Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாபெரும் ஆன்மீகப் போராட்டம்!

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    30—மனிதனுக்கும் சாத்தானுக்கும் இடையே உள்ள பகை!

    (மூலநூல் : The Great Controversy, பக்கம்: 505—510)

    “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்”-ஆதி. 3:15. மனிதனின் விழுகைக்குப்பின் சாத்தானுக்கு எதிராகக் கூறப்பட்ட தெய்வீகத் தண்டனை ஒரு தீர்க்கதரிசனமாகவும், காலத்தின் முடிவுவரை யுகங்கள் அனைத்தையும் தழுவி, பூமியின்மீது வாழும் மனித இனம் முழுவதையும் ஈடுபடுத்தும் பெரும் போராட்டத்தை முன்குறிக்கும் நிழலாட்டமாகவும் இருந்தது. (1)GCTam 591.1

    “பகை உண்டாக்குவேன்” என்று தேவன் அறிவிக்கிறார். இந்தப் பகை இயற்கையாக வரவேற்கப்படக்கூடியதல்ல. மனிதன் தெய்வீகப் பிரமாணத்தை மீறினபோது, தீமை அவனது இயல்பாகியது. அவன் சாத்தானிடமிருந்து வேறுபட்டவனாக இராமல், அவனுக்கு இசைவானவனானான். பாவமுள்ள மனிதனுக்கும் அதன் உற்பத்தியாளனுக்கும் இடையில், இயற்கையாகவே பகை இருப்பதில்லை. மருள விழுகையின் மூலமாகவே இருவரும் கெட்டவர்களானார்கள். மருளவிழுந்தவன், அவனுடைய உதாரணத்தைப் பின்பற்றும்படி மற்றவர்களை தூண்டுவதன்மூலம், அவனுக்கு அனுதாபமும் ஆதரவும் கிடைக்காதவரை ஒருபோதும் ஓய்ந்திருப்பதில்லை. இந்தக் காரணத்திற்காகவே, விழுந்துபோன தேவதூதர்களும், துன்மார்க்கமான மனிதர்களும் ஆபத்தைப் பொருட்படுத்தாத உறவில் ஒன்று சேருகின்றனர். தேவன் சிறப்பான விதத்தில் குறுக்கிடாமல் இருந்திருந்தாரானால், சாத்தானும் மனிதர்களும்பரலோகத்திற்கெதிரான ஒரு கூட்டணியை ஏற்படுத்தியிருப்பார்கள். சாத்தானுக்கு எதிரான பகையை போற்றுவதற்குப் பதிலாக, மனித குடும்பம் முழுவதும் தேவனை எதிர்ப்பதில் ஒன்றுசேர்ந்திருக்கும். (2)GCTam 591.2

    கலகம் செய்யும்படி தேவதூதர்களைத் தூண்டியதைப் போலவே, பாவம்செய்யும்படி சாத்தான் மனிதனைத் தூண்டினான். அதன் மூலமாக பரலோகத்திற்கெதிரான அவனது போரில், ஒத்துழைப்பு பெற எண்ணினான். அவனுக்கும் விழுந்துபோன தூதர்களுக்குமிடையில், கிறிஸ்துவின்மீதான வெறுப்பைப்பற்றி சண்டை இருக்கவில்லை. மற்ற அனைத்துக் காரியங் களிலும் வேற்றுமையிருந்தபோதும், பிரபஞ்சத்தின் அதிபதியின் அதிகாரத்தை எதிர்ப்பதில் அவர்கள் உறுதியுடன் ஒற்றுமைப்பட்டிருந்தனர். ஸ்திரீக்கும் அவனுக்கும், அவன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையில் பகை இருக்கவேண்டும் என்ற அறிவிப்பை சாத்தான் கேட்டபோது, மனித இயல்பைக் கீழானதாக்க எடுக்கும் அவனது முயற்சியில் குறுக்கீடு உண்டாகும் என்பதையும், ஏதோ ஒரு வகையில் அவனது வல்லமையைத் தடுக்கும்படி மனிதன் தகுதிப்படுத்தப்படவிருக்கிறான் என்பதையும் அறிந்தான். (3)GCTam 592.1

    மனித இனம் கிறிஸ்துவின் மூலமாக, தேவனுடைய அன்பு, இரக்கம் ஆகியவைகளின் இலக்காக இருப்பதினால், மனித இனத்திற்கு எதிரான சாத்தானின் பகை தூண்டப்பட்டிருக்கிறது. அவரது கரத்தின் செயல்களின் அழகைக் கெடுத்துத் தீட்டுப்படுத்துவதன் வழியாக, மனிதனை மீட்கும் தெய்வீகத் திட்டத்தைத் தடைசெய்யவும், தேவனின்மீது மதிப்புக் குறைவை உண்டுபண்ணவும் அவன் விரும்புகிறான். பரலோகத்தில் வருத்தம் உண்டாகச்செய்து, பூமியைத் துன்பங்களினாலும், பாழ்க்கடிப்பினாலும் நிரப்புவான். பின்னர் இந்தத் தீங்குகளெல்லாம் தேவன் மனிதனைப் படைத்ததின் விளைவு என்று அவன் சுட்டிக்காட்டுகிறான். (4)GCTam 592.2

    மனித ஆத்துமாவில் கிறிஸ்து தரும் கிருபைதான், சாத்தானுக்கு எதிரான பகையை மனிதனுக்குள் உண்டுபண்ணுகிறது. இவ்விதமாக மாற்றத்தை உண்டுபண்ணும் கிருபையும் புதுப்பிக்கும் வல்லமையும் இல்லாதபோது, மனிதன் தொடர்ந்து சாத்தானின் அடிமையாக இருந்து, அவன் கட்டளையிடுவதை எல்லாம் செய்வதற்கு ஆயத்தமாக இருக்கும் வேலைக்காரனாக இருந்திருப்பான். ஆனால் ஆத்துமாவில் இருக்கும் புதிய கொள்கைகள் இதுவரை சமாதானமிருந்த இடத்தில் ஒரு சண்டையை உண்டுபண்ணுகின்றன. கிறிஸ்துவால் தரப்படும் வல்லமை, கொடுங்கோலனும் ஆதிக்கவாதியுமானவனைத் தடுக்க மனிதனைத் தகுதிப்படுத்துகிறது. பாவத்தை நேசிப்பதற்குப் பதிலாக அதனை வெறுக்கும் எவனும், முற்றிலுமாக உன்னத்திலிருந்து உண்டாகும் ஒரு கொள்கையின் செயல்பாட்டை வெளிக்காட்டுகிறான். (5)GCTam 592.3

    இந்த உலகம் இயேசுவை வரவேற்றதின் மூலமாக, கிறிஸ்துவின் ஆவிக்கும் சாத்தானின் ஆவிக்கும் இடையில் உள்ள பகை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டது. உலகப்பிரகாரமான செல்வமும், ஆடம்பரமும், மகத்துவமும் இல்லாதவராகக் காணப்பட்டதினால் மட்டுமே, யூதர்கள் அவரை நிராகரிக்கவில்லை. இந்த வெளிப்பிரகாரமான அனுகூலங்களின் இல்லாமையை ஈடுசெய்ய, அவர் அதிகமான வல்லமையை உடையவராக இருந்ததை அவர்கள் கண்டனர். ஆனால் கிறிஸ்துவிடமிருந்த தூய்மையும் பரிசுத்த தன்மையும் தெய்வபக்தி இல்லதவர்களிடம் அவருக்கு எதிரான வெறுப்பைக்கொண்டுவந்தன. அகந்தை மிகுந்தவர்களாயும், புலனடக்கமில்லாதவர்களாயும் இருந்த மக்களுக்கு, அவரது சுயமறுப்பும் பக்தியும் தொடர்ச்சியான கடிந்துகொள்ளுதலாக இருந்தது. அதுதான் தேவகுமாரனுக்கு எதிரான பகையை எழுப்பியது. கெட்ட மனிதர்களுடன் சாத்தானும் கெட்டுப்போன தேவதூதர்களும் சேர்ந்துகொண்டனர். சத்தியத்தின் வீரருக்கு எதிராக, மருள விழுந்த சக்திகள் அனைத்தும் சதியாலோசனை செய்தன. (6)GCTam 592.4

    கிறிஸ்துவிற்கு எதிராக வெளிக்காட்டப்பட்ட அதே போன்ற பகைமை, கிறிஸ்துவின் அடியார்களுக்கு நேராகவும் காட்டப்பட்டிருக்கிறது. பாவத்தின் வெறுக்கத்தக்க சுபாவத்தைக் கண்டு உன்னதத்திலிருந்துள்ள பலத்தினால் எவர்கள் சோதனையைத் தடுக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாகவே சாத்தானின் கோபத்தையும் அவனது ஆளுகையின் கீழுள்ளவர்களின் கோபத்தையும் எழுப்பிவிடுவார்கள். சத்தியத்தின் தூய்மையான கொள்கைகளின்மீது உண்டாகும் நிந்தனையும் உபத்திரவமும், பாவமும் பாவிகளும் இருக்கும்வரை இருந்தே தீரும். கிறிஸ்துவின் அடியார்களும் சாத்தானின் வேலைக்காரர்களும் இசைந்திருக்க முடியாது. சிலுவையின் பேரில் உள்ள எதிர்ப்பானது நிறுத்தப்படவில்லை. “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்”-2 தீமோத்தேயு 3:12. (7)GCTam 593.1

    தேவ அரசாங்கத்திற்கு எதிராக சாத்தானின் அதிகாரத்தை அமைக்கவும், அவனுடைய ராஜ்யத்தை கட்டவும், சாத்தானும் அவனது பிரதிநிதிகளும் அவனது இயக்குதலின்கீழ் தொடர்ந்து செயலாற்றிக்கொண்டிருக்கின்றனர். இந்த நோக்கத்தை அடைந்துகொள்ள அவர்கள் கிறிஸ்துவின் அடியார்களை வஞ்சிக்க வகைதேடி, அவர்களது தொடர்பிலிருந்து அவர்களைக் கவர்ந்திழுக்கின்றனர். தங்களுடைய நோக்கத்தை நிறைவேற்ற அவர்களுடைய தலைவனைப் போலவே அவர்களும் வேதவாக்கியங்களைத் தவறான பொருள்கொள்ளும்படி திரித்துக் கூறுகின்றனர். தேவன்மீது நிந்தையை வைக்கும்படி, சாத்தான் முயன்றதைப் போலவே, அவனது பிரதிநிதிகளும் தேவனுடைய ஜனங்களின் பெயரைக் கெடுக்க வகைதேடுகின்றனர். கிறிஸ்துவை மரணத்திற்குள்ளாக்கிய ஆவி, அவரது அடியார்களை அழிக்கும்படி துன்மார்க்கரை ஏவுகிறது. “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்;” என்னும் தீர்க்கதரிசனத்தில் இவை அனைத்தும் முன்னடையாள மாக்கப்பட்டுள்ளன. காலத்தின் முடிவுவரை இது தொடரும். (8)GCTam 593.2

    சாத்தான் அவனது படைகள் அனைத்தையும் அழைத்து, இந்தப் போரில் அவனது வல்லமைகள் அனைத்தையும் செலவிடுகிறான். ஏன் அவன் பெரிய தடைகள் எதையும் சந்திக்காதிருக்கிறான்? ஏன் கிறிஸ்துவின் வீரர்கள் இப்படி உறங்குபவர்களாகவும் அசிரத்தையாகவும் இருக்கிறார்கள்?—காரணம் அவர்கள் கிறிஸ்துவுடன் உண்மையான தொடர்பு இல்லாதவர்களாக இருப்பதுதான். அவர்கள் அவருடைய ஆவியைக் கொண்டிருக்கவில்லை. அவர்களது ஆண்டவருக்கு இருந்ததுபோல், பாவம் விலக்கப்படவேண்டியதாகவும் வெறுப்பானதாகவும் அவர்களுக்கு இல்லை! முடிவான, தீர்மானமிக்க தடுப்புடன் கிறிஸ்து அதைச் சந்தித்ததுபோல, அவர்கள் அதைச் சந்திக்கவில்லை. பாவத்தின் அதிகமான தீமையையும் கொடூரத்தையும் அவர்கள் உணரவில்லை. அந்தகாரப் பிரபுவின்சுபாவத்திற்கும் வல்லமைக்கும் அவர்கள் குருடாக்கப்பட்டிருக்கின்றனர். சாத்தானுக்கும் அவனது வேலைகளுக்கும் எதிரான பகை மிகக் குறைவாகவே உள்ளது. அவனது வல்லமை, தீய நோக்கங்கள் கிறிஸ்துவிற்கும் அவரது சபைக்கும் எதிரான அவனது போர், மிகவும் பரந்த அளவிலானது என்பதுபற்றிய அறியாமை மிகப் பெரியதாக உள்ளது. இங்கு திராளானவர்கள் தவறான நம்பிக்கையினால் ஏமாற்றப்பட்டுள்ளனர். அவர்களுடைய எதிரி பலம் பொருந்திய ஒரு தளபதி என்பதை அவர்கள் அறியாமலிருக்கின்றனர். அவன் தீய தூதர்களின் மனங்களைக் கட்டுப்படுத்துகிறான் என்பதையும், ஆத்துமாக்களின் இரட்சிப்பைத் தடுப்பதற்காக மேலான திட்டங்களுடனும் திறமையான இயக்கங்களுடனும் கிறிஸ்துவுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லை. கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளுபவர்களுக்கிடையிலும் சுவிசேஷத்தின் ஊழியக்காரர்களுக்கிடையிலுங்கூட தற்செயலாகப் பிரசங்க பீடத்திலிருந்து குறிப்பிடுவதைத் தவிர, சாத்தானைப்பற்றிக் குறிப்பிடுவது அபூர்வமாகவே கேட்கப்படுகிறது. அவனது தொடர்ச்சியான செயல்களையும் வெற்றிகளையும் அவர்கள் பார்க்காமல் விட்டுவிடுகின்றனர். அவனது தந்திரம்பற்றிய எச்சரிப்புகளை, அவர்கள் அலட்சியம் செய்கின்றனர். அவன் இருப்பதை அறியாதவர்களாக இருப்பதுபோல் அவர்கள் காணப்படுகின்றனர். (9)GCTam 594.1

    சாத்தானது உபாயங்களைப்பற்றி மனிதர்கள் அறியாமல் இருக்கும்போது, விழித்திருக்கும் இந்த விரோதி அவர்களது பாதையில் ஒவ்வொரு விநாடியிலும் இருக்கிறான். இல்லத்தில் உள்ள ஒவ்வொரு வேலைப்பகுதியிலும், நமது நகரின் ஒவ்வொரு வீதியிலும், சபைகளிலும், தேசிய மன்றங்களிலும், நீதிமன்றங்களிலும் நுழைந்து, குழப்பம், வஞ்சனை, மயக்குதல் ஆகியவைகளைச் செய்து, எங்கும் ஆண்கள், பெண்கள், சிறுவர்களுடைய ஆத்துமாக்களையும் சரீரங்களையும் அழித்து, குடும்பங்களைத் தகர்த்து, வெறுப்பையும் போட்டியையும் சச்சரவுகளையும், துர்ப்போதனை, கொலைகளையும் விதைக்கிறான். கிறிஸ்தவ உலகமோ, இவைகளையெல்லாம் தேவன்தான் ஏற்படுத்தி இருக்கிறார். ஆகையால் இவை இருக்கவேண்டும் என்று கருதுவதாகக் காணப்படுகிறது. (10)GCTam 594.2

    தேவனுடைய ஜனங்களை உலகத்தைவிட்டுப் பிரிக்கும் தடுப்பைத் அவர்களை மேற்கொள்வதற்கு தகர்த்து விழச்செய்து, அதனால் சாத்தான் தொடர்ந்து வகைதேடிக்கொண்டிருக்கிறான். பழங்கால இஸ்ரவேலர்கள் தடைசெய்யப்பட்ட அஞ்ஞானிகளுடன் திருமண உறவில் ஈடுபட முயன்றபோது, பாவத்திற்குள் கெட்டவழியில் இழுத்துச் செல்லப்பட்டனர். அதேவிதமாக இன்றைய இஸ்ரவேலர்களும் வழிவிலகிச் செல்லுகின்றனர். “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்” -2 கொரி. 4:4. தீர்மானத்துடன் கிறிஸ்துவைப் பின்பற்றாத அனைவரும், சாத்தானின் வேலைக்காரர்களாகவே உள்ளனர். புத்துயிர் அடையாத இருதயத்தில் பாவத்தின்மீது விருப்பமும், அதைப் போற்றி வளர்க்கும் தன்மையும், சாக்குப்போக்கு கூறுவதும் உள்ளது. புதுப்பிக்கப்பட்ட இருதயத்தில் பாவத்தின்மீது வெறுப்பும், அதன்மீது தீர்மானமான வெறுப்பும் உள்ளது. தெய்வபக்தியும் நம்பிக்கையும் இல்லாத சமுதாயத்தைக் கிறிஸ்தவர்கள் தெரிந்துகொள்ளும்போது, சோதனைக்குள் தாங்களாகவே விழுகின்றனர். சாத்தான் தன்னைப் பார்வையிலிருந்து மறைத்துக்கொண்டு, திருட்டுத்தனமாக அவர்களது கண்களின்மீது அவனது வஞ்சகத் திரையை மூடுகிறான். அப்படிப்பட்ட கூட்டங்கள் தங்களுக்குக் கெடுதலை உண்டுபண்ணுவதற்கென்று ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதை அவர்களால் காணமுடியவில்லை. காலங்கள் முழுவதும் சுபாவத்தால்- வார்த்தைகளால் செயல்களால் உலகத்துடன் இசைந்திருக்கும் அவர்கள் அதிகமதிகமாக குருடாக்கப்படுகின்றனர். (11)GCTam 595.1

    உலகப்பிரகாரமான சம்பிரதாயங்களுக்கு இசைவதே சபையை உலகத்திற்கு மாறச்செய்கிறது. அது ஒருபோதும் உலகத்தைக் கிறிஸ்துவிற்கு மாற்றம் செய்வதில்லை. பாவத்துடனுள்ள பழக்கம், தவிர்க்கமுடியாத விதத்தில் அதை வெறுப்பற்றதாகத் தோன்றச்செய்யும். சாத்தானின்வேலைக் காரர்களுடன் இணைந்திருக்க விரும்புபவன் வெகு விரைவில் அவனது ஆண்டவருக்குப் பயப்படாதுபோகிறான். கடமைகளைச் செய்யும்போது சோதனைகளுக்குட்பட்டால், அரச சபையில் தானியேல் இருந்தது போல, தேவன் நம்மைப் பாதுகாப்பார் என்று நாம் நிச்சயமாயிருக்கலாம். ஆனால் நம்மை நாமே சோதனைக்குக் கீழாக வைப்போமானால், விரைவிலோ அல்லது தாமதித்தோ விழுந்துவிடுவோம். (12)GCTam 595.2

    சோதனைக்காரனின் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதாகக் கொஞ்சங்கூட சந்தேகிக்காமல் இருப்பவர்கள் மூலமாக, அவன் மிக வெற்றிகரமாகச் செயலாற்றுகிறான். தாலந்துகளையும் கல்வியையும் உடையவர்களின் தெய்வபயமில்லாத தன்மைகள் இம்மேன்மைகளினால் நிவர்த்தி செய்யப்படுமென்றும், அவர்கள் தேவனுடைய அனுகூலத்தைப் பெறுவதற்கு தகுதியான மனிதர்கள் என்றும் பாராட்டப்பட்டு, சிறப்பிக்கப்படுகின்றனர். தாலந்துகளும் பண்புகளும் தேவனுடைய ஈவுகள். ஆனால் இவை தெய்வபக்தியின் இடத்தை நிரப்பும்படி வழங்கப்படும்போது, ஆத்துமாவை தேவனுக்கு அருகில் கொண்டுவருவதற்குப் பதிலாக அவரைவிட்டுத் தூரமாக நடத்தும்போது, சாபமும் கண்ணியுமாகின்றன. உபசரணையும் நற்பண்புகளும் போலத் தோன்றும் அனைத்தும் ஒருவகையில் கிறிஸ்துவுடன் சம்பந்தப்பட்டதாக உள்ளன என்னும் கருத்து அநேகருக்கிடையில் இருக்கிறது. இதைப்போன்ற பெரும் தவறு ஒருபோதும் இருந்ததில்லை. இந்தத் தன்மைகள் ஒவ்வொரு கிறிஸ்தவனையும் அலங்கரிக்க வேண்டியதுதான். ஆனால் அவர்கள் தேவனுக்கு அர்ப்பணம் செய்தவர்களாக இருக்கவேண்டும். அப்படியிருக்குமானால், அவைகள் உண்மையான மதத்திற்கு ஆதரவாக வல்லமைமிக்க செல்வாக்கைச் செயல்படுத்துபவையாக இருக்கும். ஆனால் அவை தேவனுக்கென்று அர்ப்பணம் செய்யப்படவேண்டும். இல்லாவிட்டால், தீமையின் வல்லமையாகிவிடும். பொதுவாக சன்மார்க்க நெறிக்கு எதிரானவை என்னும் செயல்களைச் செய்யக் கீழிறங்காத பண்பும், நுண்ணறிவும், இனிய பழக்கங்களும் உள்ள அநேக மனிதர்கள், சாத்தானின் கரங்களில் மெருகேற்றப்பட்ட கருவிகளாக உள்ளனர். அவனது துரோகமும் வஞ்சிக்கும் சுபாவமும் செல்வாக்கும் உதாரணமும், அறியாமையும் பண்பும் இல்லாதவர்களையும்விட அவனைக் கிறிஸ்துவின் காரியத்திற்கு எதிரான ஆபத்தான எதிரியாக்குகிறது. (13)GCTam 596.1

    ஊக்கமான ஜெபத்தினாலும் தேவனைச் சார்ந்திருத்தலினாலும் சாலொமோன் உலகத்தின் வியப்பையும் பாராட்டுதலையும் தூண்டக்கூடிய ஞானத்தைப் பெற்றான். ஆனால் அவன், அவனது பலத்திற்கு ஆதாரமாய் இருந்தவரை விட்டுத்திரும்பி, தன்னைச்சார்ந்து சென்றபோது, சோதனைக்கு இரையாகி விழுந்தான். அதன்பின் மிகுந்த ஞானமிக்க அந்த அரசனுக்கு அருளப்பட்ட ஆச்சரியமான வல்லமைகள் ஆத்துமாக்களுக்கு எதிராளியானவனின் அதிகத் திறமைவாய்ந்த ஏவலனாக இருப்பதற்குப் பயன்பட்டது. (14)GCTam 596.2

    உண்மையைக் காணாமலிருக்கும்படி அவர்களது மனங்களைக் குருடாக்க, சாத்தான் தொடர்ந்து வகைதேடிக்கொண்டிருக்கும்போது, கிறிஸ்தவர்களுக்கு “மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங் களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதி பதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனை களோடும் போராட்டம் உண்டு” (எபே. 6:12) என்பதை மறந்துவிடா திருப்பார்களாக. “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” (1 பேதுரு 5:8) என்று ஆவியினால் ஏவப்பட்ட எச்சரிக்கை நமது காலம்வரை- --நூற்றாண்டுகளாக எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. (15)GCTam 597.1

    ஆதாமின் நாட்களில் இருந்து நமது காலம்வரை, நமது பெரும் எதிரி, ஒடுக்கவும், அழிக்கவும் அவனது வல்லமைகளை செயல்படுத்திக்கொண்டிருக்கிறான். சபைக்கு எதிரான அவனது கடைசி நடவடிக்கைக்காக அவன் இப்போது ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறான். இயேசுவைப் பின்பற்ற வகைதேடும் அனைவரும் இந்த இரக்கமற்ற எதிரியுடன் போருக்குக் கொண்டுவரப்படுவார்கள். கிறிஸ்தவன் எந்த அளவிற்கு அதிகமாக தெய்வீக சாயலைப் பிரதிபலிக்கின்றானோ, அந்த அளவிற்கு அதிகமாக நிச்சயமாகத் தன்னை சாத்தானின் தாக்குதலுக்கு இலக்காக்கிக்கொள்ளுவான். தீமையின் வஞ்சகத்தைத் திரைநீக்கம் செய்து, கிறிஸ்துவை மக்கள் முன் காட்டச்செய்ய வகைதேடி, தேவனுடைய காரியத்தில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடும் அனைவரும், மனத்தாழ்மையுடனும் ஏராளமான கண்ணீரோடும், சோதனைகளுடனும் கர்த்தரைச் சேவிப்பதைப்பற்றி பவுல் கூறியுள்ள சாட்சியில் சேர்ந்துகொள்ளத் தகுதி உள்ளவர்களாக இருப்பார்கள். (16)GCTam 597.2

    சாத்தான் அவனுடைய பயங்கரமான தந்திரமான சோதனைகளுடன் கிறிஸ்துவைப் பயங்கரமாகத் தாக்கினான். ஆனால் ஒவ்வொரு போரிலும் அவன் வீழ்த்தப்பட்டான். அந்த யுத்தங்கள் நமது சார்பாக நடத்தப்பட்டன. அந்த வெற்றிகள் நம்மை வெற்றிவீரர்களாக்கத் தகுதிப்படுத்துகின்றன. பலத்தைத் தேடும் அனைவருக்கும் கிறிஸ்து பலம் தருவார். எந்த ஒரு மனிதனும் அவனது சம்மதமில்லாமல் சாத்தானால் மேற்கொள்ளப்படமாட்டான். பாவம்செய்யும்படி சித்தத்தைக் கட்டுப்படுத்தவோ அல்லது ஆத்துமாவை வற்புறுத்தவோ சாத்தானால் முடியாது. அவனால் வேதனையை உண்டுபண்ணமுடியும். ஆனால் அவனால் தீட்டுப்படுத்த முடியாது. கிறிஸ்து வெற்றியடைந்திருக்கிறார் என்னும் உண்மை, அவரது அடியார்களை பாவத்திற்கும் சாத்தானுக்கும் எதிரான அவர்களது போரில் தைரியத்துடனும் ஆண்மையுடனும் நின்று போரிட ஊக்குவிக்கவேண்டும். (17)GCTam 597.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents