Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    அன்புமிகுந்த உணர்வுகளும் பாசங்களும்

    அன்புமிகுந்த பாசங்களும், தயவுமி குந்த உணர்வுகளும், ஆவிக்குரிய வற்றை உடனடியாகப் புரிந்துகொள்ளும் ஆற்றலும் விலைமதிக்க முடியாத தாலந்துக்கள். அவற்றைப் பெற்றுள்ளாரின் பொறுப்புகளும் அதிகம். அவற்றை எல்லாம் தேவ சேவைக்காகப் பயன்படுத்தவேண்டும். ஆனால் இதில் அநேகர் தவறிவிடுகின்ற னர். இந்தத் தன்மைகளைப் பெற்றிருந்தால் போதுமென நினைத்து, பிறருக்குச் சேவை செய்யத் தவறிவிடுகின்றனர். தங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால், சூழ்நிலைகள் சாதகமாக அமைந்திருந்தால், எவ்வளவோ நன்மையைச் செய்திருப்போமென தங்களையே வஞ்சிக்கிறார்கள். தேவையில் இருப்பவனுக்கு அற்பக்காசுயும் கொடுக்க விரும்பாத, பயங்கர கஞ்சனின் கஞ்சத்தனம் அவர்களுக் குப் பிடிப்பதில்லை . அவன் சுயநலத்தோடு வாழ்வதாகவும், தன் தாலந்துகளை தவறாகப்பயன்படுத்தியதற்கு அவனே பொறுப்பாளி என்றும் நினைக்கிறார்கள். தங்களுக்கும் அந்த குறுகிய மனப் பான்மை மனிதர்களுக்குமுள்ள வேறுபாட்டை மனநிறைவோடு எண்ணிப்பார்த்து, அற்பத்தனமான மனநிலையுடைய அந்த மனிதர்களைவிட தாங்கள் எவ்வளவோ நன்றாக இருப்பதாக நினைத் க்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களையே ஏமாற்றுகிறார்கள். நல்ல தன்மைகளைப் பெற்றிருந்தும், அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது அவர்களுடைய பொறுப்பை மேலும் அதிகரிக்கிறது. பாச உணர்வுகளை அதிகமாகப் பெற்றுள்ளவர்கள், தங்கள் நண்பர்கள் மேல் மட்டுமல்ல, தங்களுடைய உதவி தேவைப்படுகிற அனை வர்மேலும் அவற்றை தாராளமாகக் காட்டுவதற்கு தேவனுக்குக் கடமைப்பட்டுள்ளார்கள். சமுதாய அனுகூலங்களும் தாலந்துகளே நமது செல்வாக்கு உட்பட்ட அனைவருக்கும் நன்மை உண்டாகும் விதத்தில் அவற்றைப் பயன்படுத்தவேண்டும். ஒரு சிலர்மேல் மட் டும் அன்பு காட்டுவது அன்பல்ல; அது தன்னலம். அது ஆத்துமாக் களின் நன்மைக்காகவோ, தேவ மகிமைக்காகவோ எந்த வகை யிலும் செயல்படமுடியாது. எஜமான் கொடுத்ததாலந்துகளை இவ் வாறு மேம்படுத்தாமல் வைத்திருப்பவர்கள், யாரை இகழ்ச்சியாக நினைக்கிறார்களோ அவர்களைவிட பெரிய குற்றவாளிகளாக இருக்கிறார்கள். அவர்களிடத்தில் நீங்கள் உங்களது எஜமானரின் சித்தத்தை அறிந்திருந்தீர்கள், ஆனால் அதின்படி செய்யவில்லை என்று சொல்லப்படும்.COLTam 356.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents