Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    முகவுரை

    ஆன்மிக வரலாற்றைக் கூறுகிற ஐந்து புத்தகங்களில் இரண் டாவது புத்தகம்தான் தீர்க்கதரிசிகள் இராஜாக்கள் வரலாறு. தொடரின் இரண்டாவது புத்தகமாக இது இருந்தாலும், கடைசி யில் எழுதப்பட்டது இதுதான், எலன் ஜி.ஒய்ட் மிகச் சிறந்த புத்தகங்கள் பல எழுதியுள்ளார். அவற்றில் கடைசிப் புத்தகமும் இதுதான், எழுபது ஆண்டுகள் அமெரிக்காவிலும் வெளிநாடு களிலும் இவர் பேசியிருக்கிறார்; எழுதியிருக்கிறார், வரலாற்று நிகழ்ச்சிகளின் உட்கருத்தை விளக்கும் வண்ணமாகவே திருமதி ஒய்ட்டின் எழுத்துகள் இருக்கும். நம் கண்ணால் பார்க்கமுடியாத விதத்தில், நீதிக்கு ஆதரவாக தேவகரமும் தீமைக்கு ஆதரவாக ம கா விரோதியின் செயலும் இருப்பதை மனிதரின் செயல்பாடு களில் நாம் கண்டுகொள்வதற்கு வசதியாக அவற்றை இவர் வெளிப் படுத்துகிறார்.தீஇவ 7.1

    தேவனுடைய வழிநடத்துதல்களைத் தெளிவாகப் புரிந்தி ருக்கிற ஆசிரியர் நமக்காக திரையை விலக்கி. புதிய வரலாற்றுச் சிந்தனையைக் காட்டுகிறார், அதன் மூலம் கடந்தகால நிகழ்ச்சி களின் அர்த்தம் நமக்குப் புரிகிறது. அந்தச் சிந்தனையைப் பற்றி அவரே கூறுவதைப் பார்ப்போம்.தீஇவ 7.2

    தேசங்களின் பெலம் எதில் இருக்கிறது? தனிமனிதர்களின் பெலம் எதில் இருக்கிறது? அவர்களுக்கு இருக்கிற சில வாய்ப்பு களும் வசதிகளும் அவர்களை எவரும் வெல்லமுடியாது எனும் தோற்றத்தை உண்டுபண்ணலாம்; தங்களுடைய மேன்மையைக் குறித்து அவர்கள் தங்களுக்குத் தாங்களே பெருமையடித்துக் கொள்ள லாம்; ஆனால், அவை அல்ல. தேவனுடைய வல்லமையும் தி ட்டமும் மட்டுமே அவர்களை வல்லவராக்கமுடியும்; பெரிய வராக்கமுடியும், தேவதிட்டங்களை நாம் அணுகுகிறவிதத்தின் மூலம் நம் எதிர்காலத்தை நாம் தீர்மானிக்கிறோம்,தீஇவ 7.3

    மனிதனின் சாதனைகளையும், யுத்தத்தில் அவன் பெற்ற வெற்றிகளையும். உலகமேன்மைக்கு அவன் உயர்ந்ததையும் மனித வரலாறு கூறுகிறது. ஆனால், தேவனுடைய பார்வையில் அவன் எப்படி இருக்கிறானென்பதை தேவவரலாறு கூறுகிறது,தீஇவ 8.1

    சாலொமோனுடைய சிறந்த ஆட்சி, ஒன்றாயிருந்த தேசம், மெய்வழிபாட்டுக்கு மையமாக இருந்த யேகோவாவின் ஆலயம் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களுடன் தீர்க்கதரிசிகள், இராஜாக் கள் வரலாறு துவங்குகிறது. தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மெய்த்தேவபற்றுக்கும் பிற தெய்வ சேவைக்குமிடையே ஊசலாடிக் கொண்டிருந்தார்கள். உலக வரலாற்றின் முக்கியமான பகுதி அது. மனிதரின் உள்ளத்தைத் தங்கள் பால் ஈர்ப்பதற்காக கிறிஸ்துவுக் கும் சாத்தானுக்குமிடையே நடக்கிற யுத்தத்திற்கான ஆதாரங் களை இந்தப் புத்தகத்தில் காணலாம்.தீஇவ 8.2

    தனிமனிதர்களைப் பற்றியும் படிக்கிறோம். தனக்கு ஞானம் இருந்தும் மீறுதலில் சிக்கிய சாலொமோன், தன் சுயநலத்தால் தன் ஆட்சிக் காலத்தில் தீய விளைவுகளை ஏற்படுத்திய யெரொ பெயாம், பயமற்ற வல்லவரான எலியா, சமாதானமும் சுகமும் தந்த எலிசா, பயமும் தீமையும் நிறைந்த ஆகாஸ், பற்றும் நல்ம னதும் கொண்டிருந்த எசேக்கியா, தேவனுக்குப் பிரியமான தானியேல், வருத்தத்தின் தீர்க்கதரிசி எரேமியா, சிறையிருப்பு மாறின காலத்தைச் சேர்ந்த தீர்க்கதரிசிகளான ஆகாய், சகரியா, மல்கியா போன்ற பலர் வாழ்க்கையைப் படிக்கிறோம். இவர்கள் எல்லோருக்கும் மேலாக, இப்புத்தகத்தில் மகிமையோடு தெரிய வது தேவனுடைய ஒரே பேறான குமாரனே. தேவாட்டுக் குட்டி இவரே; பலிமுறைகளின் நிறைவேறுதல் இவரே; வரப்போகிற ராஜாவும் இவரே.தீஇவ 8.3

    இந்தப் புத்தக வரிசையில் முதலாவது வருகிற முற்பிதாக் களும் தீர்க்கதரிசிகளும் எனும் புத்தகத்தில் சிருஷ்டிப்புக் கால முதல் தாவீதுவரையுள்ள உலக வரலாற்றைப் பார்க்கிறோம். யுகங்களின் வாஞ்சை எனும் மூன்றாவது புத்தகத்தில் கிறிஸ்துவின் வாழ்க்கையும் ஊழியமும் பற்றி வாசிக்கிறோம். இந்த இரண்டிற் கும் இடையில் தீர்க்கதரிகள் இராஜாக்கள் வரலாறு எனும் இந்தப் புத்தகம் வருகிறது. அப்போஸ்தலருடைய நடபடிகள் எனும் நான்காவது புத்தகத்தில் ஆதிச்சபையின் வரலாற்றைப் பார்க்கிறோம். இன்றுவரை நடந்துவருகிற ஆன்மிகப் போராட் டத்தையும், புதிய பூமிவரை இனி நடக்கப்போகிற காரியங் களைப்பற்றிய தீர்க்கதரிசனங்களையும் மாபெரும் போராட்டம் எனும் ஐந்தாவது புத்தகத்தில் பார்க்கிறோம். தீர்க்கதரிசிகள் இராஜாக்கள் வரலாறு எனும் இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் பல பதிப்புகளைக் கண்டுள்ளது.தீஇவ 8.4

    தேவன்பேரிலும், உலக இரட்சகரான தேவகுமாரன் பேரிலும் நாம் வைத்திருக்கவேண்டிய விசுவாசத்தைப்பற்றிய சிறந்த படிப் பினைகளை இந்தப் புத்தகத்தில் காணலாம். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த பெரிய மனிதர்களின் வாழ்வில் தேவநடத்து தலைப் படிக்கும்பொழுது. நீங்கள் ஆழமான ஆன்மிக அனுபவங் களைப் பெறுவீர்கள்; மனது பிரகாசமடையும். இதுவே எங்கள் விருப்பம்.தீஇவ 9.1

    அறங்காவலர் குழு
    எலன் ஜி.ஒய்ட் வெளியீடுகள்

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents