Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நல்ல நிலத்தில்

    விதைப்பவன் ஏமாற்றத்தை மட்டுமே சந்தித்துக்கொண்டிருக்க மாட்டான். நல்ல நிலத்தில் விழுந்த விதையைக்குறித்து இரட்சகர் சொன்னார்: “நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணரு கிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான்.” மத்தேயு 13:23. “நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களா யிருக்கிறார்கள்” லூக்கா 8:15.COLTam 58.1

    “உண்மையும் நன்மையும்” என்று உவமை கூறுவது பாவ மில்லாத இருதயத்தை அல்ல; ஏனெனில், காணாமற்போனவர்களுக்கே சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. “நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன்” என்று கிறிஸ்து சொன்னார். மாற்கு 2:17. பரிசுத்த ஆவியானவரின் உணர்த்துதலுக்கு இணங்குகிறவன் உண்மையான இருதயமுள்ளவன். அவன் தன் குற்றத்தை அறிக்கையிடுகிறான்; தேவனுடைய இரக்கமும், அன்பும் தனக்குத் தேவையென்பதை உணருகிறான். சத்தியத்தை அறிந்து, அதற்குக் கீழ்ப்படிய வேண்டு மென்று அவனுக்கு மெய்யான வாஞ்சையிருக்கும். நன்மையான இதயமென் பது விசுவாசிக்கிற இதயமாகும்; தேவவார்த்தையை விசுவாசிக்கிற இதயமாகும். விசுவாசமில்லாமல் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்வது கூடாத காரியம். “தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.” எபிரெயர் 11:16.COLTam 58.2

    இவனே“ வசனத்தைக் கேட்டு, உணருகிறவன்.” கிறிஸ்துவின் நாட்களில் வாழ்ந்த பரிசேயர்கள் காணக்கூடாதபடி கண்களை மூடினார்கள், கேட்கக்கூடாதபடி செவிகளை அடைத்தார்கள்; அதனால் அவர்களுடைய இதயங்களில் சத்தியம் சேரவில்லை . அவர்கள் வேண்டுமென்றே அறியாமையில் இருந்ததாலும், தங்களை தாங்களே குருடாக்கியதாலும் தேவதண்டனைக்கு ஆளானார்கள். ஆனால் கிறிஸ்து தம் சீடர்களிடம் இருதயங்களைத் திறந்துவைத்து போதனைகளைக் கேட்கவும், விசுவாசிக்கவும் போதித்தார். அவர்கள் கண்களால் கண்டு, காதுகளால் கேட்டு விசுவாசித்தபடியால் அவர்களை ஆசீர்வதித்தார்.COLTam 59.1

    நல்ல நிலத்தைப்போன்றவர்கள் வார்த்தையை ஏற்றுக்கொள் ளும்போது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவ வசனமாகவே ஏற்றுக்கொள்கிறார்கள்.” 1தெச 2:13. வேதாகமத்தை தங்களிடம் பேசுகிற தேவனுடைய குரலாக் ஏற்றுக்கொள்பவரே உண்மையான மாணவர். தேவவார்த்தை ஜீவனுள்ளதாக இருப்பதினிமித்தம், அதை வாசிக்கும் போது நடுங்குகிறார். அதை ஏற்றுக் கொள்ளும்படி தன்னுடைய இதயத்தையும் சிந்தையையும் திறந்து வைக்கிறார். இதுபோல வார்த்தையைக் கேட்கிறவர்களாயிருந்த கொர்நேலியுவும் அவன் நண்பர்களும் அப்போஸ்தலனாகிய பேதுருவிடம், தேவனாலே உமக்குக் கட்டளையிடப்பட்ட யாவையும் கேட்கும்படிக்கு நாங்கள் எல்லாரும் இப்பொழுது இங்கே தேவ சமூகத்தில் கூடியிருக்கிறோம். என்றார்கள். அப்போஸ்தலர் 10:33.COLTam 59.2

    அறிவுக்கூர்மையைப் பொறுத்து ஒருவர் சத்தியத்தை அறிந்து கொள்வதில்லை; மெய்யான நோக்கத்தையும், முழு ஆர்வத்தையும், தேவனைச் சார்ந்திருக்கும் விசுவாசத்தையும் பொறுத்தே அறிந்துகொள்கிறார். தாழ்மையான இதயத்தோடு தேவவழிநடத்து தலைத் தேடுபவர்களிடம், தேவதூதர்கள் வருகிறார்கள். சத்தியத்தின் பொக்கிஷங்களை அவர்களுக்குத் திறந்து கொடுப்பதற் காக, பரிசுத்த ஆவியானவர் அருளப்படுகிறார்.COLTam 59.3

    நல்ல நிலத்தைப்போன்றவர்கள் வார்த்தையைக் கேட்டு அதைக் கைக்கொள்ளுகிறார்கள். சாத்தான், தன் சகல தீய ஏதுகரங்களுடன் வந்தாலும் அதை எடுத்துச்செல்ல முடிவதில்லை.COLTam 60.1

    வார்த்தையை வெறுமனே கேட்பதோ வாசிப்பதோ மட்டும் போதாது. வேதாகமத்திலிருந்து பயனடைய விரும்புகிறவன், சொல் லப்படுகிற சத்தியத்தைத் தியானிக்க வேண்டும். ஊக்கமாகக் கவனித்து, ஜெபத்தோடு தியானித்து சத்திய வார்த்தைகளின் அர்த் தத்தை விளங்கிக்கொள்ள வேண்டும், பரிசுத்த ஆகமங்களின் ஆவியானவரிடமிருந்து ஆழமாகப் பருகவேண்டும்.COLTam 60.2

    உயர்வான, பரிசுத்தமான எண்ணங்களால் நம் சிந்தைகளை நிரப்ப தேவன் கட்டளையிடுகிறார். அவருடைய அன்பையும் இரக்கத் தையுங்குறித்து நாம் தியானிக்கவும், மகா இரட்சிப்பின் திட்டத்தில் அவருடைய அற்புதமான பணியைம் நாம் ஆராயவும் வாஞ்சிக்கிறார். அப்போது மேலான, பரிசுத்தமான சத்தியங்குறித்து தெளிவின்மேல் தெளிவடைவோம்; சுத்த இதயமும் தெளிவான சிந்தையும் வேண்டுமென்கிற நம் வாஞ்சையும் பெருகிக்கொண்டே இருக்கும். பரிசுத்த சிந்தை எனும் தூய்மையான சூழலில் இருக்கிற ஆத்துமாவானது, வேதவாக்கியங்களை ஆராய்வதன் மூலம் தேவ னோடு ஐக்கியமுண்டாகி, மாற்றமடையும்.COLTam 60.3

    “பலன் கொடுக்கிறார்கள்.” வசனத்தைக் கேட்டு, அதன்படி நடக்கிறவர்கள், கீழ்ப்படிதலின் நிமித்தம் பலன் கொடுக்கின்றனர். ஆத்துமா வில் ஏற்றுக்கொள்ளப்படுகிற தேவவார்த்தையானது நற்கிரியைகளில் வெளிப்படும். கிறிஸ்துவிற்கு ஒத்த குணத்தையும், ஜீவியத்தையும் அது உண்டாக்குவதைக் காணலாம். கிறிஸ்து தம்மைப்பற்றி, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது” என்று சொன்னார். சங் 40:8. “எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறேன்.” யோவான் 5:30; “அவருக்குள் நிலைத்திருக்கிறே னென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்க வேண்டும்” என்று வேத வாக்கியம் கூறுகிறது. 1யோவான் 2:6.COLTam 60.4

    மனிதனுடைய பரம்பரை குணங்களும், அவன் பழகிக் கொண்ட குணங்களும், வாழ்க்கையின் பழக்கவழக்கங்களும் பெரும் பாலும் தேவ்வார்த்தைக்கு முரணானவையாக இருக்கின்றன. ஆனால், நல்ல நிலம் போன்றவர் வார்த்தையை ஏற்றுக்கொள்ளும் போது, அதன் நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறார். அவனுடைய பழக்கவழக் கங்களும் நடவடிக்கைகளும் தேவவார்த்தைக்குக் கீழ்ப்படுத்தப்படு கின்றன. நித்திய தேவனுடைய வார்த்தையோடு ஒப்பிடும் போது, அழிவுள்ள, தவறு செய்யக்கூடிய மனிதனின் கற்பனைகள் ஒன்றுமில்லை என்பதைப் புரிந்துகொள் கிறான். முழு இதயத்தோ டும், தடுமாற்றமற்ற நோக்கத்தோடும் நித்திய ஜீவனைத் தேடு கிறான்; இழப்பு நேரிட்டாலும், உபத்திரவம் உண்டானாலும் அல் லது மரணமே நேரிட்டாலும் சாத்தியத்திற்குக் கீழ்ப்படிவான்.COLTam 61.1

    அவன் பொறுமையோடே” பலன் கொடுக்கிறான். தேவ வார்த்தையை ஏற்றுக்கொள்வதால் எவரும் கஷ்டத்திலும், சோதனையிலுமிருந்து விலக்கப்படுவதில்லை; ஆனால் துன்பம் வரும்போது, மெய்கிறிஸ்தவன் பதற்றத்திற்கும், அவநம்பிக்கைக் கும், மனச்சோர்வுக்கும் ஆளாக மாட்டான். ஒவ்வொன்றும் இன்னவித மாக முடியுமென நாம் தெளிவாகக் காணமுடியாது, அல்லது தேவனுடைய வழி நடத்துதல்களின் நோக்கத்தைப் பகுத்தறிய முடியாது. ஆனாலும், நாம் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. கர்த்தருடைய கனிவான இரக்கங்களை நினைவிற்கொண்டு, நம் கவலைகளை அவர்மேல் வைக்க வேண்டும்; பொறுமையுடன் அவருடைய இரட்சிப்பிற்காகக் காத்திருக்கவேண்டும்.COLTam 61.2

    போரட்டத்தின் மூலமாக ஆவிக்குரிய வாழ்க்கை வலுபெறுகிறது. சோதனைகளைச் சகிக்கும் போது, உறுதியான குணமும், விலையேறப் பெற்ற ஆவிக்குரிய கிருபைகளும் உருவாகும். பெரும்பாலும் புயல் மேகங்களுக்கும், இருளுக்கும் மத்தியில் தான் ஆவியின் கனியாகிய விசுவாசமும், சாந்தமும், அன்பும் முதிர்ச்சி யடைகின்றன.COLTam 61.3

    “பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடைய வேண்டு மென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமை யோடே காத்திருக்கிறான் ” யாக். 5:7. அதுபோலவே, கிறிஸ்தவனும் தேவவார்த்தை தன் வாழ்க்கையில் கனிகொடுக்க பொறுமையோடே காத்திருக்கவேண்டும். ஆவிக்குரிய கிருபைகளுக்காக நாம் ஜெபிக்கும் போது, அந்தக் கனிகளை உருவாக்குகிற சூழ்நிலை களில் நம்மை வைப்பதை பெரும்பாலும் அந்த ஜெபித்திற்கு பதிலாக தேவன் தருகிறார்; ஆனால், அவர் நோக்கத்தை நாம் புரிந்து கொள்ளாமல், குழம்பி, திகைக்கிறோம். வளர்ச்சிப்பரு வங்களைக் கடந்து, கனிகொடுக்கிற நிலையை எட்டாமல், எவரும் இந்தக் கிருபைகளில் வளர்வதில்லை. தேவவார்த்தையை ஏற்று, அதை உறுதியாகப் பற்றிக்கொண்டு, அதின் கட்டுப்பாட்டிற்குள் முற்றிலுமாக நம்மை ஒப்புவிப்பதே நமது பங்கு ; அப்பொழுது அதின் நோக்கம் நம்மில் நிறைவேறும்.COLTam 61.4

    “இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம் பண்ணுவோம்.’” யோவான் 14:23. அனைத்தையும் தாங்கும் வல்லமையுள்ளவருடன் நமக்கு உயிருள்ள உறவு இருந்தால், உறுதியான, பூரண சிந்தையைப் பெற்றவர்களாகக் காணப்படுவோம். நம் தெய்வீக ஜீவியத்தில், கிறிஸ்துவினால் ஆட்கொள்ளப்படுவோம். அதன்பிறகும் உலகப்பிரகாரமாக சுயநல வாழ்க்கையை வாழமாட்டோம்; ஏனெனில், கிறிஸ்து நம்மில் ஜீவிப்பார். நம்முடைய சுபாவத்தில் அவருடைய குணம் உருவாக்கப்படும். இவ் விதமாக, “முப்பதாகவும், அறுபதாகவும், நூறாகவும்” பரிசுத்த ஆவியின் கனிகளை நாம் கொடுப்போம்.COLTam 62.1