53 - கட்டுகிறவர்களே காவல்களாய்
நெகேமியாவின் எருசலேம் பயணம் பாதுகாப்பாக அமைந் தது. அவன் கடந்து சென்ற பகுதிகளின் தேசாதிபதிகளுக்கு ராஜா கொடுத்திருந்த கடிதமானது, மதிப்பான வரவேற்பையும் தேவை யான உதவியையும் அவனுக்குப் பெற்றுத்தந்தது. பெர்சியா ராஜா வின் அதிகாரத்தால் பாதுகாக்கப்பட்டிருந்த ஓர் அதிகாரிக்குத் தொல்லை தர எதிரி எவனுக்கும் துணிவிருக்கவில்லை; தேசாதிப் திகளால் குறிப்பிடத்தக்க மதிப்போடு அவன் நடத்தப்பட்டான். ஆனாலும், படை வீரரின் பாதுகாவலோடு அவன் எருசலேமிற்கு வந்தது, முக்கியப்பணிக்காக அவன் வந்திருந்ததைக் காட்டியது; நகரத்திற்கு அருகாமையில் வசித்த புறஜாதியாரின் பொறாமையை அது தூண்டிவிட்டது. ஏனெனில் யூதருக்கு அதிகமான தீமையை யும் அவமதிப்பையும் உண்டுபண்ணி, அவர்களுக்கு எதிராக எப் பொழுதும் பகைச் செயலில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். அக் கோத்திரத்தாரின் தலைவர்கள் சிலரும், ஒரோனியனான சன் பல் லாத்தும், அம்மோனியனான தொபியாவும், அரபியனான கேஷே மும் இந்தப் பாதகச் செயலிற்கு முன்னோடிகளாய் இருந்தார்கள். இத்தலைவர்கள் ஆரம்பம் முதலே நெகேமியாவின் அசைவுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வந்தார்கள்; அவன் திட்டங்களைத் தகர்க்கவும் அவன் வேலையைத் தடை செய்யவும் தங்களால் முடிந்த அளவு ஒவ்வொரு விதத்திலும் முயன்றார்கள்.தீஇவ 635.1
தன்னுடைய நடவடிக்கையில் இதுவரையிலும் காணப்பட்ட அதே விவேகத்தையும் முன்னெச்சரிக்கையையும் தொடர்ந்து கடைப் பிடித்தான் நெகேமியா. கசப்புடன் இருந்த பகைவர்கள் தன்னை எதிர்க்கத் தீர்மானமாக நின்றதை அறிந்திருந்தான். எனவே, தன் னுடைய திட்டங்களை நன்கு வகுப்பதற்கு ஏற்றவாறு, சூழ்நிலையை அறியும் வரையிலும், தன்னுடைய பணியின் தன்மை அவர்களுக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டான். அதன்மூலம் மக்களின் ஒத் துழைப்பைப் பெறவும், எதிரிகளால் எதிர்ப்புக் கிளம்பும் முன்னரே, அவர்களை வேலையில் ஈடுபடுத்தவும் விரும்பினான்.தீஇவ 636.1
நம்பிக்கைக்குப் பாத்திரவான்களெனத் தானறிந்த சிலரைத் தேர்ந்தெடுத்து, எருசலேமுக்குத் தன்னை வரப்பண்ணின் சூழ்நிலை கள் குறித்தும், தான் நிறைவேற்ற விரும்பின காரியம் குறித்தும், தான் செயல்படுத்த விரும்பும் திட்டங்கள் குறித்தும் அவர்களிடம் கூறினான் நெகேமியா. அவனுடைய முயற்சியில் அவர்கள் உடனடி யாக ஆர்வங் காட்டினார்கள்; உதவுவதாகவும் உறுதியளித்தார்கள்.தீஇவ 636.2
தான் எருசலேமிற்குப் போய்ச் சேர்ந்த மூன்றாம் நாள் இரவின் நடுநிசியில் எழுந்த நெகேமியா, நம்பிக்கைக்குகந்த சிலரைத் தன் னோடு சேர்த்துக்கொண்டு, எருசலேமின் அழிவை தானே கண்டறி யச் சென்றான். தன்னுடைய கோவேறு கழுதையில் ஏறி, நகரத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் சென்று பார்வையிட் டான். தனக்குப் பிரியமான எருசலேமின் பாதுகாப்பு அரண்கள் நொறுங்கிக் கிடந்ததைத் துக்கம் நிறைந்த இருதயத்தோடு அவன் பார்த்தபோது, அந்த யூதபக்தரின் மனதில் வேதனையான நினை வுகள் நிறைந்தன. இஸ்ரவேலின் முந்தைய மகிமையை நினைத் துப் பார்த்தபோது, அதற்கு நேர்மாறானதாக அதன் இழிநிலையின் காட்சி இருந்தது.தீஇவ 636.3
அந்தரங்கமாகவும் சத்தமில்லாமலும் மதில்களைச் சுற்றிவந்து முடித்தான் நெகேமியா. ‘’நான் போனதும், நான் செய்ததும் அதிகா ரிகள் ஒருவருக்கும் தெரியாது; அதுவரையிலும் நான் யூதருக்காகி லும், ஆசாரியர்கள் பெரியவர்கள் அதிகாரிகளுக்காகிலும் வேலை செய்கிற மற்றவர்களுக்காகிலும் ஒன்றும் அறிவிக்கவில்லை’‘ என்று சொல்கிறான். அதன்பிறகு அந்த இரவு முழுவதையும் அவன் ஜெபத் திலே கழித்தான்; ஏனெனில் ஊக்கமற்றும், பிரிந்தும் கிடந்ததன் தேச மக்களை விழிக்கச் செய்து, ஒன்றுபடச் செய்ய, மறுநாள் காலையில் ஊக்கமாக முயலவேண்டும் என்பதை அறிந்திருந்தான்.தீஇவ 636.4
நகரத்தின் மதில்களை மீண்டும் கட்டும் ஒரு மேன்மையான பணியை நெகேமியா மேற்கொண்டிருந்தான். அதில், அத்தேசக் குடிகளின் ஒத்துழைப்பு அவனுக்குத் தேவைப்பட்டது. ஆனால் அதனை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவன் பெற விரும்ப வில்லை. மாறாக, மக்களின் நம்பிக்கையையும் ஒத்துணர்வையும் பெற அவன் நாடினான். ஏனெனில், தனக்கு முன்னிருந்த மகத்தான பணிக்கு உள்ளங்களும் கரங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதின் அவசியத்தை அறிந்திருந்தான். மறுநாள் காலை யில், மக்களைக் கூடிவரச் செய்து, அவர்களில் புதைந்திருந்த ஆற் றலை எழுப்பவும், அவர்களில் சிதறியிருந்தோரை ஒருங்கிணைக் கவும் தகுந்தவாறுதான் திட்டமிட்டிருந்த வாதங்களை அவர்கள் முன் வைத்தான்.தீஇவ 637.1
முந்தின நாள் நடு இரவில் அவன் சுற்றிப்பார்த்தது பற்றி, அங் கிருந்தவர்கள் அறிந்திருக்கவில்லை; அவன் சொல்லவும் இல்லை. ஆனால், அவ்வாறு அவன் சுற்றிப்பார்த்திருந்தது அவனுடைய வெற்றிக்குப் பெரிதும் உதவியாயிருந்தது; ஏனெனில் கேட்டுக்கொண் டிருந்தவர்கள் திகைக்கும் வண்ணம், நகரத்தின் நிலை குறித்துச் சரி நுட்பமாகவும் நுணுக்கமாகவும் அவனால் பேசமுடிந்தது. எருசலே மின் அழிவையும் பெலவீனத்தையும் பார்த்தபோது, அவனில் ஏற் பட்டிருந்த தாக்கம், அவனுடைய வார்த்தைகளுக்கு வல்லமையை யும் உறுதியையும் கொடுத்தன.தீஇவ 637.2
யூதரல்லாதோருக்கு மத்தியில் தங்கள் மதத்திற்கு இழுக்கு ஏற் பட்டு, தங்கள் தேவன் தூஷிக்கப்பட்டதால் தங்களுக்கு ஏற்பட்டிருந்த நிந்தையை மக்கள்முன் எடுத்துரைத்தான் நெகேமியா. தான்தூரதேசத் தில் இருந்தபோது, அவர்களுடைய இக்கட்டு பற்றிக் கேள்விப்பட்ட தையும், அவர்களின் சார்பாகப் பரலோகத் தயவை வேண்டிக் கொண்டதையும், அவர்களுக்கு உதவ எருசலேமுக்கு வரும்படி, தான் ஜெபித்து, ராஜாவினிடத்தில் அனுமதி கோரத் தீர்மானித்ததை யும் அவர்களுக்குச் சொன்னான். ராஜா தனக்கு அனுமதி தருவது மாத்திரமல்ல; அதற்கான அதிகாரத்தைத் தனக்கு அளித்து, அந்தப் பணிக்குத் தேவையான உதவியைச் செய்யவேண்டுமென்றும் தேவ னிடம் கேட்டான்; அது தேவனுடைய திட்டம்’ என்பது வெளிப்படும் விதத்தில், அவனுடைய ஜெபம் பதிலளிக்கப்பட்டது.தீஇவ 637.3
இவற்றையெல்லாம் அவர்களிடம் விவரித்தான். பிறகு, தான் இஸ்ரவேலின் தேவனுடைய அதிகாரத்தாலும், பெர்சிய ராஜாவின் அதிகாரத்தாலும் ஆதரிக்கப்பட்டுள்ளதை அவர்களுக்கு எடுத் துரைத்தான் அவர்கள் அத்தருணத்தைச் சாதகமாக்கி, எழுந்து, மதிலைக் கட்டப்போகிறீர்களா இல்லையா என்று நேரடியாக மக் களிடமே கேட்டான் நெகேமியா.தீஇவ 638.1
அந்த வேண்டுகோள் நேரடியாக அவர்களுடைய உள்ளங் களில் உறைத்தது. பரலோகத்தின் தயவு எவ்வாறு தங்கள் மேல் வெளிப்படுத்தப்பட்டிருந்தது என்பதை எண்ணியபோது, அவர் களின் பயங்கள் அவமாகின; புதுத்துணிவோடு, ‘’எழுந்து கட்டு வோம் வாருங்கள்’‘ என்று ஒருமனதோடு சொன்னார்கள். அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்’.தீஇவ 638.2
நெகேமியாவின் உள்ளம் அனைத்தும், தான் மேற்கொண்டிருந்த முயற்சியிலே ஈடுபட்டிருந்தது. அவன் நம்பிக்கையும், அவன் ஆற்ற லும், அவன் ஆர்வமும், அவன் உறுதியும் பிறரையும் தொற்றிக் கொள்ளும் தன்மையைக் கொண்டிருந்தன; அதே உன்னத நோக்க மும் தைரியமும் கொள்ளும்படிச் செய்தன. ஒவ்வொரு யூதனும் தன் பங்கிற்கு ஒரு நெகேமியாவாகத் திகழ்ந்தான், தன் அயலானின் உள்ளத்தையும் கரங்களையும், திடப்படுத்த உதவினான்.தீஇவ 638.3
யூதர்கள் நிறைவேற்ற எண்ணியிருந்த பணி குறித்து இஸ்ரவே லின் பகைவர்கள் கேட்டு, நகைத்து, ‘’நீங்கள் செய்கிற இந்தக் காரி யம் என்ன? நீங்கள் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம் பண்ணப் போகிறீர்களோ” என்று பரியாசம்பண்ணினார்கள். ஆனால், அதற்கு நெகேமியா, ‘’பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத் தைக் கைகூடிவரப் பண்ணுவார்; அவருடைய ஊழியக்காரராகிய நாங்கள் எழுந்து கட்டுவோம்; உங்களுக்கோவென்றால் எருசலே மிலே பங்குமில்லை பாத்தியமுமில்லை; உங்கள் பேர் விளங்க ஒன் றும் இல்லை ‘‘ என்று பதிலளித்தான்.தீஇவ 638.4
நெகேமியாவின் ஆவியில் காணப்பட்ட உற்சாகத்தையும் மும் முரத்தையும் முதன்முதலாகக் கண்டுகொண்டது ஆசாரியர்கள்தாம். இவர்கள் தங்கள் செல்வாக்குமிக்க பதவியின் நிமித்தம் அந்தப் பணியை அதிகமாக ஊக்கப்படுத்தவோ தடை செய்யவோ கூடிய வர்களாக இருந்தார்கள். அவர்களின் உடனடி ஒத்துழைப்பு அப் பணியின் வெற்றிக்குப் பெரிதும் பங்காற்றினது. இஸ்ரவேலின் அதிபதிகளிலும் பிரபுக்களிலும் பெரும்பாலானவர்கள் உண்மை யோடு தங்கள் கடமையைச் செய்ய வந்தார்கள். உண்மையுள்ள இவர்கள், தேவனுடைய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு, கனம் பெற் றுள்ளார்கள். ‘தங்கள் ஆண்டவருடைய வேலைக்குத் தங்கள் கழுத் தைக் கொடுக்காத’ தெக்கோவாவின் பிரபுக்கள் சிலர் அங்கிருந் தனர். சோம்பலான ஊழியர்கள் என்று அவமானமாக நினைவுகூரப் படும் விதத்தில் தேவபுத்தகத்தில் அவர்கள் சொல்லப்பட்டிருக்கிறார் கள்; வருங்காலத் தலைமுறையினர் அனைவருக்கும் ஓர் எச்சரிப்பாக எழுதப்பட்டுள்ளார்கள்.தீஇவ 638.5
தேவ நோக்கத்திற்கான ஒரு காரியத்தில், தங்களால் மறுப்பு ஏதும் சொல்லமுடியாத போதிலும், அதில் அக்கறை ஏதுமின்றி, அதற்கு உதவ எந்த முயற்சியும் எடுக்க மறுப்பவர்கள் எல்லாச் சபை இயக்கங்களிலும் காணப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள், உன் னதத்தில் பதிவு செய்யப்பட்டுவரும் ஒரு பதிவு குறித்து ஞாபகம் கொண்டால் நலமாயிருக்கும். அந்தப் பதிவுப்புத்தகத்தில் எதுவும் விடுபடப் போவதும் இல்லை; தவறு ஏற்படப்போவதும் இல்லை; அதிலிருந்துதான் அவர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள். தேவ னுடைய சேவையில், புறக்கணிக்கப்படும் ஒவ்வொரு தருணமும் அங்குப் பதிவுசெய்யப்படும்; மேலும், அன்பாலும் விசுவாசத் தாலும் விளைந்த ஒவ்வொரு செயலும் நித்தியமாக அதில் பதிவு செய்யப்படும்.தீஇவ 639.1
நெகேமியாவின் வருகையால் உண்டான நன்மையான செல் வாக்கிற்கு முன்னிலையில், தெக்கோவாவின் பிரபுக்களுடைய முன்மாதிரி ஒன்றுமில்லாதிருந்தது. பொதுவாக, தேசப்பற்றும், ஆர்வமும் மக்களை ஊக்கப்படுத்தியிருந்தது. திறமையும் செல்வாக் கும் படைத்தவர்கள், பல்வேறு இன மக்களைக் குழுக்களாக ஏற் படுத்தினார்கள். மதிலின் ஒரு குறிப்பிட்டப் பகுதியைக் கட்டும் பொறுப்பை ஒவ்வொரு தலைவனும் ஏற்றுக்கொண்டான். அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிரே இருக்கிறதைக் கட்டினார்கள்’ என்று சிலரைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.தீஇவ 639.2
வேலை இப்போது ஆரம்பிக்கப்பட்டிருந்தபோதிலும், நெகே மியாவின் வேகம் தணியவில்லை. அவர் ஓய்வற்ற விழிப்போடு கட்டடவேலையை மேற்பார்வையிட்டார், பணியாட்களை வேலைக்கு ஏவினான்; தடைகளைக் கணித்தான்; அவசர நிலைகளைச் சந்தித் தான். மூன்று மைல் நீள அந்த மதில் நெடுகிலும் அவனுடைய செல் வாக்கு உணரப்பட்டது. சமயத்திற்கேற்ற வார்த்தைகளால், அச்சங் கொண்டோரை ஊக்குவித்தான்; சோம்பேறிகளை உசுப்பிவிட் டான்; விழிப்புள்ளோரை அங்கீகரித்தான். தங்கள் எதிரிகளின் அசைவுகளை எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருந்தான். அவர்கள் அவ்வப்போது, சிறிது தொலைவில் கூடி, ஏதோ சதித் திட்டம் தீட்டுவது போல ஆலோசனையில் ஈடுபட்டார்கள். பிறகு, வேலை செய்கிறவர்களின் அருகாமையில் வந்து, அவர்களின் கவ னத்தைத் திசைதிருப்ப முயற்சித்தார்கள்.தீஇவ 639.3
தன்னுடைய பல்வேறு அலுவல்களிலும், தன் பெலத்தின் ஆதாரமானவரை நெகேமியா மறக்கவில்லை. எல்லாரையும் உற்று நோக்கும் மகத்தானவரான தேவனுக்கு நேராக, எப்பொழுதும் அவன் உள்ளம் ஏறெடுக்கப்பட்டிருந்தது. ‘’பரலோகத்தின் தேவ னானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடி வரப்பண்ணுவார்’‘ என்று சத்தமிட்டுச் சொன்னான். அந்த வார்த்தைகள் மீண்டும் மீண் டும் எதிரொலித்து, மதில் மேலிருந்த வேலையாட்களின் உள்ளங் களைப் பரவசமடையச் செய்தன.தீஇவ 640.1
ஆனாலும், எருசலேமின் பாதுகாப்பு அரண்களைப் புதுப்பிக் கும் பணியில் தடைகள் ஏற்படாமலுமில்லை. எதிர்ப்பைத் தூண்டி விட்டு, அதைரியத்தை ஏற்படுத்த சாத்தான் கிரியை செய்து கொண் டிருந்தான். அவனுடைய முதன்மை பிரதிநிதிகளான சன்பல்லாத் தும், தொபியாவும், கேஷேமும் அந்தக் கட்டுமான பணியைத் தடை செய்யத் திட்டமிட்டார்கள். வேலையாட்கள் மத்தியில் பிரிவினை உண்டாக்க அவர்கள் பெரிதும் முயன்றார்கள். கட்டுகிறவர்களின் முயற்சிகளைப் பரியாசம் பண்ணி, அந்த முயற்சி கைகூடாத காரிய மென்றும், தோல்வியடையுமென்றும் கூறினார்கள்.தீஇவ 641.1
’’அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன, சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார் களோ” என்று பரியாசமாகப் பேசினான் சன்பல்லாத்து. தொபியா இன்னும் ஏளனமாக, ‘’அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப் போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும்” என்றான்.தீஇவ 641.2
கட்டுகிறவர்கள் சீக்கிரத்திலேயே அதிக தீவிரமான எதிர்ப் பிற்கு ஆளானார்கள். நண்பர்கள் போல நடித்து, குழப்பத்தையும் சிக்கலையும் உண்டுபண்ணவும், அவநம்பிக்கையை ஏற்படுத்தவும் பல்வேறு வழிகளில் முயன்ற தங்கள் சத்துருக்களின் சதித்திட்டங் களுக்கு எதிராக எப்பொழுதும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளானார்கள். ஏனெனில், யூதர்களின் ஊக்கத்தைக் கெடுக்க அவர்கள் பெரிதும் முயன்றார்கள். தங்களு டைய இழிசெயல்களில் நெகேமியாவைச் சிக்கவைக்க சதித்திட்டம் தீட்டினார்கள்; அந்த வஞ்சகமுயற்சிக்கு உதவபுரட்டுள்ளம் கொண்ட யூதர்கள் ஆயத்தமாயிருந்தார்கள். நெகேமியா இஸ்ரவேலின்மேல் தன்னை ராஜாவாக உயர்த்த எண்ணி, பெர்சிய ராஜாவுக்கு எதிராக சதித்திட்டம் போடுவதாகவும், அவனுக்கு உதவியாயிருந்த யாவ ரும் நம்பிக்கைத் துரோகிகள் என்றும் வதந்தி பரப்பினார்கள்.தீஇவ 642.1
ஆனால் தன்னைத் தாங்கி, வழிநடத்துமாறு தேவனை நோக்கு வதிலிருந்து நெகேமியா பின்வாங்கவில்லை. மேலும், ‘ஜனங்கள் வேலை செய்கிறதற்கு ஆவலாயிருந்தார்கள். ‘ இடைவெளிகளின்றி சுவர் அடைக்கப்படும் வரைக்கும், அதனைக் கட்ட நினைத்த உய ரத்திற்குப் பாதியளவு அது முழுவதுமாக கட்டப்படும் வரைக்கும் வேலை தொடர்ந்து நடைபெற்றது.தீஇவ 642.2
தங்களுடைய முயற்சிகள் வெகுவாகப் பயனற்று போனதை இஸ்ரவேலின் சத்துருக்கள் கண்டபோது, அவர்கள் உக்கிரத்தால் நிறைந்தார்கள். ‘நெகேமியாவும் அவனுடைய சகாக்களும் ராஜா வின் கட்டளையைக்கொண்டு செயல்பட்டார்கள்’ என்பதை அறிந்து, ‘அவனைத் தீவிரமாக எதிர்த்தால் ராஜாவின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்’ என்று பயந்திருந்ததால், அதுரைக்கும் மூர்க்கமான நட வடிக்கைகளில் அவர்கள் இறங்காதிருந்தனர். இப்பொழுதும் தங் கள் கோபத்தில், நெகேமியாவை எதற்காகக் குற்றஞ்சாட்டினார் களோ, அதே குற்றத்தை அவர்கள் செய்தார்கள். அதாவது, ‘அவர் கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து எருசலேமின் மீது போர் தொடுக்க சதி செய்தனர்’’. (பொ.மொ.பெ).தீஇவ 642.3
நெகேமியாவுக்கும் அவனுடைய வேலைக்கும் எதிராக சமா ரியர்கள் சதி பண்ணிக்கொண்டிருந்த அதேவேளையில்; யூத தலை வர்கள் சிலர் மனக்குறைப்பட்டு, அந்த வேலையில் ஏற்படும் பிரச்ச னைகளை மிகைப்படுத்திக் கூறி, அவனை அதைரியப்படுத்த முயன் றார்கள். ‘’சுமைகாரரின் பெலன் குறைந்துபோகிறது; மண்மேடு மிச்சமாயிருக்கிறது; நாங்கள் அலங்கத்தைக் கட்டக்கூடாது” என் றார்கள்.தீஇவ 643.1
இன்னொரு கூட்டத்தாரும் இப்படியாக அதைரியம் ஏற்படுத்தி னர். அதாவது வேலையில் பங்கெடுக்காது அவர்களண்டையிலே குடியிருந்த யூதர்’ தங்கள் எதிரிகளின் பேச்சுகளையும் அறிவிப்பு களையும் கேட்டுவந்து, மற்ற யூதரின் தைரியத்தைக் கெடுக்கவும், மனஸ்தாபம் ஏற்படுத்தவும் வழி செய்தார்கள்.தீஇவ 643.2
ஆனால், ஏளனமும் பரியாசமும், எதிர்ப்பும் மிரட்டல்களும், நெகேமியாவின் உறுதியை மேலும் தீவிரப்படுத்துவதாகவும் அவனை மேலும் விழிப்புடன் செயல்படத் தூண்டுவதாகவும் அமைந் தன். தங்கள் சத்துருக்களோடான அந்தப் போராட்டத்தில் உண்டாகும் ஆபத்துகளை அவன் அறிந்திருந்தான். ஆனாலும் அவன் துணி விழக்கவில்லை. ‘’நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, அவர்கள் நிமித்தம் இரவும் பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத் தோம்.’‘ ‘’அப்பொழுது நான் : அலங்கத்துக்குப் பின்னாக இருக்கிற பள்ளமான இடங்களிலும் மேடுகளிலும், பட்டயங்களையும், ஈட்டி களையும், வில்லுகளையும், பிடித்திருக்கிற ஜனங்களைக் குடும்பங் குடும்பமாக நிறுத்தினேன். அதை நான் பார்த்து எழும்பி, பிரபுக் களையும் அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி: அவர் களுக்குப் பயப்படாதிருங்கள்; நீங்கள் மகத்துவமும் பயங்கரம் மான ஆண்டவரை நினைத்து, உங்கள் சகோதரருக்காகவும், உங் கள் குமாரருக்காகவும், உங்கள் குமாரத்திகளுக்காகவும், உங்கள் மனைவிகளுக்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் யுத்தம்பண் ணுங்கள் என்றேன்.தீஇவ 643.3
’’எங்களுக்குச் செய்தி தெரியவந்ததென்றும், தேவன் அவர் கள் ஆலோசனையை அபத்தமாக்கினாரென்றும், எங்கள் பகைஞர் கேட்டபோது, நாங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வேலையைச் செய்ய அலங்கத்துக்கு திரும்பினோம். அன்று முதற்கொண்டு என் வேலைக்காரரில் பாதிப்பேர் வேலை செய்தார்கள், பாதிப்பேர் ஈட்டிகளையும் பரிசைகளையும் வில்லுகளையும் கவசங்களையும் பிடித்து நின்றார்கள். அலங்கத்திலே கட்டுகிறவர்களும், சுமை சுமக்கிறவர்களும், சுமையேற்றுகிறவர்களும், அவரவர் தார்கள். கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாய் வேலை செய்தார்கள்” என் றான்.தீஇவ 643.4
நெகேமியாவின் அருகில் எக்காளம் ஊதுகிறவன் ஒருவன் நின்றான். மதிலின் வெவ்வேறு பகுதிகளில், பரிசுத்த எக்காளங் களைக் கொண்டிருந்த ஆசாரியர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். மக் கள் ஆங்காங்கே சிதறி வேலை செய்து வந்தார்கள். ஆபத்து நேரி டும்போது, எங்கு எக்காளம் ஊதப்படுகிறதோ, அங்கு அவர்கள் உடனடியாக மொத்தமாகக் கூட வேண்டியிருந்தது. இப்படியே நாங்கள் வேலை செய்துகொண்டிருந்தோம்; அவர்களிலே பாதிப் பேர் கிழக்கு வெளுக்கும் நேரமுதல் நட்சத்திரங்கள் காணுமட்டும் ஈட்டிகளைப் பிடித்திருந்தார்கள்.’‘ என்கிறான் நெகேமியா.தீஇவ 644.1
இரவில் வேலையைக் காவல் காத்து, காலையில் வேலை செய்ய ஆயத்தமாயிருக்கும்படி, எருசலேமிற்கு வெளியேயிருந்த நகரங்களிலும் கிராமங்களிலும் வசித்துவந்தவர்கள் அலங்கங் களுக்கு உள்ளேயே தங்கும்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். இது தேவையற்ற தாமதத்தைத் தவிர்க்க உதவியது. மேலும், வேலைக்காரர் தங்கள் வீடுகளுக்கு வந்தும் போயும் இருப்பதால், அவர்களைத் தாக்கும்படி எதிரிகளுக்குக் கிடைக்கக்கூடிய தருணத் தையும் தவிர்த்துப்போட்டது. கஷ்டங்களினாலோ, கடுமையான வேலைகளினாலோ நெகேமியாவும் அவனுடைய கூட்டாளிகளும் பின்வாங்கிவிடவில்லை. இரவிலோ, பகலிலோ, தூங்குவதற்கு ஒதுக்கப்பட்ட கொஞ்ச நேரத்திலோ அவர்கள் தங்கள் வஸ்திரங் களைக் களைந்து போடவில்லை; தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கவும் இல்லை.தீஇவ 644.2
நெகேமியாவின் நாட்களில், வெளிப்படையான எதிரிகளா லும் நண்பர்கள் போல நடித்தவர்களாலும் அந்தக் கட்டுமானக்காரர் சந்தித்த எதிர்ப்பும் மனச்சோர்வும், இன்று தேவனுக்காக ஊழியம் செய்கிறவர்களுக்கு ஏற்படும் அனுபவத்திற்கு முன்மாதிரியாக இருக்கிறது. எதிரிகளின் கோபம், வெறுப்பு, கொடுமை போன்ற வற்றால் மாத்திரமல்ல; நண்பர்களென்றும் உதவி செய்கிறவர்கள் ளென்றும் சொல்லிக்கொள்பவர்களிடம் காணப்படும் சோம்பல், முரண்பாடு, ஆர்வக்குறைவு, வஞ்சகம் போன்றவற்றாலும் கிறிஸ் தவர்கள் சோதிக்கப்படுகிறார்கள். அவர்கள்மேல் ஏளனத்தையும் அவதூறையும் ஏவிவிடுகிறார்கள். அவமதிப்பை ஏற்படுத்தும் அதே எதிரி, ஏற்ற சமயம் வாய்க்கும்போது, மிகக் கொடூரமான, வன்முறையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறான்.தீஇவ 644.3
பரிசுத்தமற்ற ஒவ்வொரு காரியத்தையும், தன் நோக்கத்தை நிறைவேற்ற சாதகமாக்குகிறான் சாத்தான். தேவநோக்கத்தின் ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொள்வோர் மத்தியில், அவ ருடைய சத்துருக்களோடு இணைகிறவர்களும், அதன் மூலம் அவ ருடைய கொடிய சத்துருக்களிடம் அவருடைய நோக்கத்தை விலை பேசுகிறவர்களும் இருக்கிறார்கள். தேவபணியின் வளர்ச்சியை விரும்பும் சிலர்கூட, அவருடைய சத்துருக்களின் பழிபேச்சையும், பயமுறுத்தல்களையும், பெருமை பாராட்டல்களையும் கேட்டு, அரைகுறையாக நம்பி, அவற்றை அறிவித்து அவருடைய ஊழியர் களின் கரங்களைத் திடனற்றுப் போகப்பண்ணுகிறார்கள். தன் பிரதிநிதிகள் மூலம் மகத்தான வெற்றியோடு சாத்தான் செயல்படும் கிறான். அவர்களின் செல்வாக்குக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கும் யாவரும், ஞானிகளின் ஞானத்தையும் விவேகிகளின் அறிவையும் அழிக்கக்கூடிய ஒரு மாயமான வல்லமைக்குக் கீழ்ப்படுகிறார்கள். ஆனால், நெகேமியாவைப் போலதேவ மக்கள் தங்கள் எதிரிகளுக் குப் பயப்படவோ, அவர்களை அற்பமாக எண்ணவோ கூடாது. அவர்கள் தேவன்மேல் தங்கள் நம்பிக்கையை வைத்து, உறுதியுடன் முன்னேற வேண்டும். சுயநலமில்லாமல் அவருடைய வேலையைச் செய்யவேண்டும்; தாங்கள் நிற்கும் நோக்கத்தில் அவருடைய செய்கைகளுக்குத் தங்களை அர்ப்பணிக்கவேண்டும்.தீஇவ 645.1
மிகுந்த இக்கட்டிற்கு மத்தியிலும், தேவனையே தன் நம்பிக்கை யாகவும், பாதுகாப்பின் நிச்சயமாகவும் கொண்டான் நெகேமியா. அன்று தம்முடைய ஊழியனுக்கு ஆதரவாக இருந்த அவர்தாமே, ஒவ்வொரு காலத்திலும் தம் மக்களின் உறுதுணையாய் இருக்கிறார். நெருக்கடியான ஒவ்வொரு நேரத்திலும் அவருடைய மக்கள், ‘’தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப் பவன் யார்?’ என்று நம்பிக்கையோடு சொல்லலாம். ரோமர் 8:31. சாத்தான் மற்றும் அவனுடைய பிரதிநிதிகளின் சதியாலோசனைகள் எவ்வளவுதான் தந்திரமாகப் புனையப்பட்டாலும், தேவன் அவற்றை அடையாளம் காணமுடியும்; அவர்களின் ஆலோசனைகளை அபத்த மாக்க முடியும். ‘நம்முடைய தேவன் நமக்காக யுத்தம்பண்ணுவார்’ என்று நெகேமியா சொன்னதே, இன்றைய விசுவாகப் பேச்சாகவும் இருக்கவேண்டும். ஏனெனில், ஊழியம் தேவனுடையது, அதன் இறுதி வெற்றியை எந்த மனிதனாலும் தடுக்கமுடியாது.தீஇவ 645.2