Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    60 - வரம்பு மீறிய சவுல்

    கில்காலில் கூடிய கூட்டத்திற்குப்பிறகு மிக்மாசில் தன்னுடைய கட்டளையின் கீழ் இரண்டாயிரம் பேரையும் கிபியாவில் யோனத்தானுக்கு ஒரு ஆயிரம் பேரையும் வைத்துக் கொண்டு அம்மோனியர்களை கவிழ்க்கும் படியான தன்னுடைய அழைப்பிற்கு வந்த படையை சவுல் திரும்ப அனுப்பினான். இங்கேதான் தீவிரமான தவறு இருக்கிறது. அவர்களுடைய படை சமீபத்தில் கிடைத்த வெற்றியினால் நம்பிக்கையாலும் தைரியத்தாலும் நிரம்பியிருந்தது. இஸ்ரவேலின் சத்துருக்களுக்கு எதிராக உடனடியாக சென்றிருப்பானானால் தேசங்களின் சுதந்தரத்தில் சொல்லக்கூடிய அடி விழுந்திருக்கும்.PPTam 809.1

    இந்த நேரத்தில் யுத்த அயலகத்தாரான பெலிஸ்தியர் செயல்பட்டுக்கொண்டிருந்தனர். எபினேசரில் பெற்ற தோல்விக்குப்பிறகு இன்னமும் இஸ்ரவேல் தேசத்தின் சில் குன்றுகளிலிருந்த அரண்களை அவர்கள் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்து, தேசத்தின் மையத்தில் தானே தங்களை நிறுத்தியிருந்தனர். வசதியிலும் படையிலும் போர்க் கருவிகளிலும் இஸ்ரவேலரைவிட பெலிஸ்தியர்கள் மாபெரிய சாத கத்தைக் கொண்டிருந்தனர். ஒடுக்கின் அரசாட்சியின் நீண்ட காலங்களில் யுத்த ஆயுதங்களை செய்யாதிருக்கும்படி வேலையில் ஈடுபடக் கூடாது என்று இஸ்ரவேலின் கொல்லர்களுக்கு தடைவிதித்ததின் வழியாகதங்களுடைய வல்லமையை பலப்படுத்த அவர்கள் முயன்றிருந்தனர். சமாதானம் பெற்ற பிறகும் செய்யப்பட வேண்டிய இப்படிப்பட்ட அத்தியாவசிய வேலைகளுக்காக எபிரெயர்கள் பெலிஸ்தியர்களுடைய தாணயத்திற்குப் போய்க்கொண்டிருந்தார்கள். சும்மாயிருப்பதன் மேலிருந்த விருப்பத்தினாலும் நீண்டகால ஒடுக்குதலினால் தூண்டப்பட்ட இழிவான ஆவியினாலும் கட்டுப்படுத்தப்பட்டவர்களாக அதிக அளவுயுத்த ஆயுதங்களை தங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளுவதை அவர்கள் நெகிழ்ந்திருந்தனர். யுத்தத்தில் அம்புகளும் கண்களும் உபயோகப்படுத்தப்பட்டன. இவைகளை இஸ்ரவேலர்கள் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் சவுலையும் அவன் குமாரன் யோனத்தானை யுந்தவிர அவர்களில் வேறு ஒருவனும் ஈட்டியையாவது பட்டயத்தையாவது வைத்திருக்கவில்லை.PPTam 809.2

    சவுலுடைய ஆட்சியின் இரண்டாவது வருடம் வரையிலும் பெலிஸ்தியர்களை ஒடுக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. முதலாவது அடி கே பாவிலிருந்த அவர்களுடைய முதல் தாணயத்தைக் கவிழ்த்துப் போட்ட இராஜாவின் குமாரன் யோனத்தான் அடித்த அடியாக இருந்தது. இந்த தோல்வியினால் ஆத்திரமடைந்த பெலிஸ்தியர்கள் உடனடியாக இஸ்ரவேலரை தாக்கும்படி ஆயத்தம் செய்தனர். யுத்தம் நிறுத்தப்பட்டதாகவும் யோர்தானை தாண்டியிருந்த கோத்திரம் உட்பட யுத்த மனிதர்கள் அனைவரும் கில்காலில் கூடும் படியாகவும் எக்காள முழக்கத்தினால் தேசம் முழுவதிலும் சவுல் அறிவித்திருந்தான். இந்த அழைப்பு கீழ்ப்படியப்பட்டது.PPTam 810.1

    முப்பதினாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், கடற்கரை மணலத்தனை ஜனங்களோடும் கூடிய படையை பெலிஸ்தியர்கள் மிக மாசிலே கூட்டினர். இந்த செய்தி சவுலையும் கில்காலிலிருந்த அவனுடைய படையையும் சென்றடைந்தபோது, யுத்தத்தில் எதிர்கொள்ள விருந்தவல்லமையான படையைக் குறித்த நினைவினால் ஜனங்கள் திகைப்படைந்தனர். படையைச் சந்திக்க அவர்கள் ஆயத்தமாயில்லை. அவர்களில் அநேகர் மிகவும் பயந்து போரின் பரீட்சைக்கு வரக் கூட தைரியமற்றிருந்தனர். சிலர் அந்தப் பகுதியில் அதிகமாக இருந்த குகைகளிலும் குழிகளிலும் தங்களை மறைத்துக்கொள்ள, மற்றவர்கள் யோர்தானைக் கடந்தனர், யுத்தத்திற்கான நேரம் நெருங்கின் போது யுத்தத்தைத் துறந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. கூட்டத்திலிருந்து விலகியிராதவர்கள் எச்சரிக்கையாலும் பயத்தாலும் நிரம்பியிருந்தனர்.PPTam 810.2

    சவுல் முதலாவது இஸ்ரவேலன் மேல் இராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட போது, அந்த நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய முறையைக் குறித்த தெளிவான நடத்துதலை சாமுவேலிடமிருந்து அவன் பெற்றிருந்தான். நீ எனக்கு முன்னே கில்காலுக்கு இறங்கிப்போ ; சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தும் படிக்கு, நான் உன்னிடத்தில் வருவேன் ; நான் உன்னிடத்தில் வந்து, நீ செய்ய வேண்டியதை உனக்கு அறிவிக்கு மட்டும், ஏழுநாள் காத்திரு (1 சாமு. 10:8) என்று தீர்க்கதரிசி கூறினான்.PPTam 811.1

    மக்களை உற்சாகப்படுத்தவும் தேவன் மேல் வைக்கும் நம்பிக்கையைத் தூண்டவும் எந்தத் தீர்மானமான முயற்சியையும் எடுக்காது, சவுல் நாளுக்கு நாள் தாமதித்திருந்தான். தீர்க்கதரிசி நியமித்திருந்த நேரம் முழுமையாக கடந்துபோகு முன்பாக தாமதத்தைக் குறித்து பொறுமையிழந்து அவனை சூழ்ந்திருந்த சே பாதிக்கும் சூழ்நிலைகளால் சோர்வடைய தன்னை அனுமதித்தான். சாமுவேல் வந்து செய்யவிருக்கும் ஆராதனைக்கு மக்களை ஆயத்தப்படுத்த உண்மையாக தேடுவதற்குப் பதிலாக அவிசுவாசத்தையும் பயத்தோடு கூடிய எதிர்பார்ப்பையும் அவன் வளர்த்திருந்தான். பலியினால் தேவனைத் தேடுவது மிகவும் பவித்திரமான முக்கியமான வேலையாக இருந்தது. அவர்களுடைய காணிக்கை அவர்முன் ஏற்றுக்கொள்ளப்படவும் சத்துருவை வெற்றி பெறும் அவர்களுடைய முயற்சியில் அவருடைய ஆசீர்வாதம் இருக்கவும் வேண்டுமெனில் தங்களுடைய இருதயத்தை ஆராய்ந்து தங்கள் பாவங்களைக் குறித்து அவர்கள் மனம் வருந்த வேண்டும் என்று ஆண்டவர் கோரியிருந்தார். ஆனால் சவுல் அமைதியிழந்து போக மக்கள் உதவிக்காக தேவனை நம்புவதற்குப் பதிலாக தங்களை நடத்தவும் தங்களுக்குக் கட்டளையிடவும் தாங்கள் தெரிந்து கொண்ட இராஜாவை நோக்கியிருந்தனர்.PPTam 811.2

    எனினும் ஆண்டவர் அவர்கள் மேல் இன்னும் கவனமாயிருந்து, மாம்சத்தின் பலவீனமான புயம் அவர்களுடைய ஒரே பலமாயிருந்தால் எப்படிப்பட்ட பேரழிவுகள் அவர்கள் மேல் வருமோ, அவைகளுக்கு அவர்களை ஒப்புக்கொடுக்கவில்லை. மனிதனைச் சார்ந்து இருப்பதன் மதியீனத்தை அவர்களுக்கு உணர்த்தவும், ஒரே உதவியாளரான தம்மிடம் அவர்கள் திரும்புவதற்கும் ஏதுவாக அவர் அவர்களை நெருக்கமான இடங்களில் கொண்டுவந்தார். சவுலை நிரூபிப்பதற்கான நேரம் வந்தது. தேவனைச் சார்ந்திருந்து அவருடைய கட்டளைப்படி பொறுமையாக காத்திருந்து, சோதனையான இடங்களில் தம்முடைய ஜனத்தின் அதிபதியாக தன்னை நம்பலாம் என்றோ அல்லது தன்மேல் வைக்கப்பட்டிருக்கும் பரிசுத்தமான பொறுப்பிற்கு தான் தகுதியற்ற அலையக்கூடியவன் என்றோ அவன் இப்போது தன்னைக் காண்பிக்க வேண்டும். இஸ்ரவேல் தெரிந்து கொண்ட இராஜா, இராஜாக்களின் அதிபதிக்கு செவிகொடுப்பானா? சோர்வடைந்த இருதயத்தோடிருந்த போர்வீரர்களின் கவனத்தை நித்திய பலமும் விடுதலையும் கொண்டிருக்கும் ஒரே ஒருவரிடம் திருப்புவானா?PPTam 811.3

    அதிகரித்துக்கொண்டிருந்த பொறுமையின்மையோடு அவன் சாமுவேலின் வருகைக்காக காத்திருந்து தன்னுடைய படையின் குழப்பத்திற்கும் துயரத்திற்கும் அதன் எண்ணிக்கை குறைந்ததற்கும் தீர்க்கதரிசி அங்கில்லாததை காரணம் காட்டினான். குறிப்பிட்ட நேரம் வந்தது. ஆனால் தேவனுடைய மனுஷன் உடனடியாக தோன்றவில்லை. தேவனுடைய ஏற்பாடு தம்முடைய ஊழியக்காரனை பின்தங்கவைத்தது. ஆனால் சவுலின் அமைதியற்ற மனக்கிளர்ச்சியின் ஆவி இதற்கு மேல் ஒருபோதும் கட்டுப்படுத்தப்பட முடியாது. ஜனங்களின் பயத்தை அமைதிப்படுத்த ஏதாகிலும்PPTam 812.1

    செய்யப்படவேண்டும் என்று உணர்ந்தவனாக மத ஆராதனைக்காக கூட்டத்தைக் கூட்டி பலியினால் தெய்வீக உதவியை மன்றாட தீர்மானித்தான். இந்தப் பணிக்கு பிரதிஷ்டை பண்ணப்பட்டவர்கள் மாத்திரமே அவர் முன்பு பலிசெலுத்தவேண்டும் என்று தேவன் கட்டளையிட்டிருந்தார். ஆனால் சவுல் : சர்வாங்கதகனபலியை ..... என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டு, யுத்த ஆயுதங்களை அணிந்தவனாகவே பலிபீடத்தை நெருங்கி தேவன் முன்பு பலி செலுத்தினான்.PPTam 812.2

    அவன் சர்வாங்க தகனபலியிட்டு முடிகிற போது, இதோ, சாமுவேல் வந்தான், சவுல் அவனைச் சந்தித்து வந்தனஞ் செய்ய அவனுக்கு எதிர் கொண்டு போனான். தெளிவாகக் கொடுக்கப்பட்டிருந்த கட்டளைகளுக்கு முரணாக சவுல் செய்திருந்ததை உடனடியாக சாமுவேல் கண்டான். இந்த நெருக்கடியில் இஸ்ரவேல் என்ன செய்ய வேண்டுமென்பதை அப்போது அறிவிப்பதாக தமது தீர்க்காதரிசியின் மூலமாக ஆண்டவர் சொல்லியிருந்தார். தெய்வீக உதவிக்கான நிபந்தனையை சவுல் நிறை வேற்றியிருந்திருப்பானானால் இராஜாவுக்கு உண்மையாக இருந்த சொற்ப ஜனங்களால் ஆச்சரியமான விடுதலையை இஸ்ரவேலுக்கு ஆண்டவர் கொடுத்திருப்பார். ஆனால் சவுல் தன்னோடும் தன்னுடைய வேலையோடும் மிகவும் மன நிறைவடைந்திருந்து, தான் அங்கிகரிக்கப்படுவதை விடவும் புகழப்படவேண்டும் என்பதைப்போல தீர்க்கதரிசியைச் சந்திக்கச் சென்றான்.PPTam 812.3

    சாமுவேலின் முகம் ஏக்கத்தினாலும் துக்கத்தினாலும் நிறைந்திருந்தது. ஆனாலும் நீர் செய்தது என்ன என்ற அவனுடைய விசாரணைக்கு தன்னுடைய துணிகரமான செயலுக்கு சவுல் காரணம் கூறினான். அவன் ஜனங்கள் என்னை விட்டுச் சி தறிப்போகிறதையும், குறித்த நாட்களின் திட்டத்திலே நீர் வராததையும், பெலிஸ்தர் மிக்மாசிலே கூடி வந்திருக்கிறதையும் நான் கண்டபடியினாலே, கில் காலில் பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் வந்து விடுவார்கள் என்றும் நான் இன்னும் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி விண்ணப்பம் பண்ணவில்லை என்றும் எண்ணித்துணிந்து, சர்வாங்கதகனபலியைச் செலுத்தினேன் என்றான்.PPTam 813.1

    சாமுவேல் சவுலைப் பார்த்து : புத்தியீனமாய்ச் செய்தீர்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; மற்றப்படி கர்த்தர் இஸ்ரவேலின் மேல் உம்முடைய ராஜ்யபாரத்தை என்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது ; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள் மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்...... என்று சொன்னான். சாமுவேல் எழுந்திருந்து, கில்காலை விட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான்;.PPTam 813.2

    ஒன்று இஸ்ரவேல் தேவனுடைய ஜனம் என்பது முடிவிற்கு வரவேண்டும் அல்லது என்ன கொள்கையின் அடிப்படையில் இராஜாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதோ அது பராமரிக்கப்பட்டு தேசம் தெய்வீக வல்லமையினால் ஆட்சி செய்யப்பட வேண்டும். இஸ்ரவேல் முழுமையும் ஆண்டவருடையதாக இருக்குமானால், மனித மற்றும் உலக சித்தங்கள் அனைத்தும் தேவனுடைய சித்தத்தின் கீழ் வைக்கப்படுமானால், அவர்களுடைய இராஜாவாக அவர் இருப்பார். இராஜாவும் ஜனங்களும் தேவனுக்குக் கீழ்ப்பட்டவர்களாக அடிபணிந்து தங்களை நடத்தும் காலம் வரையிலும் அவர் அவர்களுடைய பாதுகாப்பாக இருக்கமுடியும். ஆனால் தேவனுடைய உன்னத அதிகாரத்தை அனைத்து காரியங்களிலும் ஒப்புக்கொள்ளாத இஸ்ரவேலின் எந்த இராஜாவும் செழிப்படைய முடியாது.PPTam 813.3

    சோதனையான இந்த நேரத்தில் சவுல் தேவனுடைய கோரிக்கைகளுக்கு கவனம் காண்பித்திருப்பானானால் தேவன் தமது சித்தத்தை அவன் வழியாக நடத்தியிருப்பார். தமது ஜனங்களுக்கான தேவனுடைய பிரதிநிதியாக இருக்க அவன் தகுதியற்றவன் என்று அவனுடைய தோல்வி நிருபித்தது. அவன் இஸ்ரவேலை தவறாக நடத்திச் செல்வான் ! தேவனுடைய சித்தத்தை விட அவனுடைய சித்தம் தான் கட்டுப்படுத்தும் வல்லமையாக இருக்கும்; சவுல் உண்மையாக இருந்திருப்பானானால் அவனுடைய இராஜ்யம் என்றைக்குமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கும். அவன் தோல்வியடைந்ததால் தேவனுடைய நோக்கம் வேறொரு நபரால் நிறைவேற்றப்பட வேண்டும். பரலோகத்தின் சித்தத்திற்கேற்ப ஜனங்களை ஆட்சி செய்கிற ஒருவனிடம் இஸ்ரவேலின் அரசாட்சி கொடுக்கப்பட வேண்டும்.PPTam 814.1

    தேவனுக்கு உண்மையாக இருப்பதால் எப்படிப்பட்ட மாபெரும் நன்மைகள் அங்கே இருக்கும் என்பது நமக்குத் தெரியாது. தேவனுடைய வார்த்தைக்குக் கண்டிப்பாக கீழ்ப்படிவதைத்தவிர வேறு எதிலும் பாதுகாப்பில்லை. அவருடைய வாக்குத்தத்தங்கள் அனைத்தும் விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதலின் நிபந்தனையின்மேல் செய்யப்பட்டிருக்கின்றன. அவருடைய கட்டளைகளோடு இணைந்து போகத் தவறுவது வேதவாக்கியத் திலிருக்கும் செழிப்பான ஏற்பாடுகள் நம்மில் நிறைவேறுவதை அகற்றி விடுகிறது. நாம் மனக்கிளர்ச்சியை பின்பற்றக்கூடாது, மனிதருடைய நியாயத்தீர்ப்பையும் சார்ந்திருக்கக்கூடாது. நம்மைச் சுற்றிலும் எப்படிப்பட்ட சூழ் நிலை இருந்தாலும் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய சித்தத்தையே நோக்கியிருந்து அவருடைய நித்திய கட்டளைக்கேற்பவே நடக்கவேண்டும்.PPTam 814.2

    தேவன் விளைவுகளை பொறுப்பெடுத்துக்கொள்ளுவார். அவருடைய வார்த்தைக்கு உண்மையாக இருப்பதினால், சே ாதனையின் காலத்தில் ஆண்டவர் தம்முடைய சித்தத்தை நிறை வேற்றவும், அவருக்குக் கனத்தைக் கொடுக்கவும் அவருடைய ஜனத்தை ஆசீர்வதிக்கவும், கடினமான இடங்களில் தன்னை நம்பலாம் என்று மனிதர் முன்பாகவும் தூதர் முன்பாகவும் நாம் நிரூபிக்கலாம்.PPTam 814.3

    சவுல் தேவதயவை பெறாதிருந்தான். எனினும் மனந்திரும்பி தன் இருதயத்தைத் தாழ்த்த சித்தமற்றிருந்தான். மெய்யான பக்தி அவனிடம் இல்லாதபோது மதத்தின் சடங்குகள் மேல் இருக்கும் பக்தி வைராக்கியத்தினால் அதை நிரப்ப அவன் முயலுவான். ஓப்னியாலும் பினெகாசாலும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டி பாளயத்திற்குள் கொண்டுவரப்பட்டபோது இஸ்ரவேல் பெற்ற தோல்வியை சவுல் அறியாமலில்லை. இவற்றையெல்லாம் அறிந்திருந்தும் பரிசுத்தப் பெட்டியையும் அதன் ஆசாரியனையும் வரவழைக்கத் தீர்மானித்தான். இதன் வழியாக மக்களில் ஒரு நம்பிக்கையை தூண்ட அவனால் முடியுமென்றால், சிதறிப்போன தன்னுடைய படையை மீண்டும் கூட்டவும் பெலிஸ்தரோடு யுத்தம் பண்ணவும் அவன் நம்பியிருந்தான். இப்போது சாமுவேலின் சமூகமும் அவனுடைய ஆதரவும் இல்லாமலேயே செயல்படலாம். இவ்விதம் வரவேற்கத்தகாத தீர்க்கதரிசியின் விமர்சனத்திலிருந்தும் கடிந்துகொள்ளுதலிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளலாம்.PPTam 815.1

    அவனுடைய புரிந்துகொள்ளுதலை தூண்டிவிட்டு அவனுடைய இருதயத்தை மென்மையாக்கவே சவுலுக்கு பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்பட்டிருந்தார். தேவனுடைய தீர்க்கதரிசியிடமிருந்து உண்மையான போதனைகளையும் கடிந்து கொள்ளுதலையும் அவன் பெற்றிருந்தான். எனினும் அவனுடைய முறைகேடு எவ்வளவு பெரியதாயிருக்கிறது! இஸ்ரவேலின் முதல் அரசனுடைய சரித்திரம் இளமைப்பருவத்தின் தவறான பழக்கங்களுடைய வல்லமைக்கு வருத்தமான உதாரணத்தை வைக்கிறது. தன்னுடைய வாலிபத்தில் சவுல் தேவனை நேசித்து அவருக்குப் பயந்திருக்கவில்லை. கீழ்ப்படியும் படி இளமையிலேயே பயிற்றுவிக்கப்படாத அந்த மூர்க்கமான ஆவி தெய்வீக அதிகாரத்திற்கு எதிராக கலகம் செய்ய எப்போதும் ஆயத்தமாக இருந்தது. தங்கள் வாலிபத்தில் தேவனுடைய சித் தத்திற்கு பவித்திரமான கவனத்தைக் கொடுக்க நேசித்திருக்கிற வாலிபர்கள் தங்களுடைய நிலையில் இருக்கும் கடமைகளை உண்மையாகச் செய்து பின்வாழ்க்கையின் உயர்ந்த சேவைக்கு ஆயத்தப்படுவார்கள். ஆனால் தேவன் தங்களுக்குக் கொடுத் திருக்கும் வல்லமைகளை வருடங்களாக முறைகேடாக்குகிற மனிதர்கள், பின்னர் தாங்கள் மாற விரும்பும் போது தங்களுடைய வழிமுறைக்கு முற்றிலும் எதிரான ஒரு வழியில் செல்ல இந்த வல்லமைகளை புதியதாகவும் சுதந்தரமாகக் கிடைப்பதாகவும் காணமுடியாது.PPTam 815.2

    மக்களை எழுப்பும்படியான சவுலின் முயற்சிகள் பலனற்றிருந்தது. தன்னுடைய படை அறுநூறாக குறைக்கப்பட்டதைக் கண்டு அவன் கில் காலை விட்டு சமீபத்தில் பெலிஸ்தியரிடமிருந்து எடுக்கப்பட்ட கேபாவிற்குத் திரும்பினான். இந்த பலமான அரண், முரடான மலையிடுக்கின் தென்புறத்தில் எருசலேமிலிருந்து சில மைல் வடக்கே இருந்தது. அதே பள்ளத்தாக்கின் வடபுறத்தில் மிக்மாசில் பெலிஸ்தியரின் படை பாளயமிட்டிருக்க அவர்களிடமிருந்து பிரிந்து சென்ற படை வெவ்வேறு திசைகளில் தேசத்தை சூறையாடச் சென்றிருந்தது.PPTam 816.1

    சவுலினுடைய முறைகேட்டைக் கடிந்து கொள்ளவும் தாழ்மை மற்றும் விசுவாசத்தின் பாடத்தை மக்களுக்குப் போதிக்கவும் காரியங்கள் இப்படிப்பட்ட ஒரு நெருக்கடிக்குள் கொண்டு வரப்படும்படி தேவன் அனுமதித்திருந்தார். பலி செலுத்தின சவு லின் துணிகரமான பாவத்தினால் பெலிஸ்தியரைத் துரத்தும் கனத்தை ஆண்டவர் அவனுக்குக் கொடுக்கமாட்டார். ஆண்ட வருக்கு பயந்திருந்த இராஜாவின் மகனாக யோனத்தான் இஸ்ரவேலை விடுவிக்கும் படி தெரிந்து கொள்ளப்பட்ட கருவியாயிருந்தான். தெய்வீக உந்துதலினால் அசைக்கப்பட்டு, தன்னுடைய ஆயுததாரியைப் பார்த்து : சத்துருக்களின் பாளயத்தின் மேல் இரகசியமான தாக்குதல் நடத்த வேண்டும் என்று அவன் ஆலோசனை கூறினான். ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம் பேரைக் கொண்டாலும், கொஞ்சம் பேரைக் கொண்டாலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்று அவன் கூறினான்.PPTam 816.2

    விசுவாச மனிதனும் ஜெபவீரனு மாயிருந்த அவனுடைய ஆயுததாரி இந்தத் திட்டத்தை உற்சாகப்படுத்த, தங்களுடைய நோக்கம் எதிர்க்கப்படக் கூடாது என்பதற்காக இருவரும் இரகசியமாக வெளியேறினார்கள். தங்கள் பிதாக்களின் வழிகாட்டியிடம் இருவரும் ஊக்கமாக ஜெபித்து எவ்விதம் முன்னேற வேண்டும் என்பதை தீர்மானிக்கிறதற்கு ஏதுவான ஒரு அடையாளத்திற்கு ஒப்புக்கொண்டனர். பின்னர் இரண்டு படைகளையும் பிரித்திருந்த மலையிடுக்கினிடையே சென்று சி கரத்தின் நிழலில் பள்ளத்தாக்கின் மண்மேடுகளும் முகடுகளும் அவர்களைப் பாதி மறைத்திருக்க தங்கள் வழியில் மௌனமாகத் தொடர்ந்தனர். அரணை நெருங்கின் போது, இதோ, எபிரெயர் ஒளித்துக்கொண்டிருந்த வளைகளைவிட்டுப் புறப்படுகிறார்கள் என்று கேலியாகப் பேசின் சத்துருக்களின் பார்வைக்கு வெளிப்பட்டனர். எங்களிடத்துக்கு ஏறி வாருங்கள், உங்களுக்குப் புத்தி கற்பிப்போம் அதாவது, இந்த துணிகரமான செயலுக்காக இரண்டு இஸ்ரவேலரையும் தண்டிப்போம் என்று அவர்கள் சவால் விட்டனர். தாங்கள் எடுத்திருக்கும் முயற்சியை ஆண்டவர் வாய்க்கச் செய்வார் என்பதற்குச் சாட்சியாக யோனத்தானும் அவனுடைய தோழனும் இந்த சாவாலைத்தான் அடையாளமாக வைத்திருந்தனர். பெலிஸ்தியர்களின் பார்வையிலிருந்து இப்போது நகர்ந்து இரகசியமும் கடினமான பாதையைத் தெரிந்தெடுத்து அடையக் கூடாது என்ற தோன்றியிருந்து பலமாகக் காவல் பண்ணப்பட்டிராத சிகரத்தின் உச்சிக்குச் சென்றனர். இவ்விதம் சத்துருவின் பாளயத்தைத் துளைத்து ஆச்சரியத்தினாலும் பயத்தினாலும் மேற்கொள்ளப்பட்டு எந்த எதிர்ப்பையும் காட்டாதிருந்த காவலாளியைக் கொன்றனர்.PPTam 816.3

    பரலோகத்தின் தூதர்கள் யோனத்தானையும் அவனுடைய தோழனையும் மறைத்தனர். தூதர்கள் அவர்கள் முன் இருந்து யுத்தம் செய்ய, பெலிஸ்தியர் அவர்கள் முன் விழுந்தனர். மாபெரும் திரள் கூட்டம் நெருங்குவதைப்போன்று பூமி நடுங்கியது. தெய்வீக உதவியின் அடையாளங்களை யோனத்தான் உணர்ந்தான். பெலிஸ்தியருங்கூட இஸ்ரவேலின் விடுதலைக்காக தேவன் கிரியை செய்கிறார் என்று அறிந்தனர். போர்க்களத்திலும் தாணயத்திலும் இருந்த சேனை முழுவதையும் மாபெரும் பயம் கவ்வியது. குழப்பத்தில் தங்களுடைய சொந்த படைவீரர்களை தங்கள் சத்துருக்களாக தவறாக நினைத்து பெலிஸ்தியர் ஒருவரையொருவர் கொல்லத் துவங்கினர்.PPTam 817.1

    விரைவாக யுத்தத்தின் சத்தம் இஸ்ரவேலின் பாளயத்தில் கேட்கப்பட்டது. பெலிஸ்தரின் நடுவே மாபெரும் குழப்பம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்களுடைய எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் இராஜாவின் காவலாளி அறிவித்தான். எனினும் எபிரெயர்களின் படையிலிருந்து ஒரு பகுதி வெளியேறியிருக்கிறது அறியப்படாதிருந்தது. விசாரித்தபோது யோனத்தானையும் அவனுடைய ஆயுததாரியையுந்தவிர வேறு ஒருவரும் வெளியேறவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் பெலிஸ்தியர்கள் துரத்தப்படுகிறார்கள் என்பதை அறிந்து தாக்குதலில் சேர்ந்து கொள்ள சவுல் தன்னுடைய படையை நடத்தினான். சத்துருக்களிடம் சென்றிருந்த எபிரெயர்கள் இப்போது அவர்களுக்கு எதிராகத் திரும்பினர். அதிக எண் ணிக்கையானோரும் தங்கள் மறைவிடத்திலிருந்து வெளியே வந்தனர். பெலிஸ்தியர் ஓடி முறியடிக்கப்பட்டபோது சவுலின் படை ஓடிக்கொண்டிருந்தவர்கள் மேல் பயங்கரமான அழிவை ஏற்படுத்தியது.PPTam 817.2

    தனக்கு சாதகமானதையெல்லாம் செய்யத் தீர்மானித்தவனாக அந்த நாள் முழுவதும் சாப்பிடாதிருக்க இராஜா அவசரமாக படைவீரர்களுக்கு தடை விதித்திருந்து, தன்னுடைய கட்டளையை : நான் என் சத்துருக்கள் கையிலே பழிவாங்க வேண்டும், சாயங்காலம் மட்டும் பொறுக்காமல் எவன் போஜனம் செய்கிறானோ, அவன் சபிக்கப்பட்டவன் என்ற பவித்திரமான ச ராபத்தால் பலவந்தப்படுத்தியிருந்தான். சவுலின் அறிவோ அல்லது ஒத்துழைப்போ இல்லாமல் ஏற்கனவே வெற்றி அடைந்திருந்தும், துரத்தப்பட்ட படையின் முழுமையான அழிவில் தன்னை அடையாளங்காட்ட அவன் நம்பியிருந்தான். உணவிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்ற கட்டளை சுயநலமான இலட்சியத்தோடு கொடுக்கப்பட்டிருந்து, சுயத்தை உயர்த்தும் அவனுடைய ஆசைக்கு எதிராக இருக்கும் போது, மக்களின் தேவையைக் குறித்து இராஜா அலட்சியமாயிருப்பான் என்று காண்பித்திருந்தது. தன்னுடைய தடையை பவித்திரமான ஆணையினால் உறுதி பண்ணியிருந்தது, சவுலை அவச ரப்படுகிறவனாகவும் பரிசுத்தமில்லாதவனாகவும் காண்பித்தது. அந்த சாபத்தின் வார்த்தைகள்தானும் சவுலின் வைராக்கியம் தேவனுடைய கனத்திற்காக அல்ல அவனுக்காக என்பதற்கு சான்று பகர்ந்தது. அவனுடைய நோக்கம், ஆண்டவர் அவருடைய சத்துருக்களிடத்தில் பழிவாங்குவார் என்பதல்ல, நான் என் சத்துருக்கள் கையிலே பழிவாங்க வேண்டும் என்பதாக இருந்தது.PPTam 818.1

    இந்தத் தடை தேவனுடைய கட்டளையை மீறும்படி ஜனங்களை நடத்தியது. நாள் முழுவதும் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த அவர்கள் தளர்வடைந்து உணவில்லாததால் மிகவும் மயங்கியிருந்தனர். கண்டிப்பின் மணி நேரங்கள் முடிவடைந்தவுடனேயே கொள்ளையின் மேல் பாய்ந்து, இரத்தத்தைப் புசிக்க எணியிருந்த சட்டத்தை மீறினர்.PPTam 818.2

    அந்த நாளின் யுத்தத்தில் இராஜாவின் கட்டளையை கேட்டிராத யோனத்தான் காட்டின் வழியாகப் போன போது கொஞ்சம் தேனைப் புசித்து அறியாமல் மீறியிருந்தான். சவுல் அதைக்குறித்து மாலையில் கேள்விப்பட்டான். தன்னுடைய கட்டளையை மீறினவர்கள் மரணத்தால் தண்டிக்கப்படுவார்கள் என்று அவன் அறிவித்திருந்தான். குற்றவாளி துணிகரமான பாவத்தின் குற்றத்தில் இராதபோதும், தேவன் அவனுடைய வாழ்க்கையை அற்புதமாகக் காப்பாற்றியிருந்து அவன் வழியாக விடுதலையை நடப்பித்திருந்தபோதும், தீர்ப்பு செயல்படுத்தப்படவேண்டுமென்று இராஜா அறிவித்தான். தன்னுடைய மகனின் வாழ்க்கையை விட்டு வைப்பதால் அவசரமாக ஒரு பொருத்தனை பண்ணின் பாவத்தில் இருப்பதை சவுல் ஒத்துக்கொள்ள வேண்டியதிருக்கும். இது அவனுடைய அகந்தையை சிறுமைப்படுத்துகிறதாயிருக்கும். யோனத்தானே, நீ சாகத்தான் வேண்டும், இல்லாவிட்டால் தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்பது அவனுடைய பயங்கரமான தீர்ப்பாயிருந்தது.PPTam 818.3

    வெற்றியின் கனத்தை சவுல் உரிமை பாராட்ட முடியாது. ஆனால் தன்னுடைய ஆணையின் பரிசுத்தத்தைப் பராமரிப்பதினால் தன்னுடைய வைராக்கியத்திற்காக கனப்படுத்தப்படுவேன் என்று அவன் நம்பியிருந்தான். தன் சொந்த மகனையும் பலியிட்டு, அரசாங்க அதிகாரம் பராமரிக்கப்பட வேண்டும் என்பதை தன்னுடைய மக்களின் மனதில் பதிப்பான். கில்காலில் சற்று நேரத்திற்கு முன்புதான் தேவனுடைய கட்டளைக்கு முரணாக ஆசாரியனாக வேலை செய்ய சவுல் துணிந்திருந்தான். தன்னுடைய சொந்தக் கட்டளை கீழ்ப்படியப்படாதபோது அவனுடைய கட்டளை - அது காரணமற்றதும் அறியாமையினால் மீறப் பட்டதாயிருந்தும் இராஜாவும் தகப்பனுமானவன் தன்னுடைய மகனை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தான். மகன் மரிக்க வேண்டும் என்று அறிவித்தான்.PPTam 819.1

    இந்தத் தீர்ப்பு செயல்படுத்தப்படுவதை அனுமதிக்க மக்கள் மறுத்தனர். இராஜாவின் கோபத்தை எதிர்கொண்டவர்களாக. இஸ்ரவேலிலே இந்தப் பெரிய ரட்சிப்பைச் செய்த யோனத்தான் கொலை செய்யப்படலாமா? அது கூடாது; அவன் தலையில் இருக்கிற ஒரு மயிரும் தரையிலே விழப்போகிறதில்லை.... தேவன் துணை நிற்க அவன் இன்று காரியத்தை நடப்பித்தான் என்று அறிவித்தார்கள். இந்த பெருமையான அரசன் ஒருமனதான தீர்ப்பை மீற துணிவில்லாதிருந்தான். யோனத்தானின் வாழ்வு பாதுகாக்கப்பட்டது.PPTam 819.2

    தன்னுடைய மகன் தனக்கு மேலாக மக்களாலும் ஆண்டவராலும் முக்கியப்படுத்தப்பட்டான் என்று சவுல் உணர்ந்தான். இராஜாவின் கண்மூடித்தனத்திற்கு யோனத்தானின் விடுதலை கடுமையான கடிந்துகொள்ளுதலாக இருந்தது. தன்னுடைய சாபங்கள் தன் சொந்த தலையின் மேலேயே திரும்பும் என்பதை அவன் உணர்ந்தான் பெலிஸ்தியரோடு யுத்தத்தைத் தொடராது தன்னுடைய வீட்டிற்கு சோர்ந்த மனநிலையோடும் அதிருப்தியோடும் திரும்பினான்.PPTam 819.3

    பாவத்தில் தங்களை நியாயப்படுத்திக்கொள்ளவோ அல்லது பாவத்திற்கு சாக்குக் கூறவோ மிகவும் ஆயத்தமாயிருக்கிறவர்கள்தான் பலவேளைகளில் மற்றவர்களை கடினமாக நியாயந்தீர்த்து ஆக்கினைக்கு உட்படுத்துகிறவர்களாயிருக்கிறார்கள். சவுலைப் போல அநேகர் தங்கள் மேல் தேவனுடைய அதிருப்தியைக் கொண்டுவந்து ஆலோசனையை நிராகரித்து கடிந்துகொள்ளுதலை தள்ளுகிறார்கள். ஆண்டவர் தன்னோடு இல்லை என்று உணர்த்தப்படும் போதும் தங்கள் பிரச்சனைக்கானPPTam 820.1

    காரணத்தைத் தங்களில் காண மறுக்கிறார்கள். தங்களைக் காட்டிலும் நல்லவர்களை கொடுமையாகத் தண்டிப்பதிலோ அல்லது கடுமையாக கடிந்துகொள்ளுவதிலோ திளைக்கும் போது தங்களுடைய அகந்தையும் பெருமையுமான ஆவியை நேசிக் கிறார்கள். நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும் (மத் 7:12) என்ற கிறிஸ்துவின் வார்த்தைகளை இப்படிப்பட்ட சுய சித்தத்திற்கு ஆட்பட்டிருக்கிற நியாயாதிபதிகள் சிந்தித்துப்பார்த்தால் நலமாயிருக்கும்.PPTam 820.2

    தங்களை உயர்த்தத் தேடுகிறவர்கள் பல வேளைகளில் அவர்களுடைய மெய்யான குணம் வெளிப்படுத்தப்படும் இடங்களுக்குக் கொண்டுவரப்படுகிறார்கள். அப்படியே சவுலின் காரியத்திலும் நடந்தது. நியாயத்தையும் இரக்கத்தையும் உண்மையையும் காட்டிலும் அரசகனமும் அதிகாரமுமே அவனுக்கு மிகவும் பிரியமானவைகள் என்று அவனுடைய வழிமுறைகள் மக்களை நம்பவைத்தன. இவ்விதம், தேவன் தங்களுக்குக் கொடுத்திருந்த அரசாங்கத்தை நிராகரித்த தங்கள் தவறைக் காணும்படி மக்கள் நடத்தப்பட்டனர். தன்னுடைய குருட்டு வைராக்கியத்தில் அவர்கள் மேல் சாபத்திற்காக ஜெபித்திருந்த ஒரு இராஜாவிற்காக, தங்கள் மேல் ஆசீர்வாதங்களை வருவிக்கும்படி ஜெபித்த பக்தியான தீர்க்கதரிசியை அவர்கள் மாற்றியிருந்தனர்.PPTam 820.3

    யோனத்தானின் வாழ்க்கையை காப்பாற்ற இஸ்ரவேலின் மனிதர் தலையிட்டிராவிட்டால் இராஜாவின் கட்டளையால் அவர்களுடைய இரட்சகன் அழிந்திருப்பான். எப்படிப்பட்ட மனக் கசப்போடு ஜனங்கள் சவுலின் நடத்துதலை பின்பற்றியிருப்பார்கள். தங்களுடைய சொந்த செயலினால் தான் அவன் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டிருக்கிறான் என்கிற நினைவு எவ்வளவு கசப்பானது! மனிதனுடைய மாறு பாட்டை ஆண்டவர் நீண்டகாலம் பொறுத்திருந்து, தங்களுடைய பாவங்களை பார்க்கவும் அதை விட்டு விடவும் அனைவருக்கும் அவர் சந்தர்ப்பங்களைக் கொடுக்கிறார். ஆனால் அவருடைய சித்தத்தை கருத்தில் கொள்ளாது அவருடைய எச்சரிப்புகளை தள்ளிவிடுகிறவர்களை அவர் செழிப்பாக்குகிறது போல் காணப்படும்போது, தம்முடைய சொந்த நேரத்தில் அவர்களுடைய மதியீனத்தை அவர் வெளிக்காட்டுவார்.PPTam 820.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents