Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    13 - ஜெபிக்கச்சென்ற இருவர்

    “தங்களை நீதிமான்களென்று எண்ணி, மற்றவர்களை அற்பமா யெண்ணின சிலர் ” இருந்தார்கள்; அவர்களிடம் பரி சேயன் மற்றும் ஆயக்காரன் பற்றிய உவமையை கிறிஸ்து சொன் னார். தொழுதுகொள்வதற்காக பரிசேயன் தேவாலயத்திற்குச் செல் கிறான்; தான் ஒரு பாவி, தனக்கு பாவமன்னிப்பு அவசியம் என்று உணர்ந்தவனாக அல்ல, தான் நீதிமான், தனக்கு பாராட்டு கிடைக் கும் என்கிற எண்ணத்துடன் செல்கிறான். தன்னுடைய தொழுகை தேவனிடம் தன்னைப் பரிந்துரைக்கிற ஒரு புண்ணியச் செயலென நினைக்கிறான். அதேசமயம், அவனுடைய பயபக்தி குறித்து மக்கள் உயர்வாக எண்ணுவதற்கும் அது ஏதுவாக இருக்கும். இவ்வாறு தேவனிடமும் மனிதனி டமும் நற்பெயர் வாங்குகிற எதிர்பார்ப்பு இருந்தது. அவனுடைய தொழுகை சுயநன்மைக்காகத் தூண்டப்பட்டதாகும்.COLTam 149.1

    அவனிடம் சுயபுகழ்ச்சிய நிறைந்திருந்தது. சுயபுகழ்ச்சியோடு பார்க்கிறான், நடக்கிறான், ஜெபிக்கிறான்.’நீ உன்மட்டிலிரு, என் சமீபத்தில் வராதே, உன்னைப்பார்க்கிலும் நான் பரிசுத்தன்” என்று மற்றவர்களிடமிருந்து விலகினவன் போல நின்று கொண்டு, “தனக்குள்ளே ஜெபித்தான். சுயநிறைவு எண்ணம் வழிந்தோட, தேவனும், மனிதர்களும் கூட தன்னை அவ்வாறுதான் பார்க் கிறார்களென நினைத்தான்.COLTam 149.2

    ‘தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப் போலவும் இராததினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்” என்று சொல்கிறான். தேவனுடைய பரிசுத்த குணத்துடன் ஒப்பிட்டு அல்ல, பிறமனிதர்களின் குணத்தோடு ஒப்பிட்டு, தன்னுடைய குணத்தை எடைபோடுகிறான். தேவனைப் பார்க் காமல் மனிதர்களைப் பார்க்க அவன் சிந்தை சாய்ந்திருந்தது. சுய - நிறைவுக்கான இரகசியம் இதில் தான் உள்ளது.COLTam 150.1

    தொடர்ந்த அவன் தன் நற்செயல்களை அடுக்குகிறான். “வாரத்தில் இரண்டு தரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத் திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன்.” அந்தப் பரிசேய மார்க்கம் ஆத்துமாவைத் தொடுகிறதில்லை. தேவனைக் கொத்த குணமான அன்பும் இரக்கமும் நிறைந்த இருதயத்தை அவன் தேடவில்லை. வெளிப்புற வாழ்க்கைக் கேற்ற மார்க்கத்தில் மனநிறைவு அடைந்திருந்தான். அவனுடைய நீதியானது, அவனே தன் கிரியைகளால் சம்பாதித்தது; மனிதனின் அளவு கோலால் அளக்கப்பட்டது.COLTam 150.2

    தன்னை நீதிமானென்று நினைக்கிறவன் மற்றவர்களை அற்பமாக எண்ணுவான். மற்ற மனிதர்களோடு ஒப்பிட்டு தன்னை எடைபோட்ட பரிசேயனைப்போல, தன்னை வைத்து மற்றவர்களை அவன் நியாயந்தீர்ப்பான். அவர்களோடு ஒப்பிட்டுத்தான் தன் நீ தியை மதிப்பிட்டான்; இதில் வருத்தம் என்னவென்றால், அவனைவிட அவர்கள் அதிக நீதிமான்களாக இருந்ததுதான். சுயநீ தி எண்ணம்தான் பிறரைக் குற்றப் படுத்துச் செய்கிறது. மற்ற மனுஷர்கள் தேவபிரமாணத்தை மீறுவதாக்க் குற்றஞ்சாட்டுகிறான். இப்படியாக, சகோதரரைக் குற்றஞ்சாட்டுகிறவனாகிய சாத் தானுடைய ஆவியை வெளிப் படுத்துகிறான். இப்படிப்பட்ட ஆவியுடன், தேவனோடு பேசிப் பழகுவது இயலாத ஒன்று. தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெறாதவனாக தன் வீட்டிற்குத் திரும்பிச்செல்கிறான்.COLTam 150.3

    அந்த ஆயக்காரன் தொழுதுவதற்காக மற்றவர்களுடன் சேர்ந்து ஆலயத்திற்குச் சென்றான்; ஆனால், அவர்களோடு சேர்ந்து தொழ தனக்கு தகுதியில்லையென நினைத்து சீக்கிரமே ஒதுங்கிக் கொள்கிறான். தன்னை அருவருத்தவனாக, மிகுந்த வியாகுலத் தோடு, தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்திற்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக் கொண்டான். தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்ததால், பாவநிலையிலும் தீட்டுப்பட்ட நிலையிலும் இருப்பதாக உணர்ந்தான். அவனைச் சுற்றிலுமிருந்தவர்கள் அவனை ஏளன மாகப் பார்த்தார்கள்; அவர்களிடம் பரிதாபத்தை எதிர்பார்க்க முடியவில்லை . தேவன் தன்னை ஏற்றுக்கொள்ளுமளவிற்கு தன்னிடம் எந்தத் தகுதியும் இல்லையென அறிந்து, முற்றிலும் நம்பிக்கையற்றவனாக, “தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்” என்று கதறினான். அவன் தன்னை மற்றவர்களோடு ஒப்பிடவில்லை.COLTam 150.4

    குற்ற உணர்வு மேலிட்ட, தேவசமுகத்தில் தனிமையில் நிற்ப வன்போலக் காணப்பட்டான். அவனுடைய ஒரே வாஞ்சை பாவமன்னிப்பையும் சமாதானத்தையும் பெறுவது. அவனுடைய ஒரே விண்ணப்பம் தேவனுடைய இரக்கத்தைப் பெறுவதே . அவன் ஆசீர்வதிக்கப்பட்டான். அவனல்ல, இவனே நீதிமானாக்கப் பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று இயேசு சொன்னார்.COLTam 151.1

    தேவனைத் தொழும்படி வருகிறவர்க் இருபெரும் பிரிவின ராகப் பிரிக்கப்படுகிறார்கள்; அந்த இரு பெரம் பிரிவினரைத்தான் பரிசேயனும், ஆயக்காரனும் சுட்டிக்காட்டுகிறார்கள். உலகத்தில் பிறந்த முதல் இரண்டு பிள்ளைகளும் இந்த இரு பிரிவினரின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். காயீன் தன்னை நீதிமானாக நினைத்தான் ; ஸ்தோத்திர காணிக்கையோடு மட்டும் தேவனிடம் வந்தான். அவன் பாவ அறிக்கை செய்ய வில்லை, தனக்கு தேவ இரக்கம் தேவையென்பதையும் உணரவில்லை. ஆனால், ஆபேல் தேவ ஆட்டுக்குட்டியைச் சுட்டிக்காட்டிய இரத்தத்தைக் கொண்டு வந்தான். ஒரு பாவியாக வந்து, தான் தொலைந்து போனவனென அறிக்கை யிட்டான் ; தகுதியற்றோர்மேல் காட்டப்படும் தேவ அன்பே அவனுடைய ஒரே நம்பிக்கையாக இருந்தது. அவனுடைய காணிக்கையை கர்த்தர் அங்கீகரித்தார்; காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கீகரிக்கவில்லை. உதவி தேவை என்பதை உணர்வதும், நம் பாவத்தையும் அபாத்திரநிலையையும் உணர்வதும்தான் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெறுவதற்கான முதல் நிபந்தனை . “ஆவியிலே எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோக இராஜ்யம் அவர்களுடையது” மத்தேயு 5:3.COLTam 151.2

    பரிசேயன் மற்றும் ஆயக்காரன் சுட்டிக்காட்டுகிற பிரிவினர்கள் ஒவ்வொருவருக்கும் அப்போஸ்தலனாகிய பேதுருவின் வரலாற்றில் ஒரு பாடம் உள்ளது. தன் சீடத்துவ அனுபவத்தின் ஆரம்பத்தில் தன்னை உறுதியுள்ளவனென பேதுரு நினைத் தான். தான் மற்ற மனுஷரைப்போல இல்லை என்று அந்தப் பரிசேயனைப் போலக்கணக்குப்போட்டான். தாம் காட்டிக் கொடுக்கப்படவிருந்த தினத்தன்று தம் சீடர்களிடம் முன்னெச் சரிப்பாக, “இந்த இராத் திரியிலே நீங்களெல்லாரும் என்னி மித்தம் இடறலடைவீர்கள்” என்று கூறினார். பேதுருவோ மிகுந்த நம்பிக்கையுடன், ‘உமது நிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் இடறலடையேன்” என்று கூறினான். மாற்கு 14:27-29. பேதுரு தனக்கு இருந்த ஆபத்தை அறிய வில்லை. சுயநம்பிக்கை அவரை வழிவிலகச் செய்தது. சோதனையை எதிர்த்து நிற்க முடியுமென்று நினைத்தான்; ஆனால், சோதனை நேரிட்ட சற்று நேரத்திலேயே, சபித்தும் சத்தியம் பண்ணியும் கர்த்தரை மறுதலித்தான்.COLTam 152.1

    சேவல் கூவியபோது, கிறிஸ்துவின் வார்த்தைகள் அவன் நினைவிற்கு வந்தன. தான் செய்த காரியத்தால் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தான்; திரும்பி, தன் எஜமானைப் பார்த்தான். அதே சமயத்தில், கிறிஸ்துவும் பேதுருவை நோக்கிப்பார்த்தார். துக்கம் நிறைந்த அந்தப் பார்வைக்குள், அவன் மேலான அன்பும் மனதுருக்கமும் கலந்திருந்தன, பேதுரு தன் தவறை உணர்ந்தான். வெளியே சென்று மனங்கசந்து அழுதான். கிறிஸ்துவின் பார்வை அவன் இதயத்தை நொறுக்கியது. பேதுருவின் வாழ்க்கையில் அது திருப்புமுனை ; மனங்கசந்து பாவத்திலிருந்து திரும்பினார். அந்த ஆயக்காரனைப்போல உள்ளம் நறுங்குண்டு, மனந்திரும்பினார்; அந்த ஆயக்காரனைப்போல இரக்கத்தைக் கண்டு கொண்டார். கிறிஸ்துவின் பார்வை அவனுக்கு பாவமன்னிப்பின் நிச்சயத்தைக் கொடுத்தது.COLTam 152.2

    சுயத்தின் மேலான நம்பிக்கை மறைந்தது. பெருமையாகப் பேசுகிற தன்மை அதன்பிறகு அவனிடம் காணப்படவில்லை.COLTam 152.3

    கிறிஸ்து தாம் உயிர்த்தெழுந்த பிறகு மூன்று முறை பேதுருவைச் சோதித்தார். “யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர் களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா” என்று கேட்டார். தன் சகோதரரைவிட மேலானவன் போல் பேதுரு இப்போது பேசவில்லை. தன் இருதயத்தை வாசிக்கக் கூடியவரிடம் கெஞ்சுதலோடு, சிந்தனைகளை அறிகிற கிறிஸ்துவைப் பார்த்து : “ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்று சொன்னான். யோவான் 21:15,17.COLTam 152.4

    அதன்பிறகு, தன் ஊழியக்கட்டளையைப் பெற்றுக்கொள் கிறார். இதுவரையிலும் பெற்றிராத விரிவான, நேர்த்தியான ஒரு பணிக்கு நியமிக்கப்பட்டார். ஆடுகளையும் ஆட்டுக்குட்டிகளையும் மேய்க்கும் படி கிறிஸ்து கட்டளையிட்டார். கிறிஸ்து யாருக்காக தம் ஜீவனைக் கொடுத்தாரோ அந்த ஆத்துமாக்களின் உக்கிராணக் காரனாக பேதுருவை நியமித்தார். பேதுரு மனந்திரும்பியதில் தமக்கிருந்த நம்பிக்கையின் வலுவான ஆதாரமாக பேதுருவுக்கு அந்த ஊழியத்தை கிறிஸ்து கொடுத்தார். முன்பு துடுதுடுப்பாகவும், பெருமையாகவும், சுய நம்பிக்கையோடும் இருந்தவர், இப்போது இருதயம் நொறுங்குண்டு, கீழ்ப்படிதலுள்ளவராக மாறியிருந்தார். கிறிஸ்துவின் பாடுகளில் பங்குபெறுகிறவராக இருந்தார்; கிறிஸ்து தம் மகிமையின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் போது, பேதுரு அவருடைய மகிமையில் பங்குபெறுவான்.COLTam 153.1

    பேதுரு விழுவதற்கு வழிநடத்தின, பரிசேயர்களை தேவ னோடு தொடர்பு கொள்ளாதபடி விலக்கின அதே தீமைதான், இன்று ஆயிரக்கணக்கானோர்களின் அழிவிற்குக்காரணமாக இருக்கிறது. பெருமையையும் தன்னிறைவையும் போல தேவனுக்கு மிகவும் அருவருப்பானது அல்லது அதிக ஆபத்தானது எதுவுமில்லை . பாவங்களிலெல்லாம், முற்றிலும் நம்பிக்கையிழக்கச் செய்கிற, குணமாக்க முடியாத பாவம் இதுவாகும்.COLTam 153.2

    பேதுருவின் விழுகை சடுதியில் நிகழவில்லை ; படிப்படியாக நிகழ்ந்தது. தான் இரட்சிக்கப்பட்டவன் என்று நம்புவதற்கு சுயநம்பிக்கைதான் காரணமாக இருந்தது; படிப்படியாக கீழ் நோக்கிச் செல்ல ஆரம்பித்தான்; இறுதியில் தன் எஜமானையே மறுதலித்தான் . சுயத்தின் மீது நம்பிக்கை வைப்பதும் அல்லது இவ்வுலகில் சோதனைக்கு எதிராகப் பாதுகாப்புடன் இருப்பதாக நினைப்பதும் ஒருபோதும் பாதுகாப்பல்ல. மெய்யான மனமாற் றத்தைப் பெற்று, இரட்சகரை ஏற்றுக் கொள்பவர்களிடம், தாங்கள் இரட்சிக்கப்பட்டு விட்டதாகச் சொல்லவோ இரட்சிக்கப்பட்ட உணர்வைப் பெற்றுவிட்டதாக உணரவோ சொல்லிக்கொடுக் கக்கூடாது. இது தவறான வழி நடத்தலாகும். இருதயத்தில் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் பேணிவளர்க்க ஒவ்வொரு வருக்கும் போதிக்கவேண்டும்; ஆனால் நாம் நம்மை கிறிஸ்துவிடம் அர்ப்பணித்திருந்தாலும், அவர் நம்மை ஏற்றுக்கொண்டதாக அறிந்திருந்தாலும், சோதனைக்கு அப்பாற்பட்ட நிலையில் நாம் வைக்கப்படுவதில்லை. “அநேகர் சுத்தமும் வெண்மையுமாக் கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள் என்று தேவ வார்த்தை சொல்கிறது. தானியேல் 12:10; சோதனையைச் ச கிக்கிறவன் மட்டுமே ஜீவகிரீடத்தைப் பெறுவான். யாக்கோபு 1:12.COLTam 153.3

    கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறவர்கள், எடுத்ததும் நான் இரட்சிக்கப்பட்டு விட்டேன்” என்று சொன்னால், தங்களில் நம்பிக்கைவைக்கும் ஆபத்தில் இருக்கிறார்கள். தங்களுடைய பெலவீனத்தையும், தேவபெலன் தொடர்ந்து தேவைப்படுவதையும் காணத் தவறுகின்றனர். சாத்தானின் உபாயங்களை எதிர்கொள்ள அவர்கள் ஆயத்தப்படவில்லை; எனே, சோதனை வரும்போது, அநேகர் பேதுருவைப்போல் பாவத்தின் ஆழங் களிலேவிழுகிறார்கள். தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக் கடவன்” என்று எச்சரிக் கப்பட்டுள்ளோம். 1கொரிந்தியர் 10:12. ஒருபோதும் சுயத்தை நம்பாமல், எப்போதும் கிறிஸ்துவைச் சார்ந்திருப்பதுதான் நம் ஒரே பாதுகாப்பு.COLTam 154.1

    தன்னிடமிருந்த குணக்குறைபாடுகளையும், கிறிஸ்துவின் வல்லமையும், கிருபையும் தனக்கு தேவைப்பட்டதையும் பேதுரு அறிவது அவசியமாயிருந்தது. சோதனையிலிருந்து பேதுருவைக் காப்பாற்றா முடியாமல் போனாலும், அவனுடைய தோல்வியி லிருந்து தேவன் அவனைக் காப்பாற்றி யிருக்க முடியும். கிறிஸ் துவின் எச்சரிப்பின்படி நடக்க அவன் ஆயத்தமாக இருந்திருந்தால், விழித்திருந்து ஜெபித்திருந்திருப்பான். தன் பாதங்கள் இடறாத படிக்கு பயத்தோடும் நடுக்கத் தோடும் நடந்திருப்பான். சாத்தா னுக்கு வெற்றி கிடைக்காத படிக்கு தேவனுடைய உதவியைப் பெற்றிருப்பான்.COLTam 154.2

    தன்னிறைவு சிந்தையால் தான் பேதுரு விழுந்தான்; மனந்திரும்புதல் மற்றும் தாழ்மையினால் தான் அவனுடகால்கள் மீண்டும் நிலைப்படுத்தப்பட்டன. மனந்திரும்புகிற ஒவ்வொரு பாவியும் அவனுடைய அனுபவவரலாற்றிலிருந்து தைரியத்தைப் பெறலாம். பேதுரு மோசமான பாவத்தைச் செய்திருந்தபோதிலும், அவன் கைவிடப்படவில்லை . “நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாத படிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்” எனும் கிறிஸ்துவின் வார்த்தைகள் அவனுடைய ஆத்துமாவில் எழுதப்பட்டிருந்தன. லூக்கா 22:32. தன் தவறை எண்ணி அதிகமாக அவர் வருந்திய சமயத்தில், இந்த ஜெபமும், அன்போடும் பரிவோடும் கிறிஸ்து தன்னைப் பார்த்த நினைவும்தான் அவனுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. கிறிஸ்து தாம் உயிர்த்தெழுந்த பின்பு பேதுருவை நினைவுகூர்ந்து, தேவதூதன் மூலமாக அந்தப் பெண்களுக்கு பின்வரும் செய்தியைச் சொன்னார்: “நீங்கள் அவருடைய சீஷ ரிடத்திற்கும் பேதுருவினிடத்திற்கும் போய் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள். மாற்கு 16:7. பாவத்தை மன்னிக்கிற இரட்சகர் பேதுருவின் மனந்திரும்பு தலை ஏற்றுக்கொண்டார்.COLTam 154.3

    பேதுருவைக் காப்பாற்ற காட்டப்பட்ட அதே மனதுருக்கமான து, சோதனையில் விழுந்து விட்ட ஒவ்வோர் ஆத்துமா விற்கும் காட்டப்படுகிறது. மனிதனை பாவம் செய்ய வைத்து விட்டு, பிறகு மன்னிப்பு கேட்கமுடியாமல் பயத்தோடும், நடுக் கத்தோடும், உதவியற்ற நிலையிலும் நிற்கவைப்பது தான் சாத் தானின் தந்திரமாகும். ஆனால் அவன் என் பெலனைப் பற்றிக் கொண்டு என்னோடே ஒப்புரவாகட்டும், அவன் என்னோடே ஒப்புரவாவான் என்று தேவன் சொல்லியிருக்கும் போது, நாம் ஏன் பயப்படவேண்டும். ஏசாயா 27:5. நம் பெலவீனங்களைப் போக் குவதற்கான வழிகள் ஆயத்தமாக்கப் பட்டுள்ளன; கிறிஸ்துவிடம் செல்வதற்கான அனைத்து ஊக்கமும் நமக்கு அருளப்பட் டிருக்கிறது.COLTam 155.1

    மனிதனுக்கு மேலும் ஒரு தருணத்தைக் கொடுப்பதற்காக, தேவனுடைய சொத்தாகிய அவனை விலைக்கு வாங்கி, மீட்கும் படியாக தம் சரீரம் பிய்க்கப்பட்ட கிறிஸ்து ஒப்புக் கொடுத்தார். ‘மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும் படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோ டிருக்கிறவராகையால் அவர்களை முற்று முடிய இரட்சிக்க வல் லவராயுமிருக்கிறார்.” எபிரெயர் 7:25. கிறிஸ்து பாவமற்றவராகவும், கீழ்ப்படிகிறவராகவும் வாழ்ந்து, கல்வாரி சிலுவையில் மரித்து, தொலைந்து போன மனுகுலத்திற்காக அதன்மூலம் பரிந்து பேசு கிறார். இப்போது நமது இரட்சிப்பின் தளபதியானவர் வெறுமனே முறையிடுபவராகப் பரிந்து பேசாமல், தம் வெற்றியைச் சொல்லி, வெற்றி வேந்தராகவும் பரிந்து பேசுகிறார். நம்முடைய மத்தியஸ் தராக, தம்முடைய கறையற்ற புண்ணியங்களும், தம் மக்களுடைய ஜெபங்களும் பாவ அறிக்கைகளும் ஸ்தோத்திரங்களும் அடங் கிய தூபகலசத்தை தேவனுக்கு முன்பாகப் பிடித்துக் கொண்டு, தாமே தமக்கு நியமித்த பணியைச் செய்துவருகிறார். அவருடைய நீதி எனும் தூபவர்க்கத்தின் நறுமணத்தோடு சுகந்த வாசனையாக அவை தேவனிடத்திற்குச் செல்கின்றன. அந்தப் பலி முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கது, சகல மீறுதல்களுக்கும் மன்னிப்பு கிடைக்கிறது.COLTam 155.2

    நம்முடைய பதிலாளியாகவும், பிணையாளியாகவும் இருப் பதாக கிறிஸ்து உறுதியளித்திருக்கிறார். அவர் ஒருவரையும் புறக்கணியார். மனிதர்களுக்காக தம் ஆத்துமாவை மரணத்திற்கு ஒப்புக்கொடாமல், அவர்கள் நித்திய அழிவுக்கு ஆளாவதைக் காண விரும்பாதவர், - நான் என்னை இரட்சிக்க முடியாது. என்று உணர்கிற ஒவ்வோர் ஆத்துமாவையும் பரிவோடும் மன துருக்கத்தோடும் நோக்குவார்.COLTam 156.1

    நடுக்கத்தோடு வேண்டுகிற எவரையும் தூக்கி விடாமல் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார். பாவத்திற்கு தம்மையே பலியாகக் கொடுத்து, ஒழுக்கவல்லமையை அளவில்லாமல் கொடுத்திருப்பவர், நமக்காக அந்த வல்லமையைப் பயன்படுத் தாமல் இருக்கமாட்டார். நம் பாவங்களையும் துக்கங்களையும் அவரது பாதத்தண்டைக்குக் கொண்டு செல்லலாம்; ஏனெனில் அவர் நம்மை நேசிக்கிறார். அவரது பார்வை, வார்த்தை ஒவ்வொன்றும் நாம் நம்பிக்கையோடிருக்கும் படி ஊக்கப்படுத்து கின்றன. அவர் தமது சித்தத்தின்படி நமது குணங்களை மாற்றி, சீர்ப்படுத்துவார்.COLTam 156.2

    எளிய விசுவாசத்தோடு தன்னை கிறிஸ்துவிடம் ஒப்படைக் கும் ஒரு ஆத்துமாவைக்கூட மேற்கொள்கிற சக்தி சாத்தானிய ஒட்டுமொத்த ஆற்றலுக்கும் கிடையாது. “சோர்ந்து போகிற வனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் ” ஏசா 40:29.COLTam 156.3

    “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.”யோவான் 1:9.” உன் அக்கிரமத்தையும், என் சத்தத்துக்குச் செவிகொடாமற்போனதையும் ஒத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.’” எரேமியா 3:13. ‘அப்பொழுது நான் உங்கள் மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்.’” எசேக்கியேல் 36:25.COLTam 156.4

    நம்மைப்பற்றி நாம் அறிந்திருக்கவேண்டும்; அது உள்ளத்தை நொறுங்கச்செய்யும். அப்போது தான் மன்னிப்பையும் சமாதானத்தையும் பெறலாம். அந்தப்பரிசேயனிடம் பாவ உணர்வே இல்லை. பரிசுத்த ஆவியானவர் அவனில் கிரியை செய்ய முடியவில்லை . சுயநீதி எனும் கவசம் அவன் ஆத்துமாவை மூடியிருந்தது. எனவே தூதனின் கரங்கள் சரியாக்க் குறிபார்த்து, எய்த தேவனுடைய கூர்மையான அம்புகள் அதைத் துளைக்க இயலவில்லை. தான் ஒரு பாவி என்று அறிந்திருப்பவனை மட்டுமே கிறிஸ்து இரட்சிக்க முடியும். இருதயம் நருங்குண்ட வர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்ர் அவர் வந்தார். லூக்கா 4:18. ஆனால், “சுகமாயிருப்பவர்களுக்கு வைத்தியன் தேவை இல்லை.” லூக்கா 5:31. நம்முடைய மெய்யான நிலையை அறியவேண்டும். இல்லையேல், கிறிஸ்துவின் உதவி நமக்குத் தேவை என்பதை உணரமுடியாது. நம்முடைய ஆபத்தை பற்றியுமந்தெரியவேண்டும். இல்லையேல், அடைக்கலத்தை நோக்கி ஓடமுடியாது. நம்முடைய காயங்களின் வலியை உணரவேண்டும். இல்லையேல், குணமாக வேண்டும் என்கிற விருப்பம் இருக்காது.COLTam 157.1

    “நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும் தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம் பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும், சொல்லு கிறபடியால் ; நான் : நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக் குக் கலிக்கம் போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். வெளி 3:17,18. நெருப்பிலே புடமிடப்பட்ட பொன் என்பது அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமாகும். அதுமட் டுமே நம்மை தேவனோடு இசைந்திருப்பவர்களாக மாற்ற முடியும். நாம் சுறுசுறுப்பாக, அதிகமான பணியைச் செய்யலாம்; ஆனால் கிறிஸ்துவின் இதயத்தில் வாசஞ்செய்கிற அன்பு நம்மிடம் காணப்படாவிட்டால், பரலோகக் குடும்பத்தில் ஒருவராக எண்ணப்படமாட்டோம்.COLTam 157.2

    எந்த மனிதனும் தன் தவறுகளைத் தானே அறிந்து கொள்ள முடியாது. எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமேதிருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?” எரேமியா 17:9. ஆத்துமா வறுமை நிலையில் இருக்கிறதென உதடுகள் சொல்லலாம்; ஆனால், இருதயம் அதை ஒத்துக்கொள் ளாது. ஆத்துவறுமையை குறித்து உதடுகள் தேவனிடம் சொல்லும்போது, இருதயம் தன்னுடைய மிகுந்த மனத்தாழ்மையிலும் மிகுந்த நீதியிலும் ஆணவம் கொண்டு, மேட்டிமையடையலாம். சுயம் குறித்த மெய்யான அறிவைப் பெறுவதற்கு ஒரே வழிதான் உண்டு. கிறிஸ்துவை நாம் நோக்கிப்பார்க்க வேண்டும். அவரைக் குறித்த அறியாமைதான் மனிதர்களை தங்கள் சொந்த நீதியைக் குறித்து மேன்மையடையச் செய்கிறது. அவருடைய பரிசுத்தத் தையும் மேன்மையையும் தியானித்தால், நமது பெலவீனம், வறுமை, குறை பாடுகள் குறித்த மெய்யான நிலை நமக்குப் புலப்படும். நாம் தொலைந்துபோய், நம்பிக்கையற்ற நிலையில், மற்ற பாவிகளைப்போல சுயநீதி என்னும் ஆடைகளை அணிந்திருப்பது தெரியும். நாம் இரட்சிக்கப்பட ஏதாவது வாய்ப்பிருந்தால், அது நம்முடைய நற்குணத்தினால் அல்ல, தேவனுடைய முடிவில்லா கிருபையால் தான் என்பதையும் கண்டு கொள்வோம்.COLTam 158.1

    சர்வ்வல்லவரைச் சார்ந்து, அவரைப் பற்றிப் பிடிக்க விருப்ப மிருந்ததை ஆயக்காரனுடைய ஜெபம் காட்டியது; அதனால்தான் அது கேட்கப்பட்டது. அந்த ஆயக்காரனுக்கு சுயமானது அவமானமாகத் தோன்றியது. தேவனைத் தேடுகிற அனைவருக்கும் அவ்வாறே தோன்ற வேண்டும். உதவி வேண்டி மன்றாடுகிறவர் விசுவாசத்தோடு, சுயத்தை நம்புவதை புறக்கணிக்கிற விசுவாசத் தோடு எல்லையில்லா வல்லமை உள்ளவரைப் பற்றிப் பிடிக்க வேண்டும்.COLTam 158.2

    எப்படிப்பட்ட வெளிப்புறத் தோற்றமானாலும், எளிய விசுவாசத்திற்கும், முற்றிலுமாக சுயத்தைப் புறக்கணிப்பதற் கும் அது இணையாகாது. ஆனால் எந்த மனிதனும் தானே தன் சுயத்தை உறிந்து போடமுடியாது. இந்த வேலயை கிறிஸ்து செய்ய சம்மதிப் பது மட்டுமே முடியும். அப்போது ஆத்துமா என்ன சொல்லு மென்றால், ஆண்டவரே, என் இருதயத்தை எடுத்துக்கொள்ளும். ஏனெனில், என்னால் அதைக் கொடுக்க முடியவில்லை. அது உம்முடைய சொத்து. அதை தூய்மையாக்கும். என்னுடைய இந்த நிலைக்கும், பெலவீனத்திற்கும், கிறிஸ்துவுக்கு மாறான சுயத்திற்கும் மத்தியில் என்னை இரட்சியும் . உம்முடைய அன்பு என் ஆத்துமாவிலிருந்து பெருக் கெடுத்து ஓடும்படிக்கு என்னை வனையும், உருவாக்கும், தூய்மையும் பரிசுத்தமுமான சூழ்நிலைக்கு உயர்த்தும்.COLTam 158.3

    சுயத்தை வெறுக்கிற செயலானது கிறிஸ்தவ ஜீவியத்தின் ஆரம்பத்தில் மட்டும் காணப்படுகிற ஒன்றல்ல. பரலோகத்தை நோக்கி எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியிலும் இது புதுப்பிக்கப் படவேண்டும். நமக்கு அப்பாற்பட்ட ஒரு வல்லமை யைச் சார்ந்துதான் நம் நற்கிரியைகள் எல்லாம் அமைந்துள்ள ளன. எனவே இருதயமானது தொடர்ந்து தேவனைத் தேடிக்கொண்டே இருப் பதும், இடைவிடாமலும் ஊக்கத்தோடும், நொறுங்கிய இருதயத் தோடும் பாவத்தை அறிக்கை செய்வதும், அவருக்கு முன்பாக ஆத்துமாவைத் தாழ்த்துவதும் அவசியமாகும். சுயத்தைத் தொடர்ந்து வெறுப்பதாலும் கிறிஸ்துவைச் சார்ந்திருப்பதாலும் மட்டுமே நாம் பாதுகாப் போடு நடக்க முடியும்.COLTam 159.1

    இயேசுவிடம் நெருங்கிச்செல்கிற அளவுக்கு அவருடைய குணத்தின் பரிசுத்தத்தைப் பகுத்தறியலாம்; நம் பாவத்தின் கொடிய பாவநிலையைப் பகுத்தறியலாம்; நம்மை உயர்த்துகிற விருப்பம் குறைவதை உணரலாம். பரிசுத்தவான்கள் என்று பரலோகம் அங்கீகரிக்கிறவர்கள் தங்கள் நற்குணத்தைப் பட்டியலிடாதவர்கள். அப்போஸ்தலனாகிய பேதுரு கிறிஸ்துவின் உண்மை ஊழியனாக மாறினான். தெய்வீக வெளிச்சமும், வல்லமையும் அருளப்பட்டு, அதிகமாகக் கனப்படுத்தப் பட்டான். கிறிஸ்துவின் சபையைக் கட்டுதில் முக்கிய பங்கைப் பெற்றிருந்தான். ஆனால் பாவத்தால் நேர்ந்த கொடிய நிந்தை யின் அனுபவத்தை பேதுரு ஒருபோதும் மறக்கவில்லை. அவன் பாவம் மன்னிக்கப்பட்டது; ஆனாலும் தன் விழுகைக்கு காரணமாயிருந்த குணப்பெலவீனத்தை கிறிஸ்துவின் கிருபையே நன்மையாக மாற்ற முடியுமென அறிந்திருந்தான். தன்னைக் குறித்து மேன்மைபாராட்ட ஒன்றுமில்லை என்பதையும் கண்டுகொண்டான்.COLTam 159.2

    தங்களிடம் பாவம் இல்லையென எந்த அப்போஸ்தலனும் அல்லது தீர்க்கதரிசியும் ஒருபோதும் சொன்னதில்லை. தேவனோடு மிகநெருக்கமாக வாழ்ந்தவர்களும், தெரிந்தே ஒரு தவறைச் செய்வதை விட உயிரை விட்டுவிட விரும்பினவர்களும், தெய்வீக வெளிச்சத்தையும் வல்லமையையும் அருளி தேவன் கனப்படுத்தி யிருந்தவர்களும், தங்கள் சுபாவத்தின் பாவநிலையை அறிக்கை யிட்டிருக்கிறார்கள். அவர்கள் மாம்சத்தில் நம்பிக்கை வைக்காமல், தங்களில் நீதீ இருப்பதாக உரிமை பாராட்டாமல், கிறிஸ்துவின் நீதி யில் முற்றிலும் நம்பிக்கை வைத்தார்கள். கிறிஸ்துவை நோக்கிப் பார்க்கிற அனைவரும் இவ்வாறே இருப்பார்கள்.COLTam 160.1

    கிறிஸ்தவ அனுபவத்தில் நாம் ஒவ்வோர் அடியை முன் வைக்கும் போதும், நம் மனமாற்றம் ஆழமாகும். கர்த்தர் தாம் மன்னித்தவர்களிடமும், தம்முடைய மக்களாக தாம் ஏற்றுக் கொண்டவர்களிடமும் பின்வருமாறு சொல்கிறார்: “அப்பொழுது நீங்கள் உங்கள் பொல்லாத மார்க்கங்களையும் உங்கள் தகாத கிரியைகளையும் நினைத்து, உங்கள் அக்கிரமங்களினிமித்தமும் உங்கள் அருவருப்புகளினிமித்தமும் உங்களையே அரோசிப்பீர்கள் எசே 36:31. மேலும் அவர், “உன்னோடே என் உடன்படிக்கை யைப் பண்ணி ஏற்படுத்துவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிவாய். நீ செய்த எல்லாவற்றையும் நான் மன்னித்தரு ளும்போது, நீ நினைத்து வெட்கி, உன் நாணத்தினால் உன் வாயை இனித் திறக்க மாட்டாதிருப்பாய்” என்று சொல்கிறார். எசே 16:62,63. அப்பொழுது சுய மகிமையான பேச்சு நம் வாயிலிருந்து புறப்படாது. கிறிஸ்து மட்டுமே நமக்குப் போதுமானவர் என்பதை அறிந்துகொள்வோம். நாமும் அப்பொழுது அப்போஸ்தலனைப் போல, நாமும் அறிக்கையிடுவோம் : ” என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்.” ரோமர் 7:18. “நானோ நம்முடைய கர்த்த ராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன் றையுங்குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.” கலாத்தியர் 6:14.COLTam 160.2

    இந்த அனுபவத்திற்கு இசைவான ஒரு கட்டளை என்னவென் றால், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.”பிலிப்பியர் 2:12, 13. தேவன் தம் வாக்குறுதிகளில் தவறுவாரென்றும், அவர் பொறுமை இழப்பாரென்றும், அல்லது மனதுருக்கம் கொள்ளமாட்டாரென்றும் நினைத்து பயப்படவேண்டாமென்று கர்த்தர் சொல்கிறார். உங்களுடைய சித்தம் கிறிஸ்துவின் சித்தத்திற்குக் கீழ்ப்படியாமல் போகாத படிக்கும், உங்களுடைய பரம்பரை குணங்கள், நீங்கள் வளர்த்துக் கொண்ட குணங்கள் உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்திவிடாத படிக்கும் பயந்திருங்கள் . “தேவனே தம்முடைய தயவுள்ள சித் தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்கு கிறவராயிருக்கிறார்.” சுயமானது உங்களுடைய ஆத்துமாவுக்கும் கிரியை செய்கிற மகா எஜமானுக்கும் இடைய குறிக்கிடாதபடிக்குப் பயந்திருங்கள். உங்கள் மூலமாக தேவன் நிறைவேற்ற விரும்பு கின்ற மேலான நோக்கத்தை சுயசித்தமானது கெடுத்துவிடாதபடிக்குப் பயந்திருங்கள். உங்கள் சொந்த பெலத்தை நம்பிவிடாதபடிக்குப் பயந்திருங்கள், கிறிஸ்துவின் பிடியிலிருந்து உங்கள் கரத்தை இழுத் துக்கொண்டு, அவரது நிலையான பிரசன்னமில்லாமல் வாழ்க்கைப் பாதையில் நடந்து செல்ல முயலாதபடிக்குப் பயந்திருங்கள்.COLTam 161.1

    பெருமை, சுயநிறைவை ஊக்குவிக்கிற அனைத்தையும் வெறுத்துத் தள்ளவேண்டும்; எனவே முகஸ்துதியா, புகழ்ச்சியோ அதைக் கொடுப்பதிலும் அல்லது பெறுவதிலும் எச்சரிக்கை அவசியம். முகஸ்துதி சாத்தானின் வேலை. முகஸ் துதியும் செய்வான்; குற்றஞ்சொல்லி, ஆக்கினைக்கும் உட்படுத்துவான். இவ்விதமாக, ஆத்துமாவை அழிக்க முயல்கிறான். மனிதர்களைப் புகழ்கிறவர்கள் சாத்தானின் பிரதிநிதிகளாக அவன் பயன்படுத்து பவர்கள். கிறிஸ்துவின் ஊழியர்கள் புகழந்து கூறப்படுமந்வார்த்தைகளை காது கொடுத்துக் கேட்கக்கூடாது. சுயத்தை கண்ணில் படாமல் ஒதுக்கி விடவேண்டும். கிறிஸ்து மட்டுமே உயர்த்தப்படவேண்டும். நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத் தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி (னவரையே). ஒவ்வொரு கண்ணும் நோக்கட்டும்; அவரையே ஒவ்வொரு இருதயமும் புகழ்ந்து பேசட்டும். வெளி. 1:6.COLTam 161.2

    கர்த்தருக்குப் பயப்படும் பயத்தை பெரிதும் போற்றுகிற வாழ்க்கையில் துக்கமும், வருத்தமும் இருக்காது. கிறிஸ்து இல்லாததுதான் முகத்தை வருத்தமாக்குகிறது, பெருமூச்சுடன் வாழ்க்கையைக் கடக்கச் செய்கிறது. சுய கவுரவமும், சுய அன்பும் நிறைந்தவர்கள், கிறிஸ்துவோடு உயிருள்ள, தனிப்பட்ட உறவு தேவைப்படுவதை உணரமாட்டார்கள். கிறிஸ்துவாகிய பாறை யின் மேல் விழாத இருதயமானது, தன்னிடம் குறையேயில்லை என்றுதான் பெருமையடிக்கும். மனிதர்கள் கொளரவமான ஒரு மார்க்கத்தை விரும்புகின்றனர். தங்களுடைய குணநலன்களோடு செல்லக்கூடிய விசாலமான ஒரு பாதையில் நடக்க விரும்பு கிறார்கள். சுயநல அன்பும், புகழ் பெறும் ஆசையும், புகழ்ச்சியை விரும்புவதும் உள்ளே இருப்பதால் அவை இரட்சகரை இரு தயங்களிலிருந்து வெளியேற்றி விடுகின்றன. அவரில்லாமல் வருத்தமும் துக்கமுமே மிஞ்சும். ஆனால் ஆத்துமாவில் கிறிஸ்து வாசஞ்செய்வது, சந்தோஷம் பெருக்கெடுக்கிற ஊற்று போல இருக்கும். அவரை ஏற்றுக் கொள்கிற அனைவருக்கும் மகிழ்ச்சி தருகிற ஒரு முக்கிய விஷயமாக தேவ வார்த்தை இருக்கும்.COLTam 162.1

    “நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம் பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம் பண்ணுகிறேன். ‘ ஏசாயா 57:15.COLTam 162.2

    ஒரு பாறையில் பிளவில் மறைக்கப்பட்டிருந்த சமயத்தில் தான் தேவனுடைய மகிமையை மோசே கண்டான். நாமும் பிளவுண்ட கன்மலையாகிய கிறிஸ்துவில் மறைக்கப்படும் போதுதான், ஆணிபாய்ந்த தம் கரத்தால் அவர் நம்மை மூடுவார்; தம் தாச ர்களுக்கு அவர் சொல்வதைக் கேட்போம். கர்த்தர் மோசேக்கு வெளிப்படுத்தியது போல, இரக்கமும், கிருபையும், நீடிய சாந்த மும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலை முறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறு தலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர் என்று நமக்கும் வெளிப் படுத்துவார். யாத். 34:6,7.COLTam 162.3

    மீட்புப் பணி விளைவுகளை உள்ளடக்கியது; மனிதர்கள் அதிலிருந்து எதையும் புரிந்துகொண்டு ஒரு முடிவுக்கு வருவது கடினம். “தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணின வைகளைக் கண்காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை 1கொரி. 2:9. கிறிஸ்துவின் வல்லமையால் இழுக்கப்படுகிற பாவி, உயர்த்தப்பட்ட சிலுவையை நெருங்கிச்சென்று, அதற்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழும் போது, அங்கே புது சிருஷ்டிப்பு உண்டாகிறது. புதிய இருதயம் அவனுக்குக் கொடுக்கப்படுகிறது. கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக புது சிருஷ்டியாகிறான். அதற்கும் மேலான பரிசுத்ததன்மை அவசியப்படாது. தேவன்தாமே, “இயேசுவிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவனை நீதிமானாக் குகிறார்.’” ரோமர் 3:25. “எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். ‘‘ ரோமர் 8:30. பாவத்தால் எவ்வளவு அதிகமாக அவமானமும் சீர்கேடும் உண்டானதோ, மீட்பின் அன்பு மூலமாக அதைவிட அதிகமாக கனமும், மேன்மையும் உண்டாகும். தேவனுடைய சாயலுக்கு ஒத்தவர்களாக மாறப் பிரயாசப் படுகிறவர்களுக்கு பரலோகப் பொக்கிஷமும், மகத்தான வல்லமையும் முதலீடாக வழங்கப்படுகிறது; அது அவர்களை விழுந்து போகாத தூதர்களைக் காட்டிலும் மேலான நிலையில் வைக்கிறது.COLTam 162.4

    “இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய கர்த்தர், மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அருவருக்கப்பட்டவரு (மாயிருந்தார்), ... உண்மையுள்ள கர்த்தர் நிமித்தமும், உம்மைத் தெரிந்து கொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர் நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்து கொள்வார்கள். ஏசாயா 49:7.COLTam 163.1

    “தன்னைத்தான் உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.”COLTam 163.2