Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    49 - கடைசியாக யோசுவா சொன்னவை

    யுத்தங்களும் வெற்றிகளும் முடிந்தன . திம்னாத் சேராவி லிருக்கிற சமாதானமான இளைப்பாறுதலுக்கு யோசுவா திரும்பினான். கர்த்தர் இஸ்ரவேலைச் சுற்றிலும் இருந்த அவர்களுடைய எல்லாச் சத்துருக்களாலும் யுத்தமில்லாதபடிக்கு இளைப்பாறப்பண்ணி அநேகநாள் சென்ற பின்பு, யோசுவா இஸ்ரவேலின் முப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும், மற்ற எல்லாரையும் அழைப்பித்து ஜனங்கள் தங்களுடைய சுதந்தரத்தில் நிலைநிறுத்தப்பட்டு, சில வருடங்கள் கடந்திருந்தன. இஸ்ரவேலின்மேல் நியாயத்தீர்ப்புகளை இதற்கு முன் கொண்டுவந்திருந்த அதே தீமைகள் மீண்டும் துளிர்த்து வருவது ஏற்கனவே காணக்கூடியதாயிருந்தது . யோசுவாதன்மேல் வயதின் பெலவீனங்கள் வருவதை உணர்ந்து, தன்னுடைய வேலை விரைவாக முடிவடையும் என்பதை அறிந்த போது, தனது ஜனங்களின் எதிர்காலத்தைக் குறித்த எதிர்பார்ப்பினால் நிறைந்தான். வயதான தங்கள் தலைவனைச் சுற்றி அவர்கள் கூடினபோது, தகப்பனுடையதைக்காட்டிலும் அதிக ஆர்வத்தோடு. உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்தச் சகல ஜாதிகளுக்கும் செய்த யாவையும் நீங்கள் கண்டீர்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர்தாமே உங்களுக்காக யுத்தம் பண்ணினார் என்று அவர்களிடம் கூறினான். கானானியர்கள் கீழ்ப்படுத்தப்பட்டிருந்தபோதும் இஸ்ரவேலுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருந்த அதிகப்படியான இடத்தை அவர்கள் இன்னமும் ஆக்கிரமித் திருந்தனர். இலகுவாக இருந்து விடாதபடிக்கும், விக்கிர காராதனைக்கார ஜாதிகளை முழுமையாக துரத்தும் ஆண்டவருடைய கட்டளையை மறந்து விடாதபடிக்கும் யோசுவா தன் ஜனங்களுக்கு ஆலோசனை கூறினான்.PPTam 674.1

    புறஜாதிகளை துரத்தும் வேலையை முழுமையாக்குவதில் ஜனங்கள் பொதுவாகவே தாமதமாக இருந்தனர். கோத்திரங்கள் தங்கள் சுதந்திரவீதத்திற்கு திரும்பிச் சென்றனர். படையும் கலைந்துபோனது. மீண்டும் யுத்தத்தைப் புதுப்பிப்பது நடக்கக்கூடாத சந்தேகமும் கடினமான காரியமாகப் பார்க்கப்பட்டது. ஆனால் யோசுவா : உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்ன படியே, நீங்கள் அவர்களுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும் படிக்கு, உங்கள் தேவனாகிய கர்த்தர்தாமே அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, உங்கள் பார்வையினின்று அகற்றிப்போடுவார். ஆகையால், மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதைவிட்டு, வலது புறமாகிலும் இடது புறமாகிலும் விலகிப்போகாமல், அதையெல்லாம் கைக்கொள்ளவும் செய்யவும் நிர்ணயம் பண்ணிக்கொள்ளுங்கள் என்று அறிவித்தான்.PPTam 675.1

    நிபந்தனைகளுக்கு இணங்கிப்போனவரையிலும் தேவன் உண்மையாக அவர்களுக்கான தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறை வேற்றி வந்தார் என்கிறதற்கு அவர்களையே சாட்சியாக வைத்து யோசுவா ஜனங்களிடம் மன்றாடினான். உங்கள் தேவ னாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல் வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்றான். ஆண்டவர் தமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றினதைப்போலவே தம்முடைய பயமுறுத்துதல்களையும் நிறைவேற்றுவார் என்று அவன் அறிவித்தான். கர்த்தர் உங்களோடே சொன்ன நல்லகாரியமெல்லாம் உங்களிடத்திலே எப்படி நிறைவேறிற்றோ, அப்படியே, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய உடன்படிக்கையை நீங்கள் மீறி,... கர்த்தருடைய கோபம் உங்கள் மேல் பற்றியெரியும், அவர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரமாய் அழிந்துபோவீர்கள் என்றான்.PPTam 675.2

    தேவனுக்கு அவருடைய மக்கள் மேல் இருக்கும் அன்பு மிகவும் பெரியதாக இருப்பதினால் அவர்களில் இருக்கும் பாவத்தை அவர் மன்னிப்பார் என்கிற நம்பத்தகுந்த கோட்பாட்டினால் சாத் தான் அநேகரைவஞ்சிக்கிறான். தேவனுடைய வார்த்தையிலிருக்கிற பயமுறுத்துதல்கள் தம்முடைய சன்மார்க்க அரசாங்கத்தில் சில குறிப்பிட்ட நோக்கங்களுக்காகக் கொடுக்கப்பட்டிருப்பதினால், அவைகள் ஒருபோதும் மெய்யாகவே நிறைவேறாது என்று அவன் எடுத்துக்காட்டுகிறான். ஆனால் தம்முடைய சிருஷ்டிகளோடு நடந்து கொள்ளுவதில் பாவத்தை அதன் உண்மையான, குணத்தில் வெளிக்காட்டுவதின் மூலம் அதனுடைய நிச்சயமான விளைவு துன்பமும் மரணமுமே என்று விளக்கிக் காட்டுவதன் மூலம் தேவன் நீதியின் கொள்கைகளை பராமரித்திருக்கிறார். நிபந்தனையில்லாத பாவமன்னிப்பு ஒருபோதும் இருந்ததில்லை, ஒருபோதும் இருக்கப்போவதுமில்லை. அப்படிப்பட்ட மன்னிப்பு தேவனுடைய அரசாங்கத்தின் அஸ்திபாரமாக இருக்கிற நீதியின் கொள்கைகளைக் கைவிடுவதையே காண்பிக்கும். அது விழுந்து போகாத பிரபஞ்சத்தை பீதியால் நிரப்பும் . பாவத்தின் விளைவுகளை தேவன் உண்மையாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த எச்சரிப்புகள் உண்மையானவை அல்ல என்றால், அவருடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேறும் என்பதில் நாம் எப்படி நிச்சயமாக இருக்க முடியும்? நீதியை அப்புறப்படுத்துகிற கருணை கருணையல்ல ; அது பெலவீனம்.PPTam 676.1

    தேவனே ஜீவனைக் கொடுக்கிறவர். ஆதியிலிருந்தே அவருடைய சட்டங்களெல்லாம் ஜீவனுக்காக நியமிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தேவன் ஏற்படுத்தியிருந்த ஒழுங்கின் மீது பாவம் வந்து, பிரிவினை அதைப் பின்தொடர்ந்தது. பாவம் இருக்கும் வரையிலும் துன்பமும் மரணமும் தவிர்க்க முடியாததாயிருக்கும். பாவத்தின் ச ராபத்தை நமது சார்பாக மீட்பர் சுமந்திருக்கிறதினால் மாத்திரமே மனிதன் தன் சொந்த சரீரத்தில் அதன் கொடிய விளைவுகளிலிருந்து தப்பிக்கும் ஒரு நம்பிக்கையைப் பெறக்கூடும்.PPTam 676.2

    யோசுவாவின் மரணத்திற்கு முன்பாக கோத்திரங்களின் தலைவர்களும் பிரதிநிதிகளும் அவனுடைய அழைப்பிற்கு கீழ்ப்படிந்தவர்களாக சீகேமில் மீண்டும் கூடினர். ஆபிரகாம் மற்றும் யாக்கோபுடன் தேவன் செய்த உடன்படிக்கைக்கு அவர்களுடைய மனங்களை எடுத்துச் சென்று, கானானிற்குள் நுழையும் போது செய்த அவர்களுடைய சொந்த பவித்திரமாக வாக்குறுதிகளை அவர்கள் மனதிற்குக் கொண்டு வந்த, அநேக பயபக்தியான கூட்டங்கள் நடந்த இந்த இடத்தைப் போல தேசம் முழுவதிலும் வேறு எந்த இடமும் இருக்கவில்லை. இங்கேதான் ஏபால் மலையும் கொசீம்மலையும் இருந்தன. மரித்துக்கொண்டிக்கும் தங்கள் தலைவர் முன்பு இப்போது கூடி புதுப்பிக்கவிருந்த அதே ஆணைகளுக்கு மெளனமான சாட்சிகளாக இருந்த ஏபால் மலையும் கொசீம் மலையும் இங்கேதான் இருந்தன . தேவன் அவர்களுக்காக என்ன நடப்பித்தார் என்பதற்கும், அவர்கள் உழைத்திராத தேசத்தையும், கட்டியிராத பட்டணங்களையும், நட்டியிராததிராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும் அவர்களுக்கு அவர் எவ்விதம் தந்தார் என்பதற்குமான சான்றுகள் ஒவ்வொரு பக்கத்திலும் இருந்தன. அவர்கள் அவருடைய அன்பையும் இரக்கத்தையும் குறித்து உணர்வடைந்து உண்மையோடும் சாத்தியத்தோடும் அவரை சேவிக்கும் படியாக, தேவனுடைய ஆச்சரியமானகிரியைகளை மீண்டும் நினைவுகூர்ந்து இஸ்ரவேலின் சரித்திரத்தை மீண்டும் ஒருமுறை யோசுவா விமர் சித்தான்.PPTam 676.3

    யோசுவாவின் நடத்துதலின்படி உடன்படிக்கைப்பெட்டி சீலோவிலிருந்து கொண்டுவரப்பட்டது. அந்தச் சம்பவம் மிகவும் பயபக்தியான ஒன்றாக இருந்தது. ஜனங்கள் மேல் அவன் ஏற்படுத்த விரும்பியிருந்த எண்ணப்பதிப்புகளை தேவனுடைய சமூகத்தைக்குறித்த இந்த அடையாளம் இன்னும் ஆழமாக்கக்கூடும். தேவன் இஸ்ரவேலின் மேல் கொண்டிருந்த நன்மையானவைகளைக் கூறிய பிறகு, யாரை சேவிப்பார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும்படி யெகோவாவின் நாமத்தினாலே அவன் அவர்களை அழைத்தான். விக்கிரக வணக்கம் ஓரளவிற்கு இன்னமும் இரகசியமாக பழக்கப்படுத்தப்பட்டிருந்தது. இந்தப் பாவத்தை இஸ்ரவேலிலிருந்து அழிக்கக் கூடிய ஒரு தீர்மானத்திற்கு அவர்களைக் கொண்டுவர யோசுவா இப்போது முயற்சித்தான். கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள் என்றான். கட்டாயத்தினால் அல்ல, முழுமனதோடு தேவனுக்குச் சேவை செய்ய அவர்களை நடத்தும்படி யோசுவா வாஞ்சித்தான். தேவனிடம் காண்பிக்கும் அன்பே மதத்தின் அஸ்திபாரமாயிருக்கிறது. பலனைக் குறித்த நம்பிக்கையினால் மாத்திரமோ அல்லது தண்டனையைக் குறித்த பயத்தினாலோ இந்த சேவையில் ஈடுபடுவது எந்த நன்மையும் செய்யாது. மாய் மாலத்தையும் சடங்கான ஆராதனையையும் விடவெளிப்படையான மீறுதல் தேவனை அதிகம் காயப்படுத்தாது. அவர்கள் முன்வைத்ததை அதன் அனைத்து காரியங்களோடும் கருத்தில் கொள்ளவும், அவர்களைச் சுற்றிலுமிருந்த கீழ்த்தரமான விக்கிரகாராதனை தேசங்களைப்போல் பிழைக்க உண்மையாக வாஞ்சிக்கிறார்களோ என்பதைத் தீர்மானிக்கவும் இந்த வயதான தலைவன் அழைத்தான். யெகோவாவைவல்லமையின் ஆதாரத்தை ஆசீர்வாதங்களின் ஊற்றை சேவிப்பது அவர்களுக்கு தீமையாகக் காணப்படுமானால், ஆபிரகாம் யார் நடுவிலிருந்து அழைக்கப்பட்டானோ அந்த நதிக்கு அப்புறத்தில் பிதாக்கள் சே வித்த தேவர்களை அல்லது அவர்கள் வாசம் பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களை யாரை சேவிப்பார்கள் என்பதை அந்த நாளில் தெரிந்து கொள்ளட்டும். இந்தக் கடைசி வார்த்தைகள் இஸ்ரவேலுக்கு முனைப்பான கண்டனமாக இருந்தது . எமோரியர்களின் தேவர்கள் தங்களை தொழுது கொண்டவர்களை விடுவிக்கக்கூடாதிருந்தன. அவர்களுடைய அருவருப்பும் கீழ்த்தரமுமான பாவத்தினால்தான் அந்தத் துன்மார்க்க தேசம் அழிக்கப்பட்டு, ஒருகாலத்தில் அவர்கள் சு தந்தரித்திருந்த நல்ல தேசம் தேவனுடைய ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. எந்த தேவர்களை ஆராதித்ததினால் எமோரியர்கள் அழிக்கப்பட்டிருந்தார்களோ, அவர்களை தெரிந்து கொள்ளுவது இஸ்ரவேலுக்கு மதியீனமில்லையா? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம். என்று யோசுவா கூறினான். தலைவனின் இருதயத்தை ஏவியிருந்த அதே பரிசுத்த வைராக்கியம் ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்டது. அவனுடைய மன்றாட்டுகள் வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, கர்த்தரைவிட்டு விலகுகிற காரியம் எங்களுக்குத் தூரமாயிருப்பதாக என்ற தயக்கமில்லாத பதிலை வரவழைத்தது.PPTam 677.1

    நீங்கள் கர்த்தரைச் சேவிக்கமாட்டீர்கள்; அவர் பரிசுத்தமுள்ள தேவன், அவர் எரிச்சலுள்ள தேவன், உங்கள் மீறுதலையும் உங்கள் பாவங்களையும் மன்னியார் என்று யோசுவா கூறினான். நிரந்தரமான மறுமலர்ச்சி வருமுன்பாக தேவனுக்குக் கீழ்ப்படிய தங்களிலிருக்கும் இயலாமையைக் குறித்து உணர ஜனங்கள் நடத்தப்பட வேண்டும். அவர்கள் அவருடைய பிரமாணத்தை மீறியிருந்தார்கள். அது அவர்களை மீறினவர்களாக ஆக்கினைக்குட்படுத்தியிருந்தது. தப்பிப்பதற்கான எந்த வழியையும் அது ஏற்பாடு செய்திருக்கவில்லை. அவர்கள் தங்கள் சொந்த பலத்தையும் நீதியையும் நம்பியிருந்தபோது தங்கள் பாவத்திற்கான மன்னிப்பைப் பெறுவது அவர்களுக்குக் கூடாததாயிருந்தது. அவர்கள் தேவனுடைய பரிபூரண பிரமாணத்தின் உரிமைகளை சந்திக்கக்கூடாது. தேவனை சேவிப்பதாக அவர்கள் கொடுத்த உறுதிமொழி வீணாகவே இருக்கும். கிறிஸ்துவின் மேலிருக்கும் விசுவாசத்தினால் மாத்திரமே பாவத்திற்கான மன்னிப்பைப் பெற்று தேவனுடைய பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிவதற்கான பெலத்தையும் அடையலாம். இரட்சிப்பிற்காக தங்கள் சொந்த முயற்சியை சார்ந்திருப்பதை நிறுத்தி, தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால் வாக்குப்பண்ணப் பட்டிருக்கிற இரட்சகரின் நன்மைகளை அவர்கள் முழுமையாக நம்பவேண்டும்.PPTam 678.1

    தங்கள் வார்த்தைகளை நன்றாக நிதானித்துப்பார்க்கும்படியும், நிறைவேற்ற ஆயத்தப்பட்டிராத ஆணைகளிலிருந்து பின்வாங்கும் படியும் யோசுவா தன்னைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களை நடத்த முயற்சித்தான். மிகவும் ஆழமான ஊக்கத்தோடு அப்படியல்ல, நாங்கள் கர்த்தரையே சேவிப்போம் என்ற அறிவிப்பை அவர்கள் திரும்பக் கூறினார்கள்.PPTam 679.1

    யெகோவாவைத் தெரிந்துகொண்டிருக்கிறதற்கான தங்களுடைய சாட்சிக்கு பவித்திரமாக இணங்கி, மீண்டும் ஒரு முறை நம் முடைய தேவனாகிய கர்த்தரையே சேவித்து, அவர் சத்தத்திற்கே கீழ்ப்படிவோம் என்று உண்மையாயிருப்பதன் உறுதிமொழியைக் கூறினர்.PPTam 679.2

    அந்தப்படி யோசுவா அந்நாளில் சீகேமிலே ஜனங்களோடே உடன்படிக்கைபண்ணி, அவர்களுக்கு அதைப் பிரமாணமும் நியாயமுமாக ஏற்படுத்தினான். இந்த பவித்திரமான பரிமாற்றத் தைக்குறித்து எழுதிய பிறகு அதை நியாயப்பிரமாணப் புத்தகத் தோடுகூட உடன்படிக்கைப் பெட்டியின் பக்கத்தில் வைத்தான். கூடவே இதோ, இந்தக் கல் நமக்குள்ளே சாட்சியாயிருக்கக்கடவது; கர்த்தர் நம்மோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் இது கேட்டது; நீங்கள் உங்கள் தேவனுக்கு விரோதமாகப் பொய் சொல் லாதபடிக்கு, இது உங்களுக்குச் சாட்சியாயிருக்கக்கடவது என்று சொல்லி, ஒரு தூணை நிறுத்தினான். யோசுவா ஜனங்களை அவரவர் சுதந்திரத்திற்கு அனுப்பிவிட்டான்.PPTam 679.3

    இஸ்ரவேலுக்கான யோசுவாவின் வேலை முடிவடைந்திருந்தது. அவன் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினான். தேவனுடைய புத்தகத்தில் : கர்த்தருடைய ஊழியக்காரன் என்று அவன் எழுதப்பட்டிருக்கிறான். அந்தத் தலைவனுடைய குணத்தின் நேர்மையான சாட்சி, அவனுடைய உழைப்புக்களில் களிகூர்ந்த தலைமுறையினரின் சரித்திரமே. யோசுவா உயிரோடிருந்த சகல நாட்களிலும், யோசுவாவுக்குப்பின்பு வெகுநாள் உயிரோடிருந்த முப்பருடைய சகல நாட்களிலும், இஸ்ரவேலர் கர்த்தரைச் சேவித் தார்கள்.PPTam 679.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents