நேரம்
நம் நேரத்துக்கு சொந்தக்காரர் தேவன். ஒவ்வொரு கணப்பொழுதும் அவருடையது; அதை அவருடைய மகிமைக்கென மேம்படுத்துகிற மகத்தான கடமை நமக்குண்டு. அவர் நமக்குக் கொடுத்திருக்கும் தாலந்துகளில் நேரத்தைக் குறித்து தான் மிக அதிகமாக அவர் கணக்குக் கேட்பார்...COLTam 344.1
நேரத்தின் மதிப்பை நாம் கணக்கிடவே முடியாது. கிறிஸ்துவுக்கு ஒவ்வொரு கணப்பொழுதும் விலைமதிக்க முடியாததாக இருந்தது; நமக்கும் அப்படியே இருக்க வேண்டும். வாழ்க்கை குறுகினது ; அலட்சியம் காட்டக்கூடாது. நித்தியத்திற்கென்று ஆயத்தமாக மிகக்குறுகிய தவணையின் காலமே கொடுக்கப் பட்டுள்ளது. வீணடிப்பதற்கும், சிற்றின்பத்தில் செலவிடுவதற்கும், பாவத்தில் திளைப்பதற்கும் நமக்கு நேரமே இல்லை. மறுமை வாழ்விற்கான, அழியா வாழ்விற்கான குணத்தை இப்போதே நாம் உருவாக்கவேண்டும். நாம் விசாரிக்கப்பட்டு, நியாயந்தீர்க்கப்படும் நாளுக்கு இப்போதே ஆயத்தமாக வேண்டும்.COLTam 344.2
மனிதர்கள் வாழத்துவங்குவதற்கு முன்னரே மரணத்தை ருசி க்கத் துவங்கி விட்டார்கள்; நித்திய வாழ்வு குறித்த மெய்யான அறிவைப் பெறாதப் பட்சத்தில், உலகத்தில் ஓய்வே இல்லாமல் அவர்கள் பட்ட பிரயாசமும் பயனற்றுப்போகிறது. நேரத்தை தான் பணி செய்வதற்கான தருணமாக மதிக்கிறவன், அழிவில்லாத வாசஸ்தலத்திற்கும், வாழ்விற்கும் தன்னைத் தகுதிப்படுத்துகிறான். அவன் இந்த உலகத்தில் பிறந்தது நல்லது.COLTam 344.3
காலத்தைப் பிரயோஜனப்படுத்த அறிவுறுத்தப்படுகிறோம். வீணடிக்கப்பட்ட நேரத்தை ஒருபோதும் திரும்பப்பெற முடியாது. கடந்துபோன ஒரு கணப்பொழுது கூட திரும்பக்கிடைக்காது. இனி எஞ்சியிருக்கிற காலத்தில், தேவனுடைய மகத்தான மீட்பின் திட்டத்தில் உடன் வேலையாட்களாகப் பணியாற்றி, முடிந்த அளவிற்கு நேரத்தைப் பயனுள்ளதாக்குவதே அதை பிரஜோனப் படுத்த ஒரே வழி.COLTam 345.1
இதைச் செய்கிற ஒரு மனிதனுக்குள் குணமாற்றம் உண்டாகிறது. அவன் தேவனுடைய குமாரனாக, ராஜகுடும்பத்தின் அங்கத்தினனாக, பரலோக ராஜாவின் பிள்ளையாக மாறுகிறான். தேவதூதர்களின் நண்பனாகும் தகுதியைப் பெறுகிறான்.COLTam 345.2
நமது சக மனிதரின் இரட்சிப்பிற்காக நாம் பணியாற்ற வேண்டிய நேரம் இது. கிறிஸ்துவின் ஊழியப்பணிக்கு பணம் கொடுத்தாலே போதும், வேறெதுவும் செய்யவேண்டாமென சிலர் நினைக்கிறார்கள்; தனிப்பட்ட விதத்தில் அவருக்காகப் பணி செய்யவேண்டிய பொன்னான நேரத்தை பயன்படுத்தாமல் விடுகின்றனர். தேவனுக்காக சுறுசுறுப்புடன் வேலை செய்ய வேண்டியது நல்ல உடல் நலமும் உடல் பெலமும் பெற்றுள்ள அனைவரின் கடமையாக, சிலாக்கியமாக இருக்கிறது. கிறிஸ்துவுக்காக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த அனைவரும் பாடுபடவேண்டும். பண நன்கொடை இதற்கு ஈடாகாது.COLTam 345.3
ஒவ்வொரு கணப்பொழுதும் நித்திய விளைவுகளை உள்ளடக் கியதுதான். சொல்லப்படும் கண நேரத்தில் செயல்படுகிற, எந்நேரமும் சேவைக்கு ஆயத்தமாயிருக்கவேண்டிய மனிதர்கள் நாம். தேவையுள்ள ஓர் ஆத்துமாவுக்கு ஜீவ வார்த்தையைப் போதிக்க இப்போது நமக்குக் கிடைக்கிற வாய்ப்பு இனி கிடைக்காமலேயே போகலாம். அந்த ஆத்துமாவிடம் தேவன், 2. உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும் என்று சொல்லலாம் (லூக்கா 12:20); நம்முடைய அலட்சியத்தால் அவர் ஆயத்தப்படாமல் இருக்கலாம். மகா நியாயத்தீர்ப்பின் நாளில், தேவனுக்கு நாம் எவ்வாறு கணக்குக் கொடுக்கமுடியும்?COLTam 345.4
நித்திய நலன்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களோடு ஒப்பிடும் போது, இவ்வுலகிற்குரிய தற்காலிக விஷயங்கள் வெறும் அணுதான்; எப்போதுமே பதற்றமும் கவலையும் நிறைந்து காணப்படும்; எனவே அவற்றில் மூழ்கியிருப்பதைவிட மேலானது நம் வாழ்க்கை. ஆனாலும் வாழ்க்கையின் தற்காலிக விஷயங்களிலும்கூட தேவனுக்காக நாம் சேவை செய்ய தேவன் நம்மை அழைத்திருக்கிறார். இந்தப் பணியை விழிப்போடு செய்வதும், பக்தியான வாழ்க்கைக்கு தியானம் அவசியமாயிருப் பதுபோன்றே அவசியமானது. இந்த ஊழியத்திற்கு கடுமையான உழைப்பு தேவை. சோம்பேறித்தனத்தை வேதாகமம் ஆதரிப்பதே இல்லை . நமது உலகத்தை வாதிக்கிற மிகப்பெரிய சாபமிது. மெய்யான மனமாற்றத்தைப் பெற்ற ஒவ்வோர் ஆணும் பெண்ணும் விழிப்புடன் பணியாற்று கிறவராக இருக்கவேண்டும்.COLTam 346.1
நேரத்தை மிகச்சரியாகப் பயன்படுத்துவதைச் சார்ந்துதான் மனப்பண்பாட்டையும் அறிவையும் பெறமுடியும். வறுமையும், ஏழ்மையான பிறப்பும் அல்லது சாதகமற்ற சூழ்நிலைகளும் அறிவுத்திறனை வளர்ப்பதைத் தடுக்கவேண்டிய அவசியமில்லை. அங்கு கணப்பொழுது, இங்கு கணப்பொழுது என வீண்பேச்சில் நேரத்தை வீணடிப்பது, காலைப்பொழுதில் படுக்கையில் நேரத்தைக் வீணாக்குவது, இரயில் - பேருந்துகளில் பயணம் செய்து நேரத்தைக் கழிப்பது அல்லது அந்நிலையங்களில் காத்திருப்பது, உணவுக்காகக் காத்திருக்கிற நேரம், சொன்ன நேரத்திற்கு வராமல் மெத்தனம் காட்டுகிற ஒருவருக்காக்க் காத்திருப்பது போன்ற சமயங்களில் ஏதாவது புத்தகத்தை வைத்திருந்தால், கிடைக்கிற அந்தக் கொஞ்சநேரத்தையும் படிப்பதிலும், வாசிப்பதிலும் அல்லது கவனமாக சிந்திப் பதிலும் செலவிட்டால், எதைத்தான் சாதிக்க முடியாது! உறுதியான நோக்கமும், கடினமான உழைப்பும், நேரத்தை கவனமாகச் செலவிடுவதும் அறிவையும் மன ஒழுங்கையும் மனிதர்கள் பெற்றுக்கொள்ள திறன் கொடுக்கும்; செல்வாக்கும் பயனுமிக்க எந்தப் பதவிக்கும் அவர்களைத் தகுதிப்படுத்தும்.COLTam 346.2
ஒழுக்கமான, பூரணமான, செயல்திறன்மிக்க பழக்கங்களைப் பெறுவது ஒவ்வொரு கிறிஸ்தவனின் கடமையாகும். எந்த வகை வேலையாக இருந்தாலும், தாறுமாறாகவும், சோம்பலாகவும் செய்தால் அதற்கு சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. சதா வேலையும் கையுமாக இருந்தும், வேலையைச் செய்து முடிக்கா விட்டால், சிந்தையும் மனதும் அதில் ஈடுபடவில்லையென அர்த்தம். சோம்பலாக, நஷ்டத்திற்கு வேலை செய்கிறவர், இந்தத் தவறுகளை திருத்தவேண்டிய அவசியத்தை உணர வேண்டும். சி றந்த முடிவுகளைப் பெறுவதற்கு நேரத்தை பயனுள்ளதாகச் செலவிடத் திட்டமிட மெனக்கெடவேண்டும். மற்றவர்கள் பத்து மணி நேரத்தில் செய்கிற வேலையை சிலர் ஐந்து மணி நேரத்தில் முடிப்பதற்கு சாமர்த்தியமும் செயல் பாணியும் உதவுகின்றன. சிலர் எப்போதும் வீட்டு வேலையைச் செய்து கொண்டே இருப்பார்கள்; வேலை அதிகமாக இருப்பதால் அல்ல, நேரத்தை மிச்சப்படுத்த அவர்கள் திட்டமிடாததே அதற்கு காரணம். சோம்பலாக, நேரத்தைக் கடத்திக்கொண்டு இருப்பதால், கொஞ்சவேலையையும் அதிகமாக்குகிறார்கள். எரிச்சலூட்டுகிற, நேரங்கடத்துகிற இந்தப் பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட விரும்புகிறவர்கள் நிச்சயம் வெற்றி பெற முடியும். குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்து வேலை செய்ய வேண்டும். கொடுக்கப்பட்ட பணியைச் செய்வதற்கு ஆகிற நேத்தைத் திட்டமிடவேண்டும். பிறகு, கொடுக்கப் பட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்க அனைத்து முயற்சிகளும் செய்யவேண்டும். மன உறுதியுடன் செயல்படுவது கைகளைத் திடப்படுத்தும்.COLTam 346.3
ஒழுக்கமுள்ளவர்களாக மாறி, சீர்திருந்தவேண்டும் என்கிற உறுதி இல்லாதவர்கள், ஒரே விதமான தவறான நடவடிக்கை யில் தான் ஈடுபடுகிறார்கள்; அல்லது தங்களுடைய ஆற்றலைப் பண்படுத்தினால் மிகச்சிறந்த சேவையாற்றுகிற திறனைப் பெறமுடியும். அப்போது எங்கும், எப்போதும் தங்களுக்கு மவுசு இருப்பதைக் கண்டுகொள்வார்கள். தங்களுடைய தகுதிக்கு ஏற்றபடி மக்களுடைய பாராட்டைப் பெறுவார்கள்.COLTam 347.1
தங்கள் குடும்ப்பாரங்களைச் சுமந்து, அதன்மூலம் தங்கள் தாய் தகப்பன்மேல் அன்புடன் அக்கறை காட்டவேண்டிய பல சிறுவர்களும் வாலிபர்களும் நேரத்தை வீணடிக்கிறார்கள். யாராவது ஒருவர் சுமக்கவேண்டியிருக்கும் பல பொறுப்புகளை வாலிபர்கள் பெலமிக்க தங்கள் தோள்களில் சுமக்கலாம்.COLTam 347.2
கிறிஸ்துவின் ஜீவிய நாட்களில் தம் குழந்தப்பரும் முதலே அவர் சுருசுருப்புடன் வேலை செய்து வந்தார். தம்முடைய சந்தோஷத்திற்காக அவர் வாழவில்லை. அவர் நித்திய தேவனுடையCOLTam 347.3
குமாரனாக இருந்தும், தம் அப்பாவான யோசேப்புடன் சேர்ந்து தச்சுவேலையைச் செய்தார். அவருடைய தொழில் குறிப்பிடும்படியாக இருந்தது. குணத்தை மேம்படுத்துபவராக அவர் இந்த உலகத்திற்கு வந்திருந்தார்; அவர் செய்த வேலைகள் அனைத்தும் கச்சிதமாக இருந்தன . தம் தெய்வீக வல்லமை யால் குணங்களை மாற்றி, எவ்வளவு பூரண நிலைக்குக் கொண்டு வந்தாரோ, அதே பூரணம் அவருடைய உலகப்பணிகளிலும் காணப்பட்ட . அவரே நம் முன்மாதிரி .COLTam 348.1
நேரத்திற்கு முக்கியத்துவமளித்து, அதை சரியாகப் பயன் படுத்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். தேவனைக் கனப்படுத்துகிற, மனிதர்களுக்கு ஆசீர் வாதகமாக விளங்குகிற ஏதாவது பணியைச் செய்வதால் நிச்சயம் பலனுண்டு என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். இளமைப் பருவத்தில் தானே தேவனுடைய ஊழியப்பணியாளர்களாக அவர்கள் விளங்க முடியும்.COLTam 348.2
பெற்றோர் தங்கள் பிள்ளைகளை எதுவுமே செய்ய அனுமதிக் காமல் இருப்பதைவிட அவர்கள் செய்யும் மிகப்பெரிய பாவம் எதுவுமல்ல . சோம்பேறித்தனத்தை நேசித்து, குறிக்கோளற்ற பயனற்ற ஆண்களாகவும் பெண்களாகவும் வளர சீக்கிரமே பிள்ளைகள் பழகிவிடுகிறார்கள். உழைத்துச் சம்பாதிக்கும் பருவம் வந்ததும் ஏதாவது வேலையில் சேர்ந்து, சோம்பலோடும் சலிப்போடும் வேலை செய்கிறார்கள். ஆனாலும் தாங்கள் உண்மையோடு வேலை செய்த்து போல தங்களுக்கு சம்பளம் வழங்கப் பட எதிர்பார்க்கிறார்கள். இந்த வகையான பணியாளர்களுக்கும் உண்மையான உக்கிராணக்காரர்களாக இருக்க வேண்டுமென உணர்கிறவர்களுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.COLTam 348.3
உலகப்பிரகாரமான வேலையில் சோம்பலும் அலட்சியமும் காணப்பட்டால், அது ஆவிக்குரிய வாழ்க்கையிலும் நுழையும்; தேவனுக்கென பயனுள்ள வேலை எதையும் செய்யத் தகுதியற்ற வராக ஆக்கிவிடும். கருத்தோடு வேலை செய்து உலகத்திற்கு ஆசீர்வாதமாக இருந்திருக்க வேண்டிய அநேகர், சோம்பேறித் தனத்தால் சீரழிவை உண்டு பண்ணுகிறார்கள். எந்த வேலையும் உறுதியான நோக்கமும் இல்லாமல், ஆயிரக்கணக்கான பாவச்சே ராதனைகளுக்கு வழி திறக்கிறார்கள். தீயநண்பர்கள் மற்றும் மோசமான பழக்கவக்கங்களால் மனதும் ஆத்துமாவும் சீர்கெடு கின்றன; அது இம்மை வாழ்வுக்கும் மறுமை வாழ்வுக்கும் கேடாக அமைகிறது.COLTam 348.4
நாம் செய்கிற வேலை எந்தத் துறையைச் சேர்ந்ததானாலும், “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலா யிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.’” எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.” செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்” என்று தேவ வசனம் நமக்குப் போதிக்கிறது. ரோமர் 12:11; கொலோ 3:24; பிர 9:10.COLTam 349.1