Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சோம்பலான சபைக்கு ஒரு வேண்டுகொள்

    இன்று ஒருவர் மட்டுமே பணிசெய்கிற இடத்தில் நூற்றுக் கணக்கானோர் பணிசெய்யாதது ஒரு மர்மமாகவே உள்ளது. தேவனுடைய குமாரர்- குமாரத்திகளெனச் சொல்லிக்கொள்வோர் அலட்சியத்தோடு உணர்வில்லாமலும் அக்கறையில்லாமலும் இருப்பதைக் கண்டு பரலோகப் பிரபஞ்சம் ஸ்தம்பித்துள்ளது. சத்தியத்தில் ஒரு ஜீவ வல்லமை உள்ளது. 39T, 42TamChS 121.2

    எதுவுமே செய்யாமல், சோம்பேறிகளாக இருந்து இரட்சிக்கப்படமுடியாது. மெய்மனமாற்றம் பெற்ற ஒருவர் பயனற்றவராக, ஆற்றலற்றவராக வாழவாய்ப்பில்லை. கால்தடுக்கியாவது பரலோகம் சென்றுவிடலாம் என்று நினைக்கவே கூடாது. சோம்பேறி அதில் பிரவேசிக்கவே இயலாது. பூமியில் தேவனோடு ஒத்துழைக்க மறுக்கிறவர்கள், பரலோகத்திலும் அவரோடு ஒத்துழைக்கமாட்டார்கள். அவர்களைப் பரலோகத்திற்கு அழைத்துச்செல்வது பாதுகாப்பாக இருக்காது. 4COL, 280TamChS 121.3

    இருளில் இருப்போருக்கு வெளிச்சத்தைக் கொடுப்பதற்கு திருச்சபையின் ஒவ்வோர் அங்கத்தினரும் என்ன செய்கிறார்கள் என்று பரலோகம் முழுவதுமே திருச்சபையை ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கிறது. 1RH, Feb. 27, 1894TamChS 121.4

    மிகப்பெரிய தேவனோடு நீங்கள் தொடர்புகொண்டு வருகிறீர்கள், விளையாடுவதற்கு அவர் சிறுபிள்ளை அல்ல என்பதை நினைவில் வையுங்கள். உங்களுடைய விருப்பப்படியும், இஷ்டப் படியும் அவருடைய சேவையில் ஈடுபடமுடியாது. 22T, 221TamChS 122.1

    மனித ஏதுகரங்களுடன் ஒத்துழைத்து செயல்பட பரலோக அறிவுஜீவிகள் காத்துக்கொண்டிருக்கின்றன, ஆனால் அவர்கள் இருப்பதைத்தான் நாம் பகுத்தறியவில்லை. 36T, 297TamChS 122.2

    செய்யவேண்டிய மிகப்பெரிய பணியில் தங்களோடு சேர்ந்து செயல்படமனிதஏதுகரங்களை, திருச்சபையின் அங்கத்தினர்களை பரலோகத் தூதர்கள் வெகுகாலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். 49T46, 47TamChS 122.3

    எதுவுமே செய்யாமல், தங்கள் கடமைகளை நிராகரித்த தேவனுடைய நாளை எதிர்பார்த்து வருகிறவர்கள் ஏராளம், ஏராளம். அதனால் ஆவிக்குரிய ரீதியில் வளர்ச்சிக் குன்றியவர்களாக இருக்கிறார்கள். தேவபணியைப் பொறுத்தவரையில், அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றின் பக்கங்கள் வெற்றிடங்களாக இருப்பது துயரத்திற்குரியது. அவர்கள் தேவனுடைய தோட்டத்தின் மரங்களாக இருந்தாலும், நிலத்தைக் கெடுக்கிறார்கள், கனியற்ற கிளைகளால் நிலத்தை இருட்டாக்குகிறார்கள், இல்லையெனில் கனி தரும் மரங்கள் அந்த இடத்தில் இருந்திருக்கலாம். 5RH, May 22, 1888TamChS 122.4

    கிறிஸ்துவுக்காக எதுவுமே அல்லது சிறிதளவே செய்கிறவர்களுக்கு ஆபத்து இருக்கிறது. மிகுந்த சிலாக்கியங்களையும் தருணங்களையும் பெற்றும் எதுவுமே செய்யாமலிருப்பவனுடைய இருதயத்தில் தேவ கிருபை வாசஞ்செய்யாது. 6RH, Aug. 22, 1899TamChS 122.5

    தூங்கிக்கிடப்பதற்கு இப்போது நேரமில்லை; பயனற்ற வருத்தங்களில் மூழ்கியிருக்கவும் நேரமில்லை. நித்திரை மயக்கத்திலேயே இருப்பவன் நன்மை செய்வதற்கான அருமையான வாய்ப்புகளை இழந்துவிடுவான். மாபெரும் அறுவடையில் அரிக்கட்டுகளைச் சேர்க்கிற மகத்தான சிலாக்கியம் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. இரட்சிக்கப்படுகிற ஒவ்வோர் ஆத்துமாவும் நமக்கு மிகவும் பிரிய மான நம் மீட்பராகிய இயேசுவின் கிரீடத்தில் ஒரு நட்சத்திரமாகச் சேர்ந்துகொண்டே இருப்பார்கள். யுத்தம் இன்னும் சிறிதுகாலம் நடந்தால், நித்தியத்திற்காக புதிய வெற்றிகளைப் பெறமுடியுமென்றும், பரிசுக் கோப்பைகளைப் பெறலாமென்றும் சொல்லி, தன் போர்க்கவசத்தை தூரே வைக்க ஆவலோடு இருப்பவன் யார்? 1RH, Oct. 25, 1881TamChS 122.6

    பரலோகத் தூதுவர்கள் தங்கள் பணியைச் செய்கிறார்கள், நாம் என்ன செய்கிறோம்? சகோதர, சகோதரிகளே, காலத்தைப் பிரயோஜனப்படுத்த தேவன் உங்களை அழைக்கிறார். தேவனிடம் கிட்டிச் சேருங்கள். உங்களிலுள்ள வரத்தைப் பயன்படுத்துங்கள். நம் விசுவாசத்திற்கான காரணங்களை அறிகிறவாய்ப்பைப் பெற்றவர்கள், இந்த அறிவை ஏதாவது நோக்கத்திற்கு இப்போது பயன் படுத்துங்கள். 2HS, 288TamChS 123.1

    ‘உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக’ என்று கர்த்தருடைய ஜெபத்தைச் சொல்கிறவர்கள் எவ்வாறு சத்தியத்தின் விளக்கை மற்றவர்களுக்குக் கொண்டுசெல்லாமல், இருக்கமுடியும்? எதுவும் செய்யாமல் வீட்டில் இருக்கமுடியும்? மற்றவர்களுக்கு உதவ எதுவுமே செய்யாமல், உங்களையும் உங்களுடைய குடும்பத்தினரையும் ஆசீர்வதிக்குமாறு தேவனுக்குமுன் உங்கள் கரங்களை உயர்த்தி, நீங்கள் எவ்வாறு கேட்கமுடியும்? 3HS, 288TamChS 123.2

    நம்மத்தியில் இருப்பவர்கள், நேரமெடுத்துச் சிந்தித்தால், தாங்கள் எதுவுமே செய்யாமல் இருப்பது தேவன் தந்துள்ள தாலந்துகளைப் புறக்கணிக்கிற பாவம் என்பதைக் கண்டுகொள்வார்கள். சகோதர சகோதரிகளே, உங்களுடைய இருதயக் கடினத்தால் உங்கள் மீட்பரும்பரிசுத்த தூதர்களும் துக்கமடைகிறார்கள். ஆத்துமாக்களை இரட்சிக்க கிறிஸ்து தம் ஜீவனையே கொடுத்தார். ஆனாலும், அவருடைய அன்பை அறிந்த நீங்கள் அவர் யாருக்காக மரித்தாரோ அவர்களுக்கு அவருடைய ஆசீர்வாதங்களை அறிவிக்க மிகக் குறைந்த முயற்சியே எடுக்கிறீர்கள். இவ்வாறு கடமைமேல் அக்கறையின்றி, அலட்சியமாக இருப்பதைக் கண்டு தூதர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். நீங்கள் புறக்கணித்த ஆத்துமாக்களை நியாயத்தீர்ப்பில் நீங்கள் சந்திக்கவேண்டும். அந்த மகாநாளில் நீங்களே உங்களை குற்றவாளிகளாகத் தீர்ப்பீர்கள்; நீங்களே உங்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பீர்கள். ஆண்டவர் இப்போதே உங்களை மனந்திரும்புதலுக்குள் வழிநடத்துவாராக. தமது திராட்சத் தோட்டத்தில் செய்யும்படி அவர் நியமித்த பணியை அவருடைய மக்கள் செய்யாதிருப்பதை அவர்களுக்கு மன்னிப்பாராக. 16T, 425,426TamChS 123.3

    தான் நிலத்தில் புதைத்துள்ள தாலந்தை எடுத்து, காசுக்காரர்களிடம் கொடுக்கவேண்டுமென்று, சோம்பேறிச் சபை அங்கத்தினரை உணரச்செய்ய நாம் என்ன சொல்லவேண்டும்? சோம்பேறியும் வேலை செய்யாதவனும் பரலோகராஜ்யத்தில் காணப்பட முடியாது. இதன் முக்கியத்துவத்தை நித்திரையிலுள்ள திருச்சபைகளுக்கு தேவன் உணர்த்தினால் நன்றாக இருக்குமே! ஓ, சீயோன் விழித்து, அழகான வஸ்திரங்களைத் தரித்தால் நன்றாக இருக்குமே! அவள் பிரகாசித்தால், நன்றாக இருக்குமே! 26T, 434TamChS 124.1

    நீங்கள் இருளிலிருந்தபோது உங்களுக்குச் செய்யப்பட்ட பணியைப் போலவே, சத்தியத்தை அறியாதோருக்கு பணிசெய்ய வேண்டியுள்ளது. நித்திரை பண்ணவும், சோம்பேறிகளாக இருக்கவும் இது நேரமல்ல. வீட்டெஜமான் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலையைக் கொடுத்திருக்கிறார். நாம் முன்னேற வேண்டுமே தவிர, பின்னேறக் கூடாது. தினமும் புதிதாகப் பிறக்கவேண்டும். இயேசுவின் அன்பு நம் இருதயங்களில் துடிப்புடன் ஓடவேண்டும். அப்போதுதான் அநேக ஆத்துமாக்களை இரட்சிக்கிற கருவிகளாக விளங்குவோம். 3RH, June 10, 1880TamChS 124.2

    தேவனுடைய மகனாக, மகளாகதங்களை உரிமை கோருகிற ஒவ்வோர் ஆத்துமாவும் சகல அக்கிரமங்களிலிருந்தும் விலகினால் மட்டும் போதாது; நற்பணியிலும் சுயமறுப்பிலும் தாழ்மையிலும் பெருகவேண்டும். அதை ஆண்டவர் இயேசு எதிர்பார்க்கிறார். மனதின், செயலின் செயல்பாடு பற்றின முக்கிய விதிகளை ஆண்டவர் கொடுத்திருக்கிறார். அது நம் கிரியைகள் குறித்து நம்மை எச்சரிக்க வேண்டும். “இல்லாதவன் எவனோ அவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்” என்று சொல்கிறார். தங்களுடைய வாய்ப்புகளை மேம்படுத்தாமல், தேவன் கொடுத் திருக்கிற கிருபையைப் பயன்படுத்தாதவர்களில், அதைச் செய்வதற்கான விருப்பம் குறையும்; இறுதியாக தங்களுடைய நித்திரை மயக்கத்தால், முன்பு தாங்கள் பெற்றிருந்ததையும் இழப்பார்கள். சோதனைகளும் பாடுகளும் வரும்போது நிலைத்து நிற்கும்படி, தேவனைப்பற்றி அதிகமாக அறியவும், மகத்தான அனுபவத்தைப் பெறவும் அவர்கள் எதையும் செய்யவில்லை. உபத்திரவமோ சோதனையோ வரும்போது, இந்த மக்கள் தங்கள் விசுவாசத்தை இழக்கிறார்கள், அவர்களுடைய அஸ்திபாரம் அசைகிறது; ஏனென்றால், தங்களுடைய அஸ்திபாரத்தை உறுதியாகப் போட வேண்டியதின் அவசியத்தை உணரவில்லை. நித்திய கன்மலையோடு சேர்த்து தங்களுடைய ஆத்துமாக்களை அவர்கள் பிணைக்க வில்லை. 1RH, March 27, 1894TamChS 124.3

    இறுதி மகா நாளில், நமக்கு மிகவும் பிரியமானவர்கள் நம்மை விட்டு நித்தியமாகப் பிரிக்கப்பட்டதைப் பார்க்க நேரிடலாம்; நம் குடும்பத்தினர், நம் பிள்ளைகள் இரட்சிக்கப்படாததைப் பார்க்க நேரிடலாம்; நம் வீடுகளுக்கு வந்து, நம் பந்தியில் சாப்பிட்டவர்கள் தொலைந்து போனோரின் மத்தியில் நிற்பதைப்பார்க்க நேரிடலாம்; இவற்றைப் பார்க்கும்போது, எவ்வளவு பயங்கரமாக இருக்கும்! அப்போது நாம் பின்வரும் கேள்விகளைக் கேட்க நேரிடலாம். நான் நம்புகிற கிறிஸ்துவின் மார்க்கம் அவர்களுக்கு ஏன் பிடிக்காமல் போனது? நான் பொறுமையாக நடக்காததாலா? கிறிஸ்தவ மன நிலையோடு நடக்காததாலா? சுயத்தை அடக்காததாலா?TamChS 125.1

    ஆண்டவருடைய சீக்கிர வருகைகுறித்து உலகத்தை எச்சரிக்க வேண்டும். நாம் பணிசெய்ய இன்னும் சிறிது காலமே உள்ளது. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடவும், பிறருக்கு வெளிச்சத்தை வீசவும் நாம் மேம்படுத்தியிருக்க வேண்டிய காலங்கள் வீணாகிப்போயின. மிகப்பெரிய வெளிச்சத்தைப் பெற்று, சத்தியத்தில் நிலைத்திருந்து, தங்கள்மேல் அதிக வேலை சுமை சுமத்தப்பட்டவர்கள், இதுவரையிலும் இல்லாத அளவுக்கு தங்களுக்காகவும் பிறருக்காகவும் வேலைசெய்யுமாறு தேவன் அவர்களை அழைக்கிறார். ஒவ்வொரு திறனையும் பயன்படுத்த வேண்டும்; தேவன் தந்த ஒவ்வொரு தாலந்தையும் செயல்படுத்தவேண்டும்; தேவன் உங்களுக்குத் தந்துள்ள சகல வெளிச்சத்தையும் பிறர் நன்மைக்காகப் பயன்படுத்தவேண்டும். பிரசங்கியார்களாக அல்ல, தேவனுடைய ஊழியர்களாக மாறுவதற்கே முயலவேண்டும். 2SW, June 20, 1905TamChS 125.2