Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    55 - அஞ்ஞானிகளின் சதிகள்

    யூதர்கள்மேல் வெளிப்படையாக யுத்தம் தொடுக்க சன்பல்லாத் தும் அவனுடைய கூட்டாளிகளும் துணியவில்லை; ஆனால், அவர் களைக் குழம்பச் செய்து, அதைரியப்படுத்தி, பாதிப்பை ஏற்படுத்த அதிக்குரோதத்தோடு தங்கள் இரகசிய முயற்சியில் தொடர்ந்து ஈடு பட்டார்கள். எருசலேமைச்சுற்றிலும் மதிலைக் கட்டிமுடிக்கும் பணி முடியும் தருவாயில் இருந்தது. அது கட்டிமுடிக்கப்பட்டு, அதன் வாசல்கள் நிறுவப்பட்டால், இஸ்ரவேலின் இந்த எதிரிகள், தாங் கள் நகருக்குள் வலுக்கட்டாயமாக நுழைவதை நினைத்துக் கூட பார்க்கமுடியாது. எனவேதான், கொஞ்சமும் தாமதமின்றி அந்த வேலையைத் தடைசெய்ய அவர்கள் ஆவலாயிருந்தார்கள். இறுதி யில் அவர்கள் ஒரு திட்டத்தை வகுத்தார்கள். அதன்படி, நெகேமி யாவை அவனுடைய பணியிலிருந்து விலகச் செய்யவும், அவன் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வந்ததும், அவனைக் கொல்ல அல்லது சிறையில் அடைக்க விரும்பினார்கள்.தீஇவ 653.1

    இருதிறத்தாரின் கருத்து வேற்றுமைகளை நீக்க விரும்புவது போல் நடித்து, நெகேமியாவோடு ஓர் ஆலோசனை கூட்டம் நடத்த முயன்றார்கள்; ஓனோ பள்ளத்தாக்கில் இருந்த கிராமம் ஒன்றில், தங்களைச் சந்திக்க வருமாறு அவனை அழைத்தனர். ஆனால் அவர்களுடைய உண்மை நோக்கம் பற்றி பரிசுத்த ஆவியானவரால் தெரிந்துகொண்ட அவன், அதற்குச் சம்மதிக்கவில்லை. நான் அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பி: நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக்கூடாது; நான் அந்த வேலையை விட்டு உங் களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கட்டுப் போவானேன் என்று சொல்லச் சொன்னேன்” என்று அவன் எழுதுகிறான். ஆனால் அந்தச் சோதனைக்காரர்கள் விட்டபாடில்லை. இதேபோன்று, நான்கு முறை அவர்கள் செய்தியனுப்பினார்கள்; ஒவ்வொருமுறை யும் அதே பதிலையே பெற்றார்கள்.தீஇவ 653.2

    இந்தத் திட்டம் வெற்றிபெறாததைக் கண்டு, இன்னும் துணி வான ஒரு வியூகத்தில் இறங்கினார்கள். முத்திரைபோடாத கடிதம் ஒன்றைத் தூதுவன் ஒருவன் மூலமாக நெகேமியாவுக்குக் கொடுத் தனுப்பினான் சன்பல்லாத்து. அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந் தது. ‘நீரும் யூதரும் கலகம் பண்ண நினைக்கிறீர்கள் என்றும், அதற் காக நீர் அலங்கத்தைக் கட்டுகிறீர் என்றும், இவ்விதமாக நீர் அவர் களுக்கு ராஜாவாகப் போகிறீர் என்றும், யூதாவிலே ஒரு ராஜா இருக்கிறார் என்று உம்மைக் குறித்து எருசலேமிலே கூறுகிற தீர்க்க தரிசிகளையும் சம்பாதித்தீரென்றும் புறஜாதிகளுக்குள்ளே பிரஸ் தாபமாயிருக்கிறது, கஷ்மூவும் அப்படிச் சொல்லுகிறான்; இப்போ தும் இந்தச் செய்தி ராஜாவுக்கு எட்டுமே; ஆகையால் நாம் ஒருவ ரோடொருவர் ஆலோசனைபண்ணுகிறதற்காக நீர் வரவேண்டும்’‘தீஇவ 654.1

    அதில் குறிப்பிடப்பட்டிருந்த விபரங்கள் உண்மையிலேயே பரவியிருக்குமானால், அவர்கள் வருந்தும்படி ஆகியிருக்கும்; ஏனெனில், அந்த விபரங்கள் சீக்கிரத்திலேயே ராஜாவை எட்டி யிருக்கும், அவனில் சிறிது சந்தேகம் எழுந்திருந்தால் கூட கடுமை யான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டிருக்கும். ஆனால் அந்தக் கடிதம் முற்றிலும் பொய்யானது என்பதையும் தன்னில் பயத்தை உண்டு பண்ணவும், தன்னைக் கண்ணியில் சிக்கவைக்கவும் எழு தப்பட்டது’ என்பதையும் நெகேமியா உணர்ந்துகொண்டான். கடி தத்திலுள்ள காரியங்களை மக்கள் வாசித்துப் பயமும் திகிலும் கொள்ளவேண்டும் என்பதால்தான் அது முத்திரை போடாமல் அனுப்பப்பட்டிருந்தது எனும் உண்மை அவருடைய எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்தியது.தீஇவ 654.2

    ’’நீர் சொல்லுகிற அந்தக் காரியங்களில் ஒன்றும் நடக்கவில்லை ; அவைகள் உம்முடைய மனோராஜ்யமே ஒழிய வேறல்ல’‘ என்று அதற்கேற்ற பதிலை நெகேமியா கொடுத்தான். சாத்தானின் திட் டங்களை நெகேமியா அறிந்திருந்தான். கட்டுகிறவர்களின் கரங் களைத் திடனற்றுப்போகப்பண்ணவும், அதன் மூலம் அவர்களும் டைய முயற்சிகளில் அதிருப்தியை ஏற்படுத்தவுமே அவ்வாறெல் லாம் செய்யப்பட்டதை அவன் அறிந்திருந்தான்.தீஇவ 654.3

    சாத்தான் மீண்டும் மீண்டும் தோல்விடையந்தான். இப்பொ ழுது, இன்னும் அதிக தீய எண்ணத்தோடும் தந்திரத்தோடும் தேவ ஊழியருக்கு மிக ஆபத்தான , வஞ்சகமான ஒரு கண்ணியை விரித் தான். நெகேமியாவின் நண்பர்கள் போல நடிக்கவும், தேவ வார்த்தை என்று சொல்லி, அவனுக்குப் பொய் ஆலோசனை கொடுக்கவும், சன் பல்லாத்தும் அவனுடைய நண்பர்களும் ஆட்களைக் கூலிக்கு அமர்த்தினார்கள். அவர்களில் முதன்மையானவன் செமாயா. முன்பு இவன் நெகேமியாவிடம் நன்மதிப்பு பெற்றிருந்தான். தன் உயி ருக்கு ஆபத்து ஏற்பட்டதுபோல பயந்து, தேவாலயத்திற்கு அருகே யிருந்த ஓர் அறையில் அவன் ஒளிந்துகொண்டான். அச்சமயத்தில் தேவாலயமானது மதில்களாலும் வாசல்களாலும் பாதுகாக்கப்பட் டிருந்தது; ஆனால் நகரத்திற்கு இன்னும் வாசல்கள் வைக்கப்படாம லிருந்தன. நெகேமியாவின் பாதுகாப்பில் மிகவும் அக்கறை கொண்ட வன்போல, தேவாலயத்திற்குள் தஞ்சம் புகுமாறு பேசினான்செமாயா. ‘’நாம் இருவருமாய் தேவனுடைய வீடாகிய ஆலயத்துக்குள்ளே போய், தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும்; உம்மைக் கொன்றுபோட வருவார்கள்; இரவிலே உம்மைக் கொன்று போட வருவார்கள்’‘ என்றான்.தீஇவ 655.1

    இந்த வஞ்சக ஆலோசனைக்கு நெகேமியா செவிகொடுத்திருந் தால், தேவனிலுள்ள தன் விசுவாசத்தை அவன் பலியாக்க வேண்டி யிருந்திருக்கும்; மக்களுடைய பார்வையில் அவன் கோழையாக வும் குற்றவாளியாகவும் எண்ணப்பட்டிருக்கக்கூடும். அவன் மேற் கொண்டிருந்த முக்கிய பணியையும், தேவ வல்லமையில் தனக் கிருந்ததாக அவன் சொல்லிக்கொண்ட விசுவாசத்தையும் வைத்துப் பார்க்கும்போது, அவன் பயத்தால் ஒளிந்து கொள்வதென்பது முற் றிலும் முரணானதாக இருந்திருக்கும்; அந்த அச்சம் மக்கள் மத்தியில் பரவியிருக்கும். அவனவன் தன் சொந்த பாதுகாப்பை நாடியிருப் பான், நகரமானது அதன் சத்துருக்களுக்கு இரையாகும்படி பாது காவலின்றி விடப்பட்டிருக்கும். ஞானமற்ற அத்தகைய ஒரு காரி யத்தை நெகேமியா செய்திருப்பானானால், அவன் ஆதாயமாக்கின தெல்லாவற்றையும் இழக்கும்படி அது செய்திருக்கும்.தீஇவ 655.2

    தன் ஆலோசகனின் மெய்நோக்கத்தையும் குணத்தையும் கண்டுகொள்ள நெகேமியாவுக்கு வெகுநேரம் ஆகவில்லை. ‘’தேவன் அவனை அனுப்பவில்லையென்றும், தொபியாவும் சன் பல்லாத்தும் அவனுக்குக் கூலிகொடுத்ததினால், அவன் எனக்கு விரோதமாய் அந்தத் தீர்க்கதரிசனத்தைச் சொன்னான் என்றும் அறிந்து கொண்டேன். நான் பயந்து அப்படிச் செய்து பாவங்கட்டிக் கொள்ளுகிறதற்கும், என்னை நிந்திக்கத்தக்க அபகீர்த்திக்கு முகாந் தரம் உண்டாக்குகிறதற்கும் அவனுக்குக் கைக்கூலி கொடுத்திருந் தார்கள்’‘ என்று அவன் சொல்கிறார்.தீஇவ 656.1

    செமாயா கொடுத்த தீய ஆலோசனையானது, அங்கு நன்மதிப் போடு விளங்கின ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் ஆதரிக்கப் பட்டிருந்தது. நெகேமியாவின் நண்பர்களெனச் சொல்லிக்கொண்ட அவர்கள், அவனுடைய எதிரிகளோடு கூட்டு சேர்ந்திருந்தார்கள். ஆனால், அவர்கள் விருதாவாகவே அவனுக்குக் கண்ணி விரித் தார்கள். ‘’என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என் னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை” என்பதுதான் நெகேமியா வின் திடமான பதிலாயிருந்தது.தீஇவ 656.2

    வெளிப்படையாகவும் இரகசியமாகவும் தங்கள் எதிரிகள் செய்துவந்த சதித்திட்டங்களுக்கு மத்தியிலும் கட்டுமானப் பணி சீராக நடைபெற்றது; நெகேமியா எருசலேமிற்கு வந்து இரண்டு மாதங்களுக்குள்ளாக, அந்நகரம் அதன் அரண்களால் இடைக்கட் டப்பட்டது; மதிலைக் கட்டினார்கள். அதன் அலங்கங்களுக்கு மேலாக நடந்து, தோற்றும் திகைத்தும் போய் கீழே நின்ற தங்கள் சத் துருக்களைப் பார்க்கமுடிந்தது. எங்கள் பகைஞர் எல்லாரும் அதைக் கேட்டபோதும், எங்கள் சுற்றுப்புறத்தாராகிய புறஜாதியான அனைவரும் கண்டபோதும், மிகவும் முனையற்றுப் போய், இந்தக் கிரியை எங்கள் தேவனால் கைகூடி வந்ததென்று அறிந்தார்கள்’‘ என்கிறான் நெகேமியா.தீஇவ 657.1

    தேவனுடைய அரசாளும் கரம் குறித்த இந்தச் சாட்சியமும், இஸ்ரவேலர் மத்தியில் காணப்பட்ட அதிருப்தியையும் கலகத்தையும் வஞ்சகத்தையும் தடுத்து நிறுத்த போதுமானதாயிருக்கவில்லை. ‘’அந்த நாட்களில் யூதாவிலுள்ள பெரிய மனிதரிடத்திலிருந்து தொபி யாவுக்குப் போகிறதும், தொபியாவினிடத்திலிருந்து அவர்களுக்கு வருகிறதுமான கடிதங்கள் அநேகமாயிருந்தது. அவன் ஆராகின் குமாரனாகிய செகனியாவுக்கு மருமகனாயிருந்ததால் யூதாவில் அநேகர் அவனுக்கு ஆணையிட்டுக் கொடுத்திருந்தார்கள்.’‘ சிலை வழிபாட்டுக்காரரோடு ஏற்பட்ட கலப்புத் திருமணத்தால் உண்டான மோசமான விளைவுகளை இங்கு நாம் காணமுடிகிறது. யூதாவின் ஒரு குடும்பம் தேவனுடைய சத்துருக்களோடு சம்பந்தங்கொண்டது; அந்த உறவு ஒரு கண்ணியாக விளங்கியது. வேறே அநேகரும் இப் படியே செய்தார்கள். எகிப்திலிருந்து வந்த இஸ்ரவேலரோடு கலந் திருந்த பிற இனத்தார் போல, இவர்களும் ஓயாது துன்பம் விளை வித்துக் கொண்டிருந்தார்கள். தேவனை முழுமனதுடன் சேவிக்க வில்லை; தேவபணிக்கு அர்ப்பணிப்பு அவசியமாயிருந்த நேரத் தில், தேவபணிக்கு ஒத்துழைக்கவும் தோள்கொடுக்கவும் தாங்கள் செய்திருந்த பரிசுத்த வாக்குறுதியை மீறுவதற்கு ஆயத்தமாக இருந் தார்கள்.தீஇவ 657.2

    யூதர்களுக்கு எதிராக தீமை செய்ய முன்னணியில் நின்றவர் களில் சிலர், இப்பொழுது அவர்களுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவது போல நடித்தார்கள். சிலைவழிபாட்டுக்கார ரோடு திருமண சம்பந்தங்களில் சிக்கிக்கொண்ட யூதாவின் பிரபுக் களும், தொபியாவோடு வஞ்சகத் தொடர்பு கொண்டு, அவனைச் சேவிப்பதாக ஆணையிட்டவர்களும், அவன் திறமையுள்ளவன், முன்னறிவுள்ளவன்” என்றும், அவனோடு கூட்டணி அமைப்பது யூதருக்கு அதிக சாதகம் விளைவிக்கும்” என்றும் அவனைக் குறித் துச் சொன்னார்கள். அதேநேரத்தில், நெகேமியாவின் திட்டங்களை யும் செயற்பாடுகளையும் அவனுக்குக் காட்டிக்கொடுத்தார்கள். இப்படியாக தேவமக்களின் பணி, அவர்களுடைய பணியைத் தடைசெய்ய வாய்ப்பாக அமைந்தது.தீஇவ 657.3

    ஏழைகளும் ஒடுக்கப்பட்டோரும் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்குப் பரிகாரம் வேண்டி, நெகேமியாவிடம் வந்த போது, அவர்களுக்கு உதவியாக அவன் உறுதியுடன் நின்றான்; அவ்வாறு தவறு செய்தவர்கள்மேல் சுமத்தப்பட்டிருந்த பழியை அவன் நீக்கினான். கொடுமைக்குள்ளானதன் சகதேசத்தாருக்காக அவன் காட்டின் அதிகாரத்தைத் தனக்காக அவன் உபயோகிக்கவே இல்லை. அவனுடைய பிரயாசங்களைச் சிலர் நன்றி கெட்ட தன்மை யோடும் வஞ்சகத்தோடும் நோக்கினார்கள். ஆனால் அந்த வஞ்ச கர்களைத் தண்டிக்க அவன் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தவே இல்லை. மக்களுக்கான தன் சேவையில் அமைதியோடும் சுயநல மின்றியும் அவன் தொடர்ந்து செயல்பட்டான். தன் முயற்சிகளில் இருந்து பின்வாங்கவோ, தன் ஆர்வம் குறைந்து போகவோ அவன் இடங்கொடுக்கவில்லை.தீஇவ 658.1

    தேவனுடைய நோக்கத்தையும் பணியையும் முன்னேற்ற நாடு கிறவர்களைக் குறிவைத்தே எப்பொழுதும் தாக்குதலை மேற்கொள் கிறான் சாத்தான். அதில் பெரும்பாலும் தோற்றாலும், இதுவரையி லும் தான் முயன்றிராத வழிமுறைகளில், புது வீரியத்தோடு, மீண் டும் மீண்டும் தாக்குகிறான். தேவபணியின் ஆதரவாளர்களெனச் சொல்லிக்கொள்வோர் மூலமாக அவன் மேற்கொள்ளும் இரகசியக் கிரியைகள்தாம், அதிக பயத்திற்குரியவையாகும். வெளிப்படை யான தாக்குதல் கடுமையும் கொடுமையுமாக இருக்கலாம். ஆனால், தேவநோக்கத்திற்கு இது ஏற்படுத்தும் ஆபத்தைக் காட்டிலும், தேவ னைச் சேவிப்பதாகச் சொல்லிக்கொள்கிறவர்களின் இரகசியப் பகைதான் பயங்கரமானதாகும்; இவர்களே உண்மையில் சாத்தா னின் ஊழியர்களாயிருக்கிறார்கள். தேவ பணியைத் தடை செய்ய வும் அவருடைய ஊழியர்களுக்கு ஊறு விளைவிக்கவும் தங்கள் அறிவைப் பயன்படுத்துவோரின் கரங்களை ஒவ்வொரு விதத்தி லும் அனுகூலப்படுத்த இவர்கள் திறனுள்ளவர்களாய் இருக்கிறார் கள். அந்தகார அதிபதியின் ஆலோசனையால் உண்டாகும் ஒவ் வொரு திட்டமும் தேவ ஊழியர்களை அவனுடைய பிரதிநிதி களோடு கூட்டு ஏற்படுத்தும்படி தூண்டுகிறதாக இருக்கும். தூண்ட பயன்படுத்தப்படும். அவர்களைக் கடமையிலிருந்து விலகச் செய்ய மீண்டும் மீண்டும் அழைப்பு விடுக்கப்படும். ஆனால், அவர்கள் நெகேமியாவைப்போல, ‘’நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக்கூடாது” என்று உறுதியுடன் பதிலளிக்கவேண்டும். தேவ ஊழியர்கள்மேல் குரோதம் கொண்டு, அவர்களை நோகச் செய்ய உருவாக்கப் படும் பொய் களை, அவர்களுடைய முயற்சிகள் தவறென நிரூபிக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்கள் வேலையைச் சுமுகமாகத் தொடரலாம். எருசலேமின் மதில்களின் மேலிருந்த கட்டுமானக்காரர்போல, மிரட்டல்களோ ஏளனங் களோ பொய்களோ தங்கள் பணியிலிருந்து தங்களைத் திதிைருப்ப அவர்கள் உறுதியுடன் இடங்கொடுக்கக்கூடாது. எதிரிகள் நித்தமும் தங்களைப் பின்தொடர்வதால், விழிப்போடும் ஜாக்கிரதையோடும் இருப்பதிலிருந்து ஒரு விசைகூட அவர்கள் ஓயக்கூடாது. எப்பொ ழுதும் அவர்கள் தேவனை நோக்கி ஜெபித்து, அவர்கள் நிமித்தம் இரவும் பகலும் ஜாமங் காக்கிறவர்களை” வைக்கவேண்டும். நெகே 4:9.தீஇவ 658.2

    நாட்களின் முடிவு சமீபித்திருப்பதால், சாத்தானுடைய சோத னைகள் தேவ ஊழியர்கள்மேல் மிகுந்த வல்லமையோடு தொடுக் கப்படுகின்றன. ‘’அலங்கத்தைக் கட்டுகிறவர்களை’ ஏளனமும் அவதூறும் பண்ண மனிதர்களை அவன் ஏவிவிடுவான். தங்கள் சத்துருக்களின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்க கட்டுமானக் காரர் இறங்கி வந்தால், அது அவர்களின் வேலையைத் தாமதப் படுத்தவே செய்யும். தங்கள் எதிரிகளின் நோக்கங்களை முறியடிக்க அவர்கள் பெரிதும் முயல வேண்டும்; ஆனால் தங்கள் பணியிலிருந்து விலகச் செய்யும் எதையும் அவர்கள் அனுமதிக்கக்கூடாது. பொய் யைவிடசத்தியம் பெலம் வாய்ந்தது; நீதி அநீதியை மேற்கொள்ளும்.தீஇவ 659.1

    தங்கள் எதிரிகள் தங்கள் தோழமையையும் பரிவையும் சம்பா தித்து, அதன்மூலம் தங்கள் பணியிலிருந்து தங்களை விலகச்செய் யும்படி அவர்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. மனக்கட்டு பாடற்ற ஒரு செயலால், தேவநோக்கத்திற்கு அவமதிப்பை ஏற் படுத்த அல்லது தன் சக ஊழியர்களின் கரங்களை நெகிழச் செய்கிற வன், எளிதில் அகற்ற முடியாத ஒரு கறையைத் தன் குணலட்சணத் தில் ஏற்படுத்துகிறான்; எதிர்காலத்தில் தான் பயன்படக் கூடாதபடி தன் பாதையில் ஒரு கடினமான தடையை வைக்கிறான்.தீஇவ 659.2

    ’’தேவபிரமாணத்தைவிட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கரைப் புகழுகிறார்கள்’‘ நீதிமொழிகள் 28:4. தங்களை அதிக பரிசுத்தவான் கள் என்று சொல்லிக்கொண்டு, உலகத்தோடும் இணைகிறவர்கள், சத்தியத்தின் நோக்கத்திற்கு எதிரியானவர்களோடு கூட்டுச் சேரும் படி நம்மிடம் வேண்டினால், நெகேமியாவைப் போல நாம் எச்சரிப் படைந்து, அவர்களை ஒதுக்கிவிட வேண்டும். அத்தகைய ஆலோ சனை சகல நன்மைக்கும் எதிரியானவனால் ஏற்படுவதாகும். இது சந்தர்ப்பவாதிகளின் பேச்சு; அன்று போலவே இன்றும் இதனை நாம் உறுதியுடன் மறுக்கவேண்டும். வழிநடத்தவல்ல தேவவல்ல மையில் அவருடைய பிள்ளைகள் விசுவாசம் வைக்காதவாறு அவர் களைத் தூண்டுகிற எந்தச் செல்வாக்கையும் அவர்கள் உறுதியுடன் எதிர்க்கவேண்டும்.தீஇவ 660.1

    தேவ பணியில் நெகேமியா வைத்திருந்த ஆழமான அர்ப் பணிப்பிலும், அதற்கு இணையாகதேவன்மேல் அவன் வைத்திருந்த நம்பிக்கையிலும்தான், அவனுடைய எதிரிகள் அவனைத் தங்கள் அதிகாரத்திற்குள் இழுக்க முயன்று தோற்றத்தின் இரகசியம் இருக் கிறது. சோம்பலான ஆத்துமா, சோதனைக்கு எளிதில் இரையாகி விடுகிறது. ஆனால் மேலான குறிக்கோளும் ஆழமான நோக்கமும் உள்ள வாழ்வில் தீமை காலூன்ற இடமில்லாமற்போகிறது. விசுவா சத்தோடு நித்தமும் முன்னேறிச் செல்கிறவன் சோர்வடைவதில்லை; ஏனெனில், தம்முடைய மேன்மையான நோக்கத்தை நிறைவேற்ற சகலத்தையும் நடப்பிக்கும் தேவனுடைய அளவற்ற அன்பை தனக்கு மேலும் கீழும் பக்கங்களிலும் அவன் உணர்கிறான். கிருபாசனமே தேவ ஊழியர்களின் நித்திய நம்பிக்கை. எனவே, குலையாத உறுதி யோடு அவர்கள் ஊழியம் செய்கிறார்கள்.தீஇவ 660.2

    மனித ஆற்றலால் எதிர்கொள்ளமுடியாத சகல நெருக்கடி நிலை களையும் சந்திக்க தெய்வீக உதவியை தேவன் அருளுகிறார். ஒவ் வொரு இக்கட்டிலும் உதவி செய்யவும் நம் நம்பிக்கையையும் நிச் சயத்தைப் பெலப்படுத்தவும் நம் சிந்தைகளைப் பிரகாசப்படுத்தி, நம் இருதயங்களைச் சுத்திகரிக்கவும் பரிசுத்த ஆவியானவரை அவர் தருகிறார். ஊழியம் செய்வதற்கான தருணங்களைத் தருகிறார்; அதற் கான வழிகளைத் திறக்கிறார். அவருடைய மக்கள் அவரின் செயற் பாடுகளின் அறிகுறிகளைக் கண்டு, அவரோடு ஒத்துழைக்க ஆயத் தமாக இருந்தால், மகத்தான விளைவுகளைக் கண்டுகொள்ளலாம்.தீஇவ 660.3