Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    இரண்டிரண்டு பேராக அனுப்புதல்

    இயேசு பன்னிருவரையும் தம்மண்டைக்கு அழைத்து, பட்டணங்களுக்கும் கிராமங்களுக்கும் இரண்டிரண்டு பேராகச் செல்லும்படி கட்டளையிட்டார். யாரும் தனியாக அனுப்பப்படவில்லை; சகோதரனோடு சகோதரனும், நண்பனோடு நண்பனும் சேர்த்து அனுப்பப்பட்டார்கள். இவ்வாறு ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும் ஊக்கமாகவும் இருக்கமுடிந்தது, ஆலோசனை சொல்லி ஜெபிக்க முடிந்தது, ஒவ்வொருவரின் பலமும் மற்றவரின் பெலவீனத்தில் துணையாக இருந்தது. அதேபோல பிற்பாடு எழுபது பேரை அனுப்பினார். சுவிசேஷ தூதர்கள் இவ்வாறு சேர்ந்திருக்க வேண்டும் என்பது இரட்சகரின் நோக்கமாக இருந்தது. இன்றைய காலத்திலும் கூட இந்த முன்மாதிரியை எவ்வளவுக்கு அதிகமாகப் பின்பற்றுகிறோமோ, அவ்வளவுக்கு அதிக வெற்றியுள்ளதாக சுவிசேஷ ஊழியம் இருக்கும். 3DA, 350TamChS 169.2