48 - பலமா, பராக்கிரமமா?
யோசுவா- தூதனானவர் தரிசனத்தைத் தொடர்ந்து, செருபா பேலின் பணி குறித்த செய்தியைப் பெற்றான் சகரியா. ‘’என்னோடே பேசின தூதன் திரும்பி வந்து நித்திரைபண்ணுகிற ஒருவனை எழுப்புவது போல் என்னை எழுப்பி, ‘’நீ காண்கிறது என்ன?’ என்று கேட்டார். அதற்கு நான், ‘இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும், அதின் உச் சியில் இருக்கிற அகல்களுக்குப் போகிற ஏழு குழாய்களும் இருக் கிறது. அதின் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடதுபுறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவ மரங்கள் இருக் கிறது’‘ என்றேன்.தீஇவ 593.1
நான் என்னோடே பேசின தூதனை நோக்கி, ‘’ஆண்டவனே, இவைகள் என்ன?’ என்று கேட்டேன். என்னோடே பேசினதூதன் மறுமொழியாக, ‘செருபாபேலுக்குச் சொல்லப் படுகிற கர்த்த ருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக் கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்’‘ என்றான்.தீஇவ 593.2
பின்பு நான் அவனை நோக்கி, ‘’குத்துவிளக்குக்கு வலது புறமா கவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவ மரங்கள் என்ன?’ என்று கேட்டேன். மறுபடியும் நான் அவனை நோக்கி, ‘’இரண்டு பொற்குழாய்களின் வழியாய்த் தொங்கி, பொன் னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கப் பண்ணுகிற வைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்ன?’ என்று கேட்டேன். அப்பொழுது அவன், ‘’இவைகள் இரண்டும் சர்வலோ கத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷே கம் பெற்றவர்கள்” என்றான். சகரியா 4:1-6, 11-14.தீஇவ 594.1
தேவனுக்கு முன்பாக நிற்கும் இரண்டு ஒலிவ மரங்கள், பொன்னிறமான எண்ணெயை இரண்டு பொற்குழாய்களின் வழி யாக, குத்துவிளக்கின் கிண்ணத்திற்குத் தங்களிலிருந்து இறங்கப் பண்ணுவதாக இத்தரிசனத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. ஆசரிப்புக் கூடாரத்திலிருந்த விளக்குகள் தொடர்ந்து, பிரகாசமாக எரியும்படி அதிலிருந்த எண்ணெய் பயன்பட்டது. அதுபோல, தேவனுடைய மக்கள் பிறருக்கு வெளிச்சத்தையும் சந்தோஷத்தையும் புத்துணர் வையும் கொடுக்கும்படியாக, அவருடைய பிரசன்னத்தில் நிற்கும் அபிஷேகம் பெற்றவர்களிலிருந்து தேவனுடைய பூரண வெளிச்ச மும் அன்பும் வல்லமையும் அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இப்படியாக ஊட்டம் பெற்றவர்கள், தேவ அன்பின் பொக்கிஷத் தால் பிறரும் ஊட்டம் பெற உதவ வேண்டும்.தீஇவ 594.2
தேவனுடைய வீட்டை மீண்டும் கட்டுகிற பணியில் ஈடுபட் டான் செருபாபேல். அநேக இடர்பாடுகள் வந்தன. ஆனால், அவற் றுக்கு மத்தியில் பிரயாசத்தோடு வேலை செய்தான். ஆரம்பம் முதலே சத்துருக்கள் யூதா ஜனத்தின் கைகளைத் தளரப்பண்ணி, கட்டாத படிக்கு அவர்களைச் சங்கடப்படுத்தி, பலவந்தத்தோடும் கட்டாயத் தோடும் வேலையை நிறுத்திப்போட்டார்கள். எஸ்றா 4:4, 23. ஆனால், கட்டுகிறவர்களின் சார்பாக தேவன்தாமே குறுக்கிட்டார். இப்பொழுதும், தம் தீர்க்கதரிசியின் மூலமாக செருபாபேலிடம் பேசி, ‘’பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன் பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப் பரிப்பார்கள்’‘ என்றார். சகரியா 4:7.தீஇவ 594.3
பரலோகத்தின் நோக்கங்களை நிறைவேற்ற முயன்ற தேவ மக்களுக்கு முன்பாக, மேற்கொள்ளவே முடியாத பெரும் பர்வதங் கள் போன்ற இடர்பாடுகள் தோன்றி, அச்சுறுத்தினதை வரலாறு முழு வதிலும் காணலாம். அத்தகைய தடைகள் விசுவாசத்தின் சோதனை களாகவே தேவனால் அனுமதிக்கப்படுகின்றன. எத்திக்கிலும் நாம் அடைபட்டுபோகும் காலக்கட்டம்தான், தேவன்மேலும் ஆவி யானவரின் வல்லமையிலும் நம்பிக்கைவைப்பதற்குச் சிறந்த நேர மாகும். உயிருள்ள விசுவாசத்தைக் காட்டும்போது, ஆவிக்குரிய பெலம் அதிகரிக்கிறது; தடுமாறாத நம்பிக்கை உண்டாகிறது. நம் ஆத்துமா இவ்வாறு ஜெயங்கொள்ளும் ஒரு வல்லமையாக மாறு கிறது. கிறிஸ்தவனின் வழிநெடுகிலும் சாத்தான் வைக்கும் தடை களை நம் விசுவாசமுள்ள வேண்டுதல் ஒழித்துவிடும்; ஏனெனில், அப்படி ஜெபிக்கிற கிறிஸ்தவனுக்கு உதவிசெய்வதற்கு, பரலோக வல்லமைகள் இறங்கிவரும். ‘உங்களால் கூடாத காரியம் ஒன்று மிராது’ என்கிறார் இயேசு. மத்தேயு 17:20.தீஇவ 594.4
பகட்டோடும் பெருமையோடும் ஆரம்பிப்பது உலகத்தாரின் வழி. அற்பமாக ஆரம்பித்து, சத்தியத்திற்கும் நீதிக்கும் மகிமை யான வெற்றி கிடைக்க வைப்பதே தேவனுடைய வழி . சில சமயங் களில், தம் ஊழியர்களுக்கு ஏமாற்றத்தையும் வெளிப்படையான தோல்வியையும் தந்து, அவர்களுக்குப் பயிற்சி தருகிறார். இன் னல்களை அடக்கியாள அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென் பதே அவர் நோக்கமாகும்.தீஇவ 595.1
மனிதர்கள் பெரும்பாலும் தங்களுக்கு நேரிடும் குழப்பங்களா லும் தடைகளாலும் தடுமாறி விழும்படி சோதிக்கப்படுகிறார்கள். ஆனால், ஆரம்பத்தில் தங்களுக்கு இருந்த நம்பிக்கையை முடிவு மட்டும் உறுதியோடு காத்துக்கொள்வார்களானால், தேவன் அவர் கள் பாதையைச் சரிசெய்துவிடுவார். இன்னல்களுக்கு எதிராக அவர் கள் போராடும் வேளையில் அவர்களுக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும். அஞ்சா நெஞ்சமும், அசையா விசுவாசமும் கொண்ட ஒரு செருபாபேலுக்கு முன்பாக, பெரும் பர்வதங்கள் போன்ற இன்னலும் சமவெளியாகிவிடும். ‘’அவருடைய கரங்கள் அதற்கு அஸ்திபாரம் போட்டது போல, அதை அவருடைய கைகளே முடித்துத் தீர்க்கும்” என்கிறது வேதாகமம். ‘தலைக்கல்லை அவன் கொண்டு வருவான். அதற்குக் கிருபையுண்டாவதாக’‘ என்று ஆர்ப்ப ரிப்பார்கள்.’ சகரியா 4:9,7.தீஇவ 595.2
மனித வல்லமையோ மனித பராக்கிரமமோ தேவசபையை நிறுவவில்லை; அவை அதனை அழிப்பதுமில்லை. மனித பெலம் எனும் கன்மலையின் மேல் அல்ல, காலங்களின் கன்மலையாகிய கிறிஸ்தேசுவின் மேல் தான் சபை நிறுவப்பட்டுள்ளது. அதனால் ’பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. ‘மத்தேயு 16:18. தேவனுடைய பிரசன்னமே அவருக்கான வேலைகளை நிலைப்படுத்துகிறது. ‘பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில் லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்’ என்பதே நமக்கு அவர் கொடுக்கிற வார்த்தை . சங்கீதம் 146:3. அமரிக்கையும் நம்பிக்கை யுமே உங்கள் பெலனாயிருக்கும்’ என்றும் சொல்கிறார். ஏசா 30:15. நீதியின் நித்திய நியதிகளை அடித்தளமாகக் கொண்டுள்ளதால், தேவனுடைய மகிமையான கிரியைகள் ஒருபோதும் அபத்தமாவ தில்லை. ‘பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, அவருடைய ஆவியினாலேயே ‘ தேவசெயல் பெலத்தின்மேல் பெலம் அடையும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்கிறார். சகரியா4:6.தீஇவ 595.3
’செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்’ என்று தேவன் சொன்ன வாக்குத்தத்தம் அவர் சொன்னபடியே நிறைவேறியது. வசனம் 9. ‘அப்படியே யூதரின் மூப்பர் கட்டினார்கள்; தீர்க்கதரி சியாகிய ஆகாயும் இத்தோவின் குமாரனாகிய சகரியாவும் தீர்க்க தரிசனம் சொல்லிவந்தபடியினால் அவர்களுடைய காரியம் கை கூடிவந்தது; அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைப்படி யேயும், கோரேஸ், தரியு, பெர்சியாவின் ராஜாவாகிய அர்த்தசஷ்டா என்பவர்களுடைய கட்டளைப்படியேயும் அதைக் கட்டி முடித்தார் கள். ராஜாவாகிய தரியு அரசாளுகிற ஆறாம் வருஷம் ஆதார் என் னும் மாதம் மூன்றாந்தேதியிலே அந்த ஆலயம் கட்டிமுடிந்தது.’ எஸ்றா 6:14, 15.தீஇவ 596.1
மீண்டும் கட்டப்பட்ட ஆலயம் பிரதிஷ்டை பண்ணப்பட்டபின் சில நாட்களில், ‘இஸ்ரவேல் புத்திரரும், ஆசாரியரும், லேவியரும், சிறையிருப்பிலிருந்து வந்த மற்றவர்களும், தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையைச் சந்தோஷமாய்க் கொண்டாடினார்கள். முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே பஸ்காவையும் ஆசரித்தார்கள். வச 16, 17, 19.தீஇவ 596.2
முதலாம் ஆலயத்தின் மாட்சிமைக்கு நிகரானதாக இரண்டாம் ஆலயம் இல்லை; முதல் ஆலயத்தில் காணப்பட்ட தெய்வீக பிரசன் னத்திற்கான கண்கூடான அடையாளங்களால் இரண்டாம் ஆலயம் மகிமைப்பட்டிருக்கவுமில்லை. அதன் பிரதிஷ்டையை அலங்கரிக் கும்படி தேவவல்லமை எதுவும் வெளிப்படவில்லை. புதிதாகக் கட்டப்பட்டிருந்த ஆசரிப்பு ஸ்தலத்தை நிரப்ப, மகிமையின் மேகம் இல்லை. பலிபீடத்தின்மேல் பலியைப் பட்சிக்க வானத்திலிருந்து அக்கினி வரவில்லை. மகா பரிசுத்த ஸ்தலத்தில் கேருபீன்களின் நடுவில் ஷெக்கைனா இல்லை; உடன்படிக்கைப் பெட்டியும் கிரு பாசனமும் சாட்சிப்பலகைகளும் அங்கு இல்லை. அங்கு வேண்டிக் கொண்ட ஆசாரியனுக்கு வானத்திலிருந்து அடையாளம் எதுவும் உண்டாகி, யேகோவாவின் சித்தத்தை தெரியப்படுத்தவில்லை.தீஇவ 596.3
ஆனாலும், அந்த ஆலயத்தைக் குறித்துத்தான் தம் தீர்க்கதரிசி யாகிய ஆகாய் மூலம் கர்த்தர் இப்படியாக அறிவித்தார். ‘முந்தின ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும். ‘’சகல ஜாதிகளையும் அசையப்பண்ணு வேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார்; இந்த ஆல யத்தைமகிமையினால் நிறையப் பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.’ ஆகாய் 2:9,7. ஆகாய் தீர்க்கதரிசிக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் எவ்வகையில் நிறைவேறியது என்பதைக் காட்ட பல நூற்றாண்டுகளாகக் கல்விமான்கள் பெரிதும் முயன்றார்கள்; ஆனாலும், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்ட வரான, நாசரேத்தின் இயேசு வந்தபோது, அவர் தம் தனிப்பட்ட பிரசன்னத்தால் ஆலயப்பிராகாரங்களைப் பரிசுத்தப் படுத்திய போது, அதில் எவ்விதத் தனிப்பட்ட முக்கியத்துவத்தையும் காண அநேகர் உறுதியாக மறுத்துவிட்டனர். தீர்க்கதரிசியினுடைய வார்த்தைகளின் மெய் அர்த்தத்தைக் காணாதபடி, பெருமையும் அவநம்பிக்கையும் அவர்களுடைய உள்ளங்களைக் குருடாக்கி விட்டன.தீஇவ 597.1
யேகோவாவினுடைய மகிமையின் மேகத்தினால் அல்ல, ‘மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனால், ‘தேவத்துவத்தின் பரிபூரண மெல்லாம் சரீரப்பிரகாரமாக வாசமாயிருந்த ஒருவரின் பிரசன்னத் தால்தான் இரண்டாம் ஆலயம் கனம் பெற்றது. கொலோ 2:9; 1தீமோ 3:16. கிறிஸ்துவின் பூலோக ஊழியக்காலத்தில், அவரு டைய தனிப்பட்ட பிரசன்னம் கனப்படுத்தியதால்தான் இரண்டாம் ஆலயமானது முதலாவது ஆலயத்தைவிட மகிமையில் பெரியதா யிருந்தது. அந்த ஆலயத்தில் நாசரேத்தின் மாமனிதர் போதித்த தன் மூலம், அதன் பரிசுத்தப்பிரகாரங்களில் நோயாளிகளை அவர் குணமாக்கியதன் மூலம், ‘சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர்’ மெய்யாகவே தம் ஆலயத்திற்கு வந்தார்.தீஇவ 597.2