6 - விதைவிதைப்பில் கூடுதல் பாடங்கள்
விதை விதைப்பதிலிருந்தும், அந்த விதையிலிருந்து செடி வளர்வதிலிருந்தும் அருமையான பாடங்களை குடும்பத்திலும், வேதாகம வகுப்புகளிலும் கற்றுக்கொடுக்கலாம். இயற்கையானது தேவனுடைய ஏதுகரங்களாகச் செயல்படுவதை வாலிபர்களும் சிறு பிள்ளைகளும் உணர்ந்து கொள்வார்களாக; அப்போது, கண்காணாத நன்மைகள் குறித்து விசுவாசத்தால் அறிந்துகொள்கிற திறனைப் பெறுவார்கள். தேவன் தம்முடைய மாபெரும் குடும் பத்தின் தேவைகளைச் சந்திப்பதற்கு அற்புதமாகச் செயல்படுவதையும், அவரோடு ஒத்துழைக்கவேண்டியதையும் புரிந்து கொள்ளும் போது, தேவன்மேல் அதிக விசுவாசமுள்ளவர்களாகி, தங்கள் அன்றாட வாழ்வில் அவரைடய வல்லமையை அதிகமாக உணர் வார்கள்.COLTam 81.1
தேவன் இவ்வுலகை வார்த்தையினால் சிருஷ்டித்தது போல விதையையும் சிருஷ்டித்தார். அது வளர்ந்து, பெருக்கத்தக்கதாக தமது வார்த்தையினால் அதற்கு வல்லமையைக் கொடுத்தார். தேவன், ‘பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின் மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட் சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று .... தேவன் அது நல்லது என்று கண்டார் ” ஆதியாகமம் 1:11,12. அந்த வார்த்தையே இன்றைக்கும் விதையை வளரச்செய்கிறது. விதையிலிருந்து சூரிய ஒளியை நோக்கி வளரும் ஒவ்வொரு பச்சையான இலையும், அற்புதம் செய்யும் அவர் வல்லமையை அறிவிக்கின்றன; அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.” சங் 33:9.COLTam 81.2
கிறிஸ்து தமது சீடர்களுக்கு எங்களுக்கு வேண்டிய ஆகா ரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” என்று ஜெபிக்கக் கற்றுக்கொடுத்தார். மத்தேயு 6:11,30. “புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?” என்று மலர்களைக் காட்டி, அவர்களைத் தைரியப்படுத்தினார். இவ்வாறு ஜெபிப்பவர்களுக்குப் பதிலளிக்கவும், சொன்னபடியே தைரியப் படுத்தவும் கிறிஸ்து தொடர்ந்து கிரியை செய்கிறார். மனிதனின் பணிவிடைக்காரனாக அவனைப் போஷிக்கவும், அவனை உடுத்துவிக்கவும் கண்ணுக்குப் புலப்படாத வல்லமை ஒன்று தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. வீசி எறியப்படுகிற விதையா னது செடியாக உயிர்பெற அநேக ஏதுகரங்களை நமது கர்த்தர் பயன் படுத்துகிறார். பூரண அறுவடை கிடைப்பதற்கு தேவையான அனைத்தையும் போதுமான அளவு வழங்குகிறார். சங்கீதக்காரனின் அற்புதமான வார்த்தைகள் இவை; தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவந்தியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; இப்படி நீர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானி யத்தை விளைவிக்கிறீர். அதின் வரப்புகள் தணியத்தக்கதாய் அதின் படைச்சால்களுக்குத் தண்ணீர் இறைத்து, அதை மழைகளால் கரையப் பண்ணி, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர். வருஷத்தை உம்முடைய நன்மையால் முடி சூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது. சங்கீதம் 65:9-11.COLTam 82.1
காணப்படுகிற இந்த உலகம் தேவனுடைய கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. இயற்கையானது இயற்கை விதிகளுக்குக்கட்டுப்படுகிறது. ஒவ்வொன்றும் சிருஷ்டிகரின் சித்தத்தைப் பேசுகின்றன; செயல்படுத்துகின்றன. மேகமும், சூரிய வெளிச்சமும், பனித் துளியும் மழையும், காற்றும் புயலும் தேவனுடைய கண்காணிப்பில் உள்ளன; அவர் கட்டளையிட் அப்படியே கீழ்ப்படி கின்றன. தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்தே நிலத்திலிருந்து விதை முளைத்து, “முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் கொடுக்கிறது. மாற்கு 4:28. அவருடைய கிரியைக்கு அவை எதிர்த்து நிற்காதபடியால், அதினதின் காலத்தில் அந்தந்த வளர்ச்சி நிகழ ஆண்டவர் செய்கிறார். தேவ சாயலிலே சிருஷ்டிக்கப்பட்டு, பேச்சாற்றலும் பகுத்தறிவும் வழங்கப்பட்டுள்ள மனிதன் மட்டும் அவருடைய ஈவுகளுக்கு நன்றியில்லாதவனாக வும், அவருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படியாதவனாகவும் இருக்க லாமா? பகுத்தறிவுள்ள ஜீவிகள் மட்டும் உலகத்தில் குழப்பத்தை விளைவிக்கலாமா?COLTam 82.2
மனிதனுடைய வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட ஒவ்வொன்றும் தேவ னோடு சேர்ந்து மனிதனும் ஒத்துழைத்து முயற்சிப்பதால் கிடைப்பவை. விதை விதைப்பதில் மனிதன் தன் பங்கைச் செய்யாவிட்டால், அறுவடை இருக்காது. ஆனால், சூரிய வெளிச்சத்தையும் மழையையும், பனியையும் மேகத்தையும் கொடுப்பதில் தேவனுடைய ஏதுகரங்களாகச் செயல்படுபவை இல்லாமல், விளைச்சல் இருக்காது. எந்தத் தொழிலானாலும், எந்தத் துறை படிப்பானாலும் அறிவியலானாலும் இந்த விதி பொருந்தும். ஆவிக்குரிய விஷயங்களிலும், குணம் மேம்பாடு அடைவதிலும், ஒவ்வொரு வகையான கிறிஸ்தவ ஊழியத்திலும் இந்த விதி பொருந்தும். நம் பங்குக்கு நாம் செயல்படவேண்டும்; ஆனால், தேவவல்லமையும் நம்மோடு சேர்ந்து செயல்படவேண்டும்; இல்லையேல், நம்முடைய முயற்சி வீணாயிருக்கும்.COLTam 83.1
ஆவிக்குரிய விஷயமானாலும் அல்லது இவ்வுலக விஷயமா னாலும் மனிதன்சாதிக்கிற ஒவ்வொன்றையும், தன் சிருஷ்டிகருடைய ஒத் துழைப்புடன் சாதிப்பதை எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும். நாம் தேவனையே சார்ந்திருப்பதை உணர்வது மாபெரும் தேவையாக இருக்கிறது. மனிதனை அளவுக்கதிகமாக நம்புகிற போக்கும், மனிதக்கண்டுபிடிப்புகளைச் சார்ந்திருக்கிறப் போக்கும் அதிகமாகக் காணப்படுகிறது. தேவன் நமக்கு வழங்குவதற்கு ஆயத்தமாயிருக்கும் வல்லமையில் சொற்ப அளவே நம்பிக்கை வைக்கப்படுகிறது. ‘நாம் தேவனுக்கு உடன் வேலையாட்களாயிருக்கிறோம் 1 கொரி. 3:9. தன்பங்கிற்கு மனிதன் செய்வது மிகமிகக் குறைவுதான்; ஆனால், கிறிஸ்துவின் தெய்வீகத்தோடு அவன் இணைந்தால், கிறிஸ்து அருளுகிற பெலத்தினால் எல்லாவற்றையும் அவன் செய்யமுடியும்.COLTam 83.2
விதையிலிருந்து செடி படிப்படியாக வளர்வது, குழந்தைகளைப் பயிற்றுவிப்பதற்கான விளக்கப்பாடமாக அமைகிறது. ‘நிலமானது முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகக் கொடுக்கிறது.” இந்த உவமையைச் சொன்னவர் தாமே அந்தச் சிறு விதையைப் படைத்தார், உயிர்க் கூறுகளை வழங்கினார், அதன் வளர்ச்சி சம்பந்தப்பட்ட விதிகளை நியமித்தார். இந்த உவமை போதிக்கும் சத்தியங்கள் அவருடைய சொந்த வாழ்வில் அப்படியே வெளிப்பட்டன. செடி எடுத்துக் காட்டிய, தேவன் நியமித்த வளர்ச்சி நிலைகள் அவருடைய சரீரவளர்ச்சியிலும் ஆவிக்குரிய வளர்ச்சியிலும் காணப்பட்டன. ஒவ்வொரு வாலிபரிலும் அந்த வளர்ச்சி காணப்பட விரும்புகிறார். அவர் பரலோகத்தின் அதிபதியாக, மகிமையின் ராஜாவாக இருந்தும், பெத்லகேமில் குழந்தையாகப் பிறந்தார், தாயின் பராமரிப்பில் உதவியற்ற சிறு குழந்தையாக சிலகாலம் வளர்ந்தார். சிறு பிராயத்தில் கீழ்ப் படிதலோடு வேலைகளைச் செய்தார். பெரிய மனிதனைப் போன்று அல்லாமல் குழந்தைக்கேற்ற ஞானத்தோடு பேசினார், நடந்து கொண்டார்; தம் பெற்றோரைக் கனப்படுத்தினார், தன் பெற்றோருக்கு உதவியாக ஒரு சிறுவனால் என்ன முடியுமோ அந்த வேலைகளைச் செய்தார். ஆனால், ஒவ்வொரு வளர்ச்சிப் பருவத்திலும், பாவமற்ற வாழ்க்கைக்கான கிருபையைப் பெற்று, பாவமற்றவராகக் காணப்பட்டார். அவருடைய குழந்தைப் பருவத்தைக் குறித்து பரிசுத்த ஆவணம் இவ்வாறு கூறுகிறது: “பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன் கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.” அவருடைய வாலிப்பருவம் பற்றி இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது: “இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபை யிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.” லூக்கா 2:40,52.COLTam 84.1
பெற்றோர் மற்றும் ஆசிரியரின் பணிபற்றி இங்கு சொல்லப் படுகிறது. தோட்டத்தின் செடிகளைப்போல, வாலிபர்கள் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்திலும் அப்பருவத்திற்கேற்ற இயற்கை அழகை, இயற்கையாகவே வெளிப்படுத்தும்படி அவர்களுடைய மனப்போக்குகளைப் பண்படுத்துவதை அவர்கள் இலட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும்.COLTam 84.2
இயல்பாக, பாதிப்பிற்கு ஆளாக பிள்ளைகள் பார்ப்போரை மிகவும் கவருவார்கள். அவர்கள் மேல் விசேஷக் கவனம் செலுத்துவதும், அவர்கள் பேசினஞானமான வார்த்தைகளைச் சொல்லிச் சொல்லிக் காண்பிப்பதும் ஞானமல்ல. அவர்களுடைய தோற்றத்தை, வார்த்தைகளை அல்லது செயல்களைப் புகழ்ந்து, மாயைக்கு வழிவகுக்கக் கூடாது. பகட்டான, விலையுயர்ந்த ஆடைகளை பிள்ளைகளுக்கு உடுத்தக்கூடாது. அது அவர்கள் மனதிலே பெருமையையும், சக பிள்ளைகளின் மனதில் பொறாமையையும் தூண்டிவிடும்.COLTam 85.1
சிறுபிள்ளைகளுக்கு அவர்களுக்கேற்ற கல்வியைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.COLTam 85.2
தங்கள் வயதிற்கேற்ற அனுபங்களிலும், ஆனந்தங்களிலும், சிறிய, பயன்மிக்க கடமைகளிலும் அவர்கள் திருப்தியடைப் பழக்க வேண்டும். உவமையில் சொல்லப்படும் முளை குழந்தைப் பருவத்தைக் குறிக்கிறது. தனக்கே உரிய தனிச்சிறப்பான அழகு டன் அது காணப்படும். வயதுக்கு மிஞ்சிய முதிர்ச்சியுடன் நடக்க பிள்ளைகளை நிர்ப்பந்திக்கக்கூடாது. குழந்தைப் பருவத்தின் அழகும், மலர்ச்சியும் சாத்தியப்படுகிற காலம் வரையிலும் காணப்படவேண்டும்.COLTam 85.3
சிறு பிள்ளைகள் தங்கள் வயதிற்கேற்ற அனுபவமுள்ள கிறிஸ்தவர்களாகத் திகழலாம். அவ்வளவுதான் தேவன் அவர்களிடம் எதிர்பார்க்கிறார். ஆவிக்குரிய விஷயங்களை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். கிறிஸ்துவின் குணத்திற் கொத்த குணங்கள் அவர்களிடம் உருவாகும் படிக்கு அனுகூலமான ஒவ்வொன்றையும் பெற்றோர் அவர்களுக்கு வழங்க வேண்டும்.COLTam 85.4
தேவன் நியமித்துள்ள இயற்கை விதிகளில், காரணமும் அதற்கான விளைவும் தவறாமல் நிகழ்கிறது. எதுவிதைக்கப்பட்டது என்பது அறுப்பில் தெரிந்துவிடும். சோம்பேறியான ஊழியக்காரன் வேலை செய்யாததால் குற்றவாளியாகத் தீர்க்கப்பட்டான். அறுவடை அவனுக்கு எதிரான சாட்சியாக இருந்தது. அதுபோலவே ஆவிக்குரிய விஷயங்களிலும் இருக்கிறது; ஒவ்வொரு ஊழியக்காரனின் உண்மைத்தன்மைக்கு ஊழியத்தின் விளைவுகள் அளவு கோலாக இருக்கும். அவன் ஜாக்கிரதையாகப் பிரயாசப்பட் டானா அல்லது சோம்பலாக இருந்தானா என்பதை அறுவடை காட்டி விடும். அவ்வாறுதான் அவனைடய நித்திய வாழ்க்கை தீர்மானிக்கப் படுகிறது.COLTam 85.5
எந்த விதை விதைக்கப்படுகிறதோ அதற்குரிய அறுவடை கிடைக்கும். அப்படித்தான் மனித வாழ்விலும் நிகழ்கிறது. நாம் அனைவமே மனதுருக்கம், பரிவு, அன்பு போன்ற விதைகளை விதைக்க வேண்டும்; ஏனெனில், நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம். சுயநலமான, சுயத்தை நேசிக்கிற, சுயமதிப்பை நாடுகிற ஒவ்வொரு குணமும், ஒவ்வொரு சிற்றின்ப செயலும் அதற்கேற்ற அறுவடையைக் கொண்டு வரும். சுயத்திற்காக வாழுகிறவன் மாம்சத்திற்கென்று விதைக்கிறான், மாம்சத்தினாலே ஒழுக்கக் கேட்டை அறுவடை செய்வான்.COLTam 86.1
ஒருவனையும் தேவன் அழிப்பதில்லை. அழிக்கப்படுகிறவன் தன்னைத்தானே அழித்திருப்பான். மனச்சாட்சியின் எச்சரிப்புகளை அடக்குகிறவன் அவிசுவாசவிதைகளைத் தூவுகிறான்; அதற்கேற்ற அறுவடையை அவை கொண்டு வரும். பண்டைக்காலத்து பார்வோன் தேவனுடைய முதலாவது எச்சரிப்பைப் புறக்கணித்த போது, பிடிவாதத்தின் விதைகளை விதைத்தான்; பிடிவாதத்தை அறுவடை செய்தான். தேவன் வற்புறுத்தி அவனை அவிசுவாசிக்க வைக்கவில்லை. அவன் விதைத்த அவிசுவாச விதைதான் அதற் கேற்ற அறுவடையைக் கொடுத்தது. அதனால் தன் பிடிவாதத்தில் அவன் நிலைத்து நின்றபோது, தன் தேசம் பாழானதைப் பார்க்க நேரிட்டது, தன் முதற்பேறான பிள்ளையும், தன்னுடைய வீட்டிலும் தன்னுடைய ராஜ்யம் முழுவதிலுமிருந்தோரின் முதற்பேறான பிள்ளைகளும் மரித்து, உணர்வற்று கிடந்ததைக் காண நேரிட்டது, அவனது இரதங்களையும் குதிரைகளையும்யுத்த வீரர்களையும் சமுத்திரத்தின் தண்ணீர் மூழ்கடித்ததைக் காண நேரிட்டது. “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்’ என்கிற வார்த்தைகளுக்கு அவனது வரலாறு ஒரு பயங்கரமான எடுத்துக்காட்டாக இருக்கிறது. கலாத்தியர் 6:7. மனிதர்கள் இதை உணரும் பட்சத்தில், தாங்கள் எதை விதைக்கிறோம் என்பதில் எச்சரிப்புடன் இருப்பார்கள்.COLTam 86.2
விதைக்கப்பட்ட விதை அறுவடையைக் கொடுக்கிறது; பிறகு அதுவே விதையாக விதைக்கப்பட்டு மேலும் மேலும் அறுவடை கிடைக்கிறது. மற்றவர்களுடனான நம் தொடர்பிலும் இந்த விதி பொருந்தும். ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு வார்த்தையும் பலனைக் கொடுக்கக்கூடிய ஒரு விதையாக இருக்கிறது. அன்பான சிந்தையோடும் கீழ்ப்படிதலோடும் சுயமறுப்போடும் செய்யப்படு கிற ஒவ்வொரு செயலும் மற்றவர்களிலும் அப்பண்புகளைக் கொண்டு வரும்; அவர்கள் மூலம் மேலும் பிறரிலும் உருவாகும். அதைப் போலவே பொறாமையும், துர்க்குணமும் அல்லது பிரிவினையும் மற்றவர்களில் கசப்பான வேரை” விடுகிற விதையாக விழுந்து, அநேகரைத் தீட்டுப்படுத்தும். எபிரெயர் 12:15. அந்த அநேகர் மேலும் அநேகரைத் தீட்டுப்படுத்துவார்கள்.” இவ்விதமாக, நன்மைக்கும் தீமைக்கும் ஏதுவாக தொடர்ந்து விதைக்கப்பட்டு வருகிறது; நித்தியம் மட்டும் அப்படியே இருக்கும்.COLTam 86.3
ஆவிக்குரிய விஷயங்களிலும் இம்மைக்குரிய விஷயங்களிலும் நாம் தாராளக்குணத்துடன் நடக்கும்படி விதை விதைப்பு உவமை போதிக்கிறது. கர்த்தர் இவ்வாறு சொல்கிறார்: நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதை விதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள். ஏசாயா 32:20. “சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக் கிறவன் பெருக அறுப்பான். 2கொரிந்தியர் 9:6.நீர்வளம் பொருந்திய இடங்களில் விதைப்பதென் றால், தேவனுடைய ஈவுகளைத் தடையின்றி வழங்குவதாகும். தேவனுடைய ஊழியத்திற்காக அல்லது மனிதரின் தேவைகளைச் சந்திப் பதற்காக நம் உதவி தேவைப்படுகிற இடங்களிலெல்லாம் உதவி வழங்குவதாகும். அவ்வாறு செய்வதால் வறுமை நேரிட வாய்ப் பில்லை. பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்” விதைக்கிறவன் விதையைத் தூவிதான் அதைப் பெருகப்பண்ணு கிறான். அதைப்போலவே தேவனுடைய ஈவுகளை உண்மையோடு பகிர்ந்தளிப்பவர்களும் இருக்கிறார்கள். கொடுப்பதன் மூலம் தங்கள் ஆசீர்வாதங்களைப் பெருக்குகிறார்கள். அவர்கள் தொடர்ந்து கொடுக்கும்படி நிறைவை அளிப்பதாக தேவன் வாக்குரைத்திருக்கிறார். “கொடுங்கள், அப்பொழுது உங்களுக் கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள். லூக்கா 6:38.COLTam 87.1
விதைப்பு மற்றும் அறுப்பில் இன்னும் அதிகமான விஷயங்கள் உள்ளடங்கியுள்ளன. தேவன் தருகிற இம்மைக்குரிய ஆசீர்வாதங்களை நாம் பகிர்ந்தளிக்கும் போது, நம்முடைய அன்புக்கும் பரிவுக் கும் அது சாட்சியாக விளங்கும்; பெறுகிறவர்களின் மனதில் தேவன் மேல் நன்றியுணர்வைத் தூண்டி, ஸ்தோத்தரிக்கச்செய்யும். இருதய நிலமானது ஆவிக்குரிய சாத்தியமாகிய விதைகளை ஏற்றுக்கொள்கிற பக்குவத்தைக் கொடுக்கும். விதைக்கிறவனுக்கு விதையைக் கொடுப்பவர், அது முளைக்கவும், நித்திய ஜீவனுக்கேதுவான பலனைக் கொடுக்கவும் செயல்படுவார்.COLTam 87.2
விதையானது நிலத்தில் விதைக்கப்படுவதன் மூலம், நம் மீட்பிற்காக கிறிஸ்து தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்ததைச் சுட் டிக்காட்டுகிறார். கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகா விட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்” என்று சொல்கிறார். யோவான் 12:24. எனவே, கிறிஸ்துவின் மரணமான து தேவராஜ்யத்திற்கேதுவான பலனைக் கொடுக்கும். தாவர உலகின் இயற்கை விதியைப்போலவே, அவருடைய மரணத்தின் பலனால் நமக்கு ஜீவன் கிடைக்கிறது.COLTam 88.1
கிறிஸ்துவின் உடன் ஊழியர்களாக, கனிகொடுக்கவிரும்புகிற அனைவரும், முதலாவது நிலத்தில் விழுந்து மடியவேண்டும். உலகத்தின் தேவையென்னும் உழுசாலுக்குள் வாழ்க்கையை விதைக்க வேண்டும். சுயநலம், சுய அன்பு அழியவேண்டும். ஆனால் சுயத்தைத் தியாகம் செய்வதே சுயத்தைப் பாதுகாக்கும் விதியாகும். நிலத்தில் விதைக்கப்பட்ட விதை கனியாகி, மீண்டும் விதைக்கப்படுகிறது. இவ்விதமாக, அறுவடை பெருகுகிறது. பயிரிடுகிறவன் விதைத்து தான் விதையைப் பாதுகாக்கிறான். அது போலத்தான் மனிதவாழ்விலும்; கொடுப்பது தான் வாழவைக்கிறது. தேவனுக்கும் மனிதனுக்கும் ஊழியம் செய்ய அர்ப்பணிக்கப்படுகிற வாழ்க்கையே பாதுக்காக்கப்படுகிறது. கிறிஸ்துவுக்காக இந்த உலகத்தில் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்தவர்கள், நித்திய வாழ்க்கைக் கேது வாக அதைப் பாதுகாத்துக்கொள்வார்கள்.COLTam 88.2
விதை அழிந்து, புதிய ஜீவனுள்ளதாக எழும்புகிறது; இதில், உயிர்த்தெழுதல் குறித்த சத்திம் சொல்லப்படுகிறது. தேவனை நேசிக் கிற அனைவரும் பரலோக ஏதேனில் மீண்டும் ஜீவிப்பார்கள். கல்லறையில் வைக்கப்பட்டு, அழிகிற சரீரத்தைக் குறித்து தேவன் இவ்வாறு கூறுகிறார்: “அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்; கனவீனமுள்ளதாய் விதைக்கப் படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ள தாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்” 1கொரிந்தியர் 15:42, 43.COLTam 88.3
விதை - விதைப்பவன் பற்றிய இந்த இயற்கை உவமையில் காணப் படும் அநேக பாடங்களில் இவை சிலவாகும். இதைக் கற்றுக் கொடுக்கிற பெற்றோரும் ஆசிரியர்களும் செயல்முறை யோடு விளக்க வேண்டும். பிள்ளைகள்தாமே மண்ணை ஆயத்தப்படுத்தி, விதையை ஊன்றட்டும். அந்த வேலையில் அவர்கள் ஈடுபட்டிருக் கும் போது, இதயமானது நல்ல அல்லது கெட்ட விதையை விதைக் கிற நிலம் போன்றிருப்பதையும், விதையை ஊன்ற தோட்டத்தைப் பக்குவப்படுத்துவது போலவே சத்திய விதையை விதைக்க இதயத்தை ஆயத்தப்படுத்தவேண்டும் என்றும் பெற்றோரோ விளக்கலாம். விதையை நிலத்தில் ஊன்றும் போது, கிறிஸ்துவின் மரணத்தைக் குறித்துப் போதிக்கலாம்; விதையிலிருந்து முளை எழும்பும் போது, உயிர்த்தெழுதலின் சத்தியத்தைப் போதிக்கலாம். செடி வளரும் போது, நிலத்தில் விதைப்பதற்கும், ஆவிக்குரிய ரீதியாக விதைப்பதற்கும் இடையேயான ஒற்றுமையை எடுத்துக்கூறலாம்.COLTam 89.1
இவ்விதமாக வாலிபருக்கும் போதிக்க வேண்டும். நிலத்தைப் பண்படுத்த பயிற்றுவிக்கவேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் விவசாயம் செய்யக்கூடிய நிலமும் இருந்தால் நல்லது. அந்த நிலங்களை தேவனுடைய வகுப்பறையாகக் கருதப்படவேண்டும். தேவனுடைய பிள்ளைகள் ஆராய வேண்டிய பாடப்புத்தகமாக இயற்கையின் விஷயங்களைக் கருதவேண்டும்; ஆத்துமாவைப் பண்படுத்துவதற்கான அறிவைப் அதிலிருந்து அவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.COLTam 89.2
நிலத்தை உழுது, அகற்ற வேண்டியதை அகற்றி, சமப்படுத்து வதில் பாடங்களைக் கற்றுக்கொண்டே இருக்கலாம். ஒரு நிலத்தில் ஒன்றுமே செய்யாமல், அதில் அறுவடையை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். விதைப்புக்காக நிலத்தை ஆயத்தப்படுத்துவதற்கு, ஊக்கத்தோடும் கருத்தோடும், விடாமுயற்சியோடும் பிரயாசப் பட்டு, அதைப் பண்படுத்தவேண்டும். மனிதரின் இதயத்தில் நடைபெற வேண்டிய ஆவிக்குரிய வேலைக்கும் இது பொருந்தும். நிலத்தைப் பண்படுத்தி, அதிலிருந்து பயனடைய விரும்புகிறவர்கள் தங்கள் இதயங்களிலே தேவவார்த்தையைச் சுமந்து செல்ல வேண்டும். அப்பொழுது, தரிசுநிலம் போன்ற இதயமானது பரிசுத்த ஆவியான வருடைய மிருவாக்குகிற, கீழ்ப்படுத்துகிற செல்வாக்கால் நொறுங்கு வதைக் காணலாம். நிலத்தில் கடினமாக உழைக்காதப் பட்சத்தில், அதில் அறுவடை கிடைக்காது. இதயமா கிய நிலத்திலும் அப்படித்தான்; தேவ ஆவியானவர் அதில் கிரியை செய்து, அதைச்சுத்திகரித்து, பண்படுத்தவேண்டும்; அப்போதுதான் தேவ மகிமைக்கேற்ற கனியைக் கொடுக்கும்.COLTam 89.3
கணநேர உந்துதலால் நிலத்தில் பிரயாசப்படுவது, நிறைவான பலனை நிலம் கொடுக்காது. தினமும் சிந்தித்து, கவனத்தோடு செயல்படவேண்டும். நல்ல விதையின் செடிகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்காதபடி கெடுக்கிறகளைகளை நீக்க வேண்டியதை மனதில் வைத்து, அடிக்கடி, ஆழமாக உழவேண்டும். அவ்வாறு உழுது, விதைப்பவர்கள் அறுவடைக்கு ஆயத்தமாகிறார்கள். தங்கள் எதிர் பார்ப்புகள் வீணாய் போனதாக கவலையோடு நிலத்தில் யாரும் நிற்கவேண்டியதில்லை.COLTam 90.1
இவ்வாறு நிலத்தில் வேலை செய்து, இயற்கையிலிருந்து ஆவிக் குரிய பாடங்களைக் கற்றுக்கொள்கிறவர்கள் மேல் கர்த்தருடைய ஆசீர்வாதம் தங்கும். நிலத்தைப் பண்படுத்தம் போது, அது எவ்வளவு விளைச்சலைத்தரப்போகிறதென வேலை செய்கிற வனுக்குத் தெரியாது . ஏற்கனவே அனுபவமுள்ளவர்கள் சொல்கிற அறிவுரைகளையும், அறிவாளிகள் பகிர்கிற தகவல்களையும் புறக்கணிக்கக்கடாது; அதேசமயம், தானாகவே பாடங்களைக் கற்றுக்கொள்ளவும் வேண்டும். அவனுடைய பயிற்சியில் இது ஒரு பகுதியாகும். நிலத்தைப் பண்படுத்துவது, ஆத்துமா குறித்து பாடம் படிக்க உதவுகிறது.COLTam 90.2
விதையை முளைக்கச் செய்கிற, இரவு பகலாக அதைப் பாதுகாக் கிற, அது முளைப்பதற்கான ஆற்றலைக் கொடுக்கிற அவர்தாமே நம் ஜீவனின் அதிபதியாக, பரலோகத்தின் ராஜாவாக இருக்கிறார்; தம் பிள்ளைகள் மேல் அதிகப்பட்ச அக்கறையும் ஆவலும் கொள்கிறார். இந்த உலகத்தில் நாம் உயிர்வாழ்வதற்காக உலகத்தில் விதைக்கிறார்கள், நித்திய வாழ்வுக்கேதுவான பலன்கிடைக்கும் படி, தெய்வீகவிதைப்பாளர் நம் ஆத்துமாவில் விதைப்பார்.COLTam 90.3