Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    59 - இஸ்ரவேல் வீட்டார்

    பூமியிலுள்ள இன்றைய தேவ சபை, நித்திய சுவிசேஷத்தின் சத்தியங்களைச் சகல தேசத்தாருக்கும் ஜாதிக்காரருக்கும் பாஷைக் காரருக்கும், ஜனங்களுக்கும் அறிவிப்பதன் மூலம், ‘’யாக்கோபு வேர் பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும்” எனும் முற்கால வாக்குத்தத்தத்தை நிறை வேற்றி வருகிறது. ஏசாயா 27:6. இயேசுவின் பின்னடியார்கள், பரலோக அறிவு ஜீவிகளோடு ஒத்துழைத்து, பூமியின் பாழான நிலங்களை வேகமாக தேவனுக்குச் சொந்தமாக்கி வருகிறார்கள்; அவர்களுடைய பிரயாசங்களின் விளைவாக, விலையேறப்பெற்ற ஆத்துமாக்களின் பரிபூரண அறுவடை ஆயத்தமாகி வருகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆபிரகாமுக்கும், பிறகு சகல இஸ்ர வேலருக்கும் அதாவது, பூமியிலுள்ள ஒவ்வொரு காலக்கட்டத்தின் தேவ சபைக்கும், ‘’நான் உன்னை ஆசீர்வதிப்பேன். நீ ஆசீர்வாத மாய் இருப்பாய்” எனும் வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது. ஆதி யாகமம் 12:2. பரிசுத்தம் பண்ணப்பட்ட ஒரு சபையானது தன் ஊழி யத்தால் வேத சத்தியத்தை எங்கும் பரவச் செய்து, அதில் முன்னு ரைக்கப்பட்ட நன்மைகளை மனுபுத்திரருக்கு வழங்கிவருகிறது.தீஇவ 703.1

    இஸ்ரவேலர் தங்கள் சிறையிருப்பின் தேசங்களிலிருந்து திரும்பினதைத் தொடர்ந்த காலக்கட்டங்களில், இந்த ஆசீர்வாத வாக்குத்தத்தம் பெரிதளவில் நிறைவேறியிருக்கவேண்டும். கிறிஸ்து வின் இரண்டாம் வருகைக்கான வழி இன்று ஆயத்தமாகிக் கொண் டிருப்பதைப் போலவே, அன்று அவருடைய முதலாம் வருகைக் காக பூமியின் அனைவரும் ஆயத்தப்படவேண்டுமென்பதே தேவ னுடைய சிறையிருப்பின் அடிமைத்தன வாழ்க்கை முடிந்ததும், தேவன் இரக்கத்தோடே ‘’நான் சீயோனிடத்தில் திரும்பி, எருசலே மின் நடுவிலே வாசம்பண்ணுவேன்; எருசலேம் சத்திய நகரம் என் றும், சேனைகளுடைய கர்த்தரின் பர்வதம் பரிசுத்த பர்வதம் என் றும் அழைக்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்” எனும் நிச்ச யத்தை இஸ்ரவேலின் மக்களுக்குக் கொடுத்தான். சகரியா8:3. ‘’உண்மையிலும் நீதியிலும் நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப் பேன்” என்று சொன்னார். சகரியா 8:3, 7, 8.தீஇவ 704.1

    இந்த வாக்குத்தத்தங்கள் அனைத்தும் கீழ்ப்படிதலை நிபந் தனையாகக் கொண்டிருந்தன. சிறையிருப்பிற்கு முன் இஸ்ரவேல ரிடம் காணப்பட்ட பாவங்கள் மீண்டும் அவர்களிடம் காணப்படக் கூடாதிருந்தது. எருசலேமை மீண்டும் கட்டும் பணியில் ஈடுபட்டிருந் தவர்களிடம், ‘’நீங்கள் உண்மையாய் நியாயந்தீர்த்து, அவனவன் தன் தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் செய்து, விதவையை யும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனை யும் ஒடுக்காமலும், உங்களில் ஒருவனும் தன் சகோதரனுக்கு விரோதமாய்த்தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும் இருங்கள். நீங்கள் அவனவன் பிறனோடே உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்துக்கும் சமாதானத்துக்கும் ஏற்க நியாயந் தீருங்கள்’‘ என்று தேவன் அறிவுறுத்தினார். சகரியா 7:9,10; 8:16.தீஇவ 704.2

    நீதியின் இந்நியதிகளை நடைமுறைப்படுத்துகிறவர்களுக்கு உலகப்பிரகாரமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் மேன்மையான பலன்கள் வாக்களிக்கப்பட்டிருந்தன. ‘’விதைப்புச் சமாதானமுள்ள தாயிருக்கும்; திராட்சச்செடிதன் கனியைத் தரும்; பூமிதன் பலனைத் தரும்; வானம் தன் பனியைத் தரும்; இந்த ஜனத்தில் மீதியானவர்கள் இதையெல்லாம் சுதந்தரிக்கக் கட்டளையிடுவேன். சம்பவிப்ப தென்னவென்றால்: யூதா வம்சத்தாரே, இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் புறஜாதிகளுக்குள்ளே சாபமாயிருந்தது போலவே, ஆசீர் வாதமாயிருக்கும் படி நான் உங்களை இரட்சிப்பேன்’‘ என்றார் தேவன். சகரியா 8:12,13.தீஇவ 704.3

    பாபிலோனியச் சிறையிருப்பினால் இஸ்ரவேலர், சொரூப் வழிபாட்டிலிருந்து நன்றாகத் திருந்தியிருந்தனர். அவர்கள் எரு சலேமிற்குத் திரும்பின பிறகு, மெய்யான தேவனைத் தொழுது கொள்வது குறித்த பக்தியானபோதனைகளிலும், நியாயப்பிரமாணப் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளைப் படிப்பதிலும், தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளிலும் அதிக கவனம் செலுத்தினார் கள். ஆலயம் மீண்டும் கட்டப் பட்டதால், பரிசுத்த ஸ்தலச் சடங்கு களை அவர்கள் முற்றிலும் நிறைவேற்ற வழிபிறந்தது. யேகோவா வின் சகல கட்டளைகளையும் நியமங்களையும் கைக்கொள்வதாக, செருபாபேல், எஸ்றா, நெகேமியா ஆகியோரின் தலைமையின் கீழ் மீண்டும் மீண்டும் அவர்கள் உடன்படிக்கைபண்ணினார்கள். அத னைத் தொடர்ந்து உண்டான செழிப்பின் நாட்கள், தேவன் அவன் களை ஏற்றுக்கொண்டு, மன்னிக்கவிரும்பினாரென்பதற்குப் போது மான ஆதாரங்களாய் இருந்தன. ஆனாலும், தங்கள் மகிமையான முடிவைக் குறித்துக் கொஞ்சமும் முன்யோசனையின்றி மீண்டும் மீண்டும் அதிலிருந்து பிறண்டார்கள்; எண்ணற்றோருக்கு ஆரோக் கியத்தையும் ஆவிக்குரிய வாழ்வையும் கொண்டு வந்திருக்கக் கூடிய ஒன்றைத் தங்களுக்கே உரியதாக சுயநலத்தோடு சொந்தங் கொண்டாடினார்கள்.தீஇவ 705.1

    தேவ நோக்கத்தை நிறைவேற்றத் தவறிய இச்செயலானது, மல்கியாவின் நாட்களில் மிகத் தெளிவாகத் தெரிந்தது. இவ்வுலக ஆசீர்வாதங்களையும் ஆவிக்குரிய வல்லமையையும் இஸ்ரவேல ரிடமிருந்து பறித்துக்கொண்டிருந்த தீமைகளைக் கடுமையாகக் கடிந்துகொண்டார் தேவ ஊழியர். அக்கிரமக்காரருக்கு எதிரான தீர்க்கதரிசியின் கடிந்துகொள்ளுதலிலிருந்து ஆசாரியர்களோ மக் களோ எவருமே தப்பவில்லை. ‘’கடந்தகாலப் படிப்பினைகளை மறக்கக்கூடாது” என்பதும், ‘’இஸ்ரவேல்வீட்டாரோடு யேகோவா செய்துகொண்ட உடன்படிக்கையை உண்மையோடு கைக்கொள்ள வேண்டும்’‘ என்பதுமே ‘ ‘மல்கியாவைக்கொண்டு கர்த்தர் இஸ்ர வேலுக்குச் சொன்ன வார்த்தையின் பாரம்.’‘ மல்கியா 1:1. மெய் யான மனமாற்றத்தால் மாத்திரமே தேவ ஆசீர்வாதம் உணரப்படக் கூடியதாயிருந்தது. இப்போதும் தேவனுடைய சமுகத்தை நோக்கிக் கெஞ்சுங்கள்; அப்பொழுது நம் மேல் இரங்குவார்” என்று வேண் டிக்கொண்டார் தீர்க்கதரிசி. மல்கியா 1:1, 9.தீஇவ 705.2

    ஆனாலும், மனித இனத்தின் மீட்பிற்காக ஆதிமுதலே ஏற் படுத்தப்பட்ட திட்டமானது, இஸ்ரவேலின் எத்தகைய தற்காலிகத் தோல்வியாலும் தடைபடக்கூடாதிருந்தது. தீர்க்கதரிசியாரிடம் அறி வித்தாரோ, அவர்கள் தங்களிடம் சொல்லப்பட்ட செய்திக்குச் செவி கொடாமல் இருந்திருக்கலாம். ஆனாலும், யேகோவாவின் நோக் கங்கள் தங்கள் பூரண நிறைவேறுதலை நோக்கிச் சீராக முன்னேற வேண்டியிருந்தது. ‘’சூரியன் உதிக்கிற திசை தொடங்கி, அது அஸ்த மிக்கிற திசைவரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவ மாயிருக்கும்; எல்லா இடங்களிலும் என் நாமத்துக்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் ஜாதிகளுக் குள்ளே மகத்துவமாயிருக்கும்” என்று தம் ஊழியன் மூலமாக தேவன் அறிவித்தான். மல்கியா 1:11.தீஇவ 706.1

    லேவியின் புத்திரரோடு தேவன் செய்துகொண்ட ‘ஜீவனும் சமாதானமுமான” உடன்படிக்கையைக் கைக்கொண்டிருந்தால், அது சொல்லொண்ணா ஆசீர்வாதங்களைத் தந்திருக்கும். ஒரு சம் யத்தில் ஆவிக்குரிய தலைவர்களாயிருந்து தங்கள் அக்கிரமத்தின் மூலம் எல்லா ஜனத்துக்கும் முன்பாக அற்பரும் நீசருமாக” மாறின வர்களோடு தம் உடன்படிக்கையைப் புதுப்பிக்க தேவன் முன் வந் தான். மல்கியா 2:5, 9.தீஇவ 706.2

    வரவிருக்கும் நியாயத்தீர்ப்பின் நாளைக் குறித்தும் ஒவ்வொரு அக்கிரமக்காரனையும் சடுதியில் அழித்துப்போடும் யேகோவா வின்நோக்கம் குறித்தும் பாவிகள் விசேஷமாக எச்சரிக்கப்பட்டனர். ஆனாலும், ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை அளிக்கப்பட்டிருந்தது; நியாயத்தீர்ப்பு குறித்த மல்கியாவின் தீர்க்கதரிசனங்களில், மனந் திரும்புகிற பாவிகள் தேவனோடு சமாதானமாவதற்கான அழைப் புகளும் கொடுக்கப்பட்டிருந்தன. ‘’என்னிடத்திற்குத்திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன்’‘ என்றார் தேவன். மல்கியா 3:7.தீஇவ 706.3

    இந்த அழைப்பிற்கு ஒவ்வொரு உள்ளமும் இணங்கியாக வேண்டும்போல் தோன்றுகிறது. பாவத்தில் கிடக்கும் தம் பிள்ளை கள், பூமியில் தம் பணியைத் தொடர்ந்து செய்வதில் தம்மோடு மீண் டும் ஒத்துழைப்பதற்கு தம்மிடத்தில் திரும்புமாறு பரலோகத்தின் தேவன் வேண்டிக்கொள்கிறார். இஸ்ரவேலின் கையைப் பிடித்து, சுயமறுப்பு, சுயதியாகம் எனும் குறுகலான பாதையில் அவர்களை நடத்தவும், தேவபுத்திரர் எனும் சுதந்தரத்தை அவர்கள் தம்மோடு ஏற்படுத்திக்கொள்ளவும் தேவன் தம் கரத்தை நீட்டுகிறார். அவன் கள் இணங்குவார்களா? தங்கள் ஒரே நம்பிக்கையாக இருப்பவரை அவர்கள் கண்டுகொள்வார்களா?தீஇவ 706.4

    மல்கியாவின் நாட்களில், இஸ்ரவேலர் தாமதமற்ற அன்பான கீழ்ப்படிதலிலும், முழுமையான ஒத்துழைப்பிலும் தங்கள் அகந்தை யான இருதயங்களை அர்ப்பணிக்கத் தயங்கினார்கள் என்பது எத் தனை வருத்தகரமான சம்பவம்! ‘’நாங்கள் எந்த விஷயத்தில் திரும்ப வேண்டும்?’‘ என்று கேட்டார்கள். அவர்கள் தங்களை நியாயப் படுத்தினது அதிலிருந்து தெளிவாகிறது.தீஇவ 707.1

    தம் ஜனங்களின் குறிப்பிடத்தக்கப் பாவங்களில் ஒன்றைத் தேவன் வெளிப்படுத்தினார். ‘’மனுஷன் தேவனை வஞ்சிக்க லாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள்’‘ என்று சொன்னார். பாவத்தை உணராது, கீழ்ப்படியாமையால், ‘’எதிலே உம்மை வஞ் சித்தோம்?’‘ என்று கேட்டார்கள்.தீஇவ 707.2

    அதற்கு மிகத்தெளிவான பதில் தந்தார்தேவன்: “தசமபாகத்தி லும் காணிக்கைகளிலுந்தானே. நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; ஜனத் தாராகிய நீங்கள் எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள். என் ஆலயத் தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படி, தசம பாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத் தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதி னால் என்னைச் சோதித்துப் பாருங்கள்’‘ என்று சேனைகளின் கர்த் தர் சொல்லுகிறார். ‘’பூமியின் கனியைப் பட்சித்துப் போடுகிறவை களை உங்கள் நிமித்தம் கண்டிப்பேன்; அவைகள் உங்கள் நிலத் தின் பலனை அழிப்பதில்லை, வெளியிலுள்ள திராட்சக்கொடி பழ மில்லாமற் போவதுமில்லை” என்று சேனைகளின் கர்த்தர் சொல்லு கிறார். அப்பொழுது எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான் கள் என்பார்கள்; தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும்’‘ என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். வசனங்கள் 7-12.தீஇவ 707.3

    தம்முடைய பங்கைத் திரும்ப தமக்குத் தரும்படி, மனிதருடைய கரங்களின் பிரயாசங்களை தேவன் ஆசீர்வதிக்கிறார். அவர் களுக்கு வெளிச்சத்தையும் மழையையும் தருகிறார்; தாவரங்களைச் செழிக்கச் செய்கிறார்; வசதி வாய்ப்புகளைப் பெறுவதற்கான திற னையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறார். ஒவ்வொரு ஆசீர் வாதமும் அவருடைய கருணைக் கரங்களிலிருந்தே வருகின்றன. எனவே, தசம பாகங்களிலும் குற்றநிவாரணக் காணிக்கை, உற்சா கக்காணிக்கை, ஸ்தோத்திரக் காணிக்கை போன்ற காணிக்கைகளி லும், ஒரு பகுதியைத் தமக்குச் செலுத்தி, ஆண்களும் பெண்களும் தங்கள் நன்றியைத் தெரிவிக்கவேண்டுமென அவர் விரும்புகிறார். அவருடைய திராட்சத்தோட்டம் பாழ்நிலமாய்க் கிடக்காதபடிக்கு, அவருடைய சேவைக்காக தங்கள் வசதிவாய்ப்புகளை அவர்கள் உபயோகிக்கவேண்டும். தங்களுடைய ஸ்தானத்தில் தேவன் இருந் தால் எவ்வாறு நடந்துகொள்வார் என்பதை அவர்கள் ஆராயவேண் டும். பிரச்சனையான சகல காரியங்களையும் ஜெபத்திலே அவரி டம் கொண்டுசெல்ல வேண்டும். உலகின் சகல பகுதிகளிலும் அவ ருடைய பணியை மேம்படுத்த, சுயநலமற்ற ஆர்வத்தை அவர்கள் வெளிப்படுத்தவேண்டும்.தீஇவ 707.4

    “மெய்யான சுகவாழ்வு, தேவனுடைய நியாயப்பிரமாணத்திற் குக் கீழ்ப்படிவதையே சார்ந்திருக்கிறது’‘ என்பதைப் பழைய ஏற் பாட்டு தீர்க்கதரிசிகளில் கடைசியானவரான மல்கியாவின் செய்தி களிலிருந்தும், யூதரல்லாதோரிடமிருந்து தாங்கள் அனுபவித்த கொடுமைகளிலிருந்தும் இஸ்ரவேலர் இறுதியில் கற்றுக்கொண்ட னர். ஆனால் அநேக மக்கள் அன்பாலும் விசுவாசத்தாலும் கீழ்ப் படிந்ததாகத் தெரியவில்லை . சுயநல நோக்கங்களே அவர்களில் காணப்பட்டன. தங்கள் தேசம் மேன்மை அடையவே, வெளிப்பார் வைக்குத் தொழுகை செய்தார்கள். தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள் உலகத்திற்கு ஒளியாக மாறவில்லை; மாறாக, தாங்கள் சிலைவழி பாட்டிற்குள் இழுபடுவதிலிருந்து தங்களைப் பாதுகாக்கத் தங் களைத் தனிமைப்படுத்தினர். தம்முடைய மக்களுக்கும் யூதரல்லா தோருக்கும் இடையேயான கலப்புத் திருமணத்திற்கும், சுற்றிலும் மிருந்த தேசங்களின் சிலைவழிபாட்டு முறைகளில் இஸ்ரவேல் சேராதிருக்கவும் தடை விதித்து, தேவன் ஏற்படுத்தியிருந்த கட்டுப் பாடுகளைத் தவறாகப் பயன்படுத்தினர். அதாவது, இஸ்ரவேலருக் கும் மற்ற ஜனங்களுக்கும் இடையே ஒரு பிரிவினைச் சுவர் எழும்ப, அதனைக் காரணமாக்கினார்கள். எனவே, உலகத்தாருக்கு அருளு மாறு தேவன் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்டிருந்த ஆசீர்வாதங் களை, அவர்களுக்கு வழங்காது போயினர்.தீஇவ 708.1

    அதேநேரத்தில், யூதர்கள் தங்களின் பாவங்களால் தேவனிட மிருந்து தங்களை விலக்கிக்கொண்டிருந்தார்கள். தங்கள் அடை யாளத் தொழுகையின் ஆழமான ஆவிக்குரிய முக்கியத்துவத்தை அவர்களால் கண்டுகொள்ள முடியவில்லை. தங்கள் சுய நீதியால், தங்களுடைய சுயகிரியைகளையும் தங்கள் பலிகளையும் வழிபாடு களையும் நம்பினார்கள். ஆனால், அவையனைத்தும் யாரைச் சுட் டிக்காட்டினவோ, அவருடைய புண்ணியங்களைச் சார்ந்திருக்க மறந்தனர். எனவே, தங்கள் சுய நீதியை நிலைநிறுத்தத் தேடி’’, சுயநிறைவான பழக்கவழக்கங்களைத்தங்களில் வளர்த்துக்கொண் டார்கள். ரோமர் 10:3. தேவ ஆவியையும் கிருபையையும் பெற விரும்பினவர்கள், சமயச்சடங்குகளையும், சடங்காச்சாரங்களை யும் மூர்க்கமாகக் கைக்கொண்டு அவற்றை அடைய நாடினார்கள். தேவன்தாமே நியமித்த சட்டங்களில் திருப்தி கொள்ளாமல், எண் ணற்ற கடுமையான சட்டங்களைத் தாங்களே ஏற்படுத்தி, தேவ கட் டளைகளுக்கு வில்லங்கம் உண்டு பண்ணினார்கள். தேவனைவிட்டு அதிகமாக விலகவிலக, தங்கள் ஆச்சாரங்களைக் கைக்கொள்வதில் அதிக வைராக்கியம் காண்பித்தார்கள்.தீஇவ 708.2

    சிறுசிறு காரியங்களையும் பாரமாக்கின் இத்தகைய கடுமை யான சட்டங்களால், மக்கள் நடைமுறையில் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வது இயலாமல் போனது. பத்துக் கற்பனையில் சொல் லப்பட்டிருக்கும் நீதியின் மேன்மையான நியதிகளும், அடையாளத் தொழுகை முறையில் நிழலிட்டிருந்த மகிமையான சத்தியங்களும் ஒருசேரப் புறக்கணிக்கப்பட்டன; மனித பாரம்பரியம் மற்றும் மனித சட்டத்தின் கீழ் அவை புதைக்கப்பட்டன. மெய்யார்வத்தோடு தேவ னைத் தொழுது ஆசாரியர்களும் மன்னர்களும் அங்கீகரித்த அனைத் துக் கட்டளைகளையும் முழுமையாகக் கைக்கொள்ள முயன்றோர், ஒரு கடினமான சுமையின்கீழ் சிக்கித் தவித்தனர்.தீஇவ 709.1

    இஸ்ரவேல் மக்கள் ஒரு தேசமாக மேசியாவின் வருகையை எதிர்பார்த்த போதிலும், தங்கள் வாழ்விலும் உள்ளத்திலும் தேவனை விட்டு அதிகமாகப் பிரிந்து போயிருந்தனர். எனவே, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மீட்பரின் குணம் மற்றும் ஊழியம் பற்றிய ஒரு மெய் யறிவை அவர்கள் பெற முடியாதிருந்தது. மகிமையையும், பரிசுத்த சமாதானத்தையும் பாவத்திலிருந்து விடுதலையையும் விரும்புவதற் குப் பதிலாக, தங்கள் எதிரிகளிடமிருந்து விடுதலை வேண்டுவதி லும் மீண்டும் உலகை ஆளுகிறவர்களாகத் திகழ வேண்டுமென்பப் திலும்தான் அவர்களுடைய இருதயங்கள் குறியாயிருந்தன. போரிட்டு உலகை வென்று, ஒவ்வொரு தடையையும் உடைத்து, சகல தேசங்களுக்கும் மேலாக இஸ்ரவேலை உயர்த்தும் ஒருவராக மேசியா வரவேண்டுமென அவர்கள் எதிர்பார்த்தார்கள். எனவே மேசியாவரவிருந்தபோது, மக்கள் அவரை மறுதலிக்கும்படி அவர் களின் இருதயங்களைத் தயார் பண்ணியதில் வெற்றிக்கண்டான் சாத் தான். அவர்களின் அகந்தையான உள்ளமும், அவருடைய குணம் மற்றும் ஊழியம் பற்றிய அவர்களின் தவறான கருத்துகளும், அவ ருடைய மேசியத்துவத்திற்கான ஆதாரங்களை அவர்கள் நேர்மை யோடு ஆராயமுடியாதவாறு அவர்களைத் தடை செய்தன.தீஇவ 709.2

    வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இரட்சகரின் வருகையை எதிர் பார்த்து ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக யூதர்கள் காத்திருந்தார் கள். அவர்களின் மகிமையான நம்பிக்கை அந்த நிகழ்வில் தான் அடங்கியிருந்தது. ஓராயிரம் வருடங்களாக, பாடலிலும் தீர்க்கதரிச னத்திலும், ஆலய சமயச் சடங்குகளிலும் வீட்டு ஜெபங்களிலும் அவருடைய நாமமே போற்றப்பட்டது. ஆனாலும் அவர் வந்த போதோ, தாங்கள் இத்துணை காலமும் எதிர்பார்த்த மேசியா அவர் தாம் என்பதை அவர்களால் கண்டுகொள்ள முடியவில்லை. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார். அவருக்குச் சொந்தமானவர் களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.” யோவான் 1:11. உலக ஆசைகொண்டிருந்த அவர்களுடைய உள்ளங்களுக்குப் பரலோகப் பிரியசுதன், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிறவேரைப்போலத்” தெரிந்தார். அவர்களின் கண்களுக்கு அவர் ‘’அழகுமில்லாமல், செளந்தரியமுமில்லாமல்” காணப்பட்டார். தாங்கள் விரும்பின் அழகு எதையும் அவரிடத்தில் அவர்களால் கண்டுகொள்ள முடிய வில்லை . ஏசாயா 53:2.தீஇவ 710.1

    தாங்கள் தோட்டக்காரர்களாக வைக்கப்பட்டதிராட்சத் தோட் டத்துடைய எஜமானின் நீதியான கோரிக்கைகளைக் கண்டு கொள் ளப்பட இஸ்ரவேலர் விரும்பாததில் அவர்களுடைய சுயநலம் வெளிப்பட்டது. யூதர்களின் நடுவிலிருந்த நாசரேத்தின் இயேசு வினுடைய வாழ்க்கை முழுவதும் அவர்களுடைய சுயநலத்தைக் கண்டிப்பதாக இருந்தது. பய பக்தியிலும் உண்மையிலும் அவர் காட்டின் முன்மாதிரியை அவர்கள் வெறுத்தார்கள்; இறுதிச் சோதனை வந்தபோது, கீழ்ப்படிதலால் நித்திய வாழ்வும், கீழ்ப்படியாமையால் நித்திய மரணமும் உண்டாகுமென அச்சோதனை உணர்த்தியபோது, இஸ்ரவேலின் பரிசுத்தரை அவர்கள் புறக்கணித்தார்கள்; கல்வாரிச் சிலுவையில் அவர் அறையப்படுவதற்குக் காரணமானார்கள்.தீஇவ 710.2

    தமது பூலோக ஊழியத்தின் முடிவுக்கட்டத்தில், திராட்சத் தோட்டம் பற்றிய உவமையைச் சொன்னார் கிறிஸ்து. அதன் மூலம், இஸ்ரவேலுக்கு அருளப்பட்ட ஏராளமான ஆசீர்வாதங்களையும், அவர்களுடைய கீழ்ப்படிதலின் மூலம் அவை நிறைவேறியிருக்கக் கூடும் என்பதையும் அந்த உவமையில் தெளிவாக அவர்களுக்கு விளக்கினார். எதிர்காலத்தை மறைத்திருந்த திரையை விலக்கி, தம் நோக்கத்தை நிறைவேற்ற மறுப்பதினிமித்தம், தேசம் முழுவதுமே தம் ஆசீர்வாதத்தை இழந்து வந்ததையும் அது தனக்குத்தானே அழிவை வரவழைத்துக் கொண்டிருந்ததையும் அவர்களுக்குக் காட்டினார்.தீஇவ 711.1

    “வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான். அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலிய டைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான்’‘ என்றார் கிறிஸ்து. மத்தேயு 21:33.தீஇவ 711.2

    அதன் மூலம், ‘’சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட் டத்தை” இரட்சகர் குறிப்பிட்டார். அதனையே, பல நூற்றாண்டு களுக்கு முன்பு இஸ்ரவேலின் வம்சம்” என்று சொன்னார் ஏசாயா தீர்க்க தரிசி. ஏசாயா 5:7.தீஇவ 711.3

    ’’கனிகாலம் சமீபித்தபோது, அதின் கனிகளை வாங்கிக் கொண்டு வரும்படி தன் ஊழியக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான். தோட்டக்காரர் அந்த ஊழியக்காரரைப் பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலை செய்து, ஒருவனைக் கல் லெறிந்து கொன்றார்கள். பின்னும், அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள். கடைசியிலே அவன் : என் குமாரனுக்கு அஞ்சுவார்கள்” என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான். தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: ‘’இவன் சுதந்தரவாளி; இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக் கொள்வோம் வாருங்கள்” என்று ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டு ; அவனைப் பிடித்துத்திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலை செய்தார்கள்’‘ என்று தொடர்ந்து சொன்னார் கிறிஸ்து.தீஇவ 711.4

    ஆசாரியர்களின் அந்த இறுதிக் கொடுஞ்செயலை அவர்க ளுக்கு விவரித்துவிட்டு, ‘’அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரரை என்ன செய் வான்?’‘ என்று கேள்வி எழுப்பினார் கிறிஸ்து. இதுவரைக்கும் ஆர்வத்தோடு கேட்ட ஆசாரியர்கள், அந்த எடுத்துக்காட்டு தங் களைச் சுட்டிக்காட்டுவதை உணராமல், அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்து, ஏற்ற காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத் தைக் குத்தகையாகக் கொடுப்பான்’‘ என்று பதில் சொன்னார்கள்.தீஇவ 711.5

    தங்களை அறியாமலேயே தங்களுடைய அழிவுக்குத் தீர்ப்புக் கூறினார்கள். இயேசு அவர்களை நோக்கினார். அவருடைய கூரிய பார்வையிலிருந்து, அவன் தங்கள் இருதயங்களின் அந்தரங்கங் களை வாசிப்பதை அறிந்தனர். அவருடைய தெய்வத்தன்மை சந் தேகத்திற்கு இடமற்ற வல்லமையோடு அவர்கள் முன் பிரகாசித் தது. அந்தத் தோட்டக்காரர்போலத் தாங்கள் இருந்ததைக் கண்ட அவர்கள், தாங்களாகவே, ‘’அப்படியாகாதிருப்பதாக’‘ என்றார் கள்.தீஇவ 712.1

    திடச் சாட்சியாகவும் மனவருத்தத்தோடும், வீடு கட்டுகிறவர் கள் ஆகாதென்றுதள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரிய மாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்க வில்லையா? ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தி லிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக் குக் கொடுக்கப்படும். இந்தக் கல்லின் மேல் விழுகிறவன் நொறுங் கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார் கிறிஸ்து. மத் தேயு 21:34 - 44.தீஇவ 712.2

    ஜனங்கள் அவரை ஏற்றுக்கொண்டிருந்தால், யூத தேசத்திற்கு வரவிருந்த அழிவைக் கிறிஸ்து தவிர்த்திருப்பார். ஆனால் பொறா மையும் அவநம்பிக்கையும் அவர்களை இணக்கமில்லாதவர்களாக மாற்றியிருந்தன. நாசரேத்தின் இயேசுவை மேசியாவாக ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். உலகத்தின் ஒளியை அவர்கள் புறக்கணித் தார்கள்; எனவே அவர்கள் வாழ்க்கையில் நள்ளிரவின் அந்தகாரம் சூழ்ந்திருந்தது. யூத தேசத்திற்கு முன்னுரைக்கப்பட்டிருந்த அழிவு சம்பவித்தது. கட்டுக்கடங்க்காத மூர்க்கம்தான் அவர்கள் அழிவுக் குக் காரணமாயிற்று. கண்மூடித்தனமான தங்கள் உக்கிரத்தால் அவர்கள் ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டனர். மனக்கடினமும் கலகமுமான அவர்களுடைய அகந்தையே, ரோம் மன்னர்களின் கோபத்திற்கு அவர்களை ஆளாகச் செய்தன. ஆகவே, எருசலேம் அழிக்கப்பட்டது; தேவாலயம் தரைமட்டமாக்கப்பட்டது; அந்த இடம் வயல் போல உழப்பட்டது. மிகக் கொடூரமான முறையில் யூதா புத்திரர் கொல்லப்பட்டனர். பிற தேசங்களில் அடிமைகளாக லட்சக்கணக்கானோர் விற்கப்பட்டனர்.தீஇவ 712.3

    தெரிந்துகொள்ளப்பட்ட தேசமான இஸ்ரவேலர் மூலம் உலகத் திற்குத் தாம் செய்யத் திட்டமிட்டதை, இன்று பூமியிலுள்ள தம் சபை யின் மூலம் தேவன் இறுதியாக நிறைவேற்றுவார். உண்மையோடு ‘’ஏற்ற காலங்களில் தனக்குக் கனி கொடுப்பதற்காக தம் உடன் படிக்கையைக் கைக்கொள்கிறவர்களாகிய “வேறே தோட்டக் காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகைக்கு” அவர் விட்டுள் ளார். இப்பூமியில் தேவனுடைய விருப்பங்களைத் தங்களுடைய விருப்பங்களாகக் கொண்டிருப்பவர்களுக்கு அவர் தம்மை மெய் யாக வெளிப்படுத்தாமல் இருப்பதில்லை. தேவனுடைய இச்சாட்சி கள் ஆவிக்குரிய இஸ்ரவேலரோடு எண்ணப்படுகிறார்கள்; யேகோவாதம் முற்கால மக்களுடன் பண்ணின உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்கள் யாவும் இவர்களுக்கு நிறைவேற்றப்படும்.தீஇவ 713.1

    தொலைந்துபோன ஓர் இனத்தின் இரட்சிப்பிற்கான தேவதிட் டத்தை முழுமையாக நிறைவேற்ற இன்றைய தேவ சபைக்குச் சுதந் தரம் அளிக்கப்பட்டுள்ளது. அநேக நூற்றாண்டுகளாக தேவ மக் களுக்கு அவர்களுடைய உரிமைகள் மறுதலிக்கப் பட்டு வந்தன. மனிதரின் கட்டாயக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாதிருக்கத் துணிந்தவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. சுவிசேஷத்தை அதன் பரிசுத்தத்தோடு பிரசங்கிப்பது தடை செய் யப்பட்டது. அதன் விளைவாக, தேவனுடைய ஒழுக்கத் திராட்சத் தோட்டம் வீணாய்க் கிடந்தது. தேவவார்த்தையின் வெளிச்சத்தை மக்கள் பெறாதிருந்தனர். மூடநம்பிக்கை மற்றும் பொய் எனும் அந்தகாரமானது மெய் யான மதம் பற்றிய ஓர் அறிவை முற்றிலும் அழித்துவிடும் போல் அச்சுறுத்தினது. சிறையிருப்பின் நாட்களில் இஸ்ரவேல் புத்திரர் பாபிலோனில் அடிமைப்பட்டிருந்ததுபோல, இரக்கமற்ற உபத்திரவத்தின் நீண்ட காலங்களில் இப்பூமியிலிருந்த தேவசபை அடிமைப்பட்டிருந்தது.தீஇவ 714.1

    ஆனால், தேவனுக்கு ஸ்தோத்திரம். அவருடைய சபை இப் பொழுது அடிமைத்தனத்தில் இல்லை. பாபிலோனிலிருந்து விடு தலையான சமயத்தில் தேவபிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட சிலாக் கியங்கள், ஆவிக்குரிய இஸ்ரவேலருக்கும் அருளப்பட்டிருக்கின் றன. ‘தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது” என்று கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பு அறிவிக்கப்படுமென யோவானால் முன்னுரைக்கப்பட்ட பரலோகச் செய்திக்கு, பூமியின் ஒவ்வொரு பகுதியிலுமுள்ள ஆண்களும் பெண்களும் செவிகொடுத்து வரும் கிறார்கள். வெளிப்படுத்தல் 14:7.தீஇவ 714.2

    இனியும் சபையைச் சிறைப்படுத்தி வைத்திருக்கக்கூடிய வல் லமை தீயசேனைகளுக்குக் கிடையாது; ஏனெனில், ‘’தன் வேசித் தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்த பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது!’‘தீஇவ 714.3

    ’’நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும்வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்’‘ எனும் செய்தி ஆவிக்குரிய இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்படுகிறது. வெளிப் படுத்தல்8:18:4.தீஇவ 715.1

    சிறையிருப்பிலிருந்த இஸ்ரவேல் புத்திரர், ‘’பாபிலோனின் நடுவிலிருந்து ஓடி, தப்புங்கள்” என்ற செய்திக்குச் செவிகொடுத்து, மீண்டும் வாக்குத்தத்த தேசத்தில் சேர்ந்ததுபோல, இன்று தேவனுக் குப் பயப்படுகிறவர்கள், ஆவிக்குரிய பாபிலோனைவிட்டு விலக வேண்டுமென்கிற செய்திக்குச் செவிகொடுக்கிறார்கள். எரேமியா 51:6. சீக்கிரத்திலேயே அவர்கள், பரலோகக் கானானாகிய புதிய பூமியில் தேவ கிருபையின் வெற்றிக்கோப்பைகளாக நிற்க இருக் கிறார்கள்.தீஇவ 715.2

    மல்கியாவின் நாட்களிலிருந்த மனந்திரும்பாத பாவிகள், நியாயந்தீர்க்கிற தேவன் எங்கே?’‘ என்று பரியாசமாகக் கேட்ட போது, அதற்கேற்ற பதில் பின்வருமாறு கொடுக்கப் பட்டது: ‘’ஆண்டவரும் உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார். ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற் பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப் போல வும், வண்ணாருடைய சவுக்காரத்தைப் போலவும் இருப்பார். அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண் டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய்க் காணிக்கை யைச் செலுத்தும் படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார். அப்பொழுது பூர்வ நாட்களி லும் முந்தின வருஷங்களிலும் இருந்ததுபோல, யூதாவின் காணிக் கையும், எருசலேமின் காணிக்கையும் கர்த்தருக்குப் பிரியமாயிருக் கும்.” மல்கியா 2:17; 3:1-4.தீஇவ 715.3

    வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியாவரவிருந்த சமயத்தில், ‘’மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது” என் பதே கிறிஸ்துவின் முன்னோடியுடைய செய்தியாக இருந்தது. மத் தேயு 3:2.தீஇவ 715.4

    தவணைக் காலத்தின் முடிவிற்கும், ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தாவுமாக கிறிஸ்து வரப்போவதற்கும் அடையாளமாகச் சீக் கிரத்தில் சம்பவிக்கவிருக்கும் முக்கிய நிகழ்வுகளை தேவனால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள், எலியா மற்றும் யோவான் ஸ்நானனின் ஆவியோடும் வல்லமையோடும், நியாயத்தீர்ப்புக்குக் கட்டுப்பட்ட உலகத்தாரின் கவனத்திற்குக் கொண்டுவந்து கொண்டிருக்கிறார் கள். சரீரத்தில் செய்யப்பட்ட செய்கைகளுக்குத்தக்கதாகச் சீக்கிரத் திலேயே மனிதன் நியாயந்தீர்க்கப்படப் போகிறான். நியாயத்தீர்ப் புக் கொடுக்கும் வேளை வந்தது; நித்திய அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருப்போரை எச்சரிக்கும் மேலான பொறுப்பு, பூமி யிலுள்ள அவருடைய சபையின் அங்கத்தினர்களுக்குக் கொடுக் கப்பட்டுள்ளது. விசாலமான இவ்வுலகினில், செவிகொடுக்க விருப்பமாயிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும், மாபெரும் போராட் டத்தில் சம்பந்தப்பட்டுள்ள நியதிகள் தெளிவாக்கப்பட வேண்டும். ஏனெனில், அந்நியதிகளில்தான் மனித இனத்தின் எதிர்காலம் அடங்கியுள்ளது.தீஇவ 716.1

    மனுபுத்திரருக்கான தவணையின் காலம் முடியப்போகிறது; இத்தருவாயில், ஒவ்வோர் ஆத்துமாவின் நித்திய எதிர்காலமும் சீக்கிரத்தில் தீர்மானிக்கப்பட இருக்கிறது; இப்படிப்பட்ட சமயத் தில், எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது தம்முடை சபை செயலில் இறங்கவேண்டுமென்று வானத்திற்கும், பூமிக்கும் தேவ னானவர் எதிர்பார்க்கிறார். விலையேறப்பெற்ற சத்தியத்தை அறிந் ததின் மூலம் கிறிஸ்துவில் விடுதலை பெற்றவர்களையே தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்றும் நினைக்கிறார் இயேசு. அவர்களே பூமியின் மேலுள்ள சகல ஜனங்களிலும் தயவுபெற்ற வர்களென்றும் கருதுகிறார் இயேசு கிறிஸ்து. இருளிலிருந்து ஆச் சரியமான ஒளிக்குள் தங்களை அழைத்தவருக்கு அவர்கள் நன் றியை ஏறெடுக்கவேண்டுமென்று அவன் எதிர்பார்த்திருக்கிறார். தேவன் தாராளமாக அருளிய ஆசீர்வாதங்களை அவர்கள் மற்ற வர்களோடும் பகிர்ந்துகொள்ளவேண்டும். இரட்சிப்பின் நற்செய்தி யானது சகல தேசத்தாருக்கும் ஜாதிக்காரருக்கும் பாஷைக்காரருக் கும் மக்களுக்கும் சென்று சேரவேண்டும்.தீஇவ 716.2

    தமது இரண்டாம் வருகைக்கு முன்பு நிலவும் அந்தகாரமும் அவநம்பிக்கையுமான நாட்களில் மகிமையின் தேவன் தம் சபைக்கு விசேஷ வெளிச்சத்தை அருளுவாரென்று முற்காலத் தீர்க்கதரிசி களுக்குக் கொடுக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களில் கூறப்பட்டுள்ளது. நீதியின் சூரியனாகத் தம் ‘’செட்டைகளின்கீழ் ஆரோக்கியத்தோடு ‘‘ தம்முடைய சபையின் மேல் தேவன் உதிக்க இருந்தான். மல்கியா 4:2. ஜீவனுக்கும், ஊக்கத்திற்கும், ஆதரவிற்கும், மெய்யான ஆரோக் கியத்திற்கும் ஏதுவான ஒரு செல்வாக்கு ஒவ்வொரு மெய்ச் சீடனிட மிருந்தும் புறப்படவேண்டியிருந்தது.தீஇவ 716.3

    இப்பூலோக வரலாற்றின் அந்தகாரமான நாட்களில் கிறிஸ்து வின் வருகை இருக்கும். மனுஷகுமாரனுடைய வருகைக்குச் சற்று முன்பு உலகமிருக்கும் நிலையை நோவா மற்றும் லோத்தின் நாட் கள் சித்தரித்தன. வேதாகமம் இன்றைய காலத்தைச் சுட்டிக்காட்டி, சாத்தான் சகலவல்லமையோடும், ‘’அநீதியினால் உண்டாகும் சகல வித வஞ்சகத்தோடும் ” கிரியை செய்வானென அறிவிக்கிறது. 2தெச லோனிக்கேயர் 2:9,10.தீஇவ 717.1

    இக்கடைசி நாட்களில் வேகமாக அதிகரித்து வரும் அந்தகார மும், எண்ணற்ற தீமைகளும், முரணான கருத்துகளும், வஞ்சகங் களும் அவனுடைய கிரியைகளைத் தெளிவாக வெளிப்படுத்துகின் றன. சாத்தான் இவ்வுலகத்தைச் சிறையிருப் பிற்குள் மாத்திரம் வழி நடத்தவில்லை; நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரால் இயங்கிவரும் சபைகளையும் தன்னுடைய வஞ்சகங் களால் கெடுத்துவருகிறான். நடுராத்திரியின் இருளைப்போல பெரும் வழிவிலகல் அந்தகாரமடையும். சத்தியத்தின் நிமித்தம் தேவமக்களுக்கு அது ஒரு சோதனையின் இரவாகவும் இருக்கும். ஆனால், அந்த அந்தகார இரவிலிருந்து தேவ ஒளி பிரகாசிக்கும்.தீஇவ 717.2

    அவர், ‘‘ இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய் கிறார். 2கொரிந்தியர் 4:6. ‘’பூமியானது ஒழுங்கின்மையும் வெறு மையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது’’. அப் போது, ‘தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண் டிருந்தார்.’’வெளிச்சம் உண்டாகக்கடவது’‘ என்று தேவன் சொன் னார். ‘’வெளிச்சம் உண்டாயிற்று. ‘’ஆதியாகமம் 1:2,3. அதுபோல, ஆவிக்குரிய அந்தகார இருளிலும், வெளிச்சம் உண்டாகக்கட வது’‘ எனும் தேவ வார்த்தை பிறக்கிறது. அவர் தம் மக்களிடம், ‘’எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன் மேல் உதித்தது” என்கிறார். ஏசாயா 60:1.தீஇவ 717.3

    ’’இதோ, இருள் பூமியையும் காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன் மேல் காணப்படும்’‘ என்கிறது வேதாகமம் . வசனம் 2. பிதாவினு டைய மகிமையின் வெளிப்பாடான கிறிஸ்து, அந்த மகிமையின் ஒளியாகவே உலகிற்கு வந்தார். மனிதனுக்கு தேவனைப் பிரதிபலித் துக் காட்டுவதற்கு அவர் வந்தார்; அவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் “அபிஷேகம் பண்ணப்பட்டு குணமாக்குகிற வராய் சுற்றித்திரிந்தார்” என அவரைப்பற்றி எழுதப்பட்டுள்ளது. அப்போஸ்தலர் 10:38. நாசரேத்தின் தேவாலயத்தில், ‘’கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத் தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்; இரு தயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர் களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித் தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த் தருடைய அநுக்கிரகவருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார்” என்று அவர் சொன்னார். லூக்கா 4:18, 19. அந்த வேலையைத்தான் தம் சீடர்களும் செய்யும்படி கட்டளையிட்டார். ‘’நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள். மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர் கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது’‘ என்றார். மத்தேயு 5:14, 16.தீஇவ 717.4

    ’’பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிற தும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள் ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ் திரங்கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்கா மலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம். அப்பொழுது விடியற்கால வெளுப்பைப் போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல் லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்” என்று ஏசாயா தீர்க்கதரிசியும் இதே பணியைக் குறித்துத்தான் பேசினார். ஏசாயா 58:7, 8.தீஇவ 718.1

    ஆகவே, ஆவிக்குரிய அந்தகாரத்தின் இரவில், தொய்ந்து போ னோரைத் தூக்கிவிடுவதிலும், புலம்புவோரைத் தேற்றுவதிலும் தேவ மகிமை அவருடைய சபையின் மூலமாகப் பிரகாசிக்க வேண் டும்.தீஇவ 718.2

    உலகத்தாருடைய வேதனையின் புலம்பல்கள் நம்மைச் சுற்றி எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. எளியோரும் நெருக்கப் படுவோரும் எப்பக்கத்திலும் இருக்கிறார்கள். வாழ்வின் கஷ்டங் களையும் துக்கங்களையும் இலகுவாக்கி, குணப்படுத்த உதவிசெய் வது நம் பங்காயிருக்கிறது. ஆத்துமாவின் வாஞ்சைகளைக் கிறிஸ் துவின் அன்பினால் மாத்திரமே பூர்த்தி செய்ய முடியும். கிறிஸ்து நமக்குள் வாசஞ் செய்தால், நம்முடைய இருதயங்கள் தேவ இரக் கத்தால் முற்றிலும் நிறைந்திருக்கும். கிறிஸ்து போன்ற, ஊக்கமான அன்பின் அடைக்கப்பட்ட நீரூற்றுகள் திறந்துவிடப்படும்.தீஇவ 718.3

    நம்பிக்கை இழந்த அநேகர் உண்டு. அவர்களுக்குள் மீண்டும் வெளிச்சத்தைக் கொண்டு வாருங்கள். அநேகர் தங்கள் தைரியத்தை இழந்து போனார்கள். திடப்படுத்தும் வார்த்தைகளை அவர்களிடம் பேசுங்கள். அவர்களுக்காக ஜெபியுங்கள். ஜீவ அப்பம் தேவைப் படுவோர் உண்டு. தேவ வார்த்தையை அவர்களுக்குப் படித்துக் காட்டுங்கள். உலகத்தின் எந்தத் தைலத்தாலும், மருத்துவராலும் குணப்படுத்தமுடியாத ஓர் ஆத்துமநோய் அநேகரில் காணப் படு கிறது. அந்த ஆத்துமாக்களுக்காக ஜெபியுங்கள். அவர்களை இயேசு விடம் கொண்டு வாருங்கள். கீலேயாத்தில் ஒரு தைலம் உண்டென் றும், அங்கு ஒரு மருத்துவர் உண்டென்றும் அவர்களிடம் சொல் லுங்கள்.தீஇவ 719.1

    ஒளி ஓர் ஆசீர்வாதம். அது உலகளாவிய ஆசீர்வாதம். நன்றி கெட்ட , பரிசுத்தமற்ற, ஒழுக்கமற்ற ஓர் உலகின் மேல் அது தன் பொக்கிஷங்களைப் பொழிந்தருளுகிறது. நீதியின் சூரியனானவர் தரும் ஒளியும் அப்படித்தான். பூமி முழுவதுமே , பாவ இருளாலும், வேதனையாலும், வருத்தத்தாலும் சூழப்பட்டுள்ள நிலையில், அன்பு குறித்த அறிவால் அது பிரகாசிக்கப்பட வேண்டியுள்ளது. பரலோ கச் சிங்காசனத்திலிருந்து பிரகாசிக்கும் ஒளியானது எந்தப் பிரிவின் ருக்கும், வகுப்பினருக்கும் இனத்தினருக்கும் விதிவிலக்கானதல்ல.தீஇவ 719.2

    இரக்கம் மற்றும் நம்பிக்கை பற்றிய செய்தி பூமியின் கடையாந் தரங்கள் மட்டும் கொண்டுசெல்லப்பட வேண்டும். விருப்பங்கொள் ளும் எவரும் முன் சென்று, அவருடைய கரத்தைப் பிடித்து, அவ ரோடு சமாதானமாகலாம், அவர் சமாதானம் அருளுவார். அஞ் ஞானிகள் இனியும் நடுராத்திரியின் இருளில் சிக்கியிருக்கவேண் டியதில்லை . நீதியின் சூரியனுடைய பிரகாசமான ஒளிக்கு முன்பாக இருள் அகன்றாக வேண்டும்.தீஇவ 719.3

    தேவனுடைய சபை மறுரூபமாக்கப்பட்ட ஒரு சரீரமாகத் திகழ வேண்டும்; உலகத்திற்கு ஒளியானவரால் திருச்சபை பிரகாசிக் கப்பட வேண்டும். இம்மானுவேலின் மகிமையைப் பெற்றிருக்க வேண்டும். அதற்குத் தேவையான ஒவ்வொரு ஏற்பாட்டையும் கிறிஸ்து செய்துள்ளார். வெளிச்சத்தையும் சமாதானத்தையும் கொண்ட ஆவிக்குரிய சூழ்நிலையால் ஒவ்வொரு கிறிஸ்தவனும் சூழப்பட்டிருக்க வேண்டுமென்பதே அவருடைய நோக்கமாய் இருக்கிறது. அவருக்கே உரிய சந்தோஷத்தை நாம் நம்முடைய வாழ்வில் வெளிப்படுத்த அவன் விரும்புகிறார்.தீஇவ 719.4

    ’’எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன் மேல் உதித்தது. “ஏசாயா 60:1. மிகுந்த மகிமையோடும் வல் லமையோடும் கிறிஸ்துவருகிறார். தம்முடைய சொந்த மகிமையோ டும் பிதாவின் மகிமையோடும் அவர் வருகிறார். அவரோடுகூட அவருடைய பரிசுத்த தூதர்களும் வருவார்கள். உலகம் முழுவதும் இருளில் மூழ்கியிருக்க, பரிசுத்தவான்கள் வாழும் ஒவ்வொரு இடத்திலும் வெளிச்சம் இருக்கும். அவருடைய இரண்டாம் வரு கையின் முதல் வெளிச்சத்தை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். அவருடைய மகிமையிலிருந்து மாசற்ற ஒளி புறப்படும். கிறிஸ்து வாகிய மீட்பரைக் கண்டு, அவரைச் சேவித்த யாவரும் பிரமிப்பார் கள். துன்மார்க்கர் ஒளிந்தோடும் வேளையில், கிறிஸ்துவின் பின் னடியார்கள் அவருடைய பிரசன்னத்தில் மகிழ்வார்கள்.தீஇவ 720.1

    அதன்பிறகுதான், மனிதர் மத்தியிலிருந்து மீட்கப்பட்டோர் தங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட சுதந்தரத்தைப் பெறு வார்கள். அவ்வாறாக, சொல்லப்பட்டபடியே இஸ்ரவேலுக்கான தேவநோக்கம் நிறைவேறும். தேவன் திட்டமிடுவாரானால், அதனை அவமாக்க மனிதனால் கூடாது. தீமை கிரியை செய்து வரும் கிறபோதிலும், தேவ நோக்கங்கள் தங்கள் நிறைவேறுதலை நோக் கிச் சீராக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பிளவுபட்டு நின்ற இஸ்ரவேலின் வரலாறு முழுவதிலும், இஸ்ரவேல் வம்சத்தாரில் அப்படியே அவருடைய நோக்கம் நிறைவேறியது; அதுபோல இன்றைய ஆவிக்குரிய இஸ்ரவேலரிலும் அது நிறைவேறும்.தீஇவ 720.2

    புதிதாக்கப்பட்ட பூமியில் இஸ்ரவேலர் மீண்டும் கொண்டு சேர்க்கப்படும் காலம் வரைக்குமுள்ள காலங்களை ஊடுருவிப் பார்த்தவராய், பத்மு தீவிலிருந்த தீர்க்கதரிசி பின்வருமாறு சாட்சி யிடுகிறார்:தீஇவ 720.3

    இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாதது மான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காச னத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக் கண்டேன்.தீஇவ 720.4

    ’’தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு, ஆமென், எங்கள் தேவ னுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல் லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக;தீஇவ 721.1

    ’’அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம் போல வும், பெருவெள்ள இரைச்சல் போலவும், பலத்த இடிமுழக்கம் போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமை யுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம் பண்ணுகிறார். நாம் சந்தோ ஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம் என்று சொல்லக்கேட்டேன்.”தீஇவ 721.2

    ’’ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவு மாயிருக்கிறார். அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்ட வர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர் களுமாயிருக்கிறார்கள்’’. வெளிப்படுத்தல் 7:9-12;19:6,7; 17:14.தீஇவ 721.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents