Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    30 - அசீரியாவிலிருந்து விடுதலை

    தேசத்தில் ஏற்பட்டிருந்த மிகவும் ஆபத்தான ஒருகாலக்கட்டத் தில், அசீரியச்சேனைகள் யூதா தேசத்தை முற்றுகையிட்டுக்கொண் டிருந்தன. ‘எருசலேம் முற்றிலுமாக அழிக்கப்படுவதிலிருந்து எதா லும் காப்பாற்ற முடியாது’ என்ற நிலை ஏற்பட்டிருந்தது. ‘யேகோ வாவின் வல்லமையால் விடுதலை கிடைக்கும்’ என்று நம்பி, பிற தேசத்தின் அந்த எதிரிகளை அஞ்சாத்துணிவுடன் எதிர்க்க, தன் படைகளோடு அணிவகுத்துச் சென்றான் எசேக்கியா. ‘’நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவ னோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங் காமலுமிருங்கள்; அவனோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம் மோடிக்கிறவர்கள் அதிகம். அவனோடிருக்கிறது மாம்சபுயம், நமக்குத் துணை நின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக் கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே” என்று யூதாவின் மனிதரை தேற்றினான் எசேக்கியா. 2நாளா 32:7, 8.தீஇவ 349.1

    இறுதி விளைவு பற்றி நிச்சயத்தோடு எசேக்கியா பேசினதற் குக் காரணமில்லாமலில்லை. ஜாதிகளைத் தண்டிக்கும் தேவ கோபத்தின் கோலாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத்தான் அசீரியர் கள் தேவனால் பயன்படுத்தப்பட்டனர். எனவே அசீரியர் பெருமை பாராட்டினாலும், அவர்கள் என்றென்றும் மேற்கொள்பவர்களாக இருக்க வில்லை . பார்க்க ஏசா 10:5. ‘அசீரியனுக்குப் பயப்படாதே’ என்பதே சீயோனில் வாசமாயிருந்தவர்களுக்குச் சிலவருடங்க ளுக்கு முன் ஏசாயா மூலம் கர்த்தரால் கொடுக்கப்பட்ட செய்தியா யிருந்தது. ஆனாலும் இன்னும் கொஞ்சக் காலத்துக்குள்ளே , ஓரேப் கன்மலையண்டையிலே மீதியானியர் வெட்டுண்டதுபோல் சேனைகளின் கர்த்தர் அவன் மேல் ஒரு சவுக்கை எழும்பிவரப் பண்ணி, எகிப்திலே தமதுகோலைக் கடலின் மேல் ஓங்கினதுபோல் அதை அவன்மேல் ஓங்குவார். அந்நாளில் உன் தோளினின்று அவன் சுமையும், உன் கழுத்தினின்று அவன் நுகமும் நீக்கப்படும்; அபிஷே கத்தின் நுகம் முறிந்துபோம்.’ ஏசாயா 10:24-27.தீஇவ 349.2

    ’ஆகாஸ் ராஜா மரணமடைந்த வருஷத்தில் கொடுக்கப்பட்ட இன்னொரு தீர்க்கதரிசனச் செய்தியின்போது, தீர்க்கதரிசி இவ்வாறு சொன்னான்: ‘’நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்; நான் நிர் ணயித்தபடியே நிலைநிற்கும்” என்று சேனைகளின் கர்த்தர் ஆணை யிட்டுச் சொன்னார். ‘’அசீரியனை என் தேசத்திலே முறித்து, என் மலைகளின் மேல் அவனை மிதித்துப் போடுவேன்; அப்பொழுது அவனுடைய நுகம் அவர்கள் மேலிருந்து விலகி, அவனுடைய சுமை அவர்கள் தோளிலிருந்து நீங்கும். தேசமனைத்தின் மேலும் நிர்ணயிக்கப்பட்ட யோசனை இதுவே; சகல ஜாதிகள் மேலும் நீட் டப்பட்டிருக்கிற கையும் இதுவே” என்றார். சேனைகளின் கர்த்தர் இப்படி நிர்ணயித்திருக்கிறார். யார் அதை வியர்த்தமாக்குவான்? அவருடைய கை நீட்டப்பட்டிருக்கிறது, யார் அதைத் திருப்புவான்?’ ஏசா 14:28, 24-27.தீஇவ 350.1

    ஒடுக்குகிறவர்களின் வல்லமை உடைக்கப்பட இருந்தது. ஆனாலும், ஆகாஸ் ராஜா செய்திருந்த ஒப்பந்தத்திற்கு இணங்க தன்னுடைய ஆளுகையின் ஆரம்பக் காலக்கட்டத்தில் அசீரியருக் குத் தொடர்ந்து கப்பம் கட்டிவந்தான் எசேக்கியா. அதே வேளை யில் தன் பிரபுக்களோடும் தன் பராக்கிரமசாலிகளோடும் ஆலோ சனை பண்ணி ‘ தன்னுடைய ராஜ்யத்தின் பாதுகாப்பிற்குத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தான் ராஜா. எருசலேம் நகரத்திற்கு வெளியே தண்ணீர் தட்டுப்பாடு நிலவின வேளையில் அதன் மதில் களுக்குள் அது பரிபூரணமாகக் கிடைக்கும்படி செய்தான். அவன் திடன்கொண்டு, இடிந்துபோன மதிலையெல்லாம் கட்டி, அவை களையும் வெளியிலுள்ள மற்ற மதிலையும் கொத்தளங்கள் மட்டும் உயர்த்தி, தாவீது நகரத்தின் கோட்டையைப் பலப்படுத்தி, திரளான ஆயுதங்களையும் கேடகங்களையும் பண்ணி, ஜனத்தின் மேல் படைத்தலைவரை வைத்தான் ‘2நாளா 32:3, 5, 6. தேசம் முற்றுகை யிடப்பட்டால் என்ன ஆயத்தங்களெல்லாம் தேவையோ அதில் எதையும் அவன் செய்யாமல் விட்டுவைக்கவில்லை.தீஇவ 350.2

    வட ராஜ்யத்திலிருந்து அதிக அளவிலான இஸ்ரவேல் புத்தி ரரை அசீரியர்கள் ஏற்கனவே சிறையாக்கிக் கொண்டுசென்றிருந்த காலக்கட்டத்தில்தான் யூதாவின் ராஜாவானான் எசேக்கியா. அவன் அரசாளத் தொடங்கி, சில வருடங்களே சென்றிருந்தன. அவன் இன்னமும் எருசலேமின் அரண்களைப் பலப்படுத்திக்கொண்டிருந் தான். அவ்வேளையில்தான் அசீரியர்கள் சமாரியாவை முற்றுகை யிட்டு, அதனைக் கைப்பற்றினர்; மேலும், அசீரிய ஆட்சிப்பகுதியைச் சேர்ந்த பல மாகாணங்களில் பத்துக் கோத்திரத்தாரையும் சிதறப் பண்ணினர். அசீரியாவிலிருந்து சில மைல்கள் தொலைவில்தான் யூதாவின் எல்லைகள் இருந்தன. அதிலிருந்து 60 மைல்களுக்கும் குறைவான தூரத்தில்தான் எருசலேம் இருந்தது; தேவாலயத்திற்குள் இருந்த ஏராளமான பொருட்கள், எதிரிகள் திரும்பவும் வரத்தக்க அவர்களைத் தூண்டக் கூடியவைகளாய் இருந்தன்.தீஇவ 351.1

    ஆனால், எதிரிகளைத் தடுத்து நிறுத்துவதற்கான ஆயத்தத் தைச் செய்வதில் உறுதியாயிருந்தான் யூதாவின் ராஜா. மனித அறி வுக்கும் ஆற்றலுக்கும் உட்பட்ட அனைத்தையும் செய்து முடித்து விட்டு, தன்னுடைய படைகளை ஒன்றுதிரட்டினான்; திடன்கொள் ளுமாறு அவர்களை அறிவுறுத்தினான். ‘இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்’ என்பதே யூதாவுக்கு ஏசாயா தீர்க்கதரிசியின் செய்தியாயிருந்தது; இப்பொழுதோ, ராஜா அசையா விசுவாசத்துடன், ‘’நமக்குத் துணை நின்று, நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்” என்று அறிவித்தான். 2 நாளா 32:8தீஇவ 351.2

    விசுவாசத்தைச் செயல்படுத்துவதுதவிர அதனை அதிகமாக ஊக்குவிப்பது வேறெதுவுமில்லை. வரவிருந்த யுத்தத்திற்காக யூதாவின் ராஜா ஆயத்தம் செய்திருந்தான். இப்பொழுதும், அசீரி யர்களுக்கு எதிராகச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறும் என நம்பிக்கை கொண்டு, தேவனில் தன் ஆத்துமா இளைப்பாறும் படி செய்தார். ‘எசேக்கியா சொன்ன வார்த்தைகளின்மேல் ஜனங் கள் நம்பிக்கை வைத்தார்கள்.’ 2நாளா32:8. பூமியின் வல்லமையான தேசங்களை வெற்றிகண்ட கையோடும், இஸ்ரவேலின் சமா ரியாவை மேற்கொண்ட கையோடும் அசீரியா இப்போது தங்கள் படைகளை யூதாவிற்கு எதிராகத் திருப்பினால் தான் என்ன? ‘எருச லேமையும் சமாரியாவையும் பார்க்கிலும் விசேஷித்த சிலைகளுள்ள விக்கிரக ராஜ்யங்களை என் கை கண்டுபிடித்திருக்க, நான் சமாரி யாவுக்கும், அதின் விக்கிரகங்களுக்கும் செய்தது போல், எருசலே முக்கும் அதின் விக்கிரகங்களுக்கும் செய்யாமலிருப்பேனோ?’ என்று அவர்கள் பெருமை பாராட்டினால்தான் என்ன? ஏசா 10:10, 11. யூதா எதற்கும் பயப்படத் தேவையாயிருக்கவில்லை ; ஏனெ னில் அவர்களுடைய நம்பிக்கை யேகோவாவில் இருந்தது.தீஇவ 351.3

    நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த இக்கட்டு இறுதியில் சம்ப வித்தது. வெற்றிமேல் வெற்றிபெற்று முன்னேறிய அசீரியப் படை கள் யூதாவிற்கு வந்தன. தங்கள் வெற்றியில் நிச்சயம் கொண்டி ருந்த அதன் தலைவர்கள், தங்கள் சேனையை இரண்டு படைகளாகப் பிரித்தனர். அதில் ஒன்று தென்பகுதியிலிருந்த எகிப்திய படையைச் சந்திக்க இருந்தது; இன்னொன்று, எருசலேமை முற்றுகையிடயிருந் தது.தீஇவ 352.1

    இப்போது, யூதாவின் ஒரே நம்பிக்கை தேவனில் மாத்திரமே இருந்தது. எகிப்திலிருந்து கிடைக்கக் கூடியதாயிருந்த அனைத்து உதவிகளும் தடை செய்யப்பட்டன; நேசக்கரம் நீட்ட, பக்கத்தில் வேறு தேசத்தாரும் இல்லை.தீஇவ 352.2

    நன்கு பயிற்சி பெற்ற தங்கள் படைபலத்தில் நிச்சயம்கொண் டிருந்த அசீரிய அதிகாரிகள், யூதாவின் பிரதானிகளோடு ஓர் ஆலோ சனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். அப்போது, நகரத்தைத் தங்கள் வசம் ஒப்படைக்குமாறு ஆணவத்தோடு கோரிக்கை விடுத்தனர். அந்தக் கோரிக்கையோடுங்கூட எபிரெயர்களின் தேவ னுக்கு எதிராக தூஷண வார்த்தைகளையும் சொன்னார்கள். யூதா மற்றும் இஸ்ரவேலின் பெலவீனத்தின் நிமித்தமும் அவபக்தியின் நிமித்தமும் தேசங்களின் நடுவே தேவநாமத்தைக்குறித்த பயம் இல்லாமலே போயிற்று; மாறாக, இடைவிடாமல் அவதூறாகப் பேசப்படுவதற்கு அது ஏதுவாயிற்று. பார்க்க: ஏசா 52:5.தீஇவ 352.3

    சனகெரிப்பின் பிரதான அதிகாரிகளில் ஒருவனான ரப்சாக்கே அவர்களை நோக்கி, ‘’அசீரியா ராஜாவாகிய மகா ராஜாவானவர் உரைக்கிறதும் நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால், நீநம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன? யுத்தத் திற்கு மந்திராலோசனையும் வல்லமையும் உண்டென்று நீ சொல் லுகிறாயே, அது வாய்ப்பேச்சேயன்றி வேறல்ல; நீ என்னை விரோ திக்கும்படி யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்?’‘ என்றான். 2 இராஜா 18:19, 20.தீஇவ 352.4

    நகரத்தின் வாசல்களுக்கு வெளியே நின்றுதான் அதிகாரிகள் உரையாடினார்கள். ஆனாலும், அலங்கத்தின்மேல் நின்ற வீரர் களுக்குக் கேட்கும் தூரத்தில் அவர்கள் நின்றிருந்தார்கள்; அசீரிய ராஜாவின் பிரதிநிதிகள் யூதாவின் பிரதானிகளிடத்தில் தங்கள் வேண்டுகோள்களைச் சத்தமாகத் தெரிவித்தபோது, அக்கூட்டத்தில் நடைபெற்றவற்றை அலங்கத்தின் மேலிருந்தவர்கள் அறிந்துகொள் ளாதபடிக்கு, யூதபாஷையில் பேசாமல் சீரிய பாஷையில் பேசும் படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். அந்த ஆலோசனை யைப் பரியாசம் பண்ணின ரப்சாக்கே, இன்னும் தன் சத்தத்தை உயர்த்தி, தொடர்ந்து யூத பாஷையிலேயே பேசினான். ‘’அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தைகளைக் கேளுங்கள் . எசேக்கியா உங்களை வஞ்சியாதபடிப் பாருங்கள்; அவன் உங் களைத் தப்புவிக்கமாட்டான். ‘கர்த்தர் நம்மை நிச்சயமாய்த் தப்பு விப்பார், இந்த நகரம் அசீரியாராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப் படுவதில்லை’ என்று சொல்லி எசேக்கியா உங்களைக் கர்த்தரை நம்பப்பண்ணுவான்; அதற்கு இடங்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்லுகிறான்.தீஇவ 353.1

    ’’எசேக்கியாவின் சொல்லைக்கேளாதிருங்கள். அசீரியா ராஜா சொல்லுகிறதாவது: நீங்கள் என்னோடே ராஜியாகி, காணிக்கை யோடே என்னிடத்தில் வாருங்கள். நான் வந்து, உங்களைத் தானி யமும் திராட்சத்தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்சரசமு முள்ள தேசமுமாகிய உங்கள் தேசத்துக்கு ஒப்பான தேசத்துக்கு அழைத்துக்கொண்டுபோகுமளவும், அவனவன் தன்தன் திராட்சச் செடியின் கனியையும், தன்தன் அத்திமரத்தின் கனியையும் புசித்து, அவனவன் தன்தன் கிணற்றின் தண்ணீரைக் குடியுங்கள்.தீஇவ 353.2

    ’’கர்த்தர் நம்மைத் தப்புவிப்பார் என்று உங்களைப் போதனை செய்ய எசேக்கியாவுக்குச் செவிகொடாதிருங்கள்; ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக் குத் தப்புவித்ததுண்டோ ? ஆமாத், அர்பாத் பட்டணங்களின் தேவர் கள் எங்கே ? செப்பர்வாயீமின் தேவர்கள் எங்கே? அவர்கள் சமாரி யாவை என்கைக்குத் தப்புவித்ததுண்டோ ? கர்த்தர் எருசலேமை என் கைக்குத் தப்புவிப்பார் என்பதற்கு, அந்தத் தேசங்களுடைய எல்லா தேவர்களுக்குள்ளும் தங்கள் தேசத்தை என்கைக்குத் தப்புவித்தவர் யார் என்று ராஜா சொல்லுகிறார் என்றான்.’ ‘ஏசாயா 36:13-20.தீஇவ 353.3

    அவன் ஏளனமாகப் பேசினாலும் யூதாவின் புத்திரர், ‘அவ னுக்கு ஒரு வார்த்தையையும் பிரதியுத்தரமாகச் சொல்லவில்லை.’ அந்தக் கூட்டம் முடிவுக்கு வந்தது. யூதாவின் பிரதிநிகள், தங்கள் ‘வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, ரப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்கு அறிவித்தார்கள்’. வச 21, 22. தூஷணமான அந்தச் சவாலைக் குறித்து அறிந்ததும் ராஜா ‘தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்திக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்தான்.’ 2 இராஜா 19:1.தீஇவ 354.1

    அந்தக் கூட்டத்தில் நிகழ்ந்ததுபற்றி ஏசாயாவிடம் அறிவிக்க ஒரு தூதுவனை அவனிடத்தில் அனுப்பினார்கள். இந்த நாள் நெருக்கமும் கண்டிதமும் தூஷணமும் அனுபவிக்கிற நாள்’ என் பதே ராஜா சொல்லியனுப்பின் செய்தியாகும். ‘ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப் பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளையெல்லாம் உமது தேவ னாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட் டிருக்கிற வார்த்தைகளினிமித்தம் தண்டனைசெய் வார்; ஆகை யால், இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பஞ் செய் வீராக. ‘2இராஜா 19:3, 4.தீஇவ 354.2

    ’இதினிமித்தம் ராஜாவாகிய எசேக்கியாவும் ஆமோத்சின் குமாரனுமாகிய ஏசாயா தீர்க்கதரிசியும் பிரார்த்தித்து, வானத்தை நோக்கி அபயமிட்டார்கள்.’ 2நாளா 32:20.தீஇவ 354.3

    தம் ஊழியர்களின் ஜெபங்களுக்கு தேவன் செவிகொடுத்தார். எசேக்கியாவிடம் சொல்லும்படி ஏசாயாவுக்குக் கொடுக்கப்பட்ட செய்தி இதுவே: ‘அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர்கேட்டதுமான வார்த்தையினாலே பயப்படாதேயும். இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்பு வதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக் கிறார். ‘2 இராஜா 19:6, 7.தீஇவ 354.4

    யூதாவின் பிரதானிகளிடமிருந்து புறப்பட்டுச் சென்ற அசீரி யப் பிரதிநிதிகள், தங்கள் ராஜாவிடம் வந்து நேரடியாக அச்செய்தியைத் தெரிவித்தார்கள். எகிப்தியரை வரவிடாமல் காவல்காத்து வந்த படைப்பிரிவோடு அப்போது அவர் இருந்தார். அந்த அறிக்கை யைக் கேட்டதும், ‘தேசங்களுடைய ஜாதிகளின் தேவர்கள் தங் கள் ஜனங் களை என் கைக்குத் தப்புவிக்காதிருந்தது போல, எசேக் கியாவின் தேவனும் தன் ஜனங்களை என் கைக்குத் தப்புவிப்பதில்லை’‘ என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நிந்திக்கவும், அவருக்கு விரோதமாகப் பேசவும் நிருபங்களை எழுதினான் சனகெரிப். 2நாளா 32:17.தீஇவ 354.5

    ’எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படு வதில்லையென்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்த ஒட் டாதே. இதோ, அசீரியா ராஜாக்கள் சகலதேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேட்டிருக்கிறாயே, நீ தப்புவாயோ? என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும் ஆரானையும் ரோசேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர் கள் தப்புவித்ததுண்டோ ? ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜா வும், செப்பார்வாயீம் ஏனா ஈவாபட்டணங்களின் ராஜாவும் எங்கே?’ என்ற அகந்தையான செய்தியோடு மிரட்டல் விடப்பட்டது. 2இராஜா 19:10-13தீஇவ 355.1

    ஏளனமாக எழுதப்பட்டிருந்த அந்த நிருபத்தை யூதாவின் ராஜா பெற்றுக்கொண்டதும், தேவாலயத்திற்கு அதனை எடுத்துச் சென்று, அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து, ‘’எபிரெயர்களின் தேவன் இன்னமும் ஜீவிக்கிறார்; அரசாளுகிறார்” என்பதைப் பூமி யின் தேசத்தார் அறியும்படியாக, பரலோகத்திலிருந்து உதவி வேண்டி மிகுந்த விசுவாசத்தோடு ஜெபித்தார். வச14. யேகோவாவின் கனத் திற்கு ஆபத்து ஏற்பட்டிருந்தது; அவரால் மாத்திரமே அது நிவிர்த்தி செய்யப்படக் கூடியதாயிருந்தது.தீஇவ 355.2

    ’கேருபீன்களின் மத்தியில் வாசம் பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தவே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல் லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர். கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக் கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்து பாரும்; சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின் வார்த்தைகளைக் கேளும். கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும் அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி, அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டு விட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லும் தானே ; ஆகையால் அவைகளை நிர்த்தூளியாக்கினார்கள். இப்போதும் எங்கள் தேவ னாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங் கலாக்கி இரட்சியும்’ என்று மன்றாடினான் எசேக்கியா. 2இராஜா 19:15-19.தீஇவ 355.3

    ’இஸ்ரவேலின் மேய்ப்பரே,
    யோசேப்பை ஆட்டுமந்தையைப் போல் நடத்துகிறவரே,
    செவிகொடும்;
    கேரூபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்.
    எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக,
    நீர் உமது வல்லமையை எழுப்பி,
    எங்களை இரட்சிக்க வந்தருளும்.
    தேவனே எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும்,
    உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்,
    அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். ‘
    ’சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே,
    உமது ஜனத்தின் விண்ணப்பத்துக்கு விரோதமாய்
    நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர்?
    கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு போஜனமாகவும்,
    மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர்.
    எங்கள் அயலாருக்கு எங்களை வழக்காக வைக்கிறீர்,
    எங்கள் சத்துருக்கள் எங்களைப் பரியாசம்பண்ணுகிறார்கள்.
    சேனைகளின் தேவனே,
    எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும்,
    உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்,
    அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
    ’நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சக் கொடியைக் கொண்டுவந்து,
    ஜாதிகளைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர்.
    அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்;
    அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது.
    அதின் நிழலால் மலைகளும்
    அதின் கிளைகளால் திவ்வியமான கேதுருக்களும் மூடப்பட்டது.
    அது தன் கொடிகளைச் சமுத்திரமட்டாகவும்,
    தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது.
    ’இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக
    அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப் போட்டீர்?
    காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது,
    வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துப் போடுகிறது.
    தீஇவ 356.1

    கர்த்தர் நல்லவர்,
    இக்கட்டு நாளிலே அரணான கோட்டை,
    தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.
    தீஇவ 358.1

    நாகூம் 1:7. சேனைகளின் தேவனே, திரும்பி வாரும்,
    வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து,
    இந்தத் திராட்சச்செடியை விசாரித்தருளும்;
    உம்முடைய வலதுகரம் நாட்டின் கொடியையும்,
    உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் கடாட்சித்தருளும்…
    எங்களை உயிர்ப்பியும்,
    அப்பொழுது உமது நாமத்தைத் தொழுது கொள்ளுவோம்.
    சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே,
    எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும்;
    உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்,
    அப்பொழுது யூதாவை இரட்சிக்கப்படுவோம்.’

    சங்கீதம் 80

    முன்னிட்டும், ராஜாதி ராஜாவானவரின் கனத்தை முன்னிட்டும் எசேக்கியா ஏறெடுத்த வேண்டுகோள்கள் தேவ னுடைய உள்ளத்திற்கு ஏற்றவைகளாய் இருந்தன. ராஜாவாகிய சாலொ மோன் தேவாலயப் பிரதிஷ்டையின்போது ஏறெடுத்த ஆசீர்வாதம் ஜெபத்தில், ‘’கர்த்தரே தேவன்; வேறொருவரும் இல்லையென் பதைப் பூமியின் ஜனங்களெல்லாரும் அறியும்படியாக, அவன் தமது ஜனமாகிய இஸ்ரவேலின் நியாயத்தை, அந்தந்த நாளில் நடக்கும் காரியத்துக்குத்தக்கதாய் விசாரிக்கவேண்டுமென விண்ணப்பித் தான்.’ 1இராஜா8:59, 60. விசேஷமாக, யுத்த சமயங்களில் அல்லது எதிரிகளின் சேனையால் ஒடுக்கப்படும்போது இஸ்ரவேலின் பிர தானிகள் ஜெபவீட்டிற்குள் பிரவேசித்து, விடுதலை வேண்டி மன்றாடி னால், ஆண்டவர் தயவுகாட்ட வேண்டுமெனக் கேட்கப்பட்டது. வச 33, 34.தீஇவ 359.1

    நம்பிக்கையற்றவராய் எசேக்கியா விட்டுவிடப்படவில்லை. அவனிடத்திற்கு அனுப்பப்பட்ட ஏசாயா, இஸ்ரவேலின் தேவனா கிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிப்பின் நிமித்தம் நீ என்னை நோக்கிப் பண்ணின விண்ணப் பத்தைக் கேட்டேன். அவனைக் குறித்து கர்த்தர் சொல்லுகிற வசன மாவது :தீஇவ 359.2

    ‘ சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம் பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின் னாலே தலையைத் துவக்குகிறாள்.தீஇவ 359.3

    ’யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோத மாயல்லவோ உன் கண்களை மேட்டிமையாக ஏறெடுத்தாய்? உன் ஸ்தானாபதிகளைக் கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து: என் இரதங் களின் திரளினாலே நான் மலைகளின் கொடுமுடிகளுக்கும் லீப னோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுரு மரங்களையும் உச்சிதமான தேவதாரு விருட்சங்களையும் நான் வெட்டி, அதின் கடையாந்தரத்தாபரமட்டும், அதின் செழுமை யான வனமட்டும் வருவேன் என்றும், நான் அந்நிய தேசங்களில் கிணறு வெட்டி தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்கால்களினால் அரணிப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும் பண் ணினேன் என்றும் சொன்னாய்.தீஇவ 360.1

    ’நான் வெகுகாலத்திற்கு முன் அதை நியமித்து, பூர்வ நாட்கள் முதல்அதைத்திட்டம் பண்ணினேன் என்பதை நீகேட்டதில்லையோ? இப்பொழுது நீ அரணான பட்டணங்களைப் பாழான மண்மேடுகள் ஆக்கும்படிக்கு நானே அதைச் சம்பவிக்கப் பண்ணினேன். அதி னாலே அவைகளின் குடிகள் கையிளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின் மேல் முளைக்கும் புல்லுக்கும், ஓங்கி வளருமுன்தீய்ந்துபோம் பயி ருக்கும் சமானமானார்கள்.தீஇவ 360.2

    ’உன் இருப்பையும், உன் போக்கையும், உன் வரவையும், நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளிக்கிறதையும் அறிவேன். நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளித்து, வீரியம் பேசினது என் செவி களில் ஏறினபடியினால், நான் என் துறட்டை உன் மூக்கிலும் என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்த வழியே உன்னைத் திருப்பிக்கொண்டு போவேன் என்று அவனைக்குறித்துச் சொல்லு கிறார். 2 இராஜா 19:20-28.தீஇவ 360.3

    அசீரியப் படைகளின் முற்றுகையால்யூதாதேசம் பாழ்நிலமாக் கப்பட்டிருந்தது. ஆனால் மக்களுடைய தேவைகளை அற்புதமான விதத்தில் சந்திப்பதாக தேவன் வாக்குரைத்திருந்தார். எசேக்கியா வுக்கு உண்டான செய்தி இதுதான்: ‘உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருஷத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருஷத்திலே தானாய் விளைகிறதையும் சாப்பிடுவீர் கள்; மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து, திராட்சத் தோட் டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள். யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழேவேர்பற்றி மேலே கனி கொடுப்பார்கள். மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமி லும், தப்பினவர்கள் சீயோன் மலையிலும் இருந்து புறப்படுவார்கள் சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும்.தீஇவ 360.4

    ’ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவைக் குறித்து அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வது மில்லை; இதற்கு முன் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கொத்தளம் போடுவதுமில்லை . அவன் இந்த நகரத்திற் குள் பிரவேசியாமல், தான் வந்த வழியே திரும்பிப் போவான். என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் நான் இந்த நக ரத்தை இரட்சிக்கும்படிக்கு, இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று எசேக்கியாவுக்குச்செய்தி அனுப்பினார். வச 29-34.தீஇவ 361.1

    அன்று இரவிலேயே விடுதலை கிடைத்தது. ‘கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின்பாளையத்தில் லட்சத்தெண்பத்தையா யிரம் பேரைச் சங்கரித்தான்.’வச35. ‘அசீரியருடைய ராஜாவின் பாள யத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனா பதிகளையும் அதம்பண்ணினான்.’ 2நாளா 32:21.தீஇவ 361.2

    எருசலேமைக் கைப்பற்ற அனுப்பப்பட்ட சேனைக்கு ஏற்ப பட்ட கொடிய நியாயத்தீர்ப்பு பற்றிய செய்தியானது விரைவிலேயே சனகெரிப்பை எட்டியது. எகிப்தியர் யூதாவிற்கு வராமலிருக்க அவன் இன்னமும் காவல் காத்துக்கொண்டிருந்தான். பயத்தால் பீடிக்கப் பட்டவனாய், அவசரமாகப் பின்வாங்கிய அசீரிய ராஜா, ‘செத்த முக மாய்த்தன் தேசத்திற்குத் திரும்பினான். ‘வச. 21. ஆனாலும் அவன் அதிக நாட்கள் அரசாளவில்லை . அவனுடைய முடிவு குறித்துச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்திற்கு இணங்க, அவனுடைய சொந்த வீட்டாராலேயே அவன் கொல்லப்பட்டான். அவன் குமாரனாகிய எசரத்தோன் அவன் பட்டயத்திற்கு வந்து அரசாண்டான். ஏசாயா 37:38.தீஇவ 361.3

    பெருமை கொண்ட அசீரியருக்கு மேலாக எபிரெயரின் தேவன் வெற்றி கொண்டார். சுற்றிலுமிருந்த தேசத்தாரின் கண்களில் யேகோவாவின் நீதி நிலைநிறுத்தப்பட்டது. எருசலேமிலோ பரிசுத்த மகிழ்ச்சி யால் மக்களுடைய இருதயங்கள் நிறைந்திருந்தன. அவர் கள் விடுதலை வேண்டி ஏறெடுத்த ஊக்கமான வேண்டுகோள்களில் பாவ அறிக்கையும் கண்ணீரும் கலந்திருந்தன. தங்களுக்கு அதிக உதவி தேவையாயிருந்தபோது, தங்களைக் காக்கும்படி தேவவல்ல மையையே நம்பியிருந்தார்கள். அவர் அவர்களைக் கைவிடவில்லை. இப்பொழுது, பரிசுத்த துதியின் பாடல்கள் தேவாலயப் பிராகாரங் களில் எதிரொலித்தன.தீஇவ 361.4

    ’யூதாவில் தேவன் அறியப்பட்டவர்;
    இஸ்ரவேலில் அவருடைய நாமம் பெரியது.
    சாலேமில் அவருடைய கூடாரமும்,
    சீயோனில் அவருடைய வாசஸ்தலமும் இருக்கிறது.
    அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும்,
    கேடகத்தையும் பட்டயத்தையும் யுத்தத்தையும் முறித்தார்.
    மகத்துவமுள்ளவரே,
    கொள்ளையுள்ள பர்வதங்களைப்பார்க்கிலும்
    நீர் பிரகாசமுள்ளவர்.
    தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு,
    நித்திரையடைந்து சேர்ந்தார்கள்,
    வல்லமையுள்ள எல்லா மனுஷருடைய கைகளும்
    அவர்களுக்கு உதவாமற்போயிற்று.
    யாக்கோபின் தேவனே, உம்முடைய கண்டிதத்தினால்
    இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது.
    ‘நீர், நீரே, பயங்கரமானவர்;
    உமது கோபம் மூளும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?
    நியாயம் விசாரிக்கவும்
    பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும்,
    தேவரீர் எழுந்தருளின போது,
    வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கப்பண்ணினீர்;
    பூமி பயந்து அமர்ந்தது.
    ‘மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும்;
    மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.
    பொருத்தனைபண்ணி
    அதை உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நிறைவேற்றுங்கள்;
    அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும்
    பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரக்கடவர்கள்.
    பிரபுக்களின் ஆவியை அடக்குவார்;
    பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்’
    தீஇவ 362.1

    சங்கீதம் 76.

    அசீரிய சாம்ராஜ்யத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் இன்றைய உலக நாடுகளுக்கு அதிக படிப்பினையைக் கொண்டுள்ளது. அச் ரியாதன் செழிப்பின் உச்சத்திலிருந்த காலத்தில், அதன் மகிமையை, தேவனுடைய தோட்டத்தில் சுற்றிலுமிருந்த மரங்களுக்கு மேலாக உயர்ந்திருந்த மேலான ஒரு மரத்திற்கு ஒப்பிடுகிறது வேதாகமம்.தீஇவ 362.2

    ’அசீரியன் லீபனோனிலே அலங்காரக் கொப்புகளோடும், நிழலிடும் தழைகளோடும், வளர்ந்தோங்கிய கேதுரு விருட்சமாய் இருந்தான்; அதின் கிளைகளின் தழைகளுக்குள்ளே அதின் நுனிக் கொழுந்து உயர்ந்திருந்தது. பெரிதான சகல ஜாதிகளும் அதின் நிழலிலே குடியிருந்தார்கள். அப்படியே அதின் வேர் திரளான தண்ணீர்களருகே இருந்ததினால் அது தன் செழிப்பினாலும் தன் கொப்புகளின் நீளத்தினாலும் அலங்காரமாய் இருந்தது. தேவனு டைய வனத்திலுள்ள கேதுருக்கள் அதை மறைக்கக்கூடாதிருந்தது; தேவதாரு விருட்சங்கள் அதின் கொப்புகளுக்குச் சமானமல்ல; அர்மோன் மரங்கள் அதின் கிளைகளுக்கு நிகரல்ல; தேவனுடைய வனத்திலுள்ள ஒரு விருட்சமும் அலங்காரத்திலே அதற்கு ஒப்பல்ல. தேவனுடைய வனமாகிய ஏதேனின் விருட்சங்களெல்லாம் அதின் பேரில் பொறாமை கொண்டன. ‘எசேக் 31:3-9.தீஇவ 363.1

    ஆனால், அசீரியாவின் மன்னர்களோ தங்களின் விசேஷித்த ஆசீர்வாதங்களை மனித இனத்தின் நலனுக்குப் பயன்படுத்துவதற் குப் பதிலாக, அநேக தேசங்களுக்குச் சாட்டையாக மாறினார்கள். இரக்கமற்றவர்களாகவும் தேவனைப் பற்றியோ தங்கள் சக மனித ரைப்பற்றியோ சிந்திக்காதவர்களாகவும் இருந்த அவர்கள் உன்னத மானவருக்கு மேலாக நினிவேயின் தெய்வங்களை உயர்த்தி, அதன் மேலாண்மையைச் சகலதேசத்தாரும் ஒத்துக்கொள்ளும்படிச் செய் தார்கள்; அதனையே நிலையான கொள்கையாகப் பின்பற்றி வந் தார்கள். தேவன் யோனாவை எச்சரிப்பின் செய்தியோடு அவர்க ளிடத்திற்கு அனுப்பினார். சேனைகளின் தேவனுக்கு முன்பாகச் சில காலம் தங்களைத் தாழ்த்தினார்கள், பாவமன்னிப்பு வேண்டி னார்கள். ஆனால் சீக்கிரத்திலேயே சிலைவழிபாட்டிற்கும் பூமியின் தேசங்களைக் கைப்பற்றுவதற்கும் மீண்டும் திரும்பினார்கள்.தீஇவ 363.2

    ’நினிவேயின் துன்மார்க்கரைக்குறித்து நாகூம் தீர்க்கதரிசி இப் படியாகக் குற்றஞ்சாட்டுகிறார்:தீஇவ 363.3

    ’இரத்தப்பழிகளின் நகரத்திற்கு ஐயோ!
    அது வஞ்சகத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது;
    கொள்ளை ஓயாமல் நடக்கிறது.
    ‘ சவுக்குகளின் ஒசையும், உருளைகளின் அதிர்ச்சியும்
    , குதிரைகளின் பாய்ச்சலும்,
    இரதங்கள் கடகடவென்று ஓடுகிற சத்தமும்,
    வீரர் குதிரை ஏறுகிறதும், பட்டயங்கள் துலங்குகிறதும், ஈட்டிகள் மின்னுகிறதும்,
    வெட் டுண்டவர்களின் திரளும்,
    பிரேதங்களின் ஏராளமும் அங்கே உண்டாயிருக்கும்.
    ’இதோ, நான் உனக்கு விரோதமாக வருவேன்’
    என்று சேனைகளின் கர்த்தர் சொல்கிறார்.
    தீஇவ 363.4

    நாகூம் 3:1-5.

    நித்தியமானவர் இன்றும் தேசங்களைக் குறித்துச் சிறிதேனும் பிசகில்லாமல் கணக்கு வைத்திருக்கிறார். அவருடைய இரக்கங்கள் கனிவானவைதாம்; மனந்திரும்புமாறு அவர் அழைத்துக்கொண்டே இருந்தாலும், இந்தக் கணக்கீடு நடந்துகொண்டே இருக்கிறது; தேவன் நிர்ணயித்துள்ள ஒரு குறிப்பிட்ட அளவை அவர்கள் பாவம் தாண் டும்போது, அவருடைய உக்கிரத்தின் பணி ஆரம்பமாகிறது; கணக் கீடு முடிவடைகிறது: தேவ பொறுமையும் முடிவடைகிறது. அதன் பிறகு, அவர்களுக்கு இரக்கம் காட்டப்படுவதில்லை .தீஇவ 364.1

    ’கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர் களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; கர்த்தருடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்தூளாயிருக்கிறது. அவர் சமுத்திரத்தை அதட்டி, அதை வற்றிப்போகப் பண்ணி, சகல ஆறுகளையும் வறட்சியாக் குகிறார்; பாசானும் கர்மேலும் சோர்ந்து, லீபனோனின் செழிப்பு வாடிப்போகும். அவர் சமுகத்தில் பர்வதங்கள் அதிர்ந்து மலைகள் கரைந்து போகும்; அவர் பிரசன்னத்தினால் பூமியும் பூச்சக்கரமும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போம். அவரு டைய கோபத்துக்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய உக்கிர கோபத்திலே தரிப்பவன் யார்? தரிப்பவன் யார்? அவருடைய எரிச் சல் அக்கினியைப் போல் இறைக்கப்படுகிறது; அவராலே கன்மலை கள் போர்க்கப்படும். அவருடைய கோபத்துக்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய உக்கிரகோபத்திலே தரிப்பவன் யார்? அவரு டைய எரிச்சல் அக்கினியைப்போல இறைக்கப்படுகிறது; அவ ராலே கன்மலைகள் போர்க்கப்படும். ‘நாகூம் 1:3-6.தீஇவ 364.2

    அந்நிலையே நினிவேக்கு ஏற்பட்டது. நான் தான், என்னைத் தவிர வேறொருவரும் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லி, நிர்விசாரமாய் வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் வெறுமையும், வெளியும், பாழும், சிங்கங்களின் வாசஸ்தலமும், பாலசிங்கம் இரைதின்கிற இடமும், கிழச்சிங்கமாகிய சிங்கமும் சிங்கக்குட்டி களும் பயப்படுத்துவாரில்லாமல் சஞ்சரிக்கிறஸ்தானமுமாய் மாறி விட்ட து. செப் 2:15; நாகூம் 2:10,11.தீஇவ 364.3

    அசீரியாவின் அகந்தைதாழ்த்தப்படும் காலத்தை எதிர்நோக்கி இருந்தவனாய், நினிவேயைக்குறித்து பின்வருமாறு தீர்க்கதரிசனம் உரைத்தான் செப்பனியா: அதின் நடுவில் மந்தைகளும் ஜாதி ஜாதி யான சகல மிருகங்களும் படுத்துக்கொள்ளும்; அதினுடைய சிகரங் களின்மேல் நாரையும் கோட்டானும் இராத்தங்கும்; பலகணிகளில் கூவுகிற சத்தம் பிறக்கும்; வாசற்படிகளில் பாழ்க்கடிப்பு இருக்கும்; கேதுரு மரங்களின் மச்சைத் திறப்பாக்கிப் போடுவார்.’ செப் 2:14.தீஇவ 365.1

    அசீரிய ராஜ்யத்தின் மகிமை மகத்தானதாயிருந்தது; அதன் விழுகையும் பெரிதாயிருந்தது. உயர்தரமான ஒரு கேதுரு மரத்தை உருவகமாக வைத்து அசீரியாவானது தன் பெருமையின் நிமித்த மும் கொடுமையின் நிமித்தமும் விழுவதுபற்றி தெளிவாக முன்னு ரைத்தான் எசேக்கியேல் தீர்க்கதரிசி. அவன் சொன்னதாவது:தீஇவ 365.2

    ’கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறது என்னவென்றால், கொப்புகளின் தழைகளுக்குள்ளே தன் நுனிக்கிளையை ஓங்க விட்டபடியினாலும், அதன் இருதயம் தன் மேட்டியிமையினால் உயர்ந்துபோனபடியினாலும், நான் அதை ஜாதிகளின் மகா வல்ல மையுள்ளவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன், அவன் தனக்கு இஷ்ட மானபடி அதற்குச் செய்வான்; அதினுடைய அக்கிரமத்தின் நிமித் தம் அதை தள்ளிப்போட்டேன். ஜாதிகளில் வல்லவராகிய அந்நிய தேசத்தார் அதை வெட்டிப்போட்டு, விட்டுப்போனார்கள்; அதின் கொப்புகள் மலைகளின் மேலும் சகல பள்ளத்தாக்குகளிலும் விழுந் தன; அதின் கிளைகள் தேசத்தினுடைய எல்லா ஆறுகளினருகே முறிந்தன; பூமியிலுள்ள ஜனங்கள் எல்லாரும் அதின் நிழலை விட்டுக் கலைந்துபோனார்கள். விழுந்துகிடக்கிற அதின்மேல் ஆகாயத்துப் பறவைகளெல்லாம் தாபரித்தன; அதின் கொப்பு களின்மேல் வெளியின் மிருகங்களெல்லாம் தங்கின. தண்ணீரின் ஓரமாய் வளர்கிற எந்தவிருட்சங்களும் தங்கள் உயர்த்தியினாலே மேட்டிமை கொள்ளாமல் இருக்கும் பொருட்டு இப்படிச் செய்வேன்; மனு புத்திரரின் நடுவே அவர்கள் எல்லாரும் குழியில் இறங்குகிறவர் களோடேகூட மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு, பூமியின் தாழ் விடங்களில் போனார்கள்.தீஇவ 365.3

    ’கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், அவன் பாதாளத்தில் இறங்குகிற நாளிலே புலம்பலைவருவித்தேன். வெளியின் விருட்சங்களெல்லாம் அவனிமித்தம் பட்டுப்போயின அவன் விழுகிற சத்தத்தினால் ஜாதிகளை அதிரப்பண்ணினேன்’. எசே 31:10-16.தீஇவ 365.4

    அசீரியாவின் அகந்தையும் அதன் விழுகையும் கடைசிக்காலத் திற்கு ஒரு விளக்கப்பாடமாக விளங்க இருந்தன. அகந்தையாலும் இறுமாப்பாலும் தேவனுக்கு எதிராகத் தங்களை அணி வகுப்பவர் களைப் பார்த்து தேவன் கேட்கிறார். இப்படிப்பட்டமகிமையிலும் மகத்துவத்திலும் ஏதேனின் விருட்சங்களில் நீ எதற்கு ஒப்பானவன்? ஏதேனின் விருட்சங்களோடேகூட நீயும் பூமியின் தாழ்விடங்களில் இறக்கப்பட்டு, பட்டயத்தாலே வெட்டுண்டவர்களோடேகூட விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவிலே கிடப்பாய்.’வச 18.தீஇவ 366.1

    ’கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை, தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார். ஆனாலும் உன்னத மானவருக்குமேலாகத் தங்களை உயர்த்த நினைக்கும் யாவரையும் ‘புரண்டு வருகிற வெள்ளத்தினால் சர்வசங்காரம் பண்ணுவார்.’ நாகூம் 1:7, 8.தீஇவ 366.2

    ’அசீரியாவின் கர்வம் தாழ்த்தப்படும், எகிப்தின் கொடுங்கோல் விலகிப்போகும். சகரியா 10:11. முற்காலங்களில் தேவனுக்கு எதி ராகத் தங்களை அணிவகுத்த தேசங்களுக்கு மாத்திரமல்ல, தேவ னுடைய நோக்கத்தை நிறைவேற்றத் தவறும் இன்றைய நாடுகளுக் கும் இது உண்மையாயிருக்கிறது. இறுதி நியாயத்தீர்ப்பின் நாளில், பூமியனைத்திற்கும் நியாயாதிபதியானவர் ‘ஜாதிகளை அரிக்கும்’ போது, சத்தியத்தைக் கைக்கொண்டவர்கள் தேவனுடைய நகரத் தில் பிரவேசிக்க அனுமதிக்கப்படும்போது, மீட்கப்பட்டோரின் ஜெய கீதங்கள் பரலோக மண்டபங்களில் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும். ஏசா 30:28. ‘பண்டிகை ஆசரிக்கப் படும் இராத்திரியிலே பாடுகிறது போலப் பாடுவீர்கள்; கர்த்தருடைய பர்வதமாகிய இஸ்ர வேலின் கன்மலையண்டைக்குப் போக நாகசுரத்தோடே நடந்து வருகிறபோது மகிழுகிறதுபோல மகிழுவீர்கள். கர்த்தர் மகத்துவ மானவர்; தமது சத்தத்தைக் கேட்கப் பண்ணுவார். அப்பொழுது தண்டாயுதத்தினால் அடித்த அசீரியன் கர்த்தருடைய சத்தத்தினாலே நொறுங்குண்டு போவான். கர்த்தர் அவன்மேல் சுமத்தும் ஆக்கினைத் தண்டம் செல்லுமிடமெங்கும், மேளங்களும் வீணைகளும் அதி னுடன் போகும்; கொடிய யுத்தங்களினால் அவனை எதிர்த்துயுத்தஞ் செய்வார். வச 29-32.தீஇவ 366.3