப் பரிகாசமாகப் பேசும்போது, திரளானவர்கள் சாத்தானின் மாயங்களை ஆவலுடன் ஏற்றுக்கொள்ளுகின்றனர். கடிவாளத்தை அவர்கள் இச்சையிடம் கொடுத்து, அஞ்ஞானிகளின்மீது நியாயத்தீர்ப்பை வரப்பண்ணின பாவங்களைச் செய்கிறார்கள். (7)GCTam 688.2

    தேவனுடைய பிரமாணத்தை மலிவானதாகக் கருதும்படி மக்களுக்குப் போதிப்பவர்கள், கீழ்ப்படியாமையை அறுவடைசெய்திட, கீழ்ப்படியாமையை விதைக்கின்றனர். தெய்வீகப் பிரமாணத்தில் உண்டுபண்ணப்பட்ட கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்படட்டும். அப்போது மனிதச் சட்டங்கள் விரைவில் பொருளற்றதாகிவிடும். இச்சித்தல், பொய் சொல்லுதல் ஏமாற்றுதல் போன்ற நேர்மையற்ற செயல்களைத் தேவன் தடைசெய்வதால், தேவனுடைய பிரமாணங்களை அவர்களுடைய உலகப் பிரகாரமான செழுமைக்கு இடையூறாக இருக்கிறன்றன என்று கருதி, அவைகளைக் காலின்கீழிட்டு மிதிக்க மனிதர்கள் தயாராக உள்ளனர். ஆனால் இந்தப் பிரமாணங்களை நீக்குவதன் பலன்கள், அவர்கள் எதிர்பாராத விதத்திலுள்ளவையாக இருக்கும். கற்பனை கட்டுப்படுத்தாததாக இருந்தால், மீறுவதற்கு எவரும் ஏன் பயப்படவேண்டும்? அதற்குமேல் பொருள்கள் பாதுகாப்பாக இருக்காது. மனிதர்கள் அவர்களது அயலார்களின் உடைமைகளைப் பலாத்காரத்தின் மூலமாகவே எடுத்துக்கொள்ளுவார்கள். அப்பொழுது பலவான்கள் அனைவரும் செல்வந்தர்களாகிவிடுவார்கள். உயிரும் மதிக்கப்படமாட்டாது. குடும்பத்தைப் பாதுகாக்கும் பலத்த கோட்டையாக திருமண உறுதிமொழி இருக்காது. வல்லமை உள்ளவன் விரும்பினால், தனது அயலானின் மனைவியை பலாத்காரத்தினால் தனக்கென்று எடுத்துக்கொள்ளுவான். நான்காவது பிரமாணத்துடன் சேர்ந்து, ஐந்தாவது பிரமாணமும் ஒதுக்கிவைக்கப்படும். பிள்ளைகள் தங்களுடைய கறை மிக்க இருதயங்களின் விருப்பங்களைப் பெற்றோர்களின் உயிரை எடுத்துக்கொள்வதினால் அடைந்துகொள்ளத் தயங்கமாட்டார்கள். இந்த நாகரிக உலகம் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் ஆகியோரின் கூட்டத்தினராலாகி, சமாதானம் இளைப்பாறுதல் மகிழ்ச்சி ஆகியவை பூமியிலிருந்து விரட்டப்பட்டுவிடும். (8)GCTam 688.3

    தேவனுடைய பிரமாணங்களிலிருந்து மனிதர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது, சன்மார்க்கக் கடமைகளின் வலிமையை ஏற்கனவே பலவீனப்படுத்தி, அக்கிரமம் என்னும் பெருவெள்ளத்தின் மதகை உலகத்தின்மீது திறந்துள்ளது. சட்டமின்மை, வீணாக்குதல், பிரிவினைகள், ஊழல் ஆகியவை திகைக்கவைக்கும் அலையாக நம்மீது அடித்துக்கொண்டுள்ளது. குடும்பத்தில் சாத்தான் செயலாற்றிக்கொண்டிருக்கிறான். கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளுபவர்களின் வீட்டுப்பொருள்களிலும் அவனது கொடி அசைந்தாடுகிறது. பொறாமை, கெட்ட யூகங்கள், வெளிவேஷம், ஊதாரித்தனம், போட்டி மனப்பான்மை, சச்சரவு, பரிசுத்தமான நம்பிக்கைக்குத் துரோகம் செய்தல், இச்சைமிக்க வழக்கங்கள் ஆகியவை உள்ளன. சமுதாய வாழ்க்கையின் கூண்டாகவும், அஸ்திவாரமாகவும் இருக்கவேண்டிய மத சம்பந்தமான அனைத்து கொள்கைகளும் கோட்பாடுகளும் அனைத்து முறைமைகளும் விழுந்துபட்டு அழிவதற்குத் தயாராகி தள்ளாடிக்கொண்டிருக்கும் பெரும் பொருள்போல் காணப்படுகின்றன. படுமோசமான குற்றவாளிகள் அவர்களுடைய குற்றங்களுக்காகச் சிறைச்சாலைக்குள் தள்ளப்படும் வேளையில், பொறாமைப்படக்கூடிய விதத்தில் அதன் சிறப்பை அடைந்துவிட்டவர்களைப்போல, பாராட்டலுக்குரிய பரிசுகளையும் பதக்கங்களையும் பெற்றவர்களைப்போல நடத்தப்படுகின்றனர். அவர்களது சுபாவத்திற்கும் குற்றங்களுக்கும் பெரும் விளம்பரங்கள் கொடுக்கப்படுகின்றன. அவர்கள் செய்த ஏமாற்றுதல்கள், கொலைகள், கொள்ளைகள் ஆகிய கபடத்தனமான செயல்கள் மற்றவர்களும் செய்யும்படி தூண்டக்கூடிய விதத்தில் அச்சகங்கள் (செய்திகளை) வெளியிடுகின்றன. சாத்தான் தனது நரகத்திட்டங்களின் வெற்றியில் வெற்றிச்சிரிப்புச் சிரிக்கிறான். காமவெறி, வேண்டுமென்றே உயிரை அழித்தல், ஒவ்வொரு வகையிலும் உள்ள இச்சசையடக்கமின்மை, அக்கிரமம் ஆகியவை தேவனுக்குப் பயப்படும் அனைவரையும் தீமையின் அலையை நிறுத்துவதற்கு என்ன செய்யப்படவேண்டும் என்று விசாரிப்பதற்கு எழுப்ப வேண்டும். (9)GCTam 689.1

    நீதியை நடப்பிக்கவேண்டிய நீதிமன்றங்கள் ஊழல் மிக்கவையாக உள்ளன. இலாபத்தின்மீதுள்ள வாஞ்சை புலன்களின் இன்பங்களின் மீதுள்ள நாட்டம் ஆகியவைகளால் அதிபதிகள் செயல்படும்படி தூண்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். புலனடக்கமின்மை அநேகருடைய அறிவுத்திறனை இருளடையச் செய்துகொண்டிருக்கும் காரணத்தால், சாத்தான் அவர்கள்மீது ஏறத்தாழ முழுக் கட்டுப்பாட்டையும் உடையவனாக இருக்கிறான். நியாயஆலோசகர்கள் குணம்கெட்டு, வஞ்சகத்திற்கு உள்ளாகி, வஞ்சிக்கப்பட்டுள்ளனர். சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டியவர்கள் குடிகாரத்தன்மை, களியாட்டங்கள், காமவெறிகள், பொறாமை, சகலவிதமான நாணயமின்மை ஆகியவைகளின் பிரதிநிதிகளாகக் காணப்படுகின்றனர். “நியாயம் பின்னிட்டு அகன்றது; நீதி தூரமாய் நின்றது; சத்தியம் வீதியிலே இடறி, யதார்த்தம் வந்து சேரமாட்டாமற்போகிறது”ஏசாயா 59:14. (10)GCTam 690.1

    ரோமசபையின் மேலாதிக்கத்தில், அக்கிரமமும் ஆவிக்குரிய இருளும் நிலவியிருந்து, வேதவாக்கியங்களை அமர்த்தினதால் உண்டான தவிர்க்க முடியாத பலனாகும். ஆனால் எங்கும் பரவி உள்ள கடவுள் இல்லை என்னும் வாதம், தேவப்பிரமாணங்களை நிராகரித்தல், அதன் பலனால் உண்டான கறைகள், மதச் சுதந்திரம் என்னும் காலக்கட்டத்தின்கீழ் சுவிசேஷ த்தின் நெருப்பு முழுமையாக எரிந்துகொண்டிருக்கும்போது, மதச் சுதந்திரம் உண்டாவதற்கான காரணத்தை எங்கே காணமுடியும்? வேதவாக்கியங்களை பிடித்து நிறுத்திக்கொள்ளுவதினால் இதற்குமேல் உலகத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் வைக்கமுடியாது என்பதை சாத்தான் அறிந்து, அதே நோக்கத்தை நிறைவேற்ற, வேறு உபாயங்களைக் கையாளுகிறான். வேதாகமத்தின்மீதுள்ள விசுவாசத்தை அழிப்பது என்பது, வேதாகமத்தையே அழிக்கும் நோக்கத்தைச் செயல்படுத்துவதாகும். தேவனுடைய கற்பனை கட்டுப்படுத்துவதில்லை என்னும் நம்பிக்கையை அறிமுகம் செய்வதினால், மனிதர்கள் தேவனுடைய கற்பனைகளைப்பற்றி அறியாதவர்களாக இருந்து அதை மீறும்படி அவன் திறமையாக நடத்துகிறான். கடந்தகாலத்தில் அவன் சபையின் மூலமாகச் செயலாற்றியதைப் போலவே, இப்பொழுதும் தனது திட்டங்களை சபையின் மூலமாகவே செய்துகொண்டு செல்லுகிறான். அந்த நாளில் இருந்த மத அமைப்புகள், வேதவாக்கியங்களால் தெளிவாகக் காட்சிக்குக் கொண்டுவந்த அறியப்படாமலிருந்த சத்தியங்களைக் கவனிக்க மறுத்துவிட்டன. அதை அழிக்கும் செயலில் சந்தேகவாதங்களைப் பரப்பும்படி அவர்கள் விதைத்திருந்த விளக்கங்களையும் நிலைமைகளையும் பற்றிக்கொண்டனர். மனிதனின் இயல்பான சாவாமை, மரணத்திற்குப்பின் மனிதனுக்கு உணர்வு எண்டு என்னும் நிலை ஆகிய போப்புமார்க்கத்தின் தவறைப் பிடித்துத்தொங்கிக்கொண்டு, ஆவிமார்க்கத்தின் வஞ்சகத்திற்கு எதிரான ஒரே பாதுகாப்பை அவர்கள் நிராகரித்தனர். நித்திய ஆக்கினை என்னும் கோட்பாடு அநேகரை வேதாகமத்தின்மீது நம்பிக்கை அற்றவர்களாகும்படி நடத்தியது. நான்காவது பிரமாணம் மக்கள்மீது வற்புறுத்தப்பட்டபோது, ஏழாம்நாள் (ஓய்வுநாள்) சட்டப்படி கீழ்ப்படியவேண்டியதாக உள்ளது என்று காணப்பட்டபோது, அவர்கள் செய்ய விரும்பாத ஒரு கடமையிலிருந்து தங்களை விடுவித்துக்கெள்ளும் ஒரே வழியாக அதைக் கண்டபோது, புகழ்மிக்க ஆசிரியர்கள், தேவனுடைய கற்பனை இனி மனிதனைக் கட்டுப்படுத்தாது என அறிவிக்கின்றனர். இப்படியாக இவர்கள் கற்பனை, ஓய்வுநாள் ஆகிய இரண்டையும் மொத்தமாக தூரமாக விலக்குகின்றனர். ஓய்வுநாள் ஆசரிப்பின் ஊழியம் விரிவடையும்போது, நான்காவது பிரமாணத்தின் உரிமையைத் தவிர்ப்பதற்காக, தெய்வீகப் பிரமாணத்தை நிராகரிப்பது, மிக விரைவில் உலகளாவியதாக இருக்கும். கடவுள் இல்லை என்னும் வாதம், ஆவிமார்க்கம், தேவனுடைய பரிசுத்த பிரமாணத்தைக் குற்றப்படுத்துதல் ஆகியவைகளுக்கான கதவை மத ஆசிரியர்களின் போதனைகள் திறந்துள்ளது. கிறிஸ்தவ உலகத்தில் காணப்படுகின்ற அக்கிரமங்களுக்கான பயங்கரமான பொறுப்பு, இந்தத் தலைவர்களின்மீதே தங்கியுள்ளது. (11)GCTam 690.2

    அப்படியிருந்தும் விரைவாகப் பரவிவரும் கறைகளுக்கு, கிறிஸ்தவ ஓய்வுநாள் என்று அழைக்கப்படுவதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குவதே பெரும்பாலும் காரணமாக உள்ளது என்றும், ஞாயிற்றுக்கிழமை ஆசரிப்பை வற்புறுத்துவது, சமுதாயத்தின் சன்மார்க்கங்களை முன்னேற்றமடையச் செய்வதற்காகவே என்றும் கூறப்படும். பொய்யான ஓய்வுநாளைப்பற்றிய கோட்பாடு எங்கு மிக அதிமாகப் பிரசங்கிக்கப்படுகிறதோ, அந்த அமெரிக்காவில் இந்த உரிமைகள் மிக முக்கியமாக வற்புறுத்தப்படுகிறது. இங்கு மிகச் சிறந்ததும் மிக முக்கியமானதுமான சன்மார்க்கச் சீர்திருத்தமாகிய இச்சையடக்கத்தின் ஊழியம் அடிக்கடி ஞாயிறு ஆசரிப்பு இயக்கத்துடன் இணைந்து செய்யப்படுகிறது. பின்னதற்காகப் பரிந்துபேசுபவர்கள் எனத் தங்களை எடுத்துக்காட்டுபவர்கள் (ஞாயிறு ஆசரிப்பை ஆதரிப்பவர்கள்) சமுதாயத்தின் மேலான நோக்கங்களை முன்னேற்றமடையச் செய்வதற்காக உழைப்பதாகவும், அவர்களுடன் ஒற்றுமைப்பட மறுப்பவர்கள் இச்சையடக்க ஊழியங்களுக்கும் சீர்திருத்தத்திற்கும் எதிரிகள் என்றும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டப்படுகின்றனர். தவறான உபதேசத்தை அமைப்பதற்காக செயல்படும் ஒரு இயக்கத்துடன், தன்னில்தானே நல்லதாக உள்ள ஒரு ஊழியம் இணைக்கப்பட்டிருக்கிறது என்னும் காரணம், தவறு செய்வதற்கு அனுகூலமான ஒரு வாதமாக இருப்பதில்லை. நல்ல உணவுடன் நாம் நஞ்சைக் கலந்து மறைக்கலாம். ஆனால் அது நஞ்சின் தன்மையை மாற்றுவதில்லை. அதற்கு எதிராக அது தெரியாத விதத்தில் இருப்பதினால், அறியாதவர்களால் உண்ணக்கூடிய நிலையில் அதிக ஆபத்துள்ளதாக இருக்கிறது. சரியானதுபோலத் தோன்றச் செய்வதற்காகத் தவறுடன் அதற்குள் போதுமான அளவில் சத்தியத்தைக் கலப்பது, சாத்தானின் உபாயங்களில் ஒன்றாக உள்ளது. ஞாயிறு ஆசரிப்புத் தலைவர்கள் மக்களுக்குத் தேவையான சீர்திருத்தங்களை, வேதாகமத்திற்கு இசைவாக உள்ள கொள்கைகளோடு பரிந்துபேசலாம் என்றபோதிலும், இந்த அவசியங்களுக்கிடையில், தேவனுடைய கற்பனைக்கு எதிரான ஒரு அவசியப்படுத்துதல் இருக்கும்போது அவரது வேலைக்காரர்களால் அவர்களுடன் (ஞாயிறு ஆசரிப்புக்காரர்களுடன்) ஒற்றுமைப்பட முடியாது. மனிதச்சட்டங்களுக்காக தேவப்பிரமாணத்தை விலக்கிவைக்கும் எதுவும் அவர்களை நியாயப்படுத்தாது. (12)GCTam 691.1

    ஆத்துமாவின் அழியாமை, ஞாயிற்றுக்கிழமையின் பரிசுத்தம் என்னும் இரண்டு பெரிய தவறுகளின் மூலமாக, சாத்தான் மக்களை அவனது வஞ்சகத்தின்கீழ் கொண்டுவருவான். முதலாவதாகக் கூறப்பட்டுள்ளது, ஆவிமார்க்கத்திற்கு அஸ்திவாரமிடுவதற்காக. இரண்டாவது கூறப்பட்டது, ரோமசபையுடனுள்ள பிணைப்பிற்கான அனுதாபத்தை உண்டாக்குவதற்காக. ஆவிமார்க்கத்தின் கரத்தைப் பற்றிக்கொள்ளுவதற்காக, இடைவெளிக்கு எதிராகத் தங்கள் கரங்களை நீட்டுவதில், அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள புரொட்டஸ்டாண்டுகள் மிகவும் முன்னானவர்களாக இருப்பார்கள். ரோம வல்லமையுடன் கரம்பற்றிக்கொள்ள அவர்கள் அந்த இடைவெளியைக் கடந்து செல்லுவார்கள். இந்த மூன்றாவது வழியான இணைந்த செல்வாக்கின்கீழ், இந்த நாடு மனச்சாட்சியின் உரிமைகளைக் காலின்கீழிட்டு மிதிப்பதற்காக ரோமசபையின் அடிச்சவடுகளைப் பின்பற்றும். (13)GCTam 692.1

    தற்காலத்தில் பெயரளவிலான கிறிஸ்துவத்தை ஆவிமார்க்கம் மிகவும் நெருக்கமாக்குவதால், வஞ்சிப்பதற்கும் கண்ணியில் விழச்செய்வதற்கும் அதனிடம் அதிகமான வல்லமை இருக்கிறது. காரியங்களில் நவீன கால மாறுதல் நிகழ்ந்திருப்பதை அனுசரித்து சாத்தானும் தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறான். அவன் ஒளியின் தூதனின் வேஷத்தில் தோன்றுவான். ஆவிமார்க்கத்தின் பிரதிநிதிகளால் அற்புதங்கள் செய்யப்படும். நோயாளிகள் சுகமடைவார்கள். மறுக்கமுடியாத அநேக ஆச்சரியமிக்க சம்பவங்கள் நிகழ்த்தப்படும். இந்த ஆவிகள் வேதாகமத்திலுள்ள விசுவாசத்தை அறிக்கைசெய்து, சபை அமைப்புகளின்மீது மரியாதையை வெளிக்காட்டும்போது, அவைகளின் வேலை தெய்வீக வல்லமையின் வெளிக்காட்டல் என்றும் ஏற்றுக்கொள்ளப்படும். (14)GCTam 693.1

    இப்படிப்பட்ட சூழ்நிலையில், தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளுபவர்களுக்கும், தேவனை மதிக்காதவர்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைப் பிரித்தறிவது கடினமாக உள்ளது. உலகம் எதை நேசிக்கிறதோ அதை சபை அங்கத்தினர்கள் நேசிக்கின்றனர். அவர்கள் அதனுடன் சேர்ந்துகொள்ள ஆயத்தமாக உள்ளனர். சாத்தான் அவர்களை ஒரே சரீரமாக இணைத்து, அதனால் அவனது நோக்கத்தைப் பலப்படுத்தி, அனைவரையும் ஆவிமார்க்கத்தில் சேர்த்துக்கொள்ளத் தீர்மானிக்கிறான். உண்மையான சபையின் ஒரு நிச்சயமான அடையாளமாக அற்புதங்கள் உள்ளன என்று பெருமை பாராட்டும் போப்புமார்க்கவாதிகள், இந்த ஆச்சரியமானவைகளைச் செய்யும் வல்லமையினால் வஞ்சிக்கப்படுவார்கள். சத்தியம் என்னும் கேடயத்தை தூரமாக விலக்கிவிட்ட, புரொட்டஸ்டாண்டுகள் உலகப்பிரகாரமானவர்கள் ஆகியோர் தெய்வ பக்தியின் வேஷத்தை அதன் வல்லமை இல்லாமல் ஏற்றுக்கொண்டு, இந்த ஐக்கியத்தில் உலகை மதம்மாறச் செய்யும் ஒரு பெரும் இயக்கத்தையும், வெகுகாலமாக எதிர்நோக்கியிருந்த ஆயிரவருட அரசாட்சி உதயமாவதையும்...! காண்பார்கள்.(15)GCTam 693.2

    மக்களின் நோய்கைளக் குணப்படுத்தி, ஒரு மிக உயர்வான மத விசுவாசமான அமைப்பைக் கட்டப்போவதாகக் கூறிக்கொண்டு, மனித இனத்திற்கு நன்மை செய்பவனைப்போல ஆவிமார்க்கத்தின் மூலமாக சாத்தான் தோன்றுகிறான். ஆனால் அதே நேரத்தில் அவன் ஒரு அழிப்பவனாகச் செயலாற்றுகிறான். அவனது சோதனைகள் திரளானவர்களைக் கேட்டுக்குள் நடத்திக்கொண்டிருக்கிறது. இச்சையடக்கமின்மை, பகுத்தறிவை சிங்காசனத்திலிருந்து இறக்கி விடுவது, புலன்களுக்கு அடிமைகளாகிவிட்ட பழக்கங்கள், சச்சரவு, இரத்தம் சிந்துதல் ஆகியவை பின்தொடருகின்றன. யுத்தத்தில் சாத்தான் சந்தோஷப்படுகிறான். ஏனெனில் அது ஆத்துமாவின் மிக மோசமான ஆசைகளைத் தூண்டிவிடுகிறது. அதன்பின், தீய செயல்களிலும் இரத்தத்திலும் மூழ்கிப்போய் அதற்குப் பலியானவர்களை நித்திய நாசத்திற்குள் அடித்துச் செல்லுகிறது. ஒன்றுக்கொன்று எதிராகப் போரிடும்படி நாடுகளை எழுப்பிவிடுவது அவனது குறிக்கோளாக உள்ளது. ஏனெனில் இப்படியாக தேவனுடைய நாளில் நிற்பதற்கென்று ஆயத்தம் செய்யும் பணியிலிருந்து, மக்களின் மனதை அவனால் வேறுபக்கமாகத் திருப்ப முடியும். (16)GCTam 693.3

    ஆயத்தமில்லாத ஆத்துமாக்களை அறுவடைசெய்து, அவனது களஞ்சியத்தில் சேர்த்துக்கொள்ள இயற்கையின் மூலமாகவும் சாத்தான் செயலாற்றுகிறான். இயற்கையின் ஆய்வுக்கூடங்களின் இரகசியங்களை அவன் ஆராய்ந்து. தேவன் அனுமதிக்கின்றவரையிலும் இயற்கையின் மூலக்கூறுகளைக் கட்டுப்படுத்த அவன் தன்னுடைய வல்லமையைப் பயன்படுத்துகிறான். யோபுவைத் துன்புறுத்தும்படி அவன் அனுமதிக்கப்பட்டபோது, எவ்வளவு விரைவாக மிருகங்கள், வேலைக்காரர்கள், வீடுகள், பிள்ளைகள் ஆகியோர் அடித்துச்செல்லப்பட்டு, ஒன்றன்பின் ஒன்றாகத் துன்பங்கள் விநாடி நேரத்தில் நிகழ்ந்தன. உயிரினங்களுக்குக் கேடயமாக இருந்து, அவைகளைச் சுற்றிப் பாதுகாப்பு அமைத்து, அழிப்பவனின் வல்லமையிலிருந்து அவைகளைக் காப்பவர்—தேவன்தான். ஆனால் கிறிஸ்தவ உலகம் யோகோவாவின் பிரமாணத்தின்மீது தனது அவமதிப்பைக் காட்டியிருந்தது. எனவே கர்த்தர் என்ன செய்யப்போவதாகக் கூறுகிறாரோ அதை, தமது ஆசீர்வாதங்களை உலகத்திடமிருந்து புறம்பாக்கி, அவரது பிரமாணத்திற்கு எதிராகக் கலகம் செய்து, அவைகளையே போதித்து, பிறரையும் அவ்வாறாகவே செய்யும்படி வற்புறுத்துபவர்களிடமிருந்த தமது பாதுகாக்கும் கரிசனையையும் நீக்கிவிடுவார். தேவன் விசேஷ பித்த பிரகாரமாகப் பாதுகாக்காத அனைவர்மீதும், சாத்தான் தனது கட்டுப்பாட்டை உடையவனாக இருக்கிறான். அவனது திட்டங்களை முன்கொண்டுசெல்லுவதற்காக அவன் சிலருக்கு ஆதரவுகாட்டி, சிலரைச் செழுமையடையச் செய்து, மற்றவர்களின்மீது துன்பங்களைக் கொண்டு வந்து, கடவுள்தான் தங்களைத் துன்புறுத்துகிறார் என்று நினைக்கும்படி, அவன் மனிதர்களை நடத்துவான். (17)GCTam 694.1

    மனிதர்களின் முன்பாக மனிதர்களின் நோய்களனைத்தையும் குணப்படுத்தும் மாபெரும் வைத்தியனாக அவன் காட்சிதரும் அதே நேரத்தில், ஜனநெருக்கமான நகரங்கள் இடிந்து பாழாகும்வரை அவன் நோய்களையும் பாழ்க்கடிப்புகளையும் கொண்டுவருவான். இப்பொழுதுங்கூட வேலைசெய்துகொண்டு வருகிறான். நிலத்திலும் நீரிலும் விபத்துக்கள், பேரழிவுகள், பெரும் தீ விபத்துக்கள், பயங்கரமான சூறாவளிகள், பயங்கரமான பனிப்புயல்கள், புயல்காற்றுகள், பெரு வெள்ளங்கள், பேரலைகள், பூகம்பங்கள் எத்திசையிலும் எவ்வூரிலும் நடைபெற, சாத்தான் தனது வல்லமையால் செயலாற்றிக் கொண்டிருக்கிறான். முதிர்ந்து அறுவடையாக உள்ள பயிர்களை பெரு வெள்ளத்தால் அவன் நாசம் செய்துவிடுவதினால், பஞ்சங்களும் துன்பங்களும் உண்டாகின்றன. மரணத்தை உண்டுபண்ணக்கூடிய விஷங்களினால் ஆகாயத்தை நிறைக்கிறான். அதனால் ஆயிரக்கணக்கானவர்கள் கொள்ளைநோய்களினால் அழிகின்றனர். இந்த அழிவிற்குரிய நிகழ்ச்சிகள் அதிகமதிகமாகவும் அடிக்கடியும் நிகழ உள்ளன. அழிவு மனிதர்களின்மீதும் விலங்கினங்களின்மீதும் வரும். “தேசம் புலம்பி வாடும்; பூமி சத்துவமற்று உலர்ந்துபோகும்; தேசத்து ஜனத்திலே உயர்ந்தவர்கள் தவிப்பார்கள். தேசம் தன் குடிகளின் மூலமாய்த் தீட்டுப்பட்டது; அவர்கள் நியாயப்பிரமாணங்களை மீறி, கட்டளையை மாறுபாடாக்கி, நித்திய உடன்படிக்கையை முறித்தார்கள்”-ஏசாயா 24:4,5. (18)GCTam 694.2

    அதன்பின், தேவனை சேவிப்பவர்கள்தான் (வெளி 14:120-ன்படி நடப்பவர்கள்) இந்த தீமைகளுக்கெல்லாம் காரணமாக இருக்கின்றனர் என்று நினைக்கும்படி, அந்த பெரும் வஞ்சகன் மனிதர்களை எண்ணச்செய்வான். தேவனுடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் அவைகளை மீறுபவர்களுக்கெதிரான, தொடர்ச்சியான கடிந்து கொள்ளுதலுக்கு உள்ளாவார்கள். பரத்தின் கோபத்தைத் தூண்டிவிட்ட வகுப்பினர், தங்களுக்கு உண்டாயிருக்கும் துன்பங்களுக்கெல்லாம் காரணம் தேவனுடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிபவர்கள்தான் என்று அவர்கள்மீது குற்றஞ்சாட்டுவார்கள். ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாளை மீறுவதினால் மனிதர்கள் தேவனுக்கு எதிராகக் குற்றம் புரிகின்றனர் என்று அறிவிக்கப்படும். இந்தப் பாவம்தான் பேரழிவுகளைக் கொண்டுவந்துள்ளன என்றும், ஞாயிற்றுக்கிழமை ஆசரிப்பைக் கட்டாயமாக்காதவரை, அழிவுகள் நிற்காது என்றும் அறிவிக்கப்படும். நான்காம் பிரமாணத்தின் உரிமையை முன்வைப்பவர்கள் இவ்விதமாக ஞாயிற்றுக்கிழமையின் மீதுள்ள பக்தியை அழிக்கின்றனர் என்றும், தெய்வீக ஆதரவையும் உலகப்பிரகாரமான செழுமையையும், திரும்பப் பெறுவதையும் அவர்கள் தடுத்துக்கொண்டிருக்கின்றனர் என்றும் கூறப்படும். இப்படியாக தேவனுடைய ஊழியக்காரர்களின்மீது முன்பு கூறப்பட்ட குற்றச்சாட்டு அதற்குச் சமமாக நன்கு அமைக்கப்பட்டுவிட்ட ஸ்தாபனத்தின் சார்பாகக் கூறப்படும். “ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான். அதற்கு அவன்: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள்” (1 இராஜா. 18:17-18) என்றான். தவறான குற்றச்சாட்டுகளினால் மக்களின் கோபம் தூண்டப்பட்டதுபோல, மருளவிழுந்த இஸ்ரவேலர்கள் எலியாவிற்கு விரோதமாகச் செயல்பட்டது போன்ற ஒரு நடவடிக்கை தேவனுடைய தூதுவர்களுக்கு எதிராகச் செயல்படுத்தப்படும்.(19)GCTam 695.1

    ஆவிமார்க்கத்தின் மூலமாக வெளிக்காட்டப்படும் அற்புதங்களைச் செய்யும் வல்லமை தேவனைக் காட்டிலும் மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதை தெரிந்துகொள்ளுபவர்களின் ஆசரிப்பை நிராகரிப்பவர்களின் தவறை அவர்களுக்கு எடுத்துக்காட்டி, மன உணர்த்துதலை உண்டுபண்ணவும், நாட்டின் சட்டத்தைத் தேவனுடைய சட்டமாக மதித்து, அதற்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்தவும் அவைகளை அனுப்பி வைத்துள்ளதாக ஆவிகளிடமிருந்துள்ள தொடர்புகள் அறிவிக்கும். உலகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் பெரும் பெரும் தீமைகளுக்காக மத ஆசிரியர்களின் சாட்சிக்கு வழிமொழிந்து சன்மார்க்க நிலையின் சீர்கேட்டிற்கு ஞாயிற்றுக்கிழமையைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினதுதான் காரணம் என்று அவை புலம்பும். அவைகளின் சாட்சியை ஏற்றுக்கெள்ள மறுப்பவர்களுக்கெதிரான கோபம் மிகப் பெரியதாக இருக்கும். (20)GCTam 696.1

    தேவனுடைய மக்களுக்கு எதிராக சாத்தானின் இறுதிப்போரில் இருக்கக்கூடிய கொள்கை அவன் பரலோகத்தில் ஆரம்பித்த மாபெரும் யுத்தத்தில் பயன்படுத்திய அதே கொள்கையாகத்தான் இருக்கும். தெய்வீக அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காகத் தனது ஒவ்வொரு முயற்சியையும் இரகசியமாகச் செய்துகொண்டிருந்த அதே சமயத்தில், தெய்வீக அரசாங்கத்தின் ஸ்திரத் தன்மையை மேம்பாடடையச்செய்ய வகை தேடிக்கொண்டிருப்பதாக அவன் கூறிக்கொண்டான். அவன் எவைகளை நிறைவேற்ற முயன்றுகொண்டிருந்தானோ, அதே வேலையை தேவனுக்கு உண்மையான விசுவாசமுடைய தேவதூதர்கள் செய்துகொண்டிருப்பதாக அவர்கள்மீது குற்றம் சுமத்தினான். ரோமசபையின் வரலாற்றில் இதேவிதமான வஞ்சகக் கொள்கை குறிக்கப்பட்டிருந்தது. அது தன்னை தேவனுக்கு மேலாக உயர்த்தி, அவரது பிரமாணத்தை மாற்ற வகைதேடிக்கொண்டிருந்த அதே நேரத்தில், பரலோகத்தின் பதிலாளியாகச் செயல்படுவதாகத் தன்னைப்பற்றிக் கூறிக்கொண்டது. ரோம சபையின் ஆளுகையின்கீழ், சுவிசேஷத்திற்கு விசுவாசம் உள்ளவர்களாக மரண தண்டனையை அனுபவித்தவர்கள், தீமை செய்தவர்கள் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். அவர்கள் சாத்தானின் அணியுடன் கூட்டுச்சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டனர். நிந்தையால் அவர்களை மூடி மக்களின் கண்களுக்கு முன்னும் தங்களுக்குங்கூட படுமோசமான குற்றவாளிகளாகத் தோன்றச்செய்வதற்கு முடிந்த அளவிற்கு சகலவிதமான உபாயங்களும் கையாளப்பட்டன. இப்போதும் அதைப்போலவே இருக்கும் தேவனுடைய பிரமாணங்களை மேன்மைப்படுத்துபவர்களை அழிப்பதற்குச் சாத்தான் வகைதேடும் அதே நேரத்தில் அவர்களைப் பிரமாணத்தை மீறுபவர்கள் என்றும், தேவனை அவமதிக்கும் மனிதர்கள் என்றும், உலகத்தின்மீது நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருபவர்கள் என்றும் குற்றம் சாட்டப்படக்கூடியவர்களாக்குவான். (21)GCTam 696.2

    மனதையோ அல்லது மனச்சாட்சியையோ தேவன் ஒருபோதும் கட்டாயப்படுத்துவதில்லை. ஆனால் கட்டாயப்படுத்துதல், கொடுமை செய்தல் ஆகியவைகளைத் தவிர, வேறு உபாயங்களால் ஏமாற்றமுடியாதவர்களைக் கட்டுப்படுத்துவதில் சாத்தான் தொடர்ச்சியாக ஈடுபட்டிருக்கிறான். பயப்படுத்துவதினால் அல்லது பலாத்காரத்தினால் மனச்சாட்சியை ஆளுகை செய்ய தன்னை வணங்குவதை அடைந்துகொள்ள அவன் முயற்சிக்கிறான். இதை நிறைவேற்றுவதற்காக அவன் மதச்சார்புள்ளதும் மதச்சார்பில்லாததுமான அதிகாரிகளின் மூலமாக, தேவனுடைய பிரமாணங்களை எதிர்க்கும் நோக்கமுள்ள மனிதச் சட்டங்களை வற்புறுத்த அவர்களை ஏவுகிறான். (22)GCTam 697.1

    தேவதாகம ஓய்வுநாளை மேன்மைப்படுத்துபவர்கள் சட்ட ஒழுங்கின் எதிரிகள் என்றும், அராஜகமும் ஊழல்களும் உண்டாகச்செய்து பூமியின்மீது தேவனின் நியாயத்தீர்ப்புகளை வரவழைத்து சமுதாயத்தின் சன்மார்க்கக் கட்டுப்பாடுகளைத் தகர்ப்பவர்கள் என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்படுவார்கள். அவர்களது மனச்சாட்சியின்படி பாவம் செய்ய மறுக்கும் தன்மைகள், பிடிவாதம், முரட்டுத்தனம், அதிகாரத்தை அவமதித்தல் என்பதாக அறிவிக்கப்படும். அரசாங்கத்தின்மீது பற்று இல்லாதவர்கள் என்று அவர்கள் குற்றம்சாட்டப்படுவார்கள். தெய்வீகப் பிரமாணம் வற்புறுத்தும் கடமைகளை மறுக்கும் ஊழியக்காரர்கள், அரசாங்கம் தேவனால் ஏற்படுத்தப்பட்டிருப்பதினால் அரசாங்கச் சட்டத்திற்குக் கீழ்ப்படிவது தேவனுக்குக் கீழ்ப்படிவதாகும் என்று பிரசங்கமேடைகளில் அறிவிப்பார்கள். சட்ட மற்றும் நீதிமன்றங்களிலும் தேவனுடைய பரிசுத்தமான கற்பனைகளைக் கைக்கொள்ளுபவர்கள் தவறானவர்களாக எடுத்துக்காட்டப்பட்டுக் குற்றஞ்சாட்டப்படுவார்கள். அவர்களது வார்த்தைகளுக்கு ஒரு தவறான வர்ணம் பூசப்பட்டு அவர்களது இலட்சியங்களின்மீது படுமோசமான கற்பனையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும். (23)GCTam 697.2

    தெய்வீகப் பிரமாணத்தின் பாதுகாப்பாக உள்ள தெளிவான வேதவாக்கிய வாதங்களை புரொட்டஸ்டாண்டு சபைகள் நிராகரிக்கும் போது, வேதாகமத்தின் மூலமாக எவர்களுடைய விசுவாசத்தைக் கவிழ்க்கமுடியாதோ, அவர்களை மௌனப்படுத்த வாஞ்சிப்பார்கள். தங்களுடைய சொந்தக் கண்களை உண்மைக்கு எதிராக மூடிக்கொண்டாலும், கிறிஸ்தவ உலகின் இதர பகுதிகள் செய்துகொண்டிருக்கிறதை மனப்பூர்வமாகச் செய்யவும் போப்புமார்க்க ஓய்வுநாளின் உரிமையை வரவேற்கவும் மறுப்பவர்களை உபத்திரவப்படுத்த நடத்தும் ஒரு பாதையை அவர்கள் இப்பொழுது பற்றிக்கொண்டிருக்கின்றனர். (24)GCTam 698.1

    எல்லா வகுப்பினரும் ஞாயிறு ஆசரிப்பை மேன்மைப்படுத்திட இலஞ்சங்கொடுக்கவும் இணங்கச்செய்யவும் அல்லது வற்புறுத்தவும் சபையின் மேன்மக்களும் அரசும் ஒன்றுசேரும். அடக்குமுறைச் சட்டங்களை அமுலாக்குவதின் மூலமாக, தெய்வீக வல்லமையின்மை என்னும் இடம் நிரப்பப்படும். நீதியின் மேலுள்ள அன்பையும், சத்தியத்தின்மீதுள்ள மதிப்பையும், அரசியல் ஊழல்கள் அழித்துக்கொண்டிருக்கின்றன. சுதந்திர அமெரிக்காவிலுங்கூட அதிபதிகளும் சட்டசபை அங்கத்தினர்களும் பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதற்காக, சட்டத்தின்மூலமாக, ஞாயிறு ஆசரிப்பு வற்புறுத்தப்படவேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்குவார்கள். பெரும் தியாகத்தை விலையாகக் கொடுத்துப்பெற்ற மனச்சாட்சியின் சுதந்திரம் இனிமேல் மதிக்கப்படாது. விரைவாக வந்துகொண்டிருக்கும் மோதலில், “அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று” (வெளி. 12:17) என்கிற தீர்க்கதரிசியின் வார்த்தைகள் உதாரணமாக நடத்திக்காட்டப்பட இருப்பதை நாம் காணலாம். (25)GCTam 698.2