உடல் பெலம்
முழுஇருதயத்தோடும், முழுமனதோடும், முழு ஆத்துமாவோ டும் மட்டுமல்ல, முழுப் பலத்தோடும் தேவனில் அன்புகூரவேண்டும். உடற்திறன்களை முற்றிலுமாக, அறிவுப்பூர்வமாகப் பயன் படுத்துவதும் இதில் அடங்கும்...COLTam 351.2
ஆவிக்குரிய பணிகளில் மட்டுமல்ல, இவ்வுலக வேலை களிலும் கிறிஸ்து உண்மையுள்ள ஊழியக்காரனாக இருந்தார். செய்கிற பணி எதுவானாலும் அதில் தன் பிதாவின் சித்தத்தைச் செய்ய வேண்டுமென்கிற உறுதி அவரிடம் காணப்பட்டது. அநேகர் நினைப்பதையும் விட அதிகமாக பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளும் மிக நெருக்கமாக இணைக்கப் பட்டுள்ளன; கிறிஸ்துவின் நேரடி கண்காணிப்பில் அவை உள்ளன.COLTam 351.3
பூமியின் முதல் ஆசரிப்புக்கூடார ஒழுங்கமைப்பை கிறிஸ் துவே திட்டமிட்டிருந்தார். சாலொமோன் கட்டிய ஆலயக்கட்டுமான விஷயத்தில் ஒவ்வொரு நுணுக்கத்தையும் அவரே சொல்லியிருந்தார். இப்பூமியில் வாழ்ந்தபோது நாசரேத் ஊரிலே ஒரு தச்சனாக வேலை செய்த கிறிஸ்துவே, தமது நாமம் கனப்படுத்தப்படுத்தப் படவிருந்த பரிசுத்த ஆலயத்தின் கட்டுமான வரைபடத்தைப் போட்ட கட்டடக்கலைஞனாக இருந்தார்.COLTam 351.4
ஆசரிப்புக்கூடார கட்டுமானப்பணியாளர்கள் திறமையாக வும் கலை நயமாகவும் வேலை செய்ய கிறிஸ்துவே ஞானத்தைக் கொடுத்தார். “நான் யூதாவின் கோத்திரத்தில் ஊருடைய மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர் சொல்லி அழைத்து, விநோதமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிற தற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலை செய்கிறதற்கும், இரத்தினங்களை முத்திரைவெட்டாக வெட்டிப் பதிக்கிற தற்கும், மரத்தில் சித்திரவேலைகளைச் செய்கிறதற்கும், மற்றும் சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும் வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவ ஆவியினால் நிரப்பினேன். மேலும், தான் கோத்திரத்திலுள்ள அகிராமாகின் குமாரனாகிய அகோலியாபையும் அவனோடே துணையாகக் கூட்டினதுமன்றி, ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன் ; நான் உனக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் செய்வார்கள்” என்று சொன்னார். யாத் 31:2-6.COLTam 351.5
தாங்கள் பெற்றிருக்கிற அனைத்தையும் கொடுத்தவர் தேவன் தாம் என்று தம்முடைய ஊழியர்கள் தம்மை நோக்கிப் பார்க்க தேவன் விரும்புகிறார். சரியான கண்டுபிடிப்புகள், முன்னெடுப் புகள் அனைத்திற்கும் ஆலோசனையில் ஆச்சரியமானவரும் செயலில் மகத்துவமானவருமான தேவனே ஆதாரமாக இருப்பார். ஒரு மருத்துவனின் கைதேர்ந்த வைத்தியமும், நரம்பு - தசைகளைக் கையாளுகிற ஆற்றலும், உடலின் மென்மையான உறுப்புகள் குறித்த அறிவும் அவன் வியாதியிலுள்ளோருக்கு உதவும்படி தேவன் தம் வல்லமையால் அருளிய ஞானமாக இருக்கும். சுத்தியலைக் கையாள தச்சனுக்கு திறமையும், பட்டறைக்கல்லைச் செய்ய கொல்லனுக்கு பெலமும் தேவனிட மிருந்து வருகின்றன. மனிதர்களுக்கு அவர் தாலந்துகளைக் கொடுக்கிறார்; தம்மை நோக்கிப் பார்த்து அவர்கள் ஆலோசனை பெற விரும்புகிறார். நாம் எதைச் செய்தாலும், எந்தத் துறையில் பணியாற்றினாலும், அந்தப் பணியைச் செம்மையாகச் செய்யும் படி அவர் நம் சிந்தைகளைக் கட்டுப்படுத்த விரும்புகிறார்.COLTam 352.1
மார்க்கத்தையும் செய்கிற பணியையும் பிரித்துப் பார்க்க முடியாது; இரண்டும் ஒன்றுதான். நாம் செய்கிற, சொல்கின்ற ஒவ்வொன்றிலும் வேதாகம மார்க்கம் பின்னிப்பிணைந்து காணப்படவேண்டும். நாம் செய்து முடிக்கிற இம்மைக்குரிய பணிகளிலும் ஆவிக்குரிய பணிகளிலும் மனிதர்களும் பரலோக மும் இணைந்து பணியாற்ற வேண்டும். இயந்தரபணிகள் மற்றும் விவசாயப் பணிகள், வர்த்தக முயற்சிகள் மற்றும் விஞ்ஞான முயற்சிகள் என அனைத்து மனித முயற்சிகளிலும் இந்த இணைப்பு காணப்படவேண்டும். கிறிஸ்தவப் பணிகள் சம்பந்தப்பட்ட அனைத்திலும் இந்த ஒத்துழைப்பு இருக்க வேண்டும்.COLTam 352.2
இந்த ஒத்துழைப்பைச் சாத்தியமாக்குகிற நியதிகளை தேவன் அறிவித்துள்ளார். அவரோடு இணைந்து பணியாற்றுகிற அனை வருக்கும் அவரை மகிமைப்படுத்துவதே பிரதான நோக்கமாக இருக்கவேண்டும். நாம் செய்கிற எதுவாக இருந்தாலும் தேவன் மேலான அன்பிலும், அவருடைய சித்தத்திற்கு உட்பட்டும் செய்யவேண்டும்.COLTam 353.1
தேவனை ஆராதிக்கும் போது தேவசித்தத்தைச் செய்வது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு ஒரு கட்டிடத்தைக் கட்டும் போதும் அவருடைய சித்தப்படி செய்வது முக்கியம். ஊழியர்கள் தங்கள் குணக்கட்டுமானத்தில் சரியான நியதிகளைப் பின்பற்றி யிருந்தால், அப்போது ஒவ்வொரு கட்டுமானப் பணியிலும் அவர்கள் கிருபையிலும் அறிவிலும் வளர்வார்கள்.COLTam 353.2
சுயத்தை ஜீவனுள்ள, தகனபலியாக பலிபீடத்தில் அர்ப்பணிக் காத பட்சத்தில், எவ்வளவு மகத்தான தாலந்துகளையும் அல்லது அற்புதமான சேவைகளையும் தேவன் ஏற்றுக் கொள்ள மாட்டார். வேரானது பரிசுத்தமாக இருக்கவேண்டும்; இல்லையெனில் தேவனுக்கேற்ற கனிகள் காணப்படாது.COLTam 353.3
தானியேலையும் யோசேப்பையும் கர்த்தர் விவேகமிக்க மேலாளர்களாக உருவாக்கியிருந்தார். அவர்கள் தங்களுடைய மனப்போக்கின்படி அல்ல, தேவனைப் பிரியப்படுத்தும்படி வாழப் பிரயாசப்பட்டதால், அவர்கள் மூலம் அவர் செயல்பட முடிந்தது.COLTam 353.4
தானியேலின் சம்பவத்தில் நமக்கு ஒரு பாடம் இருக்கிறது. தொழில் செய்பவர் கூர்மதியும் செயல் நுட்பமும் மிகுந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை என்கிற உண்மை வெளிப்படுகிறது. ஒவ்வோர் அடியிலும் தேவன் அவரை வழி நடத்தினால் போதும். தானியேல் பாபிலோன் சாம்ராஜ்யத்தின் பிரதம மந்திரி யாக இருந்தபோது, பரலோக ஏவுதல் எனும் வெளிச்சத்தைப் பெற்றுவந்த தீர்க்கதரிசியாக விளங்கினார். உலகப்பற்றும், இலட்சி யமும் கொண்ட அரசியல்வாதிகள் புல்லைப்போலவும், உதிர்கிற புல்லின் பூவைப்போலவும் இருக்கிறார்களென தேவவார்த்தை சொல்கிறது. ஆனாலும், அறிவுத்திறன் வாய்ந்தவர்களும், பல் வேறு வகையான பணிகளைச் செய்ய தகுதியுடையவர்களும் தம் சேவையில் ஈடுபட தேவன் விரும்புகிறார். சத்தியத்தின் நியதிகளின் படி சகல தொழில் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிற தொழில் முனை வோர் இன்று தேவை. ஆழமான ஆராய்ச்சி மற்றும் பயிற்சியின் மூலம் அவர்கள் தங்கள் தாலந்துகளை விருத்தி செய்யவேண்டும். எந்த வகையான வேலையாக இருந்தாலும், ஞானமும் திறமையும் பெறுவதற்கு தங்கள் வாய்ப்புகளை யார் மேம்படுத்த முடியுமென் றால், நம் உலகில் தேவனுடைய ராஜ்யத்தைக் கட்டுவதற்கு தங்கள் திறமைகளைப் பயன்படுத்துபவர்கள்தாம். தானியேலுடைய பணி நடவடிக்கைகளை அலசி, ஆராய்ந்து பார்த்தும் அதில் ஒரு குற் றமோ தவறோ கண்டுபிடிக்க முடியவில்லையென வாசிக்கிறோம். தொழில் செய்கிற ஒவ்வொருவரும் எப்படி இருக்க வேண்டுமென்ப தற்கு அவரே முன்மாதிரி. தேவ சேவையில் மூளை பெலத்தையும் எலும்பு பெலத்தையும் தசை பெலத்தையும், இருதயத்தையும் வாழ்க்கையையும் தேவனிடம் அர்ப்பணிக்கிறவர் என்ன சாதிக்க லாம் என்பதை அவருடைய வரலாறு காட்டுகிறது.COLTam 353.5