Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    செய்முறையால் கற்றுக்கொள்தல்

    நற்செய்தி ஊழியம் செய்ய, அதாவது, தங்களைச் சுற்றிலுமுள்ள பகுதிகளில் வாழ்கிற குடும்பங்களின் ஆவிக்குரிய தேவைகளைச் சந்திக்க மாணவர்களுக்கு காலஅவகாசம் வழங்குவது மிக அவசியம். அதுதான் முழுமையான கல்வி. தாங்கள் பெற்றிருக்கிற அறிவைப் பயன்படுத்தவே நேரம் இல்லாத அளவுக்கு படிப்பைத் திணிக்கக்கூடாது. பொய்யில் சிக்கியுள்ளோருக்கு ஊழியம் செய்யவும், அவர்களோடு பழகவும், அவர்களுக்கு சத்தியத்தை அறிவிக்கவும் மும்முரமாக ஈடுபட மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். தாழ்மையாக வேலைசெய்து, கிறிஸ்துவிடமிருந்து ஞானத்தைத்தேடி, விழித்திருந்து ஜெபிப்பதன்மூலம் வாழ்க்கையில் வளமான அறிவைப் பெற்று, அதை மற்றவர்களுக்கும் வழங்கலாம். 3CT, 545, 546 TamChS 91.2

    மாணவர்கள் பள்ளியில் படிக்கும் நாட்களில், முடிகிற சமயங்களிலெல்லாம் நகர நற்செய்திப் பணியில் ஈடுபடவேண்டும். சுற்றிலுமுள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் நற்செய்தி ஊழியம் செய்யவேண்டும். குழுக்களாக அமைத்து கிறிஸ்தவ உதவிப்பணிகளைச் செய்யலாம். தற்போதைய கடமைகள் என்னவென்று மாணவர்கள் பரந்த கண்ணோடு பார்க்கவேண்டும். பள்ளிப்படிப்பு முடிந்தபிறகு, தேவனுக்காக பெரிதாக ஊழியம் செய்யலாம் என்று காத்திருக்கக்கூடாது. மாறாக, மாணவர்களாக இருக்கும்போதே, பிறருக்கு சுயநலமற்ற சேவையைச் செய்வதற்காக கிறிஸ்துவோடு நுகத்தில் பிணைக்கப்படுவது எவ்வாறு என யோசிக்கவேண்டும். 4CT; 547TamChS 91.3

    முக்கியமான பாடங்களை வாலிபர்களுடைய சிந்தைகளில் நிறைத்தால்மட்டும் போதாது; தாங்கள் பெற்றதை மற்றவர்களுக்குச் சொல்கிற வழியையும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். 1CT, 545TamChS 91.4

    நம்முடைய கல்லூரிகளிலும் பயிற்சிப் பள்ளிகளிலுமிருந்து தூரதேசங்களுக்கு நற்செய்தியாளர்களை அனுப்பிவைக்கவேண்டும். பள்ளியில் இருக்கும்போதே, இந்தப் பணிக்கு ஆயத்தப்படுவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் மாணவர்கள் மேம்படுத்த வேண்டும். புதிய சூழல்களுக்கு ஒத்துப்போவார்களா, பரலோகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளார்களா என்பதை அங்கேதானே யோசித்து, அறிந்துகொள்ளவேண்டும். 2CT, 549TamChS 92.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents