Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்தவச் சேவை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    23—நற்செய்தி ஊழியத்தின் இதர வழிகள்

    கண்தெரியாதோர்மேல் கவனிப்பு

    கண்பார்வையற்ற தேவபிள்ளைகளுக்கு ஊழியம் செய்ய தூதர்கள் அனுப்பப்படுகிறார்கள். தூதர்கள் அவர்களுடைய காலடிகளைப் பாதுகாக்கிறார்கள்; அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களுடைய வழியெங்கும் சுற்றியிருக்கும் ஓராயிரம் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுகிறார்கள். 13T; 516TamChS 281.1

    தங்கள்மத்தியிலுள்ள கண்தெரியாதோர், வியாதியஸ்தர்களைப் புறக்கணிக்கிற தம் மக்களுடைய ஜெபத்திற்கு அவர் செவி கொடுப்பதில்லை. 23T, 518TamChS 281.2

    கண்தெரியாதோர் இடறும்படிக்கு திருச்சபையில் நடந்து கொள்கிறவர்கள் தண்டனைக்கு உரியவர்கள்; ஏனென்றால், கண் தெரியாதோருக்கும், வேதனையில் இருப்போருக்கும், விதவைகளுக்கும், திக்கற்றோருக்கும் பாதுகாவலர்களாக தேவன் நம்மை வைத்திருக்கிறார். இடறல் என்று வேதவசனம் எதைச் சொல்கிறது? கண்தெரியாதோர் கால் இடறும்படி அவர்கள் முன்வைக்கிற ஒரு கட்டை அல்ல; அதைவிட அதிகமானது அதில் உள்ளது. கண்தெரியாத ஒரு சகோதரனுடைய ஆற்றலைக் கெடுக்கிற போக்கைக் கடைப் பிடிப்பதும், அவனுடைய நலனுக்கு எதிராகச் செயல்படுவதும், அவனுடைய நல்வாழ்வைத் தடுப்பதும் அதில் அடங்கும். 13T, 519TamChS 281.3

    கண்பார்வை இழந்த ஒருவர் காண்கிற திறனை இழந்திருப்பதால், எல்லாப்பக்கத்திலும் அவருக்குப் பிரச்சனைகள் இருக்கும். அவருக்கு இருளாகத் தெரிகிற உலகில் தட்டுத்தடுமாறி நடந்துசெல்வதைக் காணும்போது, பரிவும் இரக்கமும் நமக்கு உண்டாகவேண்டும்; அப்படி உண்டாகாத இருதயம் தேவகிருபையால் மிருதுவாக வேண்டிய நிலையில் உள்ளது. 23T, 521TamChS 282.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents