Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    பரிசுத்த ஆவியின் வரங்கள்

    கிறிஸ்து தம்முடைய திருச்சபைக்கு அருளியுள்ள தாலந்துகள் குறிப்பாக, பரிசுத்த ஆவியானவர் அருளுகிற வரங்களையும் ஆசீர்வாதங்களையும் சுட்டிக்காட்டுகின்றன. “எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசு வாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும், வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொரு வனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. இவைகளை யெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின் படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்.” 1கொரி 12:8-11. அனைவரும் ஒரே வகையான வரங்களைப் பெறுவதில்லை; ஆனால் எஜமானுடைய ஒவ்வோர் ஊழியனுக்கும் ஆவியின் குறிப்பிட்ட வரங்கள் வாக்களிக்கப்படுகின்றன...COLTam 327.2

    கிறிஸ்து தமது சீடர்களை விட்டுப் பிரிந்து செல்வதற்கு முன், “அவர்கள் மேல் ஊதி : பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள் (ளுங்கள்’ என்று சொன்னார். யோவான் 20:22. மீண்டும் அவர், “என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்” என்று சொன்னார். லூக்கா 24:49. ஆனால் அவர் பரலோகம் சென்ற பிறகுதான் அந்த வரம் பரிபூரணமாக அருளப் பட்டது. சீடர்கள் ஜெபத்தோடும் விசுவாசத்தோடும் ஆவியானவர் கிரியை செய்யும் படி தங்களை முற்றிலுமாக அர்ப்பணித்த பிறகுதான் ஆவியானவரைப் பெற்றுக்கொண்டார்கள். பிறகு விசே ஷித்த விதத்தில் பரலோக நன்மைகள் கிறிஸ்துவின் சீடர்களுக்கு அருளப்பட்டன. ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப் பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித் தார்.” எபே 4:8. கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது.” ஆவியானவர் “தமது சித்தத்தின்படி அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்.” 1 கொரி 12:1. அந்த வரங்களை ஏற்கனவே கிறிஸ்துவுக்குள் நாம் சொந்தமாகப் பெற்றுள்ளோம். ஆனால் தேவ ஆவியானவரை நாம் ஏற்றுக்கொள்வதைச் சார்ந்தே அவற்றை உண்மையிலேயே சுதந்தரிக்க முடியும்.COLTam 327.3

    ஆவியானவர் குறித்த வாக்குறுதியானது உள்ளபடி புரிந்து, போற்றப்படவில்லை. அதின் நிறைவேறுதல் பற்றி உள்ளபடி இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை. சுவிசேஷ ஊழியம் வல்லமையின்றி காணப்படுவதற்கு ஆவியின் வரம் இல்லாமையே காரணம். கல்வி, ஞானம், தாலந்துக்கள், பேச்சாற்றல், இயற்கையாக அல்லது முயற்சிசெய்து பெறக்கூடிய ஒவ்வோர் வரத்தையும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் தேவ ஆவியானவரின் பிரச ன்னமில்லாமல் ஓர் இருதயத்தைக் கூட தொடமுடியாது; ஒரு பாவியைக் கூட கிறிஸ்துவுக்காக ஆயத்தம் பண்ணமுடியாது. மாறாக, கிறிஸ்துவோடு அவர்கள் ஐக்கியப்பட்டிருந்தால், ஆவியின் வரங்களை அவர்கள் பெற்றிருந்தால், அவருடைய சீடர்களில் மிகவும் எளிய - படிப்பறிவில்லாதவன்கூட, அநேக ருடைய இதயங்களைத் தொடக்கூடிய வல்லமையைப் பெற்றிருப் பான். பிரபஞ்சத்திலேயே செல்வாக்குமிக்க வேலையை நடப்பிக் கிற ஊடகமாக தேவன் அவர்களை மாற்றுவார்.COLTam 328.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents