4 - களைகள்
“வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோக ராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள்களைகளை விதைத்துவிட்டுப் போனான். பயிரானது வளர்ந்து கதிர்விட்ட போது,களைகளும் காணப்பட்டது.” மத்தேயு 13:24-26.COLTam 70.1
‘நிலம் உலகம்’ என்று கிறிஸ்து சொன்னார்; ஆனால் இது உலகத்திலுள்ள கிறிஸ்துவின் சபையைக் குறிக்கிறது என்று புரிந்து கொள்ளவேண்டும். தேவனுடைய ராஜ்யத்திற்கடுத்த விஷயங்களையும், மனிதருக்காக அவர் செய்துவருகிற இரட்சிப்பின் ஊழியத்தையும் இந்த உவமை சுட்டிக்காட்டுகிறது. சபையின் மூலமாக இந்த ஊழியம் நிறைவேற்றப்படுகிறது. உலகம் முழுவதிற்கும் பரிசுத்த ஆவி அனுப்பப்பட்டுள்ளது; எங்குமுள்ள மனிதரின் இதயங்களின் மேல் அசைவாடுகிறது; இருப்பினும், தேவனுடைய களஞ்சியத்தில் சேர்க்கப்படும்படி நாம் வளருவதும், முதிர்ச்சியடையவதும் சபையில் தான்.COLTam 70.2
“நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர் ;களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்.” மத்தேயு 13:37-38. சத்தியமாகியக தேவ வார்த்தையால் பிறந்தவர்களை நல்ல விதை சுட்டிக்காட்டுகிறது. தீமையினாலும் பொய்கொள்கைகளினாலும் உருவானவர்களை அல்லது அவற் றைப் பெற்றிருப்பவர்களைகளை சுட்டிக்காட்டுகிறது. அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு.” தேவனோ அவருடைய தூதர்களோகளையை வளரச்செய்கிற விதையை ஒருபோதும் விதைப் பதில்லை. தேவனுக்கும் மனிதனுக்கும் சத்துருவான சாத்தானே எப்போதும்களைகளை விதைக்கிறான்.COLTam 70.3
கிழக்கத்திய நாடுகளில், எதிரியைப்பழிவாக நினைப்பவர்கள், சில சமயங்களில், அவன் விதைகளை விதைத்துவிட்டுப் போனதும் விஷக்களைகளின் விதைகளை விதைத்துவிடுவார்கள்; அவை வளரும் போது கிட்டத்தட்ட கோதுமை பயிர்போலவே இருக்கும். அவை கோதுமையோடு வளர்ந்து, அதை நலியச்செய்து, நிலத்தின் சொந்தக் காரனுக்கு கஷ்டத்தையும் நஷ்டத்தையும் ஏற்படுத்தும். அதுபோல சாத்தானும், கிறிஸ்துவின் மேலான பகையால், ராஜ்யத்தின் நல்ல விதையோடு சேர்த்து தன்னுடைய தீய விதைகளைத் தூவுகிறான். அதற்கேற்ற தீமையை அது ஏற்படுத்தும்போது, தேவகுமாரன் அதைச் செய்ததாகக் காரணங்காட்டுகிறான். கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லியும் அவருடைய குணத்தைப் பெற்றிராதவர்களை சபைக்குள் கொண்டுவருகிற சத்துரு, தேவ நாமம் கனவீனப்படவும், இரட்சிப்பின் ஊழியம் திரித்துக்காட்டப் படவும், ஆத்துமாக்கள் ஆபத்தில் சிக்கவும் செய்கிறான்.COLTam 71.1
சபையில் மெய் விசுவாசிகளுடன் பொய் விசுவாசிகளும் கலந்திருப்பதைக் காணும்போது கிறிஸ்துவின் ஊழியர்கள் துக்க மடைகின்றனர். சபையைச் சுத்திகரிக்க ஏதாவது செய்ய வேண்டுமென துடிக்கின்றனர். வீட்டெஜமானுடைய வேலைக் காரர்போலகளைகளைப் பிடுங்கிப்போட ஆயத்த மாயிருக்கின் றனர்; ஆனால் கிறிஸ்து அவர்களிடம்,களைகளைப் பிடுங்கும் போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்பு மட்டும் வளரவிடுங்கள் என்று சொல்கிறார். மத்தேயு 13:29.COLTam 71.2
வெளிப்படையாக பாவத்தில் நிலைத்திருப்பவர்களை சபை யிலிருந்து நீக்க வேண்டுமென கிறிஸ்து தெளிவாகச் சொன்னார்; ஆனாலும், குணத்தையும் நோக்கத்தையும் நியாயந்தீர்க்கிற வேலையை நமக்கு வழங்கவில்லை. நம்முடைய சுபாவத்தை நன்கு அறிந்தவர் அவர்; அதனால் தான் இந்த வேலையை நம்மிடம் ஒப் படைக்கவில்லை. போலிக் கிறிஸ்தவர்களென நாம் கருதுப்பவர்களை சபையிலிருந்து நீக்கிவிட நாம் முயன்றால், தவறுகள்தாம் விளையும் என்பது நிச்சயம். கிறிஸ்து தம்மிடம் இழுக்க முற்படும் நபர்களை பெரும்பாலும் நாம் பயனற்றவர்களாகக் கருதுகிறோம். தீர் மானிப்பதில் குறையுள்ள நம் அறிவின்படி அந்த ஆத்துமாக்களைக் கையாள நம்மை அனுமதித்தால், அவர்களுக்கான கடைசி ஒரே நம் பிக்கையைக் கெடுப்பதாகக் கூட அது அமையலாம். தங்களை கிறிஸ்தவர்களென எண்ணிக்கொண்டிருக்கும் பலர் இறுதியில் குறைவுள்ளவர்களாகக் காணப்படுவார்கள். அக்கம்பக்கத்தாரால் பரலோகத்திற்குச் செல்ல வாய்ப்பில்லாதவர் களாக் கருதப்பட்ட அநேகர் அங்கிருப்பார்கள். மனிதன் தோற்றத்தைப் பார்த்து நியாயந்தீர்க்கிறான்; ஆனால், தேவன் இதயத்தைப் பார்த்து நியாயந்தீர்க் கிறார். அறுவடை வரைக்கும்களைகளும் கோதுமையும் சேர்ந்தே வளரவேண்டும்; அறுவ டைதான் தவணையின் காலத்தின் முடிவாகும்.COLTam 71.3
அற்புதமான நீடிய பொறுமை, கனிவான அன்பு குறித்த இன் னொரு பாடமும் இரட்சகரின் வார்த்தைகளில் காணப்படுகின்றன.களை களின் வேர்கள் நல்ல பயிர்களின் வேர்களோடு பின்னிப்பிணைந்திருக்கும்; அதுபோல சபையிலுள்ளகள்ளச் சகோதரர்கள் உண்மையான சீடர்களோடு நெருங்கிப்பழகி யிருப்பார்கள். இந்தப் போலி விசுவாசிகளின் மெய்யான குணம் முமுழதுமாக வெளிப் படாமல் இருக்கும். சபையிலிருந்து அவர்களை நீக்குவது, உண்மையாகவே நிலைத்திருந்திருக்க வாய்ப்புள்ளவர்களை தடுமாறச் செய்யக்கூடும்.COLTam 72.1
தேவன் மனிதர்களையும், தேவதூதர்களையும் எவ்வாறு கையாளு கிறார் என்பது இந்த உவமையின் போதனையில் எடுத்துக்காட்டப்படுகிறது. சாத்தான் வஞ்சகன். அவன் பரலோகத்தில் பாவஞ்செய்தபோது, உண்மையான தூதர்களால் கூட அவனுடைய குணத்தை முற்றிலும் புரிந்துகொள்ள இயலவில்லை. அதனால் தான், சாத்தானை தேவன் உடனே அழிக்கவில்லை. அழித்திருந்தால், தேவனுடைய நீதியையும் அன்பையும் பரிசுத்த தூதர்கள் உணர்ந்திருக்கமாட்டார்கள். தேவனுடைய நற்குணத்தைச் சந்தேகிப்பது தீயவிதையாக உருவாகி, பாவசாபமாகிய கசப்பான கனியைக் கொடுக்கும். அதனால் தான், தீமையின் காரணனான அவனுடைய குணம் முற்றிலும் உருவாகும் படி, அவனை அழிக்காமல் விட்டார். சத்துருவின் கிரியை ஆண்டாண்டு காலமாக தேவன் வியாகுலப்பட்டுவந்திருக்கிறார், சத்துரு திரித்துக்காட்டுகிற விஷயங்களால் எவரும் வஞ்சிக்கப்படாதபடிக்கு கல்வாரி எனும் ஈடுஇணையற்ற பரிசைக் கொடுத்திருக்கிறார்; ஏனெனில், நல்ல பயிர்களின் வேர்களுக்கு ஊறு விளைவிக்காமல்களைகளை வேரோடு பிடுங்கமுடியாது. வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவர், சாத்தானை அணுகுவது போல நம் சகமனிதர்களிடம் நாமும் நீடிய பொறுமை யோடு நடந்து கொள்ள முடியாதா?COLTam 72.2
திருச்சபையில் தகுதியற்ற அங்கத்தினர்கள் இருப்பதால் கிறிஸ்தவத்தின் சத்தியத்தைச் சந்தேகிக்க உலகத்திற்கு எந்த உரிமையும் இல்லை ; இந்தக்கள்ளச் சகோதரர்கள் நிமித்தம் கிறிஸ்தவர்களும் அதைரியமடைய வேண்டியதும் இல்லை. ஆதி சபையில் என்ன நடந்தது? அனனியாவும், சப்பீராளும் சீடர்களோடு இணைந்தார்கள். மாயவித்தைக்காரனாகிய சீமோன் ஞானஸ்நானம் பெற்றான். பவுலைவிட்டுப் பிரிந்த தேமா, ஒரு விசுவாசியாகவே எண்ணப்பட் டான் . யூதாஸ்காரியோத்து அப்போஸ்தலர்களில் ஒருவனாகக் கருதப்பட்டிருந்தான். ஒரு ஆத்துமாவைக் கூட இழக்க மீட்பர் விரும்பு கிறதில்லை; மனித சுபாவம் கேடானது என்பதால் அவர் எவ்வளவு நீடிய பொறுமையுள்ளவராக இருக்கிறார் என்பதைக் காட்டவே யூதாசு டனான அவருடைய அனுபவம் பதிவு செய்யப்பட் டுள்ளது; அவரைப்போலவே நாமும் அதைச் சகித்துக்கொள்ள அவர் கட்டளையிடுகிறார். நாட்கிளின் முடிவு மட்டும்கள்ளச் சகோதரர்களும் சபையில் இருப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.COLTam 73.1
கிறிஸ்து எச்சரித்திருந்தாலும் கூடகளைகளைப் பிடுங்கவே மனிதர்கள் முயன்றிருக்கிறார்கள். துன்மார்க்கரென கருதினவர்களைத் தண்டிக்க சபையானது அரசாங்கத்தை நாடியிருக்கிறது. ஏற்கெனவே இருந்து வரும் கோட்பாடுகளை மீறினவர்களை சிறையிலடைத்து, சித்திரவதை செய்து, கொன்றிருக்கின்றனர். கிறிஸ்துவின் அனுமதியோடு செயல்படுவதாகச் சொல்லிக்கொண்டவர்களுடைய தூண்டுதலின் பேரில் இவ்வாறு செய்தார்கள். ஆனால் இத்தகைய செயல்களைத் தூண்டி விடுவது சாத்தானின் ஆவியே தவிர கிறிஸ்துவின் ஆவியல்ல . உலகத்தைத் தன் ஆளுகைக்குள் கொண்டுவர சாத்தான் கைக்கொள்ளும் முறை இது. சமய பேதமுள்ளவர்களெனக் கருதப்படுகிறவர்களை இவ்வாறு நடத்துவதால், சபை யானது தேவனைத் திரித்துக்காட்டுகிறது.COLTam 73.2
பிறரைக் குற்றப்படுத்தவும், நியாயந்தீர்க்கவும் வேண்டாம், தாழ்மை யோடும் சுயத்தை நம்பாமலும் இருக்க வேண்டும்; இதைத்தான் கிறிஸ்து சொன்ன உவமை போதிக்கிறது. வயலில் விதைக்கப்படுவ தெல்லாம் நல்ல விதையல்ல . சபையில் இருப்பதால் கிறிஸ்தவர்களாகிவிட முடியாது.COLTam 74.1
முளைகள் பச்சைப்பசேலென இருக்கும்போது,களைகள் கோதுமை பயிர்கள் போலவே இருக்கும்; ஆனால், வயல் அறுவடைக்கு ஆயத்த மாக இருக்கும் போது, மணிகள் முற்றிலும் விளைந்து, அதன் சுமை யால் தொங்கும் கோதுமை பயிருக்கும்,களைக்கும் வித்தியாசம் தெரியும். பக்திமான்கள் போல் நடிக்கும் பாவிகள், கிறிஸ்துவை உண்மையாகப் பின்பற்றுபவர்களுடன் சிலகாலம் கலந்திருப்பதால், கிறிஸ்தவத்தின் வெளித்தோற்றம் பலரை வஞ்சிக்கலாம்; ஆனால், இவ்வுலகத்தின் அறுவடையின் போது, நன்மைக்கும் தீமைக்கும் எவ்வித ஒற்றுமையும் காணப்படாது. கிறிஸ்துவுடன் சேராமல் சபையில் மட்டும் சேர்ந்த வர் யாரென்பது அப்பொழுது வெளிப்படும்.COLTam 74.2
கோதுமையுடன் சேர்ந்து வளரவும், சூரிய வெளிச்சத்தாலும் மழையாலும் கிடைக்கிற அனுகூலங்களை எல்லாம் பெறவும்களைகள் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் அறுவடையின் போது, “நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக் கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள் ” மல்கியா 3:18. பரலோகக் குடும்பத்தினருடன் வாழ யார் பாத்திரவான்கள் என்பதை கிறிஸ்துதாமே முடிவு செய்வார். ஒவ்வொரு மனுஷனையும் அவனவனுடைய வார்த்தைகளின்படியும், கிரியை களின்படியும் நியாயந்தீர்ப்பார். வெளிப்பேச்சால் ஒரு நன்மையும் கிடையாது. குணம்தான் நித்தியமுடிவைத் தீர்மானிக்கும்.COLTam 74.3
களைகள் எல்லாம் கோதுமை பயிர்களாக மாறப்போகிற காலம் வரப் போவதாக இரட்சகர் சுட்டிக்காட்டவில்லை. உலகத்தின் முடிவான அறுவடை மட்டும் கோதுமையும்களைகளும் ஒன்றாக வளருகின்றன . பிறகு,களைகள் கட்டுகளாகக் கட்டப்பட்டு அக்கினியில் போடப்படும், கோதுமையானது தேவனுடைய களஞ்சியத்தில் சேர்க்கப்படும். அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ்செய்கிற வர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக் கும்” மத்தேயு 13:43, 41-42.COLTam 74.4