வழியருகே உள்ள நிலம்
விதை விதைக்கப்படுகிற நிலமானது அந்த விதையின் வளர்ச்சியில் ஏற்படுத்துகிற தாக்கத்தை விதைக்கிறவன் குறித்த உவமை முக்கியமாகச் சுட்டிக்காட்டுகிறது. இந்த உவமையின் மூலம் கேட்கிறவர்களுக்கு கிறிஸ்து தெளிவாகச் சொல்வது என்ன வென்றால், “என்னுடைய ஊழியத்தை விமர்சிப்பவர்களாக நீங்கள் காணப்படுவதோ, ஏமாற்றத்திலேயே காலம் கழிப்பதோ நல்லதல்ல ; ஏனென்றால், அது உங்கள் இலக்குகளை எட்ட உதவாது. உங்கள் முன் இருக்கும் மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், என்னுடைய செய்தியின்படி எவ்வாறு நடக்கப் போகிறீர்க? அதை ஏற்றுக்கொள்வதை அல்லது புறக்கணிப்பதை சார்ந்து தான் நித்திய முடிவு உள்ளது” என்பதே.COLTam 43.1
வழியருகே விழுந்த விதையைக் குறித்து இயேசு விளக்கு கையில், “ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணரா திருக்கும் போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக் கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன் என்று சொன்னார். மத் 13:19. COLTam 43.2
வழியருகே விதைக்கப்பட்ட விதையானது, கவனக்குறை வோடு கேட்கிறவனின் மனதில் விழுகிற தேவனுடைய வார்த்தை யைச் சுட்டிக்காட்டுகிறது. மனிதர்களும் மிருகங்களும் அடிக்கடி நடந்து, நன்கு இறுகிப்போன வழிதடத்தைப் போல, அந்த இருதயமான து உலகின் இன்பங்களுக்கும் பாவங்களுக்கும் பழகி, உலகப் பிரகாரமான போக்குவரத்திற்கான நெடுஞ்சாலையாகிவிடுகிறது. சுயநல நோக்கங்களும், பாவச்செயல்களிலும் மூழ்கிவிடுவதால், ஆத்துமாவானது, பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போய்விடுகிறது” எபிரெயர் 3:13. ஆவிக்குரிய மனத்திறன்கள் முடங்கிப்போகின்றன. வார்த்தையைக் கேட்டாலும் புரியாது. அது தங்கள் வாழ்க்கைக்குத் தேவை என்பதைப் பகுத்தறிய முடியாது. கிறிஸ்துவின் அன்பை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை; அவருடைய கிருபையின் செய்தி தங்களுக்குரியதல்லாதது போல அக்கறை காட்டுவதில்லை.COLTam 43.3
வழியருகே சிதறிய விதையைப் பொறுக்க பறவைகள் திரிவதுபோல, இருதயத்திலிருந்து தெய்வீக சத்தியமென்னும் விதைகளை எடுத்துப்போட சாத்தானும் ஆயத்தமாயிருக்கிறான். தேவவார்த்தை யானது அக்கறையற்றிருப்போரை எழுப்பி, கடினப்பட்ட இதயத்தில் விளைச்சலை ஏற்படுத்திவிடுமோவென அஞ்சுகிறான். சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிற கூட்டங்களில் சாத்தானும் அவனுடைய தூதர்களும் இருக்கிறார்கள். இதயங்களில் தேவனுடைய வார்த்தையைப் பதிக்க பரலோகத் தூதர்கள் முற்படுகையில், அந்த வார்த்தையைப் பயனற்றதாக்குவதற்கு எதிரி விழிப்போடிருக் கிறான். எவ்வளவு பகைக்கிறானோ அவ்வளவு மூர்க்கத்தோடு தேவ ஆவியானவரின் ஊழியத்தைச் தகர்க்க முயல்கிறான். ஆத்துமாவை தம் அன்பினால் கிறிஸ்து இழுக்கும் போது, இரட்சகரைத் தேடும் படி அசைக்கப்பட்ட நபரின் கவனத்தைத் திசைதிருப்ப சாத்தான் முயல்கிறான். உலகப்பிர காரமான யோசனைகளால் மனதை நிரப்புகிறான். விமர்சன எண்ணங்களைத் தூண்டுகிறான் அல்லது சந்தேகத்தையும் அவநம்பிக் கையையும் உட்புகுத்துகிறான். பிரசங்கிக்கிறவர் பயன்படுத்துகிற வார்த்தையும் அல்லது அவர் நடந்து கொள்கிற விதமும் கேட்கிறவர்களுக்குப் பிடிக்காமல் போகலாம், அதனால் அவர்கள் அந்தக் குறைபாடுகளையே யோசிக்கிறார்கள். இவ்வாறாக, அவர்களுக்குத் தேவையான, தேவன் கிருபையாக அவர்களுக்கு அனுப்பின சாத்தியமானது எவ்வித நீடித்த தாக்கத்தையும் உண்டாக்காமல் போகிறது.COLTam 44.1
சாத்தானுக்கு உதவி செய்ய பலர் உள்ளனர். கிறிஸ்தவர்களென்று சொல்லிக்கொள்ளும் பலர், மற்றவர்களுடைய இதயங் களினின்று சாத்தியமென்னும் விதைகளை எடுத்துப்போட சோதனைக்காரனுக்கு உதவுகிறார்கள். பிரசங்கத்தில் தேவனுடைய வார்த்தை கேட்கும் பலர் வீடுகளில் அவற்றை விமர்சனப் பொரு ளாக்குகின்றனர். ஒரு அரசியல் பேச்சாளரின் அல்லது ஒரு பேராசி ரியரின் பேச்சை விமர்சிக்கிற அதே மனநிலையுடன் பிரசங்கத்தையும் கேட்க உட்காருகின்றனர். கர்த்தருடைய வார்த்தையென்று கருதவேண்டிய செய்தியை அற்பமாக எண்ணுகின்றனர் அல்லது கேலியாக விமர்சிக்கின்றனர். ஊழியக்காரரின் குணத்தையும், உள் நோக்கத்தையும், செயல்களையும் மற்றும் சபை அங்கத்தினர்களின் நடத்தையையும் விருப்பம் போல விவாதிக்கின்றனர். கடுமையான விமர்சனங்களையும், வதந்திகளையும் அல்லது அவதூறுகளையும் திரும்பத்திரும்ப்பப் பேசுகின்றனர்; அதுவும் மனமாற்றமடை யாதோர் கேட்கும்படிப் பேசுகின்றனர். பெரும்பாலும் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் கேட்கும்படியாக இத்தகைய விஷயங்களைப் பேசுகின்றனர். இவ்விதமாக, தேவனுடைய ஊழியர்களின் மீதான கண்ணியம் கெடுக்கப்படுகிறது, அவருடைய செய்தி பயபக்திக்கு அப்பாற்பட்ட தாக்கப்படுகிறது. தேவ்வார்த்தையை அற்பமாக எண்ணுவதற்கு அநேகர் பழக்கப்படுகின்றனர்.COLTam 44.2
இவ்விதமாக, கிறிஸ்தவர்களென்று சொல்லிக்கொள்ளும் அநேக குடும்பங்களில் வாலிபர்கள் சமய நம்பிக்கை அற்றவர்களாக பழக்கு விக்கப்படுகிறார்கள். பிள்ளைகளுக்கு ஏன் நற்செய்தியில் அவ்வளவுக்கு ஆர்வம் ஏற்படுவதில்லை என்று கேள்வி எழுப்புகிற பெற்றோர், வேதாகமத்தின் சத்தியத்தைச் சந்தேகிக் கவும் தயங்குவதில்லை. ஒழுக்கத்திற்கும் பக்திக்கும் ஏது வான தாக்கங்களை பிள்ளைகளில் ஏற்படுத்துவது கடினமோ என்று யோசிக்கிறார்கள். தங்களுடைய முன்மாதிரியால் பிள்ளைகளின் இருதயங்களை தாங்கள் கடினமாக்கிவிட்டதை அவர்கள் உணர்வதில்லை. நல்ல விதை வேரூன்ற வழியில்லாமல் போகவே, சாத் தான் அதை எடுத்துச்செல்கிறான்.COLTam 45.1
கற்பாறையான இடங்களில் கற்பாறை இடங்களில் விதைக் கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்; ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத் தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடற லடைவான்.” மத்தேயு 13:20,21.COLTam 45.2
கற்பாறையான இடங்களில் விதைக்கப்பட்ட விதை வேரி டமுடியாத படி மண்ஆழம் குறைவாக இருக்கும். செடி உடனே முளைத்தாலும், வேரால் பாறையைத் துளைத்துச் சென்று, தன் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தைப் பெற முடியாது; அதனால், சீக்கிரத்தில் உலர்ந்து விடும். பக்கியுள்ளவர்களெனச் சொல்லிக்கொள்ளும் பலர், கற்பாறையான இருதயமுள்ளவர்களாக இருக்கிறார்கள். நிலத்திற்குக் கீழே புதைந்திருக்கும் பாறையைப் போல, அவர்களுடைய நல்ல விருப்பங்கள் மற்றும் இலட்சியங்கள் எனும் நிலத்திற்குக் கீழே சுபாவ இதயத்தின் சுயநலம் இருக்கிறது. சுயத்தின் மேலான அன்பு தணியாமல் இருக்கிறது. பாவத்தின் படுபயங்கரத்தன்மையை உணராதவர்களாயும், பாவ உணர்வினி மித்தம் ஏற்படும் குற்ற உணர்வு இல்லாதவர்களாயும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட வர்களை எளிதில் ஏற்றுக்கொள்ளச் செய்ய லாம், அவர்களது மனமாற்றமும் பிரகாசமாகத் தெரியும்; ஆனால், மேலோட்டமான பக்தியே அவர்களில் காணப்படும்.COLTam 45.3
கேட்டதும் வார்த்தையை ஏற்றுக்கொள்வதாலோ, வார்த் தையின் நிமித்தம் மகிழ்வதாலோ மக்கள் விழுந்து போவதில்லை. மத்தேயுவை இரட்சகர் அழைத்த உடனேயே எழுந்து, அனைத் தையும் விட்டு விட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தான். தேவ வார்த்தை நம்முடைய இதயங்களில் விதைக்கப்பட்டதும், நாம் அதை ஏற்றுக் கொள்ள தேவன் விரும்புகிறார்; அதை மகிழ்ச்சி யோடே ஏற்றுக் கொள்வதிலும் தவறில்லை. “மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்” லூக்கா 15:7. கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற ஆத்துமாவில் சந்தோஷமுண்டு; ஆனால், உவமையில் சொல் லப்படுகிறவர்கள் வார்த்தையை உடனே ஏற்றுக்கொள்கிறார்கள்; ஆனால், அதற்கான விலையை எண்ண வில்லை. தேவவார்த்தை தங்களிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை யோசிக்கவில்லை. வாழ்க்கையின் எல்லா பழக்கவழக்கங்களும் அதற்கு ஒத்திருக் கின்றனவா என்று பார்த்து, அதன் கட்டுப்பாட்டில் முற்றிலும் தங்களை ஒப்படைக்கவில்லை.COLTam 46.1
கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், மண்ணை ஆழமாகத் துளைத்துச் செல்லும் செடியின் வேர்கள்தாம், செடி வளர்வதற்கான ஊட்டச்சத்தைப் பெற்றுத்தருகின்றன. அது போலவே, கிறிஸ்தவனும் இருக்கிறான். கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், கிறிஸ்துவோடு இணைகிற ஆத்து மாமாவானது, விசுவாசத்தின் மூலம் ஆவிக்குரிய வாழ்விற்கான ஊட்டத்தைப் பெறுகிறது. ஆனால், கற்பாறை நிலத்தைப் போன்றவர்கள், கிறிஸ்துவைச் ச ாராமல், சுயத்தைச் சார்ந்திருக்கிறார்கள். தங்கள் நற்கிரியைகளையும், நல்ல உணர்வு கைளயும் நம்புகிறார்கள், சுய நீதியில் உறுதியாயிருக்கிறார்கள். கர்த்தரிலும், அவருடைய சாத்துவத்தின் வல்லமையிலும் உறுதியாக இருப்பதில்லை. இப்படிப்பட்டவன், “தனக்குள்ளே வேரில்லாதவனாக’ இருக்கிறான்; ஏனெனில், கிறிஸ்துவோடு அவனுக்குத் தொடர்பில்லை.COLTam 46.2
கடினமான விதைக்கு உரமூட்டி, ஆயத்தப்படுத்துகிற கோடை கால வெயிலானது, ஆழமாக வேர்விடாத செடிகளை அழித்துப் போடுகிறது. எனவே, ‘தனக்குள்ளே வேரில்லாதவன்’‘, “கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான் மத்தேயு 13:20,21. பாவத்திலிருந்து விடுவிக்கும் பிடியாக அல்லாமல், உபத்திரவத்திலிருந்து தப்பிக்கும் ஒரு வழியாகவே அநேகர் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்கின்றனர். தங்கள் பக்தியான வாழ்க்கை கஷ்டத்திலும் சோதனையிலுமிருந்து தங்களை விடுவிக்குமென்று நினைத்து, சிலகாலம் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். வாழ்க்கை சுமூகமாகச் செல்லும் சமயங்களில், உறுதியான கிறிஸ்தவர்கள் போன்று காணப்படுவார்கள்; ஆனால், அக்கினி சூளை போன்ற சோதனையின்போது, தளர்ந்துவிடுகின் றனர். கிறிஸ்துவினிமித்தம் நிந்தையைத் தாங்க இயலாது. தேவ வார்த்தையானது நெடுங்காலம் பழகிப்போன பாவத்தைச் சுட்டிக்காட்டும் போதும், அல்லது சுயமறுப் போடும் அர்ப்ணிப் போடும் வாழும்படி சொல்லும் போதும் புண்படுவார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் முழுமையான மாற்றம் காணப்பட அதிகப்பட்ச முயற்சியை அவர்கள் மேற்கொள்ள வேண்டிய திருக்கும். இவ்வுலக சங்கடங்களையும் சோதனைகளையும் பார்த்து, நித்தியத்திற்கடுத்த உண்மைகளை மறந்துவிடுகின்றனர். கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்த சீடர்களைப்போல, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்று சொல்லத் தயங்குவதில்லை . யோவான் 6:60.COLTam 47.1
தேவனைச் சேவிப்பதாகச் சொல்லிக்கொள்கிற அநேகர் இருக்கிறார்கள்; ஆனால் அவர்களிடம் அவரைக்குறித்த அனுபவ அறிவு இருக்காது. அவருடைய சித்தப்படி செய்யவேண்டுமென்கிற விருப்பமானது, பரிசுத்த ஆவியானவரின் ஆழமான உணர்த்து தலின்படி அல்லாமல், அவர்களுடைய சொந்த விருப்பத்த்தின்படி அமைந்திருக்கும். அவர்களுடைய நடத்தையானது தேவ பிரமா ணத்திற்கு ஒத்திராது. கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வதாகச் சொல்லிக்கொள்வார்கள்; ஆனால் தங்கள் பாவங்களை மேற்கொள்ளக்கூடிய வல்லமையை அவர் தருவா ரென விசுவாசிப்பதில்லை . ஜீவனுள்ள இரட்சகருடன் தனிப்பட்ட உறவு இருக்காது, பரம்பரை குறைபாடுகளும், பழகிக் கொண்ட குறைபாடுகளும் அவர்களுடைய குணத்தில் வெளிப்படும்.COLTam 47.2
எல்லாரையும் போல பரிசுத்த ஆவியானவருடைய கிரியையை ஒத்துக்கொள்வது வேறு ; மனந்திரும்பும் படி நம்மைக் கண்டிக்கிற வராக அவர் கிரியை செய்கிறார் என்று ஏற்றுக்கொள்வது வேறு. பாவத்திற்கும் சுயத்திற்கும் தாங்கள் அடிமைப்பட்டிருப்பதை உணரும்போது தேவனைவிட்டு உறவு முறிந்துபோன உணர்வு அநேருக்கு உண்டாகிறது; சீர்திருந்துவதற்கான முயற்சிகளை எடுக்கின்றார்கள்; ஆனால், சுயத்தை சிலுவையில் அறைவதில்லை. தங்களை முற்றிலுமாக கிறிஸ்துவின் கரங்களில் ஒப்புக்கொடுத்து, அவருடைய சித்தப்படி செய்ய தேவவல்லமையைத் தேடுவதில்லை. தேவசாயலில் தாங்கள் வார்க்கப்பட விரும்புவதில்லை. பொதுவான முறையில் தங்கள் குறைபாடுகளை ஒத்துக்கொள் கிறார்கள்; ஆனால், குறிப்பிட்ட பாவங்களை விட்டுவிடுவதில்லை. ஒவ்வொரு முறை தவறு செய்யும் போதும், பழைய சுயநலத்தன்மை வலுவடைகிறது.COLTam 48.1
இந்த ஆத்துமாக்களுக்கான ஒரே நம்பிக்கை, நிக்கொதேமுவிடம் கிறிஸ்து சொன்ன வார்த்தைகளிலுள்ள சத்தியத்தை அவர்கள் உணர்ந்துகொள்வதுதான் : நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும். ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்யத்தைக் காணமாட்டான்.” யோவான் 3:7,3.COLTam 48.2
மெய்யான பரிசுத்தம் என்பது தேவ சேவையில் குறைவற்றவர்களாக இருப்பதாகும். உண்மையான கிறிஸ்தவ ஜீவியத்திற்கான நிபந்தனை இது. முற்றிலும் அற்ப்பணித்து, முழுமனதோடு சேவை செய்ய கிறிஸ்து வேண்டுகிறார். இதயத்தையும், சிந்தையையும், ஆத்துமாவையும், முழுபலத்தையும் தம்மிடம் தரச்சொல்கிறார். சுயத்தைச் சேவிக்கக் கூடாது. தனக்காக வாழ்பவன் கிறிஸ்தவன் அல்ல .COLTam 48.3
செயலின் அடிப்படை நியதி அன்பாக இருக்கவேண்டும். வானத்திலும் பூமியிலும் தேவனுடைய ஆளுகையின் அடிப்படை நியதி அன்பு, அதுவே கிறிஸ்தவனுடைய குணத்தின் அடித்தளமாக இருக்கவேண்டும். அதுமாத்திரமே அவனை உறுதியுள்ளவனாக்கிக் காக்க முடியும். அதுமாத்திரமே, பாடுகளையும் சோதனைகளையும் தாங்கிக்கொள்ள திறனளிக்கமுடியும்.COLTam 48.4
அன்பானது தியாகத்திலே வெளிப்படும். இரட்சிப்பின் திட்டமானது தியாகத்தில் போடப்பட்டதாகும்; அளவிடமுடியாத அளவுக்கு மிக அகலமான, ஆழமான, உயரமான தியாகம் அது. கிறிஸ்து நமக்காக எல்லாவற்றையும் கொடுத்தார், கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் தங்களுடைய இரட்சகரின் நிமித்தம் எல்லாவற்றையும் தியாகஞ்செய்ய ஆயத்தமாக இருக்கவேண்டும். எல்லாவற்றையும் விட அவருக்கு கனத்தையும் மகிமையையும் செலுத்துகிற எண்ணமே முதலாவதாக இருக்கவேண்டும்.COLTam 48.5
இயேசுவை நாம் நேசித்தால், அவருக்காக வாழ்வதிலும், அவருக்கு நன்றி பலிகளை ஏறெடுப்பதிலும், அவருக்காகப் பிரயாசப்படுவதிலும் பிரியப்படுவோம். அந்தப் பிரயாசம் இலகுவாயிருக்கும். அவர் நிமித்தம் உண்டாகிற வேதனையும், கடும் உழைப்பும், தியாகமும் இன்பமாயிருக்கும். மனிதரின் இரட்சிப்புக்காக அவர் ஏங்குவது போல நாமும் ஏங்குவோம். ஆத்துமாக்கள் அவருக்கிருந்த அதேகனிவான வாஞ்சை நமக்கும் இருக்கும்.COLTam 49.1
இதுவே கிறிஸ்துவின் மார்க்கம். இதற்குக் குறைவானது எதுவும் வஞ்சனையே . சத்தியம் குறித்த கருத்தியல் கொள்கையோ, சீடர்களெனச் சொல்லிக்கொள்வதோ எந்த ஒரு ஆத்துமாவையும் இரட்சிக்காது. நாம் முற்றிலும் கிறிஸ்துவுக்குச் சொந்தமானா லொழிய, நாம் அவருக்குச் சொந்தமானவர்கள் அல்ல. கிறிஸ்தவ ஜீவியத்தில் அரைகுறை மனதுடன் இருப்பதால் தான், நோக்கத்திலும் வாஞ்சையிலும் உறுதியிருப்பதில்லை. சுயத்தையும் கிறிஸ்துவையும் சேவிக்க முயல்வது இருதயத்தை கற்பாறையான நிலமாக்குகிறது. அப்படிப்பட்ட நபர் சோதனைவரும் போது நிலைத்திருக்கமாட்டார்.COLTam 49.2
முள்ளுள்ள இடங்களில் முள்ளுள்ள இடங்களில் விதைக்கப் பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான்.” மத்தேயு 13:22.”COLTam 49.3
அநேக சந்தர்ப்பங்களில் சுவிசேஷ விதை முட்களின் மத்தியிலும் விஷகளைகளுக்கு மத்தியிலும் விழுகிறது; மனிதனுடைய இருதயத்தில் ஒழுக்க நிலை மாற்றம் ஏற்படாவிட்டால், பழைய பழக்கவழக்கங்களும் முந்தைய பாவ வாழ்க்கையும் உதறித்தள்ளப்படாவிட்டால், சாத்தானுடைய இயல்புகள் ஆத்துமாவிலிருந்து வெளியேற்றப்படா விட்டால், கோதுமைப் பயிரானது நெருக்குண்டு போகும். முட்கள் பயிர்செடிபோல வளர்ந்து, கோதுமை பயிரை அழித்துவிடும்.COLTam 49.4
சத்தியமாகிய விலையேறப்பெற்ற விதைகள் விழும்படி எப்போதும் பண்படுத்தப்படுகிற இதயத்தில் தான் தேவகிருபை விருத்தி யடையமுடியும். பாவம் எனும் முட்செடிகள் எந்த நிலத்திலும் வளரும், அதற்கு நிலத்தைப் பண்படுத்தவேண்டியதில்லை; ஆனால் கிருபையைப் பொறுத்தவரையில் கவனத்தோடு பண்படுத்த வேண்டும். முட்களும், நெருஞ்சில்களும் முளைக்க எப்போதும் வாய்ப்பிருப்பதால், சுத்திகரிப்பின் பணி தொடர்ந்து நடைபெறவேண்டும். இருதயத்தை தேவனுடைய கட்டுப்பாட்டில் வைக்காவிட்டால், குணத்தைச் சுத்திகரித்து, அதன் தரத்தை உயர்த்த பரிசுத்த ஆவியானவர் இடைவிடாமல் கிரியை செய்யாவிட்டால், வாழ்க்கையில் பழைய பழக்கங்கள் மறுபடியும் வெளிப்பட ஆரம் பிக்கும். சுவிசேஷத்தை விசுவாசிப்பதாக மனிதர் சொல்லிக் கொள்ளலாம்; ஆனால், சுவிசேஷத்தினால் அவர்கள் பரிசு த்தமாக்கப்படாவிட்டால் அவ்வாறு சொல்வதில் எந்தப் பிரயோ ஜனமுமில்லை. பாவத்தின் மேல் அவர்கள் வெற்றிபெறாவிட்டால், பாவம் அவர்கள் மேல் வெற்றி கொள்ளும். முட்செடிகளை வேருடன் பிடுங்கமல் வெறுமனே நறுக்கிவிடும் போது, அவை துரிதமாக வளர்ந்து, ஆத்துமாவை முற்றிலுமாக மூடிவிடும்.COLTam 50.1
ஆத்துமாவிற்கு அபாயத்தை விளைவிக்கக்கூடிய விஷயங்களைகிறிஸ்து சுட்டிக்காட்டியிருக்கிறார். மாற்கு பதிவு செய்திருப்பது போல, உலகக்கவலைகளையும் ஐசுவரியத்தின் மயக்கத்தையும் மற்றவகை இச்சைகளையும் அவர் குறிப்பிடுகிறார். பிரபஞ்சக் கவலைகளையும், ஐசுவரியங்களையும், வாழ்வின் சிற்றின்பங்களையும் லூக்கா குறிப்பிடுகிறார். வளர்கிற ஆவிக்குரிய விதையாகிய வசனத்தை இவைகளே நெருக்கிப் போடுகின்றன. ஆத்துமாவானது கிறிஸ்துவிடமிருந்து ஊட்டச்சத்தைப் பெறாமல் போகிறது, இதயத்தில் ஆவிக்குரிய மரணம் சம்பவிக்கிறது. ‘இந்த உலகத்திற்குரிய கவலைகள்!’COLTam 50.2
உலகக்கவலைகளால் சோதனை உண்டாகாத மனிதர்களே உலகத்தில் இல்லை . ஏழைகளுக்கு, கடும் உழைப்பும் வறுமையும் தேவை குறித்த பயமும் மனக்கலக்கத்தையும் பாரத்தையும் கொண்டு வருகின்றன. பணக்காரர்களுக்கு நஷ்டம் குறித்த பயமும், இன்னும் ஏராளமான விஷயங்களைக் குறித்த கலக்கங்களும் உண்டாகின்றன. கிறிஸ்துவைப் பின்பற்றும் பலர், வயல்வெளி மலர்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும்படி அவர் இட்ட கட்டளையை மறந்து விடுகின்றனர். அவர் எப்போதும் தங்களை விசாரிக்கிறவர் என்பதை நம்புவதில்லை. அவர்கள் தங்கள் பாரத்தை கிறிஸ்துவின் மீது சுமத்தாததினால் அவர் அதைச் சுமக்க இயலாது. எனவே, உதவியும் ஆறுதலும் வேண்டி அவரிடம் ஓடச்செய்ய வேண்டிய இவ்வுலகக் கவலைகள் அவரிடமிருந்து அவர்களைப் பிரிக்கின்றன.COLTam 50.3
தேவ சேவையில் அதிக பலன் தந்திருக்கக்கூடிய அநேகர், செல்வம் சேர்ப்பதில் தீவிரமாக இறங்கிவிடுகின்றனர். தங்கள் முழு ஆற்றலையும் தொழில் முயற்சிகளில் செலவிடுகிறார்கள், அதன்விளைவாக ஆவிக்குரிய விஷயங்களைப் புறக்கணிப்பதில் தவறில்லை என்கிற உணர்வு உண்டாகிறது. அவ்விதமாக, தேவனிடமிருந்து பிரிந்து போகிறார்கள். “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்” என்கிற வசனத்தின்படி நாம் நடக்கவேண்டும். ரோமர் 12:11. தேவைப்படுவோருக்குக் கொடுக் கும்படி நாம் உழைக்க வேண்டும். கிறிஸ்தவர்கள் உழைக்க வேண்டும், தொழில் செய்யவேண்டும், பாவத்திற்குட்படாமல் இதை அவர்கள் செய்ய முடியும். ஆனால் அநேகர் தொழிலில் மூழ்கிவிடுவதால், ஜெபம் செய்ய நேரமிருக்காது, வேதம் வாசிக்க நேரமிருக்காது, தேவனைத் தேடவும், அவரைச் சேவிக்கவும் நேரமிருக்காது. பரிசுத்த வாழ்க்கையும் பரலோகமும் அவசியமென அவ்வப்போது ஆத்துமா வில் ஏக்கங்கள் உண்டாகும்; ஆனால் அதிகாரத்தோடும் மாட்சிமையோடும் பேசுகிற பரிசுத்த ஆவியானவருடைய சத்தத்திற்குச் செவிசாய்க்கும்படி இவ்வுலகின் இரைச்சல்களிலிருந்து விலகிச்செல்ல நேரமிருக்காது. நித்தியத்திற் கடுத்த விஷயங்களுக்கு முக்கியத்துவமளிக்காமல், இவ்வுலகத்திற் கடுத்த விஷயங்களுக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. வார்த்தையாகிய விதை வளர்ந்து கனி கொடுக்க இயலாமலாகிறது. ஏனெனில், உலகப்பற்றென்னும் முட்செடிகளுக்கு ஊட்டமளிக்க ஆத்துமாவின் ஜீவனானது ஒப்புக்கொடுக்கப்படுகிறது.COLTam 51.1
முற்றிலும் வேறுபட்ட நோக்கத்தோடு பிரயாசப்படுகிற பலர், இது போன்ற தவறில் விழுகின்றனர். பிறர் நலனுக்காகப் பிராயசப்படுகிறார்கள்; கடமைகள் ஏற்படுத்தும் அழுத்தமிருக்கும்; ஏராளமான பொறுப்புகள் இருக்கும்; எனவே தியான நேரத்தைப் பலியாகக் கொடுத்து எப்போதும் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஜெபம் செய்து, தேவ்வார்த்தையை ஆராய்ந்து தேவனோடு பேசுவதைத் தவிர்க்கிறார்கள். ‘என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது என்று கிறிஸ்து கூறியிருப்பதை மறந்து விடுகிறார்கள். யோவான் 15:5. கிறிஸ்துவை விட்டு விலகி நடப்பதால், கிறிஸ்துவின் கிருபை அவர்களுடைய ஜீவியத்தை நிரப்புவதில்லை, சுயநலக்குணங்கள் வெளிப்படுகின்றன. அதிகார ஆசையும், கீழ்ப்படுத்தப்படாத இருதயத்தின் கடினமான, இனிமை யற்ற குணங்களும் அவர்களுடைய சேவையைச் சீர்கெடுக்கின்றன. கிறிஸ்தவ பணியில் ஏற்படும் தோல்விக்கான முக்கிய இரகசியங்களில் இதுவும் ஒன்று. இதினிமித்தமே பல சமயங்களில் மிகக்குறைந்த பலன் கிடைக்கிறது.COLTam 51.2
“ஐசுவரியத்தின் மயக்கம்.” ஐசுவரியத்தின் மேல் உள்ள ஆவல், மயக்குகின்ற வஞ்சிக்கின்ற ஒரு வல்லமையாக இருக்கின்றது. உலக ஆஸ்தியுடையவர்கள் அடிக்கடி தங்கள் ஆஸ்தியைப் பெறுவதற்கான சக்தியை தேவன் தருகிறார் என்பதை மறந்துவிடுகிறார்கள். “என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது” என்று அவர்கள் கூறுகிறார்கள். உபாகமம் 8:17) அவர்களின் ஆஸ்தி, தேவனுக்கு நன்றி தெரிவிக்கும் படித் தூண்டாமல், அவர்களின் சுயத்தை உயர்த்தும் படி வழி நடத்துகிறது. சகமனிதர்களுக்குச் செய்யவேண்டிய கடமையையும் தேவன் மீது சார்ந்திருக்கவேண்டுமென்ற உணர்வையும் இழந்து விடுகிறார்கள். ஆஸ்தியைக் கொண்டு மனுக்குலத்தை உயர்த்தவும், தேவநாமம் மகிமைப்படும் வகையில் அதை ஒரு கருவியாகப் பயன்படுத்தாமல், தங்களை மாத்திரம் திருப்திப்படுத்தும் பொருளாக உபயோகிக்கின்றனர். தேவனுடைய இயல்புகளை மனிதனில் தோற்றுவிப்பதற்குப் பதிலாக, சாத்தானுடைய இயல்புகளை தோற்றுவிக்கிறது. வசன மாகிய விதை முட்களால் நெருக்கப்படுகிறது.COLTam 52.1
“சிற்றின்பங்கள்.” வெறுமனே சுயமன நிறைவுக்காக பொழுதுபோக்கைத் தேடிச் செல்வதில் ஆபத்துள்ளது. சரீரத் திறன்களைப்பெலவீனப்படுத்துகிற, மனதை இருளடையச் செய்கிற அல்லது ஆவிக்குரிய புலன்களைப் மரத்துப்போகச் செய்கிற பழக்க வழக்கங்கள் அனைத்துமே, ஆத்துமாவுக்கு விரோதமாகப் போர் செய்கிற மாம்ச இச்சைகளாகும்.” 1பேதுரு 2:11.COLTam 52.2
“மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகள்.” இத்தகைய விஷயங்கள் தங்களில் தாங்களே பாவமுள்ளவைகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், தேவ இராஜ்யத்திற்குப் பதிலாக இவற்றிற்கு முதலிடம் கொடுக்கப்படுகின்றன. தேவனை விட்டு சிந்தையைக் கவருகிற எதுவும், கிறிஸ்துவைவிட்டு உணர் வுகளைக் கவர்ந்திழுக்கிற எதுவும் ஆத்துமாவிற்கு விரோதமான தாகும்.COLTam 52.3
சிந்தை துடிப்பாகவும், சுறுசுறுப்பாகவும், வேகமாக வளர்ச்சியடை கிற சூழலிலும் இருக்கும் போது, சுயத்தை நேசி க்கவும், சுயத்தைச் சேவிக்கவும் பயங்கர தூண்டுதல் உண்டாகும். உலகப்பிரகாரமான திட்டங்கள் வெற்றியாக அமையுமானல் மனச்சாட்சியை மரக்கச் செய்கின்ற வழியிலும், மெய்யான குணமேன்மை எதுவென்பதை சரியாகக் கணிப்பதைத் தடுக்கிற வழியிலும் தொடர்ந்து செல்ல நாட்டம் ஏற்படுகிறது. இத்தகைய போக்கிற்கு சூழ்நிலைகளும் ஒத்துப்போகும் போது, தேவ்வார்த்தை தடை செய் துள்ள திசையில் தான் வளர்ச்சி காணப்படும்.COLTam 53.1
பிள்ளைகளுடைய வாழ்க்கையின் இந்த முக்கிய வளர்ச்சிப் பருவத்தில், பெற்றோருடைய பொறுப்பு மிகப்பெரிது . அந்த இளம் பிராயத்தில் சரியான செல்வாக்குகளே அவர்களைச் சு ற்றிலும் காணப்படகவனமாக இருக்கவேண்டும்; வாழ்க்கையையும் மெய்யான வெற்றியையும் பற்றிய சரியான எண்ணங்களை அவர்களில் உருவாக்குகிற செல்வாக்குளாக அவை இருக்கவேண்டும். இதற்கு பதிலாக, தங்கள் பிள்ளைகளுக்கு உலக ஆஸ்திகளைச் சேர்ப்பதையே பெரும்பாலான பெற்றோர் முதல் நோக்கமாகக் கொண்டுள்ளனர். அதை மனதில் வைத்தே எல்லா தொடர்புகளை அமைக்கின்றனர். அநேக பெற்றோர் ஏதாவது பெரிய நகரத்தில் குடியமர்ந்து, நவநாகரீகச் சூழலுக்கு தங்கள் பிள்ளைகளை அறிமுகப்படுத்துகிறார்கள். உலகப்பற்றையும் பெருமையையும் தூண்டுகிற செல்வாக்குகள் சூழச்செய்கின்றார்கள். இந்தச் சூழ் நிலையில் மனதும் ஆத்துமாவும் வளர்ச்சி குன்றுகின்றன. வாழ்வின் உயர்வான, கண்ணியமான இலட்சியங்கள் மறைக்கப்படுகின்றன. தேவனுடைய குமார்ர்களாகவும், நித்திய சுதந்தரவாளிகளாகவும் மாறுகிற சிலாக்கியமானது உலக ஆதாயத்திற்காக விலைபேசப் படுகிறது.COLTam 53.2
தங்கள் பிள்ளைகளின் பொழுதுபோக்கு ஆசையை நிறை வேற்றி, அவர்களுக்கு அதிக சந்தோஷமூட்ட அநேக பெற்றோர் முயற்சிக்கின்றனர். அவர்கள் கேளிக்கைகளிலும், சிற்றின்ப விருந்துகளிலும் கலந்துகொள்வதற்கு அனுமதிக்கிறார்கள்; தங்கள் விருப்பப்படி செய்யவும், தங்களை விளம்பரப்படுத்தவும் தாராளமாகச் செலவழிக்கும்படி அவர்களுக்கு பணம் கொடுக் கிறார்கள். சிற்றின்ப ஆசையில் எவ்வளவு தூரம் மூழ்குகிறார்களோ, அவ்வளவுக்கு அது வலுப்பெறுகிறது. இந்த இளைஞர்களின் ஆர்வம் அதிகமதிகமாக பொழுதுபோக்கிலேயே ஈடுபாடு கொள்கிறது, இறுதியில் அதுவே தங்கள் வாழ்வின் மாபெரும் குறிக்கோளென்று கருதுகிற நிலைக்கு வந்து விடுகின்றார்கள். சோம் பேறித்தனமான, சிற்றின்பங்களில் ஈடுபடுகிற பழக்க வழக் கங்கள் உருவாகின்றன; அதனால் அவர்கள் உறுதியான கிறிஸ்த வர்களாக மாற முடியாத நிலை ஏற்படுகிறது.COLTam 53.3
சத்தியத்தின் தூணாகவும் இருப்பிடமாகவும் திகழவேண்டிய திருச்சபையுங்கூட சுயநல சிற்றின்ப ஆசையை ஊக்குவிப்பதாகத் தெரிகிறது. ஆவிக்குரிய நோக்கங்களுக்காக பணம் திரட்டும் போது, அநேக சபைகள் என்ன வழி முறைகளைக் கையாள்கின்றன? கடைவீதிகளுக்குச் செல்வது, இரவு விருந்துகள் வைப்பது, ஆடம்பரக் கண்காட்சிகள் நடத்துவது, குலுக்குச் சீட்டு பரிசு த்திட்டங்கள் போடுவது போன்ற திட்டங்களைக்கையாள்கின்றனர். தேவனை ஆராதிப்பதற்கென நியமிக்கப்பட்டுள்ள இடமானது பெரும் பாலும் புசித்தல், குடித்தல், வாங்குதல், விற்றல், களியாட்டங்களில் ஈடுபடுதல் போன்றவற்றால் தீட்டுப்படுகிறது. தேவனுடைய வீட்டின் மேல் இருக்கவேண்டிய மரியாதையும், அவருடைய ஆராதனையில் காணப்பட வேண்டிய பயபக்தியும் வாலிபரின் இருதயங்களில் குறைந்து போகின்றன. சுயக்கட்டுப்பாட் டிற்கான வேலிகள் பலவீனமடைகின்றன. சுயநலமும், அடங்கா ஆசையும், விளம்பர ஆசையும் வசீகரிக்கின்றன; அவற்றில் ஈடுபடும் போது அவை வலுப்பெறுகின்றன.COLTam 54.1
சிற்றின்பத்தையும் பொழுதுபோக்கையும் நாடிச் செல்வது நகரங்களில் அதிகம் காணப்படுகிறது. தங்கள் பிள்ளைகளுக்கு பெரிய உதவி செய்வதாக நினைத்து, ஏமாற்றமடைகின்றனர், அந்தத் தவறைச் சரி செய்வதற்குள் காலம் பிந்தி விடுகிறது. தவறுகளை உணர்கின் றனர். இன்றைய நகரங்கள் சோதோம், கொமோரா பட்டணங்களைப்போல வேகமாக மாறிவருகின்றன. அதிகப்பட்ச விடுமுறை நாட்கள் சோம்பலை ஊக்குவிக்கின்றன. திரையரங்கம் செல்லுதல், குதிரைப்பந்தயங்களில் பங்குபெறுதல், சூதாட்டத்தில் ஈடுபடுதல், மதுபானம் அருந்துதல், களியாட்டத்தில் ஈடுபடுதல் போன்ற பரபரப்பான கேளிக்கைகள் ஒவ்வொரு இச்சையுணர்வையும் தீவிரச் செயல்பாட்டிற்குத் தூண்டுகின்றன. இந்தப் பரிச்சயமானப் போக்கு வாலிபர்களை அலைபோல அடித்துச் செல்கிறது. பொழுதுபோக்கு வதற்கென்று பொழுது போக்கை விரும்புகிறவர்கள் வெள்ளத்தனை யான பாவத் தூண்டல்களுக்கு மதகுகளைத் திறந்துவிடுகிறார்கள். கூட்டத்தோடு கும்மாளமடிக்கவும், சிந்திக்காமல் ஆட்டம் போடவும் செல் கிறார்கள்; சிற்றின்பப் பிரியர்களோடு பழகுவது, மதிமயக்குகிற தாக்கத்தை உண்டாக்குகிறது. வகை வகையான சிற்றின்பத் தோய்வில் ஈடுபடும் நிலைக்கு ஆளாகிறார்கள்; இறுதியில் பயனுள்ள வாழ்க்கை வாழ்வதற்கான ஆசையையும் திறனையும் இழந்து போகிறார்கள். அவர்களது ஆவிக்குரிய வாஞ்சைகள் உறைந்து போகின்றன ; ஆவிக்குரிய வாழ்க்கை இருண்டுவிடுகிறது. ஆத்துமாவின் உயரிய மனத்திறன்கள் அனைத்தும், ஆவிக்குரிய உலகோடு மனிதனை இணைக்கிற அனைத்தும் சீர்கெடுகின்றன.COLTam 54.2
சிலர் தங்கள் மதியீனத்தை உணர்ந்து மனந்திரும்புவது உண்மை தான். தேவன் அவர்களை மன்னிக்கலாம். ஆனால் தங்கள் சொந்த ஆத்துமாக்களைப் புண்படுத்தி, ஆயுட்கால பாதிப்பை தங்களுக்கு ஏற்படுத்திவிட்டார்கள். எது சரி, எது தவறு என்பதைப் பகுத்தறியும் படி எப்போதும் கூராகவும், விழிப்போடும் பாதுகாக்க வேண்டிய பகுத்திற வாற்றல் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டது. பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டும் குரலை விரைவாகப் புரிந்து கொள்ளவும் அல்லது சாத்தானுடைய உபாய தந்திரங்களைப் பகுத்தறியவும் முடியாது. ஆபத்து நாளில் பெரும்பாலும் சோதனையில் விழுந்து, தேவனை விட்டு விலகிச்செல்ல நடத்தப்படுகிறார்கள். சிற்றின்பப் பிரியர்களாக வாழ்ந்ததின் முடிவானது, இந்த உலகிலும், இனிவரும் உலகிலும் அழிவுக்கேதுவாகிறது.COLTam 55.1
மனித ஆத்துமாவில் வாழ்வா சாவா விளையாட்டை நடத்த கவலைகள், ஐசுவரியம், சிற்றின்பங்கள் போன்ற அனைத்தையும் சாத்தான் பயன்படுத்துகிறான். உலகத்திலும் உலகத்திலுள்ளவை களிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்” என்று எச்சரிப்பு கொடுக்கப்பட்டுள் ளது. 1யோவான் 2:15,16. திறந்த புத்தகம் போல மனிதரின் இதயங்களை வாசிக்கிறவர், “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டி யினாலும் வெறியினாலும் லவுகீகக் கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். லூக்கா 21:34. பரிசுத்த ஆவியானவர் துணையோடு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார்: ‘ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். 1தீமோத்தேயு 6:9,10.COLTam 55.2