Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    18 - தித்திப்பாக மாறிய தண்ணீர்

    முற்பிதாக்களின் நாட்களில் யோர்தான் பள்ளத்தாக்கு முழு வதும் நீர்வளம் பொருந்தியிருந்தது. கர்த்தருடைய தோட்டத்தைப் போல இருந்தது. வனப்புமிக்க இப்பள்ளத்தாக்கில்தான், லோத்து தங்கத் தீர்மானித்து, ‘சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான்’. ஆதி 13:10, 12. அந்தச் சமவெளியின் நகரங்கள் அழிக்கப் பட்ட சமயத்தில், அதனைச் சுற்றிலுமிருந்த பகுதி பாழ்நிலமாகியது. அது முதல் அது யூதேயாவின் ஒரு வனாந்தரப் பகுதியாயிற்று.தீஇவ 229.1

    மனிதமனதை மகிழ்ச்சியாக்கும் வற்றா நீரூற்றுகளும் நீரோ டைகளும் அழகான அப்பள்ளத்தாக்கின் ஒரு பகுதியில் அமைந் திருந்தன. தானிய வயல்களும், ஏராளமான பேரீச்சமரங்களும் கனிதரும் வேறு மரங்களும் நிறைந்த அப் பள்ளத்தாக்கில் தான் யோர்தானைக் கடந்துவந்த இஸ்ரவேல் சேனை கூடாரமிட்டு, வாக் குத்தத்த தேசத்தின் கனிகளை முதன் முதலில் ருசிபார்த்தது. கானா னியரின் சிலைவழிபாட்டு முறைகளிலேயே அதிக சீர்கேடும் இழி வானதுமான அஸ்தரோத் தொழுகையின் மையமாக விளங்கிய எரிகோவின் சுவர்கள் அங்கு அவர்களுக்குமுன் நின்றது. அந்த அஞ்ஞானிகளின் அரணாகத் திகழ்ந்த அச்சுவர்கள் தகர்க்கப்பட்டு, சீக்கிரமே தரைமட்டமாக்கப்பட்டன. அதன் குடிகள் கொல்லப்பட்ட னர். அது வீழ்ந்த நாளிலே, சகல இஸ்ரவேலருக்கும் முன்பாக இந்த முக்கிய அறிவிப்புக் கொடுக்கப்பட்டது: இந்த எரிகோ பட்டணத் தைக் கட்டும் படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக் கப்பட்டிருக்கக்கடவன்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடு கிறபோது தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிற போது தன் இளைய குமாரனையும், சாகக்கொடுக்கக்கடவன்.’ யோசுவா 6:26.தீஇவ 229.2

    ஐந்து நூற்றாண்டுகள் கடந்தன. தேவனால் சபிக்கப்பட்ட அந்த இடம் இன்னும் பாழாய்க் கிடந்தது. பள்ளத்தாக்கின் அப் பகுதியில் அதிக பொலிவுடன் ஓடிக்கொண்டிருந்த நீரூற்றுகளும் அந்தச் சாபத்தின் கொடிய விளைவுகளுக்கு ஆளாயின. ஆனால், அவபக்தி மிகுந்திருந்த ஆகாபின் நாட்களில், யேசபேலின் செல் வாக்கால் அஸ்தரோத்தின் வழிபாடு மீண்டும் தலைதூக்கியபோது, அத்தொழுகையின் புராதன ஸ்தலமான அந்நகரம் மீண்டும் கட்டப் பட்டது. ஆனால் அதனைக் கட்டினவன் அதற்குக் கொடுத்த விலை தான் கடுமையாக இருந்தது. பெத்தேல் ஊரானாகிய ஈயேல், ‘அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது, செகூப் என்னும் தன் இளையகுமாரனையும், சாகக் கொடுத்தான்.’ 1இராஜா 16:34.தீஇவ 230.1

    எரிகோவுக்கு அருகாமையில், கனிதரும் மரங்களுடைய தோட்டங்களின் நடுவில், தீர்க்கதரிசிகளுக்கான பள்ளிக்கூடங் களில் ஒன்று இருந்தது. எலியா பரலோகம் சென்ற பிற்பாடு, அப் பள்ளிக்குச் சென்றான் எலிசா. அவர்கள் மத்தியில் தீர்க்கதரிசி தங்கியிருந்த போது, அந்த நகரத்தின் மனிதர் அவனிடத்தில் வந்து, ‘’இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடி யிருப்புக்கு நல்லது; தண்ணீரோ கெட்டது. நிலமும் பாழ்நிலம்’‘ என்றார்கள். முந்தைய நாட்களில் அந்த நீரூற்று வற்றாததும் சுத்த மானதுமாக விளங்கியது; அந்நகரம் உட்பட சுற்றுப்புற வட்டாரத் தின் தண்ணீர் தேவையைச் சந்திப்பதில் பெரும் பங்காற்றியது; ஆனால் இப்பொழுதோ அது பயனற்றதாய் விளங்கியது.தீஇவ 230.2

    எரிகோ மனிதருடைய வேண்டுதலுக்குப் பிரதியுத்தரமாக, ‘ஒரு புதுத்தோண்டியை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டு வாருங்கள்” என்றான்; அதை அவனிடத்தில் கொண்டு வந்தபோது, அவன் நீருற்றண்டைக்குப் போய், உப்பை அதிலே போட்டு, இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இனி இதி னால் நிலப் பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார்’‘ என்றான் எலிசா. 2இராஜா 2:19-21.தீஇவ 230.3

    மனிதனுடைய ஞானத்தால் அல்ல, தேவனுடைய அற்புதத் தலையீட்டால், எரிகோவின் தண்ணீர் ஆரோக்கியமாயிற்று. அந் நகரை மீண்டுமாகக் கட்டினவர்கள், பரலோகத்தின் தயவைப்பெறத் தகுதியற்றவர்களானார்கள். ஆனாலும், ‘தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப் பண்ணுகிறவர்’ இஸ்ரவேலரை அவர்களுடைய ஆவிக்குரிய நோய்களிலிருந்து குணமாக்க தாம் விரும்புவதை, அந்த இரக்கமான செயல் மூலம் வெளிப்படுத்தினார். மத்தேயு 5:45.தீஇவ 231.1

    அந்த மாற்றம் நிரந்தரமானதாக இருந்தது. ‘எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்நாள் வரைக்கும் இருக் கிறபடி ஆரோக்கியமாயிற்று. ‘2இராஜா 2:22. அந்த நீரூற்றிலிருந்து காலம் காலமாகத் தண்ணீர் புறப்பட்டுச் சென்றது. அது பள்ளத்தாக் கின் அப்பகுதியை எழில்மிகுப் பாலைவனச் சோலையாக்கியது.தீஇவ 231.2

    தண்ணீர் ஆரோக்கியமாக்கப்பட்ட சம்பவத்திலிருந்து ஏராள மான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். புதிய சாபம், உப்பு, நீரூற்று போன்றவை அடையாளங்களாகக் கொடுக்கப்பட்டிருக் கின்றன.தீஇவ 231.3

    கசப்பான தண்ணீரில் உப்பைப் போட்டதில், எலிசாபோதித்த அதே ஆவிக்குரிய பாடத்தைத்தான், நீங்கள் பூமிக்கு உப்பாயிருக் கிறீர்கள்” என்று பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இயேசு தம் சீடர்க ளுக்குக் கற்றுக்கொடுத்தார். மத்தேயு 5:13. சீர்கெட்டிருந்த நீரூற் றில் கலந்த உப்பானது அதன் தண்ணீரைச் சுத்தப்படுத்தி, முன்பு கேடும் அழிவும் இருந்த இடத்தில் ஜீவனையும் ஆசீர்வாதத்தையும் கொண்டு வந்தது. தேவன் தம்முடைய பிள்ளைகளை உப்புக்கு ஒப் பிடுவதால், ‘தாம் அவர்களைத் தம்முடைய கிருபைக்குப் பாத் திரவான்களாக மாற்றுவதின் நோக்கம், அவர்கள் மற்றவர்களை இரட்சிக்கும் காரணிகளாக விளங்கவேண்டும் என்பதே’ எனும் பாடத்தை அவர்களுக்குக் கற்றுத்தர விரும்புகிறார். உலகத்தார் அனைவருக்கும் முன்பாக ஒரு கூட்டமக்களை தேவன் தேர்ந் தெடுக்கும் நோக்கம், அவர்களைத் தம் குமாரர்களாக, குமாரத்தி களாக ஏற்றுக்கொள்வது மாத்திரமல்ல; அவர்கள் மூலம் இரட்சிப் பின் கிருபையை உலகத்தார் ஏற்றுக்கொள்வதுமாகும். ஆபிரகாமை தேவன் தெரிந்து கொண்டது, அவன் தமது விசேஷித்த நண்பனாகத் திகழவேண்டும் என்பதற்காக மாத்திரமல்ல; ஜாதிகள்மேல் தாம் பொழிய விரும்பின விசேஷித்த சிலாக்கியங்களை எடுத்துச் செல் லும் ஒரு சாதனமாக அவன் விளங்கவும் வேண்டும் என்பதற் காகவும் ஆண்டவர் அவனைத் தேர்ந்தெடுத்தார்.தீஇவ 231.4

    மெய்க் கிறிஸ்தவத்தின் ஆதாரங்கள் உலகிற்குத் தேவை. பாவமென்னும் விஷம் சமுதாயத்தின் மத்தியிலே கிரியை செய்து கொண்டிருக்கிறது. நகரங்களும் பட்டணங்களும் பாவத்திலும் ஒழுக்கக்கேட்டிலும் ஊறிக்கொண்டிருக்கின்றன. வியாதியும் வேத னையும் அக்கிரமமும் உலகில் நிறைந்திருக்கின்றன. நம் பக்கத் திலும் தொலைவிலுமுள்ள ஆத்துமாக்கள் வெறுமையும் துக்கமும் கொண்டு, குற்ற உணர்வால் இளைத்து, இரட்சிக்கும் செல்வாக் கைக் கண்டுகொள்ளாது மடிகின்றன. சத்தியத்தின் சுவிசேஷம் எப் பொழுதும் அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், ஜீவனுக்கேதுவான வாசனை கொண்டிருக்கவேண்டிய வர்கள் மரணத்துக்கேதுவான வாசனை கொண்டிருப்பதால் மடி கிறார்கள். நித்திய ஜீவனுக்கேதுவான தண்ணீர் ஊறும் கிணறாக தாங்கள் திகழவேண்டிய நிலையில், அவர்களின் நீரூற்றுகள் கெட் டுப்போனதால் அவர்களின் ஆத்துமாக சப்பானதில் அருந்துகிறது.தீஇவ 232.1

    உப்பானது அது சேர்க்கப்படும் பொருளோடு கலக்க வேண் டும். அது பரவி, ஒன்றரக் கலந்தால்தான் அப்பொருள் பாதுகாக்கப் படும். அதுபோல, தனிப்பட்ட விதத்தில் தொடர்பு கொள்வதாலும் பழகுவதாலுமே இரட்சிக்கவல்ல சுவிசேஷத்தை மனிதரிடத்திற்குக் கொண்டு செல்ல முடியும். அவர்கள் கூட்டம் கூட்டமாக அல்ல; தனித்தனி நபர்களாகத்தான் இரட்சிக்கப்படுகிறார்கள். தனி நபர் செல்வாக்கு ஆற்றல்மிக்கதாகும். கிறிஸ்து உயர்த்துகிறதை உயர்த்து கிறதற்கும், சரியான நியதிகளைப் போதிப்பதற்கும், உலகின் சீர் கேடான போக்கைத் தடுத்து நிறுத்துவதற்கும் கிறிஸ்துவின் செல் வாக்கோடு சேர்ந்து அது செயலாற்ற வேண்டும். கிறிஸ்து மாத் திரமே அருளக்கூடிய கிருபையை அது உலகத்தாருக்குத் தெரியப் படுத்தவேண்டும். ஊக்கமான விசுவாசமும் அன்பும் இணைந்த, சிறப்பான முன்மாதிரியால் பிறருடைய வாழ்வையும் குணங்களை யும் இனிமையாக்கி அது மேன்மைப்படுத்தவேண்டும். தீஇவ 232.2

    எரிகோவில் அதுவரைக்கும் இருந்த கசப்பான நீரூற்றைக் குறித்து, ‘’இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இனி இத னால் சாவும் வராது, நிலப்பாழும் இராது” என்று கர்த்தர் சொன் னார். தேவனை விட்டுப் பிரிந்துள்ள ஆத்துமாவை அந்தக் கசப் பான நீரூற்று சுட்டிக்காட்டுகிறது. பாவமானது தேவனிடமிருந்து விலகச் செய்வது மாத்திரமல்ல, அவரை அறியும் திறனையும் ஆவ லையும் மனிதனுடைய ஆத்துமாவிலிருந்து அழித்துவிடுகிறது. பாவத்தினால் மனித உடலமைப்பு முழுவதுமாகச் சீர்கெடுகிறது; மனம் மாறுபாடுள்ளதாகிறது; எண்ணங்கள் கெட்டுப்போகின்றன; மனோசக்திகள் தரங்கெடுகின்றன. மெய்ப் பக்தியும் சுத்த இருதய மும் இல்லாமல் போகின்றன. ஆத்துமா பெலவீனமாகிறது, அதனை மேற்கொள்வதற்கான ஒழுக்கச் சக்திகள் இல்லாமையால், அது தரங் குறைந்து, சீர்கெடுகிறது.தீஇவ 232.3

    தூய்மையாக்கப்பட்ட இருதயமோ சகலவிதத்திலும் மாறின தாய் இருக்கிறது. கிறிஸ்து உள்ளே வாசம் பண்ணுவதை உலகிற்குக் காட்டும் சாட்சி குணமாற்றம்தான். தேவ ஆவியானவர் ஆத்துமா வில் புது ஜீவனை உண்டு பண்ணுகிறார். எண்ணங்களும் ஆசைகள் ளும் கிறிஸ்துவின் சித்தத்திற்குக் கீழ்ப்படியும்படி செய்கிறார்; மேலும் உள்ளான மனிதன் தேவ சாயலில் புதுப்பிக்கப்படுகிறான். குறைபாடுள்ள குணத்தைக் கிருபையினுடைய மீட்பின் வல்லமை யால், சீரானதாக, மிகுந்த கனிகொடுக்கத்தக்கதாக மாற்ற முடியும் என்பதைப் பெலவீனரும் பாவிகளுமான ஆண்களும் பெண்களும் உலகிற்குக் காட்டுகிறார்கள்.தீஇவ 233.1

    தேவ வார்த்தையை ஏற்றுக்கொள்ளும் இருதயம் நீராவியாகி வற்றும் குளத்தைப் போலவோ, உடைந்துபோய்த் தன் பொக்கி ஷத்தை இழக்கும் நீர்த்தேக்கம் போலவோ இருக்காது. அது வற் றாத நீரூற்றுகளால் ஊட்டம் பெறும் மலை நீரோடை போல் இருக் கும். அதன் குளிர்ச்சியான, குதூகலமான தண்ணீரானது, பாறை பாறையாகக் குதித்தெழுந்து போய், வருத்தப்பட்டுப் பாரஞ்சுமந்து, களைத்து, தாகத்தோடிருக்கிறவர்களைக் குளிர்ப்பிக்கும். அது எப் போதும் ஓடிக் கொண்டிருக்கும் ஓர் ஆற்றைப் போலாகும். அது முன்னேறிச் செல்லும்போது, அதன் ஜீவத்தண்ணீரானது பூமியெங் கும் பரவும்; விஸ்தாரப்படும்; ஆழமாகும். தன் வழியெல்லாம் பாடிக்கொண்டே செல்லும் நீரோடையானது, பசுமையையும் நன் மையான பயன்களையும் பின்னே விட்டுச் செல்லும். அதன் கரை யோரங்களில் இருக்கும் புல்லானது அதிக பசுமையோடு விளங் கும்; மரங்கள் அடர்த்தியான பசுமையோடு திகழும்; பூக்கள் ஏராள மாகப் பூத்திருக்கும். கோடைக்கால கடும் உஷ்ணத்தால், பூமி காய்ந்து வாடும் போது, அந்த ஆற்றின் செல்தடமெங்கும் பசுமை தலைகாட்டும்.தீஇவ 233.2

    உண்மையான தேவ பிள்ளையின் நிலையும் அப்படித்தான். எங்கும் பரவி உயிரூட்டுகிற ஒரு நியதியாகவும், செயல்படவல்ல ஓர் ஆவிக்குரிய சக்தியாகவும் கிறிஸ்துவின் மார்க்கம், தன்னை வெளிப் படுத்தியுள்ளது. சத்தியம், அன்பு எனும் பரலோகச் செல் வாக்கிற்கு இருதயம் திறக்கும்போது, பாலைவன நீரோடைகள் போல இந்நியதிகள் புறப்பட்டு ஓடும் ; இப்போது வெறுமையும் பற்றாக் குறையும் உள்ள இடத்தில் மிகுந்த பலன் உண்டாகும்படிச் செய்யும்.தீஇவ 234.1

    வேதாகமச் சத்தியத்தின் அறிவால் பரிசுத்தமாக்கப்பட்டு, தூய் மையாக்கப்பட்டவர்கள் ஆத்துமாக்களை இரட்சிக்கும் பணியில் முழுமனதுடன் ஈடுபடும்போது, ஜீவனுக்கேதுவான ஜீவ வாசனை யாக அவர்கள் மாறுவார்கள். வற்றாத நீரூற்றாகிய கிருபையிலும் அறிவிலும் இருந்து அனுதினமும் அவர்கள் பருகும்போது, தங் களுடைய எஜமானின் ஆவியால் நிறைந்து வழியுமட்டும் தங்கள் இருதயங்கள் நிரப்பப்படுவதைக் காண்பார்கள். அவர்களுடைய சுய நலமற்ற ஊழியத்தால் சரீர, மன, ஆவிக்குரிய ரீதியில் அநேகர் நலமடைகிறார்கள். களைத்துப் போனோர் புத்துணர்வு அடைகிறார் கள். நோயாளிகள் குணமடைகிறார்கள். பாவப்பாரம் நீக்கப்படும் கிறது. பாவத்தைச் சேவிப்பதிலிருந்து நீதியைச் சேவிக்க மாறின இருதயமுடையவர்களின் உதடுகளிலிருந்து ஏறெடுக்கப்படும் ஸ்தோத்திரம் தூரதேசங்களிலும் கேட்கப்படும்.தீஇவ 234.2

    ’கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்.’ ஏனெனில் தேவ வார்த்தையானது தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவ தண்ணீரின் துரவும் லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால் களும் ‘ போலிருக்கிறது. லூக்கா 6:38; உன்னதப்பாட்டு 4:15.தீஇவ 234.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents