44 - சிங்கக் கெபியில்
முன்னர் பாபிலோனின் அரசர்களுக்கு உரியதாயிருந்த சிங்கா சனத்தை மேதியனாகிய தரியு கைப்பற்றியதுமே, அரசாங்கத்தை மீண்டும் ஒழுங்கமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டான். ‘ராஜ்யம் முழுவதையும் ஆளும்படிக்குத் தன் ராஜ்யத்தின்மேல் நூற்றிருபது தேசாதிபதிகளை நியமித்தான். அந்த தேசாதிபதிகள் கணக்கு ஒப்பு விக்கிறதற்காக, அவர்களுக்கு மேலாக நியமிக்கப்பட்ட மூன்று பிரதானிக்களில் தானியேல் ஒருவனாயிருந்தான். இப்படியிருக்கை யில் தானியேல் பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேற்பட்ட வனாயிருந்தான்; தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்தமையால் அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த ராஜா நினைத்தான்.’தீஇவ 539.1
தானியேலுக்கு வழங்கப்பட்ட மேன்மைகள், ராஜ்யத்தின் தலைவர்களிடையே பொறாமையைத் தூண்டிவிட்டிருந்தது. அவ னுக்கெதிராகக் குற்றஞ்சாட்டும் தருணத்தை எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால், அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறையும் காணப்படவில்லை’.தீஇவ 539.2
தானியேலின் குற்றமற்ற நடத்தை அவனுடைய எதிரிகள் அவன் மேல் இன்னும் பொறாமை கொள்ளும்படி தூண்டியது. ‘நாம் இந்த தானியேலை அவனுடைய தேவனைப்பற்றிய வேத விஷயத்திலே குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடித்தால் ஒழிய அவனை வேறொன்றிலும் குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடிக்கக் கூடாது’‘ என்று சொல்லவேண்டிய நிலையில் இருந்தார்கள். தானி 6:5.தீஇவ 540.1
அதன்பிறகு, அந்தப் பிரதானிகளும் தேசாதிபதிகளும் ஒன் றாக ஆலோசித்து, ஒரு திட்டம் தீட்டி, அதன் மூலம் தீர்க்கதரிசியைத் தீர்த்துக்கட்ட முடிவு பண்ணினார்கள். எந்த மனுஷனாகிலும் முப் பதுநாள் வரை தரியு ராஜாவைத் தவிர எந்தத் தேவனிடத்திலும் மனுஷனிடத் திலும் யாதொரு காரியத்தைக் குறித்து விண்ணப்பம் பண்ணக் கூடாதென தாங்கள் ஆயத்தமாக்கியிருந்த சட்டத்தில், கை யெழுத்திடுமாறுராஜாவிடம் கேட்கத் தீர்மானித்தனர். இக்கட்டளையை மீறுகிறவர்களைச் சிங்கக்கெபியில் போடுவது தண்டனையாக்கப் பட்டிருந்தது.தீஇவ 540.2
அதன்படி, தேசாதிபதிகள் ஒரு சட்டத்தை ஆயத்தப்படுத்தி, கையெழுத்திடும் படி அதனைதரியுவிடம் கொடுத்தார்கள். அந்தச் சட்டத்தைச் செயல்படுத்துவது அவருடைய மதிப்பிற்கும் அதி காரத்திற்கும் மேலும் பெருமை சேர்க்கும் என்று அவருடைய தற் பெருமைக்குத் தூபங்காட்டும் வகையில் பேசினார்கள். தேசாபதி களின் வஞ்சக நோக்கத்தை அவன் அறியவில்லை . மேலும், அந் தச் சட்டத்தில் புதைந்திருந்த அவர்களுடைய விரோதத்தையும் ராஜாவால் காண முடியவில்லை. எனவே, அவர்களுடைய வஞ்ச கத்தில் வீழ்ந்து, அதில் கையெழுத்திட்டான்.தீஇவ 540.3
யேகோவாவின் ஊழியனுக்காரனுக்கு வசமாக வலைவிரித்து விட்டதாக எண்ணி, சந்தோஷமாக தரியுவிடமிருந்து புறப்பட்டுச் சென்றனர்தானியேலின் பகைவர்கள். அந்தச் சதித்திட்டத்தை உரு வாக்கியதில் சாத்தான் முக்கியப் பங்காற்றியிருந்தான். இராஜ்யத் தில் அதிகாரமிக்க பதவியில் இருந்தான் தீர்க்கதரிசி. தங்கள் பக்கம் மிருந்த ஆட்சியாளர்கள்மேல் தாங்கள் அதிகாரம் கொள்ளாதபடி அவனுடைய செல்வாக்கு மாற்றிவிடும் என்று தீயதூதர்கள் பயந் தார்கள். பொறாமையும் எரிச்சலும் கொள்ளும்படி தேசாதிபதிகளைத் தூண்டிவிட்டதும், தானியேலை அழிக்கத் திட்டம் போடுமாறு ஏவி விட்டதும் சாத்தானின் இந்த குழுக்கள்தாம்; தீமையின் கருவிகளாக தங்களை ஒப்புக்கொடுத்த தேசாதிபதிகள் அதனைச் செயல்படுத்தி னார்கள்.தீஇவ 540.4
தங்கள் திட்டம் வெற்றிபெற, தானியேல் தன் கொள்கையில் கொண்டிருந்த உறுதியைத்தான் அவனுடைய எதிரிகள் எதிர்நோக்கி யிருந்தனர். அவனுடைய குணம் பற்றி அவர்கள் கணித்திருந்தது தவறாகப் போகவில்லை . அந்தச் சட்டத்தை உருவாக்கியதில் அவர் களுடைய கொடூர நோக்கம் பற்றிதானியேல் உடனே அறிந்து கொண் டான்; ஆனால் அவன் தன் வழக்கத்தில் ஒரு சிறு மாற்றம் கூட ஏற் படுத்தவில்லை . அதிகமாக ஜெபிக்கவேண்டிய நேரத்தில், அவன் ஏன் அதை நிறுத்தவேண்டும்? தேவன் உதவி செய்வார் என்ற நம் பிக்கையை இழப்பதைக்காட்டிலும், தன் ஜீவனை இழக்கவே விரும்பினான். தேசாதிபதிகளின் தலைவனாக தன் கடமையை அமைதியோடு நிறைவேற்றினான்; ஜெபவேளை வந்தபோது, அவன் தன்னுடைய வழக்கத்தின்படியே தன் அறைக்குச் சென்று எருசலேமுக்கு நேராகப் பலகணிகள் திறந்திருக்க, பரலோக தேவ னிடம் விண்ணப்பம் ஏறெடுத்தான். யாருக்கும் தெரியாமல் மறை வாகப் பிரார்த்தனை செய்யவும் அவன் முயலவில்லை. தேவனுக்கு உண்மையோடு இருப்பதால் ஏற்படவிருந்த பாதகங்களை முற்றிலும் மாக அறிந்திருந்த போதிலும், அவனுடைய ஆவியில் தடுமாற்றம் ஏற்படவில்லை. தன் அழிவுக்காக சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருந்த வர்களின் பார்வைக்கு, பரலோகத்தோடானதன் உறவு துண்டிக்கப் பட்டதுபோல் தோன்றுவதைக்கூட அவன் அனுமதிக்கவில்லை. தனக்குக் கட்டளையிடராஜாவுக்கு உரிமையுள்ள சகல காரியங்களி லும் தானியேல் கீழ்ப்படியவே விரும்பினான்; ஆனால் ராஜாவும், அவனுடைய கட்டளையும், ராஜாதி ராஜாவின் மேல் தானியேலுக் கிருந்த மெய்ப்பற்றைத் துண்டிக்கும்படி செய்யக்கூடாதிருந்தது.தீஇவ 541.1
தேவனுக்கும் ஆத்துமாவுக்குமிடையே தலையிட எத்தகைய பூலோக வல்லமைக்கும் உரிமை கிடையாது என்பதைத் துணிவோ டும், அதேநேரத்தில், தாழ்மையோடும் அமைதலோடும் தெரிவித்தான் தீர்க்கதரிசி. தன்னைச் சுற்றிலும் சிலைவழிபாட்டுக்காரர்கள் இருந் தாலும் சத்தியத்திற்கான மெய்ச் சாட்சியாகத் திகழ்ந்தான். நீதியின் மேல் அவன் கொண்டிருந்த உறுதியான பற்றானது, அந்த அஞ்ஞான அரசவையின் ஒழுக்கச் சீர்கேட்டின் மத்தியில் பிரகாசமான ஒளியாக விளங்கியது. இன்றைய கிறிஸ்தவர்களிடம் காணப்பட வேண்டிய பயமின்மைக்கும் விசுவாசத்தன்மைக்கும் ஒரு மெய் உதாரணமாக விளங்குகிறான் தானியேல்.தீஇவ 542.1
அந்தத் தேசாதிபதிகள், அன்று முழுவதும் தானியேலைக் கண் காணித்தார்கள். மூன்று முறை அவன் தன் அறைக்குள் சென்றதைக் கண்டார்கள்; மூன்று முறை அவன் தன் சத்தத்தை உயர்த்தி, தேவனி டத்தில் பரிந்து வேண்டியதைக் கேட்டார்கள். மறுநாள் காலையிலே, ராஜாவுக்கு முன்பாக தங்கள் குற்றச்சாட்டைத் தெரிவித்தார்கள். ராஜாவின் மிகுந்த கனத்திற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமான அரச வைப் பிரமுகர் தானியேல். அவன் ராஜ கட்டளைக்கு எதிராகச் செயல்பட்டுவிட்டான். ‘’எந்த மனுஷனாகிலும் முப்பது நாள் வரை யில் ராஜாவாகிய உம்மைத் தவிர எந்த தேவனையானாலும் மனுஷ னையானாலும் நோக்கி யாதொரு காரியத்தைக்குறித்து விண்ணப் பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட வேண்டும் என்று நீர் கட்டளைப் பத்திரத்தில் கையெழுத்து வைத்தீர் அல்லவா?” என்று அவர்கள் அவருக்கு ஞாபகப்படுத்தினார்கள்.தீஇவ 542.2
’’அந்தக் காரியம் மேதியருக்கும் பெர்சியருக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்படி உறுதியாக்கப்பட்டதே” என்றான் ராஜா.தீஇவ 543.1
அவருடைய உயர் மதிப்பிற்குரிய ஆலோசகரின் நடவடிக்கை குறித்து, மிகவும் சந்தோஷத்துடன் தரியுவிடம் அறிவித்தார்கள். ‘’சிறைபிடிக்கப்பட்ட யூதேயா தேசத்தின் புத்திரரில் தானியேல் என்பவன் உம்மையும் நீர் கையெழுத்து வைத்துக்கொடுத்த கட்ட ளையையும் மதியாமல், தினம் மூன்று வேளையும் தான் பண்ணும் விண்ணப்பத்தைப் பண்ணுகிறான்’‘ என்றார்கள். தானி 6:13.தீஇவ 543.2
இந்த வார்த்தைகளைக் கேட்டதுமே, தன் உண்மை ஊழியனுக்கு விரிக்கப்பட்டிருந்தவலைகுறித்து அறிந்தான் ராஜா. ‘இராஜாவுக்கு மரியாதையும் மகிமையும் கொண்டுவரும் ஆர்வத்தினால் அல்ல, தானியேலின்மேல் கொண்ட பொறாமையினால்தான் அப்படியொரு அரசக்கட்டளையை இயற்ற அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்’ என் பதைக் கண்டுகொண்டான். அங்கு நிகழ்ந்த அத்தீமைக்குத் தான் துணைபோனதை எண்ணி, ‘மிகவும் சஞ்சலப்பட்டு தன் நண்பனைக் காப்பாற்ற சூரியன் அஸ்தமிக்கு மட்டும் அவன் பிரயாசப்பட்டுக் கொண்டிருந்தான். இராஜாவிடமிருந்து இப்படியொரு முயற்சியை எதிர்பார்த்திருந்த தேசாதிபதிகள் அவனிடம் வந்து, ‘ராஜா கட்ட ளையிட்ட எந்தத் தாக்கீதும் கட்டளையும் மாற்றப்படக்கூடாதென் பது மேதியருக் கும் பெர்சியருக்கும் பிரமாணமாயிருக்கிறதென்று அறிவீராக’‘ என்று சொன்னார்கள். அது முன்யோசனையின்றி இயற்றப்பட்ட கட்டளையாக இருந்தபோதிலும், அதில் மாற்றமேதும் செய்ய இயலாததாக, உடனே செயல்படுத்தப்பட வேண்டியதாக இருந்தது.தீஇவ 543.3
’அப்பொழுது ராஜா கட்டளையிட, அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து, அவனைச் சிங்கங்களின் கெபியிலே போட்டார் கள். ராஜா தானியேலை நோக்கி, ‘’நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார்” என்றான். ‘கெபியின் வாசம் லிலே ஒரு கல்வைக்கப்பட்டது. ‘தானியேலைப் பற்றிய தீர்மானம் மாற்றப்படாதபடிக்கு தன் மோதிரத்தினாலும் தன் பிரபுக்களின் மோதிரத்தினாலும் ‘ராஜாதாமே அதற்கு முத்திரை போட்டார். பின்பு ராஜா தன் அரமனைக்குப்போய், இராமுழுதும் போஜனம் பண்ணா மலும், கீத வாத்தியம் முதலானவைகளைத் தனக்கு முன்பாக வர வொட்டாமலும் இருந்தான்; அவனுக்கு நித்திரையும் வராமற்போ யிற்று .’தீஇவ 543.4
தானியேலைச் சிங்கக்கெபியில் போடாதவாறு அவனுடைய எதிரிகளை தேவன் தடுக்கவில்லை; தீய தூதர்களும் துன்மார்க்கரும்தீஇவ 543.5
தங்கள் நோக்கத்தை நிறைவேற்றுமளவிற்குத் தேவன் அவர்களை அனுமதித்தார்; ஆனால், தம்முடைய தாசனின் விடுதலையை அதிக விசேஷித்த தாக்குவதும், நீதிக்கும் சத்தியத்திற்கும் எதிரானவர் களின் தோல்வியை முழுதளவில் உறுதிப்படுத்துவதுமே அங்கு முக்கியமானதாயிருந்தது. ‘மனுஷனுடைய கோபம் உமது மகி மையை விளங்கப்பண்ணும்’ என்று சாட்சியளித்திருக்கிறான் சங் கீதக்காரன். சங் 76:10. அரசகட்டளையையும் மீறி, நீதியைப் பின் பற்றத் தெரிந்துகொண்ட இந்த ஒரே மனிதனின் உறுதியினால் சாத் தான் தோற்கடிக்கப்பட இருந்தான்; தேவனுடைய நாமம் உயர்த்தப் பட்டு, மகிமைப்பட இருந்தது.தீஇவ 544.1
தரியு ராஜா மறுநாள் அதிகாலமே கெபிக்குத் தீவிரமாய் ஓடிச் சென்று, ‘துயரச் சத்தமாய்’ ‘தானியலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங் கங்களுக்குத் தப்புவிக்கவல்லவராயிருந்தாரா?” என்று கேட்டான்.தீஇவ 544.2
’’ராஜாவே, நீர் என்றும் வாழ்க. சிங்கங்கள் என்னைச் சேதப் படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவை களின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால், அவருக்கு முன் பாக நான் குற்றமற்றவனாய்க்காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை” என்று தீர்க்கதரிசியிட மிருந்து பதில் வந்தது.தீஇவ 544.3
’அப்பொழுது ராஜா தன்னில் மிகவும் சந்தோஷப்பட்டு, தானி யேலைக் கெபியிலிருந்து தூக்கிவிடச் சொன்னான்; அப்படியே தானியேல் கெபியிலிருந்து தூக்கிவிடப்பட்டான். அவன் தன் தேவன் பேரில் விசுவாசித்திருந்தபடியால், அவனில் ஒரு சேதமும் காணப்பட வில்லை. ‘தானியேலின்மேல் குற்றஞ்சாட்டினமனுஷரையோவென் றால், ராஜா கொண்டுவரச் சொன்னான்; அவர்களையும் அவர்கள் குமாரரையும் அவர்கள் மனைவிகளையும் சிங்கங்களின் கெபி யிலே போட்டார்கள்; அவர்கள் கெபியின் அடியிலே சேருமுன்னே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து, அவர்கள் எலும்புகளையெல் லாம் நொறுக்கிப்போட்டது’.தீஇவ 544.4
தானியேலின் தேவனே மெய்யான தேவனென்று மேன்மைப் படுத்தி, யூதனல்லாத ஒரு மன்னன் மீண்டும் ஒருமுறை அறிக்கையிடு வதற்கு அது ஏதுவானது. பின்பு ராஜாவாகிய தரியு தேசமெங்கும் குடியிருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஜாதியாருக்கும் பாஷைக்கார் ருக்கும் எழுதினது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெரு கக்கடவது. என் ராஜ்யத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள் யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்பட வேண்டுமென்று என்னாலே தீர்மானம் பண்ணப்படுகிறது; அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிற வர்; அவருடைய ராஜ்யம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவு பரியந்தமும் நிற்கும். தானியேலைச் சிங்கங்களின் கைக்குத் தப்புவித்த அவரேதப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும், வானத்தி லும் பூமியிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிற வருமாயிருக்கிறார்’ என்று எழுதினான்.தீஇவ 544.5
தேவதாசனை எதிர்த்த துன்மார்க்கர் இப்போது முற்றிலும் முறிந்து போனார்கள். ‘தரியுவின் ராஜ்யபார காலத்திலும், பெர்சிய னாகிய கோரேசுடைய ராஜ்யபாரகாலத்திலும் தானியேலின் காரி யம் ஜெயமாயிருந்தது. ‘இம்மன்னர்கள் யூதர்களாயிராதபோதிலும், தானியேலுடன் கொண்டிருந்த தொடர்பின் மூலமாக, ‘’அவனுடைய தேவன், ஜீவனுள்ள தேவன்; அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக் கிறவர்; அவருடைய ராஜ்யம் அழியாதது” என்று ஒத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.தீஇவ 545.1
தாங்கள் நினைப்பதெல்லாம் கிடைத்து, எல்லாம் நடக்கிற நம் பிக்கையான சூழ்நிலையில் எப்படி இருக்கிறோமோ, அதுபோலவே சோதனை மிகுந்த காலத்திலும் இருக்க வேண்டுமென்பதை தானி யேலின் அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்ளவேண்டும். உன்னத மானவரின் தீர்க்கதரிசியாகவும் அமைச்சர்களில் முதல்வராகவும் இருந்தபோது எப்படி இருந்தாரோ, அதேபோன்ற மனநிலையில் தான் அவன் சிங்கக்கெபியிலும் இருந்தான். செல்வமும் மகிமையும் தேவ தயவும் நிறைந்த நாட்களில் இருந்தது போலவே சோதனை மிகுந்த காலத்திலும் தேவ பிள்ளைகள் இருப்பார்கள். விசுவாசமா னது கண்ணால் பார்க்கமுடியாதவற்றை மனதில் பார்த்து, நித்திய நிஜங்களைப் பற்றிப்பிடிக்கிறது.தீஇவ 545.2
நீதியின் நிமித்தம் துன்பப்படுகிறவர்களுக்குப் பரலோகம் மிக அருகாமையிலேயே இருக்கிறது. தமக்கு உண்மையாயிருப்போரின் நலன்களில்தான் கிறிஸ்து அக்கறை செலுத்துகிறார்; தம்முடைய பரிசுத்தவான்களின் நிமித்தம் பாடனுபவிக்கிறார்; அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களைத் தொடுகிற எவனும் அவரைத் தொடுகி றான். சரீரப்பிரகாரமாக நேரிடும் ஆபத்திலோதுன்பத்திலோ இருந்து விடுவிக்க சமீபமாக இருக்கும் அதே வல்லமைதான் பெரும் பாத கத்திலிருந்தும் இரட்சிக்க சமீபத்தில் இருக்கிறது. தேவ ஊழியன் எல்லாச் சூழ்நிலைகளிலும் தன் ஒழுக்கத்தைக் காத்துக்கொள்ளவும் தேவகிருபைமூலம் வெற்றிபெறவும் அது உதவுகிறது.தீஇவ 545.3
ஓர் அலுவலர் கண்டிப்பாக ஒரு தந்திர மந்திரியாகத்தான் இருக்கவேண்டுமென்பதல்ல; ஒவ்வொரு கட்டத்திலும் தேவனால் போதிக்கப்படும் ஒரு மனுஷனாகவும் இருக்கலாம். இந்த உண்மை யைத்தான் மேதிய பெர்சியா, பாபிலோன் ராஜ்யங்களில் அரசவைப் பிரமுகராக இருந்த தானியேலின் அனுபவம் வெளிப்படுத்துகிறது. பூமியின் மிகப்பெரும் ராஜ்யங்களின் பிரதம மந்திரியாக விளங்கின போதிலும், பரலோகத்தால் ஊக்கமடையத்தக்க வெளிச்சத்தைப் பெற்றுக்கொண்டு, தேவனுடைய தீர்க்கதரிசியாகவும் விளங்கி னான் தானியேல். அவன் நம்மைப்போலப்பாடுள்ள ஒரு மனிதனா யிருந்தும், அவனில் குற்றம் காணப்படவில்லையென வேதாகமம் விவரிக்கிறது. அவனுடைய அன்றாட அலுவல்கள், அவனுடைய எதிரிகளின் கூரிய ஆய்வுக்குள்ளானபோதும், அவற்றில் ஒரு குறை கூடக் காணப்படவில்லை. ஒருவன் எத்தகைய வேலை செய்கிறவனாக இருந்தாலும், அவனுடைய இருதயம் மாற்றப்பட்டு, பரிசுத்தமாக்கப் பட்டால், அவனுடைய நோக்கங்கள் தேவனுடைய பார்வையில் செம்மையானதாகக் காணப்பட்டால், அவன் எவ்வித முன்னேற்ற மடையலாம் என்பதற்கு தானியேல் ஒரு முன்னுதாரணம்.தீஇவ 546.1
பரலோக நிபந்தனைகளுக்கு முற்றிலும் ஒத்துப்போவது இவ் வுலக ஆசீர்வாதங்களையும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் கொண்டுவரும். தேவன்மேலுள்ள மெய்ப்பற்றில் தடுமாறாமலும், சுயத்தை அடக்குவதில் விட்டுக்கொடுக்காமலும் இருந்த தானி யேல், தன் உயர் மதிப்பாலும் நெறிதவறா ஒழுக்கத்தாலும், தான் வாலிபனாக இருந்தபோதே, தன்னைக் கண்காணிக்கும்படி நிய மிக்கப்பட்டிருந்த ஓர் அஞ்ஞான அதிகாரியின் தயவையும் இரக்கத் தையும் பெற்றான். தானி 1:9. அவனுடைய பின்னான வாழ்விலும் அதே குணநலன்களே காணப்பட்டன. சீக்கிரத்திலேயே, பாபிலோன் ராஜ்யத்தின் பிரதம மந்திரிப் பதவிக்கு அவன் உயர்ந்தான். அதன் பிறகு, ராஜ்யம் விழுந்து, வேறு சாம்ராஜ்யம் தோன்றி, அதில் அர சாண்ட மன்னர்களின் காலம் முழுவதிலும் அதே ஞானத்தோடும், அரசியல் நிர்வாகத்திறமையோடும் காணப்பட்டான். அவனுடைய சாமர்த்தியமும் நற்பண்புகளும், மேன்மையான உள்ளமும், கொள் கைப் பிடிப்பும் அதே பூரணத்துடன் காணப்பட்டன. எனவேதான், அவனைப் பகைத்தவர்கள்கூட, அவன் மேல் ஒரு முகாந்தரத்தை யும் குற்றத்தையும் கண்டுபிடிக்கக் கூடாதிருந்தது.தீஇவ 546.2
கனம் பெற்றவனாயிருந்தான் தானியேல். தேசத்தின் பொறுப்பு கள் அவனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன; உலகைக் கட்டுப்படுத்த வல்ல ராஜ்ய ரகசியங்கள் அவனிடம் தெரிவிக்கப்பட்டிருந்தன. தேவனாலும் தம் தூதுவனாகக்கனம் பெற்றிருந்தான். வருங்காலங் களின் மறைபொருள்கள் பற்றின அநேக தீர்க்கதரிசனங்களும் அவ னுக்குக் கொடுக்கப்பட்டிருந்தன. அவனுடைய பெயரால் அழைக் கப்படும் புத்தகத்தின் 7 முதல் 12 வரையிலான அதிகாரங்களில், அவன் பதிவுசெய்துள்ள அற்புத தீர்க்கதரிசனங்களை அத்தீர்க்க தரிசியால்கூட முற்றிலும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், ‘நாட்களின் முடிவில்’ உலக வரலாற்றின் இறுதிக்கட்டத்தில், தன் சுதந்தர வீதத்தில் பங்குகொள்ளும்படி அவன் மீண்டும் எழுப்பப் படுவான் எனும் பாக்கிய நம்பிக்கை, அவனுடைய வாழ்க்கையின் பிரயாசங்கள் ஓய்வதற்கு முன்னரே அவனுக்குக் கொடுக்கப்பட்டது. ‘இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்துவைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு’ என்று அவனுடைய தீர்க்கதரிசனப் பதிவுகள் குறித்துச் சொல்லப்பட்டது. ‘முடிவுகால மட்டும் அவை முத்திரிக்கப்பட்டு இருக்கவேண்டியிருந்தன. யேகோவாவின் அந்த உண்மை ஊழியனிடம், ‘இந்த வார்த்தைகள் முடிவு காலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும். நீயோவென்றால் முடிவு வருமட்டும் போயிரு; நீ இளைப்பாறிக் கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந் திருப்பாய்’ என்று மீண்டும் ஒருமுறை கட்டளையிட்டான் தூதன். தானி 12:4,9,13.தீஇவ 547.1
உலக வரலாற்றின் இறுதிக்கட்டத்தை நாம் நெருங்கிக் கொண் டிருக்கும் வேளையில், தானியேலால் எழுதிவைக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்கள் நம் கவனத்தை விசேஷமாக அழைக்கின்றன. ஏனெனில், நாம் வாழும் காலக்கட்டம் பற்றிதான் அவை சொல்கின் றன. புதிய ஏற்பாட்டிலுள்ள கடைசிப் புத்தகத்தின் போதனைகள் ளோடு அவற்றை நாம் தொடர்புபடுத்திப் படிக்கவேண்டும். தானி யேலின் புத்தகத்திலும் யோவானின் வெளிப்படுத்தல் புத்தகத்திலும் உள்ள தீர்க்கதரிசனப் பகுதிகள் புரிந்துகொள்ள முடியாதவை என்று கருதும்படி அநேகரை வழிநடத்தியுள்ளான் சாத்தான். ஆனால், அத் தீர்க்கதரிசனங்களை ஆராய விசேஷ ஆசீர்வாதங்கள் கொடுக்கப் படுமென்று தெளிவாக வாக்குரைக்கப்பட்டுள்ளது. பின்னான நாட் களில் முத்திரிக்கப்பட்ட நிலையிலேயே விளங்கவிருந்த தானி யேலின் தரிசனங்கள் குறித்து, ஞானவான்களோ உணர்ந்துகொள் வார்கள்’ என்று சொல்லப்பட்டது. வச.10. காலம் முழுவதிலும் தம் மக்களை வழிநடத்தும்படி, தம் தாசனாகிய யோவான் மூலமாகக் கிறிஸ்து அருளின் வெளிப்படுத்தல் குறித்து, ‘இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதி யிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள்’ என்று வாக்குரைக்கப்பட்டுள்ளது. வெளி 1:3.தீஇவ 547.2
தானியேல் மற்றும் வெளிப்படுத்தல் புத்தகங்களில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ள, தேசங்களின் விழுகை மற்றும் எழுகை மூலம், ‘வெறும் மேலோட்டமான உலக மேன்மை எத்துணை பயனற்றது’ என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். பாபிலோ னில் இருந்தது போன்ற மகிமையையும் மகத்துவத்தையும் இன் றைய நம் உலகம் காண வாய்ப்பே இல்லை . ஆனால், அந்த மகி மையும் மகத்துவமும் நிலையானது’ என்றும் என்றும் அழியாதது’ என்றும் அந்நாளின் மக்கள் கருதினார்கள். ஆனால், அவை யாவும் ஒன்றுமில்லாமல் போயின! ‘புல்லின் பூவைப்போல் ஒழிந்து போயின. ‘யாக் 1:10. அப்படியே மேதிய - பெர்சியா ராஜ்யமும் கிரேக்கம் மற்றும் ரோம் ராஜ்யங்களும் ஒழிந்து போயின. அப் படியே, தேவனைத் தன் அஸ்திபாரமாகக் கொண்டிராத எதுவும் அழியும். அவருடைய நோக்கத்தோடு கட்டப்பட்டு, அவருடைய குணத்தை வெளிப்படுத்துகிறது எதுவோ, அது மாத்திரமே நிலை நிற்கும். அவருடைய நியதிகள் மாத்திரமே, உலகத்திலுள்ள நிலை யான காரியங்களாகும்.தீஇவ 548.1
தேசங்களின் வரலாற்றிலும், இனி வரப்போகும் காரியங்கள் குறித்த வெளிப்பாட்டிலும் இருந்து தேவநோக்கத்தின் செயல்பாடு பற்றிக் கவனமாகப் படிக்கும்போது, காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமாகிய காரியங்களின் மெய்யான மதிப்பை நாம் மதிப்பிடவும், வாழ்வின் மெய்யான நோக்கம் என்ன என்பதை அறியவும் அது உதவியாயிருக்கிறது. ஆகவே, நித்தியத்தின் வெளிச்சத்தில், காலத்தின் காரியங்களைக் கண்ணோக்கினால், தானியேல் மற்றும் அவனுடைய நண்பர்களைப்போல நாமும் மெய் யானதும், மேன்மையானதும், நித்தியமானதுமான ஒன்றிற்காக வாழமுடியும். நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமானவருடைய ராஜ்யத்தின், அதாவது என்றென்றும் நிலைத்திருக்கப் போகும் அந் தப் பாக்கியமான ராஜ்யத்தின் நியதிகளை இவ்வாழ்க்கையில் கற் றுக்கொள்வதால், அவர் வருகையின்போது, அதன் சுதந்தரத்தில் அவரோடு சேர்ந்து நாமும் பிரவேசிக்க ஆயத்தமாகலாம்தீஇவ 548.2