Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    19 - எத்தனைமுறை மன்னிக்கவேண்டும்

    கிறிஸ்துவிடம் வந்த பேதுரு, ” ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால் நான் எத்தனைதரம் மன்னிக்க வேண்டும்? ஏழுதர மட்டுமோ” என்று கேள்வி எழுப்பி னான். மூன்று குற்றங்கள் வரை மன்னிக்கலாம் என்று ரபிமார்கள் அளவுவைத்திருந்தார்கள். அதனால் தான் கிறிஸ்துவின் போதனை யின்படி செய்வதாக நினைத்துக்கொண்ட பேதுரு, ஏழு என்பது பரிபூரணத்தைச் சுட்டிக்காட்டுவதால், ஏழுமுறை மன்னிக்கலாமா என்று கேட்கிறான். ஆனால் மன்னிப்பதில் சோர்ந்து போகக் கூடாதென கிறிஸ்து போதித்தார். “ஏழுதரமாத்திரம் அல்ல ஏழெழுபது தரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்” என்றார்.COLTam 240.1

    பிறரை மன்னிப்பதில் உண்மையான நோக்கம் என்னவாக இருக்கவேண்டும் என்பதையும், மன்னிக்காத மனநிலையை வளர்ப்பதலிலுள்ள ஆபத்தையும் எடுத்துச்சொன்னார். தனது அர சாங்கக் காரியங்களை நிர்வகித்து வந்த அதிகாரிகளிடம் ஒரு ராஜா நடந்து கொண்ட விதம் குறித்த உவமையொன்றைச் சொன்னார். அந்த அதிகாரிகளில் சிலர் அரசாங்கத்திடமிருந்து ஏராளமாக கடன் வாங்கியிருந்தார்கள். அந்தக் கணக்கைச் சரியாக நிர்வாகம் செய் கிறார்களாவென்று ராஜா விசாரித்த போது, ராஜாவிடம் பத்தாயிரம் தாலந்து கடன் வாங்கியிருந்த ஒருவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். கடனைத் திருப்பிச் செலுத்த அவனுக்கு வழியில்லை; எனவே வழக்கத்தின்படி, அவனையும் அவனுக்குள்ள எல்லா வற்றையும் விற்றுக், கடனைச் செலுத்துமாறு ராஜா கட்டளை யிட்டார். அதைக் கேட்டு நடுங்கிப்போன அந்த மனிதன், ராஜாவின் காலில் விழுந்து,“ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன்” என்றான். அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடு தலைப்பண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.COLTam 240.2

    “அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகை யில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன் உடன் வேலைக்காரரில் ஒருவனைக் கண்டு, அவனைப் பிடித்து, தொண்டையை நெரித்து : நீ பட்ட கடனை எனக்குக் கொடுத் துத் தீர்க்கவேண்டும் என்றான். அப்பொழுது அவனுடைய உடன் வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து : என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான். அவனோ சம்மதியாமல், போய், அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான். நடந்ததை அவனுடைய உடன் வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள். அப்பொழுது, அவ னுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து : பொல்லாத ஊழியக் காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். நான் உனக்கு இரங் கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன்பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.”COLTam 241.1

    முக்கியமான ஆவிக்குரிய செய்தியை வலியுறுத்துவதற்கே யன்றி வேறுவிவரங்களுக்காக அந்த உவமை சொல்லப்படவில்லை. எனவே, அந்த விபரங்களில் கவனம் செல்லக்கூடாது. சில முக்கிய சத்தியங்கள் சொல்லப்பட்டுள்ளன; அவற்றை மட்டுமே சிந்திக்க வேண்டும்.COLTam 241.2

    ராஜாவின் மன்னிப்பானது, தேவன் மக்கள் அனைவருடைய பாவத்தையும் மன்னிப்பதை எடுத்துக்காட்டுகிறது. மனதிரங்கி, தனது ஊழியக்காரனின் கடனை மன்னித்த ராஜா, கிறிஸ்துவுக்கு அடையாளமாக இருக்கிறான். நியாயப்பிரமாணத்தை மீறினதால் மனிதன் ஆக்கினைக்குள்ளானான். அவனால் தன்னை இரட்சிக்க முடியாது, அதனால் தான் தன் தெய்வீகத்தோடு மனிதத்தன்மை யையும் தரித்து, கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார்; நீதிமானை அல்ல, பாவியை இரட்சிக்கவந்தார். நம்முடைய பாவங்களுக்காக தம்மையே கொடுத்தார்; தமது இரத்தத்தை விலையாகக் கொடுத்து வாங்கின மன்னிப்பை ஒவ்வோர் ஆத்துமாவுக்கும் இலவசமாகக் கொடுக்கிறார். கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு .”சங்கீதம் 130:7.COLTam 241.3

    சகபாவிகள் மேல் நாம் மனதுருக்கத்தோடு நடந்து கொள் வதற்கு இதுதான் காரணமாக இருக்கவேண்டும். “தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக்கடனாளிகளாயிருக்கிறோம்.”யோவான் 4:11. “இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்” என்று கிறிஸ்து சொல்கிறார். மத்தேயு 10:8.COLTam 242.1

    பொறுமையாக இருக்கும்படி வேண்டி, “எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன்” என்று அந்த உவமையில் வாக் குக்கொடுத்தான். உடனே அவனுக்கு தண்டனை ரத்து செய் யப்பட்டது. முழுக்கடனும் மன்னிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தன் எஜமான் தன்னை மன்னித்த்து போலவே இன்னொருவனை அவன் மன்னிக்கவேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. தன்னிடம் சொற்பளவே கடன் வாங்கியிருந்த ஒருவனை வெளியே சந்திக் கிறான். ராஜா இவனுக்கு பத்தாயிரம் தாலந்துகளை மன்னித்திருந்தான்; ஆனால் இவனிடம் கடன்பட்டவன் நூறு வெள்ளிப்பணமே கடன்பட்டிருந்தான். இவன் ராஜாவிடம் எவ்வாறு கேட்டு மன்ற ரடினோ அதுபோலவே நூறு காசு கடன் பட்டவன் இவனிடம் மன் றாடுகிறான். ஆனால் ராஜாவிடம் இரக்கத்தைப் பெற்றவன், தன் சகவேலைக்காரனை அவ்வாறு நடத்தவில்லை. பொறுமையாக இருக்கும்படி கேட்டதற்கு சம்மதிக்கவில்லை. நன்றி கெட்ட இந்த ஊழியக்காரனுக்குதான் கடனாகக் கொடுத்திருந்த சிறுதொகையைக் மன்னிக்க மனதில்லை. அந்தக் கடனைத் திரும்பச் செலுத்தும்படி கட்டாயப்படுத்தினான். இரக்கத்தோடு இவனுக்கு ரத்து செய்யப் பட்டிருந்த அதே தண்டனையை தன்னிடம் கடன்பட்டவனுக்கு ரத்து செய்ய விரும்பவில்லை.COLTam 242.2

    இன்று எத்தனை பேர் இதேவித ஆவியை வெளிப்படுத்துகிறார்கள். தன்னுடைய கடனை மன்னிக்கும்படி ராஜாவிடம் மன்றாடின அந்த வேலைக்காரனுக்கு தான் பட்டிருந்த கடன் எவ்வளவு பெரி யது என்கிற உணர்வே இல்லை. தான் உதவியற்ற நிலையில் இருந்ததையும் அவன் உணரவில்லை. தன்னைக் காப்பாற்ற தன்னால் முடியுமென நினைத்தான். என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன்” என்று கூறினான். இதுபோல, தங்களுடைய சொந்தக் கிரியைகளால் தேவனுடைய தயவைச் சம்பாதிக்கலாம் என்று நினைக்கிற பலர் இருக்கிறார்கள். தங்கள் இயலாமையை அவர்கள் உணர்வதில்லை. தேவ கிரு பையை இலவசஈவாக அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை; மாறாக, தங்களுடைய சுய நீதியில் நிற்பதற்கு முயற்சிக்கிறார்கள். தங்களுடைய பாவத்தை எண்ணி, இருதயம் நொறுங்குண்டு, தங்களைத் தாழ்த்துவதில்லை; பிறரிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள்; அவர்களை மன்னிப்பதில்லை. இவர்கள் தேவனுக்கு எதிராகச் செய்த பாவங்கள் பத்தாயிரம் தாலந்துக்கள் கடன்பட்ட அளவு பெரி யது, இவர்களது சகோதரர்கள் இவர்களுக்குச் செய்த பாவம் நூறு வெள்ளிக்காசு கடன் அளவுக்குத்தான் இருக்கும்; அதாவது பத்து லட்சத்தில் ஒரு பங்குதான். ஆனாலும் அவர்களை மன்னிக்காத படி துணிகரங்கொண்டிருக்கிறார்கள்.COLTam 242.3

    அந்த உவமையில், இரக்கமற்ற ஊழியக்காரனை அழைத்த ராஜா,” பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்ட படியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்து விட் டேன். நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக் காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனை யெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிற வர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான் ..” பின்பு இயேசு ஜனங்களை நோக்கி : “நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப் பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற் போனால், என் பரம் பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்” என்றார். மன்னிக்க மறுப்பவன் தான் மன்னிக்கப்படுவதற்கான வாய்ப்பைப் போக் கடிக்கிறான்.COLTam 243.1

    இந்த உவமையின் போதனைக்கு தவறான அர்த்தம் காணக் கூடாது. தேவன் மன்னிக்கிறார் என்பதற்காக, அவருக்குக் கீழ்ப் படியவேண்டிய கடமை குறைகிறது என்று அர்த்தமல்ல. நாம் உடன் மனிதர்களிடம் மன்னிக்கும் சுபாவத்தோடு நடப்பதால், நியாயப்படி கேட்டுவாங்கவேண்டிய விஷயத்தில் கேட்பது தவறல்ல. கிறிஸ்து தமது சீடர்களுக்கு, “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என்று ஜெபிக்கக் கற்றுக்கொடுத்தார். மத்தேயு 6:12. நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக, நம்மிடம் கடன் வாங்கியவர் களிடம் அதைக் கேட்க வேண்டியதில்லை என்று அர்த்தமல்ல. அதை அவர்கள் திருப்பிச் செலுத்த முடியாமல் போனாலும், நிதி நிர்வாகக் குறைபாடுதான் காரணமாக இருக்கும்; எனவே அவர்களைச் சிறையிலடைப்பதோ, துன்புறுத்துவதோ, அல்லது கடின மாக நடத்தவோ கூடாது. அதற்காக ஒருவர் சோம்பேறியாகவே இருக்க அவரை ஊக்கப்படுத்தவும் உவமை சொல்லவில்லை. “ஒருவன் வேலை செய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிட வும் கூடாது” என்று தேவ்வார்த்தை சொல்கிறது. 1தெச 3:10. கடின மாக உழைக்கிற ஒருவர் சோம்பேறியாக இருக்கிறவருக்கு உதவ வேண்டுமென்று ஆண்டவர் கூறவில்லை. நேரத்தை வீணடிப்ப தாலும், முயற்சிகள் மேற்கொள்ளாததாலுமே அநேகர் வறுமை யிலும் தேவையிலும் இருக்கிறார்கள். இத்தகைய வாழ்க்கையில் மூழ்கியிருப்பவர்கள் தவறுகளைத் திருத்தாவிட்டால், அவர்களுக் காக எடுக்கப்படுகிற முயற்சிகள் எல்லாமே ஓட்டைப் பையில் பொக்கிஷத்தைப் போடுவதுபோல இருக்கும். தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் தரித்திரராக வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள். வாய்ப்பு வசதி இல்லாத அவர்கள் மேல் கனிவோடும், மனதுருக்கத் தோடும் நடந்து கொள்ள வேண்டும்.COLTam 243.2

    இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பிறர் நம்மை எவ்வாறு நடத்த விரும்புவோமோ அப்படியே நாமும் அவர்களை நடத்தவேண்டும்.COLTam 244.1

    பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலனாகிய பவுல் மூலமாக நமக்குக் கட்டளையிடுகிறார்: ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக் கங்களும் உண்டானால், நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ள வர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். ஒன்றையும் வாதினாலாவது, வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக் கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.” பிலிப்பியர் 2:1-5.COLTam 244.2

    ஆனால் பாவத்தை சாதாரணமாகக் கருதக் கூடாது. நம் சகோதரர்களிடம் பாவம் காணப்பட நாம் அனுமதிக்கக்கூடாதென ஆண்டவர் கட்டளையிட்டிருக்கிறார்: “உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால் அவனைக் கடிந்துகொள்.’‘லூக் 17:3. பாவத்தை பாவமெனச் சுட்டிக்காட்டவேண்டும்; உள்ளதை உள்ளவாறு தவறு செய்பவரிடம் எடுத்துக்கூற வேண்டும்.COLTam 245.1

    பரிசுத்த ஆவியானவருடைய ஏவுதலால் தீமோத்தேயுவிற்கு பவுல் இவ்வாறு கட்டளை கொடுக்கிறார்: “சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங் கம்பண்ணு ; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்து கொண்டு புத்தி சொல்லு.’” தீத்துவிற்கு இவ்வாறு எழுதுகிறார்: ‘அநேகர்,... அடங்காதவர்களும், வீண்பேச்சுக்காரரும், மனதை மயக்குகிறவர்களுமாயிருக்கிறார்கள். விசுவாசத்தினாலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.’” தீத்து 1:10-13.COLTam 245.2

    “உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத் தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய். அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலை வரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ . அவர்களுக்கும். அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப் படுத்து ; சபைக்கும் செவி கொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக் காரனைப்போலவும் இருப்பானாக” என்று கிறிஸ்து சொன்னார். மத்தேயு 18:15-17.COLTam 245.3

    கிறிஸ்தவர்களுக்கிடையே எழுகிற பிரச்சனைகளை சபைக் குள்ளாகவே தீர்க்கவேண்டுமென்று ஆண்டவர் சொல்லுகிறார். தேவபயம் இல்லாதவர்களிடத்தில் அந்தப்பிரச்சனைகளைக் கொண்டு செல்லக்கூடாது. தன் சகோதரனால் தீங்கிழைக்கப்படு கிற ஒரு கிறிஸ்தவன், அவிசுவாசிகளுள்ள நீதிமன்றத்தில் போய் முறையிடக்கூடாது. கிறிஸ்து சொன்ன அறிவுரையின்படி நடக்க வேண்டும். தன் சகோதரனைப் பழிவாங்க முயற்சிக்காமல், அவனை மீட்க முயல வேண்டும். தம்மிடம் அன்பு கூர்ந்து தமக்குப் பயப்படுகிறவர்களுக்கு தீங்கு நேராமல் தேவன் பாதுகாப்பார்; நீ தியாக நியாயந்தீர்க்கிறவரிடம் நம்பிக்கையோடு நம் வழக்குகளைக் கொண்டு செல்லலாம்.COLTam 245.4

    மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்து, தன் தவறுக்காக ஒரு வர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டே இருக்கும் போது, தவறிழைக் கப்பட்டவர்களைத்துப்போய், தான் மன்னித்தது போதும் என்று யோசிக்கிறார். ஆனால் தவறு செய்கிறவர்களை எவ்வாறு நடத்த வேண்டுமென்று இரட்சகர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்; “உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப் பாயாக.’‘லூக்கா 17:3. நம்பிக்கைக்கு பாத்திரமற்றவரென அவ ரைக் கருதக்கூடாது. ‘சநீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக் குறித்து எச்சரிக்கையாயிரு.” கலா. 6:1.COLTam 246.1

    உங்கள் சகோதரர்கள் தவறு செய்தால், அவர்களை நீங்கள் மன்னிக்கவேண்டும். அவர்கள் உங்களிடத்தில் வந்து அறிக்கை செய்யும் போது, மன்னிப்புக் கேட்கிற தாழ்மை அவர்களிடம் காணப்படவில்லையே என்று சொல்லக்கூடாது. தங்கள் தவறை உணர்ந்து அறிக்கையிடவில்லை என்றும் நினைக்கக்கூடாது. அவர்களுடைய இருதயத்தை வாசிக்கத் தெரிந்தவர்கள் போல, அவர்களை நியாயந்தீர்க்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? “அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக. அவன் ஒரு நாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க்குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து : நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக” என்று தேவ வார்த்தை சொல்கிறது. லூக்கா 17:3,4. ஏழுமுறை மாத்திரமல்ல, தேவன் நம்மை மன்னிக்கறது போல ஏழெழுபது முறை மன்னிக்க வேண்டும்.COLTam 246.2

    நம்மிடமுள்ள அனைத்தையும் கொடுத்தாலும் தேவனுடைய இலவச கிருபைக்கு அவை ஈடாகா. உடன்படிக்கையின் கிருபை யின்படி நமக்கு புத்திர சிலாக்கியம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரட்ககர் காட்டிய கிருபையானது நமக்கு மீட்பையும், புதுவாழ் வையும் கிறிஸ்துவோடு சுதந்தரராகிற மேன்மையையும் கொடுத் துள்ளது. இந்தக் கிருபையை நாம் மற்றவர்களிடமும் காட்டவேண்டும்.COLTam 246.3

    தவறு செய்தவர்கள் அதைரியமடைய ஒரு வாய்ப்பைக்கூடக் கொடுக்கக்கூடாது. பரிசேயர்கள் போன்ற மனக்கடினம் நமக்குள் நுழைந்து, உங்கள் சகோதரர்களைப் புண்படுத்த அனுமதிக்கக் கூடாது. மனக்கசப்பால் உண்டாகும் ஏளனம் உங்களு இருதயத் திலோ சிந்தையிலோ உருவாகக்கூடாது. நீங்கள் சுயமாக ஒரு வார்த்தை பேசினாலும், அலட்சிய மனநிலைக்கு ஆளானாலும் அல்லது சந்தேகமோ அவநம்பிக்கையோ கொண்டாலும், அது ஓர் ஆத்துமாவின் அழிவிற்கு வழிவகுத்துவிடும். நம்முடைய மூத்த சகோதரரின் பரிவான இருதயத்தோடு தன் இருதயத்தைத் தொடுகிற ஒரு சகோதரன்தான் அவருக்கு தேவை . பரிவுமிக்க உறுதியுடன் அவருடைய கரத்தைப் பிடித்து, “நாம் ஜெபிப்போம்” என்று மென்மையாக அவரிடம் சொல்லுங்கள். உங்கள் இருவருக்கும் ஒரு மேலான அனுபவத்தை தேவன் கொடுப்பார். ஜெபம் நம்மை ஒருவர் ஒருவரோடும் தேவனோடும் இணைக்கிறது. ஜெபமானது கிறிஸ்துவை நமக்குச் சமீபத்தில் வரச்செய்து, இளைத்தும் குழம் பியும் போயுள்ள ஆத்துமாவுக்கு இவ்வுலகத்தையும் மாம்சத்தையும் பிசாசையும் மேற்கொள்வதற்கான புதுப்பெலனைக் கொடுக்கிறது. ஜெபமானது சாத்தானின் தாக்குதல்களை முறியடிக்கிறது.COLTam 247.1

    மனிதக் குறைபாடுகளை விட்டுத்திரும்பி இயேசுவை நோக் கிப்பார்க்கும் போது, தேவன் மனிதனுடைய குணத்தில் மாற்றத்தை உண்டாக்குகிறார். இருதயத்தில் கிரியை செய்கிற கிறிஸ்துவின் ஆவியானது அவருடைய சாயலுக்கு ஒத்ததாக அதை மாற்றுகிறது. பிறகு இயேசுவை உயர்த்தவே நீங்கள் முயற்சிக்க வேண்டும். “உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியை” நம்முடைய மனக்கண்நோக்கவேண்டும். யோவான் 1:29. இத்த கைய வேலையில் நீங்கள் ஈடுபடும் போது, ‘தப்பிப்போன மார்க் கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக் கட (வீர்கள்.) யாக் 5:20.COLTam 247.2

    “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னி யாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியா திருப்பார். “மத்தேயு 6:15. பிறரை மன்னிக்காத மனநிலையை எவ் விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. மற்றவர்களிடம் இரக்கமின்றி நடக்கிறவன், தேவனுடைய மன்னிப்பும் கிருபையை இன்னும் தான் பெறவில்லையெனக் காட்டுகிறான். தேவன் ஒருவரை மன்னிக்கும் போது, எல்லையில்லா அன்பு படைத்த அந்த மாபெரும் இருதயத்திற்கு நேராக பாவியின் இருதயம் இழுக்கப்படுகிறது. தேவனுடைய மனதுருக்கும் அலை போல பாவியின் ஆத்துமா வுக்குள் பாய்கிறது; பிறகு அவனிலிருந்து பிற ஆத்துமாக்களுக்குப் பாய்கிறது. கிறிஸ்து தம்முடைய ஈடு இணையற்ற வாழ்க்கையில் வெளிப்படுத்திய இரக்கவும் கனிவும், அவருடைய கிருபையைப் பெற்றவர்களிடமும் காணப்படும். கிறிஸ்துவின் ஆவியில்லாத வன் அவருடையவனல்ல.” ரோமர் 8:9. அவன் தேவனைவிட்டு விலகுகிறான்; அவரை விட்டு நித்தியமாகப் பிரிந்து செல்ல தான் ஆயத்தமானதைக் காட்டுகிறான்.COLTam 247.3

    ஒரு சந்தர்ப்பத்தில் பாவமன்னிப்பை அவன் பெற்றிருக்கலாம்; ஆனால் தேவனுடைய மன்னிக்கும் அன்பை இப்போது அவன் மறுதலிப்பதை இரக்கமற்ற அவனுடைய சுபாவம் காட்டுகிறது. தேவனிடமிருந்த தன்னைப் பிரித்துவிட்டான்; பாவமன்னிப்பைப் பெறுவதற்கு முன் தான் இருந்த நிலைக்கே சென்றுவிட் டான். மனந்திரும்புதலிலிருந்தும் திரும்பிவிடுகிறான்; மனந்திருந்தாத பாவி போல அவனுடைய பாவங்கள் அவன் மேல் தங்குகின்றன.COLTam 248.1

    தேவன் மனதுருகுகிறவர், மனிதன் கடின இருதயமுள்ளவன் என்கிற வேறுபாடுதான் பெரிய படிப்பனையாக இந்த உவமையில் உள்ளது. மன்னிப்பதற்கு தேவன் எவ்வளவு இரக்கமுள்ளவராக இருக்கிறார் என்பதே நம்முடைய அளவு கோலாக இருக்க வேண்டும். ‘நான் உனக்கு இரங்கினது போல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ?”COLTam 248.2

    நாம் மன்னிப்பதை வைத்தல்ல, எவ்வாறு மன்னிக்கிறோம் என்பதை வைத்தே மன்னிக்கப்படுகிறோம். தகுதியில்லாவர்களுக்கு தேவன் காட்டின அன்புதான் சகலவித மன்னிப்புக்கும் அடிப்படையாக இருக்கிறது. அந்த அன்பை நமக்குச் சொந்த மாக்கியிருக்கிறோமா என்பது மற்றவர்களிடம் நாம் நடந்துகொள் கிற விதம்தான் காட்டுகிறது. அதனால் தான் கிறிஸ்து “நீங்கள் மற்ற வர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படு வீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்” என்று சொல்கிறார். மத் 7:2.COLTam 248.3