Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    15 - யோசபாத்

    முப்பத்தைந்தாவது வயதில் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டான் யோசபாத். அதற்கு முன்பு, அங்கு ராஜாவாயிருந்த ஆசா, அவ னுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருந்தான். ஏனெனில், இக் கட்டான ஒவ்வொரு சமயத்திலும். அவன், ‘கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.’ 1இராஜா 5:11. யோசபாத் தன் னுடைய முப்பத்தைந்து வருட செழிப்பான ஆட்சியில், தன் தகப்ப னாகிய ஆசாவின் வழிகளிலெல்லாம் நடந்தான்.’தீஇவ 190.1

    சிலைவழிபாட்டிற்கு எதிராக ஓர் உறுதியான நிலையைத் தன்னுடைய குடிமக்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்று பெரு முயற்சியோடு அவர்களை வேண்டிக்கொண்டான். அது ஞான மான ஆளுகைக்கான முயற்சியாகும். ஆனாலும், அவனுடைய அரசாட்சிக்குட்பட்ட மக்கள் அநேகர், ‘மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தார்கள்’. 1இராஜா 22:43. அந்த விக்கிரகஸ்தலங் களை எல்லாம் ராஜா உடனடியாக அழித்துவிடவில்லை. ஆனால், ஆகாபின் ஆளுகையின்கீழ் வட ராஜ்யத்தில் காணப்பட்ட பாவங் களிலிருந்து யூதாவைப் பாதுகாக்க ஆரம்பத்திலிருந்தே முயன்றான். இருவரும் சமகாலத்தில் அநேகவருடங்கள் அரசாண்டார்கள். யோச பாத்தானே தேவனிடத்தில் உண்மையுள்ளவனாயிருந்தான். அவன் பாகால்களைத் தேடாமல், தன் தகப்பனாகிய தாவீது முன் நாட் களில் நடந்த வழிகளில் நடந்து, தன் தகப்பனுடைய தேவனைத் தேடி, இஸ்ரவேலுடைய செய்கையின்படி நடவாமல், அவருடைய கற்பனைகளின்படி நடந்துகொண்டான். அவனுடைய உத்தமத்தின் நிமித்தம், கர்த்தர் அவனோடிருந்து, ‘அவன்கையில்ராஜ்யபாரத்தைத் திடப்படுத்தினார்.’ 2நாளா 17:3-5.தீஇவ 190.2

    ’யூதா கோத்திரத்தார் எல்லாரும் யோசபாத்துக்குக் காணிக்கை களைக் கொண்டுவந்தார்கள்; அவனுக்கு ஐசுவரியமும் கனமும் மிகுதியாயிருந்தது. கர்த்தருடைய வழிகளில் அவன் இருதயம் உற்சாகங்கொண்டது ;’ காலம் செல்லச் செல்ல சீர்திருத்த வேலைகள் நடைபெற்றபோது, அவன், ‘மேடைகளையும் விக்கிரகத் தோப்பு களையும் யூதாவை விட்டகற்றினான். ‘வச. 5, 6. ‘தன் தகப்பனாகிய ஆசாவின் நாட்களில் மீதியாய் விட்டிருந்த இலச்சையான புணர்ச்சிக் காரரையும் அவன் தேசத்திலிருந்து அற்றுப்போகப்பண்ணினான்.’ 1இராஜா 22:46. இப்படியாகத் தங்களுடைய ஆவிக்குரிய வளர்ச் சிக்குத் தடையாகத் தங்களை அச்சுறுத்திக்கொண்டிருந்த அநேக மோசங்களிலிருந்து யூதாவின் மக்கள் படிப்படியாக விடுவிக்கப் பட்டார்கள்.தீஇவ 191.1

    ராஜ்யம் முழுவதிலும் மக்களுக்குத் தேவ பிரமாணத்தைப் போதிக்கவேண்டியது அவசியமாயிருந்தது. அந்தப் பிரமாணத்தை அறிவதில்தான் அவர்களின் பாதுகாப்பு இருந்தது; அதன் நிபந் தனைகளுக்கு ஏற்றவாறு வாழ்வதில்தான், தேவனுக்கும் மனி தனுக்கும் உண்மையுள்ளவர்களாகத் திகழக்கூடிய நிலை இருந் தது. இதை அறிந்தே, தன்னுடைய மக்களுக்கு வேதவாக்கியங்களை நன்கு போதிக்கத் தேவையான முயற்சிகளை எடுத்தான் யோசபாத். அந்த ஊழியத்தை உண்மையோடு செய்து, போதிப்பதற்கு ஆசா ரியர்களை நியமிக்குமாறு, தன்னுடைய ஆட்சியின் வெவ்வேறு பகுதிகளிலிருந்த பிரபுக்களுக்குக் கட்டளையிட்டான். மன்னனால் நியமிக்கப்பட்ட இந்தப் போதகர்கள், பிரபுக்களின் நேரடிப் பார் வையில் பணிபுரிந்து, ‘யூதாவின் பட்டணங்களிலெல்லாம் திரிந்து, ஜனங்களுக்குப் போதித்தார்கள்.’ 2நாளா 17:7-9. தேவ நிபந்தனை களை அறிந்து, பாவத்தை விட்டு விலக, அநேகர் பெரு முயற்சி எடுத்துக்கொண்டபோது, அங்கு ஓர் எழுப்புதல் ஏற்பட்டதுதீஇவ 191.2

    தன்னுடைய குடிமக்களின் ஆவிக்குரிய தேவைகளைச் சந் திக்கும் அந்த ஞானமான காரியத்திற்காக அரண்மனைச் சொத்தி லிருந்து ஏராளமாகக் கொடுத்தான் யோசபாத். தேவபிரமாணத்திற் குக் கீழ்ப்படிவதால் அதிக ஆதாயம் உண்டு. தேவ நிபந்தனை களுக்கு ஒத்துப்போவதால், சீர்திருத்துகிற வல்லமை ஏற்படும். அது மனிதர்மத்தியில் சமாதானத்தையும் நன்மையையும் கொண்டு வரும். ஒவ்வோர் ஆண்-பெண்ணின் வாழ்வைக் கட்டுப்படுத்துகிற செல்வாக்காக தேவ வார்த்தையின் போதனைகள் விளங்குமா னால், அவற்றின் கட்டுப்படுத்தும் வல்லமைக்குள் இருதயமும் மனதும் கொண்டுவரப்படுமானால், தேசிய வாழ்விலும் சமுதாய வாழ்விலும் தற்போது காணப் படும் தீமைகளுக்கு இடமில்லாமல் போகும். ஒழுக்கச் சிந்தையிலும் ஆவிக்குரிய சிந்தையிலும் ஆண் களையும் பெண்களையும் பெலப்படுத்துகிற செல்வாக்கு ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் புறப்பட்டுச் செல்லவேண்டும். அப்பொழுது, தேசத்தாரும் தனிப்பட்ட மனிதர்களும் அனுகூலம் அடைவார்கள்.தீஇவ 192.1

    சுற்றிலுமிருந்த தேசங்களின் இடையூறின்றி அநேக வருடங் கள் சமாதானத்தோடு வாழ்ந்தான் யோசபாத். ‘யூதாவைச் சுற்றி யிருக்கிறதேசங்களுடைய ராஜ்யங்களின் மேலெல்லாம் கர்த்தரால் உண்டான பயங்கரம் வந்தது. ‘வச . 10. பெலிஸ்தியர்களும் அவ னுக்குக் கப்பம் கட்டினார்கள்; வெகுமதிகளைக் கொண்டு வந்தார் கள். அரபியரும் அவனுக்கு ஏராளமான ஆடுகளையும் வெள்ளாட்டுக் கடாக்களையும் கொண்டுவந்தார்கள். ‘இப்படியே யோசபாத் வரவர மிகவும் பெரியவனாகி, யூதாவிலே கோட்டைகளையும், ரஸ்துக் களை வைக்கும் பட்டணங்களையும் கட்டினான். பராக்கிரமசாலி களான சேவகர் அவனுக்கு இருந்தார்கள். ராஜா யூதா எங்குமுள்ள அரணான பட்டணங்களில் வைத்தவர்களைத் தவிர இவர்களே ராஜாவைச் சேவித்தார்கள்’. வச. 12-19. அவனுக்கு மிகுந்த ஐசு வரியமும் கனமும் உண்டாயிருந்ததால், சத்தியத்திற்காகவும் நீதிக் காவும் ஒரு பலத்த தாக்கத்தை ஏற்படுத்த அவனால் முடிந்தது. 2நாளா 18:1.தீஇவ 192.2

    சிங்காசனம் ஏறிய சில வருடங்களில் செழிப்பின் உச்சிக்குச் சென்ற யோசபாத், யேசபேலுக்கும் ஆகாபிற்கும் மகளான அத்தா லியாளைத் தன்னுடைய குமாரனாகிய யோராமுக்குத் திருமணம் பண்ண இணங்கினான். இந்தச் சம்பந்தத்தால், யூதா ராஜ்யத்திற்கும்தீஇவ 192.3

    தேவனே நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில்
    அனுகூலமான துணையுமானவர்.
    சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்;
    யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்.
    தீஇவ 194.1

    சங்கீதம் 46:1,7 இஸ்ரவேல்ராஜ்யத்திற்கும் இடையே தேவனுடைய முறைமைக்கு முரணான ஒரு கூட்டணி உருவானது. நெருக்கடியான நேரங்களில் ராஜாவிற்கும் அவனுடைய குடிமக்கள் அநேகருக்கும் அது பேரழி வைக் கொண்டு வந்தது.

    ஒருமுறை, சமாரியாவிலிருந்த இஸ்ரவேலின் ராஜாவைச் சந்திக்கச் சென்றான் யோசபாத். எருசலேமின் அரசனுக்கு அங்கு விசேஷித்த வரவேற்பு கொடுக்கப்பட்டது. அந்தச் சந்திப்பின் முடிவில், சீரியருக்கு எதிராக யுத்தத்திற்குச் செல்ல இஸ்ரவேலின் ராஜாவோடு இணையுமாறு அவன் கேட்டுக்கொள்ளப்பட்டான். தன்னுடைய படைகளோடு யூதாவின் படைகளும் சேர்ந்துகொண் டால், ராமோத்தைத் திரும்பப் பெற்றுவிடலாம் என்று நினைத்தான் ஆகாப். ஏனெனில், அரணான பட்டணங்களில் ஒன்றான அந்தப் புராதனப் பட்டணம் முறைப்படி இஸ்ரவேலுக்கே சொந்தமானது என்று மனப்பூர்வமாக அவன் நம்பினான்.தீஇவ 195.1

    ஒரு கணத்தில் மதி இழந்தவனாய், சீரியருக்கு எதிரான யுத்தத் தில் இஸ்ரவேலின் ராஜாவோடு சேர்ந்துகொள்வதாக அவசரப் பட்டு வாக்களித்தான் யோசபாத். ஆனாலும், அந்தக் காரியத்தில் தேவ சித்தத்தை அறிந்துகொள்ளும்படி அவனுடைய பகுத்தறிவு அவனைத் தூண்டியது. ‘’கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும்” என்று ஆகாபிடம் வேண்டிக்கொண்டான். அதன் விளைவாக, சமாரியாவின் நானூறு கள்ளத்தீர்க்கதரிசிகளை அழைப்பித்த ஆகாப், ‘’கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம் பண்ணப் போகலாமா, போகலாகாதா?” என்று அவர்களிடம் கேட் டான். அதற்கு அவர்கள், போம், அதை ராஜாவின் கையில் தேவன் ஒப்புக்கொடுப்பார்” என்றார்கள். வச. 4, 5.தீஇவ 195.2

    இவர்கள் பேச்சால் திருப்தியடையாத யோசபாத் மெய்யா கவே தேவ சித்தத்தை அறிய விரும்பினான். ‘’நாம் விசாரித்து அறி கிறதற்கு இவர்களையல்லாமல் கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா?” என்று கேட்டான். வசம். அதற்கு ஆகாப், ‘’கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்பவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன்’‘ என்றான். அதற்கு யோசபாத், ‘’ராஜாவே , அப்படிச் சொல்லவேண்டாம்’‘ என்றான். 1இராஜா22:8. அந்தத் தேவ மனிதனை அழைத்து வர. வேண்டுமென உறுதியுடன் கோரிக்கை விடுத்தான் யோசபாத். அவர்களுக்கு முன் கொண்டுவரப்பட்ட மிகாயாவிடம், ‘’கர்த்தரு டைய நாமத்திலே உண்மையை அல்லாமல் வேறொன்றையும் என் னிடத்தில் சொல்லவேண்டாம்” என்று உத்தரவிட்டான் ஆகாப். அப்பொழுது மிகாயா, இஸ்ரவேலரெல்லாரும் மேய்ப்பன் இல் லாத ஆடுகளைப்போல மலைகளிலே சிதறப் பட்டதைக் கண்டேன்; அப்பொழுது கர்த்தர், ‘ இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பக்கடவர்கள்’ என்றார்” என்று சொன்னான். வச. 16, 17.தீஇவ 195.3

    தங்களுடைய திட்டத்திற்குப் பரலோகத்தின் சம்மதம் இல்லை என்பதை ராஜாக்கள் இருவரும் அறிவதற்குத் தீர்க்கதரிசியின் வார்த்தைகள் போதுமானதாய் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர்களில் ஒருவர்கூட அந்த எச்சரிப்பிற்குச் செவிசாய்க்கவிரும்ப வில்லை. திட்டத்தை வகுத்துவிட்ட ஆகாப் அதைச் செய்து முடிப்பதில் உறுதியாக இருந்தார். ‘’உம்மோடேகூடயுத்தத்திற்கு வருகிறேன்’‘ என்று வாக்களித்திருந்தான் யோசபாத். 2நாளா 18:3. அப்படியொரு வாக்குறுதியைக் கொடுத்த பிறகு, தன்னுடைய படைகளைத் திரும் பப் பெற்றுக்கொள்ள அவருக்கு மனதில்லை. ஆகவே, ‘’இஸ்ர வேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலே யாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள். ‘’1இராஜா 22:29.தீஇவ 196.1

    அன்று நடைபெற்ற யுத்தத்தில், அம்பால் குத்துண்ட ஆகாப், சாயங்காலத்தில் இறந்து போனான். ‘’பொழுதுபோகும்போது அவரவர் தம்தம் பட்டணத்திற்கும், அவரவர் தம்தம் தேசத்திற்கும் போகலாம் என்று இராணுவத்தில் பறைசாற்றப்பட்டது. ‘’1இராஜா 22:36. இப்படியாகத் தீர்க்கதரிசியின் வார்த்தை நிறைவேறிற்று.தீஇவ 196.2

    பேரழிவை உண்டு பண்ணின அந்த யுத்தத்திலிருந்து எருசலே மிற்குத் திரும்பினான் யோசபாத். அவன் பட்டணத்தைச் சென்ற டைந்தபோது, தீர்க்கதரிசியாகிய யெகூ அவனைச் சந்தித்து, கடிந்து கொண்டான். ‘’துன்மார்க்கனுக்குத் துணை நின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதினிமித்தம் கர்த்த ருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது. ஆகிலும் நீர்விக்கிரகத் தோப்புகளை தேசத்தை விட்டகற்றி, தேவனைத் தேட உம்முடைய இருதயத்தை நேராக்கின் விஷயத்தில் நன்மையான காரியங்கள் உம்மிடத்தில் காணப்பட்டது உண்டு’‘ என்றான். 2நாளா 19:2,3.தீஇவ 196.3

    தேசிய ரீதியிலும் ஆவிக்குரிய ரீதியிலும் யூதாவைப் பெலப் படுத்துவதிலேயே யோசபாத் தன்னுடைய பின்னான நாட்களை அதிகமாகச் செலவிட்டான். அவன், ‘பெயர்செபா தொடங்கி, எப்பிராயீம் மலைத்தேசமட்டுமுள்ள ஜனத்திற்குள்ளே பிரயாண மாய்ப் போய், அவர்களைத் தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் இடத்திற்குத் திரும்பப்பண்ணினான். ‘ வச. 4.தீஇவ 197.1

    நீதிமன்றங்களை அமைத்து, அவற்றைத் திறம்பட நடத்தியது தான், அவனுடைய முக்கிய முயற்சிகளில் கவனிக்கத்தக்கதாகும். அவன் யூதாவின் அரணான பட்டணங்களாகிய ஒவ்வொரு பட்ட ணத்திலும் நியாயாதிபதிகளை வைத்து, அந்த நியாயாதிபதிகளை நோக்கி, ‘’நீங்கள் செய்கிற காரியத்தைக் குறித்து எச்சரிக்கையா யிருங்கள்; நீங்கள் மனுஷனுடைய கட்டளையினால் அல்ல கர்த்த ருடைய கட்டளையினால் நியாயம் விசாரிக்கிறீர்கள்; நியாயம் விசாரிக்கிற விஷயத்திலே அவர் உங்களுடனே இருக்கிறார். ஆதலால் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் உங்களிடத்தில் இருக் கக்கடவது, எச்சரிக்கையாயிருந்து காரியத்தை நடத்துங்கள்; உங் கள் தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் முகத்தாட்சிணிய மும் இல்லை, பரிதானமும் அவரிடத்திலே செல்லாது’‘ என்றான். வச.5-7.தீஇவ 197.2

    மேல்முறையீடு செய்வதற்காக எருசலேமில் ஒரு நீதிமன்றம் அமைத்து, நீதித்துறையைப் பூரணப்படுத்தினான் யோசபாத். அங்கு, ‘லேவியரிலும் ஆசாரியரிலும் இஸ்ரவேலுடைய வம்சத் தலைவரிலும் சிலரைக் கர்த்தருடைய நியாயங்களைக் குறித்தும் விவாத விஷயங்களைக் குறித்தும் விசாரிக்கும்படி நியமித்தான்.’ வச 8.தீஇவ 197.3

    அந்த நியாயாதிபதிகளிடம் உண்மையாயிருக்கும்படி புத்தி கூறினான் ராஜா. நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, உண்மையோடும் உத்தம் இருதயத்தோடும் நடந்துகொள்ளுங்கள். நானாவித இரத் தப்பழிச் சங்கதிகளும், பிரமாணத்திற்கும், கற்பனைக்கும், கட்ட ளைகளுக்கும், நியாயங்களுக்கும் அடுத்த நானாவித வழக்குச் சங் கதிகளும், தங்கள் பட்டணங்களிலே குடியிருக்கிற உங்கள் சகோ தரரிடத்திலிருந்து உங்களிடத்தில் வரும்போது, அவர்கள் கர்த் தருக்கு நேரஸ்தராகாதபடிக்கும், உங்கள்மேலும் உங்கள் சகோதரர் மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் அவர்களை எச்சரி யுங்கள்; நீங்கள் இப்படிச் செய்தால் நேரஸ்தராக மாட்டீர்கள்.தீஇவ 197.4

    ’’இதோ, ஆசாரியனாகிய அமரியா கர்த்தருக்கடுத்த எல்லா நியாயத்திலும், இஸ்மவேலின் குமாரனாகிய செபதியா என்னும் யூதா வம்சத்தின் தலைவன் ராஜாவுக்கடுத்த எல்லா நியாயத்திலும் உங்களுக்கு மேலான நியாயாதிபதிகள்; லேவியரும் உங்கள் கைக் குள் உத்தியோகஸ்தராயிருக்கிறார்கள்.தீஇவ 198.1

    ’’நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்த மனுக்குக் கர்த்தர் துணை” என்று கட்டளையிட்டான். வச 10, 11.தீஇவ 198.2

    தன்னுடைய குடிமக்களின் உரிமைகளையும் சுதந்தரத்தையும் அக்கறையோடு பாதுகாத்துக் கொண்டதின் மூலம், சகலத்தையும் நீதியோடு அரசாளும் தேவன் மனித இனத்தின் ஒவ்வொரு உறுப்பி னர் மேலும் காட்டும் அக்கறையை முக்கியப்படுத்திக் காட்டினான் யோசபாத். ‘தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்’ தேவனால் நியாயாதிபதிகளாய் நியமிக்கப்பட்டவர்கள், ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ் செய்து சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்ற வனுக்கும் நீதி செய்யவேண்டும் மேலும், ‘துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கவேண்டும்.’ சங் 82:1, 3, 4.தீஇவ 198.3

    யோசபாத்துடைய அரசாட்சியின் முடிவுக்கட்டத்தில் யூதா ராஜ்யம் முற்றுகையிடப்பட்டது. அந்தச் சேனையைக் கண்டு யூதா வின் குடிமக்கள் நடுங்கினார்கள். அதற்குக் காரணமிருந்தது. ‘மோவாப்புத்திரரும் அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம் மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம் பண்ண வந்தார்கள். இந்த முற்றுகையின் செய்தியைத் தூதுவன் ஒருவன் ராஜாவினிடத்தில் அறிவித்தான்: ‘’உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கரை யிலிருக்கிற சீரியாவிலிருந்து வருகிறார்கள்; இதோ, அவர்கள் எங் கேதியாகிய ஆசோன் தாமாரில் இருக்கிறார்கள்” என்றான். ராஜா திகைத்துப்போனான். 2நாளா 20:1,2.தீஇவ 198.4

    வீரமும் தீரமும் மிக்கவன் யோசபாத். அநேக வருடங்களாகப் பட்டணங்களுக்குக் கோட்டைகள் அமைத்து, தன்னுடைய சேனை யைப் பெலப்படுத்தி வந்தான். எத்தகைய எதிரியையும் சந்திக்க அவன் ஆயத்தமாகியிருந்தான். ஆனாலும், இந்த நெருக்கடியான கட்டத்தில், மனித புயத்தை அவன் நம்பவில்லை. தேசத்தாரின் கண்களுக்கு முன்பாக யூதாவைத்தாழ்த்திப் போடுவதாகப் பெருமை பாராட்டின அஞ்ஞான மக்களை பயிற்சிமிக்க சேனையாலோ, அரணான பட்டணங்களாலோ அல்ல; இஸ்ரவேலின் தேவன் பேரி லுள்ள மெய் விசுவாசத்தால் ஜெயங்கொள்ள தைரியம் வந்தது.தீஇவ 198.5

    ’அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான். அப் படியே யூதா ஜனங்கள் கர்த்தரிடத்திலே சகாயந்தேடக் கூடினார்கள்; யூதாவிலுள்ள எல்லாப் பட்டணங்களிலும் இருந்து அவர்கள் கர்த் தரைத் தேட வந்தார்கள்’.தீஇவ 199.1

    தன் ஜனங்களுக்கு முன்பாகத் தேவாலயத்தின் முற்றத்தில் நின்று கொண்டு, தேவவாக்குத்தத்தங்களைக் கூறி வேண்டினான்; இஸ்ரவேலின் உதவியற்ற நிலையை அறிக்கையிட்டான்; தன் முழு ஆத்துமாவோடும் ஜெபித்தான் யோசபாத். ‘எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, பரலோகத்திலிருக்கிற நீர் அல்லவோ தேவன்; தேவரீர்ஜாதிகளுடைய ராஜ்யங்களையெல்லாம் ஆளுகிற வர்; உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக் கிறது, ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்கக்கூடாது. எங்கள் தேவ னாகிய நீர் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாக இந்தத் தேசத்துக் குடிகளைத் துரத்திவிட்டு, இதை உம்முடைய சிநேகிதனாகிய ஆபிரகாமுடைய சந்ததிக்கு என்றென்றைக்கு மென்று கொடுக்கவில்லையா? ஆதலால், அவர்கள் இங்கே குடி யிருந்து, இதிலே உம்முடைய நாமத்திற்கென்று ஒரு பரிசுத்த ஸ்தலத் தைக் கட்டினார்கள். எங்கள் மேல் பட்டயம், நியாயதண்டனை, கொள்ளை நோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால், அப்பொழுது உம்முடைய நாமம் இந்த ஆலயத்தில் விளங்குகிறபடியால், நாங்கள் இந்த ஆலயத்திலும் உமது சந்ததியிலும் வந்து நின்று, எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள்.தீஇவ 199.2

    ’இப்போதும், இதோ, இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து வருகிறபோது, அம்மோன் புத்திரர், மோவாபியர், சேயீர் மலைத் தேசத்தாருடைய சீமைகள் வழியாய்ப் போக நீர் உத்தரவு கொடுக் கவில்லை; ஆகையால் அவர்களை விட்டு விலகி, அவர்களை நாசப்படுத்தாதிருந்தார்கள். இப்போதும் , இதோ, அவர்கள் எங்க ளுக்கு நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டி, தேவரீர் எங்களைச் சுதந்தரிக்கப் பண்ணின் உம்முடைய சுதந்தரத்திலிருந்து எங்களைத் துரத்திவிட வருகிறார்கள். எங்கள் தேவனே, அவர்களை நீர் நியா யந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராள மான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரிய வில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண் டிருக்கிறது’ என்று வேண்டிக் கொண்டான். வச.3-12.தீஇவ 199.3

    ’எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது’ என்று கர்த்தரை நோக்கி நம்பிக்கையோடு யோசபாத் சொல்ல முடிந் தது. முற்காலங்களில், தாம் தெரிந்துகொண்டவர்களை, தம் குறிக் கீட்டால் கொடிய அழிவிலிருந்து அடிக்கடி காப்பாற்றி வந்தவரை நம்புமாறு பல வருடங்கள் தன் ஜனங்களுக்குப் போதித்து வந்திருந் தான் யோசபாத். ராஜ்யம் பெரும் ஆபத்திற்குள்ளான போதும், அவன் தனியனாக இல்லை. ‘யூதா கோத்திரத்தார் அனைவரும் அவர் கள் குழந்தைகளும், அவர்கள் பெண் ஜாதிகளும், அவர்கள் குமார ருங்கூடக் கர்த்தருக்கு முன்பாக நின்றார்கள். ‘வச 13. ஜெபத்திலும் உபவாசத்திலும் தரித்திருந்தார்கள்; யேகோவாவின் நாமம் மகிமைப் படதங்கள் சத்துருக்கள் கலங்கவேண்டுமென கர்த்தரிடத்தில் ஒரு மனதோடே வேண்டிக்கொண்டார்கள்.தீஇவ 200.1

    ’தேவனே, மவுனமாயிராதேயும்,
    பேசாமலிராதேயும்; தேவனே, சும்மாயிராதேயும்.
    இதோ, உம்முடைய சத்துருக்கள் கொந்தளித்து,
    உம்முடைய பகைஞர் தலையெடுக்கிறார்கள்.
    உமது ஜனத்துக்கு விரோதமாக உபாயதந்திரங்களை யோசித்து
    உமதுமறைவிலிருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைபண்ணுகிறார்கள்.
    அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும்,
    இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக,
    அவர்களை அதம்பண்ணுவோம்” வாருங்கள் என்கிறார்கள்.
    இப்படி, ஏதோமின் கூடாரத்தாரும்,
    இஸ்மவேலரும், மோவாபியரும்,
    ஆகாரியரும் கேபாலரும் அம்மோனியரும், அமலேக்கியரும்,
    ஏகமன நிர்ணயமாய் ஆலோசனை செய்து,
    உமக்கு விரோதமாய் ஒப்பந்தம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
    மீதியானியருக்குச் செய்ததுபோலவும்,
    கீசோன் என்னும் ஆற்றண்டை சிசெரா,
    யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும்,
    அவர்களுக்குச் செய்யும்.
    யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே
    பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி,
    அவர்கள் என்றைக்கும் வெட்கிக் கலங்கி,
    நாணமடைந்து அழிந்துபோவார்களாக.
    தீஇவ 200.2

    சங்கீதம் 83

    தங்கள் அரசனோடு ஜனங்களும் சேர்ந்துகொண்டு, தேவனுக்கு முன் தங்களைத் தாழ்த்தி, அவரிடத்தில் உதவி வேண்டின் போது, யகாசியேல் என்னும் ‘ஆசாப்பின் புத்திரரில் ஒருவனான லேவியன் மேல் ‘கர்த்தருடைய ஆவி இறங்கினது. அவன் சொன்னதாவது:தீஇவ 201.1

    ’’சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜா வாகிய யோசபாத்தே, கேளுங்கள்; நீங்கள் அந்த ஏராளமான கூட் டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல; தேவனுடையது. நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள்; இதோ, அவர்கள் சிஸ் என்னும் மேட்டு வழியாய் வரும் கிறார்கள்; நீங்கள் அவர்களை யெருவேல் வனாந்தரத்திற்கு எதி ரான பள்ளத்தாக்கின் கடையாந்தரத்திலே கண்டு சந்திப்பீர்கள். இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனு ஷரே, எருசலேம் ஜனங் களே, நீங்கள் தரித்து நின்று கர்த்தர் உங்க ளுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப் படாமலும் கலங் காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங் கள்; கர்த்தர் உங்களோடே இருக்கிறார்’‘ என்றான்.தீஇவ 201.2

    ’அப்பொழுது யோசபாத் தரைமட்டும் முகங்குனிந்தான்; சகல யூதா கோத்திரத்தாரும் எருசலேமின் குடிகளும் கர்த்தரைப் பணிந்து கொள்ளக் கர்த்தருக்கு முன்பாகத் தாழவிழுந்தார்கள். கோகாத்தி யரின் புத்திரரிலும் கோராகியரின் புத்திரரிலும் இருந்த லேவியர் எழுந்திருந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகா சத்தத் தோடே கெம்பீரமாய்த் துதித்தார்கள்.’தீஇவ 201.3

    அவர்கள் அதிகாலமே எழுந்து, தெக்கொவாவின் வனாந்தரத் திற்குச் சென்றார்கள். அவர்கள் யுத்தத்திற்குச் செல்லும் வேளை யில் யோசபாத் அவர்களிடம், ‘’யூதாவே, எருசலேமின் குடிகளே , கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொ ழுது நிலைப் படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்தி பெறுவீர்கள்” என்றான். பின்பு அவன் ஜனத் தோடே ஆலோசனைபண்ணி, பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்துபோய், கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளதென்று கர்த்த ரைப் பாடவும், பாடகரை நிறுத்தினான். ‘2நாளா 20:14-21. அந்தப் பாடகர்கள் வெற்றியின் வாக்குத்தத்தத்திற்காகத் தேவனைத் துதித்து, தங்கள் சத்தத்தை உயர்த்தியவாறு படைக்குமுன் சென்றார்கள்.தீஇவ 201.4

    பாடல் பாடிக் கர்த்தரைத் துதித்தும், இஸ்ரவேலின் தேவனைப் புகழ்ந்தும் பகைவரை எதிர்த்து யுத்தத்திற்குச் சென்றது விசேஷித்த முறையாயும் அவர்களின் யுத்தகீதமாயும் இருந்தது. பரிசுத்தத்தின் சௌந்தர்யத்தை அவர்கள் பெற்றிருந்தார்கள். இன்றும் மக்கள் அதிக அதிகமாக தேவனைத் துதித்தால், நம்பிக்கையும் ஊக்கமும் விசுவாசமும் உறுதியாகப் பெருகும். இன்றும் சத்தியத்தின் பாது காவலர்கள் துதி ஏறெடுத்தால், அம்மாவீரர்களின் கரங்கள் பெலப் படும்.தீஇவ 202.1

    ’அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கின்போது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவா பியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோத மாய் ஒருவரை கர்த்தர் எழும்பப் பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள். எப்படியெனில், அம்மோன் புத்திர ரும் மோவாபியரும், சேயீர் மலைத்தேசக்குடிகளைச் சங்கரிக்கவும் அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள்; சேயீர் குடிகளை அழித்துத் தீர்ந்தபோது, தாங்களும் தங்களில் ஒருவரை யொருவர் அழிக்கத்தக்க விதமாய்க் கைகலந்தார்கள்.தீஇவ 202.2

    ’யூதா மனுஷர் வனாந்தரத்திலுள்ள சாமக்கூட்டண்டையிலே வந்து, அந்த ஏராளமான கூட்டமிருக்கும் திக்கை நோக்குகிறபோது, இதோ, அவர்கள் தரையிலே விழுந்துகிடக்கிற பிரேதங்களாகக் கண்டார்கள்; ஒருவரும் தப்பவில்லை ‘. வச 22-24.தீஇவ 202.3

    இக்கட்டான அச்சமயத்தில், தேவனே யூதாவின் பெலனா யிருந்தார். இன்றும் அவர் தம் மக்களின் பெலனாயிருக்கிறார். நாம் பிரபுக்களை நம்பவேண்டியதில்லை; தேவனுடைய இடத்தில் மனிதரை வைக்கவேண்டியதும் இல்லை. மனிதர்கள் பெலவீனர் கள்; குறைபாடுள்ளவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சர்வவல்லமையும் உடையவரே நம் பாதுகாவலின் கோபுரம். நெருக்கடியான ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவரே யுத் தம் செய்வார். அவர் செல்வாக்குகளுக்கு எல்லையில்லை; கூடாத வைகளாகத் தோன்றுபவற்றையும் மகத்தான வெற்றிகளாக்குவார். தீஇவ 202.4

    “எங்கள் ரட்சிப்பின் தேவனே,
    நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப்போற்றி,
    உம்மைத் துதிக்கிறதினால் மேன்மை பாராட்டும்படிக்கு, எங்களை ரட்சித்து,
    எங்களைச் சேர்த்துக்கொண்டு,
    ஜாதிகளுக்கு எங்களை நீங்கலாக்கியருளும்.”
    தீஇவ 202.5

    1நாளாகமம் 16:35

    யூதாவின் சேனைகள் சுமக்க முடியாத கொள்ளைப் பொருட்கள் ளோடு திரும்பிவந்தார்கள். ‘கர்த்தர் அவர்களை அவர்கள் சத்து ருக்கள் பேரில் களிகூரச் செய்தபடியால், மகிழ்ச்சியோடே தம்புரு களோடும் சுரமண்டலங்களோடும் பூரிகைகளோடும் எருசலேமி லிருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்தார்கள். ‘நாளா20:27, 28. அவர்கள் களிகூர்ந்ததற்கு மகத்தான காரணம் இருந்தது. ‘நீங்கள் தரித்து நின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங் கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்’ என்கிற கட்டளைக் குக் கீழ்ப்படிந்து, தேவனை முற்றிலுமாக நம்பினார்கள். அதனால், தாமே அடைக்கலமானவர்; விடுவிக்கிறவர் என்பதை தேவன் மெய்ப்பித்தார். வச. 17. இப்பொழுது, தாவீதின் கீர்த்தனைகளை அவர்களால் அர்த்தத்தோடு பாட முடிந்தது :தீஇவ 203.1

    ’தேவனே நமக்கு அடைக்கலமும் பெலனும்,
    ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்.
    வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்;
    இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.
    நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்.
    ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.
    சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்,
    யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்.’
    தீஇவ 203.2

    சங்கீதம் 46.

    ’தேவனே, உமது நாமம் விளங்குகிறதுபோல
    உமது புகழ்ச்சியும் பூமியின் கடையாந்தரங்கள் பரியந்தமும் விளங்குகிறது;
    உமது வலது கரம் நீதியால் நிறைந்திருக்கிறது.
    உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம்
    சீயோன் பர்வதம் மகிழ்வதாக,
    யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக.
    ‘இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் நம்முடைய தேவன்;
    மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.”
    தீஇவ 203.3

    சங்கீ தம் 48:10-14.

    யூதாவின் மன்னனும் அவருடைய சேனைகளும் கொண்ட விசுவாசத்தினால், ‘கர்த்தர் இஸ்ரவேலின் சத்துருக்களோடு யுத்தம் பண்ணினார் என்று கேள்விப்பட்ட அந்தந்தத் தேசத்து ராஜ்யத்தார் மேல் தேவனால் உண்டான பயங்கரம் வந்தது. இவ்விதமாய் தேவன் சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாத இளைப்பாறுதலை அவ னுக்குக் கட்டளையிட்டதினால், யோசபாத்தின் ராஜ்யபாரம் அம் ரிக்கையாயிருந்தது. 2நாளா 20:29, 39.தீஇவ 203.4