Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    11—மருத்துவ நற்செய்தி ஊழியம்

    முக்கியத்துவத்தில் முதல் வேலை

    இயேசு தம் ஊழியக்காலத்தில் பிரசங்கம் செய்தலைவிட குணமாக்குதலுக்கே அதிக நேரத்தை அர்ப்பணித்தார். 1MH, 19TamChS 174.1

    மெய்யான சீர்திருத்தவாதிக்கு, மருத்துவ நற்செய்தி ஊழியமானது அநேக கதவுகளைத் திறந்துவிடும். 27T, 62 TamChS 174.2

    மெய்யான மருத்துவப்பணியானது சுவிசேஷத்தை வாழ்ந்து காட்டல் பாணியாகும். 38T, 168.TamChS 174.3

    மருத்துவ நற்செய்திப்பணிதான் சுவிசேஷத்தின் முன்னோடிப் பணி.வேதவசன ஊழியத்திலும் மருத்துவ நற்செய்தி ஊழியத்திலும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவேண்டும்; வாழ்ந்துகாட்டவேண்டும். 4 MH, 144TamChS 174.4

    பிரசங்கம் செய்வதலைவிட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைக் குணமாக்குதலுக்கே உலக இரட்சகர் அதிக நேரத்தையும் பிரயாசத்தையும் செலவிட்டார். பூமியில் அவருடைய பிரதிநிதிகளாக இருந்த அவருடைய அப்போஸ்தலர்களிடம், வியாதியஸ்தர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கச் சொன் னதே அவர் கொடுத்த கடைசிக் கட்டளையாகும். வியாதியஸ்தர்களைச் சென்று பார்த்தோரையும், பாதிக்கப்பட்டோரின் தேவைகளைப் பூர்த்திசெய்தோரையும் எஜமான் வரும்போது பாராட்டுவார். 14T, 225TamChS 174.5

    இக்காலத்திற்கான இரட்சிப்பின் சத்தியத்தை அறிவிப்பதற்கு, அதாவது மூன்றாம் தூதனுடைய தூதை அறிவிப்பதற்கு மருத்துவ நற்செய்தி ஊழியம் வழிதிறக்கவேண்டும் என்பதே அவருடைய திட்டம். இந்தத் திட்டம் நிறைவேறினால், அத்தூது மறையாது; அதை அறிவிப்பது தடைபடாது. 26T, 293TamChS 175.1

    முதலாவது குறைகளோடு இருப்பவர்களின் தேவைகளைச் சந்தியுங்கள். அவர்களுடைய சரீரத்தேவைகளையும் பாடுகளையும் போக்குங்கள். அப்போதுதான் இருதயத்தை எட்டுவதற்கான வழி பிறக்கும். அங்கே நல்லொழுக்கம், பக்தி எனும் விதைகளை விதைக்கலாம். 3.4T, 227TamChS 175.2

    வியாதிலும் மனச்சோர்விலும் உள்ளவர்களைச் சந்திக்க வேண்டும்; அவர்கள் வெளிச்சத்தைக்காணவும், இயேசுவின்மேல் உறுதியான விசுவாசம் வைக்கவும் உதவி செய்யவேண்டும்; அதைவிட வேறு எதுவும் அதிக ஆவிக்குரிய பெலத்தைக் கொடுக்காது. ஊக்கத்தையும் ஆழமான உணர்வையும் அதிகரிக்காது. 44T, 75,76TamChS 175.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents