Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    1 - சாலொமோன்

    தாவீது - சாலொமோன் ஆட்சியில் இஸ்ரவேல் தேசம் ஒருவல் லரசாயிற்று. சத்தியத்திற்கும் நீதிக்கும் சாதகமாகப் பெரிய மாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் இஸ்ரவேலில் இருந்தன. யேகோவாவின் நாமம் உயர்த்தப்பட்டது; அதற்கு மதிப்பும் உண்டாயிற்று. வாக்குத் தத்த தேசத்தில் இஸ்ரவேலர் நாட்டப்பட்டதன் நோக்கம் நிறைவேற இருந்தன; தடைகள் தகர்ந்தன. சத்தியத்தை நாடிவந்த அஞ்ஞான மார்க்கத்தார் மனநிறைவோடு திரும்பிச்சென்றனர்; மனமாற்றங்கள் ஏற்பட்டன. பூமியில் தேவசபை வளர்ந்து, பலத்தது.தீஇவ 25.1

    தாவீது தனது இறுதி நாட்களில், தன் ஆட்சியைத் துறந்து, தன் மகன் சாலொமோனை அபிஷேகம் பண்ணி, அவனை ராஜாவாக அறிவித்தான். சாலொமோனின் ஆரம்பக்காலம் நம்பிக்கை தருவ தாய் இருந்தது. சத்தியத்திற்குப் பாதுகாவலர்களாக இஸ்ரவேலை தேவன் நியமித்திருந்தார். அது நிறைவேற், சாலொமோன் பெலத் தின்மேல் பெலமடைய வேண்டும்; மகிமையின் மேல் மகிமை யடைய வேண்டும்; தேவகுணத்திற்கு ஒத்த குணத்தை அவன் பெற வேண்டும். குடிமக்கள் இதைப் பார்த்து, தங்கள் பரிசுத்தக் கடமை களை நிறைவேற்ற, ஊக்கம் பெறவேண்டும். இதுவே தேவனுடைய திட்டமாய் இருந்தது.தீஇவ 25.2

    இஸ்ரவேலுக்காக தேவன் வைத்திருந்த திட்டம் பெரியது. இஸ்ரவேலை ஆள்பவர்களும் அதன் குடிமக்களும் தங்கள் முன் தேவன்வைத்துள்ள உன்னத தரத்தை அடைய இடைவிடாத விழிப் போடு முயன்றால்தான், தேவனுடைய நோக்கம் நிறைவேறும். இது தாவீதுக்குத் தெரியும். மேலும், அவனுடைய மகன் சாலொ மோனுக்கு தேவன் தந்த பொறுப்பின் மூலம் சாலொமோனை தேவன் கனப்படுத்தியிருந்தார். தேவன் தந்த அந்தப் பொறுப்பை சாலொமோன் நிறைவேற்ற வேண்டுமானால், அவன் சிறந்த வீர னாகவும், ராஜதந்திரியாகவும், அரசனாகவும் இருந்தால் மட்டும் போதாது; மனோபலம் மிக்கவனாகவும், சிறந்த மனிதனாகவும், நீதியைப் போதிக்கிற போதகனாகவும், மெய்ப்பற்றுக்கு இலக்க ணமாகவும் இருக்கவேண்டும்.தீஇவ 26.1

    தாவீது அன்போடு தன் மகனிடம், ‘’நற்பண்புகளும் பெருந் தன்மையும் உள்ள மனிதனாக நீ திகழ வேண்டும். உன் குடிமக்கள் மேல் நீ அன்பும் இரக்கமும் காட்ட வேண்டும். உலக நாடுகளோடு நீ நடந்துகொள்ளும் முறைமையில் தேவனுடைய நாமத்தைக் கனப்படுத்தி, மகிமைப்படுத்தி, பரிசுத்த அலங்காரத்தை வெளிப் படுத்த வேண்டும்” என்று வேண்டிக்கொண்டான். தாவீது பெற்ற சோதனைகளும் அதிசயங்களும் நற்குணங்களின் மேன்மையை அவனுக்குப் போதித்திருந்தன. அதனால்தான், ‘’நீதி பரராய் மனு ஷரை ஆண்டு, தெய்வ பயமாய்த்துரைத்தனம் பண்ணுகிறவர் இருப் பார். அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து, மழைக்குப் பிற்பாடு தன் காந்தியினால் புல்லைப் பூமியிலிருந்து முளைக்கப் பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார்” என்று தன் இறுதி நாட்களில் சாலொமோனிடம் தாவீது சொன்னான். சோமு 23:3,4.தீஇவ 26.2

    எவ்வளவு மேன்மையான வாய்ப்பு! தாவீது தன் தேவனால் தூண்டப்பட்டு, கொடுத்த அறிவுரைகளுக்கு சாலொமோன் செவி கொடுத்திருப்பானானால், 72 ஆம் சங்கீதம் சொன்னதுபோல, அவன் ஆட்சி ஒரு நீதியின் ஆட்சியாக இருந்திருக்கும்.தீஇவ 26.3

    “தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும்,
    ராஜாவின் குமாரனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும்.
    அவர் உம்முடைய ஜனங்களை நீதியோடும்,
    உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார்...
    புல்லறுப்புண்ட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும்,
    பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார். அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்;
    சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.
    ஒரு சமுத்திரத்தொடங்கி மறுசமுத்திரம் வரைக்கும்,
    நதி தொடங்கிப் பூமியின் எல்லைகள் வரைக்கும் அவர் அரசாளுவார்.... தர்சின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும்
    காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்;
    ஷேபாவிலும் சோபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டு
    வருவார்கள்.
    சகல ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்;
    சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.
    கூப்பிடுகிற எளியவனையும்,
    உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்...
    அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்பண்ணப்படும்,
    எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார்.
    அவருடைய நாமம் என்றென்றைக்கும் இருக்கும்;
    சூரியனுள்ள மட்டும் அவருடைய நாமம்
    சந்தான பரம்பரையாய் நிலைக்கும்;
    மனுஷர் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், எல்லா ஜாதிகளும்
    அவரைப் பாக்கியமுடையவர் என்று வாழ்த்துவார்கள்.

    “இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டா
    வதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர். அவருடைய மகிமை பொருந்திய
    நாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக;
    பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென்.”
    தீஇவ 26.4

    சாலொமோன் தன் வாலிபத்தில் தாவீதின் விருப்பப்படி, பல வருடங்கள் செம்மையான வழியில் நடந்தான்; தேவகட்டளை களுக்கு முற்றிலும் கீழ்ப்படிகிறவனாக வாழ்ந்தான். தன் ஆளுகை யின் ஆரம்பத்தில் ஒரு நாள் அவன் கிபியோனுக்குச் சென்றான். இஸ்ரவேலர் வனாந்தரத்தில் இருந்தபோது, மோசே எழுப்பின ஆசரிப்புக் கூடாரம் அங்கு இருந்தது. தான் தேர்ந்தெடுத்த ஆலோ சகர்களையும் ஆயிரம் பேருக்கு அதிபதிகளையும் நூறு பேருக்கு அதிபதிகளையும் நியாயாதிபதிகளையும் இஸ்ரவேல் எங்குமி ருக்கிற வம்சங்களின் தலைவராகிய சகல பிரபுக்களையும் அழைத்துச் சென்று, தன் தேவனுக்குப் பலிகளைச் செலுத்தி, தேவ சேவைக்குத் தன்னை முற்றிலும் ஒப்படைத்தார். 2நாளா 1:2. ராஜாங்கப் பொறுப்புகளின் பாரம் எத்தகையது என்பது சாலொ மோனுக்கு ஓரளவு தெரிந்திருந்தது. பாரமான சுமைகளைச் சுமப் பவர்கள், தங்கள் பொறுப்புகளை ஏற்றவகையில் நிறைவேற்ற வேண்டுமானால், ஞானத்தின் ஊற்றாகிய தேவனுடைய வழிநடத் தலை நாடவேண்டும் என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது. அதனால், தேவன் தங்களை ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதை நிச்சயித்துக்கொள்ள, தன்னுடன் சேர்ந்து விருப்பத்தோடு வருமாறு தன்னுடைய ஆலோசகர்களையும் அவன் ஊக்குவித்தான்.தீஇவ 27.1

    ஜெபத்தில் அவன் உலக சம்பத்தைக் கேட்கவில்லை; தேவன் தந்துள்ள பணியை நிறைவேற்றத் தேவையானஞானம் கேட்டான்; புத்தி கேட்டான். எளிதில் புரிந்துகொள்ளும் தன்மையும், பரந்த மனதும், பரிவுமிக்க ஆவியும் வேண்டுமென்று ஏங்கினான். அன்று ராத்திரியில் கர்த்தர் சாலொமோனுக்கு ஒரு சொப்பனத்தில் தரிசன மாகி, ‘’உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்!’‘ என்றார். அந்த வாலிப அரசர் உடனே தேவனிடம் தனக்கு உதவி தேவைப் படுவதையும், அதைப் பெற தான் ஆசையாயிருப்பதையும் தெரி வித்தான். அவன் கேட்டதை இப்போது நாம் பார்ப்போம். “என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியான் உம்மைப்பற்றி உண்மையும் நீதியும் மனநேர்மையுமாய் உமக்கு முன்பாக நடந்த படியே, தேவரீர் அவருக்குப் பெரிய கிருபை செய்து, அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து, இந்நாளில் இருக்கிறபடியே அவருடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிற ஒரு குமாரனை அவருக்குத் தந்தீர்.தீஇவ 28.1

    ’’இப்போதும் என் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியேனை என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜா வாக்கினீரே, நானோவென்றால் போக்குவரவு அறியாத சிறு பிள் ளையாய் இருக்கிறேன். நீர் தெரிந்துகொண்டதும் ஏராளத்தினால் எண்ணிக்கைக்கு அடங்காததும் இலக்கத்திற்கு உட்படாததுமான திரளான ஜனங்களாகிய உமது ஜனத்தின் நடுவில் அடியேன் இருக் கிறேன். ஆகையால், உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும்?’‘ என் றான்.தீஇவ 28.2

    சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது.தீஇவ 28.3

    அப்பொழுது தேவன் சாலொமோனை நோக்கி, ‘இந்த விருப்பம் உன் இருதயத்தில் இருந்தபடியாலும், நீ ஐசுவரியத் தையும் சம்பத்தையும் கனத்தையும், உன் பகைஞரின் பிராணனை யும், நீடித்த ஆயுசையும் கேளாமல், நான் உன்னை அரசாளப்பண் ணின என் ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்க ஞானத்தையும் விவேகத்தையும் நீ கேட்டபடியினாலும், உன் வார்த்தையின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந் தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்கு முன் இருந்தது மில்லை; உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை. இதுவுமன்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக் குத் தந்தேன் ; உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை .தீஇவ 28.4

    ’உன் தகப்பனாகிய தாவீது நடந்தது போல, நீயும் என் கட்டளைகளையும் என் நியமங்களையும் கைக்கொண்டு, என் வழிகளில் நடப்பாயாகில், உன் நாட்களையும் நீடித்திருக்கப் பண்ணுவேன்” என்றார். 1இராஜாக்கள்3:5-14; 2 நாளாகமம் 1:7-12.தீஇவ 29.1

    தாவீதோடு இருந்ததுபோல சாலொமோனோடும் இருக்கப் போவதாக தேவன் வாக்குப்பண்ணினார். தேவனுக்கு முன் அவன் செம்மையாக நடந்து, தேவன் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்தால், அவன் சிங்காசனம் என்றும் நிலைத்திருக்கும்; ‘இஸ்ர வேலர் ஞானமும் விவேகமும் உள்ள ஜனங்கள்’ என்று போற்றப் படவும், பிற தேசங்களுக்கு அவர்கள் வழிகாட்டவும் ஏதுவானதாக அவன் ஆட்சி அமைந்திருக்கும்.தீஇவ 30.1

    கிபியோனில் இருந்த அந்தப் பழமையான பலிபீடத்தின் முன் பாக நின்று, சாலொமோன் ஜெபித்த வார்த்தைகளில் அவனுடைய தாழ்மை வெளிப்படுகிறது; தேவனைக் கனப்படுத்த அவனுக்கி ருந்த தீராத வாஞ்சையும் வெளிப்படுகிறது. தேவ உதவி இல்லா விட்டால், தன் பொறுப்புகளை நிறைவேற்ற தன்னால் முடியாது என்பதையும், உதவியற்ற சிறுபிள்ளைபோல் தான் இருப்பதையும் அவன் உணர்ந்திருந்தான். பகுத்தறியும் தன்மை தனக்கு இல்லா ததையும் அவன் உணர்ந்திருந்தான். அதனால், தேவ ஞானத்தை நாடவேண்டியது மாபெரும் அவசியம் என்பதை உணரமுடிந்தது. ‘பிறரைவிட மேன்மை அடைய வேண்டும்’ என்கிற சுயநல ஆசைக் காக, தனக்கு ஞானம் வேண்டுமென்று அவன் நினைக்கவில்லை. தன் கடமைகளை நன்முறையில் நிறைவேற்ற ஆசைப்பட்டான். தன் தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருவதாக தன் ஆட்சி அமைய, தனக்கு எந்த வரம் தேவையென்று அவன் நினைத் தானோ, அந்த வரத்தைத் தருமாறு தேவனிடம் கேட்டான். ‘’நானோவென்றால் போக்குவரவு அறியாத சிறு பிள்ளையா யிருக்கிறேன்’‘ என்று சாலொமோன் சொன்னதில் தான், அவ னுடைய ஐசுவரியமும் ஞானமும் மேன்மையும் இருந்தது; இந்த நல்ல நிலை வேறு எப்போதும் அவனுக்கு இருந்ததில்லை.தீஇவ 30.2

    முக்கியப் பதவியில் இருப்போருக்கு ஒரு பொறுப்பு இருக் கிறது. சாலொமோனின் ஜெபம் கற்பிக்கிற பாடங்களை அவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். பதவி எவ்வளவுக்கு உயருகிறதோ, அவ்வளவுக்குப் பொறுப்புகளும் அதிகரிக்கின்றன; அதன்பின் அவரால் சமுதாயத்தில் ஏற்படுகிற தாக்கமும் பெரியதாய் இருக் கும். எனவே, அவர் தேவனைச் சார்ந்திருக்கவேண்டியது அதிக அவசியம். சக மனிதர் முன் விழிப்போடு நடந்து கொள்ளும் படி தேவன் தன்னை அழைக்கிறார் என்பதை மறந்துவிடக்கூடாது. கற்றுக்கொள்ளும் மனப்பான்மையோடு அவன் தன் தேவனுக்கு முன் நிற்கவேண்டும். பதவியால் ஒருவர் குணம் பரிசுத்தமடைந்து விடாது. தேவனைக் கனப்படுத்தி, தேவனுக்குக் கீழ்ப்படிவதன் மூலமாக நாம் மேன்மை அடையலாம்.தீஇவ 30.3

    நாம் சேவிக்கும் தேவனிடம் பட்சபாதம் இல்லை. ஞானத் தோடு பகுத்தறியும் ஆவியை சாலொமோனுக்கு அருளிய தேவன் அதே ஆசீர்வாதத்தை இன்றும் தம் பிள்ளைகளுக்கு அருள் ஆயத் தமாக இருக்கிறார். ‘உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ள வனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்’ என்று அவர் வார்த்தை சொல்கிறது. யாக்கோபு 1:5 . ஒரு தலைவன் தனக்குச் செல்வமும் அதிகாரமும் புகழும் வேண்டுமென்று விரும் புவதைக் காட்டிலும், ஞானம் வேண்டுமென்று விரும்பினால், அதை அவன் நிச்சயம் பெற்றுக்கொள்வான். தான் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமல்ல, தேவ அங்கீகாரத்தோடு அதை எப்படிச் செய்யவேண்டும் என்பதையும் போதகராம் இயேசுவிடம் கற்றுக்கொள்ளமுடியும்.தீஇவ 31.1

    தேவனிடமிருந்து பகுத்தறிவையும் திறமையையும் ஈவாகப் பெற்ற ஒருவன் தன்னை தேவனுக்குத்தத்தம் செய்த நிலையிலேயே இருந்தால், உயர்பதவிதேடியோ ஆளுகையையும் அதிகாரத்தை யும் நாடியோ ஓடமாட்டான். பொறுப்புகளை ஏற்று, நிறைவேற் றுகிற ஆட்கள் தேவை. உண்மைத் தலைவன் ஆதிக்கம் செலுத் தாமல், நன்மை - தீமை பகுத்தறியும் ஞான இருதயம் வேண்டி ஜெபிப்பான்.தீஇவ 31.2

    தலைவர்களின் பாதை எளிதானது அல்ல. இக்கட்டான சூழ் நிலை ஒவ்வொன்றிலும், தேவன் தங்களை ஜெபிக்க அழைக்கிறா ரென்று உணரவேண்டும். ஞானத்திற்கு ஆதாரமானவரிடம் ஆலோசனை கேட்பதை விட்டுவிடக்கூடாது. பெரிய வேலைக் காரராகிய தேவனிடமிருந்து பெலமும் வழிநடத்தலும் பெற்றுக் கொண்டால், தீமைக்கும் நன்மைக்கும், தவற்றுக்கும் சரியான தற்குமுள்ள வித்தியாசத்தைப் பகுத்தறிய முடியும்; தவறான தூண் டல்களை எதிர்த்து, உறுதியுடன் நிற்கமுடியும்; தேவன் அங்கீகரிப் பதையே அவர்களும் அங்கீகரிப்பார்கள். மேலும், தேவ காரியங் களில் தவறான நியதிகள் பரவினால் அதை எதிர்த்து, கருத்தோடு போராடுகிறவர்களாய் இருப்பார்கள்.தீஇவ 31.3

    ஐசுவரியம், கனம், நீண்ட ஆயுசு ஆகியவற்றை நாடாமல், ஞானத்தை நாடினான் சாலொமோன். அவன் நாடினதை தேவன் அவனுக்கு அருளினார். அவன் விரும்பின் சமயோசித புத்தியும், பரந்த மனதும் கனிவான உள்ளமும் அருளப்பட்டன. தேவன் சாலொ மோனுக்கு மிகுதியானஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத் தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார். சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க் கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது. அவன் மற்ற எல்லா மனுஷரிலும் ஞானவானாயிருந்தான்; சுற்றிலும் இருந்த சகல ஜாதிகளிலும் அவன் கீர்த்தி பிரபலமாயிருந்தது. 1இராஜா 4:29-31தீஇவ 31.4

    ’’நியாயம் விசாரிக்கிறதற்கு தேவன் அருளின ஞானம் ராஜா வுக்கு உண்டென்று கண்டு, இஸ்ரவேலர் எல்லோரும் அவனுக்குப் பயந்தார்கள்’‘ 1இராஜா 3:28. முன்பு தாவீதிடம் மக்கள் தங்கள் இதயங்களைத் திருப்பியிருந்தது போலவே, இப்போது சாலொ மோனுக்கு நேராகவும் தங்கள் இருதயங்களைத் திருப்பி, சகல காரியங்களிலும் அவனுக்குக் கீழ்ப்படிந்தார்கள். ‘சாலொமோன் தன் ராஜ்யத்திலே பலப்பட்டான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனுடனே இருந்து, அவனை மிகவும் பெரியவனாக்கினார். 2நாளா 1:1.தீஇவ 32.1

    தேவனிடம் சாலொமோன் தன்னை அர்ப்பணித்திருந்த காலங் களில் அவன் செம்மையும் உறுதியுமான கொள்கையுள்ளவனாய் இருந்தான். தேவ கட்டளைகளுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து வாழ்ந்தான். அரசின் ஒவ்வொரு முக்கிய முயற்சியும் அவருடைய அறிவுரையின்படியே எடுக்கப்பட்டது. ராஜ்யத்தின் செயல்பாடு களை அவன் புத்தியோடு நிர்வகித்தான். அவனிடம் செல்வமும் ஞானமும் இருந்தன; தன் ஆளுகையின் ஆரம்பக் காலத்தில் அவன் அற்புதமான கட்டடங்களையும் பொதுநல வசதிகளையும் கட்டினான்; ஆர்வமும் பக்தியும் நீதியும் பெருந்தன்மையும் அவன் வார்த்தை யிலும் செய்கையிலும் வெளிப்பட்டன. இவற்றினி மித்தம் குடி மக்கள் அவன்மேல் பாசம் வைத்தார்கள்; மற்ற தேசங்களின் ராஜாக் கள் அவனுக்குப் பாராட்டும் மரியாதையும் அளித்தார்கள்.தீஇவ 32.2

    சாலொமோன் ஆட்சியின் முதற்பகுதியில் யேகோவாவின் நாமத்தை இஸ்ரவேலர் மிகவும் கனப்படுத்தினார்கள். மன்ன னிடம் வெளிப்பட்ட ஞானமும் நீதியும் அவன் சேவித்த தேவனு டைய நற்குணங்களின் மேன்மையைச் சகல தேசங்களுக்கும் வெளிப்படுத்தின. சிறிது காலம் உலகத்தின் விளக்காக இஸ்ரவேல் தேசம் யேகோவாவின் மேன்மையைப் பறைசாற்றியது. அவன் ஆரம்பக்கால ஆட்சியின் உண்மையான மகிமை, அவனுடைய ஈடு இணையற்ற ஞானத்திலோ, ஐசுவரியத்திலோ, ஒப்புயர்வற்ற அதி காரத்திலோ, புகழிலோ அல்ல; அவன் பரலோக ஈவுகளைப் புத்தி யோடு பயன்படுத்தி, தேவனுடைய நாமத்திற்குக் கனத்தைக் கொண்டுவந்ததில் தான் அவனுடைய ஆட்சியின் உண்மையான மகிமை இருந்தது.தீஇவ 32.3

    வருடங்கள் செல்லச் செல்ல, சாலொமோனின் புகழ் அதிகரித் தது. அவன் தன் ஆவியிலும் ஆத்துமாவிலும் பெலத்தின்மேல் பெலமடைந்து, தான் பெற்ற ஆசீர்வாதங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் தேவநாமத்தைக் கனப்படுத்த முயன் றான். தன் அதிகாரமும் ஞானமும் அறிவும் யேகோவாவின் தய வால் தனக்குக் கிடைத்தவை என்பதும், ராஜாதி ராஜாவைப்பற்றிய அறிவை உலகிற்குப் பகிர்ந்தளிக்கவே அந்த ஈவுகள் அருளப் பட்டன என்பதும் பிறருக்குத் தெரிந்திருந்ததை விட அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.தீஇவ 33.1

    இயற்கையைப் பற்றி அறிந்துகொள்வதில் சாலொமோனுக்குத் தனி ஆர்வம் இருந்தது. கல்வியில் ஒரு குறிப்பிட்ட பிரிவைமட்டும் கற்பதில் அவன் ஆராய்ச்சிகள் முடங்கிவிடவில்லை . உயிருள்ளதும் உயிரற்றதுமான சிருஷ்டிக்கப்பட்ட சகல காரியங் களையும் பற்றிக் கருத்தோடு கற்றுக்கொண்டதின் மூலம் தன்னுடைய சிருஷ்டிகரைப் பற்றிய தெளிவான அறிவை அவன் பெற்றுக்கொண்டான். தன் தேவனுடைய ஞானத்தை அவன் இயற்பியலில் கண்டான்; விலங்கி யலில் கண்டான்; வேதியலில் கண்டான்; ஒவ்வொரு மரத்திலும் செடி யிலும் பூவிலும் கண்டான். இவ்வாறு அவன் அதிகமாய்க் கற்க கற்க, தேவனைப்பற்றிய அவனுடைய அறிவும் வளர்ந்தது; தேவன் மேல் அவன் வைத்திருந்த அன்பும் வளர்ந்தது.தீஇவ 33.2

    சாலொமோனுக்கு தேவன் தந்த ஞானம் அவன் எழுதின் நீதி மொழிகளிலும் துதியின் பாடல்களிலும் வெளிப்படுகின்றது. அதைப் பற்றி, ‘’அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனு டைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து. லீபனோனில் இருக்கிற கேதுரு மரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டு வரைக்குமுள்ள மரமுதலிய தாவரங்களைக்குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊரும் பிராணிகள் மச்சங்கள் ஆகிய இவைகளைக் குறித்தும் வாக்கியங்களைச் சொன்னான்’‘ என்று சொல்கிறது வேதாகமம். 1இராஜா 4:32,33.தீஇவ 33.3

    பரிசுத்த வாழ்விற்கும் பெரிய முயற்சிகளுக்கும் தேவையான பரமநியதிகள் சாலொமோனின் நீதிமொழிகளில் உள்ளன. அவை தேவபக்திக்கு வழிநடத்தக்கூடியவை. நம் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் இவைதாம் கட்டுப்படுத்தி நடத்தவேண்டும். இந்த நியதிகளை சாலொமோன் எங்கும் பரவச் செய்ததாலும், ‘சகல துதிக்கும் கனத்திற்கும் பாத்திரர் தேவனே’ என்பதை உணர்ந்திருந்த தாலுமே சாலொமோனின் ஆரம்பக்கால ஆட்சியில் ஒழுக்க மேன்மை காணப்பட்டது; செல்வச்செழிப்பும் இருந்தது.தீஇவ 33.4

    ’ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக் கிற மனுஷனும் பாக்கியவான்கள். அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமா னது. முத்துக்களைப்பார்க்கிலும் அது விலையேறப்பெற்றது : நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல. அதின் வலது கையில் தீர்க்காயுசும், அதின் இடது கையில் செல்வமும் கனமும் இருக்கி றது. அதின் வழிகள் இனிதான வழிகள். அதின் பாதைகளெல்லாம் சமாதானம். அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்’ என்கிறான். நீதிமொழிகள் 3:13-18.தீஇவ 34.1

    ’ஞானமே முக்கியம். ஞானத்தைச் சம்பாதி. என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக் கொள்.’ நீதிமொழிகள் 4:7. ‘கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.’ சங்கீதம் 111:10. ‘தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும் அகந்தையையும் தீயவழியையும், புரட்டுவாயை யும் நான் வெறுக்கிறேன்.’ நீதிமொழிகள் 8:13.தீஇவ 34.2

    மேற்கண்டவாறு சாலொமோனே எழுதின இந்த ஞானமான வார்த்தைகளுக்கு அவன் பிற்காலங்களில் செவிகொடுத்திருப் பானானால் எவ்வளவு நலமாயிருந்திருக்கும்! ஞானிகளின் உதடு கள் அறிவை இறைக்கும்’ என்று நீதிமொழிகள் 15:7 இல் அறிவித்த வன் அவன். ‘தேசங்களை ஆளுபவர்களுக்கு நீங்கள் கொடுக்க விரும்பும் துதியை ராஜாதி ராஜாவுக்குச் செலுத்துங்கள்’ என்று பூமியின் ராஜாக்களுக்குப் போதித்தவன் அவன். அப்படிப்பட்ட அவன் தன் தேவனுக்கு மட்டுமே உரிய மகிமையை தன்னிலிருந்த ‘அகந்தையாலும் மேட்டிமையாலும் தனது புரட்டுவாயால் தனக்கு எடுத்துக்கொள்ளாமல் இருந்திருப்பானானால் எவ்வளவு நலமாய் இருந்திருக்கும்!தீஇவ 34.3