Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    50 - தசமபாகங்கள், காணிக்கைகள்

    எபிரெயர்களின் பொருளாதாரத்தில் ஜனங்களுடைய வருமானத்தில் பத்தில் ஒரு பகுதி தேவனுடைய ஆராதனையை ஆதரிக்கும்படியாக ஒதுக்கப்பட்டது. இவ்விதம் தேசத்திலே நிலத்தின் வித்திலும் விருட்சங்களின் கனியிலும், தசம பாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது. கோலின் கீழ்ப்பட்ட ஆடுமாடுகளிலே பத்தில் ஒரு பங்காகிறதெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமானது (லேவி. 27:30, 32) என்று மோசே இஸ்ரவேலருக்கு அறிவித்தான்.PPTam 681.1

    ஆனால் தசமபாக அமைப்பு எபிரெயர்களிடம் துவங்கியிருக்கவில்லை . ஆரம்ப காலத்திலிருந்தே தசம பாகம் தன்னுடையது என்று ஆண்டவர் உரிமை பாராட்டியிருந்தார். இந்த உரிமை பாராட்டல் உணரப்பட்டு கனப்படுத்தப்பட்டிருந்தது. ஆபிரகாம் தேவனுடைய ஆசாரியனாகிய மெல்கிசேதேக்கிற்கு தசம பாகங்களைக் கொடுத்தான். ஆதி. 14:20. யாக்கோபு வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, அலைந்து திரிந்தபோது பெத்தேலில் தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் (ஆதி. 28:22) என்று ஆண்டவருக்கு வாக்குக் கொடுத்தான். இஸ்ரவேலர்கள் ஒரு தேசமாக ஸ்தாபிக்கப்படவிருந்தபோது, தசமபாக சட்டம் தெய்வீகம் நியமித்திருந்த கட்டளைகளில் ஒன்றாக மீண்டும் உறுதிப்படுத் தப்பட்டது. அவர்களுடைய செழிப்பு அதற்குக் கீழ்ப்படிவதையே சார்ந்திருந்தது.PPTam 681.2

    தமது சிருஷ்டிகளின் ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்கும் தேவனே ஊற்று என்பதும், அவருடைய ஏற்பாட்டிலிருக்கிற நன்மையான ஈவுகளுக்கான மனிதனுடைய நன்றி அவருக்கே உரியது என்பதுமான இந்த மாபெரும் சத்தியங்களை மனிதரின் மனங்களில் பதிப்பதுவே தசம பாகங்களும் காணிக்கைகளும் அடங்கிய அமைப்பின் நோக்கமாயிருந்தது.PPTam 682.1

    எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர் - அப். 17:25; சகல காட்டு ஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள் (சங். 50:10) என்று ஆண்டவர் அறிவிக்கிறார். வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது ஆகாய் 28. செல்வத்தைப் பெறும்படி மனிதனுக்கு வல்லமை கொடுப்பது தேவனே . உபா. 3:18. அவரிடமிருந்தே அனைத்துக்காரியங்களும் வருகிறது என்பதன் ஒப்புதலாக அவருடைய தாராளத்தின் ஒரு பகுதி அவருடைய ஆராதனையை தாங்கும்படியாக அவருக்குத் திரும்பஈவுகளிலும் காணிக்கைகளிலும் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆண்டவர் கட்டளையிட்டிருந்தார்.PPTam 682.2

    தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; இங்கே ஓய்வுநாள் கட்டளையைப் போன்ற அதே வெளிப்பாடு இருக்கிறது. ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள் (யாத் 20:10). மனிதனுடைய காலத்திலும் அவனுடைய பொருட்களிலும் ஒரு குறிப்பிட்ட பகுதியை தேவன் தமக்கென்று ஒதுக்கியிருக்கிறார். குற்ற உணர்வு இன்றி தன்னுடைய சொந்த நலனுக்காக இதில் எதையும் எந்த மனிதனும் எடுத்துக்கொள்ள முடியாது.PPTam 682.3

    ஆசரிப்புக் கூடார வேலைக்காக தனித்துவைக்கப்பட்ட லேவியர்களின் உபயோகத்திற்காக தசம பாகம் சிறப்பாக அர்ப்பணிக்கப்படவேண்டும். எனினும் மத நோக்கங்களுக்காக பங்களிப்பதில் இது எவ்விதத்திலும் ஒரு எல்லையல்ல. பின்னதாக ஆலயம் என்று அழைக்கப்பட்ட ஆசரிப்புக் கூடாரம் உற்சாகமாகக் கொடுக்கப்பட்ட காணிக்கைகளினாலேயே எழுப்பப்பட்டது அதை பழுது பார்ப்பதற்கும் அதன் செலவுகளுக்கும் அவசியமானதை ஏற்பாடு செய்ய, ஜனங்கள் எண்ணப்படும் போதெல்லாம் ஆசரிப்புக் கூடாரத்தின் சேவைக்காக ஒவ்வொருவரும் அரைச் சேக்கல் கொடுக்கவேண்டும் என்று மோசே கட்டளையிட்டிருந்தான். நெகேமியாவின் காலத்தில் இந்த நோக்கத்திற்காக வருடத்திற்கு ஒருமுறை ஒரு பங்கு கொடுக்கப்பட்டது. பார்க்கவும், யாத். 30:12-16, 2 இராஜா. 12:4, 5, 2 நாளா. 24:4-13; நெகே. 10:32, 33. அவ்வப்போது பாவநிவாரண பலிகளும் தோத்திர காணிக்கைகளும் ஆண்டவரிடம் கொண்டுவரப்பட்டிருந்தன. இவை வருடாந்தரப் பண்டிகைகளில் மிக அதிகமாகக் கொடுக்கப்பட்டிருந்தன. மற்றும் ஏழைகளுக்கான மிகவும் தாராளமான ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.PPTam 682.4

    தசம் பாகம் ஒதுக்கப்படுவதற்கு முன்பே தேவனுடைய உரிமைகளைக் குறித்த ஒப்புதல் இருந்து வந்தது. தேசத்தின் அனைத்து விளைச்சல்களிலும் முதலில் விளைந்தது அவருக்குப் பிரதிஷ்டைபண்ணப்பட்டிருந்தது. ஆடுமயிர்கத்தரிக்கப்பட்டபோது முதலாவது கம்பளியும், கோதுமை போரடிக்கப்பட்டபோது முதலாவது எடுத்ததும், எண்ணெயிலும் திராட்ச இரசத்திலும் முதலாவதும் தேவனுக்கென்று தனித்து வைக்கப்பட்டது. அவ்வாறே அனைத்து மிருகங்களின் முதல் பிறப்பும் வைக்கப்பட்டது. முதல் மகனுக்காக மீட்பின் விலை கொடுக்கப்பட்டது. முதல் கனிகள் ஆசரிப்புக் கூடாரத்தில் ஆண்டவருக்கு முன்பாக கொடுக்கப்பட வேண்டும். பின்னர் அது ஆசாரியர்களின் உபயோகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டது.PPTam 683.1

    இவ்விதமாக, தங்களுடைய வயல்களுக்கும் மந்தைகளுக்கும் மாடுகளுக்கும் தேவனே மெய்யான தனியுரிமை கொண்டவர் என்றும், விதைப்பிற்கும் அறுப்பிற்கும் தேவையான சூரிய ஒளியையும் மழையையும் அனுப்பினார் என்றும், தாங்கள் சு தந்தரித்திருக்கும் அனைத்தும் அவருடைய சிருஷ்டிப்பு என்றும், அவருடைய பொருட்களின் மேல் அவர்களை உக்கிராணக்காரராக ஏற்படுத்தியிருக்கிறார் என்றும் ஜனங்கள் நிலையாக நினைவூட்டப்பட்டனர்.PPTam 683.2

    இஸ்ரவேலின் மனிதர்கள் வயல்கள் பழத்தோட்டங்கள் மற்றும் திராட்சத்தோட்டங்களின் முதற்கனிகளோடு ஆசரிப்புக் கூடாரத்தில் கூடினபோது தேவனுடைய நன்மையைக் குறித்த பொதுவான ஒப்புதல் கொடுக்கப்பட்டது . ஆசாரியன் ஈவுகளை ஏற்றுக்கொண்டபோது, கொடுத்தவன் யெகோவாவின் சமூகத்தில் இருப்பதாக உணர்ந்து, என் தகப்பன் அழிவுக்கு நேரான சீரியா தேசத்தானாயிருந்தான் என்று கூறினான். மேலும் எகிப்தின் பரதேச வாழ்க்கையை விவரித்து : அங்கேயிருந்து பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரங்களினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும் விடுவித்தார்; எங்களை இவ்விடத்துக்கு அழைத்து வந்து, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத்தார். இப்பொழுதும், இதோ, கர்த்தாவே, தேவரீர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய கனிகளின் முதற்பலனைக் கொண்டுவந்தேன் என்று சொன்னான். உபா. 26:5, 8-11.PPTam 683.3

    மதத்திற்காகவும் நற்காரியங்களின் நோக்கங்களுக்காவும் எபிரெயர்களிடமிருந்து கோரப்பட்ட பங்கு அவர்களுடைய வருமானத்தில் நான்கில் ஒரு பகுதிக்கு வந்தது. ஜனங்களின் ஆதாரங்களிலிருந்து இவ்வளவு பாரமான வரி வாங்குவது அவர்களை வறுமையில் கொண்டு விடும் என்று எதிர்பார்க்கப்படக் கூடும். ஆனால் அதற்கு மாறாக, இந்த ஒழுங்குகளை உண்மையாக கைக்கொள்ளுவதே அவர்களுடைய செழுமைக்கான ஒரு நிபந்தனையாக இருந்தது. அவர்களுடைய கீழ்ப்படிதலின் நிபந்னையில் பூமியின் கனியைப் பட்சித்துப் போடுகிறவைகளை உங்கள் நிமித்தம் கண்டிப்பேன், அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை, வெளியிலுள்ள திராட்சக்கொடி பழமில்லாமற்போவதுமில்லை ....... அப்பொழுது எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள்; தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (மல், 3:11) என்ற வாக்குத்தத்தத்தை தேவன் கொடுத்திருந்தார்.PPTam 684.1

    தேவனுடைய காரியத்திற்காக உற்சாகமாகக் கொடுக்கும் காணிக்கையைக் கூட சுயநலமாகத் தன்னிடமே வைத்துக் கொண்டதின் விளைவுகளைக் குறித்த குறிப்பான விளக்கம் ஆகாய் தீர்க்கதரிசியின் நாட்களில் கொடுக்கப்பட்டது. பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தபின்பு யூதர்கள் ஆண்டவருடைய ஆலயத்தை திரும்பக் கட்டினர். ஆனால் சத்துருக்களிடமிருந்து தீர்மானமான எதிர்ப்பை சந்தித்ததால் அந்த வேலையை அவர்கள் நிறுத்த, ஆலயத்தைக் கட்டி முடிப்பது கூடாதகாரியம் என்று அவர்களை உணர்த்தின் மெய்யான தரித்திரத்திற்கு அவர்கள் ஒரு பஞ்சத்தினால் கொண்டுவரப்பட்டனர். கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்ற காலம் இன்னும் வரவில்லை என்று அவர்கள் கூறினர். ஆனால் ஆண்டவருடைய தீர்க்கதரிசியின் வழியாக. இந்த வீடு பாழாய்க் கிடக்கும் போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ? இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள். நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டு வருகிறீர்கள், நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை, குடித்தும் பரிபூரணமடையவில்லை, நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை, கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான் (ஆகாய் 1:2 ) என்ற ஒரு செய்தி அவர்களுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் அதற்கான காரணம் : அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டு வந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன், எதினிமித்தமென்றால், என் வீடு பாழாய்க்கிடக்கும் போது, நீங்கள் எல்லாரும் அவனவன் தன்தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதினிமித்தமே என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆதலால் உங்கள் மேல் இருக்கிற வானம் பனியைப் பெய்யாமலும், பூமி பலனைக் கொடாமலும் போயிற்று. நான் நிலத்தின் மேலும், மலைகளின் மேலும், தானியத்தின் மேலும், புது திராட்சரசத்தின் மேலும், எண்ணெயின் மேலும், பூமியில் விளைகிற எல்லாவற்றின் மேலும், மனுஷரின் மேலும், மிருகங்களின் மேலும், கைப்பாடு அனைத்தின் மேலும் வறட்சியை வருவித்தேன் (வச. 911) என்ற செய்தி கொடுக்கப்பட்டது. ஒருவன் இருபது மரக்காலாகக் கண்ட அம்பாரத்தினிடத்தில் வந்தபோது, பத்து மரக்கால் மாத்திரம் இருந்தது; ஒருவன் ஆலையின் தொட்டியில் ஐம்பது குடம் மொள்ள ஆலையினிடத்திலே வந்தபோது இருபது குடம்மாத்திரம் இருந்தது. கருக்காயினாலும் விஷப்பனியினாலும் கல் மழையினாலும் உங்களை உங்கள் கைகளின் வேலையிலெல்லாம் அடித்தேன் ஆகாய் 2:16,17)PPTam 684.2

    இந்த எச்சரிப்புகளினால் எழுப்பப்பட்டவர்களாக தேவனுடைய வீட்டைக்கட்ட ஜனங்கள் தங்களை ஒப்படைத்தனர். பின்னர்: இப்போதும் இதற்கு முந்தின காலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்; ஒன்பதாம் மாதம் இருபத்து நாலாந் தேதியாகிய இந்நாள் முதல் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்ட அந்நாள் வரைக்கும் ........ நான் இன்று முதல் உங்களை ஆசீர்வதிப்பேன் (வச. 18, 19) என்று ஆண்டவருடைய வார்த்தை அவர்களுக்கு வந்தது.PPTam 685.1

    அதிகமாய்ப் பிசினித்தனம் பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு (நீதி. 11:24) என்று ஞானி சொல்லுகிறான். அதே பாடம் அப்போஸ்தலனாகிய பவுலால் புதிய ஏற்பாட்டில் போதிக்கப்படுகிறது. சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருகவிதைக்கிறவன் பெருக அறுப்பான். நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகல வித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும் படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச் செய்ய வல்லவராயிருக்கிறார் - 2 கொரி. 96, 8.PPTam 685.2

    பூமியின் குடிகள் அனைவருக்கும் தம்முடைய ஜனங்கள் வெளிச்சத்தைக் கொண்டு செல்லுகிறவர்களாக இருக்கவேண்டும் என்று தேவன் நோக்கங்கொண்டிருந்தார். அவருடைய ஆராதனையை பராமரிப்பதில் ஜீவனுள்ள தேவன் இருக்கிறார் என்பதற்கும் அவருடைய வல்லமைக்கும் அவர்கள் சாட்சி பகர்ந்துகொண்டிருந்தார்கள். இந்த ஆராதனையை நிலைக்கச் செய்வது, அவர்களுடைய உண்மையையும் அவர்மேல் அவர்கள் வைத்திருக்கும் அன்பையும் வெளிக்காட்டும் ஒரு சந்தர்ப்பமாக அவர்களுக்கு இருந்தது . பரலோக ஈவுகளில் பங்கெடுப்பவர்களின் முயற்சிகளையும் காணிக்கைகளையும் சார்ந்தே பூமியின் மேல் வெளிச்சமும் சாத்தியமும் பரவவேண்டும் என்று ஆண்டவர் நியமித்திருக்கிறார். தம்முடைய சத்தியத்தின் தூதுவர்களாக அவர் தூதர்களை ஏற்படுத்தியிருக்கலாம். சீனாயில் தமது சொந்தக் குரலினால் கற்பனையை அறிவித்ததைப்போல தம்முடைய சித்தத்தை அவர் தெரியப்படுத்தியிருக்கலாம். ஆனால் தம்முடைய நித்திய அன்பிலும் ஞானத்திலும், இந்த வேலையைச் செய்ய மனிதர்களைத் தெரிந்து கொண்டதில், தம்மோடு வேலையாட்களாகும்படி அவர்களை அழைத்திருக்கிறார்.PPTam 686.1

    இஸ்ரவேலின் நாட்களில் தெய்வீக சேவையின் நியமத்தைப் பராமரிப்பதற்காக தசம பாகமும் உற்சாகமான காணிக்கைகளும் தேவைப்பட்டிருந்தது. இந்தக் காலத்தில் தேவனுடைய ஜனங்கள் குறைவாகக் கொடுக்கலாமா? நாம் அனுபவிக்கும் வெளிச்சத்திற்கும் சந்தர்ப்பங்களுக்கும் சரிவிகிதமாக தேவனுக்கான நம்முடைய காணிக்கைகள் இருக்கவேண்டும் என்பதே கிறிஸ்து வைத்திருக்கும் கொள்கை. எவனிடத்தில் அதிக கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும். லூக்கா 12:48. இரட்சகர் தமது சீடர்களை அனுப்பினபோது: இலவசமாய்ப் பெற்றீர்கள் இலவசமாய்க் கொடுங்கள் என்று கூறினார். ஆசீர்வாதங்களும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்போது எல்லாவற்றிற்கும் மேலாக மகிமையான தேவகுமாரனுடைய இணையில்லாதத் தியாகம் நம் முன் இருக்கும் போது இரட்சிப்பின் தூதை மற்றவர்களுக்குக் கொண்டு செல்ல அதிக ஏராளமான காணிக்கைகளைக் கொடுப்பதில் நம்முடைய நன்றி வெளிப்படுத்தப்பட வேண்டாமா? சுவிசேஷத்தின் வேலை அகன்று பரவும் போது அதை நிலைநிறுத்துவதற்கு முற்காலத்தில் கேட்கப்பட்டிருந்ததைக் காட்டிலும் மிக அதிகமான பணம் அவசியப்படுகிறது. இது தசமபாகம் மற்றும் காணிக்கைகளைக் குறித்த சட்டத்தை எபிரெயர்களின் பொருளாதாரத்தில் இருந்ததைக்காட்டிலும் இன்னும் அதிக அவசரமான ஒன்றாக, மிக அதிக அத்தியாவசியமான ஒன்றாக ஆக்குகிறது. பொக்கிஷத்தை நிரப்பும்படியாக தேவனுக்கு நிந்தனையைக் கொண்டு வரும் முறைகளை நாடுவதற்கு பதிலாக, அவருடைய மக்கள் தங்களுடைய உற்சாகமான ஈவுகளால் அவருடைய வேலையைத் தாராளமாகத் தாங்குவார்களானால் தேவன் கனப்படுவார், அதிக ஆத்துமாக்கள் கிறிஸ்துவிற்காக வெற்றிகொள்ளப்படும்.PPTam 686.2

    ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதற்கான பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு மோசேபோட்ட திட்டம் மிகவும் வெற்றிகரமானதாயிருந்தது. எந்த நெருக்கடியும் அவசியமில்லாதிருந்தது. நம்முடைய நாட்களிலிருக்கும் சபைகள் பலவேளைகளில் கையிலெடுப்பதைப் போன்ற எந்த முறையையும் அவன் உபயோகிக்கவில்லை. அவன் எவ்வித ஆடம்பரமான விருந்தையும் செய்யவில்லை. கேளிக்கை காட்சிகளுக்கும் ஆடல்களுக்கும் பொதுவான பொழுதுபோக்கு களுக்கும் அவன் மக்களை அழைக்கவில்லை. லாட்டரிகளையும் அவன் நியமிக்கவில்லை . ஆண்டவருடைய ஆசரிப்புக் கூடாரத்தை எழுப்பத் தேவையான பணத்திற்காக இப்படிப்பட்ட பரிசுத்தக்குலைச்சலான எதற்கும் அவன் போகவில்லை. தங்களுடைய காணிக்கைகளை கொண்டுவரும்படி இஸ்ரவேல் மக்களை அழைக்க ஆண்டவர் மோசேக்குக்கட்டளையிட்டிருந்தார். மனதார விருப்பத்தோடு கொடுத்த ஒவ்வொருவரிடமிருந்தும் அவன் ஈவுகளை வாங்க வேண்டும். உபயோகப்படக்கூடியதற்கும் அதிகமாக கொடுத்ததினால் மோசே காணிக்கை கொண்டுவந்த வர்களை நிறுத்தும்படியாக அழைக்கும் அளவுகாணிக்கை மிகவும் ஏராளமாக வந்தது.PPTam 687.1

    தேவன் மனிதர்களை தமது உக்கிராணக்காரர்களாக ஆக்கியிருக்கிறார். அவர்கள் கைகளில் அவர் வைத்திருக்கிற இந்தப் பணம் சுவிசேஷத்தைப் பரப்புவதற்காக அவர் ஏற்பாடு செய்த ஒன்று. தங்களை உண்மையான உக்கிராணக்காரர்களாக நிரூபிப்பவர்களிடம் அவர் அதிகமான பொறுப்புகளைக் கொடுப்பார். என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன் - 1 சாமு 230, உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். அவருடைய ஜனங்கள் விச் னமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல நன்றியான இருதயத்தோடு தங்கள் ஈவுகளையும் காணிக்கைகளையும் கொண்டு வரும்போது, அவருடைய ஆசீர்வாதங்கள் என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும் படித்தசம பாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகு மட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (மல் . 3:10) என்று அவர் வாக்குக் கொடுத்தபடி அவர்களைச் சென்றடையும்.PPTam 687.2