Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    2 - சிருஷ்டிப்பு

    கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது; அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். சங் கீதம் 33:6, 9. பூமி ஒருபோதும் நிலை பேராதபடி அதின் ஆதாரங்கள் மேல் அதை ஸ்தாபித்தார். சங்கீதம் 104:5.PPTam 23.1

    உண்டாக்கினவரின் கரத்திலிருந்து பூமி வந்தபோது, மிகவும் ஆழகாக இருந்தது. அதன் மேற்பரப்பு மலைகளாலும் குன்று களாலும், சமபூமிகளாலும் இடையிடையே ஆறுகளாலும் அழகான ஏரிகளாலும் பலவிதமாக நிரப்பப்பட்டிருந்தது. ஆனால் குன்று களும் மலைகளும் இப்போது இருப்பதைப்போன்று பயப்படத்தக்க செங்குத்தாகவும் விரும்பத்தகாத பிளவுகளோடும் கரடு முரடாக முரட்டுத்தனமாகவும் இருக்கவில்லை . பூமியிலிருந்த பாறைகளின் முரடான கூர்மையான விளிம்புகள், எவ்விடத்திலும் அபரிமிதமான பசுமையை வளர்த்திருந்த செழிப்பான மண்ணிற்குக் கீழாக புதைக்கப்பட்டிருந்தன. அருவருக்கத்தக்க சதுப்புநிலங்களும் கனி தராத பாலைவனங்களும் அங்கே இல்லை. அழகான புதர்களும் மென்மையான மலர்களும் எங்கும் கண்களை வரவேற்றன. உயரங்கள் இப்போதிருக்கும் எந்த மரத்தைக் காட்டிலும் அதிக கம்பீரமான மரங்களால் கிரீடம் சூட்டப்பட்டிருந்தன. நச்சுக்களால் பாதிக்கப்படாதிருந்த காற்று சுத்தமும் ஆரோக்கியத்திற்கு ஏது வாகவுமிருந்தது. முழு நிலமும் அழகில் அலங்கரிக்கப்பட்ட மைதா னங்களையும் பெருமையான அரமனைகளையும் விஞ்சியிருந்தது. பரலோக சேனை விருப்பத்தோடு இக்காட்சியை பார்த்து, தேவனுடைய அதிசயமான கிரியைகளில் களிகூர்ந்தது.PPTam 23.2

    பெருகக்கூடிய மிருகங்கள் மற்றும் தாவரங்களோடு பூமி இருந்தபோது, யாருக்காக அழகான பூமி ஆயத்தப்படுத்தப்பட்டதோ, அந்த மனிதன், சிருஷ்டிகருடைய கிரியையின் கிரீடமாக இருந்தவன், செயல்பாட்டின் மேடைக்குக் கொண்டுவரப்பட்டான். அவனுடைய கண்கள் காணக்கூடிய அனைத்தின் மேலும் அவ னுக்கு ஆளுகை அளிக்கப்பட்டது. தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச்சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணு மாக அவர்களைச் சிருஷ்டித்தார். மனித இனத்தின் துவக்கம் இங்கே தெளிவாகத் தெரிகிறது. தெய்வீக ஆவணம் தெளிவாக குறிப்பிடுகிறது; தவறான முடிவுகளுக்கு இடமே இல்லை . தேவன் மனுஷனைத் தமது சாயலாக சிருஷ்டித்தார். இங்கே ஒரு இரக சியமுமில்லை . தாவரத்திலிருந்தோ, கீழான மிருகங்களிலிருந்தோ மனிதன் மெதுவாக பரிணாம வளர்ச்சியடைந்தான் என்று அனுமானிக்க, எவ்வித சந்தர்ப்பமும் இல்லை. அப்படிப்பட்ட போதனைகள் சிருஷ்டிகரின் மாபெரும் கிரியையை மனிதனுடைய குறுகிய பூமிக்கடுத்த யோசனைகளுக்குக் கீழாகக் கொண்டுவரு கிறது. பிரபஞ்சத்தின் ஆட்சி பீடத்திலிருந்து தேவனை நீக்கும் படியாக மனிதர்கள் நோக்கங்கொண்டிருக்கிறபடியால், மனிதனை மட்டுப்படுத்தி, அவனுடைய துவக்கத்தின் கண்ணியத்திலிருந்து அவனைப் பிரிக்கிறான். உயரத்திலே நட்சத்திர உலகங்களை நிறுவி, வயலின் மலர்களுக்கு மென்மையான திறமையோடு நிறங்கொடுத்தவர், தம்முடைய வல்லமையின் அதிசயங்களினால் பூமியையும் வானங்களையும் நிரப்பினவர், தம்முடைய மகிமையான கிரியைக்கு கிரீடம் அணிவிக்க வந்தபோது, அழகான பூமியின் அதிபதியாக ஒருவனை அதன் நடுவில் நிறுத்த வந்தபோது, அவனுக்கு உயிர்கொடுத்த கரங்களுக்கு ஏற்ற ஒருவனை உண்டாக் குவதில் தவறவில்லை . நம்முடைய இனத்தின் வம்சவரலாறு அதனுடைய துவக்கத்தை, வளர்ந்து கொண்டிருந்த கிருமிகளுக்கும், மெல்லுடல் கொண்டவைகளுக்கும், நான்கு கால் ஜீவன்களுக்கும் அல்ல, ஆவியானவரின் ஏவுதலினால் கொடுக்கப்பட்டதைப்போல மாபெரும் சிருஷ்டிகரிடம் பின் கொண்டு செல்லுகிறது. மண்ணிலிருந்து உண்டாக்கப்பட்டிருந்தபோதிலும் ஆதாம் தேவனுடைய குமாரன்.PPTam 24.1

    தேவனுடைய பிரதிநிதியாக, கீழான ஜீவன்களின் மேல் அவன் வைக்கப்பட்டான். அவைகளால் தேவனுடைய ஆட்சியை மேலாண்மையைப் புரிந்துகொள்ளவோ அல்லது ஒத்துக்கொள் ளவோ முடியாது. என்றாலும் மனிதனை நேசித்து, அவனுக்குச் சேவை செய்ய அவைகள் தகுதிப்படுத்தப்பட்டன . சங்கீதக்காரன், ‘உம்முடைய கரத்தின் கிரியைகளின் மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினர். ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும், ஆகா யத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத் தினீர்’ என்று சொல்லுகிறான். சங்கீதம் 8:6-8.PPTam 25.1

    மனிதன் வெளித்தோற்றத்திலும் குணத்திலும் தேவனுடைய சாயலை ஒத்திருக்கவேண்டும். கிறிஸ்து மாத்திரமே தேவனுடைய தற்சொரூபம். எபி. 13. மனிதன் அவரைப்போல உண்டாக்கப்பட்டான். அவனுடைய இயல்பு தேவனுடைய சித்தத்திற்கு இணங்கி இருந்தது. அவனுடைய மனதால் தெய்வீகக் காரியங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவனுடைய நேசம் சுத்தமாயும், பசியும் உணர்ச்சிகளும் அறிவின் கட்டுப்பாட்டிற்குள்ளும் இருந்தன. அவன் பரிசுத்தனாகவும், அவருடைய சாயலை சுமந்து அவருடைய சித்தத்திற்கு பூரணமாக கீழ்ப்படிவதில் மகிழ்ச்சியாகவும் இருந் தான்.PPTam 25.2

    சிருஷ்டிகரின் கரத்திலிருந்து வந்த மனிதனாக, அவன் உயர்ந்த உருவத்தோடும் பூரண அங்க அமைப்போடும் இருந்தான். அவனுடைய முகம், ஆரோக்கியத்தின் சிவந்த நிறத்தைக் கொண்டிருந்து, வாழ்க்கை மற்றும் சந்தோஷ ஒளியினால் பிரகாசித்தது. ஆதாமின் உயரம் இப்போது பூமியில் வசிக்கும் மனிதனின் உயரத் தைவிட மிக அதிகமாயிருந்தது. ஏவாள் அவனைவிடச் சற்று குறைந்திருந்தாள். என்றாலும் அவளுடைய உருவம் உன்னதமாயும் அழகால் நிறைந்ததாயும் இருந்தது. பாவமில்லாத அந்தத் தம்பதியினர் செயற்கை உடைகளை உடுத்தவில்லை. தூதர்களைப்போல, இவர்களையும் ஒளியும் மகிமையும் போர்த்தி இருந்தன. தேவ னுக்குக் கீழ்ப்படிந்த காலமெல்லாம் இந்த ஒளி ஆடை அவர்களைச் சூழ்ந்திருந்தது.PPTam 25.3

    ஆதாமின் சிருஷ்டிப்பிற்குப்பின் ஒவ்வொரு ஜீவராசியும் தன் பெயரைப் பெற்றுக்கொள்ளும்படியாக அவன் முன் கொண்டுவரப்பட்டது. அவை ஒவ்வொன்றுக்கும் ஒருதுணைகொடுக்கப்பட்டிருப் பதை அவன் கண்டான். ஆனால் அவைகளுக்கு நடுவிலே அவ னுக்கு ஏற்றத் துணை காணப்படவில்லை. பூமியின் மேல் தேவன் உண்டாக்கின் எல்லா சிருஷ்டிகளிலும் மனிதனுக்கு இணையாக ஒன்றும் இல்லை. தேவன் மனுஷன் தனிமையாயிருப்பது நல்ல தல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். மனிதன் தனிமையில் வசிக்க உண்டாக்கப்படவில்லை. அவன் ஒரு சமுகவாசியாக இருக்கவேண்டும். துணை இல்லாதபோது அழகான காட்சிகளும் மகிழ்ச்சிதரும் ஏதேனின் வேலையும் பூரண சந்தோஷத்தை தருவதில் தவறியிருந்திருக்கும். தூதர்களோடு உறவாடுவது கூடபரிவிற்கும் தோழமைக்கும் அவன் கொண்டிருந்த வாஞ்சையை திருப்திப்படுத்தியிருக்க முடியாது. நேசிக்கவும், நேசிக்கப்படவும் அவனுடைய தன்மை கொண்ட எவரும் அங்கு இல்லை .PPTam 26.1

    தேவன்தாமே ஆதாமுக்கு ஒரு துணையைக் கொடுத்தார். அவனுக்கு ஏற்ற துணையை அவனுக்கு ஒத்த உதவியாளரை அவனுக்கு துணையாயிருக்கும் தகுதி கொண்டவரை அன்பிலும் பரிவிலும் அவனோடு ஒன்றாயிருக்கும் ஒருவரை அவர் உண்டாக் கினார். தலையைப் போலிருந்து அவளைக் கட்டுப்படுத்தக்கூடாது என்றும், கீழானவளாக அவன் காலின் கீழ் மிதிக்கப்படக்கூடாது என்றும், அதற்கு மாறாக, அவனுக்கு சமமாக, அவன் பக்கத்தில் நின்று, நேசித்து, அவனால் பாதுகாக்கப்படும் நபராக இருக்கவேண்டும் என்று அடையாளப்படுத்தும்படி ஆதாமின் ஒரு புறத்திலிருந்து எடுக்கப்பட்ட எலும்பினால் ஏவாள் உண்டாக்கப்பட்டாள். மனிதனின் ஒரு பகுதியாக, அவன் எலும்பில் எலும்பும், மாம்சத்தில் மாம்சமுமாக, இந்த உறவிலே இருக்கவேண்டிய நெருங்கிய இணைப்பையும், பிரியமுள்ள இணைப்பையும் காண்பிக்கிற அவனுடைய இரண்டாம் சரீரமாக அவள் இருந்தாள். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; ... ஒவ்வொரு வனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான். எபே. 5:29. இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். ஆதி. 2:24.PPTam 26.2

    தேவன் முதல் திருமணத்தை நடத்திவைத்தார். இவ்வாறு பிரபஞ்சத்தின் சிருஷ்டிகரே இந்த ஏற்பாட்டை தொடக்கிவைத்தார். விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும் இருக்கிறது. எபி 13:4. இது தேவன் மனிதனுக்குக் கொடுத்த முதன்மை பரிசுகளில் ஒன்றாக இருக்கிறது. விழுகைக்குப்பின் ஆதாம் பரதீசின் வாச லைத் தாண்டி தன்னுடன் கொண்டு வந்த இரண்டு நியமங்களில் ஒன்றாக இது இருக்கிறது. இந்த உறவில் தெய்வீகக் கொள்கைகள் உணரப்பட்டுக் கீழ்ப்படியப்படுமானால், திருமணம் ஒரு ஆசீர்வாத மாக இருக்கும். இது மனித இனத்தின் தூய்மையையும், மகிழ்ச்சி யையும் பாதுகாக்கிறது. இது மனிதனுடைய சமுகத் தேவைகளை சந்திக்கிறது. இது சரீர, மன, ஆவிக்குரிய இயல்புகளை உயர்த்து கிறது.PPTam 26.3

    தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத் தார். தேவன் உண்டாக்கிய அனைத்தும் பூரண அழகுள்ளதாக இருந்தது. பரிசுத்தமான அந்த தம்பதியினருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் எதுவும் குறைவுற்றிருந்ததாகத் தோன்றவில்லை. என்றாலும், அவர்களுக்கான விசேஷமான வீடாக இருக்கும்படி ஒரு தோட்டத்தை ஆயத்தப்படுத்தினதின் வழியாக சிருஷ்டிகர் தமது அன்பின் மற்றொரு அடையாளத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.PPTam 27.1

    இந்த தோட்டத்தில் அனைத்து விதமான மரங்களும் இருந்தன . அவைகளில் அநேகமானவை மணம் வீசும் சுவையான பழங்களால் நிறைந்திருந்தன. மேல்நோக்கி வளர்ந்த, இருந்த போதும் அழகான தோற்றத்தைக் கொண்ட, பரீட்சிக்கும் செழிப்பான அநேகவிதமான சோதிக்கும் கனிகளின் பழுவினால் தாழ்ந்த கிளைகளைக் கொண்டிருந்த திராட்சை செடிகள் இருந்தன. அவைகளின் கிளைகளை வளைவுகளாக வளைத்து, இவ்வாறு சாத்தாலும் கனி களாலும் மூடப்பட்டுள்ள உயிருள்ள மரங்களை தங்கள் வசிக்கு மிடமாக மாற்றுவது ஆதாம் மற்றும் ஏவாளுடைய வேலையாக இருந்தது. ஒவ்வொரு நிறத்திலும் மிகத்திரளான மணம் வீசும் மலர்கள் இருந்தன. தோட்டத்தின் மத்தியில் மற்ற அனைத்து மரங்களையும் விஞ்சும் மகிமையுடன் ஜீவவிருட்சம் இருந்தது. அதன் கனிகள் பொன்னாலும் வெள்ளியினாலுமான ஆப்பிள் பழங்களைப் போலிருந்து, ஜீவனை நீட்டிக்கும் வல்லமையைக்கொண்டிருந்தது.PPTam 27.2

    சிருஷ்டிப்பு இப்போது முழுமையடைந்திருந்தது. இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட் டுத் தீர்ந்தன. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது. ஏதேன் பூமியின் மீது மலர்ந்தது. ஜீவ விருட்சத்தினிடம் ஆதாமும் ஏவாளும் சுதந்திரமாகச் சென்று வந்தனர். அழகான சிருஷ்டிப்பை, பாவத்தின் எந்தக் கறையும் அல்லது மரணத்தின் எந்த நிழலும் மாசுபடுத்தவில்லை . அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே. யோபு 38:7.PPTam 27.3

    மாபெரும் யெகோவா பூமிக்கு அஸ்திபாரமிட்டார். அவர் பூமி முழுவதையும் அழகினால் உடுத்துவித்து, மனிதனுக்கு உப யோகமானவைகளால் அதை நிரப்பினார். நிலத்திலும் சமுத்திரத் திலுமுள்ள அனைத்து ஆச்சரியமானவைகளையும் அவர் உண்டாக் கினார். ஆறு நாட்களில் சிருஷ்டிப்பின் மாபெரும் வேலை முடிக்கப்பட்டது. தேவன்: தாம் உண்டாக்கின் தம்முடைய கிரியைகளையெல் லாம் முடித்த பின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். தேவன் தாம் சிருஷ்டித்து உண்டு பண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்த பின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். தேவன் தமது கரத்தின் கிரியையை திருப்தியோடு நோக்கினர். அனைத்தும் பூரணமாகவும், அதனுடைய தெய்வீக ஆக்கியோனுக்கு ஏற்றபடியும் இருந்தன. பின்னர் அவர் இளைப்பாறினார். சோர்ந்து போனவராக அல்ல, மாறாக, தமது ஞானத்தின் மற்றும் நன்மையின் கனிகளினாலும் தமது மகிமையின் வெளிப்பாடுகளினாலும் திருப்தியடைந்தவராக இளைப்பாறினார்.PPTam 28.1

    ஏழாம் நாளில் ஓய்ந்திருந்த பின்பு, தேவன் அதைப் பரிசுத்தப் படுத்தி, மனிதனுக்கான ஓய்வாக அதை தனிமைப்படுத்தி வைத் தார். சிருஷ்டிகரின் உதாரணத்தைப் பின்பற்றி மனிதனும் இந்தப் பரிசுத்த நாளில் ஓய்ந்திருக்க வேண்டும். அவன் வானத்தையும் பூமியையும் காணும்போது, தேவனுடைய மாபெரும் சிருஷ்டிப்பை நினைத்துப் பார்ப்பான். தேவனுடைய ஞானத்திற்கும் தயைக்கும் உண்டான சான்றுகளைப் பார்க்கும் போது, அவனுடைய இருதயம் தன்னை உண்டாக்கினவருக்கான அன்பிலும் பயபக்தியிலும் நிறையும்.PPTam 28.2

    தமது ஆசீர்வாதத்தை ஏழாம் நாளின் மேல் வைத்ததன் மூலம் தமது சிருஷ்டிப்பின் நினைவுச்சின்னத்தை தேவன் ஏதேனில் நிறுத்தினார். முழுமனித இனத்துக்கும் தகப்பனும், பிரதிநிதியுமான ஆதாமிடம் தேவன் ஓய்வுநாளைக் கொடுத்தார். பூமியின் மீது வசிக்கும் அனைவர் பங்கிலும், தேவனே தங்களது சிருஷ்டிகரும் நியாயமான அரசர் என்றும், தாங்கள் அவருடைய கரங்களின் கிரியையும் அவருடைய அதிகாரத்திற்கு உட்பட்டவர்களும் என்றும் நன்றியோடு ஒப்புக்கொள்ளுகிற ஒரு செயலாகவே இதன் ஆசரிப்பு இருக்கவேண்டியதிருந்தது. இவ்வாறாக, இந்த நியமனம் முழுமையான நினைவு நாளாகவும், மனுக்குலம் அனைத்திற்குமாக கொடுக்கப்பட்டதாகவும் இருந்தது. இதில் எதுவுமே நிழலாட்ட மாகவும் குறிப்பிடப்பட்டவர்களுக்கென்று வரையறுக்கப்பட்ட தாகவும் இல்லை .PPTam 28.3

    பரதீசிலுங்கூட ஓய்வுநாள் மனிதனுக்கு அத்தியாவசியமான தென்று தேவன் கண்டார். தேவனுடைய கிரியையை முழுமையாக நிறைவேற்றுவதற்கும், அவருடைய வல்லமையையும் தயவையும் தியானிப்பதற்கும் ஏற்ப ஏழு நாட்களில் ஒருநாள், அவன் தனது சொந்த விருப்பங்களையும் நாட்டங்களையும் புறம்பே வைக்க வேண்டும். தேவனைக் குறித்து இன்னும் தெளிவாக நினைவு படுத் திக்கொள்ளவும், தான் அனுபவித்த மற்றும் பெற்றிருக்கிற அனைத்தும் சிருஷ்டிகரின் நன்மை செய்யும் கரத்திலிருந்து வந்திருப்பதால், நன்றியோடிருக்கவும் அவனுக்கு ஓய்வுநாள் தேவைப்பட்டது.PPTam 29.1

    தாம் சிருஷ்டித்தவைகளைக்குறித்த சிந்தனைக்கு ஓய்வுநாள் மனிதனின் மனதை திருப்பும் என்று தேவன் வடிவமைத்திருக்கிறார். சிருஷ்டிகரான, அனைத்தின் மேலும் ஆட்சி செய்யும் ஜீவனுள்ள தேவன் ஒருவர் இருக்கிறார் என்று அறிவித்து, இயற்கை மனிதனுடைய நினைவோடு பேசும். வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது - சங்கீதம் 191,2. பூமியை போர்த்தியிருக்கும் அழகு தேவனுடைய அன்பின் அடையாளம். நித்திய குன்றுகளிலும், உயர்ந்த மரங்களிலும், விரியும் மொக்குகளிலும், மென்மையான பூக்களிலும் அதை நாம் காணலாம். அனைத்தும் தேவனைக் குறித்து நம்மோடு பேசுகிறது. எப்போதும் இவைகளையெல்லாம் உண்டாக்கின அவரைச் சுட்டிக் காட்டுகிற ஓய்வுநாள், இயற்கையின் மாபெரும் புத்தகத்தைத் திறந்து, அங்கே சிருஷ்டிகருடைய ஞானத்தையும் வல்லமையையும் அன்பையும் அடையாளம் காணும்படி மனிதனை அழைக்கிறது.PPTam 29.2

    நமது முதல் பெற்றோர், பரிசுத்தமும் குற்றமற்றவர்களுமாக படைக்கப்பட்டிருந்தபோதிலும், தவறு செய்யும் சாத்தியத்திற்கு அப்பால் வைக்கப்படவில்லை. தேவன் அவர்களை சுயாதீனமுள்ள வர்களாகவும், அவருடைய தயவுள்ள குணத்தையும் ஞானத்தையும் அவருடைய வேண்டுகோளின் நியாயத்தையும் போற்றும் திறமை யுள்ளவர்களாகவும், அவருக்கு கீழ்ப்படியவோ அல்லது கீழ்ப் படியாதிருக்கவோ முழு சுதந்திரமும் உள்ளவர்களாகவும் உண்டாக்கினார். தேவனோடும் பரிசுத்த தூதர்களோடுமுள்ள தோழமையை மகிழ்ச்சியோடு அனுபவிக்க வேண்டியதிருந்தார்கள். ஆனால் நித்தியமான பாதுகாப்பு அவர்களுக்குக் கொடுக்கப்படு முன் அவர்களுடைய விசுவாசம் சோதிக்கப்பட வேண்டும். மனிதனுடைய வாழ்க்கையின் துவக்கத்திலேயே, சாத்தானுடைய விழுகைக்கு அஸ்திபாரமிட்ட அபாயகரமான உணர்ச்சியான சுயத்தில் திளைக்கும் ஆசையின் மேல் ஒரு தடை வைக்கப்பட்டது. தோட்டத்தின் நடுவில் ஜீவவிருட்சத்தின் அருகில் நின்றிருந்த நன்மை தீமை அறியும் விருட்சம் நம் முதல் பெற்றோர்களின் கீழ்ப்படிதலுக்கும் விசுவாசத்திற்கும் அன்பிற்கும் சோதனையாக இருக்கவேண்டியதிருந்தது. மற்ற ஒவ்வொரு மரத்திலிருந்தும் சுதந்தரமாக சாப்பிட அனுமதிக்கப்பட்டிருந்தபோது, மரணமடையும் வேதனையின் அடிப்படையில் இதிலிருந்து புசிக்க தடை செய்யப் பட்டிருந்தனர். அவர்கள் சாத்தானுடைய சோதனைக்கும் வெளிப் படுத்தப்பட வேண்டும். ஆனால் சோதனையை தாங்குவார்களானால், கடைசியாக அவனுடைய வல்லமைக்கு அப்பால் வைக்கப்பட்டு, தேவனுடைய நித்திய தயவை அனுபவிப்பார்கள்.PPTam 29.3

    மனிதன் வாழ்ந்திருக்க தவிர்க்க முடியாத நிபந்தனையாக தேவன் அவனைப் பிரமாணத்தின் கீழ் வைத்தார். அவன் தெய்வீக அரசாங்கத்தின் பிரஜையாக இருந்தான். சட்டமின்றி எந்த அரசும் இருக்க முடியாது.PPTam 30.1

    தமது பிரமாணங்களை மீறும் வல்லமையற்றவனாக மனிதனை தேவன் சிருஷ்டித்திருக்கலாம். தடை செய்யப்பட்ட கனியை தொடுவதிலிருந்து ஆதாமின் கையை அவர் பிடித்திருக் கலாம். அப்படிச் இருந்திருக்குமானால், மனிதன் சுயாதீனமுள்ள வனாக இருந்திருக்கமாட்டான். வெறும் இயந்திரமாக இருந்திருப் பான். தெரிந்தெடுக்கும் சுதந்திரம் இல்லாதபோது, அவனுடைய கீழ்ப்படிதல் மனமார்ந்த ஒன்றாக இல்லாமல், கட்டாயப்படுத்தப் பட்ட ஒன்றாக இருந்திருக்கும். குணத்தில் எந்தவித முன்னேற்றமும் இருந்திருக்காது. அப்படிப்பட்ட முறை மற்ற உலகவாசிகளோடு இடைபடும் தேவனுடைய திட்டத்திற்கு எதிர்மறையாக இருந்திருக் கும். மனிதனை அறிவுஜீவியாக இருக்கத் தகுதியற்றவனாக்கி, தேவன் சர்வாதிகார ஆட்சி செய்கிறார் என்ற சாத்தானின் குற்றச்சாட்டை அது உறுதிப்படுத்தியிருக்கும்.PPTam 30.2

    தேவன் மனிதனை செம்மையானவனாக உண்டாக்கினார். அவனுக்கு தீமையின் மீது எவ்வித விருப்பமும் இல்லாத உன்னதமான குணப் பண்புகளைக் கொடுத்திருந்தார். உயர்ந்த அறிவுத்திறன்களை அவன்மேல் வைத்து, விசுவாசத்தில் உண்மை யாயிருக்கிறதற்கேதுவாக மிகப் பலமான தூண்டுதல்களையும் அவன் முன் வைத்தார். பூரணமான நிரந்தரமான கீழ்ப்படிதலே நித்திய மகிழ்ச்சியின் நிபந்தனையாக இருந்தது. இந்த நிபந்தனையின்பேரில் ஜீவ விருட்சத்தை அவன் அடையமுடியும்.PPTam 30.3

    நம்முடைய முதல் பெற்றோரின் இல்லமே, அவர்களுடைய பிள்ளைகள் பூமியை சுதந்தரிக்கப்போகும் போது மற்ற இல்லங்களுக்கான மாதிரி . தேவனுடைய கரத்தினால் தானே அலங்கரிக்கப் பட்டிருந்த அந்த இல்லம், ஆடம்பரமான அரண்மனையாக இல்லை . மனிதர்கள் தங்களுடைய பெருமையில், சிறப்பானதும் விலையுயர்ந்ததுமான கட்டடங்களில் மகிழ்ச்சியடைந்து, தங்கள் சொந்த கைகளின் கிரியைகளில் மேன்மை பாராட்டுகிறார்கள். ஆனால் தேவன் ஆதாமை ஒரு தோட்டத்தில் வைத்தார். அதுதான் அவன் வசிக்கும் இடமாக இருந்தது, நீல வானங்கள் அதன் கூரை யாகவும், மென்மையான மலர்களும் பசேல் என்று கம்பளமும் கொண்ட பூமி தரையாகவும், அழகான மரங்களின் இலைகளோடு இருந்த கிளைகள் திரைச்சீலைகளாகவும் இருந்தன. அதன் சுவர் களில் மிகச் சிறப்பான அலங்காரங்கள் மாபெரும் கலை நிபுணரின் கைவேலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. உண்மையான மகிழ்ச்சி பெருமையிலும் ஆடம்பரத்திலும் திளைப்பதில் இல்லை, மாறாக, அவருடைய கிரியைகள் மூலமாக தேவனோடு வைத்திருக் கும் தோழமையில் இருக்கிறது என்கிற அனைத்து யுகங்களுக்கு மான பாடம் அந்த பரிசுத்த தம்பதியரின்PPTam 31.1

    சுற்றுச்சூழலில் இருந்தது. மனிதன் செயற்கைக்கு குறைவான கவனம் கொடுத்து, அதிகமான எளிமையை பண்படுத்துவானாகில், அவர்களை சிருஷ்டித்ததில் இருந்த தேவனுடைய நோக்கத்திற்கு பதிலளிக்க அதிகம் நெருங்கி வருவான். பெருமையும், பேராவலும் ஒருபோதும் திருப்தியடைவதில்லை. ஆனால் உண்மையாகவே ஞானமுள்ளவர்கள், தேவன் அனைவருடைய அருகாமையிலும் வைத்திருக்கிற மகிழ்ச்சியின் ஊற்றுகளில் போதுமான உயர்த்துகிற இன்பத்தைக் காண்பார்கள்.PPTam 31.2

    ஏதேனின் வாசிகளுக்கு, தோட்டத்தை பராமரிக்கும் வேலை கொடுக்கப்பட்டது. அவர்கள் பணி, சோர்வடையச் செய்கிறதாயிரா மல், இன்பமானதும், உற்சாகமூட்டுகிறதுமாயிருந்தது. மனி தனுடைய மனதை ஆக்கிரமிக்கவும், சரீரத்தை பலப்படுத்தவும், அவனுடைய திறமைகளை முன்னேற்றுவிக்கவும் தேவன் வேலையை அவனுக்கு ஒரு ஆசீர்வாதமாக நியமித்தார். மனம் மற்றும் சரீர செயல்களில் ஆதாம் தனது பரிசுத்த வாழ்க்கையின் ஒரு உயர்ந்த இன்பத்தைக் கண்டான். தனது கீழ்ப்படியாமையின் விளைவாக, அந்த அழகிய இல்லத்திலிருந்து துரத்தப்பட்டு, நிலத்தோடு கடினமாகப் போராடி அனுதின ஆகாரத்தை அடையும் படி கட்டாயப்படுத்தப்பட்டான். இந்த உழைப்பு, தோட்டத்திலிருந்த இன்பமாக வேலையிலிருந்து வெகுவாக வேறுபட்டிருந்த போதிலும், சோதனைக்கு எதிரான பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியின் ஊற்றாகவுமே இருந்தது. தளர்வோடும், வேதனையோடும் செய்யும் வேலையாக இருந்தாலும், அதைச் சாபமாக நினைக்கிறவர்கள், மனதில் ஒரு தவறை போற்றுகிறார்கள். ஐசுவரியவான்கள் பல வேளைகளில் வேலை செய்பவர்களை இகழ்ச்சியாகப் பார்க்கிறார்கள். ஆனால் இது மனிதனை உண்டாக்கியதில் தேவனுடைய நோக்கத்திற்கு அவமதிப்பாக, முற்றிலும் மாறுபட்டதாக இருக் கிறது. மிக உயர்ந்த செல்வந்தனுடைய ஆஸ்திகூட செல்வந்தனான ஆதாமுக்குக் கொடுக்கப்பட்ட சொத்துக்களோடு ஒப்பிடும் போது ஒன்று மில்லை ) என்னவாக இருக்கிறது? என்றாலும், ஆதாம் ஒன்றும் செய்யாது சும்மாயிருக்கக் கூடாது. மனிதனுக்கு எது சந்தோஷம் தரும் என்று புரிந்திருந்த நமது சிருஷ்டிகர், ஆதாமுக்கு அவனுடைய வேலையை நியமித்தார். வேலை செய்யும் ஆண்களாலும் பெண்களாலும் மாத்திரமே வாழ்க்கையின் மெய்யான மகிழ்ச்சி கண்டுகொள்ளப்படும். தூதர்கள் ஊக்கமாக உழைக்கிறார்கள். அவர்கள் மனிதர்களுக்காக தேவனுடைய ஊழியக்காரர்களாயிருக் கிறார்கள். சோம்பலின் பழக்கத்திற்கு சிருஷ்டிகர் எந்த இடத்தையும் ஆயத்தப்படுத்தவில்லை.PPTam 31.3

    தேவனுக்கு விசுவாசமாக இருந்தவரையிலும் ஆதாமும் அவனுடைய துணைவியும் பூமியை ஆட்சி செய்கிறவர்களாக இருந்தார்கள். ஜீவனுள்ள ஒவ்வொன்றின் மேலும் எல்லையில்லாத ஆதிக்கம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. சிங்கமும் ஆட் டுக்குட்டியும் அவர்களைச் சுற்றி சமாதானமாக விளையாடி, அவர்கள் கால்களுக்கடியில் ஒன்றாக படுத்துக்கொண்டன. மகிழ்ச்சியான பறவைகள் அவர்களைச் சுற்றி பயமின்றி பறந்தது. அவைகளுடைய மகிழ்ச்சியான பாடல்கள் தங்களை சிருஷ்டித்த வரை துதித்து எழுந்தபோது, ஆதாமும் ஏவாளும் பிதாவிற்கும் குமாரனுக்கும் நன்றி செலுத்துவதில் அவைகளோடு சேர்ந்துகொண் டார்கள்.PPTam 32.1

    பரிசுத்த தம்பதியினர், தேவனுடைய தகப்பன் என்னும் பரா மரிப்பின்கீழ் பிள்ளைகளாக மாத்திரமல்ல, சர்வஞானமும் கொண்ட சிருஷ்டிகரிடமிருந்து போதனைகளைப் பெற்றுக்கொள்ளும் மாண வர்களாகவும் இருந்தார்கள். தூதர்களை அவர்கள் சந்தித்தனர். தங்களை உண்டாக்கினவரோடு எந்த திரையும் இடையிலின்றி தோழமை கொள்ள அருளப்பட்டனர். ஜீவவிருட்சம் கொடுத்த வீரி யத்தினால் அவர்கள் நிரம்பியிருந்தனர். அவர்களுடைய அறிவு தூதர்களை விட சிறிதே குறைந்திருந்தது. காணக்கூடிய பிரபஞ்சத்தின் இரகசியங்கள் பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைகளையும் (யோபு 37:16) முடிவடையாத போதனை மற்றும் மகிழ்ச்சியின் ஊற்றையும் அவர்களுக்கு நல்கியது. ஆறாயிரம் வருட ஆராய்ச்சியில் மனிதனை ஈடுபடுத்தின் இயற்கையின் சட்டங்களும் செயல்முறைகளும் அனைத்தையும் வடிவமைத்துத் தாங்கும் நித்தியமானவரால் அவர்கள் மனங்களுக்குத் திறந்து காண்பிக்கப்பட்டது. அவர்கள் இலையோடும் பூவோடும் மரத்தோ டும் உரையாடி, ஒவ்வொன்றிலிருந்தும் வாழ்க்கையின் இரகசியங்களைச் சேகரித்துக்கொண்டிருந்தார்கள். தண்ணீர்களுக்குள்ளே விளையாடும் வலிமையானலிவியாதானிலிருந்து, சூரிய ஒளியில் மிதக்கின்ற மிகச்சிறிய பூச்சிவரை அனைத்து ஜீவன்களுடனும் ஆதாம் பரீட்சயமாகியிருந்தான். அவைகள் ஒவ்வொன்றுக்கும் அவன்தான் பெயர் வைத்தான். அவைகள் அனைத்தின் இயல்போ டும் பழக்கங்களோடும் அவன் அறிமுகமாகியிருந்தான். வானங்களிலுள்ள தேவனுடைய மகிமை, தங்கள் முறையான சுழற்சி களிலிருக்கும் எண்ணிறந்த உலகங்கள், மேகங்கள் தொங்கும்படி வைக்கும் நிறை, ஒளி ஒலி, பகல் இரவு ஆகியவற்றின் இரகசியங்கள் அனைத்தும் நமது முதல் பெற்றோரின் ஆராய்ச்சிக்கு திறந் திருந்தது. காட்டிலுள்ள ஒவ்வொரு இலையின் மீதும் அல்லது மலையிலுள்ள ஒவ்வொரு கல்லின் மீதும், பிரகாசிக்கும் ஒவ்வொரு நட்சத்திரத்திலும், பூமியிலும் ஆகாயத்திலும் காற்றிலும் தேவனுடைய நாமம் எழுதப்பட்டிருந்தது. சிருஷ்டிப்பின் ஒழுங்கும் இணக்கமும் எல்லையில்லாத ஞானத்தையும் வல்லமையையுங் குறித்து அவர்களோடு பேசியது. எப்போதும் அவர்களுடைய இருதயங்களை ஆழமான அன்பினால் நிறைத்து, புதிய நன்றியின் வெளிப் பாடுகளைக் கொண்டு வந்த சில கவர்ச்சிகளின் கண்டுபிடிப்பு இருந்து கொண்டே இருந்தது.PPTam 32.2

    தெய்வீக பிரமாணங்களுக்கு உண்மையாக இருந்தவரையிலும் அறிந்து கொள்ளவும் அனுபவிக்கவும் நேசிக்கவுங்கூடிய அவர் களின் திறன் தொடர்ந்து உயரும். புதிய அறிவின் பொக்கிஷங்களை நிலையாக அடைந்து கொண்டேயிருப்பார்கள். மகிழ்ச்சியின் புதிய ஊற்றுகளை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார்கள். அளவிட முடியாத, தவறாத தேவனுடைய அன்பைக் குறித்த தெளிவான இன்னும் தெளிவான கருத்துக்களைப் பெற்றுக்கொண்டே இருப் பார்கள்.PPTam 33.1