Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    35 - கோராகுவின் கலகம்

    இஸ்ரவேலர்களின் மேல் அனுப்பப்பட்ட நியாயத்தீர்ப்புகள் சிலகாலம் அவர்களுடைய முறுமுறுப்புகளையும் கீழ்ப்படியா மையையும் தடுத்திருந்தது. ஆனால் கலகத்தின் ஆவி அவர்கள் இருதயத்தில் இன்னமும் இருந்து, முடிவாக கசப்பான கனிகளைக் கொண்டு வந்தது. இதற்கு முன்னிருந்த கலகங்களெல்லாம் கிளர்ச்சியூட்டப்பட்டிருந்த திரளானவர்களின் சடிதியான உணர்வுகளினால் எழும்பின் பொதுவான கலகங்களாக இருந்தன. ஆனால் இப்போது தேவன்தாமே நியமித்திருந்த தலைவர்களின் அதிகாரத்தை கவிழ்க்கும் தீர்மானமான நோக்கத்தின் விளைவாக வந்த மிக ஆழமான சதித்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது.PPTam 502.1

    இந்த அமைப்பை நடத்திச் சென்ற கோராகு, கோகாரத்தின் குடும்பத்தைச் சார்ந்த மோசேயின் சகோதரனான லேவியனாக இருந்தான். அவன் திறமையும் செல்வாக்குமுள்ள மனிதனாக இருந்தான். கூடாரத்தின் சேவைக்கு நியமிக்கப்பட்டிருந்தபோதும் தனது பதவியினால் அதிருப்தியடைந்து ஆசாரியத்துவத்தின் கௌரவத்திற்கு ஏங்கினான். முன்னதாக ஒவ்வொரு குடும்பத்தின் முதல் மகனுக்கும் கொடுக்கப்பட்டிருந்து, இப்போது ஆரோன் மேலும் அவன் குடும்பத்தின் மேலும் வைக்கப்பட்ட ஆசாரியத்துவம்PPTam 502.2

    பொறாமைக்கும் அதிருப்திக்கும் வழி கொடுக்க, கோராகு வெளிப்படையான கலகத்திற்குள் துணியாதிருந்தபோதும் மோசே மற்றும் ஆரோனின் அதிகாரத்தை சில காலம் இரகசியமாக எதிர்த்திருந்தான். முடிவாக அவன் மத மற்றும் உள்நாட்டு அதிகாரத்தை கவிழ்க்க தைரியமான திட்டம் ஒன்றை உருவாக் கினான். தன் மேல் பரிதாபப்படுகிறவர்களைக் கண்டுபிடிப்பதில் அவன் தவறவில்லை . ஆசரிப்புக் கூடாரத்தின் தென்பகுதியிலிருந்த கோராகு மற்றும் கோகாத்தியர்களுடைய கூடாரத்திற்கு அருகில் ரூபன் கோத்திரத்தின் இரண்டு பிரபுக்களான தாத்தான் மற்றும் அபிராமின் கூடாரங்கள் இருந்தன. இந்தப் பிரபுக்கள் அவனுடைய இலட்சியத் திட்டத்தில் உடனடியாகச்PPTam 503.1

    - சேர்ந்தனர். யாக்கோபின் மூத்த குமாரனுடைய வம்சா வழியில் இருந்ததால் சமுதாயத்தின் அதிகாரம் தங்களுக்குச் சொந்த மானது என்று உரிமை கோரி கோராகுடன் ஆசாரியத்துவத்தின் கனத்தை பகிர்ந்துகொள்ள அவர்கள் தீர்மானித்திருந்தனர்.PPTam 503.2

    ஜனங்களிடையே நிலவிய உணர்வுகள் கோராகின் திட்டங்களுக்கு ஆதரவளித்தது. கசப்பான ஏமாற்றத்தில் அவர்களுடைய முந்தின சந்தேகங்களும் பொறாமைகளும் வெறுப்பும் திரும்பிவர, குற்றச்சாட்டுகள் அவர்களுடைய பொறுமையான தலைவனுக்கு எதிராக திருப்பப்பட்டன. தாங்கள் தெய்வீக நடத்துதலின் கீழ் இருக்கிறோம் என்கிற உண்மையை இஸ்ரவேலர்கள் தொடர்ந்து மறந்து கொண்டிருந்தனர். உடன்படிக்கையின் தூதனானவரே காணக் கூடாத தலைவராக இருந்து, மேகஸ்தம்பத்தினால் மூடப்பட்ட கிறிஸ்துவின் பிரசன்னம் அவர்கள் முன் சென்றது என்பதையும், அவரிடமிருந்தே மோசே அனைத்து கட்டளைகளையும் பெற்றான் என்பதையும் அவர்கள் மறந்தனர்.PPTam 503.3

    அனைவரும் வனாந்தரத்தில் மரிக்கவேண்டும் என்ற பயங்கரமான தீர்ப்புக்கு ஒப்புக்கொடுக்க அவர்கள் மனதில் லாதிருந்தனர். எனவே தேவனல்ல மோசேதான் அவர்களை நடத்தி அவர்களுடைய அழிவை அறிவித்தான் என்று நம்புவதற்கான ஒவ்வொரு வார்த்தையையும் பிடித்துக்கொள்ள அவர்கள் ஆயத்தமாயிருந்தனர். பூமியின் மேல் மிகவும் சாந்தமுள்ள மனிதனுடைய மிகச்சிறந்த முயற்சிகள் எதுவும் இந்த ஜனங்களுடைய கீழ்ப்படியாமையை அடக்கக்கூடாதிருந்தது. இதற்கு முன் அவர்களுடைய முறைகேட்டினால் கிடைத்த தேவனுடைய அதிருப்தியின் அடையாளங்கள் உடைந்து போன வரிசையிலும் கலைந்து போன எண்ணிக்கையிலும் அவர்கள் முன் இன்னமும் இருந்தும், அவர்கள் அந்தப் பாடத்தை தங்கள் இருதயத்திற்குள் எடுத்துக்கொள்ளவில்லை. மீண்டும் சோதனையினால் மேற்கொள்ளப்பட்டனர்.PPTam 503.4

    கொந்தளிக்கும் ஆவிகளைக் கொண்ட பரந்த கூட்டத்தின் தலைவன் என்கிற இப்போதைய தகுதியில் இருந்ததைக் காட்டிலும் தாழ்மையான மேய்ப்பனாக இருந்த மோசேயின் வாழ்க்கை மிக அதிக சமாதானமும் மகிழ்ச்சியும் கொண்டதாக இருந்தது. எனினும் அதைத் தெரிந்து கொள்ள மோசே துணியவில்லை. மேய்ப்பனின் கோல் இருந்த இடத்தில் வல்லமையின் கோல் கொடுக்கப்பட்டிருக்க, தேவன் அவனை அதிலிருந்து விடுவிக்கும் வரையிலும் அவனால் அதை கீழே வைக்கக் கூடாது.PPTam 504.1

    அனைத்து இருதயங்களின் இரகசியங்களையும் வாசிக்கிற அவர், கோராகு மற்றும் அவனுடைய கூட்டத்தாரின் நோக்கங்களைக் குறித்திருந்து, இப்படித் திட்டமிடப்பட்ட வஞ்சகத்திற்குத் தப்ப மக்களை தகுதிப்படுத்துவதற்கேதுவான எச்சரிப்புகளையும் போதனைகளையும் கொடுத்திருந்தார். மோசேக்கு எதிரான பொறாமையினாலும் குற்றச்சாட்டுகளினாலும் மிரியாமின்மேல் வந்த நியாயத்தீர்ப்புகளை அவர்கள் கண்டிருந்தனர். மோசே தீர்க்கதரிசியைக் காட்டிலும் மேலானவன் என்று ஆண்டவர் அறிவித்திருந்தார். ‘நான் அவனுடன் ...... முக முகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; ...... நீங்கள் என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச, உங்களுக்குப் பயமில்லாமற்போனதென்ன என்றார்.“ எண். 128. இந்த போதனைகள் ஆரோனுக்கும் மிரியாமிற்கும் மாத்திரம் கொடுக்கப்படவில்லை. மாறாக, அனைத்து இஸ்ரவேலருக்காகவும் கொடுக்கப்பட்டிருந்தது.PPTam 504.2

    கோராகும், உடன் சதிகாரர்களும் தேவனுடைய வல்லமை மற்றும் மேன்மையின் விசேஷ வெளிப்பாடுகளினால் தயவு பெற்றிருந்தனர். மோசேயோடு மலையின் மேல் ஏறி, தெய்வீக மகிமையைக் கண்டிருந்த கூட்டத்தில் அவர்கள் இருந்தனர். ஆனால் அப்போதிருந்து ஒரு மாற்றம் வந்திருந்தது. முதலில் சாதாரணமாகத் தோன்றிய ஒரு சோதனை அவர்களுடைய மனங்கள் சாத்தானால் கட்டுப்படுத்தப்படும் வரையிலும் இருத்தி வைக்கப்பட்டு, உற்சாகப்படுத்தப்பட்டபோது பலமடைந்தது. அவர்கள் அதிருப்தியின் வேலைக்குள் துணிந்தனர். ஜனங்களின் நன்மையில் மாபெரும் வாஞ்சை உள்ளவர்களாக தங்களைக் காண்பித்து, முதலில் தங்களுடைய அதிருப்தியை ஒருவருக் கொருவர் வெளிப்படுத்தி, பின்னர் இஸ்ரவேலின் தலைமையான வர்களுக்கும் அறிவித்தனர். அவர்களுடைய அவதூறுகள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட அவர்கள் இன்னும் அதிகம் துணிந்து, முடிவாக தாங்கள் தேவனுக்கான வைராக்கியத்தினால் உந்தப் பட்டவர்களென்று மெய்யாகவே நம்பினார்கள்.PPTam 504.3

    சபையில் புகழ் பெற்றிருந்த இருநூற்று ஐம்பது பிரபுக்களை பிரிப்பதில் அவர்கள் வெற்றியடைந்தனர். இந்த பலமும் செல் வாக்கும் கொண்ட ஆதரவாளர்களால் அரசாங்கத்தில் மாபெரும் மாற்றங்களை உண்டாக்கு வதிலும் மோசே மற்றும் ஆரோனின் ஆட்சியை மிகவும் முன்னேற்றுவதிலும் அவர்கள் நம்பிக்கையை உணர்ந்த னர்.PPTam 505.1

    பொறாமை பகைக்கும், பகை கலகத்திற்கும் வழிநடத்தியது. தங்களில் எவரும் நிரப்பக்கூடிய பொறாமைப்படக்கூடிய தகுதியை அவன் அடைந்திருக்கிறான் என்று நினைக்கும் வரையிலும் மோசேயினுடைய பெரிய அதிகாரத்தையும் கனத்தையுங்குறித்த உரிமையின் கேள்வியை அவர்கள் கலந்துரையாடினார்கள். மோசேயும் ஆரோனும் அவர்கள் வகித்திருந்த பதவியை தாங்களே யூகித்துக்கொண்டதாக நினைப்பதில் அவர்கள் தங்களையும் ஒருவரையொருவரும் வஞ்சித்துக்கொண்டனர். அதிருப்தி யடைந்தவர்கள் இந்தத் தலைவர்கள் தங்கள் மேல் ஆட்சியையும் ஆசாரியத்துவத்தையும் எடுத்துக்கொண்டதில் ஆண்டவருடைய சபைக்கு மேலாக தங்களை உயர்த்திக்கொள்ளுகிறார்கள் என்றும், அவர்களுடைய குடும்பம் இஸ்ரவேலின் மற்றவர்களுக்கு மேலாக சிறப்பிக்கப்பட்டது அல்ல என்றும், அவர்கள் ஜனங்களைக் காட்டிலும் பரிசுத்தமானவர்கள் அல்ல என்றும், தேவனுடைய விசேஷமான சமூகத்தினாலும் பாதுகாப்பினாலும் சமமாக தயவு பெற்றிருந்த அவர்களுடைய சகோதரர்களுக்கு இணையாக இருப்பது அவர்களுக்குப் போதுமென்றும் கூறினார்கள்.PPTam 505.2

    சதிகாரர்களின் அடுத்த வேலை ஜனங்களோடு இருந்தது. தவறிலும் கடிந்து கொள்ளப்படும் நிலையிலும் இருக்கிறவர்களுக்கு பரிதாபத்தையும் புகழையும் பெற்றுக்கொள்ளுவதைப்போல் வேறு எதுவும் இன்பமானதாக இருக்காது. இவ்வாறாக கோராகும் அவனுடைய தோழர்களும் சபையாரின் கவனத்தைப் பெற்று, அவர்களுடைய ஆதரவை பட்டியலிட்டனர். ஜனங்களுடைய முறுமுறுப்புகள் தான் அவர்கள் மேல் தேவனுடைய கோபத்தைக் கொண்டுவந்தது என்ற குற்றச்சாட்டு தவறு என்று அறிவிக்கப்பட்டது. அவர்கள் தங்களுடைய உரிமையைத்தவிர வேறு எதையும் வாஞ்சிக்காததால் சபையார் குற்றத்தில் இல்லையென்றும் ஜனங்கள் பரிசுத்தராயிருந்து ஆண்டவர் அவர்கள் நடுவே இருக்கும் போது மோசே மிஞ்சின் ஆதிக்கம் செய்து அவர்களைப் பாவிகளென்று கடிந்துகொண்டானென்றும் அவர்கள் கூறினார்கள்.PPTam 505.3

    வனாந்தரவழியான இஸ்ரவேலர்களின் பிரயாணத்தையும், எங்கெல்லாம் நெருக்கமான இடத்தில் கொண்டு வரப்பட்டு, அவர்களுடைய முறுமுறுப்பினாலும் கீழ்ப்படியாமையினாலும் அநேகர் அழிந்தார்கள் என்பதையும் கோராகு திருப்பிப் பார்த்தான். மோசே வேறுவிதமான முறையைக் கையாண்டிருப்பானானால், பிரச்சனைகள் தடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெளிவாகக் காண்பதாக அவன் சொல்லுவதைக் கேட்டவர்கள் நினைத்தார்கள். தங்களுடைய அனைத்து அழிவுகளுக்கும் அவர்கள் தான் காரணம் என்றும், கானானிலிருந்து அவர்கள் வெளித்தள்ளப்பட்டது மோசே மற்றும் ஆரோனின் தவறான மேலாண்மையின் விளைவே என்றும் அவர்கள் தீர்மானித்தார்கள். கோராகு தங்களுடைய தலைவனாக இருந்து, பாவங்களை கடிந்து கொள்ளுவதற்குப் பதிலாக அவர்களுடைய நற்கிரியைகளைக் கண்டு உற்ச ராகப்படுத்தியிருந்தால், அவர்கள் மிகவும் சமாதானமாக செழிப் பான யாத்திரையை அடைந்து, வனாந்தரத்தில் இங்குமங்குமாக அலைந்து கொண்டிருப்பதற்கு பதிலாக வாக்குத்தத்த நாட்டிற்குள் நேரடியாக முன்னேறியிருப்பார்கள்.PPTam 506.1

    இந்த அதிருப்தியின் வேலையில் இதற்கு முன் இருந்த தைக்காட்டிலும் சபையாரிடம் ஒன்றுக்கொன்று ஒவ்வாதிருந்த காரியங்களெல்லாம் மாபெரும் இணைவிலும் இசைவிலும் இருந்தது. ஜனங்கள் நடுவே கோராகிற்கு கிடைத்த வெற்றி அவனுடைய நம்பிக்கையை அதிகப்படுத்தி, மோசேயினுடைய அதிகாரம் தவறான வழியில் பெறப்பட்டது என்றும், அதைத் தடுக்காதபட்சத்தில் இஸ்ரவேலின் சுதந்தரத்திற்கு அது பேரழிவாக இருக்கும் என்றும் அவன் நம்பியிருந்ததை உறுதிப்படுத்தியது. தேவன் இந்தக் காரியத்தைத் தனக்குத் திறந்து காண்பித்து, வெகு தாமதமாவதற்கு முன்பாக அரசாங்கத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர அவனுக்கு அதிகாரம் கொடுத்தார் என்று அவன் உரிமை பாராட்டினான். ஆனால் மோசேக்கு எதிரான கோராகின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள அநேகர் ஆயத்தமாக இல்லை. அவனுடைய பொறுமையான சுயதியாகமான செயல்களின் நினைவுகள் அவர்கள் நினைவுகளில் வந்து அவர்களுடைய மனசாட்சி பாதிக்கப்பட்டது. எனவே இஸ்ரவேலின் மேல் அவனுக்கிருக்கும் ஆழமான ஈடுபாட்டிற்கு சில சுய உத்தேசங்களைக் கொடுக்க வேண்டியது அவசியமாயிருந்தது. எனவே அவர்கள் வனாந்தரத்தில் அழியும்படியும் அவர்களுடைய சொத்துக்களை பிடுங்கிக்கொள்ளும் படியும் அவன் நடத்தினான் என்ற பழைய குற்றச்சாட்டு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.PPTam 506.2

    சிலகாலம் இந்த வேலை இரகசியமாக கொண்டு செல் லப்பட்டது. எனினும் வெளிப்படையான கலகத்திற்கு போதுமான பலத்தின் நிச்சயத்தைப் பெற்றவுடனேயே கோராகும் இந்த அணியின் தலைவனாகத் தோன்றி, அவனும் அவனுடைய தோழர்களும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டிய அதிகாரத்தை தவறான வழியில் பிடுங்கிக்கொண்டதாக மோசே யையும் ஆரோனையும் அனைவர் முன்பும் குற்றப்படுத்தினான். மேலும் ஜனங்களுடைய சுதந்தரமும் உரிமைகளும் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்றும் குற்றப்படுத்தினான். “நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள், கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே ; இப்படியிருக்க, கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள்“ என்று சதிகாரர்கள் கூறினர்.PPTam 507.1

    இந்த ஆழமாக அஸ்திபாரப்பட்டிருந்த சதித்திட்டத்தை மோசே சந்தேகித்திருக்கவில்லை. அதனுடைய பயங்கரமான குறிப்படையாளம் அவன்மேல் விழுந்த போது மௌனமாக தேவனிடம் முறையிட்டு முகங்குப்புற விழுந்தான். துக்கத்தோடு எழும்பினபோதிலும் அமைதியும் உறுதியும்PPTam 507.2

    கொண்டவனாயிருந்தான். அவனுக்கு தெய்வீக நடத்துதல் கொடுக்கப்பட்டது. நாளைக்குக் கர்த்தர் தம்முடையவன் இன்னான் என்றும், தம்மண்டையிலே சேரத் தாம் கட்டளையிட்ட பரிசுத்தவான் இன்னான் என்றும் காண்பிப்பார்; அப்பொழுது எவனைத் தெரிந்து கொள்வாரோ, அவனைத் தம்மிடத்தில் சேரக் கட்டளையிடுவார் ” என்று கூறினான். அனைவருக்கும் யோசித்து தீர்மானிக்க நேரம் இருக்கும் படியாக அந்த சோதனை அடுத்தநாள் வரையிலும் தாமதிக்கப்பட்டது . ஆசாரியத்துவத்திற்கு ஏங்கினவர்கள் ஒரு தூபகலசத்தோடு வந்து ஆசரிப்புக் கூடாரத்தில் தூபம் காட்ட வேண்டும். பரிசுத்தமான பணிக்கு அபிஷேகிக் கப்பட்டவர்கள் மாத்திரமே ஆசரிப்புக் கூடாரத்தில் ஊழியம் செய்யவேண்டும் என்ற சட்டம் மிக வெளிப்படையாக இருந்தது. தெய்வீக கட்டளையைக் கருத்தில் கொள்ளாமல் அன்னிய அக்கினி ” யை படைக்க துணிகரங்கொண்டிருந்த ஆசாரியர்களான நாதாபும் அபியூவுங்கூட அழிக்கப்பட்டிருந்தனர். எனினும் இவ்வளவு ஆபத்தான மன்றாட்டில் நுழைய துணிவிருக்குமானால் அதை தேவனிடம் கொண்டு செல்லும்படியாக மோசே தன்னைக் குற்றப்படுத்தினவர்களுக்கு சவால் விடுத்தான்.PPTam 507.3

    மோசே கோராகையும் அவனுடைய சக லேவியர்களையும் தனிமைப்படுத்தி, கர்த்தருடைய வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யவும், சபையாரின் முன்நின்று அவர்கள் செய்யவேண்டிய வேலைகளைச் செய்யவும், உங்களைத் தம்மண்டையிலே சே ரப்பண்ணும்படி இஸ்ரவேலின் தேவன் இஸ்ரவேல் சபையாரிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்ததும், அவர் உன்னையும் உன் னோடேகூட லேவியின் புத்திரராகிய உன்னுடைய எல்லாச் சகோதரரையும் சேரப்பண்ணினதும், உங்களுக்கு அற்பகாரியமோ? இப்பொழுது ஆசாரியப்பட்டத்தையும் தேடுகிறீர்களோ? இதற்காக நீயும் உன் கூட்டத்தார் அனைவரும் கர்த்தருக்கு விரோதமாகவே கூட்டங் கூடினீர்கள்; ஆரோனுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுக்கிறதற்கு அவன் எம்மாத்திரம் என்று கூறினான்.PPTam 508.1

    கோராகைப் போல தாத்தானும் அபிராமும் மிக தைரியமாக நிற்கவில்லை. அவர்கள் முழுமையாக கறைப்படுத்தப்படாமல் இந்த சதித்திட்டத்திற்குள் இழுக்கப்பட்டிருக்கலாம் என்ற நம்பிக்கையில், தனக்கு எதிரான அவர்களுடைய குற்றச்சாட்டுகளை கேட்கும்படி தன் முன் வர அவர்களை அழைத்தான். ஆனால் அவர்கள் வரவில்லை . வராது, அவனுடைய அதிகாரத்தை ஒப்புக்கொள்ள ஆணவத்தோடு மறுத்தனர். சபையாரின் முன்பு அவர்கள் : ‘இந்த வனாந்தரத்தில் எங்களைக் கொன்று போடும்படி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்திலிருந்து எங்களைக் கொண்டுவந்தது அற்பகா ரியமோ, எங்கள் மேல் துரைத்தனமும் பண்ணப்பார்க்கிறாயோ? மேலும் நீ எங்களைப் பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குக் கொண்டு வந்ததும் இல்லை, எங்களுக்கு வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் சுதந்தரமாகக் கொடுத்ததும் இல்லை, இந்த மனிதருடைய கண்களைப் பிடுங்கப்பார்க்கிறாயோ? நாங்கள் வருகிறதில்லை என்று பதில் கொடுத்தனர்.PPTam 508.2

    வாக்குத்தத்தமான சுதந்தரத்தை விவரிக்க ஆண்டவர் உபயோகித்த அதே வார்த்தைகளை தங்கள் அடிமைத்தனத்தின் காட்சிக்கு அவர்கள் பொருத்தினர். தன்னுடைய அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான வழியாக தெய்வீக நடத்துதலின் கீழ் இருப்பதாக நடித்துக்கொண்டிருக்கிறான் என்று மோசேயைக் குற்றப்படுத்தி, அவனுடைய இலட்சிய திட்டங்களுக்கு மிகச் சரியாகப் பொருந்தும் வரையில் மனிதர்களை குருட்டு மனிதர்களாகPPTam 508.3

    இப்போது கானானை நோக்கியும் இப்போது வனாந்தரத்தை நோக்கியும் நடத்தப்படும் படி தாங்கள் இனி ஒருபோதும் ஒப்புக்கொடுக்க மாட்டோம் என்று அறிவித்தனர். ஒரு இளகிய தகப்பனாக இருந்த பொறுமையான மேய்ப்பனாக இருந்த அவன் இவ்விதம் கொடுங்கோலனாகவும் தவறான வழியில் அதிகாரத்தைப் பிடுங்கிக்கொண்டவனாகவும் மிகவும் இருண்ட குணத்தினால் எடுத்துக்காட்டப்பட்டான். கானானிலிருந்து சொந்தப் பாவத்தினிமித்தம் அவர்கள் வெளித்தள்ளப்பட்டது அவன் மேல் வைக்கப்பட்டது.PPTam 509.1

    ஜனங்களின் பரிதாபங்கள் அதிருப்தியடைந்த கூட்டத்தின் மேல் இருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. எனினும் சுயத்தை நிரூபிப்பதற்கான எந்த முயற்சியையும் மோசே செய்யவில்லை. அவன் பயபக்தியோடு தேவனிடம் முறையிட்டு, சபையாரின் முன்னிலையில் தன்னுடைய நோக்கங்களின் தூய்மைக்கும் நடக்கையின் நேர்மைக்கும் சாட்சிகளாக அவர்களை நிறுத்தி, தன்னுடைய நியாயாதிபதியாக இருக்கும் படி அவரிடம் மன்றாடினான். அடுத்தநாள் இருநூற்று ஐம்பது பிரபுக்களும் கோராகின் தலைமையில் தங்களுடைய தூபகலசங்களோடு வந்தனர். ஜனங்கள் விளைவிற்காக வெளியே காத்திருக்க, அவர்கள் கூடாரத்தின் பிராகாரத்திற்குள் கொண்டுவரப்பட்டனர். கோராகு மற்றும் அவனுடைய கூட்டத்தாரின் தோல்வியைக் காணும்படியாக சபையாரை மோசே கூட்டவில்லை. மாறாக, மீறினவர்களே தங்கள் குருட்டாட்டமான துணிவில் தங்கள் வெற்றியைக் காணும்படி கூடியிருந்தனர். ஆரோனுக்கு எதிராக செயல்படுவதில் அதிக நம்பிக்கை கொண்டிருந்த கோராகின் பக்கத்தில் இந்த சபையின் பெரும்பகுதி வெளிப்படையாக இருந்தது.PPTam 509.2

    இவ்வாறு அவர்கள் தேவன் முன்பு கூடின போது, “கர்த்தருடைய மகிமை சபைக்கெல்லாம் காணப்பட்டது.“ இந்தச் சபையை விட்டுப் பிரிந்து போங்கள், ஒரு நிமிஷத்திலே அவர்களை அதமாக்குவேன் என்ற தெய்வீக எச்சரிப்பு மோசேக்கும் ஆரோனுக்கும் கொடுக்கப்பட்டது. ஆனால் “தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லார் மேலும் கடுங்கோபங்கொள்வீரோ?“ என்ற ஜெபத்தோடு அவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள்.PPTam 509.3

    மோசே எழுபது முப்பர்களுடன் தன்னிடம் வர மறுத்த மனிதர்களுக்கான கடைசி எச்சரிப்போடு கீழே சென்ற போது, கோராகு தாத்தான் அபிராமோடு சேர்ந்து கொள்ளும்படி அந்தக் கூட்டத்திலிருந்து விலகினான். திரளானவர்கள் பின் செல்ல, தன்னுடைய தூதை கொடுக்கும் முன்பாக தெய்வீக நடத்துதலினால் மோசே ஜனங்களிடம் : “இந்தத் துஷ்ட மனிதரின் சகல பாவங்களிலும் நீங்கள் வாரிக்கொள்ளப்படாதபடிக்கு, அவர்கள் கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொடாதிருங்கள்” என்று கூறினான். வரவிருந்த நியாயத்தீர்ப்பைக் குறித்த ஒரு பயத்தினால் இந்த எச்சரிப்பு கீழ்ப்படியப்பட்டது. வஞ்சித்தவர்களால் தாங்கள் கைவிடப்பட்டதை இந்தத் தலைமை கலகக்காரர்கள் கண்டனர். எனினும் அவர்களுடைய கடின இருதயம் அசைக்கப்படாதிருந்தது. அவர்கள் தங்கள் குடும்பங்களோடு தங்கள் கூடாரத்தின் வாசலில் தெய்வீக எச்சரிப்பை அவமதிப்பதைப்போன்று நின்றனர்.PPTam 510.1

    இஸ்ரவேலின் தேவனுடைய நாமத்தில் சபையாரின் செவிகளில் இந்தக் கிரியைகளையெல்லாம் செய்கிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினார் என்றும், அவைகளை நான் என் மனதின்படியே செய்ய வில்லை என்றும், நீங்கள் எதினாலே அறிவீர்களென்றால், சகல மனிதரும் சாகிறபடி இவர்கள் செத்து, சகல மனிதருக்கும் நேரிடுகிறது போல இவர்களுக்கும் நேரிட்டால், கர்த்தர் என்னை அனுப்பவில்லை என்று அறிவீர்கள். கர்த்தர் ஒரு புதிய காரியத்தை நேரிடச் செய்வதால், பூமி தன் வாயைத் திறந்து, இவர்கள் உயிரோடே பாதாளத்தில் இறங்கத்தக்கதாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப்போட்டதேயானால், இந்த மனிதர் கர்த்தரை அவமதித்தார்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள்“ என்று அறிவித்தான்.PPTam 510.2

    பயத்தோடும் எதிர்பார்ப்போடும் நடக்கவிருக்கும் சம்பவத் திற்குக் காத்திருந்த இஸ்ரவேலின் அனைத்து கண்களும் நின்றிருந்த மோசேயின்மேல் பதிக்கப்பட்டிருந்தது. அவன் போக நிறுத்தின் போது பூமி பிளந்தது. கலகக்காரர்கள் உயிரோடுகூட குழியில் இறங்கினார்கள். அவர்களுக்கு உண்டான அனைத்தோடும் “சபையின் நடுவிலிருந்து அழிந்து போனார்கள்.“PPTam 510.3

    ஜனங்கள் ஆபத்தில் பங்கு கொண்டவர்களென்ற சுய ஆக்கினைக்குட்பட்டு ஓடினார்கள்..PPTam 510.4

    எனினும் நியாயத்தீர்ப்புகள் முடிவடையவில்லை. தூபவர்க்கமிட்ட இருநூற்று ஐம்பது பிரபுக்களையும் மேகத்திலிருந்து ஒளிர்ந்த அக்கினி விழுங்கிப்போட்டது. இந்த மனிதர்கள் கலகத்தில் முதன்மையாயிராததினால் முதன்மை கலகக்காரர்களோடு அழிக்கப்படவில்லை. மனந்திரும்புவதற்கான ஒரு சந்தர்ப்பம் பெற அவர்களுடைய முடிவைக் காணும் படி இவர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுடைய பரிதாபங்கள் மீநுதல்காரர்களோடு இருந்ததால் அவர்களுடைய முடிவில் இவர்களும் பங்கெடுத்தார்கள்.PPTam 510.5

    வரவிருக்கும் அழிவிலிருந்து தப்பித்து ஓடும்படி மோசே இஸ்ரவேல் ஐனங்களிடம் மன்றாடிக்கொண்டிருந்தபோது கோராகும் அவனுடைய கூட்டத்தாரும் மனம் வருந்தி பாவமன்னிப்பைத் தேடியிருந்தார்களானால், தெய்வீக நியாயத்தீர்ப்புகள் அப்போது கூட நிறுத்தப்பட்டிருக்கும். ஆனால் பிடிவாதமான உறுதி அவர்கள் அழிவை முத்திரித்தது. முழு ச பையும் அவர்கள் மேல் அதிகமாகவோ குறைவாகவோ பரிதாபப்பட்டதினால் அவர்களுடைய குற்றத்தில் பங்கெடுத் திருந்தது. எனினும் தேவன் தமது மிகுந்த கிருபையினால் கலகக்காரரின் தலைவர்களுக்கும் அவர்கள் நடத்திச் சென்ற வர்களுக்குமிடையே ஒரு வேறுபாட்டைக் காண்பித்தார். வஞ்சிக்கப்படும் படி தங்களை அனுமதித்திருந்த மக்களுக்கு மனந்திரும்பும் படியான அவகாசம் இன்னமும் வழங்கப் பட்டிருந்தது. அவர்கள் தவறிலிருக்கிறார்கள் என்பதற்கும் மோசே சரியாக இருக்கிறான் என்பதற்குமான மேற்கொள்ளக்கூடாத சான் றுகள் கொடுக்கப்பட்டிருந்தன. தெய்வீக வல்லமைகளை வெளிக்காட்டின் அடையாளங்கள் எல்லா நிச்சயமின்மையையும் அகற்றியிருந்தது.PPTam 511.1

    எபிரெயர்களின் முன் சென்ற தூதனாகிய இயேசுவானவர் அவர்களை அழிவிலிருந்து காக்கும்படி தேடினார். அவர்களுக்காக மன்னிப்பு காத்திருந்தது. தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் மிக அருகில் வந்து மனந்திரும்பும்படி அவர்களிடம் மன்றாடியது. அவர்களுடைய கலகத்தை பரலோகத்திலிருந்து வந்த விசே ஷமான தடை செய்யக் கூடாத தலையீடு நிறுத்தியிருந்தது. தேவனுடைய தலையீட்டிற்கு பதில் கொடுப்பார்களானால் அவர்கள் காப்பாற்றப்படக்கூடும். ஆனால் அழிவைக் குறித்த பயத்தில் அவருடைய நியாயத்தீர்ப்புகளிலிருந்து தப்பி ஓடினபோது அவர்களுடைய மீறுதல் குணப்படுத்தப்படவில்லை . தங்கள் கூடாரங்களுக்கு அந்த இரவிலே திகிலோடு திரும்பி வந்தார்களேயொழிய மனவருத்தத்தோடு வரவில்லை.PPTam 511.2

    தாங்கள் மெய்யாகவே மிகவும் நல்ல ஜனங்கள் என்றும் மோசேயினால் தவறு இழைக்கப்பட்டு தவறாக உபயோ கப்படுத்தப்பட்டார்கள் என்றும் நம்பும் வரையிலும் அவர்கள் கோராகினாலும் அவன் கூட்டத்தாராலும் புகழப்பட்டிருந்தனர். கோராகும் அவன் கூட்டத்தாரும் தவறு என்றும் மோசே சரி என்றும் அனுமதிப்பார்களானால், வானாந்தரத்திலே அழிய வேண்டும் என்ற தேவனுடைய வார்த்தையின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் கட்டாயப்படுத்தப்படுவார்கள். இதற்கு ஒப்புக்கொடுக்க அவர்கள் விருப்பமின்றி இருந்து, மோசே தங்களை வஞ்சித்தான் என்று நம்ப முயற்சித்தார்கள். கடிந்துகொள்ளுதலுக்குப் பதிலாக துதியும் வருத்தத்திற்கும் போராட்டத்திற்கும் பதிலாக இலகுவான நிலையும் இருக்கும் ஒரு புது முறை ஸ்தாபிக்கப்படப்போகிறது என்ற நம்பிக்கையை அவர்கள் நெஞ்சார நேசித்திருந்தனர். அழிந்துபோன மனிதர்கள் புகழ்ச்சியான வார்த்தைகளைப் பேசி. அவர்கள் மேல் மிகுந்த வாஞ்சையும் அன்பும் இருப்பதாகக் கூறியிருந்தார்கள். எனவே கோராகும் அவனுடைய கூட்டத்தாரும் நல்ல மனிதர்களாக இருக்கவேண்டும் என்றும், மோசேதான் ஏதோ வழியில் தங்கள் அழிவிற்குக் காரணம் என்றும் ஜனங்கள் முடிவிற்கு வந்திருந்தனர்.PPTam 512.1

    தங்களுடைய இரட்சிப்பிற்காக தேவன் உபயோகப்படுத்தும் கருவிகளை தள்ளுவதையும் நிராகரிப்பதையும் விட பெரிய அவமானத்தை மனிதர் தேவனுக்குக் கொடுப்பது கூடாத காரியம். இஸ்ரவேலர்கள் இதை மாத்திரம் செய்யவில்லை. மோசேயையும் ஆரோனையும் கொன்று விடவும் எண்ணியிருந்தனர். இந்த வருந்தத்தக்கப் பாவத்திற்கு மன்னிப்பு கேட்பது அவசியம் என்பதை அவர்கள் இன்னமும் உணர்ந்திருக்கவில்லை. அந்தக் கிருபையின் இரவு மனவருத்தத்திலும் பாவ அறிக்கையிலும் கடந்து செல்லாது, மாபெரும் பாவிகள் என்று அவர்களுக்குக் காண்பித்த சான்றுகளை தடுப்பதற்கான ஏதாவது வழியைக் கண்டு பிடிப்பதில் செலவழிந்தது. தேவன் நியமித்திருந்த மனிதர்களை வெறுப்பதில் இன்னமும் தொடர்ந்து, அவர்களுடைய அதிகாரத்தை தடுப்பதில் தங்களை இடைகட்டிக்கொண்டனர், அவர்களுடைய நியாயங்களை முறைகேடாக்கி, கண்மூடித்தனமாக அவர்களை அழிவிற்கு நடத்த சாத்தான் அங்கே இருந்தான்.PPTam 512.2

    குழிக்குள் சென்ற பாவிகளின் அழிந்துபோன கூக்குரலால் இஸ்ரவேலர்கள் எச்சரிப்படைந்து ஓடினர். ‘பூமி நம்மையும் விழுங்கிப்போடும்’ என்று கூறினர். “மறுநாளிலே இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து : நீங்கள் கர்த்தரின் ஜனங்களைக் கொன்று போட்டீர்கள்“ என்றனர். தங்களுடைய உண்மையான சுயத்தைத் தியாகம் செய்ததலைவர்களுக்கு எதிரான கொடுமையில் முன்னேறவும் இருந்தனர்.PPTam 512.3

    தெய்வீக மகிமையின் வெளிக்காட்டுதல் கூடாரத்திற்கு மேலிருந்த மேகத்தில் காணப்பட்டது. மேகத்திலிருந்து ஒரு குரல். “இந்தச் சபையாரை விட்டு விலகிப் போங்கள்; ஒரு நிமிஷத்தில் அவர்களை அதமாக்குவேன்” என்று மோசேயையும் ஆரோனையும் அழைத்தது.PPTam 513.1

    பாவத்தின் குற்றம் மோசேயின் மேல் இருக்கவில்லை. எனவே அவன் பயப்படவோ அல்லது அழியும்படியாக சபை யாரை விட்டுவிட்டு வேகமாக வெளியேறவோ இல்லை. இந்த பயங்கரமான பயம் நிறைந்த நெருக்கடியான நேரத்தில் மோசேதன் கவனத்திலிருந்த மந்தையின் மேல் மெய்யான மேய்ப்பனின் ஆர்வத்தை வெளிக்காட்டி தாமதித்திருந்தான். தேவன் தெரிந்து கொண்ட ஜனங்களை அவருடைய உக்கிரம் முழுமையாக அழித்து விடக்கூடாது என்று அவன் மன்றாடினான். கீழ்ப்படியாத கலகக்காரரான இஸ்ரவேலர்களை முழுமையாக முடிவிற்குக் கொண்டுவராதபடி அவனுடைய மன்றாட்டு பழிவாங்கும் கரத்தை தடுத்தது.PPTam 513.2

    எனினும் உக்கிரத்தின் ஊழியக்காரன் முன் சென்றிருந்தான். வாதை மரணத்தைக் கொண்டுவந்து கொண்டிருந்தது . சகோதரனின் நடத்துதலின்படி ஆரோன் தூபகலசத்தை எடுத்து, சபையாருக்கு இடையே விரைந்து, “ஜனங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்து, செத்தவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றான்.’ ‘தூபவர்க்கத்தின் புகை உயர எழுந்தபோது, மோசேயி னுடைய ஜெபங்களும் கூடாரத்திலிருந்து தேவனிடத்திற்கு மேலெழுந்தது. எனினும் பதினாலாயிரம் பேர் முறுமுறுப்பு மற்றும் கலகத்தின் சான்றாக மரித்திருந்தனர்.PPTam 513.3

    ஆனாலும் ஆசாரியத்துவம் ஆரோனின் குடும்பத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறதற்கான மேற்படியான சான்று கொடுக் கப்பட்டது. தெய்வீக நடத்துதலின் பேரில் ஒவ்வொரு கோத்திரமும் ஒரு கோலை ஆயத்தப்படுத்தி, கோத்திரத்தின் பெயரை அதில் எழுதியது . லேவி கோத்திரத்தில் ஆரோனின் பெயர் எழுதப்பட்டது.PPTam 513.4

    வைக்கப்பட்டன. துளிர்க்கும் கோலே ஆசாரியத்துவத்திற்காக தேவன் தெரிந்து கொண்ட கோத்திரம் என்பது அடையாளமாக இருந்தது. அடுத்தநாள் காலையில் அது மக்களுக்கு காண்பிக்கப் பட்டபின் பின்வரும் சந்ததிகளுக்கு சாட்சியாக இருக்கும் படி ஆசரிப்புக் கூடாரத்திற்குள் வைக்கப்பட்டது. இந்த அற்புதம் ஆசாரியத்துவத்தைக் குறித்த கேள்வியை வல்லமையாக முடித்தது.PPTam 514.1

    மோசேயும் ஆரோனும் தெய்வீக அதிகாரத்தினாலேயே பேசி னார்கள் என்பது இப்போது முழுமையாக நிலைநாட்டப்பட, ஜனங்கள் வனாந்தரத்தில் மரிக்க வேண்டும் என்கிற விருப்பமில் லாத உண்மையை நம்பகட்டாயப்படுத்தப்பட்டிருந்தனர். ‘இதோ, செத்து அழிந்து போகிறோம், நாங்கள் எல்லாரும் செத்து அழிந்து போகிறோம்“ என்றார்கள். தலைவர்களுக்கு எதிராக கலகம் செய்ததில் தாங்கள் தவறு செய்தோம் என்றும் தேவனுடைய நியாயமான நியாயத்தீர்ப்புகளினால் கோராகும் அவனுடைய கூட்டத்தாரும் தண்டிக்கப்பட்டார்கள் என்றும் அவர்கள் அறிக்கை செய்தனர்.PPTam 514.2

    பரலோகத்தில் சாத்தானுடைய கலகத்திற்கு நடத்திய அதே ஆவி சிறிய மேடையில் செயல்பட்டதை கோராகின் கலகத்தில் காண்கிறோம். பெருமையும் முன்னேறும் ஆசையுமே தேவனுடைய அரசாங்கத்தை குற்றப்படுத்தவும் பரலோகத்தில் ஸ்தாபிக் கப்பட்டிருந்த ஒழுங்கை கவிழ்க்கவும் லூசிபரை தூண்டியது. அதே பொறாமை மற்றும் அதிருப்தியின் ஆவியையும், பதவிக்கும் கனத்திற்குமான பேராசையையும் மனிதரின் மனங்களில் பரப்புவதுதான் விழுகையிலிருந்து அவனுடைய நோக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறாக, அவன் கோராகு தாத்தான் அபிராமின் மனங்களில் சுயத்தை உயர்த்தி பொறாமையையும் அவநம்பிக்கையையும் கலகத்தையும் தூண்டிவிடும் வாஞ்சையை எழுப்பினான். தேவன் நியமித்த மனிதர்களை நிராகரிப்பதன் வழியாக தேவனைத் தங்களுடைய தலைவராக இராதபடி நிராகரிக்க சாத்தான் அவர்களை நடத்தினான். ஆனாலும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்ததில் அவர்கள் தேவனை தூஷித்திருந்து, தங்களை நீதிமான்களென்றும் தங்களுடைய பாவங்களை உண்மையாக கண்டித்தவர்களை சாத்தானால் நடத்தப்பட்டிருந்தவர்கள் என்றும் நினைக்கும் படி வஞ்சிக் கப்பட்டிருந்தனர். கோராகின் அழிவிற்கு அஸ்திபாரமாயிருந்த அதே தீமைகள் இன்றும் இருக்கவில்லையா? பெருமையும் முன்னேறும் ஆசையும் எங்கும் பரவியிருக்கிறது. இவைகள் நேசிக்கப்படும் போது, பொறாமைக்கும் மேலாதிக்கத்திற்கான முயற்சி களுக்கும் கதவை திறந்துவிடுகின்றது. ஆத்துமா தேவனிடமிருந்து பிரிந்து நினைவின்றி சாத்தானுடைய வரிசைக்குள் இழுக்கப்படு கிறது. கோராகையும் அவனுடைய கூட்டத்தாரையும் போல கிறிஸ்தவர்களென்று சொல்லுகிறவர்களிலும் அநேகர், யோசித்து திட்டம் பண்ணி சுயத்தை உயர்த்த மிக வாஞ்சையோடு வேலை செய்கிறார்கள். ஜனங்களின் பரிதாபத்தையும் ஆதரவையும் பெற்றுக்கொள்ளும்படி, சத்தியத்தை முறைகேடாக்க ஆயத்த மாயிருந்து, தங்களுடைய சொந்த இருதயத்தை தூண்டிவிட்ட கீழ்த்தரமான சுயநல நோக்கங்களை ஆண்டவருடைய ஊழியக்காரர் மேல் வைத்து, அவர்களை பொய்யானவர்களாகவும் தவறானவர்களாகவும் எடுத்துக்காட்ட மிகPPTam 514.3

    ஊக்கமாக வேலை செய்கிறார்கள். அனைத்து சான்று களுக்கும் எதிராக பொய்யை மீண்டும் வலியுறுத்தி அதில் உறுதியாக இருப்பதினால் அதை சத்தியமென்று நம்புகிறார்கள். தேவன் நியமித்த மனிதர்களின் மேலிருக்கும் மக்களுடைய நம்பிக்கையை அழிக்க முயற்சிப்பதினால் நல்ல வேலை செய்து தேவனுடைய ஊழியத்தில் மெய்யாகவே ஈடுபட்டிருப்பதாக அவர்கள் உண்மையிலேயே நம்புகிறார்கள்.PPTam 515.1

    தேவனுடைய வழிநடத்துதல்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் ஒப்படைக்க எபிரெயர்கள் விருப்பமின்றி இருந்தார்கள். கண்டிப்பின்கீழ் இவர்கள் இளைப்பற்றவர்களாக கடிந்து கொள்ளு தலை ஏற்றுக்கொள்ள மனமற்றவர்களாக இருந்தனர். இதுவே அவர்கள் மோசேக்கு எதிராக முறுமுறுத்ததின் காரணமாக இருந்தது. இவ்விதம் தாங்கள் விரும்பின்படி செய்ய அவர்கள் விடப்பட்டிருந்தால் அங்கே அவர்களுடைய தலைவனுக் கெதி ரான குற்றச்சாட்டுகள் குறைவாக இருந்திருக்கும். சபியைன் சரித்திரம் நெடுகிலும் தேவனுடைய ஊழியக்காரர்கள் இதேவிதமான ஆவியை சந்தித்திருக்கிறார்கள்.PPTam 515.2

    பாவத்தில் திளைப்பதினாலேயே மனிதர்கள் தங்கள் மனங்களில் சாத்தானை அனுமதித்து, துன்மார்க்கத்தின் ஒரு படியிலிருந்து அடுத்தபடிக்குச் சென்றிருக்கிறார்கள். ஒளியை நிராகரிப்பது மனதை இருளாக்கி, இருதயத்தைக் கடினப்படுத்து கிறது. இதனால் முடிவாக அவர்களுடைய தவறான செய்கைகளின் பழக்கங்கள் அவர்களிடம் உறுதியடையும் வரை, பாவத்தில் அடுத்த அடி எடுத்து வைப்பதும் இன்னும் தெளிவான வெளிச் சத்தை நிராகரிப்பதும் அவர்களுக்கு எளிதாக இருந்தது. பாவம் பாவமாக தோன்றாது போயிற்று. தேவனுடைய வார்த்தையை உண்மையாக பிரசங்கித்து அவ்விதம் அவர்களுடைய பாவங்களை கடிந்து கொள்ளுகிறவன் அடிக்கடி பலவேளைகளில் அவர்களுடைய வெறுப்பை சம்பாதிக்கிறான். மறுமலர்ச்சிக்கு அவசியமான வேதனையையும் தியாகத்தையும் சகிக்க மனமில்லாது, தேவனுடைய ஊழியக்காரர்மேல் திரும்பி, அவனுடைய கடிந்து கொள்ளுதல்களை அவசியமற்றதாகவும் கடுமையானதாகவும் கண்டனம் செய்கின்றனர். கோராகைப்போல ஜனங்கள் தவறில் இல்லையென்றும் கண்டிக்கிறவன்தான் அனைத்துப் பிரச்சனை களுக்கும் காரணம் என்றும் அறிவிக்கின்றனர். பொறாமைப்படு கிறவர்களும் அதிருப்தியடைந்தவர்களும் இந்த வஞ்சகத்தினால் தங்கள் மனசாட்சியை தணித்து, சபையில் பிரிவினையை விதைக்கவும் அதைக் கட்டுப்படுத்துகிறவர்களின் கைகளை பெலவீனப்படுத்தவும் ஒன்று கூடுகின்றனர்.PPTam 515.3

    தம்முடைய வேலையை நடத்திச்செல்லும் படி தேவன் அழைத்திருந்தவர்கள் செய்யும் ஒவ்வொரு முன்னேற்றமும் சந்தேகத்தை தூண்டிவிட ஒவ்வொரு செயலும் பொறாமையுள்ளவர் களாலும் குற்றம் கண்டுபிடிக்கிறவர்களாலும் தவறாக எடுத்துக் காட்டப்படுகிறது. இவ்வாறேலுத்தரின் காலத்திலும் வெஸ்லிகளின் காலத்திலும் மற்ற மறுமலர்ச்சியாளர்களின் காலத்திலும் இருந்தது. அவ்வாறே இன்றும் இருக்கிறது.PPTam 516.1

    இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து நடத்துதல்களும் கடிந்து கொள்ளுதல்களும் தேவனிடமிருந்து வந்தது என்பதை கோராகு அறிந்திருந்தானானால், அப்படிப்பட்ட வழியை எடுத்திருக்க மாட்டான். ஆனாலும் அவன் இதை அறிந்திருக்கக்கூடும். அவரே இஸ்ரவேலரை நடத்திச் செல்லுகிறார் என்பதற்கு மிக அதிகமான சான்றுகளை தேவன் கொடுத்திருந்தார். ஆனால் அவருடைய வல்லமைக்கான மிகவும் குறிப்பான வெளிக்காட்டல்களும் அவர்களை உணர்த்தப் போதுமானதாக இல்லாது போகுமளவு குருடாகும் வரை கோராகும் அவனுடைய கூட்டத்தாரும் வெளிச்சத்தை நிராகரித்திருந்தனர். அவைகள் அனைத்தையும் மனிதர்களுக்கும் சாத்தானின் முகவர்களுக்கும் சாற்றினர். இதேகாரியம் அழிவிற்கு அடுத்தநாள் மோசேயிடமும் ஆரோனிடமும் வந்து : “நீங்கள் கர்த்தரின் ஜனங்களைக் கொன்று போட்டீர்கள்“ என்று சொன்ன மனிதர்களாலும் செய்யப்பட்டது. தங்களை வஞ்சித்தவர்களின் அழிவில் அவர்களுடைய வழியில் தேவனுடைய அதிருப்தியை மிகவல்லமையாக உணர்த்திக் காண்பிக்கிற சான்று கொடுக்கப்பட்ட போதும், அவருடைய நியாயத்தீர்ப்புகளை சாத்தானிடமிருந்து வந்தது என்று கூறி, மோசேயும் ஆரோனும்தான் அந்த நல்ல பரிசுத்தமானவர்களின் மரணத்தைக் கொண்டு வந்தனர் என்று அறிவிக்க துணிந்தனர். இந்தச் செயலே அவர்களுடைய அழிவை முத்திரித்தது. தெய்வீகக் கிருபையின் செல்வாக்கிற்கு எதிராக மனிதருடைய இருதயத்தை வல்லமையாகக் கடினப்படுத்துகிற பரிசுத்த ஆவிக்கு விரோதமான பாவத்தை அவர்கள் செய்தனர், “எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும், எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது ... அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை “ (மத் 12:32) என்று கிறிஸ்து கூறினார். நம்முடைய இரட்சகர் தேவனுடைய வல்லமையினால் கிருபையான செயல்களைச் செய்தபோது, யூதர்கள் அவைகளை பெயல்செபூலி னுடையது என்று சொன்ன நேரத்தில் இந்த வார்த்தைகள் சொல் லப்பட்டது. பரிசுத்த ஆவியானவரின் முகவர்கள் வழியாகவே தேவன் மனிதர்களோடு தொடர்பு கொள்ளுகிறார். இந்த நிறுவனத்தை சாத்தானுடையது என்று வேண்டுமென்றே நிராகரிக்கிறவர்கள் ஆத்துமாவிற்கும் பரலோகத்திற்கும் இடையே இருக்கிற தொடர்பின் வாசலை மூடிப்போடுகிறார்கள்.PPTam 516.2

    தேவன் தம்முடைய ஆவியானவரின் வெளிக்காட்டுதலின் வழியாக பாவியைக் கடிந்துகொள்ளவும் உணர்த்தவும் கிரியை செய்கிறார். ஆவியானவரின் வேலை முடிவாக நிராகரிக்கப் படும் போது ஆத்துமாவிற்காக தேவன் செய்யக்கூடிய வேறு எதுவும் அங்கே இல்லை. தெய்வீக இரக்கத்தின் கடைசி ஆதாரமும் செயல்படுத்தப்பட்டது. மீறினவன் தேவனிடமிருந்து தன்னை பிரித்துக் கொள்ளுகிறான். பாவத்திற்குத் தன்னைத்தானே குணப்படுத்தும் பரிகாரம் இல்லை. பாவியை உணர்த்தவும் மாற்றவும் தேவன் உபயோகிக்கக்கூடிய எந்த வல்லமையும் அதற்கு மேல் அங்கே இல்லை. அவனைப் போகவிடு (ஓசியா 4:17) என்பது தெய்வீகக் கட்டளையாக இருக்கிறது. அப்போது, பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். எபி. 10:2627PPTam 517.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents