Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கடைசி நாட்களில்

    இவ்வுலக வாழ்க்கையின் இறுதி காட்சிகளை, அந்த ஐசுவரிய வானுடைய முடிவு சித்தரிக்கிறது. ஐசுவரியவான் தன்னை ஆபிரகா மின்குமாரனென்று சொல்லிக்கொண்டான்; ஆனால் கடக்க முடியாத பெரும்பிளப்பு ஒன்று அவனுக்கும் ஆபிரகாமுக்கும் இடையே உண்டாக்கப்பட்டது. அவன் வளர்த்துக்கொண்ட தவறான குணம் தான் அந்தப் பிளப்பு . ஆபிரகாம் தேவ்வார்த்தையை விசுவாசித்து, கீழ்ப்படிந்து, தேவனைச் சேவித்தான். ஆனால் அந்த ஐசுவரியவான் தேவனையோ, பாடுகளுடைய மனுகுலத்தின் தேவைகளையோ சிந்திக்கவில்லை. அவனுக்கும் ஆபிரகாமிற்குமிடையே காணப் பட்ட பெரும்பிளவு கீழ்ப்படியாமையால் உண்டானதாகும். இன்று அநேகர் இதே போக்கில் தான் போய்க் கொண்டிருக்கின்றனர். சபையில் அங்கத்தினர்களாக இருந்தும் மனமாற்றமிருக்காது. சபை ஆராதனைகளில் கலந்துகொண்டு, ‘மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவது போல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது’ என்று சங்கீதக்காரனைப் போலப் பாடினாலும் (சங் 42:1), தாங்கள் பொய்யரென்று சாட்சியிடுகிறார்கள். ஆகவே அவர்களை நீதிமான்களாக அல்ல, கொடிய பாவிகளா கவே பார்க்கிறார். உலக சிற்றின்பங்களின் பரவசத்திற்காக ஏங்கித் திரிகிற ஆத்துமாவும், பகட்டான வாழ்க்கையை விரும்பி, அதையே சிந்திக்கிற மனதும், தேவனைச் சேவிக்க முடியாது. உவமையில் சொல்லப்படும் ஐசுவரியவானைப்போல, இப்படிப்பட்டவர் மாம்ச இச்சைக்கு எதிராகப் போர் செய்ய விரும்புவதில்லை. உணர்வுப்பசி யிலேயே மூழ்கியிருக்க ஏங்குகிறார். பாவச் சூழலை விரும்பி, தெரிந்துகொள்கிறார். மரணம் அவரைதிடீரெனவாரிக்கொள்கிறது. சாத்தானுடைய ஏதுகரங்களோடு சேர்ந்து, தன் வாழ்நாள் முழுவ தும் உருவாக்கிய குணத்தோடு கல்லறைக்குச் செல்கிறார். கல்லறை யில் நன்மையையோ தீமையையோ அவர் தெரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் மனிதன் இறக்கும் நாளிலே அவனுடைய யோசனைகளும் அழிகின்றன. சங் 146:4; பிர 9:5,6.COLTam 268.2

    உயிரோடிருந்தபோது தான் பேணிவளர்த்த அதே விருப்பு வெறுப்புகளோடும், அதே வேட்கைகள் மற்றும் உணர்ச்சிகளோ டும்தான் தேவனுடைய சத்தம் மரித்தோரை எழுப்பும் நாளிலே, கல்லறையிலிருந்து அவன் எழும்பி வருவான். புதுமனிதனாக மாறுவதற்கு சகலவிதமான வாய்ப்பும் வசதிகளும் கொடுக்கப் பட்டிருந்தபோது அதற்குச் சம்மதம் தெரிவிக்காக ஒருவனை, தேவன் அற்புதம் செய்து புதுமனிதனாக மாற்ற மாட்டார். தான் வாழ்ந்த சமயத்தில் தேவனில் அவன் பிரியப்படவில்லை ; அவ ருடைய சேவையைச் செய்வதில் மகிழ்ச்சியடையவுமில்லை. அவனுடைய குணம் தேவனுக்கொத்த குணமாக இல்லை; எனவே பரலோக குடும்பத்தில் அவனால் சந்தோஷமாக இருக்கமுடியாது.COLTam 269.1

    இன்று உலகத்தில் ஒரு கூட்டத்தினர் சுயநீதிக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பெருந்தீனிக்காரர்களாக, குடிகாரர்களாக , நம்பிக்கைதுரோகிகளாக இருக்கமாட்டார்கள்; ஆனால் தேவனுக்காக அல்லாமல் தங்களுக்காக வாழ விரும்புவார்கள். அவர்களுடைய சிந்தைகளில் அவருக்கு இடமிருக்காது; எனவே அவர்கள் அவிசுவாசிகளின் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாகி விடு கிறார்கள். தேவனுடைய நகரத்தின் வாசல் வழியாக ஒரு வேளை அவர்கள் பிரவேசித்தாலும் கூட, ஜீவ்விருட்சத்தின் கனியைப் புசி க்கிற உரிமை கிடைக்காது; ஏனென்றால், தேவகட்டளைகள் அவற்றின் சகல நிபந்தனைகளோடும் அவர்கள் முன்பாக வைக்கப் பட்டபோது, கீழ்ப்படிய முடியாது’ என்று அவர்கள் சொல்லிவிட் டார்கள். இவ்வுலகத்தில் அவர்கள் தேவனைச் சேவிக்கவில்லை; எனவே மறுமையிலும் அவர்கள் தேவனைச் சேவிக்கப்போவதில்லை. அவரது பிரசன்னத்திலே அவர்களால் வாழமுடியாது. எனவே, பரலோகத்தைவிட வேறு எந்த இடமானாலும் பரவா யில்லை என்று எண்ணுவார்கள்.COLTam 269.2

    கிறிஸ்துவிடமிருந்து கற்றுக்கொள்வது என்றால், அவருடைய கிருபையை அதாவது அவருடைய குணத்தைப் பெற்றுக்கொள்வ தாகும். பூமியில் தங்களுக்கு அருளப்படுகிற மேலான வாய்ப்புகளையும் பரிசுத்தமான செல்வாக்குகளையும் பெரிதாக எண்ணி, அவற்றால் பயனடையாதவர்கள், பரலோகத்தின் தூய ஆராதனை யில் கலந்து கொள்வதற்கு தகுதியுள்ளவர்களாக மாட்டார்கள். தேவனுடைய குணத்திற் கொத்ததாக அவர்களுடைய குணங்கள் மாறியிருக்காது. தங்களுடைய அலட்சியப்போக்கால், எதுவுமே இணைக்க முடியாத ஒரு பிளவை உருவாக்கிவிடுகிறார்கள். அவர்களுக்கும் நீதிமான்களுக்குமிடையே ஒரு பெரும்பிளப்பு உண்டாக் கப்பட்டுவிடுகிறது.COLTam 270.1