Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    7 - புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது

    அந்தக் கலிலேயத் தீர்க்கதரிசியின் பேச்சைக் கேட்க கல்விமான்கள், செல்வாக்குள்ள மனிதர்கள் பலர்வந்திருந்தார்கள். கடலருகே அவர் போதித்துக் கொண்டிருந்தபோது, அவரைச் சு ற்றிலும் கூடியிருந்த பெருந்திரளானவர்களை அவர்களில் சிலர் மிகக் கூர்மையாகக் கவனித்தார்கள். அப்பெருங்கூட்டத்தாரில் சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் இருந்தார்கள். ஏழைகள், படிக்காதவர்கள், பிச்சைக்காரர்கள், முகத்தில் குற்றச்சாயல் பதிந்திருந்த கொள்ளையர்கள், ஊனமுற்றவர்கள், சிற்றின்பப் பிரியர்கள், வணிகர்கள், வேலையற்றவர்கள், உயர்ந்தவர்கள் - தாழ்ந்த வர்கள், ஏழைகள் - பணக்காரர்கள் என அனைவரும் கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேட்பதற்காக, ஒருவரையொருவர் நெருக்கிக் நின்றார்கள். அந்த விநோதமான கூட்டத்தாரை அந்த நாகரிகவான்கள் உற்று நோக்கி, இப்படிப்பட்டவர்கள் அடங்கியதா தேவனுடைய ராஜ்யம்? என்று தங்களுக்குள்ளே கேட்டுக்கொண்டார்கள். இரட்சகர் மறுபடியுமாக ஓர் உவமையின் மூலமாக அவர்களுக்குப் பதிலளித்தார் :COLTam 91.1

    ‘பரலோக இராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும் வரைக்கும், மூன்று படி மாவிலே அடக்கிவைத்தாள்.”COLTam 91.2

    புளித்த மாவானது பாவத்தின் ஓர் அடையாளமாக யூதர்கள் மத்தியில் கருதப்பட்டது. பஸ்கா பண்டிகையின் போது தங்கள் இதயங்களிலிருந்து பாவத்தை நீக்குவதற்கு அடையாளமாக, புளித்த மாவுகளை எல்லாம் தங்கள் வீடுகளிலிருந்து நீக்கும்படி அறிவுறுத்தப்பட்டார்கள். கிறிஸ்து தமது சீடர்களை,’மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்று எச்சரித்தார். லூக்கா 12:1. “துர்க்குணம் பொல்லாப்பு” என்னும் புளித்தமாவைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் பேசுகிறார். 1கொரிந்தியர் 5:8. ஆனால், இரட்சகர்தம் உவமையிலே பரலோக இராஜ்யத்தைச் சுட்டிக்காட்ட புளித்த மாவைப் பயன்படுத் துகிறார். தேவகிருபையின் உயிர்ப்பிக்கிற, தன்மயமாக்குகிற வல்லமையை அது எடுத்துக்காட்டுகிறது.COLTam 91.3

    அவருடைய வல்லமை செயல்படமுடியாத அளவிற்கு மோசமானவர்களோ, கீழான நிலைக்குச் சென்றவர்களோ யாரு மில்லை. பரிசுத்த ஆவியானவருக்கு தங்களை ஒப்புக்கொடுக்கிற ஒவ்வொருவருக்குள்ளும், ஒரு புதிய வாழ்க்கை நியதி புகுத்தப் படும்; இழந்து போன மனிதசாயல் அந்த மனிதர்களில் புதுப்பிக் கப்படும்.COLTam 92.1

    ஆனால், மனிதன் தன் சித்தத்தைப் பயன்படுத்தி, தன்னை மாற்ற முடியாது. இந்த மாற்றத்தை உண்டாக்கக்கூடிய எந்த வல்லமையும் அவனிடம் இல்லை. புளித்தமாவை வெளியே வைத்தால் வைத்தபடியே இருக்கும்; ஆனால் உணவுப்பொருளில் சேர்த்தால் தான் அதில் தேவையான மாற்றம் நடைபெறுகிறது. அதுபோலவே, பாவியான ஒருவன் மகிமையின் இராஜ்யத்திற்கு தகுதி பெற வேண்டுமானால், தேவகிருபையை அவன் பெறவேண்டும். பாவத்தால் சீர்கெட்ட ஒரு பிள்ளையை பரலோகத்தின் பிள்ளையாக மாற்றுவதற்கு இவ்வுலகம் தரக்கூடிய எந்தக் கல்வியாலும் நாகரிகத் தாலும் இயலாது. தேவனிடமிருந்துதான் புதுப்பிக்கிற அந்த வல்லமை வரவேண்டும். இந்த மாற்றத்தை பரிசுத்த ஆவியானவர் மட்டுமே செய்ய இயலும். உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ, ஏழையோ பணக்காரரோ இரட்சிக்கப்படவிம்புகுற யாவரும் இந்த வல்லமைக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும்.COLTam 92.2

    புளித்தமாவானது உணவுப்பொருளுடன் கலக்கப்படும் போது, உள்ளிருந்து கொண்டு மாற்றத்தை ஏற்படுத்துவதுபோல, தேவ கிருபை யானது வாழ்க்கையை மாற்றும்படி இதயத்தைப் புதிதாக்குகிறது. தேவனோடு நம்மை ஒப்புரவாக்குவதற்கு வெளிப்புறமான மாற்றம் போதாது. அநேகர் தங்களிடமுள்ள கெட்ட பழக்கங்களை மாற்றி, அதன்மூலம் தங்களைச் சீர்திருத்த வும், கிறிஸ்தவர்களாக மாறவும் முயற்சிக்கின்றனர்; ஆனால் அப்படிப்பட்ட நினைப்பே முதலில் தவறு. முதல் வேலை இதயம் சம்பந்தப்பட்டதாகும்.COLTam 92.3

    விசுவாசிப்பதாகச் சொல்வது வேறு, சத்தியத்தை ஆத்துமா வில் பெற்றிருப்பது வேறு. சத்தியத்தை வெறுமனே அறிந்திருப்பது மட்டும் போதாது. சத்தியத்தை நாம் அறிந்திருந்தும், இருந்தால் போதாது. சத்தியத்தைக்குறித்த அறிவைப்பெற்றிருந்தும் நம் சிந்தனைப்போக்கு மாறாமல் இருக்க வாய்ப்புள்ளது. இதயமானது மாற்றமடைந்து பரிசுத்தமாக்கப்படவேண்டும்.COLTam 93.1

    கற்பனைக்குக் கீழ்ப்படியக் கட்டளையிடப்பட்டுள்ளதால், அதைக் கடமையாக மட்டும் கருதி, தேவகற்பனைகளுக்குக் கீழ்ப்படிய முயல்கிறவன் கீழ்ப்படிதலின் மகிழ்ச்சிக்குள் ஒருபோதும் பிரவேசிக்க முடியாது. அவன் கீழ்ப்படிகிறதில்லை . தேவனுடைய கட்டளைகள் மனிதனின் மனப்போக்கைக் கண்டிப் பதால், அவற்றை பாரமாக எண்ணுகிற வாழ்க்கை கிறிஸ்தவ வாழ்க்கை அல்ல வென்று அறியலாம். உண்மையான கீழ்ப்படில், உள்ளேயிருந்து செயல்படுகிற ஒரு நியதியின் வெளிப்பாடு. நீ தியின் மேலான பிரியத்தால், தேவபிரமாணத்தின் மேலான பிரியத்தால் அந்தக் கீழ்ப்படிதல் உண்டாகிறது. நம் மீட்பர்மேல் மெய்ப்பற்று கொள்வதே சகல நீதிக்கும்மையமாகும். அதுவே சரியானதை அது சரியானது என்பதற்காக நம்மைச்செய்யவைக்கும், அது தேவனுக்கு பிரியமானது என்பதால் செய்யவைக்கும்.COLTam 93.2

    பரிசுத்த ஆவியானவர் உண்டாக்குகிற மனமாற்றம் குறித்த மாபெரும் சாத்தியத்தை நிக்கொதேமுவிடம் கிறிஸ்து சொன்ன வார்த்தைகளில் காணலாம் : “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியி னாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக் கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியி னால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக்குறித்து அதிச யப்படவேண்டாம். காற்றா னது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவ னெவனோ அவனும் அப்படியே இருக்கிறான். யோவான் 3:8.COLTam 93.3

    பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்ட அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதுகிறார்: “தேவனோ இரக்கத்தில் ஐசுவரிய முள்ளவராய் நம்மில் அன்பு கூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித் தார்; கிருபையினாலே இரட்சிக் கப்பட்டீர்கள். கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய் வதற்காக, கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன் னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார். கிருபையி னாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு.” எபேசியர் 2:4-8.COLTam 94.1

    மாவுக்குள் சேர்க்கப்படுகிற புளித்தமாவு, மாவு முழுவதையும் புளிக்கச் செய்ய மறைமுகமாகச் செயல்படுகிறது; அதுபோல, சத்தியமென்னும் புளித்த மாவானது ஆத்துமாவை மாற்றும்படி மறைமுகமாக, அமைதியாக, உறுதியாகச் செயல்படுகிறது. இயல் பான மனப்போக்குகளை மிருதுவாக்கி, கீழ்ப்படுத்துகிறது. புதிய சிந்தைகளும், புதிய உணர்வுகளும், புதிய நோக்கங்களும் புகுத்தப் படுகின்றன.COLTam 94.2

    புதிய குண தரத்தை அதாவது, கிறிஸ்துவின் ஜீவியத்தை உண்டாக்குகிறது. மனதை மாற்றுகிறது; மனத்திறன்களை வெவ் வேறு வழிகளில் செயல்படத் தூண்டுகிறது. புதிதாக மனத்திறன்கள் வழங்கப்படாமல், ஏற்கனவே அவன் பெற்றுள்ள மனத்திறன்கள் பரிசுத்தமாக்கப்படுகின்றன. மனச்சாட்சியை விழிக்கச் செய்கிறது. தேவ னுக்கு சேவை செய்ய நம்மைத் திறனுள்ளவர்களாக்குகிர குணங்கள் அருளப்படுகின்றன.COLTam 94.3

    எனவே, ‘தேவ வார்த்தை விசுவாசிப்பதாகச் சொல்லுகிற அநேகரிடத்தில், வார்த்தைகளிலும் ஆவியிலும், குணத்திலும் சீர் திருத்தம் காணப்படுவதில்லையே ஏன்? “தங்கள் நோக்கங்களுக்கும் திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால், பதிலுக்கு கடுங் கோபமடைந்து புண்படுத்துகிற, தாங்க முடியாத, முரட்டுத்தனமான வார்த்தைகளை அநேகர் பேசிவிடுகிறார்களே ஏன்?’ உலகப்பிரகாரமானவர்களுடைய வாழ்க்கையில் காணப்படுகிற அதே சுயநலமும், அதே சிற்றின்ப நுகர்வும், அதே கோபமும், அதே யோசனையற்ற பேச்சும் இவர்களிடமும் காணப்படுகிறது. சத்தியத்தை கொஞ்சமும் அறியாதவர்களைப் போன்ற பெருமையும், மனப்போக்கின்படி நடப்பதும், குணமாறுபாடும் காணப்படுகிறது. இவர்கள் மனமாற வில்லை என்பதே காரணம். இவர்கள் சத்தியமென்னும் புளித்த மாவை தங்கள் இதயத்தில் சேர்க்கவில்லை. அது தான் கிரியையைச் செய்வதற்கு வாய்ப்பளிக்கவில்லை. தங்களுடைய இயல்பான, தாங்கள் வளர்த்துக்கொண்ட பழக்கவழக்கங்கள் மாற்றப்படும்படி, அதன் வல்லமைக்கு கீழ்ப்படுத்தவில்லை. கிறிஸ்துவின் கிருபை அவர்களிடம் இல்லை; குணத்தை மாற்றவல்ல அவருடைய வல்லமையில் நம்பிக்கை இல்லை; அதைத்தான் அவர்களுடைய வாழ்க்கை வெளிப்படுத்துகிறது.COLTam 94.4

    “விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.” ரோமர் 10:17. குணத்தில் மாற்றம் ஏற்படுவதில் வேதவாக்கியங்கள் மாபெரும் ஏதுகரமாக இருக்கிறது. “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசு த்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம் என்று கிறிஸ்து ஜெபித்தார். யோவான் 17:17. தேவவார்த்தையை ஆராய்ந்து, அதற்குக் கீழ்ப்ப டிந்தால், அது இதயத்தில் கிரியை செய்து, பரிசு த்தமற்ற ஒவ்வொரு குணங்களையும் அடிபணியச்செய்கிறது. பரிசுத்த ஆவியானவர் பாவத்தைக் குறித்து உணர்த்துகிறார். இதயத்தில் பொங்கும் விசுவாசமானது கிறிஸ்துவின் மேல் அன்புண்டாகும்படி கிரியை செய்கிறது; சரீரத்திலும் ஆவியிலும் ஆத்துமாவிலும் நாம் அவருடைய சாயலாக மாறச்செய்கிறது. அப்பொழுது தேவனுடைய சித்தஞ்செய்ய நம்மை அவர் பயன் படுத்தமுடியும். நமக்கு அருளப் படுகிற வல்லமை உள்ளிருந்து வெளியரங்கமாகக் கிரியை செய்து, நமக்கு தெரிவிக்கப்பட்ட சத்தியத்தை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நம்மை வழிநடத்தும்.COLTam 95.1

    விசுவாசத்தின் மூலம் ஆத்துமா மாற்றமடைவதுதான் மனி தனின் மிகப்பெரிய நடைமுறை தேவையாகும்; தேவ்வார்த்தையின் சத்தியங்கள் அத்தேவையைச் சந்திக்கின்றன. இவ்வளவு தூய்மை யான, இவ்வளவு பரிசுத்தமான நியதிகளை அனுதினவாழ்வில் எவ்வாறு கடைபிடிக்க முடியும் என்று நினைக்கக்கூடாது. உன்னதம் மட்டும் எட்டுகிற, நித்திய வாழ்க்கை அடங்கிய சாத்தியமாக அவை இருந்தும், அவற்றின் செல்வாக்கு மனித அனுபவத்தில் பின்னிப் பிணைய வேண்டும். வாழ்க்கையின் பெரிய, சிறிய விஷயங்களில் அவை ஊடுருவிச்செல்ல வேண்டும்.COLTam 95.2

    சத்தியமாகிய புளித்தமாவை இதயத்தில் பெற்றால், அது விருப்பங்களைக் கட்டுப்படுத்தி, மனநிலையைச் சீர்ப்படுத்தும். அது மனத் திறன்களையும் ஆத்துமாவின் ஆற்றல்களையும் உயிர்ப்பிக்கிறது. அது நம் உணருகிற, நேசிக்கிற திறனை அதி கரிக்கிறது.COLTam 96.1

    எந்த மனிதனுக்குள் இந்த நியதி நிறைந்துள்ளதோ அவனை இந்த உலகம் புரியாத புதிர்போலப் பார்க்கிறது. சுயநலமும், பண ஆசையும் உடையவன் தனக்கென ஆஸ்திகளையும் கனத்தையும் பெறவும், இவ்வுலக இன்பங்களை அனுபவிக்கவும் வாழ்கிறான். நித்திய உலகம் குறித்த சிந்தையை இழக்கிறான். ஆனால் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவனுடைய சிந்தையில் இவை நிறைந்திருக்காது. இவ்வுலகில் கிறிஸ்துவை அறியாமல் வாழ்கிற, நம்பிக்கையின்றி வாழ்கிற ஆத்துமாக்கைள் இரட்சிக்கிற மாபெரும் பணியில் தானும் பங்குபெறும்படி, கிறிஸ்துவின் நிமித்தம் அவன் பாடுபடுவான்; சுயத்தை மறுப்பான். அப்படிப்பட்ட ஒருவனை இவ்வுலகத்தால் புரிந்து கொள்ள முடியாது; ஏனெனில், நித்தியத்திற்கடுத்த நிஜங்கள் எப்போதுன் அவன் சிந்தையில் இருக்கும். மீட்கும் வல்லமை கொண்ட கிறிஸ்துவின் அன்பு இதயத்திற்குள் வந்துவிடுகிறது. மற்ற அனைத்து எண்ணங்களையும் இந்த அன்பு கட்டுப்படுத்தி, உலகத்தின் சீர்கேடான செல்வாக்கினின்று அவனை உயர்த்துகிறது.COLTam 96.2

    நாம் பழகுகிற ஒவ்வொரு மனிதரிலும் தேவ்வார்த்தையானது பரிசுத்தப்படுத்துகிற தாக்கத்தை உண்டாக்கவேண்டும். சத்தியமா கிய புளித்தமாவானது போட்டியின் ஆவியை, சுயகுறிக்கோளை நேசிக்கிற ஆவியை, முதலிடத்தை இச்சிக்கிற ஆவியை உருவாக் காது. அது மனிதப் புகழ்ச்சியைச் சார்ந்திராது. தேவகிருபையைப் பெறுகிற இருதயத்தில், தேவன் மேலும், கிறிஸ்து யாருக்காக மரித் தாரோ அவர்கள் மேலும் அன்பு புரண்டோடும். அங்கீகாரத்திற்காக சுயம் போட்டிப்போடாது. மற்றவர்கள் தன்னை நேசிக்கறார்களா, தன்னைப் பிரியப்படுத்துகிறார்களா, தன் நற்செயல்களைப் பாராட்டுகிறார்களா என்று பாரக்காமல், அவர்கள் கிறிஸ்துவால் கிரயத்திற்கு வாங்கப்பட்டவர்கள் என்று நினைத்து மற்றவர்கள் மேல் அன்புகூருவான். தன்னுடைய நோக்கங்களும், வார்த்தைக ளும், செயல்களும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டால் அல்லது திரித்துக்கூறப்பட்டால் புண்படமாட்டான்; தன்னுடைய வழியில் விலகாமல் நடப்பான். அன்புள்ளவனாக, சிந்தனையாளனாக இருப்பான்; தன்னைக் குறித்த தாழ்மையான, நம்பிக்கை நிறைந்த எண்ணமிருக்கும். தேவ அன்பையும் இரக்கத்தையும் எப்போதும் நம்பியிருப்பான்.COLTam 96.3

    “உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே” என்று அப்போஸ்தலன் நம்மை எச்சரிக் கிறார். 1பேதுரு 1:15,16. கோபத்தையும் பேச்சையும் கட்டுப்படுத்த கிறிஸ்து வின் கிருபை அருளப்படுகிறது. சகோதரருக்கு சகோதரர் அமைதியாக, கனிவாக நடப்பதிலும், அன்போடு பேசுவதிலும், உற்சாகமூட்டுவதிலும் அது கிரியை செய்வதைக் காணலாம். குடும்பத்தில் தேவதூதனுடைய பிரசன்னம் இருக்கும். வாழ்க்கை நற்கந்தம் வீசுகிற பரிசுத்த சுகந்த வாசணையாக தேவனிடத்திற்கு எழும்பும். அன்பும், சாந்தமும், சகிப்புத்தன்மையும், நீடிய பொறுமையும் அன்பின் வெளிப்பாடாகும்.COLTam 97.1

    முகச்சாயலில் மாற்றம் ஏற்படுகிறது. கிறிஸ்துவை நேசித்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்கிறவர்களின் இதயங் களில் கிறிஸ்து வாசஞ்செய்கிறார்; அது முகத்தைப் பிரகாசமாக்குகிறது. சத்தியம் அங்கே எழுதப்படுகிறது. பரலோகத்தின் இனிமையான சமாதானம் வெளிப்படுகிறது. மனித அன்பை மிஞ்சி ன ஒரு சாந்தம், குணமாக மாறி, வெளிப்படுகிறது.COLTam 97.2

    சத்தியமாகிய புளித்த மாவு முழுமனிதனிலும் மாற்றத்தை உண்டாக்குகிறது; முரடனைச்சாதுவாக்குகிறது, மூர்க்கனைச் சாந்த முள்ளவனாக்குகிறது, சுயநலமுள்ளவனை தயாளனாக்குகிறது. அது பரிசுத்தமற்றவனை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினாலே கழுவிச்சுத்திகரிக்கிறது. முழுமனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப்பெலத்தோடும் தேவனுக்கேற்ற வாழ்க்கையை வாழ்வதற்கான அனைத்தையும், ஜீவனைக் கொடுக்கிற அதன் வல்லமை தருகிறது. மனித சுபாவமுடைய தெய்வீக சுபாவத்தில் பங்கடைகிறான். குணம் பரிபூரணப்பட்டு, மேன்மையடையும் போது கிறிஸ்து கனப்படுத்தப்படுகிறார். இந்த மாற்றங்கள் நிகழும்போது, தேவதூதர்கள் பேரானந்தத்துடன் பாடுகிறார்கள், தேவகுணத்திற்கு ஒப்பான குணத்தைப் பெற்ற ஆத்துமாக்களைக் கண்டு தேவனும் கிறிஸ்துவும் மனம் மகிழ்கிறார்கள்.COLTam 97.3