Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    50 - வேதபாரகனான ஆசாரியன்

    செருபாபேல் மற்றும் யோசுவாவின்கீழ் முதல் கூட்டத்தார் எருசலேமிற்குத் திரும்பிச் சென்று, கிட்டத்தட்ட எழுபது ஆண்டு கள் நிறைவேறியிருந்த நிலையில், மோதிய - பெர்சியாவின் அரசனா னான் அர்தசஷ்டாலாங்கிமேனஸ். தொடர்ச்சியான தெய்வ செயல் களோடு சம்பந்தப்படுத்தப்பட்டு, வேத வரலாற்றில் பேசப்பட்டுள் ளான் இவன். எஸ்றாவும் நெகேமியாவும் வாழ்ந்ததும் பிரயாசப் பட்டதும் இவனுடைய ஆட்சிக்காலத்தில்தான். எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுவதற்கான மூன்றாம் மற்றும் கடைசிக் கட்டளையை கி.மு. 457 இல் பிறப்பித்தது இவன்தான். எஸ்றாவின் தலைமையின் கீழ் ஒரு கூட்ட யூதர்கள் திரும்பிச் சென்றதையும், நெகேமியா மற்றும் அவனுடைய கூட்டாளிகளால் எருசலேமின் மதில்கள் கட்டிமுடிக்கப் பட்டதையும், எஸ்றா மற்றும் நெகேமியாவால் ஏற்படுத்தப்பட்ட பெரும் மதப்புரட்சியையும் அவர் ஆட்சி கண்டது. தன் நீண்ட ஆட்சிக்காலத்தில், தேவ மக்களுக்குப் பெரும்பாலும் தயவு காட்டி னான். தனக்குப் பிரியமான, நம்பிக்கைக்குப் பாத்திரமான யூத நண்பர்களாகிய எஸ்றா மற்றும் நெகேமியாவில், விசேஷித்த ஒரு பணிக்காக தேவனால் நியமிக்கப்பட்ட, எழுப்பப்பட்ட மனிதர் களைக் கண்டான்.தீஇவ 607.1

    பாபிலோனிலிருந்த யூதர்மத்தியில் வாழ்ந்துவந்த எஸ்றாவின் அனுபவம் தனித்தன்மை பெற்றிருந்தது. அதுதான், ராஜாவாகிய அர்தசஷ்டாவின் கவனத்தை ஈர்த்தது. அந்த ராஜாவோடுதான், பரலோக தேவனின் வல்லமை குறித்தும், யூதர்களை எருசலே முக்குத் திரும்பக் கொண்டுசெல்வதில் தேவநோக்கம் குறித்தும் பய மின்றி அவன் பேசினான்.தீஇவ 608.1

    ஆரோனுடைய குமாரரின் வழியில் பிறந்த எஸ்றா ஆசாரியப் பயிற்சி பெற்றிருந்தான். இதுபோக, மேதிய-பெர்சிய ராஜ்யத்தின் ஞானிகள், வான சாஸ்திரிகள் மற்றும் மந்திரவாதிகளின் எழுத்துக் களிலும் அவன் தேறினவனாயிருந்தான். ஆனாலும் தன் ஆவிக் குரிய நிலையில் அவன் திருப்தியடையவில்லை; தேவசித்தத்தை நிறைவேற்றுவதற்கான ஞானத்திற்காக ஏங்கினான்; தேவனோடு முற்றிலும் இசைந்திருக்க நாடினான். ஆகவே, ‘கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தினான்’’. எஸ்றா 7:10. இராஜாக்கள் மற்றும் தீர்க்க தரிசிகளின் ஆகமங்களில் பதிவுசெய்யப்பட்டிருந்த, தேவ மக் களின் வரலாற்றைக் கருத்தூன்றிப்படிக்க அது அவனை வழிநடத் தியது. எருசலேம் அழிந்துபோக தேவன் அனுமதித்ததற்கும், அவ ருடைய மக்கள் அஞ்ஞான தேசத்திற்குச் சிறைப்பட்டு சென்றதற் கும் காரணமறிய வேதாகமத்தின் வரலாற்று ஆகமங்களையும் கவிதை ஆகமங்களையும் அவன் ஆராய்ந்தான்.தீஇவ 608.2

    ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது முதல் இஸ்ர வேலுக்கு ஏற்பட்டிருந்த அனுபவங்களில் அவன் விசேஷித்த கவ னம் செலுத்தினான். சீனாய் மலையிலும், வனாந்தரத்தின் நீண்ட கால அலைச்சலின்போதும் கொடுக்கப்பட்ட போதனைகளைப் படித் தான். தேவன் தம் பிள்ளைகளை அணுகினவிதம் குறித்து அதிகதிக மாகப் படித்து, சீனாய் மலையில் கொடுக்கப்பட்ட பிரமாணத்தின் பரிசுத்தத் தன்மையை அறிந்தபோது, எஸ்றாவின் உள்ளம் பரவச மடைந்தது. புதிதான, முழுமையான மனமாற்றத்தின் அனுபவத்தைப் பெற்றான். தன்னுடைய வேத அறிவைப் பயன்படுத்தி, தன் மக் களுக்கு ஆசீர்வாதத்தையும் வெளிச்சத்தையும் கொண்டுவரும் படி, வேத வரலாற்றுப் பதிவுகளைக் கற்றுத்தேறத் தீர்மானித்தான்.தீஇவ 608.3

    தனக்கு முன்னிருப்பதாகத் தான் கண்ட பணிக்கான மனப் பக்குவத்தைப் பெற பெரிதும் முயன்றான் எஸ்றா. இஸ்ரவேலின் ஞானமுள்ளபோதகனாகத் திகழ, தேவனை ஊக்கமுடன் தேடினான். தன்னுடைய மனதையும் சித்தத்தையும் தேவனுடைய கட்டுப்பாட்டிற் குள் ஒப்புக்கொடுக்கக் கற்றுக்கொண்டதால், மெய்யான பரிசுத்தத் தின் நியதிகள் அவனுடைய வாழ்வில் காணப்பட ஆரம்பித்தன. அது பின்னான நாட்களில், அவனுடைய போதகத்தை நாடினவாலி பர்களிடம் மாத்திரமல்ல; அவனோடு பழகின் அனைவரிடமும் சீர் திருத்தத்திற்கு ஏதுவான செல்வாக்கை ஏற்படுத்தியது.தீஇவ 608.4

    ஆசாரியத்துவத்திற்குக் கனம் ஏறெடுக்கும் படியும் இஸ்ர வேலுக்கு நன்மையுண்டாகும்படியும் எஸ்றாவை ஒரு கருவியாகத் தெரிந்துகொண்டார்தேவன். ஏனெனில், சிறையிருப்பின் நாட்களில் அதன் மகிமை பெரிதும் மங்கியிருந்தது. கல்வியறிவில் மிகவும் தேறின ஒரு மனிதனாகவும், மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாகவும்’ எஸ்றா மாறியிருந்தார். வசம். இந்தத் தகுதிகள், மேதிய-பெர்சிய ராஜ்யத்தில் அவரை ஒரு தலைசிறந்த மனிதனாக விளங்கப்பண்ணின.தீஇவ 609.1

    பரலோகத்தை ஆளும் நியதிகளைத் தன்னைச் சுற்றிலுமுள் ளோருக்குப் போதித்து, தேவனுடைய வாய்க்கருவியாக விளங்கி னான் எஸ்றா . தன்னுடைய மீதமான நாட்களில் எல்லாம், அதாவது, மேதிய - பெர்சிய ராஜாவின் அரசவையிலும் அல்லது எருசலேமி லும், போதகப் பணியையே முதன்மையாகக் கொண்டிருந்தான். தான் கற்ற சத்தியங்களைப் பிறரோடு பகிர்ந்துகொண்டபோது, அவனுடைய பணித்திறன் அதிகரித்தது. பயபக்தியும் உற்சாகமும் கொண்ட மனிதனாக மாறினான். அனுதின வாழ்வை மேம்படுத்த வல்லவேதாகமச் சத்தியத்தின் வல்லமையை உலகிற்குச் சொல்லும் தேவனுடைய சாட்சியாக அவன் இருந்தான்.தீஇவ 609.2

    வேத எழுத்துகளைப் பெருக்கவும் பாதுகாக்கவும் அர்ப்பணிக் கப்பட்டிருந்த எஸ்றாவின் வாழ்க்கைப்பணியும், கடும் உழைப்பும், வேதவாக்கியங்களை ஆராய்வதில் ஓர் எழுப்புதலை ஏற்படுத்த வேண்டுமென்ற அவனுடைய முயற்சிகளை நிலைபேறுகொள்ளச் செய்தான். தனக்குக் கிடைத்தவரையிலும், பிரமாணத்தின் சகல நகல்களையும் அவன் சேகரித்து, அவற்றை நகலெடுத்து, விநியோ கித்தான். அவ்வாறு பிரதியெடுக்கப்பட்டு, அநேகரின் கரங்களில் கிடைத்த அந்தப் பரிசுத்த வார்த்தை, விலைமதிப்பற்ற அறிவைக் கொடுத்தது.தீஇவ 609.3

    தம் மக்களுக்காக தேவன் வல்லமையாகக் கிரியை செய்வார் என்பதில் எஸ்றா வைத்திருந்த விசுவாசம்தான், தேவ வார்த்தை யைப் படிப்பதில் ஓர் எழுப்புதலை உண்டாக்கும்படி எருசலேமிற்குத் திரும்பிச் செல்லவும், பரிசுத்த நகரத்தை மீண்டும் கட்டுவதில் தன் சகோதரருக்கு உதவவும், தான் விரும்பினதை அர்தசஷ்டாவிடம் சொல்லவும் அவனை வழிநடத்தியது. தம் மக்களை முற்று முடியப் பாதுகாத்து, பராமரிக்கக் கூடிய ஒருவனாக இஸ்ரவேலின் தேவன் மேல் தனக்கிருந்த பூரண நம்பிக்கையை எஸ்றா வெளிப்படுத்திய போதுதான் ராஜா மிகவும் அசைக்கப்பட்டான். யேகோவாவைத் தொழுதுகொள்ளவே இஸ்ரவேலர் எருசலேமிற்குச் செல்கிறார்கள் என்பதை நன்றாகப் புரிந்துகொண்டான். எஸ்றாவின் நேர்மையில் ராஜா அதிக நம்பிக்கை வைத்திருந்தான். எனவே, அவன்மேல் விசேஷித்த தயவுகாட்டினான்; அவனுடைய வேண்டுதலுக்குச் செவி கொடுத்தான்; ஆலய ஆராதனைகளுக்காக விலையுயர்ந்த வெகு மதிகளை அவனுக்கு வாரி வழங்கினான். மேதிய - பெர்சிய ராஜ்யத் தின் சிறப்புப் பிரதிநிதியாக அவனை நியமித்தான்; தன் இருதயத்தின் நோக்கங்களை நிறைவேற்றும்படி, பெரும் அதிகாரங்களை அவ னுக்குக் கொடுத்தான்.தீஇவ 610.1

    எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்ட அர்தசஷ்டாலாங்கி மேனஸ் பிறப்பித்த கட்டளையானது, எழுபது வருடச் சிறையிருப்பு முடிந்தபிறகு போடப்பட்ட கட்டளைகளில் மூன்றாவது கட்டளையா கும். பரலோக தேவனைப்பற்றி அக்கட்டளைகளில் சொல்லப்பட் டுள்ளதும், எஸ்றாவின் சாதனைகள் மற்றும் தேவனுடைய மீதமான மக்களுக்குத் தாராளமாகக் கொடுக்கப்பட்ட வெகுமதிகள்பற்றி அங்கீகரித்து அதில் பேசப்பட்டுள்ளதும் அதில் குறிப்பிடத்தக்கக் காரியங்களாகும். ‘கர்த்தருடைய கற்பனைகளின் வார்த்தைகளிலும் அவர் இஸ்ரவேலுக்குக்கொடுத்த கட்டளைகளிலும் படித்துத்தேறின வேதபாரகனாகிய... ஆசாரியன்’, ‘பரலோகத்தின் தேவனுடைய உத்தம் வேதபாரகன்’ என்று எஸ்றாவைக் குறிப்பிடுகிறான் அந்த சஷ்டா. ‘எருசலேமில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனுக்கு’ மனப்பூர்வமாய்க் கொடுக்க, தன் மந்திரிமார்களோடு ராஜாவும் சேர்ந்துகொண்டான். அதுபோக, அதிகமாகிற செலவுக்கான பணத்தை, ‘ராஜாவின் கஜானாவிலிருந்து’ கொடுக்கவும் கட்டளை யிட்டான். வச 11, 12, 15, 20.தீஇவ 610.2

    ’’நீ உன் கையிலிருக்கிற உன் தேவனுடைய நியாயப்பிரமாணத் தின்படி, யூதாவையும் எருசலேமையும் விசாரித்து நடத்து’‘ என்று எஸ்றாவிடம் சொன்னான் அர்தசஷ்டா . மேலும், ‘’பரலோகத்தின் தேவனுடைய கற்பனையின்படியே, எது தேவையாயிருக்குமோ அதுவெல்லாம் பரலோகத்தின் தேவனுடைய ஆலயத்திற்கு ஜாக் கிரதையாய்ச் செலுத்தப்படவும் வேண்டும்; ராஜாவும் அவர் குமா ரரும் ஆளும் ராஜ்யத்தின்மேல் கடுங்கோபம் வருவானேன்” என் றும் அவன் கட்டளையிட்டான். வச 14, 23.தீஇவ 610.3

    இஸ்ரவேலர் திரும்பிச் செல்ல அவர்களுக்கு அனுமதியளித்து, ஆசாரியர்கள் தங்கள் முற்காலச் சம்பிரதாயங்களுக்கும் சிலாக் கியங்களுக்கும் உரியவர்களாவதற்கு ஏற்பாடு செய்தான். ‘’பின் னும் ஆசாரியரும், லேவியரும், பாடகரும், வாசல் காவலாளரும், நிதனீமியரும், தேவனுடைய ஆலயத்தின் பணிவிடைக்காரருமான ஒருவன் மேலும் பகுதியாகிலும் தீர்வையாகிலும் ஆயமாகிலும் சுமத்தலாகாதென்று அவர்களைக் குறித்து உங்களுக்கு அறியப் படுத்துகிறோம்” என்றான். மேலும், யூதசட்ட ஒழுங்கின்படி மக் களை நீதியாக நியாயந்தீர்க்க அதிகாரிகளை நியமிக்கவும் ஏற்பாடு செய்தான். பின்னும் நதிக்கு அப்புறத்திலிருந்து உன் தேவனுடைய நியாயப்பிரமாணங்களை அறிந்த சகல ஜனங்களையும் நியாயம் விசாரிக்கத்தக்க துரைகளையும், நியாயாதிபதிகளையும், எஸ்றா வாகிய நீ உன்னிலுள்ள உன் தேவனுடைய ஞானத்தின்படியே ஏற் படுத்துவாயாக; அந்தப் பிரமாணங்களை அறியாதவர்களுக்கு அவைகளை உபதேசிக்கவுங்கடவாய். உன் தேவனுடைய நியா யப்பிரமாணத்தின்படியேயும், ராஜாவினுடைய நியாயப்பிரமாணத் தின்படியேயும் செய்யாதவனெவனும் உடனே மரணத்துக்காகிலும், தேசத்துக்குப் புறம்பாக்குதலுக்காகிலும், அபராதத்துக்காகிலும், காவலுக்காகிலும் தீர்க்கப்பட்டுத் தண்டிக்கப்படக்கடவன்” என்று கட்டளையிட்டான். எஸ்றா 7:24-26.தீஇவ 611.1

    மேதிய - பெர்சிய ராஜ்யத்தில் “எருசலேமுக்குப்போக மனப் பூர்வமாய் இருந்த “இஸ்ரவேலர் மக்கள் அனைவரையும், ஆசாரி யரையும் லேவியரையும் திரும்ப அனுப்பிவைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு அர்தசஷ்டாவிடம் வலியுறுத்தினான் எஸ்றா. ஏனெனில், ‘தேவனுடைய தயவுள்ளகரம்’ அவன் மேலிருந் தது. எஸ்றா 7:13, 9. தங்கள் உடைமைகளோடு தங்கள் தேசத் திற்குத் திரும்பிச் செல்வதற்கான தருணம் அங்குச் சிதறுண்டிருந்த இஸ்ரவேல் புத்திரருக்கு மீண்டுமாகக் கொடுக்கப்பட்டது. இஸ்ர வேல் வீட்டாருக்குக் கொடுக்கப்பட்டிருந்த வாக்குத்தத்தமும் அதுவே. தேவன் தம் மக்களைக்குறித்துக்கொண்டிருந்த நோக்கங் களை எஸ்றாவோடு இணைந்து ஆராய்ந்தவர்களுக்கு அந்தக் கட்டளை மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டுவந்தது. ‘’எருசலே மிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தை அலங்கரிக்க, இப்படிப்பட்ட யோசனையை ராஜாவின் இருதயத்தில் அருளி, ராஜாவுக்கும் அவருடைய மந்திரி மார்களுக்கும் ராஜாவின் கைக்குள்ளான பலத்த எல்லா மகா பிரபுக்களுக்கும் முன்பாக எனக்குத் தயவு கிடைக்கப் பண்ணின எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அப்படியே என் தேவனாகிய கர்த்தருடைய கரம் என் மேல் இருந்ததினால் நான் திடன்கொண்டு, இஸ்ரவேலில் சில தலைவரை என்னோடேகூட வரும்படிச் சேர்த்துக்கொண்டேன்’‘ என்றான் எஸ்றா . வசனங்கள் 27, 28.தீஇவ 611.2

    அர்தசஷ்டாவால் பிறப்பிக்கப்பட்ட அந்தக் கட்டளையில், தேவசெயல் வெளிப்பட்டது. இதைக் கண்டுணர்ந்த சிலர், மிகவும் வாய்ப்பான அந்தச் சூழ்நிலையில், தாங்கள் திரும்பிச் செல்லக் கிடைத்த சிலாக்கியத்தைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட னர். அவர்கள் எந்த இடத்தில் ஒன்றுகூட வேண்டுமென அறிவிக் கப்பட்டது; எருசலேமிற்குச் செல்லவாஞ்சித்தவர்கள், தங்கள் நீண்ட தூரப் பயணத்திற்காக, குறிக்கப்பட்டிருந்த நாளில் அங்கு கூடினார் கள். இவர்களை நான் அகாவாவுக்கு ஓடுகிற நதியண்டையிலே கூட்டிக்கொண்டுபோனேன்; அங்கே மூன்று நாள் தங்கியிருந்தோம்” என்கிறான் எஸ்றா. எஸ்றா 8:15.தீஇவ 612.1

    ’ஏராளமானவர்கள் எருசலேமிற்குத் திரும்பி வருவார்கள்’ என்று எதிர்பார்த்திருந்தான் எஸ்றா. ஆனால், அவன் வருத்தப்படும் வகையில் அந்த அழைப்புக்கு இணங்கினவர்கள் வெகு சிலராய் இருந்தனர். வீடுகளையும் நிலங்களையும் பெற்றிருந்த அநேகர், தங்கள் உடைமைகளைவிட்டுவிட்டு எருசலேமுக்குவர மனதில்லா திருந்தார்கள். அவர்கள் சொகுசையும் சுகத்தையும் விரும்பி னார்கள்; அங்கேயே தங்குவதில் திருப்திகண்டனர். விசுவாசத்தோடு கிளம்பிச் சென்றவர்களுடன் தங்களையும் இணைத்துக்கொள்ளத் தெரிந்துகொண்ட மற்றவர்களுக்கு அவர்களின் செயல் ஒரு தடை யாக விளங்கியது.தீஇவ 612.2

    கூடி நின்ற கூட்டத்தாரைப் பார்த்தபோது, லேவி புத்திரரில் ஒரு வர்கூட அங்கு இல்லாததைக் கண்டு எஸ்றா ஆச்சரியமடைந்தான். ஆலயத்தின் பரிசுத்த சேவைக்காகப் பிரித்தெடுக்கப்பட்டிருந்த கோத் திரத்தார் எங்கே? அழைக்கப்பட்டபோது, தேவனுடைய பக்கத்தில் நின்றவர் யார்? அந்த அழைப்புக்கு லேவியர்கள்தாம் முதலில் செவி கொடுத்திருக்க வேண்டும். சிறையிருப்பின் போதும், அதன் பிற கும் அநேக சிலாக்கியங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. சிறையிருப்பிலிருந்த தங்கள் சகோதரரின் ஆவிக்குரிய தேவை களைச் சந்திக்க, தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த முழுச் சுதந்திரத் தையும் அவர்கள் அனுபவித்தார்கள். அங்குத் தேவாலயங்கள் கட்டப்பட்டன; அதில் ஆசாரியர்கள் தேவனுக்கு ஆராதனை நடத்தி, மக்களுக்கும் போதித்தார்கள். யூத விசுவாசத்தில் மிக முக்கிய மான, ஓய்வுநாளைக்கைக் கொள்ளவும், புனிதச் சடங்குகளை நிறை வேற்றவும் தாராளமாக அனுமதி கிடைத்தது.தீஇவ 612.3

    ஆனால், சிறையிருப்பு முடிவுக்கு வந்து, அநேக வருடங்கள் கடந்ததும், நிலைமை மாறியது; இஸ்ரவேலின் தலைவர்கள் தங் கள்மேல் அநேக பொறுப்புகளைச் சுமக்க வேண்டியிருந்தது. எருச லேமின் தேவாலயம் மீண்டும் கட்டப்பட்டு, பிரதிஷ்டை பண்ணப் பட்டிருந்தது. அதன் ஆராதனை முறைமைகளைக் கவனிக்க அநேக ஆசாரியர்கள் தேவைப்பட்டார்கள். தேவ ஜனங்களுக்குப் போத கம்பண்ண அநேகர் தேவைப்பட்டார்கள். அதுபோக, பாபிலோ னிலேயே தங்கியிருந்த யூதர்களின் மத உரிமை நசுக்கப்படுவதற் கான ஆபத்தும் இருந்தது. சகரியா தீர்க்கதரிசியின் மூலமாகவும், எஸ்தர் மற்றும் மொர்தெகாய் காலத்தில் சமீபத்தில் தங்களுக்கு ஏற்ப பட்டிருந்த அனுபவத்தின் மூலமாகவும், மேதிய - பெர்சியாவிலிருந்த யூதர்கள் தங்கள் சொந்த தேசத்திற்குத் திரும்பிச் செல்லுமாறு தெளி வாக எச்சரிக்கப்பட்டனர். புறஜாதியாரின் செல்வாக்குகளுக்கு மத்தியில் அதற்கு மேலும் தங்கியிருப்பது அவர்களுக்கு ஆபத்தா கும் காலம் வந்திருந்தது. இப்படியாக நிலைமை மாறினதைக் கருத் தில் கொண்டு, அங்குப் பிறப்பிக்கப் பட்டிருந்த கட்டளையில் எருச லேமிற்குத் திரும்பிச் செல்ல ஒரு விசேஷித்த அழைப்பு கொடுக் கப்பட்டிருந்ததை ஆசாரியர்கள் விரைவிலேயே கண்டுணர்ந்திருக்க வேண்டும்.தீஇவ 614.1

    அவர்கள் திரும்பிச் செல்வதற்கான வழியை ஏற்படுத்தியதில் ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் தங்களுக்கு இயன்றதைவிட அதிகமானதைச் செய்திருந்தார்கள். ஏராளமான வழிவகைளை அவர்கள் உண்டு பண்ணியிருக்க, ஆட்கள் எங்கே? லேவிபுத்திரர் தங்கள் சகோதரருடன் சேர்ந்து செல்லத் தீர்மானித்திருந்தால், மற்ற வர்களும் அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றும்படி மற்ற வர்களை வழிநடத்தியிருக்கலாம். ஆனால், அதில் அவர்கள் தோற்றுப்போனார்கள். தேவன், தம் மக்களைக் குறித்துக் கொண் டிருந்த நோக்கத்தில் பாபிலோனின் இஸ்ரவேலரிடம் காணப்பட்ட அலட்சிய மனநிலையானது அவர்களின் புதிரான போக்கையும் வருத்தகரமான நிலையையும் வெளிப்படுத்தியது.தீஇவ 614.2

    தன்னுடன் இருந்தவர்களோடு வந்து சேருமாறு லேவியருக்கு மீண்டும் ஓர் அழைப்பனுப்பி, வேண்டிக்கொண்டான் எஸ்றா . அதற்கு அவர்கள் உடனே செவிகொடுக்க வலியுறுத்தும்படி, தன் வேண்டுகோள் கடிதத்தோடு ‘தலைவரிலும் ‘’புத்திமான்களிலும் ‘ அநேகரை அனுப்பிவைத்தான். எஸ்றா 7:28; 8:16.தீஇவ 614.3

    பயணத்திற்கு ஆயத்தமாயிருந்தோர் எஸ்றாவோடு தங்கி யிருந்த வேளையில், இந்த உண்மை ஊழியர்கள் தேவனுடைய ஆலயத்துப் பணிவிடைக்காரரை அழைத்துவரும்படி வேகமாகத் திரும்பிச் சென்றனர். எஸ்றா 8:17. அந்த வேண்டுகோளுக்கு மக் கள் செவிகொடுத்தனர். பின்தங்கியிருந்த சிலர், தாங்களும் எருச லேமிற்குச் செல்ல இறுதியாகத் தீர்மானித்தனர். மொத்தத்தில், ஆசாரியர்கள் நாற்பது பேரும், நிதனீமியரில் இருநூற்று இருபது பேரும் எஸ்றாவோடு இணைந்தனர். எஸ்றா இவர்களை ஞான முள்ள பணிவிடைக்காரர்களாகவும், நல்ல போதகர்களாகவும் ஏற் படுத்த ஏதுவானவர்களாயிருந்தார்கள்.தீஇவ 615.1

    இப்பொழுது அனைவரும் புறப்படத் தயாரானார்கள். பல மாதங்கள் ஆகக்கூடிய ஒரு நெடிய பயணத்திற்கு அவர்கள் ஆயத்த மானார்கள். ஆலயத்திற்கும் அதன் ஆராதனைப் பணிக்கும் தேவை யான் பெரும் பொக்கிஷம் போக, தங்கள் மனைவிகளையும் பிள் ளைகளையும் அவர்கள் தங்களோடு கூட்டிச் சென்றனர். தன்னை யும் தன் கூட்டத்தாரையும் கொள்ளையிட்டு அழிக்க, வழியில் எதிரி கள் ஆயத்தமாயிருந்ததை எஸ்றா அறிந்திருந்தார். ஆனாலும் தங் கள் பாதுகாப்பிற்காக, ஆயுதமேந்திய படை எதையும் ராஜாவிடம் அவன் வேண்டிக்கொள்ளவில்லை. ‘’வழியிலே சத்துருவை விலக்கி, எங்களுக்குத் துணை செய்யும்படிக்கு, நான் ராஜாவினிடத்தில் சேவ கரையும் குதிரை வீரரையும் கேட்க வெட்கப்பட்டிருந்தேன்; எங்கள் தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார் மேலும் அவர் களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரை விட்டு விலகுகிறவர்கள் எல்லார் மேலும் இருக்கிறதென்றும், நாங்கள் ராஜாவுக்குச் சொல்லியிருந் தோம்’‘ என்று அதற்கு விளக்கமளித்தான். வசு 22.தீஇவ 615.2

    இந்தக் காரியத்தில், யூதரல்லாதோருக்கு முன்பாகத் தேவ நாமத்தை மகிமைப்படுத்த ஒரு தருணம் கிடைத்ததை எஸ்றாவும் அவனுடைய கூட்டாளிகளும் கண்டனர். தங்களை வழிநடத்தும் தேவன்மேல் முழு விசுவாசத்தை இஸ்ரவேலர் இப்போது வெளிப் படுத்துவதால், ஜீவனுள்ள தேவனுடைய வல்லமையில் அவர்களின் விசுவாசம் பெலப்படுவதற்கு ஏதுவாயிருந்தது. ஆகவே அவர் மேல் முற்றிலும் நம்பிக்கை வைக்க அவர்கள் தீர்மானித்தனர். படை வீரர்களின் காவலை அவர்கள் கேட்க விரும்பவில்லை. தேவனுக்கு மாத்திரமே சொந்தமான மகிமையை மனித பெலத்திற்கு உரியதாகக் கருதக்கூடும் வாய்ப்பு எதையும் யூதரல்லாதோருக்கு அவர்கள் கொடுக்கவில்லை. தேவனுடைய மக்களாகத் தாங்கள் அவரை மனமாரச் சார்ந்திருந்ததில், யூதரல்லாத தங்கள் நண்பர்களின் மனதில் எவ்விதச் சந்தேகத்தையும் உண்டுபண்ண அவர்கள் வாய்ப் பளிக்கவில்லை. செல்வத்தினாலோ அதிகாரத்தினாலோ, தேவனை அறியாத மனிதர்களின் செல்வாக்கினாலோ அல்ல; தேவதய வினால்தான் பெலனடைய முடியும். தேவனுடைய பிரமாணத்தைத் தங்களுக்கு முன்பாகக் காத்துக்கொண்டு, அதற்குக் கீழ்ப்படிய கடி னமாக முயல்வதினால் மாத்திரமே அவர்கள் பாதுகாக்கப்பட முடியும்.தீஇவ 615.3

    ஆசீர்வதிக்கும் தேவகரத்தால் தொடர்ந்து ஆசீர்வதிக்கப்படு வதற்கு அவசியமான இந்த நிபந்தனைகளை அறிந்தவர்களாய், தாங்கள் புறப்படுவதற்குச் சற்று முன்பு எஸ்றாவாலும், விசுவாச உள்ளங் களான அவனுடைய கூட்டாளிகளாலும் ஏறெடுக்கப்பட்ட ஆராதனையில், எப்போதையும்விட மிகுந்த பயபக்தியுடன் அவர் கள் கலந்து கொண்டார்கள். அந்த அனுபவம் பற்றி, ‘’நாங்கள் எங் கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக் காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருள் களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், நான் அங்கே அந்த அகாவா நதியண்டையிலே உபவாசத்தைக் கூறி னேன்.’‘ ‘’அப்படியே நாங்கள் உபவாசம் பண்ணி, எங்கள் தேவனி டத்திலே அதைத் தேடினோம்; எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டரு ளினார்’‘ என்றான் எஸ்றா . வசனங்கள் 21, 23.தீஇவ 616.1

    ஆனாலும், விவேகத்தோடும் முன்னறிவோடும் நடந்துகொள் வதால் தேவ ஆசீர்வாதம் கிடைக்காமல் போவதில்லை. பொக்கி ஷங்களைப் பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நம் பகத்தன்மையும் மெய்ப்பற்றும் உள்ளவர்களாய் விளங்கின் ‘ஆசா ரியரின் தலைவரிலே பன்னிரண்டு பேரைப் பிரித்தெடுத்த எஸ்றா, ‘ராஜாவும், அவனுடைய ஆலோசனைக்காரரும், அவனுடைய பிர புக்களும், அங்கேயிருந்த சகல இஸ்ரவேலரும், தேவனுடைய ஆலயத்துக்கென்று எடுத்துக்கொடுத்த காணிக்கையாகிய வெள்ளி யையும், பொன்னையும், பணிமுட்டுகளையும் அவர்களிடத்தில் நிறுத்துக்கொடுத்தான்.’ எஸ்றா8:25. தங்கள் பொறுப்பில் ஒப்படைக் கப்பட்டிருந்த பொக்கிஷத்தில், விழிப்புள்ள உக்கிராணக்காரர்களா கச் செயல் படும்படி அவர்களுக்கு விசேஷக்கட்டளை வழங்கப்பட் டிருந்தது. ‘’நீங்கள் கர்த்தருக்குப் பரிசுத்தமானவர்கள்; இந்தப் பணி முட்டுகளும், உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தருக்கு மனஉற்சாகமாய்ச் செலுத்தப்பட்ட இந்த வெள்ளியும், இந்தப் பொன் னும் பரிசுத்தமானவைகள். நீங்கள் அதை எருசலேமிலிருக்கிற தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் ஆசாரியர்லேவியருடைய பிரபுக்களுக்கும், இஸ்ரவேலுடைய வம்சத்தலைவர்களுக்கும் முன்பாக நிறுத்து ஒப்புவிக்குமட்டும் விழிப்பாயிருந்து, அதைக் காத்துக்கொள்ளுங்கள்” என்றான் எஸ்றா . வசனங்கள் 24, 25, 28, 29.தீஇவ 616.2

    தேவனுக்குரிய பொக்கிஷத்தைப் பாதுகாத்து எடுத்துச் செல்ல எஸ்றா எடுத்துக்கொண்ட அக்கறையானது, மிகவும் சிந்திக்கத் தூண்டும் ஒரு பாடத்தைப் போதிக்கிறது. நம்பிக்கைக்குப் பாத்திர வான்களென விளங்கினவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்; அவர்கள்மேல் சுமத்தப்பட்ட பொறுப்பு குறித்து அவர்கள் தெளி வாகப் போதிக்கப்பட்டார்கள். தேவனுக்குரிய பொருட்களுக்குப் பொருளாளர்களாகப் பணியாற்ற உண்மையுள்ள அதிகாரிகளை நியமித்ததில், தேவ பணியின் காரியங்களில் ஒழுங்கும் கிரமமும் இருக்கவேண்டியதின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் எஸ்றா உணர்ந்தான்.தீஇவ 617.1

    இஸ்ரவேலர் ஆற்றோரமாகத் தங்கியிருந்த சில நாட்களில், அவர்களின் நீண்ட பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ‘’நாங்கள் எருசலேமுக்குப்போக, முதலாம் மாதம் பன்னிரண்டாந்தேதியிலே, அகாவா நதியைவிட்டுப் பயணம் புறப்பட்டோம்; எங்கள் தேவனுடைய கரம் எங்கள் மேலிருந்து வழியிலே சத்துருவின்கைக்கும், பதிவிருக்கிறவர்களின் கைக்கும் எங்களைத் தப்புவித்தது” என்றான். வச31. நான்கு மாத காலம் அவர் கள் பயணம் செய்தார்கள். எஸ்றாவோடு கூடச் சென்ற அநேகமா யிரம் பேரான கூட்டத்தார், பெண்களும் சிறுவர்களும் உட்பட, மெதுவாகவே பயணப்பட்டனர். ஆனாலும், அவர்கள் அனைவரும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டனர். அவர்களுக்கு ஊறுவிளைவிக்கா தவாறு அவர்களின் சத்துருக்கள் தடுக்கப்பட்டனர். பயணம் வெற்றி கரமாக நிறைவேறியது. ஐந்தாம் மாதம் முதலாம் நாளிலே, அர்த சஷ்டாவின் ஏழாம் வருடத்தில் அவர்கள் எருசலேமை அடைந்தார் கள்.தீஇவ 617.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents